Loading

நினைவுகள் -9

அன்று…

ராதிகாவிற்கு இன்னும் பிலிப்பைன்ஸ் செட் ஆகவில்லை. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவிற்காக துணிச்சலோடு கடல் கடந்து வந்து விட்டாள்.

ஆனால் பெற்றோர் இல்லாத தனிமையில் மனம் துவண்டு தான் போனது.

இதோ இன்றிலிருந்து கல்லூரி ஆரம்பம். அதற்காக கிளம்பி விட்டாள். ஃபர்ஸ்ட் ஒன் இயர் பி எஸ் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் இங்கு மருத்துவம் படிக்க முடியும். பிஎஸ் என்பது சைக்கலாஜிப் பற்றியது.

 இவர்களது ஹாஸ்டலில் இருந்து காலேஜிற்கு நடந்து செல்வதற்கு அரைமணி நேரமாகும். ஆட்டோ வசதி எல்லாம் அங்கே அவ்வளவாக கிடையாது. சிற்சில ஆட்டோக்களே ஓடும். அதுவும் தெருக்களில் தான். இங்கே காலேஜிற்கு ஜிப்னியில் போகலாம் என்று தெரிந்து வைத்திருந்தாள். செவன் பேசோஸ் ஆகும். பேசோஸ் என்பது இங்குள்ள மணி.

ஹாஸ்டலில் இருந்து வந்தவள் ஜிப்னியில் ஏறி ஒரு வழியாக காலேஜ் சென்றாள்.

உள்ளுக்குள் பயம். காலேஜில் ராகிங் அவ்வளவாக இருக்காது என்று ஹாஸ்டலில் கூறியிருந்தார்கள்.

அப்படிக் கூறியிருந்த ஹாஸ்டலிலே ராகிங் நடந்தது. எல்லாம் ஃபன்னுக்காக தான் நடந்தது. பெருசா எதுவும் கிடையாது. ஜஸ்ட் ஏதாவது கவிதை சொல்றது, இல்லை ராம்ப் வாக் பண்ண சொல்றது. இப்படி ஏதாவது சின்ன சின்னதா செய்ய சொல்லி, அவங்க சீனியர்ஸ் என்று கெத்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 காலேஜிலும் இதே போல் நடக்குமோ என்ற பயத்திலே வந்தாள் ராதிகா.

அவள் முகம் ஏற்கனவே வாடி இருந்தது. இரவில் அவளது அறையில், தனியாகப் படுக்க பயந்து அரைகுறையாக தூங்கி எழுந்து வந்தாள்.

 சிறுவயதில் எல்லாம் அப்படி இல்லை. ஒரு சில வருடங்களாக அவளை தனியாக படுப்பதற்கு பெற்றோர் விடுவதில்லை. அவர்கள் கூடவே இருப்பார்கள். இப்போது திடீரென்று தனியாகப் படுக்க, அவளுக்கு உறக்கம் வராமல் ஆட்டம் காண்பித்தது…

 பொதுவாக ராதிகா அமைதியாக இருந்தாலும், தைரியத்துடன் தான் இருப்பாள். ஆனால் அவளது இயல்பே இப்பொழுது மாறிவிட்டது‌.

 இரவெல்லாம் தூக்கம் வராமல் அரைகுறையாக தூங்கி, காலையில் கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் முகத்தில், பயமும் சேர்த்துக் கொள்ள அவளது முகமே களையிழந்து காணப்பட்டது.

 அங்கு இருந்த சீனியர்ஸ் அவளை அழைக்க.

பயத்துடனே அவர்கள் அருகில் சென்றாள் ராதிகா.

அவர்கள் வழக்கம் போல ஜாலியாக சில டேர் செய்ய சொல்ல.

தயக்கத்துடனே செய்து முடித்தாள் ராதிகா.

அப்போது தான் உள்ளே நுழைந்த அனன்யாவோ, தூரத்திலிருந்தே ராதிகாவைப் பார்த்து விட்டாள்.

