Loading

அத்தியாயம் 34 

 

விக்ரம் காரில் இருந்து இறங்கி விறுவிறு என வீட்டிற்குள் நுழைந்தான். நிலா அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 

 

விக்ரம் அவளை பார்த்தும் பார்க்காதவாறு சற்றும் அவளை சட்டை செய்யாமல் திரும்பி கொண்டு அவன் பாட்டிற்கு ரூமுக்குள் சென்று விட்டான்.

 

நிலா அவன் பின்னாடியே சென்றாள். விக்ரம் நிலா தன்னை பின் தொடர்வதை தெரிந்து கொண்டு வேண்டும் என்றே அவளை அலைய விட்டான்.

 

ரூமுக்கு சென்ற விக்ரம் நேராக கண்ணாடி முன்னாடி நின்று கையால் தலையை கோதி விட்ட படி பாவனை செய்து கொண்டு கண்ணாடி வழியே நிலாவை பார்த்தான். 

 

நிலா நெகத்தை கடித்த படி ஒருவித பதட்டத்தோடு கைகளை பிசைந்து கொண்டு விக்ரமையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

விக்ரம் மெதுவாக தன் ஷேர்ட்டை கழட்டிக் கொண்டிருந்தான். நிலா, “ஒரு நிமிஷம்” என்றாள்.

 

விக்ரம், “சொல்லு” என்று கூறிக் கொண்டே கபோர்டில் இருந்து டவளை எடுக்க சென்றான்.

 

நிலா, “என்ன பேசுறது என்று தெரியாமல் சாப்டீங்களா?” என்றாள்.

 

விக்ரம், “மணி என்ன ஆகுது?” என்றான். நிலா, “நாலு மணி ஆகுது” என்றாள் சோகமான முகத்தோடு.

 

விக்ரம், “அப்புறம் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா சாப்பிடாமலே இருப்பாங்க யாராச்சும்” என்று கூறிக்கொண்டே குளியலறையை நோக்கி சென்று விட்டான்.

 

விக்ரம் குளியல் அறையில் இருந்து வெளியே வரும் வரை நிலா என்னங்கள் எங்கெங்கோ சென்று கொண்டு இருந்தது என்ன இவன் நம்மிடம் பேசக்கூட மாட்டேங்குறான். 

 

ஒருவேளை ரொம்ப கோவமா இருக்கான் போலையே. இப்போ நான் என்ன பண்ணி அவனை சமாதானம் செய்வது.

 

எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்று புலம்பியபடி அந்த அறை முழுக்க வட்டமடித்துக் கொண்டு இருந்தாள்.

 

விக்ரம், நிலா தன்னை சுற்றி சுற்றி வருவதை மிகவும் ரசித்து என்ஜாய் செய்துக் கொண்டு இருந்தான்.

 

மெதுவாக குளித்து முடித்து வெளியே வந்தவன் இன்னும் நிலா அங்கேயே வட்டமடிப்பதை பார்த்து மெதுவாக சிரித்தான்.

 

பிறகு சிரிப்பை அடக்கிக் கொண்டு அடிப்பாவி இன்னுமா இங்கேயே நின்று கொண்டிருக்க. 

 

ஆனா நீ இப்படி எனக்காக தவிப்பதும் பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு என்று நினைத்து அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தான்.

 

விக்ரம் இடுப்பில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு தலையை கைகளால் கோதியபடி வந்தான். 

 

அந்த ஈரம் நிலா முகத்தில் பட்டதும் நிலா யோசனையில் இருந்து வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

 

விக்ரம் அவளைத் தாண்டி முன்னே சென்று தன் ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தான். நிலா, “வெளியே எங்கயாச்சும் போறீங்களா?” என்றாள்.

 

விக்ரம், “கிளம்பும் போதே இப்படி எங்கயாச்சும் போறீங்களான்னு கேட்கிறியே உனக்கு அறிவு இருக்கா”. 

 

“போற காரியம் எப்படி நல்லபடியா நடக்கும். இது என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங்”.

 

“இந்த மீட்டிங்ல மட்டும் நான் சரியா பர்ஃபார்ம் பன்னலைனா அப்புறம் இருக்கு உனக்கு”. 

 

“இதுல மட்டும் நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலன்னு வச்சுக்கோ எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான்” என்றான் பொய்யான கோபத்தோடு.

 

நிலா, “பதற்றமாக இல்ல இல்ல அது வந்து வெளியே போகும் போது தான் கேட்க கூடாது. நீங்க இப்ப கிளம்பிகிட்டு தானே இருக்கீங்க”. 

