Loading

⚠️⚠️ ஹாய் டியர்ஸ் இனி வரும் அத்தியாயங்களில் வரும் காட்சிகள் சற்று கனமானதாகவும், மனதை பாதிக்க கூடியதாகவும் இருக்கலாம் இளகிய மனமுடையவர்கள் கடந்து விடுங்கள் ⚠️ ⚠️ 

அன்று

அகிலன் தன்னைக் காதலிப்பதாய் சொன்னதில் மேலும் கோபம் கொண்ட அகரநதி,அவனை சட்டெரித்துவிடுவதைப் போல் பார்த்தவள் அவள் துப்பட்டாவிலிருந்து பிடியை விடுவிக்காமல். தன் பிடியை அழுத்தமாய்ப் பிடிக்க அவன் கழுத்து பகுதி காலரை தாண்டியும் சிவக்க ஆரம்பித்தது

“எனக்குத் தெரியும் அதி, என்ன தான் நீ கார்த்திக் கூடச் சுத்திகிட்டு இருந்தாலும், உன் கண்ணு என்னைத் தான் சுத்தி சுத்தி வந்திச்சுன்னு எனக்குத் தெரியும், நீயும் என்னைக் காதலிக்குற தானே?” எனச் சிரித்தபடி அவளிடமிருந்து விலக முயற்சித்தவனை மேலும் இறுக்கி பிடித்தாள் அகரநதி

“காதல்னா என்னன்னு தெரியுமா? அதைப் பேச உனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை அகிலன், ஒரு பொண்ண பாதுகாக்க தெரியாதவன், காதலிக்கவே தகுதியில்லாதவன். உன்னோட உடல் தேவைக்காக அப்பாவி பொண்ணுங்ககிட்ட போதை மருந்தை அறிமுகபடுத்தி, அது மூலமா அந்தப் பொண்ணுங்களை அடைய நினைக்குற கேவலமான பிறவி நீ.?” என அதி கோபம் கொண்டு திட்டி தீர்த்தாள்.

“அதி நான் வச்சிருக்கதெல்லாம் போதை மருந்தே இல்லைடி, உன்னைப் பார்த்தாலே ஒரு கிக் வருமே அது தான் ரியல் போதையே” என அவன் கிறங்க,

“ச்சீசீ” என அவள் முகம் சுழித்துத் துப்பட்டாவிலிருந்த பிடியை விட, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவன் நொடிப்பொழுதில் அவளைத் தன் ஆளுமைக்குள் கொண்டுவந்தவனின் பிடியில் சிக்கி தவித்தாள் பேதை பெண்ணவள். அவளின் கழுத்தை நெரித்துச் சுவற்றோடு நிறுத்தியவனிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து தோற்று போனாள் பெண்ணவளின் வாயில் போதை மருந்து அடங்கிய கேப்ஸ்யூலை போட்டுவிட, அவள் பலம் முழுவதும் குறைந்து தள்ளாட்டம் கொண்டாள்.

“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் அதி உனக்கு இங்கே நடக்க போற விசயத்தை இந்த ஜென்மத்திலே நீ மறக்க கூடாது. அகிலனை ஏன் பகைச்சிகிட்டோம்ன்னு வருத்தபட்டே சாகணும்”

அவளுக்குத் துணிவும் தைரியமும் இருந்தாலும் இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கும் உத்வேகத்தை எந்தப் பாடநூலும் சொல்லி தரவில்லையே, காட்டுமிராண்டி தனமாகக் கையாளும் மிருகத்திடம் இருந்து தப்பிக்கும் வழி அறியா புள்ளி மானாய் சிக்கி தவித்தாள். அவளின் விழிகள் திறந்து அறைமயக்கத்தில் இருக்க, உடல் சோர்வுற்று காணப்பட்டாள் அதி.

வேட்டையாடும் மிருகத்தின் கோரப் பிடியில் சிக்கிக் கொண்டு,

தப்பிக்க வழியின்றித் திகைத்து போனாள் பெண்ணவள், போராடும் சக்தியும் இழந்து நின்றவளின் ஆடை அவிழ்த்து அவனின் அந்தரங்க ஆட்டத்தைத் தொடங்க முற்பட்ட நேரம், கதவுகளைப் புடைத்துக்கொண்டு வெளிப்பட்டான் அந்த ஆறடி காவலன், தன்னை காப்பாற்ற யாரோ வந்து விட்டதாய் அறைமயக்கத்திலும் அறுவுறுத்திய பெண்ணின் மனம், யாரென்று அறியாமலே அவன் முகம் கூடக் காணாமல், ஆடை கிழிக்கபட்ட நிலையில், பாயும் நதியைப்போல் தீராவின் மார்பில் தஞ்சமானாள் அவனின் நதி.

