
அழகியே என் மழலை நீ 30
அறிவழகன் அகரனின் காதலுக்கு சம்மதம் கூறி விட, அவர்கள் சாமி கும்பிட்டு முடித்து வெளியே வர, இவர்கள் அவர்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தனர். அவர்கள் கண்ணில் பட்டுவிட்டால் தன்வியின் பார்வையில் தவறாகி விடுமோ என்று நினைத்து தான் அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர்.
வண்டியின் அருகில் வந்ததும் தேவ், “மச்சி இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் இம்போர்ட்டண்ட் டே, டிஸ்டர்ப் பண்ண கூடாது தான் எனக்கே புரியுது. ஆனால் நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன். நைட் ரிசப்சன்க்கு வந்துருவே இல்லை” என்று தயங்கிக்கொண்டே கேட்டான்.
செழியனோ, “டேய் நாங்க கரெக்ட் டைம்க்கு வந்துருவோம். நீ டென்ஷன் ஆகாம கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு. நைட் போட்டோ ஷூட் வேற தூங்கமுடியாது பாத்து பத்திரமா வீட்டுக்கு போ” என்று கூற, அவனின் முகம் அப்போதும் குழப்பமாக இருந்தது.
“அண்ணா உனக்கு முன்னாடி நாங்க ரெண்டு பேரும் மண்டபத்துல இருப்போம். பக்கா ப்ரோமிஸ்” என்று கூற, அப்போது தான் அவனுக்கு சிரிப்பே வந்தது.
தன்வியிடம், “நாங்க இங்க இருக்கோம்னு உனக்கு எப்படி தெரியும்? நீ கரெக்டா இங்க வந்த” என்று கேட்க, அவள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழிக்க, தேவ் தான், “ஹேய் அவ உங்களை இங்க எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. அவ தானா வந்துருக்கா. உங்களை பார்த்ததும் அப்படியே ஒரு சீன் போட்டுட்டா” என்று கூற,
தன்வியோ, “ஹேய் நான் பர்ஸ்ட் உங்களை பார்க்க தான் வீட்டுக்கு கிளம்பினேன். இந்த அகரன் இடியட் இருக்கான்ல அவன்தான் உன்ன மீட் பண்ணனும் வா பேபினு சொன்னான். சரி ஓகே ஆபீஸ் போறதுக்கு லேட் ஆகிடும் முதல்ல அவனை பார்த்திடலாம்னு பாதி தூரம் வந்துட்டேன். அப்புறம் கால் பண்ணி, எனக்கு ஒர்க் இருக்கு நைட் தேவ் பங்க்சன்ல மீட் பண்ணலாம் சொல்லிட்டான். சரி அப்படியே கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வரலாம்னு வந்தேன் நீங்க இங்க இருக்கீங்க” என்று கூறினாள்.
தேவ்வோ, “இந்த அகரன் அண்ணா எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட். ஆனா இந்த லூச எப்படி செலக்ட் பண்ணாருன்னு தெரியல” என்று கூற, தன்வி பதில் கூறுவதற்குள் செழியன், “டேய் போதும்டா. அப்புறம் அவ ஆரம்பிப்பா. இதுக்கு எண்டே இல்லாம போயிட்டே இருக்கும். கிளம்பலாம்” என்றவன் தனுவின் சுருங்கிய முகம் பார்த்து, “இட்ஸ் ஓகே தனுமா, ஈவினிங் இவனை வச்சு செஞ்சிரு. இப்போ அவன் போகட்டும்” என்று கூற தனுவோ மகிழ்வாய் தலையாட்டியவள் தேவ்வை கொக்காணி காட்ட, அவனோ பழிப்பு காட்டிக் கொண்டே சென்று விட்டான்.
தனுவும் கிளம்பிட, செழியனும் வேதாவும் பைக்கில் கிளம்பினர். அகரன் வீட்டில் தலையில் கைவைத்து அன்னையையே பாவமாய் பார்த்து கொண்டிருக்க, மற்றவர்கள் அகரனை பாவமாக பார்த்து கொண்டிருந்தனர்.
மீனாட்சி, “எனக்கு சுத்தமா பிடிக்கல அகரா. ஆம்பிள பசங்களை வாடா போடான்னு ஏகத்துக்கும் பேசுறா. கொஞ்சம் கூட பொறுப்பான பொண்ணாவே தெரியல. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. ஏற்கனவே ஒண்ணு அப்படிதான் இருக்கு இப்போ இது வேற” என்று வேதாவை மனதில் வைத்து திட்ட, அதிரனிற்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது.