 

“அதனால் தான் நான் கேட்டேன் இதுக்கு எல்லாம் அப்படி சொல்ல மாட்டாங்களே” என்றாள்.

 

விக்ரம், “எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் போறேன் மீட்டிங் மட்டும் சக்ஸஸ் ஆகவில்லை என்றால் அதற்கு காரணம் நீ மட்டும் தான்” என்றான். 

 

நிலா சோகமான முகத்துடன், “சாரி” என்றால். நிலா முகம் சோகமான நிலையில் இருப்பதை விக்ரமால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

விக்ரம், “சரி முகத்தை இப்படி வச்சுக்கிட்டு இருக்காத. சீக்கிரம் போய் கிளம்பு” என்றான். நிலா, “எங்க கிளம்பனும்” என்றாள்.

 

விக்ரம். “அதான் சொன்னேன்ல நான் ஒரு மீட்டிங்கு போகணும் எல்லாரும் அவங்க அவங்க ஃபேமிலியோட வருவாங்க. அதனால் நீயும் என் கூட வரணும்” என்றான். 

 

நிலா, “விக்ரமைப் பார்த்து புடவை கட்டிட்டு வரவா? இல்ல சுடிதார் போட்டுட்டு வரவா?” என்று சந்தேகம் கேட்டால்.

 

விக்ரம் அவள் கையில் ஒரு பையை கொடுத்து, “இதில் இருக்கிறதை போட்டுக்கிட்டு வா” என்று கூறினான்.

 

பிறகு விக்ரம், “நான் கீழே வெயிட் பண்றேன்” என்று ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்து இருந்தான்.

 

நிலா விக்ரம் சென்ற பின் அந்த பேக்கில் உள்ள துணியை வெளியே எடுத்து பார்த்தாள். அதில் பச்சை நிறத்தில் ஒரு டிசைனர் புடவை இருந்தது.

 

அதை அணிந்து கொண்டு அந்த புடவைக்கு ஏற்றது போல் தலையில் ஒரு கிளச் மட்டும் வைத்துக்கொண்டு மிதமான ஒப்பனைகளுடன் கிளம்பி கொண்டு இருந்தாள். 

 

விக்ரம் சோபாவில் அமர்ந்திருந்தான். அங்கு வந்த ராஜலட்சுமி, “என்னப்பா விக்ரம் இங்க உட்கார்ந்திட்டு இருக்க. ஹனிமூன் பயணம் எல்லாம் நல்லா இருந்துச்சா‍” என்றார்.

 

விக்ரம் தலையை மட்டும் அசைத்தான். ராஜலட்சுமி, “என்னப்பா என்கிட்ட பேச மாட்டியா? உன் மனசுல அப்படி என்ன தான் இருக்கு அதையாச்சும் சொன்னால் தானே எனக்கு தெரியும்” என்றார். 

 

விக்ரம், “அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் எப்பயும் போல் தான் இருக்கேன்” என்றான்.

 

அங்கு வந்த ராதிகா, “என்ன அக்கா வழக்கம் போல் அவன்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிட்டியா. உனக்கு ஏன் தான் இந்த வேலையோ தெரியலை”. 

 

“அவனுக்குன்னு இங்க யாருமே இல்ல நம்பளே போனா போகுதுன்னு இங்க வச்சு அவனுக்கு சோறு போட்டுக்கிட்டு இருக்கோம்”. 

 

“அவனுக்கு இருக்க திமிரை பாத்தியா உன்னை மதிக்க கூட மாட்டேங்கிறான். உன்னிடமே சரியா பேச மாட்டேங்குறான்”. 

 

“நீ அவன் கிட்ட வந்து கெஞ்சிகிட்டு இருக்க. நீ எல்லாம் என்ன சொன்னாலும் திருந்தவே மாட்ட” என்றார்.

 

விக்ரம் அவர்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தான் எதற்கும் பதில் அளிக்காமல்.

 

ராஜலட்சுமி, “இங்க பாரு ராதிகா நா உன்கிட்ட பல வாட்டி சொல்லிட்டேன் எங்க குடும்ப விஷயத்துல நீ தலையிடாதே”. 

 

“அவன் என்னோட பையன் என்கிட்ட கோச்சுக்கறதுக்கும் சரி என்கிட்ட பேசாம இருக்கறதுக்கும் சரி எல்லாத்துக்குமே அவனுக்கு உரிமை இருக்கு”. 

 

“ஆதித்யாவுக்கு எப்படி எல்லா உரிமையும் இருக்கோ அதே போல் இவனுக்கும் இருக்கு”.