அவளின் இதயப் படபடத்தது, தன்னைக் காக்க ஒருவன் வந்துவிட்டான் என அவள் விழி அவனை ஏறிட்டது. தன்னைக் காக்க வந்திருப்பது தன் மனம் கவர்ந்த கள்வன் என்று உணர்ந்தாள். நதியை பார்த்தபோதே, அவன் உணர்ந்து விட்டான் தன்னை விழியசைவில் கடத்திச் சென்றவள் இவள் தான் என, அவளின் மதிமுகம் கண்டு சந்தோசபடும் நிலையில் அவன் இல்லை, அவள் அவன் கைகளில் வந்து சேர்ந்த கோலம் அப்படி, தன் காதலியை இப்படியொரு நிலையில் சந்திக்க நேரிடும் என அவன் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். அவன் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்குள் எழ,

“தேங்க்ஸ் தீரா” எனச் சொல்லி அவன் வலிய கரங்களில் மயங்கினாள் அவனின் நதி. அவனைக் காணும் போதெல்லாம் அவள் உதிர்க்கும் வார்த்தை இது தான்.

தன்னவளை பத்திரமாக மீட்டுவிட்டோம் என்ற நிம்மதியில் பின்னால் திரும்ப அங்கே மலர் பயத்துடன் நின்றிருந்தாள்.

“நீங்க இப்பயும் சொல்லலைனா, உங்க ஃப்ரெண்டை இழந்திருப்பீங்க, அவங்களைக் கூட்டிட்டு போங்க, இவனை நான் கவனிச்சுக்குறேன்” எனத் தீரா சொல்லி, அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தவளை , காற்றுக்கும் நோகாமல் தன்னிடம் இருந்து பிரித்தவன் மலர்விழியிடம் ஒப்படைத்த தருணம் அவன் கரம் பற்றிக் கொண்டு அவனிடமிருந்து நகர மறுத்தாள்.

மலர் மெல்ல அவளை தன்புறம் இழுக்க, அவளின் மோதிர விரலில் இருந்த இன்ஃபினிட்டி மோதிரம் தீராவின் கையோடு வந்து விட, தன் சுண்டு விரலில் அவர்களின் காதலின் அடையாளமாய் அவன் அணிந்துக் கொண்டான்

 தோழி அகரநதியை கைதாங்கலாக அழைத்துச் சென்றாள் மலர்.

ஆம் தீராவை அழைத்து வந்தது மலர்விழி தான், தன் தோழி அகரநதியும் அகிலனையும் காணவில்லை என்று கல்லூரி வளாகத்தைச் சுற்றி வந்தவள் கல்லூரி முதல்வரின் அறைபக்கம் வந்த போது.,

“ஏய் பொண்ணு நீ அகரநதி ஃப்ரெண்டு தானே.?” கல்லூரியின் முதல்வர் கேட்டார்.

“ஆமா சார், அவளைத் தேடி தான் அலைஞ்சிட்டு இருக்கேன் சார்”

“நல்லதுமா.?”

“இங்கே போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து ஆளுங்க வந்தாங்களே கிளிம்பிட்டாங்களா.?” பதற்றத்துடன் கேட்டார்.

“இல்லை சார், இப்போ தான் பார்த்திட்டு வந்தேன், போன் கால் பத்தி ரிசப்ஷன்ல விசாரிச்சிட்டு இருந்தாங்க”

“அப்போ உடனே அழைச்சிட்டு வாமா.? உன் ஃப்ரெண்டு அகரநதியை அந்த அகிலன்” என வார்த்தைகள் தடுமாற நின்றவரின் மனதில் தன்னுடைய சொந்த பெண்களின் நினைவு வந்து போனது, என்னோட பொண்ணா இருந்திருந்தா இப்படி ரூமை அடைச்சிட்டு வந்திருப்பேனா.? குற்ற உணர்வில் தலைக் கவிழ்ந்து போனார் அவர்.

“சார் என்ன சொல்றீங்க, வாங்க அவளைக் காப்பத்தலாம்” அவர் சொல்ல வருவதிலே அவளுக்குப் புரிந்து போனது, ஏன் என்றால் அவளுக்குத் தான் அகிலனை பற்றித் தெரியுமே, இதற்காகத் தான் அவனிடம் வம்பு வேண்டாம் என்று சொன்னேனே இந்த அதி கேட்டாளா.? நொந்துக்கொண்டாள் மலர்விழி.

“இதுல நான் ஒன்னும் பண்ண முடியாதுமா, அந்தப் பொண்ண காப்பாத்திருமா, எனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க” எனச் சொன்ன கல்லூரி முதல்வரின் விழியில் கண்ணீரின் சாயல்.

