Loading

அத்தியாயம் 35 

 

விக்ரம் முட்டி போட்டு நிலா விடம் மோதிரத்தை நீட்டிக்கொண்டு   

 

  “எப்போதும் உன்னை

    நான் பார்க்கணும் 

உன்னோடு நான் சேரனும் 

உனக்காகவே நான் வாழனும்

     எண்ணங்களை 

  உன்னோடு பகிரனும் மறையும் வரை பிரியாமல் 

 பிரியமுடன் வாழனும்!!”

 

என்னை ஏத்துப்பியா என்றான். நிலாக்கு சந்தோஷத்தில் வாய் வார்த்தைகள் எழ வில்லை. 

 

தன் ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டு விக்ரம் மோதிரத்துடன் நீட்டிய கைகளை ஒரு கையால் நெஞ்சோடு அனைத்து கட்டிக் கொண்டு “ஐ அம் சாரி நான் உங்கள ரொம்ப ஹெர்ட் பண்ணிட்டேன்” என்று அழுதால்.

 

விக்ரம், “நான் ப்ரொபோஸ் பண்ணதுக்கு மேடம் என்னை இன்னும் செலக்ட்டும் பண்ணல ரிஜெக்ட்டும் பண்ணலையே” என்றான் கேலியாக. 

 

நிலா தன் கைகளை நீட்டி “நீங்களே போட்டு விடுங்க” என்றாள். 

 

விக்ரம் அவள் கையில் மோதிரத்தை போட்டுவிட்டு மோதிரத்தின் மேல் தன் இதழ்களை பதித்து எடுத்தான். 

 

நிலா, “துருவ் ஐ லவ் யூ” என்று கூறி முடிக்கும் பொழுது அங்கேயே மயங்கி விக்ரம் முட்டி போட்டு இருந்ததால் அவன் மேலேயே விழுந்து இருந்தால்.

 

விக்ரம் பதட்டமாக, “நிலா என்ன ஆச்சு.. என்ன ஆச்சு உனக்கு” என்று அவளை தன் மடியில் அப்படியே படுக்க வைத்துக் கொண்டான்.

 

விக்ரம், “ப்ளீஸ் எழுந்திரு நிலா எனக்கென்று இருக்கிறது நீ மட்டும் தான். இப்போ மட்டும் நீ எழுந்திருக்கலைனா”.

 

“அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது நிலா பிலிஸ் எழுந்திரு” என்று பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

 

ராஜேஷ், “ஓடி வந்து டேய் என்னடா ஆச்சு? என்னடா இப்படி உக்காந்து அழுதுகிட்டு இருக்க எழுந்திரரு டா முதலில் நிலாவ தூக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவோம்” என்றான்.

 

விக்ரம் அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கார் வரை ஓட்டமும் நடையுமாக இருந்தான். 

 

காரில் ஏற்றிக்கொண்டு எதிரில் என்ன வருகிறது என்று கூட அறியாமல் தன் வண்டி மட்டுமே அந்த சாலையில் ஓடுவதாக நினைத்து மின்னலை போல் ஹாஸ்பிட்டலுக்கு சென்றடைந்தான்.

 

விக்ரம், “டாக்டர் டாக்டர் என்னுடைய நிலாவை எப்படியாவது காப்பாத்துங்க. அவளுக்கு என்ன ஆச்சுனே தெரியலை”.

 

“நல்லா தான் என் கூட இருந்தா திடீர்னு மயங்கி விழுந்துட்டா எனக்கு என்னமோ பயமா இருக்கு”.

 

“ப்ளீஸ் டாக்டர் எப்படியாவது காப்பாத்துங்க” என்று ரொம்பவே எமோஷ்னலுடன் கத்தினான். 

 

டாக்டர், “ஒரு நிமிஷம் நீங்க முதல்ல ரிலாக்ஸா இருங்க நான் போய் பார்க்கிறேம் என்னென்ன” என்றான்.

 

நிலாவை ரூமுக்கு அழைத்துச் சென்று செக் செய்துவிட்டு. பிறகு அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றிவிட்டு டாக்டர் வெளியே வந்தார். 

 

விக்ரம், “டாக்டர் என்ன ஆச்சு? அவளுக்கு பிரச்சினை ஒன்னும் இல்லையே” என்றான் பயத்துடன். 

 

டாக்டர், “அந்த பேஷண்டுக்கு நீங்க யாரு?“ என்றார். விக்ரம், “நான் அவளோட ஹஸ்பண்ட்” என்றான். 

