Loading

நினைவுகள் -10

அனன்யா ராதிகாவிடம் சொன்னது போலவே காலேஜ் முடிந்து தனது அப்பார்ட்மெண்டிற்கு சென்றவள், வீட்டிற்கு அழைத்துப் பேசினாள்.

முதலில் எல்லோரிடமும் பேசியவள், இறுதியாக பாட்டியிடம் அந்த விஷயத்தை காதில் போட்டாள்.

யாரிடம் சொன்னால் காரியமாகும் என்பதை நன்கு அறிந்த அனன்யா அதையே செய்தாள்.

” பாட்டி…எனக்கு இங்கே தனியே இருக்கிறதுக்கு போரடிக்குது. நான் என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன் பாட்டி. ப்ளீஸ் பாட்டி.” என அனன்யா கெஞ்ச.

 ருக்குமணிக்கோ அனன்யா கூறியதைக் கேட்டு தலை சுற்ற,” அனுமா…நான் விஸ்வா கிட்ட சொல்லுறேன். அவன் என்ன சொல்லுவானு தெரியலை.” என.

” ப்ளீஸ் பாட்டி. எப்படியாவது ஹாஸ்டல்ல தங்கறதுக்கு பர்மிஷன் வாங்கித் தா பாட்டி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.” என்று கெஞ்சலில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்தாள் அனன்யா.

“ம்.‌‌.. சரி டா.” என்று சொல்லி ஃபோனை வைத்தவர், தன் மகள் மற்றும் மருமகளிடம் கூற.

“எங்களுக்குத் தெரியாது. நீங்களாச்சு… உங்க பேரன், பேத்தியாச்சு. எங்களை

ஆளை விடுங்க.” என்று ஒன்று போல் ரஞ்சிதமும், கௌரியும் கூறி விட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து சென்று விட்டனர்.

தன் பேரனின் வரவிற்காகக் காத்திருந்த, ருக்குமணி அந்த பெரிய ஹாலில் நடைப் பயின்றுக் கொண்டிருந்தார்.

  கல்லூரி முடிந்ததும், மருத்துவமனைக்கும் சென்று விட்டு டயர்டாக வந்த விஸ்வரூபன் பார்த்தது என்னவோ, குட்டி போட்டப் பூனையைப் போல சுற்றிக்கொண்டிருந்த பாட்டியை தான்…

” என்ன பாட்டி என்ன நீங்க மட்டும் இருக்கீங்க? அம்மா, அத்தை எங்க காணோம்? நீங்க இன்னும் படுக்க போகலையா?” என்று வினவியவாறே கைகளைக் கழுவி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து சட்டை பட்டனை அவிழ்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.

அவன் கேட்ட கேள்வியை புறந்தள்ளி விட்டு, “விஸ்வா… உனக்கு காஃபி கொண்டு வர சொல்லவா?” என்று ருக்குமணி வினவ…

” திஸ் இஸ் ஏ டின்னர் டைம். நான் ரெப்ரெஷ்ஷாகிட்டு வந்து தான் சாப்பிடுவேன்.” என்றவன், அவரை கூர்ந்து பார்க்க.

அவனது பார்வையோ, ‘என்ன விஷயம் சொல்லப்போறீயா? இல்லையா?’ என மிரட்டுவதுப் போல ருக்குமணிக்கு தெரிந்தது.

” அது வந்து விஸ்வா… ” என இழுத்தவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு வழியாக அனன்யா பேசியதைக் கூற…

 விஸ்வரூபன், தனது விஸ்வரூபத்தை காட்டினான். ” வாட் ஏ க்ரேசி கேர்ள்.” என்று உறும…

அவனுக்கே பாட்டியான ருக்குமணி மட்டும் சும்மா இருப்பாளா, ” டேய் நீ இன்னும் தமிழ் நாட்டில தான் இருக்க. ஒழுங்கா தமிழ்ல பேசு.”

