Loading

காதல் – 29

 

விஹான் மற்றும் அஸ்வதி யாருமில்லா அந்த  நதிக்கரையில்  படகில் காதலாக கதைத்துக் கொண்டே எங்கு செல்கிறோம் என்று  தெரியாமல் சென்று கொண்டிருந்தனர்…….

 

அஸ்வதி அவளின் சிறு வயது ஞாபகங்கள்,  சந்தோஷங்கள், துக்கங்கள் என அனைத்தையும் அவளின் மனம் கவர்ந்தவனிடம் பேசியவாறு வந்தாள்……

 

அவள் பேச பேச இவன் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே வந்தான்……

 

இருவரும் நீண்ட தூரம் படகில் பயணித்துக் கொண்டே இருந்தனர் அவர்களின் காதல் போல அந்த நதியும் முடியாமல் நீண்டு கொண்டே சென்றது………

 

அப்பொழுது கிழக்கு வானம் சிறிது சிவக்க தொடங்கியது அதை பார்த்த அஸ்வதி…….

 

விஹான் விடியப்போகுது நம்ம வீட்டுக்கு போவோம்  , நம்ம வீட்டுல நம்ம ரெண்டு பேரும் இல்லன்னா நம்ம வீட்டு ஆளுங்க தேடுவாங்க வாங்க போவோம்…..

 

அவள் கூறியதை கேட்டு  விஹானும் படகை திருப்பி இருவரும் கரைக்கு வந்து கொண்டிருந்தனர், பிறகு இருவரும் கரையை வந்து அடைந்தனர்……

 

விஹான் அஸ்வதியை மெதுவாக தூக்கிக்கொண்டு தன்னுடைய பைக்கில் அமர வைத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான் , இருவரையும் சுமந்து கொண்டு அவர்களின் வீட்டிற்கு அந்த பைக் சென்றது……

 

தன்னுடைய வீடு அருகே வரவும் , விஹான் பைக்கை ஆப் செய்துவிட்டு , பைக்கில் இருந்து இறங்கி மெதுவாக அஸ்வதியை பைக்கில் அமர வைத்துக் கொண்டு பைக்கை மெதுவாக உருட்டியவாறு வீட்டிற்குள் வந்தான்…..

 

அவர்களின் வீட்டில் யாரும் இன்னும் விழிக்கவில்லை அது அவர்கள் இருவருக்கும் வசதியாக போனது…..

 

விஹான் அஸ்வதியை தன் கையில் ஏந்தி கொண்டு தன்னுடைய ரூமிற்கு அழைத்து சென்று இருவரும் எதுவும் நடக்காதது போல  உறங்கினார்கள்…..

 

விஹான் தான் முதலில் தூக்கத்தில் இருந்து விழித்தான் , அவன் கண் விழித்து பார்த்த முதல் முகம் தூங்கும் அஸ்வதியின் முகம் தான் , விஹான்னா அஸ்வதி தூக்கத்தில் கீழே விழுந்து விடுவாள் என்று அவளை  சுவர் ஓரம் படுக்க வைத்து விட்டு அவள் விழுந்து விடாமல் இருக்க கட்டிலின் விளிம்பில் தலகாணியை வைத்திருந்தாள்…..

 

விஹான் தூங்கும் அஸ்வதியின் முகத்தையே பார்த்து  ரசித்துக்கொண்டே  இருந்தான்……

 

பிறகு சிறிது நேரம் கழித்து அஸ்வதியும் கண் விழித்து விட்டாள்……

 

விஹான் அஸ்வதியை கண்களாலே களவாடிக் கொண்டிருந்தான் , தூங்கி எழுந்த உடனே அவனின் அத்தகைய காதல் பார்வைகளை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை, அதனால் வெட்கம் மேலிட தலகாணிக்குள் முகம் புதைத்துக் கொண்டாள்…….

 

விஹான் தனது பெட்டில் இருந்து எழுந்து வந்து அஸ்வதியின் பெட் அருகே வந்து அவள் முகத்தை மூடியிருந்த தலகாணியை உருவினான் பிறகு அஸ்வதியின் அழகிய முகத்தை தனது இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான் …….

 

குட் மார்னிங் மை டியர் அஸ்வி ……

 

குட் மார்னிங் மை டியர் விஹான் என்று அவளும் அவனை வயிற்றோடு கட்டி அணைத்து கொண்டாள்……

 

சரி இப்ப என்னோட செல்ல இளவரசிய நான் டாய்லெட் கூட்டிட்டு போக போறேன் ஓகே என்று அவன் அவளை தூக்க போக……

 

விஹான் அது…..

நீங்க எப்படி?

அங்க?

அது….

 

அஸ்வதி தயங்கி தயங்கி பேசிக் கொண்டிருந்தாள்…..

 

விஹான் அஸ்வதியை தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்கு அழைத்து சென்று அங்கு அவளுக்கு அனைத்து உதவிகளையும் முகம் சுளிக்காமல் செய்து விட்டான்…..

 

விஹான்  அவளுக்கு செய்யும் பணிவிடைகளை பார்த்து அஸ்வதி அழுதுவிட்டாள்…..