 

டாக்டர், “ஒரு வைஃப் வீட்ல எப்படி இருக்காங்க? என்ன மனநிலையில் இருக்காங்க? என்ன பண்ணிட்டு இருக்காங்க? எதுவுமே நீங்க எல்லாம் கவனிக்கவே மாட்டீங்க இல்ல” 

 

“உங்களுக்கு எல்லாம் கல்யாணம் என்பது அவ்ளோ அசால்டா போச்சு ஒரு பொண்ணை மதிக்கிறதே கிடையாது” என்றார்.

 

விக்ரம், “எதுவும் புரியாமல் அப்படி எல்லாம் இல்லை டாக்டர். நான் நல்லா தான் பார்த்து கிட்டேன்” என்றான். 

 

டாக்டர், “என்ன நல்லா பாத்துக்கிட்டிங்க. ஒரு நாள் முழுக்க அவங்க சாப்பிடாம இருந்திருக்காங்க” என்றார்.

 

விக்ரம் யோசனையாக, “சாப்பிடாமலா..‌”என்றான். டாக்டர், “இப்ப தெரியுதா நீங்க உங்க வைஃப்ப எந்த லட்சணத்துல பாத்துட்டு இருக்கீங்கன்னு”. 

 

“போங்க சார் இதுக்கப்புறம் ஆச்சு ஒழுங்கா உங்க வைஃப்பை பார்த்துக்கோங்க. இப்போ இருக்குற பசங்க எல்லாருமே இப்படி தான் இருக்கீங்க”. 

 

“கல்யாணம் பண்றீங்க அவங்கவங்க தனித்தனியா அவங்க வாழ்க்கைய பாக்குறீங்க யாரும் பொண்டாட்டியை பார்க்கிறது கிடையாது”

 

“அப்படியே பொண்டாட்டியை நல்லா பாத்துக்கிற மாதிரி புருஷன் இருந்துட்டா பொண்டாட்டி புருஷனை பாத்துக்குறது இல்ல”. 

 

“தினமும் இது போல் இரண்டு கேஸ் ஆச்சும் வந்துடுது” என்று புலம்பிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

 

டாக்டர் சென்ற பின் விக்ரம் நிலாவை சென்று பார்த்தான். நிலா மயக்க நிலையில் இருந்தாள். 

 

அவள் பக்கத்திலேயே அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டே இருந்தான். இரண்டு மணி நேரமாக சிலையை போல் இருந்தான். 

 

அப்பொழுது உள்ளே வந்த நர்ஸ், “பேஷண்ட்கு குளுக்கோஸ் ஏறிடுச்சு நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போலாம். அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார். 

 

பிறகு விக்ரம் ஹாஸ்பிடல் பிள் எல்லாம் செட்டில் பண்ணிவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான். 

 

செல்லும் வழியில் விக்ரம் ஒரு வார்த்தை கூட நிலாவிடம் பேசவே இல்லை. 

 

நிலா, “என்ன ஆச்சு துருவ்? ஏன் பேச மாட்டேங்கற. ஏன் அமைதியாவே இருக்க? எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்.

 

விக்ரம் திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவன் எதுவும் பேசாமல் வீட்டை சென்று அடைந்தான். 

 

விக்ரம், “நீ மேல ரூமுக்கு போ நான் வரேன்” என்றான். நிலா அவள் அறையை நோக்கி சென்று விட்டாள்.

 

பிறகு விக்ரம் அடுப்பாங்கரைக்கு சென்று அவளுக்கு சாப்பிட உணவு இருக்கா என்று தேடிப்பார்த்தான். 

 

அங்கு அவன் கண்ணுக்கு எதுவும் கிடைக்க வில்லை. அதனால் பால் மட்டும் காய்ச்சி ஒரு டம்ளரில் எடுத்துக் கொண்டு. 

 

சில பழங்களை தட்டில் அடுக்கிக் கொண்டு அவனும் அறையை நோக்கி சென்றான். 

 

நிலா அவன் ஒரு கையில் பழுதட்டும். மறுக்கையில் பால் டம்லரையும் வைத்துக் கொண்டு உள்ளே வருவதை பார்த்தவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். 

 

விக்ரம் அவளைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான். ஆனால் நிலா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தாள். 

 

கோபமாக உள்ளே வந்த விக்ரம் அவள் இப்படி சிரிப்பதை பார்த்து அவன் கோபம் அவனை விட்டு எங்கோ பறந்து சென்று விட்டது.