” ம்… உன் பேத்திக்கு பைத்தியமா புடிச்சிருக்கு. அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா? எனக்கு என்ன வேலைவெட்டி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கலாமா? ஒன் வீக் லீவ் போட்டுட்டு, அவக் கூட ஸ்டே பண்ணி, எல்லாம் கம்பர்டபுளா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னடான்னா ஹாஸ்டலுக்கு போறேன் என்று சொல்லுறா? அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க. இல்லேன்னா அவளோட விருப்பம். என்ன வேண்டுமானாலும் செய்துக்க சொல்லுங்க.” எனக் கத்த…

 “டேய் விஷ்வா… இப்படி சொன்னால் என்ன அர்த்தம். நீதானே அவளை வெளிநாட்டுக்கு அனுப்புன… அவ உன் பொறுப்பு என்று சொன்ன… இப்போ என்ன இப்படி பொறுப்பை தட்டிக் கழிக்கிற. கூப்பிடுற தூரமா அது? இங்கேயே பக்கத்துல சேர்த்து இருந்தா, நாங்களே போய் ஹாஸ்டல் வசதியெல்லாம் நல்லா இருக்கா என்று பார்த்திருப்போம். இப்போ நீ தான் போயாகணும்.” என்று ருக்குமணி கிடுக்கிப்பிடி போட்டார்.

அவரின் பேச்சைக் கேட்ட விஸ்வரூபன் அயர்ந்து நின்றான். இனி இதையே சொல்லி அவனது வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகிறார் என்பதை அறியாமல் அவரதுப் பாட்டியைப் பார்த்து விளையாட்டாக முறைத்து

இன்று…

முகத்தில் அரும்பிய புன்னகையை வெளிக்காட்டாமல் அடக்கிய ராதிகாவோ,” ஹாய் ஸ்டூடண்ட்ஸ்.” என்று விட்டு தலையை உலுக்கிக் கொண்டவளோ,”ஹாய் கைஸ்.” என்றழைத்தாள்.

ஆம் அவர்களை ஸ்டூடண்ட் என்பதை விட டாக்டர்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் எல்லோரும் ஒரே வயதில் உள்ளவர்களும் அல்ல. சில பேர் படிப்பு முடித்தவுடனே மேல் படிப்பு படிக்க வந்திருக்க, சில பேர் கொஞ்ச நாள் பிராக்டிஸ் செய்து விட்டு வந்திருந்தார்கள். அதனால் வயது வித்தியாசத்துடன் தான் இருந்தார்கள்.

ஹாய் கைஸ்‌‌…” என்ற இவளது குரலில் எல்லோரும் திரும்பிப் பார்க்க…

” ஐ அம் ராதிகா… என்னைப் பற்றி அப்புறம் சொல்றேன். இப்போ உங்களை முதலில் அறிமுகப்படுத்திக்கோங்க. “

முதல் வரிசையில் இருந்த ஒரு பெண் எழுந்து அறிமுகப்படுத்த முயல…

” யூ சிட். நெக்ஸ்ட் ரோல உள்ள யெல்லோ சுடி… நீங்க எழுந்திருங்க இன்ட்ரொடியூஸ் யுவர் செல்ஃப். உங்க நேம் என்ன? உங்க ஆம்பிஷன் என்ன? அதைப்பத்தியெல்லாம் ஷேர் பண்ணிக்கோங்க.” என.

அந்தப் பெண்ணோ குழப்பத்துடனே அவளது கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

“நெக்ஸ்ட் ப்ளாக் ஷர்ட்… நீங்க சொல்லுங்க” என‌.

அந்த பையனும், ஒரு விழி விழித்து விட்டு தன்னுடைய பெயரையும் இதய மருத்துவர் ஆக வேண்டிய இலட்சியத்தையும் கூறி விட்டு அமர்ந்தான்.