 

என்னாச்சு குட்டிமா ஏன் அழுகுற?

 

என்ன பெத்த அம்மா இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா பாத்துட்டு இருந்திருக்க மாட்டாங்க , நீங்க என்ன ரொம்ப நல்லா பார்த்துக்குறீங்க விஹான் என்று அவள் அவனின் மார்பினில் சாய்த்து கொண்டாள்…..

 

சரி சரி அழுகை போதும் இப்ப நீ குளி என்று அவளை பாத் டப்பில் அமர வைத்து விட்டு அவளின் பிரஸ்ஸில் பேஸ்ட் வைத்துவிட்டு அவனும் அவனின் பிரஸ்ஸில் பேஸ்ட் வைத்து  இருவரும் பல் துலக்கினார்கள்……

 

அஸ்வதி இந்த பாத் டப்ல  தண்ணி ஃபில்  பண்ணி வச்சிட்டு போகட்டுமா?

 

நானே ஃபில்  பண்ணிக்கிறேன் விஹான் …..

 

ஆனால் விஹான் அஸ்வதிக்கு பாத் டப்பில் தண்ணீர் நிரப்பி வைத்து விட்டு அவளுக்கு தேவையான சோப் , ஷாம்பூ அவளின்  உடைகள் அனைத்தையும் அவளின் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்து விட்டே சென்றான்……

 

வெளியில் செல்லும் விஹானையே கண்ணிமைக்காமல் அஸ்வதி பார்த்துக் கொண்டிருந்தாள் ,

அவனைப் சந்திப்பதற்கு முன்பும் அவனை சந்தித்தற்கு பின்பும் அவளின் வாழ்வில் எத்தனை எத்தனை சந்தோஷமான மாற்றங்கள் என்று எண்ணி அஸ்வதி சிரித்து கொண்டிருந்தாள் …….

 

அஸ்வி இவ்ளோ நேரம் குளிக்காம என்ன பண்ணிட்டு இருக்குற ? என்று வெளியில் இருந்து  விஹானின் குரல் கேட்கவும் அஸ்வதி வேக வேகமாக குளிக்க ஆரம்பித்தாள்…..

 

அஸ்வதி குளித்து முடித்து ஆடை எல்லாம் போட்ட பிறகு விஹான் பாத்ரூம் கதவை தட்டினான்…..

 

அஸ்வதிம்மா குளிச்சு முடிச்சிட்டியா?

 

ஆமா விஹான் குளிச்சு முடிச்சிட்டேன் என்று அவள் கூறவும் அவன் அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு மெதுவாக தன் காதலியை தன் பெட்டில் அமர வைத்து விட்டு அவன் குளிக்க சென்றான்…….

 

பாத்ரூமில் அஸ்வதி போட்டிருந்த அழுக்குத் துணிகள் , அவளின் சோப்,  ஷாம்பூ என அனைத்தையும் எடுத்து அதன் இடத்தில் வைத்துவிட்டு  குளித்து முடித்து விட்டு வந்தான்……

 

அவன் குளித்து முடித்து விட்டு வெளியில் வரவும் , அவன் கண்ட காட்சி…..

 

அஸ்வதி பெட்டில் அமர்ந்து இருந்தவாரே கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள் ,  அதில் அவளது  ஷர்ட் அவளின் கழுத்தின் அருகே போய் இருக்க அவளின் , உள்ளாடை அணிந்த  பால் நிற இடை இவனின் பார்வையில் பட்டது…..

 

பிறகு அவன் அஸ்வதி அருகே வந்து அவளை நேராக அமர செய்து விட்டு அவளின் சட்டையை சரி செய்து விட்டான்……

 

அஸ்வி என்ன தேடிட்டு இருந்த?

 

அது ஒன்னும் இல்ல விஹான் என்னோட க்ளிப் கீழே விழுந்திருச்சு அதான் தேடிட்டு இருந்தேன்….

 

நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காத நா உனக்கு எடுத்து தரேன் என்று விஹான் கட்டில் கீழே விழுந்த அவளின் கிளிப்பை எடுத்துக் கொடுத்தான்…….

 

அஸ்வதி நாம ரெண்டு பேரும் சாப்பிட போலாமா?  எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா……

 

எனக்கும் ரொம்ப பசிக்குது விஹான்….

 

சரி வா ரெண்டு பேரும் சாப்பிட போவோம் என்று அவன் அவளை தூக்கிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு சென்றான்……

 

என்ன அஸ்வதி,  விஹான் ரொம்ப சீக்கிரமா எந்திச்சிட்டீங்க போல?  என்று பீவி கேட்கவும் அப்பொழுதுதான் அஸ்வதி மணியை பார்த்தாள் அது மதியம் இரண்டு மணி என காட்டியது அதை பார்த்ததும்  அஸ்வதிக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரை ஏறியது……

 

ஏய் அஸ்வதி என்ன ஆச்சு?

 

விஹான் மணிய பாருங்க என்று அவள் கூறவும் அவன் மணியைப் பார்த்தான் ….