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல், துரிதமாய்ச் செயல்பட்டுத் தீரேந்திரனை அங்கு அழைத்து வந்திருந்தாள் மலர்விழி.

“ஆமா யாருடா நீ? காலேஜ்லையே இப்படி வேலையெல்லாம் பாக்குற..?”

“யோவ் போலீஸூ நான் மினிஸ்டர் செந்தமிழனோட பையன், இது கூடத் தெரியாம வந்துட்டாரு பூஜைக்கு நடுவுல கரடி மாதிரி, எப்பயும் போலீஸ்னா லேட்டா தானே வருவீங்க, இப்போ என்னத்துக்குயா டைமுக்கு வந்து நிண்ணு உயிரை வாங்குற வழியை விடு” என அவனை உதாசீனம் செய்து நகர முற்பட்டவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான் தீரேந்திரன்.

“உண்மையைச் சொல்லு உனக்கும் நதிக்கும் என்ன பிரச்சனை.?” எனத் தீரா கேட்க,

“நீ கேட்ட நான் சொல்லிரணுமா..?”

“நீ இப்ப ஒரு க்ரிமினல், ஒரு பொண்ண பலவந்தமா வன்கொடுமை செய்ய முயற்சி பண்ணிருக்க.?”

“முதலில் துப்பாக்கியை இறக்கு,என் மேல யாரு கம்பளைன்ட் கொடுத்தது.? நான் ரேப் பண்ண ட்ரை பண்ணதா சொன்ன பொண்ண எங்கே.? அவளை வந்து சொல்ல சொல்லுங்க” எனச் சொன்னவுடன் என்ன தான் காவலனாய் இருந்தாலும் தன்னவளின் மானம் அவனுக்குப் பெரிதாய் பட அவனே அங்கேயே விட்டுச் சென்றான் தீரேந்திரன்.

தன்னவளை இப்படியொரு நிலையில் பார்த்த ஆணவனுக்கோ அடி மனம் வரை வலிக்கத் தான் செய்தது. அவள் மானத்தைச் சூரையாட நினைத்தவனை அங்கேயே கொன்று புதைத்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவன் அணிந்திருக்கும் காக்கி சட்டை அவனைத் தடுத்து நிறுத்தியது.

அதோடு நாலு சுவற்றுக்குள் நடந்த விசயத்தை ஊரறிய செய்ய அவன் மனம் ஒத்துழைக்கவில்லை, விழி பார்த்து காதல் கொண்டவன், அவளின் மதிமுகம் அத்தனை சோர்வையும் சுமந்திருந்த காட்சி அவன் கண் முன் வந்து போக, மீண்டும் கோபம் வந்தவனாய் திரும்பிய போது அகிலன் அவனைக் கடந்து செல்ல, ஆத்திரம் பொறுக்காத தீரேந்திரன், தன் கையைக் கொண்டு அவன் முகத்திலே ஓங்கி ஒரு குத்து வைத்தான் தீரேந்திரன்.

குருதி வழிந்த வாயுடன் நின்றிருந்த அகிலனை பார்த்து விரல் நீட்டி எச்சரித்தவன்.

“ஷி இஸ் மை கேர்ள், கை வச்சன்னு வையி தொலைச்சு கட்டிருவேன்” என எச்சரித்த தொனியிலே கிடுகிடுத்துப் போனான் அகிலன்.

“என்னோட நதிக்காகத் தான் உன்னை நான் இப்படியே விட்டுட்டு போறேன், போய் உங்க அப்பாகிட்ட சொல்லு, தீரேந்திரன் எஸ் பைவ் போலிஸ் ஸ்டேசன்னு., நீ என்ன பண்ணினன்னும் சேர்த்து சொல்லு” என்றவன் அங்கிருந்து துரிதமாய் அகன்றிருந்தான் தீரேந்திரன்.

வெள்ளை மாளிகையைப் போல் இருந்த அந்த வீட்டின் வாயிலில் கீங் ஹாரன் சப்தத்துடன் கார் வந்து நின்ற நொடி, அந்த மாளிகையின் பிரம்மாண்டமான கேட் திறக்கப்பட, செந்தமிழனின் கட்சியைச் சேர்ந்த ஆட்கள் ஆங்காங்கே கூட்டமாய் நின்றுக்கொண்டிருந்தனர். முகத்தில் காயம் இருப்பதைக் காட்டிக்கொள்ளாது, முகத்தைத் துணியால் முடிய படி வீட்டினுள் நுழைந்த தன் மகனை எதையோ பார்ப்பது போல் பார்த்தார் செந்தமிழன்.