 

விக்ரம், “இப்போ எதுக்கு டி நீ சிரிக்கிற சொல்லிட்டு சிரி” என்றான். 

 

நிலா அவனை அழைத்துச் சென்று கண்ணாடி முன்பு நிற்க வைத்தாள். 

 

நிலா, “அங்க பாருங்க நீங்க எப்படி இருக்கீங்கன்னு. ஒரு கையில் பாலும் மறுக்கையில் பழ எடுத்துட்டும் வைத்து இருக்கிங்க”. 

 

“இதை பார்க்க கல்யாணம் பண்ணிட்டு முதல் இரவுக்கு ஒரு பொண்ணு எப்படி ரூமுக்குள்ள வருவாளோ அதுபோல் நீங்க வந்து இருக்கீங்க” என்று சொல்லி மீண்டும் சிரித்தால். 

 

விக்ரம் இரண்டையும் டேபிள் மேல் வைத்துவிட்டு கை கட்டியபடி அவளை உற்றுப் பார்த்தான்.

 

நிலா சிரிக்க முடியாமல் வயிற்றில் கை வைத்துக் கொண்டு சிரித்தாள்.

 

விக்ரம், “அடிப்பாவி இப்படியா நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்க” என்றவன். 

 

“சரி இவ்வளவு நேரம் பொண்ணுங்க என்ன பண்ணுவாங்களோ அதை செய்து காட்டினேன்”. 

 

“இப்போ ரூமுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் பாய்ஸ் என்ன பண்ணுவாங்கன்னு செய்து காட்டவா” என்று அவளை நோக்கி ஒரு அடி முன் வைத்தான்.

 

நிலா இவ்வளவு நேரம் குலுங்கி குலுங்கி சிரித்தவள் சட்டென்று சிரிப்பை நிறுத்தி விட்டால்.

 

சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாது என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு திரு திரு என விழித்துக் கொண்டு படபடப்பாக நின்றிருந்தால்.

 

விக்ரம் இன்னொரு அடி அவளை நோக்கி முன் நகர்ந்தான். 

 

நிலா ஒரு அடி பின் நகர்ந்தவள் வார்த்தைகள் தந்தி அடித்தது படி, “துருவ் இப்போ எதுக்கு கிட்ட கிட்ட வர” என்றாள்.

 

விக்ரம், “அப்புறம் உனக்கு ரூம்புக்கு வந்ததும் பாய்ஸ் என்ன பண்ணுவாங்கன்னு காட்டணும் இல்ல” என்றான். அவளை நோக்கி முன் நகர்ந்து கொண்டே.

 

நிலா, “இல்ல நான் சும்மா தான் சொன்னேன்” என்று பின் நகர்ந்தவள் சுவற்றில் இடித்து அங்கேயே நின்று விட்டாள்.

 

விக்ரம் அவளிடம் நெருக்கமாக சென்று காற்று கூட உள்ளே நுழைய இடம் இல்லாதவாறு நெருங்கி இருந்தான். 

 

நிலா இறுக்கி கண்களை மூடிக்கொண்டாள். விக்ரம் தன் கைகளைக் கொண்டு அவள் உதட்டை பிடித்து ஆட்டினான்.

 

மறு கையில் இருந்த ஆப்பிள் பழத்தை அவள் வாயில் வைத்து விட்டு, “மேடம் கண்ணை திறந்து கொஞ்சம் பாருங்க”.

 

“இப்படி கண்ணை மூடிகிட்டே இருந்தால் எப்படி சாப்பிடுவிங்க” என்றான் அவள் முகத்தருகே குனிந்து.

 

நிலா வெட்கத்தில் இரு கன்னங்களும் சிவந்த நிலையில் கண்களை திறந்தாள்.

 

விக்ரம், “கண்டதையும் யோசிக்காமல் வந்து உட்கார்ந்து முதல்ல சாப்பிடு ரொம்ப யோசிக்காத” என்று மூக்கை பிடித்து ஆட்டி கண்ணடித்தான். 

 

நிலாவுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியாமல் விழித்தால். 

 

பிறகு அவளை விக்ரம் அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்து அனைத்து பழங்களையும் சாப்பிட வைத்து அந்தப் பாலையும் குடிக்க வைத்தான்.

 

நிலா வேண்டாம் என்று சொன்னாலும் அவளை கட்டாயப்படுத்தி மொத்தத்தையும் சாப்பிட வைத்தான். 

