Loading

பாகம் – 33

நிலா, விக்ரமை பார்த்தவுடன் சந்தோஷத்தில் ஓடி சென்று அவனை கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டாள். 

தேம்பி தேம்பி அழ ஆரம்பித்ததும் விக்ரம் பதற்றமாக, “நிலா என்ன ஆச்சு உனக்கு? ஏன் அழற?”.

“உன்னை யாராவது ஏதாவது சொன்னாங்களா? இங்கே ஏதாவது பிரச்சனையா உனக்கு? என்கிட்ட சொல்லு எதுவாக இருந்தாலும் நான் பாத்துக்கிறேன்” என்றான்.

நிலா, “உங்களுக்கு என் மேல் கோபமே இல்லையா? நான் உங்களை எவ்வளவு அசிங்கபடுத்தி பேசிட்டேன்”. 

“அப்படி இருந்தும் நான் அழுத உடனே நீங்க இவ்வளவு பதட்டமா கேக்குறீங்களே” என்றாள். 

விக்ரம், “எனக்கு உன் மேல வர கோபம் வேறு. நீ முதல்ல ஏன் அழறன்னு சொல்லு ஃபர்ஸ்ட் இங்க வா” என்று ரூமுக்குள் அழைத்துச் சென்றான்.

அவளை கட்டில் மேல் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான் குடிக்குமாறு‌.

நிலா தண்ணியை குடித்து மூச்சை இழுத்து விட்டவள். பிறகு தான் அழுகை கொஞ்சம் நின்றது.

விக்ரம், “இப்போ சொல்லு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க? என்ன ஆச்சு உனக்கு?” என்றான்.

நிலா, “என்ன மன்னிச்சிடுங்க தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்”. 

“எனக்கு இப்போதான் எல்லா உண்மையும் புரிஞ்சுது” என்றாள்.

விக்ரம் அந்த அறையை சுற்றி பார்த்தவன் அனைத்து துணிகளும் கலைந்து கிடந்தது.

விக்ரம் ஒன்றும் புரியாமல், “உனக்கு என்ன புரிஞ்சுது? எதுக்கு உன் துணி எல்லாத்தையும் இப்படி கலைச்சு போட்டு வச்சிருக்க” என்றான்.

நிலா அவள் ரிசப்ஷன் புடவையை எடுத்து விக்ரம் கையில் கொடுத்து, “இதுல இருக்க பேரு நீங்க தானே போட சொன்னிங்க”. 

“என்னோட காதலை பற்றி நான் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க இப்படி எழுதி வாங்கிட்டு வந்து இருக்கீங்க”. 

“அப்படின்னா நீங்க தான் என்னோட துருவ்னு எனக்கு இப்போ தான் புரியுது”. 

“நீங்க சொன்னது எல்லாமே உண்மைனு இப்போதான் எனக்கு புரியுது” என்றாள் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி. 

விக்ரம், “எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

நிலா மேலும் பேச்சை தொடர்ந்தவள் ஓடிச்சென்று அந்த டிராயரில் இருந்து அவன் கூறியது போல் இருந்த ஓலையில் ஆன கைவளையத்தை எடுத்து காண்பித்தாள்.

இது தானே நீங்க சொன்னது. இதுலையும் நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு” என்றாள். 

விக்ரம் அதற்கும் எந்த பதிலும் அளிக்காமல் கைகட்டியபடி அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

நிலா, “விக்ரம் அருகில் சென்று இப்போ தான் கீழே அத்தை கிட்ட பேசிகிட்டு இருந்தேன்”. 

“அவங்க தான் சொன்னாங்க உங்க அம்மா உங்களை துருவ் ன்னு தான் கூப்பிடுவாங்கன்னு”. 

“அது மட்டும் இல்ல உங்களுக்கு அந்த பெயர் பிடிக்கவில்லைன்னு நீங்க வேற பெயர் மாத்திக்கிட்டீங்க அப்படின்னும் சொன்னாங்க” என்றாள். 

நிலா, “எனக்காக நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க. என்னுடைய சித்தி வீட்டுக்கு வந்து தரையில் படுத்து அவங்க சொன்ன வேலை எல்லாத்தையும் ஒரு வேலைக்காரன் மாதிரி செஞ்சீங்க”. 

“எல்லாமே எனக்காக தான் என்று நினைக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் உங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தி பேசி இருக்கேன்”. 

“அதுக்கு கூட நீங்க என்கிட்ட கோவமா ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது. நான் எவ்வளவு திட்டினாலும் எல்லாத்தையும் வாங்கி கிட்டிங்க”. 

“ஏன் இப்படி பண்றீங்க அப்போவே நீங்க வாயைத் திறந்து சொல்லி இருக்கலாம் இல்ல”.

“எனக்கு என்னை நினைச்சாலே ரொம்ப அசிங்கமா இருக்கு. உயிருக்குயிரா உங்களை மனசுல இருந்து காதலிச்சிட்டு”. 

“நீங்க தான் அது என்று தெரியாமல் உங்களையே என்னை பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணீங்கலா?” 