“தம்பி மாடிக்கு போ வர்றேன்” எனச் செந்தமிழன் சொல்ல இகழ்ச்சியாய் இதழ் வளைத்தவன் வீட்டினுள் இருந்த லிப்ட்டினுள் ஏறி முதல் தளத்திற்குச் சென்றவன், தன் அறைக்குள் சென்று குளியலறைக்குள் சென்று ஷவரை திறந்து அதனடியில் நின்று குளுமை அனுபவித்தான்.

“கொஞ்ச நேரம் அவன் வரமால் இருந்திருந்தால் அந்த அதியை மொத்தமா முடிச்சு வீடியோவும் எடுத்திருக்கலாம்,இடையில வந்து கெடுத்துட்டான் அந்தப் போலீஸ்காரன்” தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

“அதியை அவனோட ஆளுன்னு சொல்றானே என்னவா இருக்கும், என் மேல கை வச்சிட்டல்ல டா போலீஸ்காரா, அவளைச் சிதைச்சு சின்னபின்னமாக்கி நடை பிணமா உன் கண்ணு முன்னாடி நான் தூக்கி ஏறியலை என் பேரு அகிலன் இல்லைடா” அவனின் வக்கிர புத்தி அடங்கா ஆத்திரத்துடன் சபதம் எடுத்தவன் குளித்து முடித்து வெளியே வர , அவனின் பிரம்மாண்ட அறையில் போடப்பட்டிருந்த நீள் சோபாவில் கால் மேல் கால் போட்டு ராஜ தோரணையில் அமர்ந்திருந்தார் செந்தமிழன்.

“என்னடா பண்ணிட்டு வந்திருக்க..?” சிவந்த விழிகளுடன் கேட்ட தன் தந்தையைக் கண்டு மிரண்ட விழிகளுடன் நின்றிருந்த அகிலனின் கைகள் தானாய் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டது.

“அப்பபா..!” தடுமாறி நின்றான் அகிலன்.

“ஒரு பொட்டச்சி நீ சரக்கை கை மாத்துறதையும், எப்படிக் கை மாத்துறன்றதையும் தெளிவா வீடியோ படம் போட்டு உன் டிபார்ட்மென்டுக்கே காட்டிருக்கா..? அவ வீடியோ புடிக்குற வரைக்கும் நீ என்ன மயித்தடா புடுங்கிட்டு இருந்த, இதுக்கு உன்னை நம்பி சரக்க கொடுத்தேனா..?”

“உங்க காதுக்கு விசயம் வராமல் நானே முடிச்சிரலாம்ன்னு பார்த்தேன், அதுகுள்ள இப்படி ஆகிருச்சு” பயந்தபடி பதில் சொன்னான் அகிலன்.

“கிழிச்ச., ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையாடா..?”

“ப்பா சும்மா திட்டிகிட்டே இருக்காதீங்க, உங்களால தான் நான் காலேஜ்க்கு போய் நீங்க சொல்லுற எல்லா விசயத்தையும் சந்தேகம் வரமா பண்ணிட்டு இருந்தேன், இதுவரைக்கும் உங்களுக்கு எவ்வளவு சம்பாதிச்சுக் கொடுத்திருக்கேன், நீங்க இதுக்கு வேற எவனையாவது வச்சிருந்தீங்க உங்களை ஏமாத்திட்டு போயிருப்பான்.”

“எல்லாம் சரிடா அந்தப் பொண்ணுங்க விசயம் நான் சொல்லி தான் செஞ்சீயா..?” புருவம் உயர்த்தி அவர் கேள்வி கேட்க,

“ஏன் நீங்க பண்ணாததையா நான் பண்ணிட்டேன்..?” பட்டென அவன் தொடுத்த கேள்வியில் நாசி துடிக்க அவனை முறைத்து நின்றார் செந்தமிழன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சபாஷ் சரியான போட்டி .. மத்தவங்க வாழ்க்கையை யார் அதிகமா கெடுத்தாங்க அப்படின்னு போட்டியே வைப்பாங்க போல .. இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ

  2. எதிராளி பேச்சினில் நம் உணர்வுகளை தூண்டி நமது கவனத்தை திசை திருப்பவே முயல்வான். இக்கட்டான சூழ்நிலையில் அதிலிருந்து வெளிவருவது மட்டுமே அந்நேரம் எண்ணமாக கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு அங்கே நின்று எதையும் யாருக்கும் நிரூபிக்க கூடாது.

    கல்லூரி முதல்வருக்கு இந்த அளவுக்காவது மனம் வந்ததே.

    அப்பொழுது கூட அவர் சொல்வதை கேட்காமல், அங்கே செல்ல முயல்கிறாள் மலர். விபரீதம் பாதுகாப்பு எதையும் யோசித்து செயல்படும் முதிர்ச்சி இல்லை.

    நேரத்தினில் இவளாவது தீரனை அழைத்து வந்தாலே.