‘ ஏர்போர்ட்டில் பார்த்த பெண் தானே. வாவ்! அவளும் இந்த காலேஜ் தானா.‌ சூப்பர்!’ என்று எண்ணியவளின் கால்கள் விரைந்து அவளருகே சென்று நின்றது.

“ஹாய் ஐயம் அனன்யா. ஃப்ரம் சென்னை.” என்று ராதிகாவிடம் கையை நீட்டி உற்சாகமாக அறிமுகமானாள்.

 “ஹலோ! அனன்யா… இங்கே சீனியர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க மட்டும் கண்டுக்காமல் போறீங்க.” என்று அங்கிருந்தவர்கள் வினவ.

ராதிகாவும், அனன்யாவும் ஒரு சேர அவர்களைப் பார்த்தனர்.

“நீங்க போகலாம் ராதிகா. நாங்க மிஸ் அனன்யாவை கவனிக்க வேண்டிருக்கு.” என்று ராதிகாவை கிளம்ப சொல்ல.

அவளோ, அனன்யாவைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்.

அனன்யா, ” ஜஸ்ட் ஏ மினிட் சீனியர்.” என்று விட்டு, ” ஹே! ராதிகா! ஒரு ஃபைவ் மினிட்ஸ் எனக்காக வெயிட் பண்ணுங்க.பீளீஸ்.” என்று ராதிகாவைப் பார்த்து கண்கள் சுருங்கப் புன்னகையுடன் வினவ.

அவளது முகபாவனையில், “சரி.” என தலையசைத்தாள் ராதிகா.

ராதிகாவின் தலையாட்டலைக் கண்ட பிறகு தான், நிம்மதியாக சீனியர்களிடம் திரும்பினாள் அனன்யா.

 அவர்கள் சொன்ன டேர் அனைத்தையும் உற்சாகத்துடன் செய்தவள்,தனக்காக காத்திருந்த ராதிகாவிடம் வந்து மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள…

ராதிகாவும்,”ஐ யம் ராதிகா. ஃப்ரம் தஞ்சாவூர்.” என்று கைகளை நீட்டினாள்.

நீட்டிய கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் அனன்யா. யார் சொன்னது காதல் மட்டும் தான் முதல் பார்வையிலே தோன்றும் என்று… நட்பும் அப்படித்தான் என்பதை அனன்யா உணர வைத்தாள்.

 இருவரும் சைக்கலாஜிப் படிப்பதற்கு வந்திருக்க‌. வகுப்பு எங்கே என்று விசாரித்து உள்ளே சென்றனர். சைக்காலஜி படிப்பது என்பது இலகுவாக தான் இருக்கும். ஸ்கிரிப்ட்… அதாவது நாடக வடிவில் தான் படிப்பு இருக்கும்‌. நாலைந்து பேர் குழுவாக, ஒவ்வொரு பிரச்சினைக்கும் சொல்யூஷன் செல்ல வேண்டும்.

அப்படி க்ரூப் செலக்ட் செய்யும் போது அனன்யா, ராதிகாவுடன் சேர்ந்துக் கொண்டாள்.

 ராதிகாவிற்கும், அனன்யாவின் நட்பு கம்பர்டபுளாக இருந்தது. மெல்ல தனது கூட்டில் இருந்து வெளிவந்தாள் ராதிகா.

 காலேஜ் ஆரம்பித்து, ஒரு வாரம் ஓடி இருந்தது.

வழக்கம் போல ராதிகா, முகத்தில் சோர்வுடன் கல்லூரிக்கு வந்துக் கொண்டிருந்தாள்.

அனன்யாவும், பெற்றோரைப் பிரிந்து வந்ததால், டல்லடிக்கிறாள் என்று முதலில் நினைத்தாள்.

ஆனால் பேசிப் பார்க்கும் போது அப்படி ஒன்றும் தெரியவில்லை. இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணிய அனன்யா, “என்ன பிரச்சினை ராது? ஏன் டல்லாவே இருகக.” என்று விசாரிக்க…

முதலில் ஒன்றும் இல்லை என்று மறுத்த ராதிகா, பிறகு தனது பிரச்சினையை கூறினாள்.

