Loading

ஒரு மாதம் காற்றாய் பறந்து இருந்தது…. இந்த ஒரு மாதத்தில் நிவேதா பிரியாவிடம் பேசி இருந்தாள்…. அதற்கு பிரியா காலில் விழாத குறையாக கெஞ்சி  இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் எனக் கற்பூரம் அடித்து சத்தியம் கூறும் அளவிற்கு கூறிப் பேச வைத்து இருந்தாள்….

சிவாம்மா மதுரைக்குச் சென்றுவிட்டார்…அவர் ஊருக்கு செல்லும் போது நிவேதா குழந்தை போல் அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள்…. அதி தான் அவளை சமாதானம் செய்து சிவாம்மாவை அழைத்து கொண்டு மதுரை சென்றான் நிதிஷ் காரில்…

அவர்கள் இருவரும் சென்ற நிமிடத்தில் இருந்து சோகமாவே சுற்றிக் கொண்டிருந்தாள்…. அதை வீடியோ எடுத்து பிரியா சிவாம்மாவிற்கு அனுப்பி வைத்தாள்….

சிவாம்மா அவளுக்கு அழைத்து சமாதானம் செய்து அவளை இயல்பு நிலைக்கு திருப்பிய பின்னர் தான் அலைபேசியை வைத்தார்… இரண்டு மணி நேரத்தில் மதுரைக்கு சென்றுவிடுவோம் அங்கு போய் அழைக்கிறேன் என்று கூறி வைத்து விட்டார்… அதன் பிறகு தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்துட்டேன் அன்றாட வேலையை செய்ய ஆரம்பித்தாள்… அதியும் சிவாம்மாவை ஊரில் விட்டுவிட்டு அடுத்த நாள் சேலம் வந்துவிட்டான்…. இன்னும் இரண்டு நாள் இருந்து விட்டு போ  தாத்தா கூறியதற்கு “வேலை இருக்கு அப்புச்சி கண்டிப்பா அடுத்த தடவை வரப்ப இருந்துட்டு தான் போவேன்”  என்று அவரை கொஞ்சி சமாதானம் செய்து விட்டு வந்தான்… அவரை சமாதானம் செய்வதை விட அவனின் செல்ல தம்பி இருவரையும் சமாதானம் செய்வது தான் அவனுக்கு பெரிதாய் இருந்தது…

இரு வாய் இல்லா ஜீவன்களும் தங்கள் அண்ணனை போகவே விடவில்லை… இருவரையும் தடவி கொடுத்து சமாதானம் செய்து விட்டு தான் சேலம் வந்தான்….

அதன் பிறகான நாட்கலையில் அவனுக்கு காலை இரவு இரண்டு வேளையும் சாப்பாடு வசும்மா வீட்டில் தான்…. எப்பவும் போல பிரியா நிவி இருவரும் வண்டியில் கல்லூரிக்குச் செல்வர்…. மாலை பிரியா நிவேதாவைக் கோச்சிங் கிளாசில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுவாள்…

கிளாஸ் முடிந்து அழைத்துவர அதி சென்றுவிடுவான்… அவனால் முடியாத போது மட்டும் நிதிஷ் சென்று அழைத்து வருவான்…. அன்றும் அப்படி தான் அதியால் அழைத்து வர இயலாத காரணத்தினால் நிதிஷ் அழைத்து வர வந்து இருந்தான்….

வீட்டில் இருந்து வெளியே சென்ற சேலம் *** தொகுதி எம்எல்ஏவின் மகள் கடத்தபட்டார் ….. அதனால் தான் அதி வரவில்லை என்று கூறினான்…

அந்த எம்எல்ஏ மகள் பெயர் அனாமிகா…. அவளும் நிவேதாவின் வகுப்பு தான் படிக்கிறாள்… மூன்றாவது வருடம் அதாவது இந்த கல்வியாண்டில் தான் வேறு கல்லூரியில் இருந்து இந்த கல்லூரிக்கு மாற்றல் வாங்கி படிக்க வந்து இருந்தாள்….

படிப்பில் கெட்டி தான் ஆனால் அவள் தான் அனைத்திலும் முதல் வர வேண்டும் என நினைப்பாள்… அலட்டல் பேர்வழி…. தான் எம்எல்ஏவின் மகள் அனைவரும் தனக்கு கீழ் என நினைத்து தான் நடப்பாள்…

அந்த கல்லூரியில் பல ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள்… அவர்களை தீண்ட தகாதவர்கள்  போல் நடத்துவாள்…..

ஒன்றரை மாதம் தான் ஆகிறது இவள் இந்த கல்லூரியில் சேர்ந்து ஆனால் யாரையும் மதிக்க மாட்டாள் பேராசிரியர்கள் உட்பட….

