
மெல்லினம் 15:
காரை செலுத்தியவன் ஆள் அரவமற்ற சாலையை தேட அது கிடைத்தால் தானே. அதுவும் பகலில் ஆள் அரவமற்ற சாலை கிடைத்து விடுமா என்ன?
வேறு வழியின்றி சிறிது தூரம் செலுத்தியவன், சாலையின் ஒரு ஓரத்தில் வேப்ப மர நிழலில் இளநீர், நொங்கு முதலியவை விற்று கொண்டிருக்க, அதன் அருகே நிறுத்தாமல், சற்று தள்ளியே நிறுத்தியவன், இறங்கி சென்று இரண்டு இளநீர் மற்றும் நான்கு நொங்கினை வாங்கி கொண்டு வந்தமர்ந்தான்.
வெளியே இருந்த பார்ப்பவர்களும் தவறாக நினைக்க வாய்ப்பில்லை. அவன் பக்க கார் கண்ணாடியையும் திறந்தே வைத்திருந்தான்.
முதலில் அவனது செய்கைகளை புரியாமல் விழித்தவளுக்கு, புரிந்த நொடி உதட்டில் வந்து ஒட்டி கொண்டது அழகிய புன்னகை.
‘யாரும் தப்பா நெனச்சிட கூடாதாம்’ என நினைத்து கொண்டவளிற்கு மனம் லேசான உணர்வு.
அவள் கையில் ஒரு இளநீரை கொடுத்தவன் “ம்ம்ம் இதை குடி மொதல்ல” என்க,
மறுபேச்சின்றி வாங்கி கொண்டவள் குடித்து முடிக்க, வாங்கியவன் கடைகாரரிடம் கொடுத்து சீவி வழுக்கையை வாங்கி வந்து அவள் கையில் திணித்தான்.
கையில் வாங்கியவள் அதனை உண்ணாமல் இருக்க, மனம் முழுவதும் அவன் அடுத்து என்ன பேசுவான் என்றே தோன்றியது.
“ம்ஹூம் இதை சாப்பிடலையா நீ?” என்க,
“இதோ” என்றவள் ஒரு வாய் வைக்க,
“இப்போ சொல்லு முல்லை, எதுக்காக ஹோட்டல்ல இருந்து அப்புடி எந்திரிச்சு போனா? நான் சொன்ன விஷயம் பிடிக்காததாலா? இல்லை என்னை புடிக்காததாலா?”
லேசான மனம் மீண்டும் படபடப்புக்கு தாவியது.
“அந்த பேச்சு பிடிக்கல” என்றவளின் வார்த்தைகளில் உன்னை பிடிக்கும் என்ற செய்தி மறைந்திருந்ததோ!!
“ஓ..ஓஹோ அப்போ என்னை பிடிக்கும்ல உனக்கு! அப்பறம் என்ன கல்யாணத்துல கஷ்டம்?”
“ப்ளீஸ், உங்கள பிடிக்காதுன்னலாம் இல்லை, பிடிக்கும்! ஆனா அதுக்காக கல்யாணம் பண்ணணும்னு நீங்க நெனைக்கிறது எல்லாம் சரியா??”
“ஏன் சரி இல்லை எனக்கு உன்னையும் உன் குடும்பத்தையும் பிடிச்சிருக்கு. உனக்கும் என்னை பிடிக்கும்னு இருக்கும்போது நம்ம கல்யாணம் பண்ணிகிறதுல என்ன தப்பு முல்லை??”
“நான் தப்புன்னு சொல்லல எனக்கு இது வேண்டாம், கண்டிப்பா ஒத்து வராது. ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தைய பெத்து, திரும்பவும் ஒரு கல்யாணமான்னு அசிங்கமா இருக்கு. என்னால இதை ஏத்துக்கவே முடியாது. எப்புடி எப்புடி இது சாத்தியமாகும்”
அவளின் அசிங்கம் என்ற வார்த்தையில் அவளின் மனநிலை துள்ளியமாக வெளிப்பட்டு விட்டது.