“அனு… அது வந்து, ஹாஸ்டல்ல என்னுடைய அறைக்கு யாரும் இன்னும் வரலை.”

“சரி… அதுக்கும் இப்படி டல்லா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் ராது?”

” எனக்கு தனியாக படுப்பதற்கு பயம் அனு. தூக்கம் வராது.” என்று ஒரு வழியாகக் கூற…

 ” என்னது? தனியா படுக்க பயமா?” என அனன்யா, நம்ப மாட்டாமல் ஆச்சரியமாக வினவ.

“….”

” ஏன் ராது. ஒன்னும் சொல்ல மாட்டீங்கறே. இவ்வளவு தூரம் வெளிநாடு வரைக்கும் தனியாக வந்திருக்க… பட் என்னால நம்பவே முடியலை.”

ராதிகாவோ ஒன்றும் கூறாமல், முகம் இறுகி நிற்க.

” சரி… சரி… விடு… நீ எதுவும் கூற வேண்டாம்.” என்ற அனன்யா, கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தாள்.

பின்பு முகம் மலர ராதிகாவைப் பார்த்தவள், ” ராது… உங்கள் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட்ட உன்னுடைய அறைக்கு ஒரு ஆள் வருவதாக சொல்லி வச்சிடு. நான் ரெண்டு நாள்ல வந்து உன்னோடு ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று அசால்டாகக் கூற…

 ராதிகாவோ, நம்பாமல் அவளைப் பார்த்தவள், “ஆர் யூ மேட். உனக்காக, உங்க வீட்ல தனி அப்பார்ட்மெண்ட் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதை விட்டுவிட்டு இங்கே வருவியா? ” என்று சிறு சினத்துடன் வினவ.

” கூல் ராது… திஸ் இஸ் மை ஃப்ராப்ளம். ஐ வில் மேனேஜ். நான் சொன்னதை மட்டும் செய். ” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இன்று…

ஒரு வித படபடப்புடன் சுகம் மருத்துவமனைக்கு சென்ற ராதிகா, ரிசப்ஷனில் விசாரிக்க… அவளை அடுத்த ப்ளாக்கிற்கு சென்று ஹாஸ்பிடலின் அட்மினிடம் அழைத்துச் சென்றனர்.

  அங்கே போய் தன்னுடைய அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை வாங்கும் போது தான், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சார் வரததற்கான காரணம் தெரிய வந்தது.

அவருடைய மருமகள் பிரசவத்தில் இறந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது.

 அவளால் நம்பவே முடியவில்லை. இந்த காலத்திலும் பிரசவம் ஒரு மறுஜென்மம் தான் போல…. எவ்வளவு டெக்னாலஜிஸ் வளர்ந்தாலும், டாக்டர்ஸ்ஸை மீறிய சக்தி உண்டு.

அவள் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு மாத காலம் ஆகியும், இன்னும் அவர்களது டீன் டாக்டர் கிருஷ்ணனை சந்திக்கவில்லை. ஏன் பிலிப்பைன்ஸில் இருந்து மாதம் ஒரு முறை வரும் டாக்டர் சேலவரையும் சந்திக்கவில்லை. இந்த முறை அவர் வருவது சற்று தாமதமாகியிருந்தது.

டாக்டர் கிருஷ்ணனை அவளது காலேஜில் தான் சந்திக்க போகிறாள். அது மட்டுமல்லாமல் அவரை சைட் அடிக்க போவதையும் அப்போது அறியவில்லை.

முதல் மாத சம்பளம் வாங்கி விட்டாள். நாளையிலிருந்து கல்லூரி. இனி பார்ட் டைம் ஜாப் தான்.

வீட்டிற்கு வீடியோகாலில் அழைத்தவள், தான் சேலரி வாங்கியதைக் கூறி ஆர்ப்பரிக்க…

“அட லூசே” என்பது போல சுந்தரிப் பார்க்க…

“சண்முகமோ சந்தோஷம் பாப்பா.” என்றார்.