“இப்போ நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்களோ அதை மட்டும் பேசுங்களேன். இப்போ இந்த வீட்டுல யார் இருக்காங்க அவங்கள எக்ஸாம்பிளா வச்சு பேசுங்க. எப்போ பார்த்தாலும் ஏன் நீங்க என்தங்கச்சியவே திட்டுறீங்க. இல்லை தெரியாம கேக்குறேன் அவ வயசென்ன உங்க வயசென்ன. உங்களுக்கு அவ மேல இவ்ளோ வெஞ்சேன்ஸ். கொஞ்சம் கூட வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க மாட்டிங்களா நீங்க?இதோட கடைசியா இருக்கட்டும் என் தங்கச்சிய பேசுறது இன்னோரு தடவை ஜாடை மாடையா கூட நீங்க பேச கூடாது. அப்டி நான் நிஜமா கேள்வி பட்டேன்னா கூட நல்லா இருக்காது” என்று ஆத்திரத்தில் கத்தினான். யாருமே அவனை தடுக்கவில்லை. சரியான கேள்வியை தானே கேட்கிறான் என்று.
மீனாட்சியும் அவனுக்கு பதில் கொடுக்க தடுமாற அகரனோ, “அம்மா நான் என்னோட முடிவு என்னனு தெளிவா சொல்லிட்டேன். நான் தன்வியதான் கல்யாணம் பண்ணிப்பேன். அதுக்காக வீட்டைவிட்டு போயிருவேன்லாம் நினைக்காதீங்க. செழியன் விசயத்துல ப்ராப்லம் வேற. ஆனா தன்வி வேதா மாதிரி சாப்ட் கிடையாது. நீங்க ஏதாச்சும் ஒன்னு பண்ணா அவ ரெண்டா திருப்பி கொடுப்பா. அதை மட்டும் புரிஞ்சு நடந்துக்கோங்க” என்றவன் உள்ளே சென்றுவிட்டான்.
அனைவரும் வேதா, செழியனுக்கு போனில் வாழ்த்து தெரிவிக்க, அவர்கள் வெளியே இருப்பதாகவும் மாலை தேவ்வின் வரவேற்பில் பார்க்கலாம் என்றும் கூறிவிட்டனர்.
மாலை மண்டபத்தில் தேவ்விடம் கூறியது போலவே செழியனும் வேதாவும் அவர்களுக்கு முன்பே வந்து விட, அனன்யாவின் குடும்பத்தினர் முன்பே அங்குதான் இருந்தனர். அவர்கள் பெற்றோர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் குடும்பத்தில் ஒருவரும் இல்லை. அவர்கள் மூவரும் நண்பர்களும் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர்.
அறிவழகன், தாமரை குடும்பத்தினர் தேவ்வின் வீட்டுக்கு சென்று அவர்களுடன் கிளம்பி மண்டபத்துக்கு வர, பெண் வீட்டு சார்பாய் செழியனும் வேதாவும் அவர்களை வரவேற்க, அவர்கள் இருவரையும் கண்டவர்கள் அசந்து போயினர். அத்தனை பொருத்தமாக இருந்தனர் இருவரும்.
அனன்யாவின் அன்னை பிரேமாவோ, “வேதா இந்தா மாப்பிளைக்கு ஆரத்தி எடு” என்று அவளின் கையில் ஆரத்தி தட்டை கொடுக்க அவளோ, “அம்மா நானா வேற யாராச்சும் எடுக்கட்டுமே” என்று தயங்கியப்படியே கூற,
அவரோ, “எங்களை சம்மதிக்க வெச்சு ரெண்டு வீட்டுலையும் பேசி இப்போ இந்த கல்யாணம் நடக்க காரணமே நீ தான். நீ எடுடா உன்னை தவிர வேற அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கப்போறாங்க” என்று கூற, வேதாவே தேவ்வுக்கு ஆரத்தி எடுக்க, அவனுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. தங்களின் உறவை புதிதாய் வர போகும் இவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்ற கவலையில் இருக்க, வருங்கால மாமியாரின் இந்த வார்த்தை அவனுக்கு அத்தனை உற்சாகம் அளித்தது.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும் லாவண்யா வேதாவின் கையில் இருந்த ஆரத்தி தட்டை வாங்கி கொள்ள, குடும்பத்தினரும் மற்றவர்களும் அவர்களுக்கு வாழ்த்தை தெரிவித்தனர். மனமக்கள் மகிழ்வுடன் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொண்டனர்.
வரவேற்பு தொடங்க தேவ்வும் அனன்யாவும் வேதாவின் கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்ட உடையில் ஜொலித்தனர். அனைவரும் கீழே அமர்ந்திருக்க, வேதா அனன்யாவின் அருகிலும் செழியன் தேவ்வின் அருகிலும் நின்றிருக்க, ஒவ்வொருவராய் வந்து பரிசுகளை கொடுத்து வாழ்த்தி செல்ல, அன்பரசனுக்கும் தாமரைக்கும் தங்கள் மகளின் திருமணத்தை கண்ணில் பார்க்கவில்லை என்ற ஒற்றை ஏக்கம் அவர்களின் அன்யோன்யத்திலும் அக்கறையிலும் மறைந்து போனது.