‘அவள அவளே மனசளவுல ரொம்ப தாழ்த்தி நெனச்சிட்டு இருக்கா.இதை பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்’ என நினைத்த கதிர்.
“முல்லை, ஏன் சாத்தியமாகுது? முதல் கல்யாணம், தோல்வில முடிச்சு மறுமணம் பண்ணுறது எல்லாம் அவ்வளவு பெரிய குத்தம் இல்லடா” என்க,
“ம்ஹீம் இதை நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். ஆம்பளைக்களுக்கு சாத்தியமாகலாம் கண்டிப்பா பொண்ணுங்களுக்கு இல்லை”
“சரி நான் ஒத்துக்குறேன்.ஆனா நம்ம விஷயத்துல ரெண்டு பேருமே டிவோர்ஸ்டட் தான், பிரச்சனை இல்லையே”
“ம்ம்ம் பெரிய பிரச்சினையே இருக்கு “அத்வி” மறந்துட்டீங்களா”??
“அத்வினால என்ன பிரச்சனை வர போகுது, அவன் என்னை ஏத்துக்குவான்” என்ன சொன்னாலும் அவள் பிடியிலயே இருக்கிறாளே என சற்றே கடுமையாக வந்தது அவன் குரல்.
“அத்வி தான் பிரச்சனையே, நீங்க டிவோர்ஸ்டட்னாலும் தனியா இருக்கீங்க, பட் நான் அப்புடி இல்லை! கைல குழந்தையோட இருக்கேன்.என்ன தான் உங்க குடும்பத்துல மறுமணத்துக்கு சம்மதிச்சாலும், குழந்தையோட இருக்குற என்னை கண்டிப்பா உங்களுக்கு எடுக்க மாட்டாங்க”
“அப்புடி எல்லாம் இல்லை முல்லை. உன்ன கல்யாணம் பண்ண கேட்ட விஷயம் அவுங்களுக்கு தெரியும். என் விருப்பம் தான் அவுங்களுக்கு முக்கியம்”
“இப்போ உங்க ஆசைக்காக சரின்னு சொல்லிருக்கலாம். இதேது நாளைக்கு கல்யாணம் ஆகி நமக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா, அத்விய வேறாதா பாப்பாங்க ஏன்னா அவன் உங்க ரத்தம் இல்லையே? குழந்தை வரலனாலும் அவனை தான் காரணமாக்குவாங்க. அவன் இருக்க போய் தான் நம்ம வேண்டாம்னு சொல்றோம்னு, காலபோக்குல அவங்க நெனைக்கலாம். பையனோட வாரிசை பாக்க முடியலன்ற ஏக்கம் கோபமா மாறலாம், அது என்மேலயும் அத்வி மேலயும் தான் திரும்பும்”
“ம்பச் முல்லை, சும்மா இந்த கல்யாணம் வேணாம்ன்றதுக்காக, நீயே இல்லாத ஒரு பிரச்சனைய உருவாக்காத! நம்ம கொஞ்சம் வெளிப்படையா பேசலாம். எனக்கு சரியான காரணத்தை சொல்லு ஏன் இந்த ப்ரஃபோசல் வேண்டாம்” என சற்ற அவன் குரலை உயர்த்த,
“ஹரிஷ்” என்றாள் ஒற்றை வார்த்தையாய்.
“என்ன? அவனுக்கு என்ன?? இன்னொரு கல்யாணம் பண்ணி நல்லாதான இருக்கான்.அவனால முடியும் போது உன்னால முடியாதா??”
“முடியாது!” என்றவளின் வார்த்தை சற்றே கரகரத்து ஒலித்ததோ!
“ஏன்…ஏன்…முடியாது!!!” என்றவனிற்கு அவளின் குரலின் வேறுபாடு உரைக்க…
“முல்லை!!!” என்று அவள் முகம் பார்க்க கண்கள் கலங்கி இருந்தது.