இதே மாதிரி அங்காங்கு இருந்த சிலரை மட்டும் எழுந்து விசாரித்தவள், கடைசியாக அமர்ந்திருந்த நெடியவனை அழைத்து, விசாரிக்க…

அவனோ கேஷுவலாக எழுந்தவன், இவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, ” கேள்வியே லூசுத்தனமா இருக்கு. உன்மையிலே நீங்க எங்களோட மேமா? அதுவே எனக்கு சந்தேகமாக இருக்கு. கார்டியலாஜிஸ்ட் படிக்கிறதுக்காகத் தான் இந்த டிபார்ட்மெண்ட். அப்படியிருக்க… இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்டதிலிருந்தே தெரியுது, நீயும் ஒரு ஸ்டூடண்ட் தான்.” எனக் கூற…

 எல்லோருக்கும் இதே எண்ணம் தான். மனசுக்குள் நினைத்தாலும் வெளியே சொல்ல பயந்து கொண்டு அமைதியாக இருக்க. அவன் மட்டும் பட்டென்று கேட்டு விட்டான்…

அவனுடைய கேள்வியில் ராதிகாவின் முகம் மலர்ந்தது. ” வாவ்… சூப்பர்…” என்றவள் வேகமாக அவனருகே வந்து அமர்ந்துக் கொண்டே, ” யூவார் ப்ரில்லியண்ட். நீ தான் எனக்கு சரியான பார்ட்னர். எங்கே உட்காரலாம் என்று இவ்வளவு நேரமா, ஒவ்வொருத்தரையா விசாரிச்சேன்” என்றாள்.

அப்போது தான், ஏன் சிலரை மட்டும் விசாரித்தாள் என்று புரிய, சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் அவளை வெட்டவா? இல்லை குத்தவா? என்பது போல பார்த்தனர்…

அதையெல்லாம் அசால்டாக தள்ளிவிட்டு, ” ஹாய் பாஸ்… ஐயம் ராதிகா.” என்று அவனிடம் கையை நீட்ட.

” ஆதவன்!” என்று அவன் பெயரைக் கூற…

” நைஸ் நேம்… ” என்றுக் கூறி புன்னகைத்தாள்.

ஆதவனின் முகமும் புன்னகையால் மலர்ந்தது.

அங்கு நடக்கும் அக்கப்போரை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. ராதிகா உள்ளே நுழையும் போதே வந்து விட்ட கிருஷ்ணன் அமைதியாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ராதிகா அமர்ந்து, ஆதவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது,

புன்னகையுடன் உள்ள நுழைந்தவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

” ஐயம் கிருஷ்ணா. நான் தான் உங்களுடைய டீன். அப்புறம் நான் கொஞ்சம் உங்கக் கிட்ட பேசணும்.” என்றவர் பேச்சை நிறுத்த.

“சொல்லுங்க சார்.” என்று எல்லோரும் சத்தமாகக் கூற.

“இப்போ நீங்க ஒன்னும் பக்குவமில்லாத ஸ்டுடென்ட்ஸ் கிடையாது. எத்தனையோ உயிர்களை காக்க கூடிய மருத்துவர்கள். உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும். ஒரு சின்ன கவனக்குறைவுக் கூட பெரிய உயிர் சேதத்தை உண்டாக்கிடும். சோ டோண்ட் பீ கேர்லஸ். அன்ட் ஆல் த பெஸ்ட் ஃபார் யூவர் பிரைட் ஃபியூச்சர். நவ் லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லெசன்.” என்று ஒரு வழியாக அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்.

அவர் வந்ததிலிருந்து, அவருடைய மேனரிசம் அன்ட் ஸ்பீச் எல்லாத்தையும், திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…’ என்று வழக்கமாக ஆண்கள் கூறும் டயலாக் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அவளின் அருகில் அமர்ந்து இருந்த ஆதவன், ” ராதிகா… வாட் ஹேப்பண்ட்? லிஸ்ன். சார் வாட்ச்ங் யூ.” என்று உலுக்க.