எச்ஓடியிடம் சொன்னால் கண்டுகொள்ள மாட்டார்….. எச்ஓடி எம்எல்ஏவின் சொந்தம்… எனவே அனாமிகாவிற்கு தான் சப்போர்ட் செய்வார்…

அவளுக்கு நிவேதாவை பிடிக்காது… ஏனென்றால் நிவேதா அவளை விட அதிக மதிப்பெண் எடுத்து இருந்தாள் போன செமெஸ்டரில்…. பத்து பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்பிலும் அவள் அதிக மதிப்பெண் பெற்று இருந்தாள்….

அதனால் அவளை மட்டம் தட்ட நிவேதாவை அவளின் உடம்பை வைத்து கேலி செய்து கொண்டே இருப்பாள்….. நிவேதா அவளை கண்டுகொள்ளவே மாட்டாள்… ஆனால் பிரியா தான் அவளிடம் சண்டைக்கு செல்வாள்….. நிவேதா தான் பிரியாவை சமாதானம் செய்து அழைத்து வருவாள்… “பிரியாம்மா அவ என்னமோ சொல்லிட்டு போறா… நமக்கு என்ன… அது பைத்தியம்னு நினைச்சிட்டு நாம அமைதியா போயிடனும்” என்று கூறுவாள்….

தற்போது அவள் காணவில்லை என தெரிந்து வருத்தமாக தான் இருந்தது… ஆனால் தன் பாவா அவளை கண்டு பிடித்து விடுவான் என நினைத்து அமைதியாகி விட்டாள்….

அவள் நினைத்ததைப் போல் அதி அனாமிகா கடத்தபட்ட மூன்று மணி நேரத்தில் கண்டு பிடித்துவிட்டான்….

அனாமிகா அப்பாவின் எதிரிகள் அவளை கடத்தி வைத்து இருந்தனர்… மூன்று மணி நேரத்தில் அனாமிகாவைக் கண்டுபிடித்து விட்டான்… கடத்தியவர்களை அடித்து துவைத்து விட்டான்….

அனாமிகா அதியை ஹீரோ போல் நினைத்து விட்டாள்… தன் அழகில் அவன் மயங்கி விடுவான்.. இல்லையேல் தந்தையின் செல்வாக்கில் அடைந்து விடலாம் என தப்பு கணக்கு போட்டு விட்டாள் அதியை பற்றி அறியாமல்…

அவனின் அம்முவை தவிர வேறு யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டான்… உலக அழகியே வந்தாலும் சட்டைகூட செய்யமாட்டான் என அவளுக்கு தெரியவில்லை….

மதுரையே அவர்கள் குடும்பத்தின் பேச்சைக் கேட்டு தான் உள்ளது என தெரியாமல் ஆசை பட்டு விட்டாள்… விதி யாரை விட்டது ?!?!

அனாமிகாவை அவள் அப்பாவிடம் ஒப்படைத்து விட்டு நள்ளிரவு ஒரு மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான்…  வசும்மாவின் வீடு இருட்டாக இருந்தது….

வரும் போதே பயங்கர பசியில் தான் வந்தான்… மணி நள்ளிரவை தாண்டியதால் எதுவும் செய்யமுடியாமல் வெளியில் கடையில் சாப்பிட முடியாமல் தான்  அவனின் வீட்டுக்கு வந்தான்….

கதவைத் திறந்தவனுக்கு பேரானந்தம்!!! அவனின் அம்மு ஹாலில் உள்ள சோபாவில் நல்ல உறக்கத்தில் இருந்தாள்… சத்தம் போடாமல் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான்… அவளை தொந்தரவு செய்யாமல் சாப்பிடலாம் என நினைத்து தட்டை எடுத்தான்…. ஆனால் அது சதி செய்துவிட்டது… அவன் கை பட்டு தட்டு கீழே விழுந்து விட்டது…

அந்த சத்தத்தில் நிவேதா உறக்கத்தில் இருந்து எழுந்து விட்டாள்…. அவள் எழுந்ததை பார்த்து அதி அவளிடம் “அம்மு ரியலி சாரி டா… தெரியாம கீழ விழுந்துடிச்சி.. சாரி டா” என்று மன்னிப்பை வேண்டினான்….

“ஐயோ பாவா எப்ப வந்திங்க… நீங்க வந்தது கூட தெரியாம தூங்கிட்டு இருந்து இருக்கேன்… என்ன எழுப்பி இருக்கலாம்ல” என்று கூறிக் கொண்டே அவனுக்கு சூடாக தோசை சுட்டு பரிமாறினாள்….