“ஒரு..வேளை…நீ…இன்னமும்.. ஹரிஷை” என்றவனிற்கு அதற்கு மேல் கேட்க முடியாது தொண்டை அடைக்,
“ம்ம்ம்” என்ற ஒற்றை தலையசைப்பில் கதிரின் மனதினை உடைத்திருந்தாள் பாவை.
அவளின் தலையசைப்பில் அவனின் இதயம் உடைந்து விட யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்த உணர்வு.
அவனின் கைகள் நடுங்க ஸ்டிரீங்கை இறுக பிடித்து அதனை கட்டுபடுத்தியவனுக்கு இது எல்லாம் கனவாக இருக்க கூடாதோ என்ற நப்பாசை எழ,
‘கதிர் இது கனவு தான். முல்லை இன்னும் பதில் சொல்லலை உன்னோட பிரம்மை அது கலங்காத’ என தன்னை தேற்றி கொண்டவன்,
அவளை திரும்பி பார்த்து “முல்..” என அழைப்பதற்குள்,
“யெஸ் சார் ஐ லவ் ஹரிஷ்!!” என அவன் கேட்டது கனவல்ல நிஜம் தான் என பொட்டில் அடித்தாற் போல் கூறியிருந்தாள்.
அவ்வளவு தான் அதுவரை அவன் அடக்கி வைத்திருந்த இதயம் தான் உடைந்ததை கதறல் மூலம் அவனிற்கு வெளிப்படுத்த,
இதயத்தின் கதறல் அவனின் கண்களை நிறைக்க, தொண்டையில் கேவல் சிக்கி கொண்டு எப்படியும் வெளிவந்து விடுவேன் என மிரட்டி கொண்டிருக்க,
கலங்கிய மனதையும் கண்களையும் ஒரு சேர இறுக்கியவன், கையில் இருந்த இளநீர் வழுக்கையை ஒரே வாயில் போட்டு விழுங்க தொண்டையை விட்டு இறங்க மறுத்து சண்டிதனம் செய்தது. வேகவேகமாக தண்ணீரை குடித்தவன் வழுக்கையோட சேர்ந்து அவனின் கேவலையும் விழுங்க முயற்சித்து வெற்றி பெற்றவனின் கண்கள் இரண்டும் போராட்டத்தின் விளைவாக சிவந்து விட்டிருந்தது.
அவனிடம் பதில் இல்லாமல் போக திரும்பி பார்த்தவளிற்கு அவன் ஏதோ சிரமப்படுகிறான் என புரிய,
“சார்??” என் அழைத்தவாறு அவள் தோளை தொட,
அதுவரை அவன் அடக்கி வைத்திருந்த கேவல் எல்லாம் ஆத்திரமாக வெளிப்பட்டு விட்டது.
“அவன் இவ்வளவு செஞ்சும் இன்னமும் உன் மனசுல அவன் தான் இருக்கானா??” என அவன் இதழ்வளைத்து ஏளனமாக கேட்க,
அவனின் ஏளனத்தில் அவள் கண்கள் நீரை உற்பத்தி செய்துவிட்டான்.
அவன் கேட்ட தொனியே ஏதோ அவளிற்கு அருவருப்பாக கேட்டது போல் தோன்ற,
அடுத்த நிமிடம் வெடித்திருந்தாள்.
“இதுக்கு தான், இதுக்கு தான், நான் இதை யாருகிட்டயும் சொல்லாம இருந்தேன்.என் அம்மாகிட்ட கூட சொல்லாம மறைச்சி வச்சிருந்தேன்.சொன்னா எங்க என்னை அசிங்கமா நெனைச்சிடுவாங்களோன்னு பயந்து நான் என் மனசுக்குள்ள மறைச்ச விஷயம்!!
இதோ இப்போ நீங்களே அதை உண்மையின்னு நிருபிச்சுட்டீங்கள என்னை அசிங்கமாதான பாக்குறீங்க.