யோசனையிலிருந்த, ராதிகா தன்னை மீறி வேகமாக கத்தி விட்டாள். ” வாவ்! ஹேன்ஸம் மேன்.” என…

ஹோல் க்ளாஸே அவளைப் பார்த்து, சிரிக்க…

“சைலன்ஸ்!” என்ற கிருஷ்ணன், அவளை எழுந்திருக்குமாறு சைகை செய்ய.

” மீ சார்.” என்று ராதிகா வினவ.

சிரிப்பு பொங்க அதை அடக்கிய கிருஷ்ணனோ, ” ம்… நீ தான் எழுந்திரு. வந்ததிலிருந்து நான் சொன்ன எதையும் கவனிக்கலைன்னு தெரியுது. நீ ஒரு அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் என்று நல்லாவே புரியுது. விருப்பமிருந்தால் அமைதியா உட்கார்ந்து க்ளாஸை கவனி. இல்லேன்னா வெளியே தாரளமாக போகலாம்.” என்றவர், அவளின் அருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவர், பிறகு சமாளித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்.

ராதிகாவோ அவரது அதிர்ச்சியைப் பார்த்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். ‘ பாவம் ப்ரொபஸர் நம்மளைப் பார்த்து மிரண்டுட்டார்.’ என்று எண்ணினாள்.

அவரது அதிர்ச்சிக்கு காரணம், அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்து ஆதவன் தான் என்பது அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது…

கிருஷ்ணன் வகுப்பு முடிந்து போகும் போதும், இவர்கள் இருவரையும் யோசனையுடனே பார்த்து விட்டு சென்றார்.

 அடுத்து, அடுத்து வகுப்புகள் இருக்க… ராதிகாவிற்கு ஆதவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு வழியாக லஞ்ச் ப்ரேக்கில் கேண்டீனுக்கு அவனை அழைத்துக் கொண்டு சென்றவள், வளவளவென்று பேசினாள்.

திடீரென்று நினைவு வந்தவளாய், ” ஆதி… உன்னோட ஃபேஸ்புக் ஐடியை சொல்லு. உனக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தரேன்.” என்றுக் கூற…

 அவனும் தனது ஐடி நேமை சொன்னான்.

ராதிகா சாப்பிட்டுக் கொண்டே, அவனுக்கு ரெக்வெஸ்ட் அனுப்ப…

அந்த ஐடி நேமைப் பார்த்தவன் தன்னை மீறி, அடக்கமாட்டாமல் நகைத்தான்.

அவனது சிரிப்பை ரசித்தவள், பொய்யாக முறைத்தாள்.

” ஹலோ! எதுக்கு இப்படி ஒரு சிரிப்பு. இது ஒன்னும் அப்படி காமெடியான பெயர் இல்லையே. நானே கஷ்டப்பட்டு யோசிச்சு‍, ஒரு ஃபேக் ஐடி ஓபன் பண்ணியிருக்கேன்…” என.

” ஓ! இது தான் உன் ஃபேக் ஐடியா. நான் சிரிச்சதுக்கு காரணம். நம்ம ப்ரொபஸர் ஞாபகம் வந்திடுச்சு. அதான் சிரிச்சுட்டேன். பட் கிருஷ்ணனின் காதலி பெயர் சூப்பர். உண்மையா சொல்லு… சாரை உனக்கு ஏற்கனவே தெரியுமா? நீ வேற வந்ததுல இருந்து சாரை சைட் அடிச்சிட்டு, இப்படி ஒரு பேர்ல ஐடி வேற ஓபன் பண்ணிருக்கிற. அதான் கேட்டேன்.”

“ப்ச்! இப்போ தான் அவரை முதல் தடவை பார்க்குறேன். ஆனால் அவரை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கு ஆதி.ஏதோ கோ இன்ஸிடென்ட்.” என்றவளது முகம் யோசனையில் ஆழ்ந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்