தேவ், “எங்கடா அந்த பிசாச காணோம்” என்று தன்வியை கேட்க செழியனோ, “கிளம்பிட்டேன்னு சொன்னா வந்துருவா” என்று கூறிகொண்டிருக்கும் போதே தன்வி வந்துவிட, மேடையேறி வந்தவளோ செழியனையும் வேதாவையும் பார்த்து, “வாவ் ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க. சோ கியூட். ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று செழியனுடனும் வேதாவுடனும் செல்ஃபி எடுக்க, தேவ் அவளையே முறைத்து கொண்டிருக்க, அவள் அவனை வெறுப்பேற்றுக்கிறாள் என்று தெரிந்து அனு சிரிப்பை அடக்கி கொண்டு நின்றாள்.
தேவ்வை தாண்டி அனுவின் அருகில் சென்றவளோ, “ஹேய் அனு சூப்பரா இருக்கே. ஏஞ்சல் மாதிரி அழகா இருக்க” என்று அவளை கன்னத்தில் முத்தமிட்டவள் அவளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, தேவ்வை கண்டுகொள்ளவே இல்லை. அவன் முகம் போன போக்கை கண்டு கீழே அமர்ந்திருந்தவர்களும் சிரிக்க, அவளோ, “ஹேய் அழகி நீ ஏன் இங்க நிக்குற உனக்கு கால்வலிக்கும்ல. செழியா நீயும் வா. நாம போய் கீழ உட்கார்ந்து டீஜே என்ஜாய் பண்ணலாம்” என்று இருவரையும் அழைக்க, தேவ் மறந்து விட்டாளோ என்று தொண்டையை செரும, அவள் அப்போதும் கண்டுகொள்ளாமல் இருக்க அவளின் கையை பிடித்து இழுத்தவன், “தேங்க்ஸ் தன்வி” என்று கூற அவளோ, “நான்தான் உனக்கு விஷ் பண்ணவே இல்லையே” என்று கூற அவனோ, “அடிப்பாவி அப்போ நீ எனக்கு விஷ் பண்ண மறக்கலையா? வேணும்னே அவாய்ட் பண்ணியா?” என்று கேட்க, வேதாவோ அடக்க முடியாமல் சிரித்தாள்.
“அச்சோ அக்கா பாவம் விஷ் பண்ணிடுங்க. அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கூற அவளோ, “என் அழகி சொன்னபிறகும் உனக்கு விஷ் பண்ணாம இருப்பேனா” என்றவள் அவனின் கைப்பற்றி குலுக்கி வாழ்த்து தெரிவிக்க தேவ், “ஈஈஈ தேங்க்ஸ்” என்று கூற, “அவளோ சகிக்கலை” என்றவாறே செழியன், வேதாவுடன் இறங்க மூவரும் அவர்களின் நண்பர்களுடன் சென்று அமர்ந்துகொண்டனர்.
சிறிது நேரம் சென்றிருக்க, தேவ் மணமேடையில் நின்றவாரே செழியனை சைகையில் அழைக்க, அவனோ அவனை பார்க்காதவாறே திரும்பி அமர்ந்தவன் தன்வியிடம், “இவன் இம்சை தாங்கமுடியலடி, இவனுக்கு கல்யாணமா எனக்கு கல்யாணமான்னு தெரியல. பக்கத்துல நில்லு நில்லுனு டார்ச்சர் பண்றான்” என்று செல்லமாய் சலித்து கொள்ள தன்வியோ, “ஹேய் வரான்டா” என்று கூற, தேவ் அவர்களின் அருகில் வந்து ஒரு ஸ்டூலில் அமர்ந்தவன், “ஏன்டா கூப்பிடுறேனே நீ பாட்டுக்கு திரும்பி நிக்குற, மரியாதையா கூட வந்து நில்லு” என்றான்.
அவனோ, “டேய் இவ்ளோ நேரம் அங்கதான நின்னேன். கால் ரொம்ப வலிக்குதுடா” என்று கூற அவனோ, “ச்சே உனக்கு கொஞ்சம் கூட” என்று ஆரம்பிக்க, “நிறுத்து” என்று இடையில் நிறுத்திய செழியனோ, “உனக்கு தாலி எடுத்து குடுத்து கல்யாணம் பண்ணி வச்சேன். அந்த நன்றி கூட இல்லையானு கேக்க போற. அதான” என்று கேட்க
அவனோ, “உனக்கெப்படி தெரியும்” என்று கேட்க, செழியன் அவன் மண்டையில் கொட்டியவனோ “ரொம்ப நேரமா அதை சொல்லிதான் நீ என்னைய பிளாக் மெயில் பன்னிட்டு இருக்க. மரியாதையா போய் புதுசா ஏதாச்சும் யோசிச்சுட்டு வா. போ. அவ அங்க தனியா நிக்குறா பாரு” என்று கூற, அவனோ, “என் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே” என்று வடிவேல் மாடுலேசனில் கூறியவன் மேடையில் சென்று நிற்க அனன்யாவோ, “செம பல்ப் போல வெளிச்சம் இங்க வரைக்கும் அடிக்குது” என்று கூறி சிரித்தாள்.
கீழே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருபவர்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தேவ் செழியன் தன்வி நல்ல நண்பர்கள்.. மீனாட்சிக்கு யார் சந்தோஷமா இருந்தாலும் பிடிக்காதே