நான் என்ன பண்ண? சொல்லுங்க! என்னை அசிங்கமா நெனைக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணேன். அவனா வந்தான் வேண்டாம்னு ஒதுங்கி போன என்னை வம்படியா கல்யாணம் பண்ணிகிட்டான். அதுக்கப்பறம் தெகட்ட தெகட்ட எனக்கு காதலை கொடுத்தான். சத்தியமா சொல்லுறேன் கல்யாணத்துக்கு அப்பறமான வாழ்க்கையில எனக்கு அளவு கடந்த சந்தோஷத்தை மட்டுமே கொடுத்தான். ஒவ்வொரு நாளும் என்னை அந்த அளவு அவனோட காதல்ல கரைய வச்சான்.
இதை விடயா சொர்க்கம் இருந்துட போகுதுன்ற அளவுக்கு என்னை அப்புடி காதலிச்சான் என்னையும் காதலிக்க வச்சான்.
அத்வி என் வயித்துல இருந்தப்போ என்னை அப்புடி கொண்டாடி தீர்த்தான்.அம்மா அப்பா பார்த்திருந்த கூட இப்புடி ஒருத்தன கண்டிப்பா பார்த்துருக்க மாட்டாங்கன்ற அளவுக்கு யோசிக்க வச்சான்.
அவனுக்காக என்னோட ப்ரஃபஷன் என்னோட உயிர்ப்பை அவனோட சந்தோஷத்துக்காக அவனுக்காக மட்டுமே விடுற அளவுக்கு அவன் மேல் பைத்தியமா என்னை மாத்திருந்தான்.
அன்பான புருஷன் அழகான குழந்தையின்னு கோபுரத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருந்தவள்ட்ட இருந்து தீடீர்ன்னு எல்லாத்தையும் புடுங்கி கீழ தள்ளிவிட்டு இனி இது எல்லாம் நீ நெனச்சு கூட பாக்க கூடாதுன்னா எப்புடி? எப்புடி சார் முடியும்?
நான் என்ன உணர்ச்சியில்லாதவளா? இல்லையே ரத்தமும் சதையும் உள்ள ஒரு மனுஷி தான, அப்புடி ஒரு காதலான வாழ்க்கைய வாழ்ந்துட்டு திடீர்னு அவனை மறந்துட்டு வேற வாழ்க்கைக்கு தயாராகுன்னா முடியுமா? இரக்கமே இல்லையா?
அவன் மறந்துட்டான், ஆனா என்னால முடியலையே! அவன் கொடுத்த வாழ்க்கையோட தாக்கத்துல இருந்து வெளிய வர முடியலையே??
என்னை விட்டுட்டு வேற ஒருத்தியை அவன் கல்யாணம் பண்ணப்பவும், என்ன விட்டு போக அந்த பொண்ணு தான் காரணம்னு தெரிஞ்சப்பவும், அவ்வளவு அழுகை கோபம் வந்துச்சு.
ச்சீ இப்புடி பட்ட ஒரு அயோக்கியன் எனக்கு வேண்டாம்னு, என் வாழ்க்கையில இருந்து தூக்கி போடலாம்னு நெனைச்சேன்.ஆனா நெனைக்க மட்டும் தான் முடிஞ்சதே தவிர அதை செயல்படுத்த முடியாம அவனோட வாழ்ந்த பழைய வாழ்க்கை என்னை தடுத்துடுச்சு.
இப்பவும் அவனை மறக்கவும் முடியாம, போடான்னு தூக்கி போடவும் முடியாம, நரக வேதனை தான் சார் மனசுல.
தனியா இருந்தா, எதனால ஹரிஷ்க்கு என்னை பிடிக்காம போச்சு! நான் அழகா இல்லையா? அத்வி பொறந்த அப்பறம் அவன்கிட்ட அன்பா இல்லையா? அவ்வளவு சகிக்க முடியாத அளவு ஆகிட்டோனான்னு, என் மூளை வண்டா குடையும் கிட்ட தட்ட பைத்தியம் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சுட்டேன்.