“இல்ல என்ன அடையறதுக்காக தான் கல்யாணம் பண்ணிங்கலா? அப்படின்னு உங்கள ரொம்ப கொச்சையா பேசிட்டேன்”. 

“நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

விக்ரம், “சரி அழாதே” என்றான். நிலா, “சரி நீங்க ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல”. 

“சித்தி வீட்டுக்கு வந்தீங்க இல்ல அப்போவே நீங்க தான் துருவ் அப்படின்றதை என்கிட்ட சொல்லி இருக்கலாமே” என்றாள்.

விக்ரம், “எப்படி சொல்ல சொல்ற உன் சித்தி எந்த காரணத்துக்காக உனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்கன்னு உனக்கே தெரியும்ல”. 

“நான் பணக்காரனா இருக்கேன் உங்க பொண்ண குடுங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருந்தா உன் சித்தி ஈஸியா நமக்கு கல்யாணம் நடத்தி வெச்சிருப்பாங்களா”?. 

“உன் சித்தி உடனடியா திருட்டுத்தனமா எவனுக்காவது உன்னை கட்டி வச்சிருப்பாங்க”. 

“நம்ம வாழ்க்கையவே வீணாக்கி இருப்பாங்க. அதுக்காக தான் நான் யார்கிட்டயும் உண்மைய சொல்லல” என்றான்.

விக்ரம் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக சிலையாக நின்றிருந்தான். நிலா, “என் மேல் ரொம்ப கோவமா இருக்கீங்களா?” என்றாள். 

விக்ரம், “நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ என்னை நம்பலைல அப்புறம் எப்படி கோபம் இல்லாமல் இருக்கும்னு நீ நினைக்கிற”. 

“எத்தனை வாட்டி உன்கிட்ட நான் உண்மையை சொல்ல வந்தேன். ஆனா ஒரு வாட்டியாச்சும் மதிச்சு கேட்டியா”. 

“கடைசில உன்கிட்ட எல்லா உண்மையும் நான் கஷ்டப்பட்டு சொல்லியும் நீ அதை துளி அளவு கூட நம்பல”.

“இப்போ இந்த ஆதாரங்கள் எதுவுமே இல்லாம போயிருந்தா நீ என்னை கடைசி வரைக்கும் நம்பி இருக்கவே மாட்ட இல்ல”. 

“இந்த ஆதாரத்தையும் தாண்டி கீழே இருக்க என்னோட அம்மா சொன்னது தான் உனக்கு பெருசா தெரிஞ்சுது”. 

“அவங்க சொன்ன வார்த்தையில் தான் நீ நம்பி இருக்க என் வார்த்தையில் ஒன்னு கூட நீ நம்பவே இல்லை” என்று அவன் பேசிக்கொண்டு இருந்தான்.

அப்போழுது அவன் செல்போனுக்கு யாரோ அழைப்பு கொடுத்தார்கள்.

விக்ரம், “ஹலோ சொல்லுடா” என்றான். ராஜேஷ், “மச்சான் சீக்கிரம் வா மீட்டிங் இன்னும் 20மினிட்ஸ்ல ஆரம்பம் ஆகிடும். நீ எங்க இருக்க சீக்கிரம் வா” என்றான்.

விக்ரம், “இதோ வந்துட்டேன்” என்று போனைத் துண்டித்து விட்டு “நிலா உன்கிட்ட நான் அப்புறமா வந்து பேசுறேன்”. 

“இது ரொம்ப முக்கியமான மீட்டிங் நான் உடனடியா போயாகணும்” என்று அங்கிருந்து ஃபைலை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். 

விக்ரம் சென்ற திசையை பார்த்துக் கொண்டே நிலா கண்களை துடைத்துக் கொண்டு, “நீ என் மேல கோவமா இருந்தாலும் பரவாயில்லை”. 

“உன்னை நான் சீக்கிரமே சமாதானம் பண்ணிடுவேன்” என்று ஒரு வித சந்தோஷத்தோடு இருந்தாள். 

ஆபீசுக்கு வேகமாக சென்ற விக்ரம் மீட்டிங்கை நல்லபடியாக முடித்து ப்ராஜெக்ட் டீலிங்கை அவனே கைப்பற்றி விட்டான். 

பிறகு ராஜேஷ், “டேய் மச்சான் ஏன்டா ஒரு மாதிரியா இருக்க. நிலா உன் காதலை இன்னும் புரிஞ்சுக்கலைன்னு கவலையா இருக்கியா?” என்றான்.

விக்ரம், “அதெல்லாம் ஒன்னும் இல்லை டா அவளுக்கு நான் தான் துருவ் அப்படின்ற நம்பிக்கை வந்துடுச்சு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு”.  

“அதனால் தான் மீட்டிங் க்கு வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. அவ பேசிகிட்டு இருக்கும் பொழுதே நான் பாதியிலேயே நீ போன் பண்ணனு கிளம்பி வந்துட்டேன்”. 

“அதனால் கண்டிப்பா அவ அங்க ரொம்ப டென்ஷனா இருப்பா” என்றான்‌.