 

“இன்னொரு வாட்டி அவன என்னோட பையன் இல்லைன்னு நீ சொல்லாத. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”. 

 

“இந்த வீட்ல இருந்து உன்ன வெளிய அனுப்பவும் நான் தயங்க மாட்டேன். எனக்கு என் பையன் தான் முக்கியம்” என்றார்.

 

அதில் ராதிகா கோவமாக முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள்.

 

அப்போது உள்ளே நுழைந்த ராஜேந்திரன், “என்ன இங்க எல்லாரும் கூட்டமா இருக்கீங்க என்ன விஷயம்” என்றான்.

 

ராஜலட்சுமி, “அது வந்துங்க விக்ரமுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. அதான் தாலி பிரிச்சி கோர்க்கிற பங்க்ஷன் எப்போ வைக்கலாமென்று யோசிச்சிட்டு இருக்கேன்” என்றார்.

 

ராஜேந்திரன், “அப்படியா அப்போ நல்ல விஷயம் தான் பேசிட்டு இருக்கிறீங்க. அடுத்த பங்மிஷன் வந்துருச்சா” என்றார் சந்தோஷமாக.

 

விக்ரம் உடனே, “அப்படியா ம்மா நிலாவுக்கு தாலி பிரிச்சு கோர்க்கிற பங்க்ஷன் பண்ணனுமா?” என்றான். 

 

ராஜலட்சுமி, “ஆமாண்டா அதை பத்தி உன்கிட்ட பேச தான் வந்தேன். நாளை மறுநாள் வீட்டிலேயே அந்த பங்க்ஷனை வச்சுக்கலாம் நீ என்ன சொல்ற” என்றார் விக்ரமை பார்த்து.

 

விக்ரம், “சரி அப்போ நீங்க அப்படியே நிலா வீட்ல இருக்குறவங்க எல்லாரையும் இன்வைட் பண்ணிடுங்க” என்றான். 

 

ராஜலட்சுமி சரி என்று கூறியதும் ராஜேந்திரன் ஏதோ கூற விக்ரம் என்று அழைத்தார்.

 

விக்ரம் சட்டென்று எழுந்து நின்று, “நிலா சீக்கிரம் வா டைம் ஆச்சு மீட்டிங்கு போகணும்” என்று சத்தமாக குரல் கொடுத்தான்.

 

நிலா, “ஐயையோ இவங்க வேற ரொம்ப கோவமா இருக்காங்க. நம்ப கிளம்ப ரொம்ப லேட் பண்ணிட்டோம் போலயே” என்று அவசர அவசரமாக இறங்கி கீழே சென்றாள். 

 

ராஜலட்சுமி, நிலாவின் தோற்றத்தை பார்த்து “ரொம்ப அழகா இருக்கமா” என்றார்.

 

நிலா, “தேங்க்ஸ் அத்தை இவங்க வெளிய போகணும்னு சொன்னாங்க அதான்” என்றாள்.

 

ராஜலட்சுமி, “சரி பார்த்து போயிட்டு வாங்க” என்றார். விக்ரம், நிலா கையை பிடித்து அங்கிருந்து காரில் ஏறி சென்றான்.

 

விக்ரம் முகம் கவலையாகவும், கோபமாகவும் இருந்தது காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருந்தான்.

 

நிலா தன் மேல் இருக்கும் கோபத்தில் தான் இவன் இப்படி வேகமாக ஓட்டுகிறான் என்று தவறாக நினைத்துக் கொண்டு பயத்தில் கொஞ்சம் மெதுவா போங்க என்றாள்.

 

அதை சற்றும் காதில் வாங்காத விக்ரம் ஏதோ ஒரு யோசனையில் இருந்தான். 

 

எதிரில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டு இருக்க விக்ரம் அதை கூட கவனிக்காமல் இவனும் வேகமாக இடிப்பது போல் சென்று விட்டான்.

 

நிலா பயத்தில் கண்களை மூடிக்கொண்டு துருவ்…. என்று சத்தமாக கத்தினாள். 

 

அதில் சட்டென்று நிலா பக்கம் திரும்பியவன் அப்பொழுதுதான் எதிரில் வந்த காரை கவனித்து ஸ்டியரிங்கை வளைத்து ஓரமாக பிரேக் அடித்து நிறுத்தினான்.

 

நிலா எந்த அளவுக்கு பதிரி போய் இருந்ததால் என்பது அவள் முகத்திலே தெரிந்தது. 

 

விக்ரம், “சாரி நிலா நான் ஏதோ ஒரு யோசனையில் இருந்துட்டேன் உனக்கு ஒன்னும் ஆகல இல்ல” என்றான். 