 

என்னமா கடிகாரம் தப்பா ஓடுதா?

 

அதெல்லாம் சரியா தான் ஓடுது நீங்க ரெண்டு பேரும் தான் லேட் சரி வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்று இருவருக்கும்  தட்டு வைத்து சாதம் போட்டு சாம்பார் ஊற்றி, உருளைக்கிழங்கு பொரியல் வைத்து அப்பளமும் கொடுத்தார்…..

 

இருவரும் சாப்பிடாமல் அமைதியாக இருந்தனர்…..

 

என்ன ரெண்டு பேரும் சாப்பிட மாட்டேங்கிறீங்க ?   என்ன ஆச்சு?

 

அம்மா அது வந்து….                     இன்னைக்கு ரெண்டு பேரும் கொஞ்சம் லேட்டா எந்திரிச்சிட்டோம் சாரிம்மா…..

 

யாருடா உன்கிட்ட இப்ப சாரி எல்லாம் கேட்டா? ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் சாப்பிடுங்க இப்போ……

 

பீவி அம்மா நாளைல இருந்து நாங்க சீக்கிரமா எந்திச்சுருவோம் என்று அஸ்வதி கூறினாள்…..

 

அவள் கூறியதை கேட்டு அவர் சிரித்து விட்டார்……..

 

சரிடா இப்ப ரெண்டு பேரும் சாப்பிடுங்க நேரம் ஆச்சு பாருங்க என்று அவர் கூறவும் இருவரும் பசியில் பீவி அம்மா அவர்கள் தட்டில் வைத்திருந்த அனைத்து உணவுகளையும் இருவரும் முழுவதுமாக சாப்பிட்டு முடித்தனர்…..

 

அம்மா சாப்பாடு சூப்பர்…..

 

தேங்க்ஸ்டா அஸ்வதி , அப்புறம் நீங்க  ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணாலும் தூங்கலாம் யாரும் உங்கள ஒன்னும் சொல்ல மாட்டாங்க சரியா என்று பீவி அம்மா கூறிவிட்டு சென்றார்……

 

அம்மா வீட்ல யாருமே காணல எங்க எல்லாரையும்?

 

அவங்க எல்லாரும் எங்கயோ சுத்தி பாக்க போயிருக்காங்க……

 

விஹானா எங்க அம்மா?

 

விஹானாவுக்கு இன்னிக்கி காலேஜ்ல ஏதோ ஒரு மீட்டிங்காம் அதான் அவ  அங்க போயிட்டா அஸ்வதி……..

 

சரி விஹான் , அஸ்வதிய ரூமுக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வை……

 

சரிம்மா என்று  அவன் அஸ்வதியை தூக்கிக்கொண்டு தங்களின் அறைக்கு வந்து அவளை கட்டிலில் அமர வைத்து விட்டு அவளின் காயப்பட்ட பாதங்களை சுத்தம் செய்துவிட்டு அதில் மருந்து தடவி விட்டான்……..

 

பிறகு இருவரும் டீவியில் படம் பார்க்க ஆரம்பித்தனர்……

 

இன்று நித்தம் ஒரு வானம் படம் ஓடி கொண்டு இருக்கிறது……

 

இருவரும் நேற்றைப் போலவே படம் பார்க்கும் ஆர்வத்தில் மணியை பார்க்க மறந்து விட்டனர் அது இரவு எட்டு மணி என காட்ட விஹானா அவர்கள் இருவருக்கும் இரவு உணவை அவர்களின் அறைக்கு எடுத்து வந்தாள்…..

 

இந்தாங்க ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு தெம்பா ஊர் சுத்திட்டு வாங்க……

 

நாங்க ஊர் சுத்த போனது உனக்கு எப்படி தெரியும்?

 

அட மன்டு அஸ்வதி , நேத்து நீங்க ரெண்டு பேரும் ஸ்வட்டர் போட்டுட்டு இருக்கும்போதே நா முழிச்சிட்டேன் நீங்க போன பிறகு கதவ எல்லாம் ஒழுங்கா சாத்துனது நான்தான் என்று அவள் கூற விஹான் சிரித்து விட்டான்…..

 

அப்புறம் அண்ணா, அப்பா உன்னோட காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிட்டாங்க இனிமே உனக்கு எல்லாம் ஜெயம்தான்……

 

என்ன சொல்ற விஹானா இது எப்ப நடந்தது?

 

நேத்து அம்மா பேசி அப்பாவ சம்மதிக்க வச்சிட்டாங்க தெரியுமா?     அப்புறம் இன்னொரு விஷயம் நம்ம அப்பா  தான் நம்ம அஸ்வதிய ஆசிரமத்தில் சேர்த்து அவளுக்கு அஸ்வதின்னு  பேர் வச்சது  என்று விஹான்னா கூறினாள்…..

 

என்ன சொல்ற விஹான்னா ?   நம்ம அப்பா அஸ்வதிய ஆஷ்ரமத்தில் சேர்த்தாங்களா?

 

அதிர்ச்சியில் விஹான் மற்றும் அஸ்வதி…..

 

அடுத்து நடக்க போவது என்ன?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்