ராஜேஷ், “சந்தோஷமாக என்னடா மச்சான் சொல்ற என்கிட்ட நீ இதை பத்தி சொல்லவே இல்லையே”. 

“ஓ அப்போ நான் தான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நந்தி மாதிரி வந்துட்டேனா”. 

“சரி சரி இதுக்கு அப்புறம் நான் டிஸ்டர்ப் பண்ணல நீ போன் போட்டு ஃபர்ஸ்ட் நிலா கிட்ட பேசு மனசுல இருக்க எல்லாத்தையும் சொல்லி பேசிடு” என்றான். 

விக்ரம் அவசரமாக தன் போனை கையில் எடுத்தவன் அப்பொழுது தான் நினைவுக்கு வந்தது நிலாவிடம் போனே கிடையாது என்று.

விக்ரம், “மச்சான் அவ கிட்ட போனே இல்லை டா நான் நேரிலேயே பேசிக்கிறேன்”. 

“அது மட்டும் இல்ல நிலா கிட்ட நான் முதல் முதல்ல என்னோட காதலை சொல்ல போறேன்”. 

“நாங்க சின்ன வயசுல இருந்து ஒரு காதலுடனே தான் வளர்ந்தோம்”. 

“ஆனால் இப்போ எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, ரிசப்ஷன் முடிஞ்சிடுச்சு, ஆனாலும் எதுலயுமே அவள் மனசுல இருந்து என் கூட சந்தோஷமா இல்லை” என்றான். 

ராஜேஷ், “இப்போ என்னடா சொல்ல வர” என்றான். 

விக்ரம், “அது வந்து நான் இன்னைக்கு நைட்டு 10 ஓ கிளாக் அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன் மச்சான்” என்றான். 

ராஜேஷ், “செம்ம டா என்ஜாய் பண்ணு. நான் கிளம்புறேன்” என்றான்.

விக்ரம், “எங்கடா போற நீ தான் எல்லாத்துக்கும் மெயின். நீ இல்லாம நான் எப்போ டா மச்சான் தனியா எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணி இருக்கேன்”. 

‍”நீயே சொல்லு நீ இல்லாம நான் ஏதாவது பண்ணி இருக்கேனா சொல்லு” என்றான்.

ராஜேஷ் அவனை கூர்ந்த பார்வை பார்த்து, “இப்போ எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க” என்றான்.

விக்ரம் லேசாக சிரித்தவன், “அது வந்து டா நான் நிலாவுக்கு ப்ரொபோஸ் பண்ண போறது வீட்ல இல்லை”. 

“அது சூப்பரா இருக்கணும். அந்த இடமே ரொம்ப பிலசன்ட்டா இருக்கனும். சோ பீச்ல ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.

ராஜேஷ், “சூப்பர் டா பண்ணிடு பண்ணிடு” என்று அங்கிருந்து நழுவ பார்த்தான். 

விக்ரம், “எங்கே போக பார்க்கிற அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் நீ தான் பண்ணனும்”. 

“நான் கரெக்டா அவளை கூட்டிட்டு டின்னர் நேரத்துக்கு வந்திருவேன். அதுக்குள்ள நீதான் அங்க டெக்கரேஷன் எல்லாம் பாத்துக்கணும்”. 

“அவ நடந்து வர பாதை ஃபுல்லா ரோஸ்லையே இருக்கணும் ஓகேவா. நான் சொல்ற மாதிரி பண்ணிடு” என்றான்.

ராஜேஷ், “நண்பனா போய் தொலைஞ்சிட்ட சரி ஓகே. நீ சொல்ற மாதிரியே செஞ்சி தொலையுறேன்” என்றான்.

விக்ரம் ராஜேஷ் உடன் சேர்ந்து பேசி பிளான் எல்லாம் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றான்.

நிலா வாசலிலே குட்டி போட்ட பூனையை போல் அங்கும் இங்கும் நடந்து கொண்டே விக்ரம் காக காத்துக் கொண்டும் இருந்தாள். 

நிலா என்ன இவ்வளவு நேரம் ஆகிடுச்சு இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை. 

ஒரு வேளை நைட்டு தான் வருவாங்களோ மீட்டிங் தானே சொன்னாங்க மீட்டிங்லாம் டூ ஹவர்ஸ் தான் இருக்கும். 

அதுக்கு மேல ஆகாதே இந்நேரம் அவங்க மீட்டிங் முடிஞ்சு கெளம்பி இருக்கணுமே. ஒருவேளை நம்ம மேல கோவமா இருக்காங்களோ. 

அதனால் தான் வீட்டுக்கு இன்னும் வரலையோ என்று பலத்த யோசனையுடன் இருந்தாள். 

அப்போது கேட் அருகில் கார் ஹாரன் சத்தம் கேட்டது உடனே நிலா ஓடி சென்று பார்த்தல். அங்கு வேறு யாரும் இல்லை விக்ரம் தான் வந்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. விக்ரம் பிளான் எல்லாம் பயங்கரம் .. அடுத்து புரோபோசல் சீனா 🥰