“அம்மு அங்க வீட்டுல தூங்காம ஏன் இங்க இருக்க… சாப்பாடு எடுத்து வெச்சுட்டு மெசேஜ் பண்ணிட்டு நீ அங்க போய் தூங்கி இருக்கலாம்ல….. ஏன் தூங்காம இருந்த.. நாளைக்கு காலேஜ் போனும்ல” என்று கேள்வி எழுப்பினான்….

“அத்தம்மா ஒரு நாள் சொன்னாங்க… லேட் நைட் ஆகிட்டா நீங்க சூடா இருந்தா தான் சாப்பிடுவீங்களாம் அதுனால தான் இங்க இருந்தேன்…” என்று கூறினாள்…

“அட அம்மு நானே சுட்டு சாப்பிட்டு இருப்பேனே… நீ ஏன்டா கஷ்ட படுற….” என்று கேட்டான்…

“அச்சோ பாவா நீங்களே டயர்டா வருவீங்க…. எப்படி நீங்க சுடுவிங்க.. பேசாம சாப்பிடுங்க” என்று கூறி இன்னொரு தோசை வைத்தாள்….

“அம்மு கல்லுல இருக்க தோசை போதும் இனிமே வேணாம்…” என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்….

அவளும் அடுப்பை அணைத்துவிட்டு அவனுக்கு தோசை எடுத்து வந்தாள்….. அவன் தட்டில் வைத்துவிட்டு அவனின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்… அவன் அவளுக்கும் இரண்டு மூன்று வாய் ஊட்டிவிட்டான்…. அவளும் வாங்கிக் கொண்டு அவன் உண்டு முடிக்கும் வரை காத்துயிருந்தாள்…..

அவன் உண்டு முடித்தவுடன் எல்லா பாத்திரத்தையும் இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்துவிட்டு ஹாலிற்கு வந்தனர்….

நிவி அதியிடம் “பாவா நான் அங்க வீட்டுக்கு போறேன் நீங்க தூங்குங்க” என்று கூறி அந்த வீட்டு சாவியை எடுத்து கொண்டு வெளியேற முயன்றாள்.. அதி தடுத்துவிட்டு “அம்மு நில்லு நானும் வரேன்….” என்று கூறி அவனும் அவளுடன் நடந்தான்….

அவள் உள்ளே செல்லும்வரை பார்த்துவிட்டு தான் வீட்டுக்கு வந்து தூங்கினான்…. அவளும் விட்ட தூக்கத்தை இங்கு வந்து தொடர்ந்தாள்…..

அடுத்து ஒருவாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக சென்றது….. அனாமிகா அதியை பற்றி அவள் தந்தையிடம் கூறி விட்டாள்… அவளின் அப்பாவும் அதியின் குடும்பத்தை பற்றி விசாரித்து விட்டு அதியின் குடும்ப செல்வாக்கைப் பற்றி யோசித்து உடனே சரி எனக் கூறிவிட்டார்…….

ஒரு ஞாயிறு மாலை அதி நிவி அதியின் பைக்கிலும் நிதிஷ் பிரியா நிதிஷின் பைக்கிலும் ஏற்காடு சென்று விட்டு சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர்… சேலத்தில் இருக்கும் பிரபலமான உணவகத்தில் வண்டியை நிறுத்தி சாப்பிட சென்றனர்…..

அனாமிகாவும் அந்த உணவகத்தில் தான் இருந்தாள்…. அதியைப் பார்த்து சிரித்த முகமாக இருந்தவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்து இருந்த நிவேதாவை பார்த்து கொலைவெறிக்குச் சென்றுவிட்டாள்….

ஏற்கனவே அவள் அனாமிகாவை விட அதிகம் மார்க் எடுத்துவிட்டாள் என கோவத்தில் இருந்தவள்… அவள் ஆசைபட்டவன் மீது அவள் உரிமையாக சாய்ந்து உள்ளதைப் பார்த்து கோவத்தின் உச்சிக்குச் சென்றுவிட்டாள்….

இவளை எதோ செய்ய வேண்டும் என நிவேதா மேல் வன்மத்தை அதிகரித்து கொண்டாள்…..

அவர்கள் நால்வரும் வெளியேறும் வரை கோவமாக பார்த்து கொண்டு இருந்தாள்….

அவளின் வன்மத்தின் விளைவு…. நிவேதா அவள் வகுப்பில் படிக்கும் மாணவனுடன் அவன் சட்டை அணிந்து கொண்டு தனியறையில் மயக்கத்தில்!!!!!

என்ன நடக்க போகிறதோ????… யார் அவன்…. அவன் ஏன் நிவேதாவுடன் தனி அறையில் உள்ளான்????

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்