 

நிலா, “இல்ல ஒன்னும் ஆகலை” என்றாள் பதட்டமான குரலில். பிறகு விக்ரம் அவளுக்கு தண்ணீர் பருக கொடுத்துவிட்டு மறுபடியும் காரை ஓட்ட ஆரம்பித்தான். 

 

நிலா, “துருவ் நான் ஒன்னு சொல்லவா” என்றாள் தயங்கியபடி. விக்ரம், “என்ன சொல்லு” என்றான். 

 

நிலா, “அது வந்து இனிமே இவ்ளோ வேகமா போகாத துருவ். நம்ப வாழ்க்கையில் இத்தனை வருஷமாவும் பிரிந்து தான் வாழ்ந்தோம்”. 

 

“இதுக்கு அப்பறம் தான் நம்ப சேர்ந்து வாழவே ஆரம்பிக்கப் போகிறோம் எனக்கு உன் கூட சேர்ந்து பல வருஷம் வாழனும்னு ஆசையா இருக்கு”. 

 

“நீ இவ்ளோ வேகமா போறது நல்லதுக்கு இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ இதுபோல் வேகமா காரை ஓட்டாத” என்றாள். 

 

விக்ரம் அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் மௌனமாகவே இருந்தான்.

 

பிறகு விக்ரம் பிளான் செய்தபடி அதே பீச்சுக்கு தான் நிலாவை அழைத்து வந்திருந்தான். 

 

நிலா சுற்றி பார்த்துவிட்டு, “என்ன நம்ப பீச்சுக்கு வந்து இருக்கோம். நீங்க ஏதோ ஒரு மீட்டிங் போகணும்னு சொன்னிங்களே கவனிக்காம இங்க வந்துட்டீங்களா” என்றாள். 

 

விக்ரம், “வா சொல்றேன்” என்று அவன் நேராக முன்னே சென்றான். இவர்கள் பீச்சுக்கு வரும்பொழுது இரவு நேரம் என்பதால் இருட்டி விட்டது. 

 

நிலா, “இந்த நேரத்துல இங்க வந்தே ஆகணுமா” என்றுவிட்டு என்ன பதிலே காணோம் என்று திரும்பி பார்க்க அங்கு விக்ரமை காணோம்.

 

நிலா பயந்து போய், “துருவ்…. துருவ் எங்க போனிங்க” என்று கத்தினாள். அவள் கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் யாருமே இல்லை. 

 

நிலா பயந்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டாள். இரண்டு நிமிடம் கழித்து அவளை சுற்றி லைட் எரிய ஆரம்பித்தது.

 

அவள் அந்த லைட்டை பார்த்துவிட்டு ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் பிறகு நடைபாதை போல் இரு பக்கமும் அழகாக லைட் ஒவ்வொன்றாக ஆன் ஆனது. 

 

நடக்கும் பாதை முழுக்க ரோஜா பூவால் நிறைந்திருந்தது. அதன் பிறகு ஹார்டின் வடிவில் திருவ் நிலா என்று இருவர் பெயரும் போட்டு பலூன் மற்றும் லைட்டால் அலங்கரிக்க பட்டிருந்தது. 

 

அந்த இடம் முழுவதும் பார்ப்பவர்களுக்கு கண்களை பறிக்கும்படி காட்சியளித்தது. 

 

அதற்கு இடையில் துருவ் நிலா அணிந்திருக்கும் ஆடைக்கு ஏற்ப பச்சை நிறத்தில் கோட் போட்டபடி உள்ளே வெள்ளை கலர் பனியனும் ஜீன் பேண்ட் அணிந்து இருந்தான்.

 

ஒரு கையில் ரோஸ் வைத்துக் கொண்டு கைகட்டியபடி நிலாவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

 

நிலா முகத்தில் சந்தோஷம் தாங்க முடியவில்லை. நிலா, துருவ் என்று ஓடிச் சென்று கட்டி அணைக்க சென்றாள். 

 

துருவ் ஒரு நிமிஷம் நில்லு நில்லு என்று இரு கைகளையும் நீட்டினான். அவன் அருகில் சென்ற நிலா சட்டென்று அப்படியே நின்று விட்டாள். 

 

விக்ரம் முட்டி போட்டு, “நான் தான் உன்னுடைய துருவ் அப்படின்னு என்னை நம்பி இப்போ நீ என்னை ஏத்துப்பியா” என்றான். ஒரு மோதிரத்தை நீட்டியபடி.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. புரோபோசல் சூப்பர் விக்ரம் 🥰🥰🥰🥰