 

அவள் சாப்பிட்டு முடித்த பின் “இப்போ சொல்லு நீ எதுக்காக சாப்பிடாம இருந்த?” என்று தன் கோபத்தை அப்பொழுது தான் காட்டினான்.

 

நிலா, “மனசு சரியில்ல காலையில் இருந்து அதான் சாப்பிடலை” என்றாள். 

 

விக்ரம், ”நான் உன்னை காலையில் கூட்டிட்டு வந்து வீட்டில் விட்டுட்டு ஆபீஸ்க்கு போனேன் இல்ல”.

 

“அதுக்கு அப்புறம் நீ சாப்பிட்டு இருக்கணும்ல அதை விட்டுட்டு என்ன மனசு சரியில்ல அது சரியில்லைன்னு காரணம் சொல்லிக்கிட்டு இருக்க” என்றான்.

 

நிலா மெதுவான குரலில், “மதியம் நீங்க வருவீங்க ஒன்னா சாப்பிடலாம்னு நினைச்சேன்” என்றாள்.

 

விக்ரம் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “அப்போ அதுக்காக தான் சாயங்காலம் வந்து சாப்பிட்டீங்களா ன்னு கேட்டியா?” என்றான். நிலா ஆமா என்று தலை அசைத்தாள். 

 

விக்ரம் கோபமாக, “பைத்தியமா டி உனக்கு. என் கூட வந்து சாப்பிடுங்கன்னு சொல்லி இருந்தா நான் வந்து உன் கூட சாப்பிட்டு இருக்க மாட்டேனா”

 

“இன்னோரு தடவை இதுபோல் நீ சாப்பிடாம இருந்தேனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”. 

 

“இது தான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ என் வாழ்க்கையில் எனக்கு இருக்க ஒரே ஒரு சந்தோஷம்னா அது நீ மட்டும் தான்”. 

 

“இன்னோரு வாட்டி இப்படி எல்லாம் என்னை பயம் காட்டாத என்னால தாங்க முடியாது” என்றான் கண்கள் கலங்கியபடி.

 

நிலா, “சரி சரி ரொம்ப புலம்பாதீங்க இனிமே இப்படி எல்லாம் நடக்காது. அது சரி காலையில் இருந்து என்னை எவ்வளவு அலைய விட்டுட்டீங்க” என்றாள் உதட்டை சுழித்து கொண்டு.

 

விக்ரம், “அது வந்து நீ என் கிட்ட பேச சுத்தி சுத்தி வந்தியா எனக்கு ரொம்ப ஜாலியா இருந்துச்சு” என்று பல்லைக் காட்டினான்.

 

நிலா, “துருவ் இன்னோரு வாட்டி என்கிட்ட இப்படி நடந்துக்குவியா” என்று தலையணையால் அடித்தால். 

 

விக்ரம் அவளை தடுக்க முயர்ச்சித்து, “ஏய் அடிக்காத டி நிறுத்து டி” என்று சொல்லிக் கொண்டு”.

 

“அவளை கட்டிலில் தள்ளி அவள் இரு கைகளையும் பிடித்து அவள் தலைக்கு மேல் தூக்கியவன் “ஏதாச்சும் நான் சொல்றத கேக்குறியா” என்று மெதுவான குரலில் கூறிக்கொண்டே அவள் கன்னத்தில் தன் இதழை பதித்தான். 

 

நிலா இரு கண்களையும் மூடிக்கொண்டாள். இவ்வாறு இவர்கள் சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். 

 

மறுநாள் ராஜேந்திரன், ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து நிலா வீட்டிற்கு சென்று ஜெயலட்சுமி மற்றும் சக்தி, சுஜிதா என அனைவரையும் நிலா வுக்கு தாலி பிரிச்சி கோர்க்கும் பங்ஷனுக்கு அழைத்துவிட்டு வந்தார்கள்.

 

ஜெயலட்சுமி நாளைக்கு நிலா வீட்டுக்கு போயிட்டு முதல்ல நிலாவை பார்த்து அந்த விக்ரம் பத்திரத்தில் கையெழுத்து போட்டுட்டானான்னு கேட்கணும் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள். 

 

சுஜிதா நாளைக்கு நிலாவை பார்க்கும் போது கண்டிப்பா சக்தியை பார்த்து அவ பயப்படுறதுக்கு காரணம் என்னன்னு கேட்கனும் என்று இவள் ஒருபுறம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஒருவழியா துருவ் நிலா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க ..