எப்புடி என்ன அவ்வளவு ஈசியா அவனால தூக்கி போட முடிஞ்சதுன்ற கேள்விக்கு இன்னமும் பதில் கிடைக்கல.
அவன் வாழ்க்கையில இருந்து இன்னமும் என்னால விடுபட முடியலையே என்னை என்ன பண்ண சொல்றீங்க சார்? இந்த காரணத்தை வாய் விட்டு யாரு கிட்டயும் சொல்ல கூட முடியாம நான் தவிப்பது ஆண்டவனுக்கு கூட தெரியாது” என கோபத்தில் ஆரம்பித்தவள் அழுகையில் கரைந்து அவளின் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்க…
அடுத்து சில நொடிகளில் கதிரழகன் கைகளில் கார் பறந்தது.
தான் இத்தனை பேசியும் கதிர் எதுவும் பேசாதது அவளிற்கு ஏமாற்றமாக இருக்க அவனின் முகம் பார்க்க இறுகி போய் சிவந்து கிடந்தது.
அடுத்த சில மணி நேரங்களில் தேன்முல்லையின் வீட்டின் முன் காரை நிறுத்தியவன்,
“உங்கப்பா கிட்ட சொல்லி வண்டிய எடுத்துட்டு வர சொல்லிகோ.இந்த நிலைமையில நீ வண்டியோட்டிட்டு வர்றதுல எனக்கு இஷ்டம் இல்லை” என்றவன் “இப்போது நீ இறங்கலாம்” என்ற தோரணையில் அவன் அமர்ந்திருக்க.
அவள் காரை விட்டு இறங்கிட அவள் இறங்குவதற்காக காத்திருந்தவன் போல் அடுத்த நொடியே புழுதி பறக்க காரை கிளப்பியிருந்தான் கதிரழகன்.
‘தன்னிடம் போய்விட்டு வருகிறேன்’ என கூறுவானா? என அவள் எண்ணி முகம் பார்க்கும் முன் பறந்திருந்தான்.
முகம் கொடுக்காது சென்றவனை கண்டவளிற்கு மிகுந்த அவமானமாக போய்விட கண்கள் மீண்டும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தின.
அவனின் இந்த பாரமுகமே தான் கூறியதை கேட்டு தன்னை அவன் அசிங்கமாக நினைத்து விட்டான், என எண்ணியவளிற்கு அழுகை கேவலமாக மாற வீட்டினுள் ஓடியவள், எதிர்ப்பட்ட தாயையும் மகனையும் அலட்சியப்படுத்தி விட்டு அறையினுள் சென்று கதவடைத்து படுக்கையில் விழுந்தவளிற்கு கேவல் வெடித்தெழுத்தது.
“இல்லை….இல்லை…நான் அசிங்கமான பொண்ணு இல்லை…ஏன் கதிர் என்னை அப்புடி நினைச்சுட்டீங்க…அப்போ நான் தப்பு செய்றனா? தப்பான பொண்ணா நான்? என கதறியவளுக்கு
கதிர் அவளை அசிங்கமாக நினைத்து விட்டான் என்பதை தாளாவே முடியவில்லை. அவனின் பார்வையில் அவள் தரம் இறங்கி விட்ட உணர்வு.
எதனை நம்பி பெற்ற தாயிடம் கூட கூறாது மறைத்த விஷயத்தை இவனிடம் கூறினால் என்ற தெளிவே அவளிடம் இல்லை.
இயலாமையின் கதிரை நினைத்து வெடித்தழுதாள் அழகனின் முல்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இன்னைக்கு அத்தியாயம் சூப்பர் .. முல்லையோட உணர்வுகள் நிஜம் தான் .. ஒருவேளை இப்போ கதிர் கிட்ட சொல்லிட்டா .. இதுல இருந்து அவளால வெளில வர முடியும் .. கதிர் அதுக்கு உதவி பண்ணுவான் .. கதிருக்கும் ரொம்ப மன கஷ்டம் தான் .. கதிர் முல்லையை புரிஞ்சுப்பானா 🤔🤔