“என்னமா உன் பார்வையே சரியில்லையே.” என்று ராதிகா வினவ.

“ஐயோ! ஸ்வீட்டி… நீ ஏற்கனவே நீ ஊசி போட்டு தானே இருந்த. எனக்கு சாக்கி, ஐஸ்கிரீம்ல வாங்கித் தந்தியே.” என விகர்தனா கூற…

“ஐயோ!” என தலையில் கைவைத்துக் கொண்டாள்.

அவளது முகபாவனையைப் பார்த்த சுந்தரி அடக்கமாட்டாமல் நகைத்து, “சின்ன குழந்தைக்கு தெரியுது. நீ ஏற்கனவே வேலைப் பார்த்தது. உனக்கு மறந்துருச்சு. ” என…

” ஏய் ஸ்வீட்டி… நீ தான் எனக்கு வில்லி.” என.

“நோ ஸ்வீட்டி… நான் உன் ஸ்வீட்டி.” என்று மழலையில் மிழற்றினாள் விகர்தனா.

அவளது பாவனையில் ராதிகாவும் மலர்ந்து சிரித்தாள்.

” பை மா… பை ஸ்வீட்டி…” என்று வைத்தவளின் மனமோ, இப்போது கலக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.

நாளையிலிருந்து காலேஜ்… மீண்டும் ஒரு கல்லூரி பயணம்… சொல்லாமலே அனன்யாவின் ஞாபகம் வந்து சென்றது. மனம் பிசைய, உறங்க முயன்றாள்.

நேற்றிரவு இருந்த கலக்கம் மறைந்து இருந்தது. முகம் பொலிவுடன் இருக்க, கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

இன்று முதல் நாள் காலேஜ். பி.ஜி ஸ்டார்ட் ஆகுது‌. டீனேஜில் இருந்த பரபரப்பு எல்லாம் இப்பொழுது ராதிகாவிற்கு கிடையாது.

 கண்ணாடி முன் நின்று கிளம்பிக் கொண்டிருந்தவளின் மனதிலோ ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தான் அணிந்திருந்த சல்வாரை மாற்றி விட்டு, புடவை எடுத்து கட்டினாள்.

ப்ளைன் கிளாஸ் ஒன்று எப்போதும் ஹேண்ட்பேகில் இருக்கும். தஞ்சாவூரில் இருக்கும் போது, டூவிலர் ஓட்டும் போது பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது. அதை எடுத்து கண்களில் மாட்டியவள், மீண்டும் கண்ணாடியைப் பார்க்க, என்னவோ குறைவதாக தோன்றியது.

ஒரு நிமிடம் கண்களை சுருக்கி யோசித்தவள், முகமலர விரித்திருந்த கூந்தலை வேகமாக பின்னலிட்டு கொண்டை போட்டுக் கொண்டாள்

ஹாஸ்டலில் டைனிங் ஹாலிற்குச் சென்று உணவு அருந்தினாள்.

 அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவளை மேலிருந்து கீழாக பார்க்க‌‌… அவளோ உணவில் மட்டும் கவனத்தைச் செலுத்தினாள். அவர்களது பார்வையை அலட்சியம் செய்து விட்டு, அருகில் இருந்த கல்லூரிக்கு நடந்தே சென்றாள்.

இந்த ஒரு மாத காலத்தில் ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களிடம், காலேஜ் பற்றிய டீடையில்ஸை தெரிந்துக் கொண்டவள், நன்கு பழகிய இடத்திற்குச் செல்வது மாதிரி தயங்காமல் வேகமாக சென்றாள்.

அவளுடைய டிபார்ட்மென்ட்ற்கு சென்றவள், அங்கு சலசலவென பேசிக்கொண்டிருந்த மாணவ. மாணவிகளை பார்த்ததும் அவளது முகத்தில் புன்னகை மலர்ந்தது.

அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்