Loading

அத்தியாயம் 5

“பூம்ம்ம்”என தன் செவிக்கு மிக அருகில் கேட்ட சப்தத்தில் அரண்டு போய் எழுந்த ஸ்ரீ ,தனக்கு முன் குறும்பாக புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தவர்களை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.

“ஹே வானரங்களா எப்போ டி வந்தீங்க என்கிட்ட சொல்லவே இல்லை அய்யோ என்னால நம்பவே முடியலை ” என மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள்.பின்னே வந்திருப்பது இவளோட ஆருயிர்(அறுந்த வாலு) தோழிகள் அல்லவா!!!

ஸ்ரீயின் அருகில் வந்த வர்ஷு அவள் கழுத்தைக் கட்டிகொண்டு அவளின் மென்மையான பட்டு போன்ற கன்னத்தில் தன் அழகான பற்களைப் பதித்தாள்.

“ஆஆஆ” என கத்திக்கொண்டே வர்ஷுவை தன் மேலிருந்து தள்ளி விட்ட ஸ்ரீ ,”ஹேய் காட்டுக் குரங்கே ஏண்டி என்ன கடிச்சு வச்ச ?? ” என்று கேட்டுக்கொண்டே அருகில் இருந்த தலையணையை எடுத்து அவளை மொத்த,அவள் அடிப்பதை அசால்ட்டாக வாங்கிய வர்ஷு,”பேபி கூல் கூல் அடிச்சு அடிச்சு டையர்ட் ஆய்ருப்ப, உங்க அம்மாச்சி கிட்ட சொல்லி அருகம்புல் ஜூஸ் போட்டு கொண்டுவர சொல்லவா” என ரொம்ப அக்கறையாக வினவினாள்.

“எதுக்கு கடிச்சனு இப்போ சொல்ல போறியா இல்லையா டி???” என ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள் ஸ்ரீ.

நீட்டிய விரலை பிடித்து அவளை அருகில் இழுத்த வர்ஷு,” இல்ல பேபி உன்னோட கன்னம் ஆப்பிள் மாதிரி இருக்குனு நம்ம ரோட்டுக்கடை ரோமியோ ( வருண்) வர்ணிச்சானாமே எனக்கு நம்ம சோத்து மூட்டை(நிஷா) இப்போ தான் சொல்லுச்சு அதான் கடிச்சு டெஸ்ட் பண்ணேன், இந்த வெட்டிப்பய வருண் ஆப்பிள கண்ணுல கூட பார்த்திருக்க மாட்டான் போல,ஆப்பிள் மாதிரி இருக்கும்னு பார்த்தா விவேக் சொன்ன மாதிரி தீஞ்சு போன பன்னு மாதிரில இருக்கு . அவன் சொன்னதை நம்பி நானும் தெரியாம கடிச்சுட்டேன் முதல டிடி போடனும் , ஆமா உங்க ஊர்ல ஹாஸ்பிட்டல் இருக்குல ??” என ஸ்ரீ முறைப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை கலாய்த்தாள்.

அதுவரை அவர்கள் அலப்பறைகளை இரசித்துக் கொண்டிருந்த நந்து , “ஹேய் போதும் டி விட்ரலாம் பாவம் கல்யாணப் பொண்ணு வேற நீ கவலைப் படாத ஸ்ரீ குட்டி உனக்கு சப்போர்ட்டுக்கு நான் இருக்கேன்.” என அவளை செல்லம் கொஞ்சினாள்.

நந்துவை முறைத்த மது ,” ஹேய் நண்டு உன்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்தோம் நீ என்ன பண்ணிட்டு இருக்க ?? ஸ்ரீ நாங்க எல்லாரும் உன்மேல செம காண்டுல இருக்கோம்..நீ எல்லாம் மனுஷியா டி மித்ர துரோகி கல்யாணம்னு ஒரு வார்த்தை எங்க கிட்ட சொன்னியா நீ பாட்டுக்கு நாங்க வரதுக்குள்ள பொட்டி படுக்கையை கட்டிக்கிட்டு கிளம்பி வந்துட்ட. நாங்க மட்டும் அந்த இராட்சஷிகிட்ட டெய்லி திட்டு வாங்கி சாகணும் நீ மட்டும் ஜாலியா கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஓடி வந்துட்ட, முழு சிக்கனை(கோழி) சிக்கன் 65 ல மறைக்க பார்த்திருக்க .கல்யாணம்னு சொன்னதும் நீ எங்களை மறந்துட்ட ஆனா அண்ணா மறக்காம எங்களுக்கு நேத்து கால் பண்ணி சொன்னதும் இல்லாம எங்களுக்கு ஊருக்கு வர்றதுக்கு கார் அனுப்பி வச்சு கூட்டிட்டு வந்தாரு தெரியுமா?? இதுல உன்னை ஏதும் திட்ட கூடாதுனு உனக்கு சப்போர்ட் வேற பண்ணாரு.ஆனாலும் இதுக்கு உனக்கு கண்டிப்பா தண்டனை இருக்கு” என நீண்ட ஒரு சொற்பொழிவை ஆற்றினாள்.

அதுவரையில் ரெங்கநாயகி அம்மாள் குடுத்த காபியையும் முறுக்கையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்த நிஷா கூட ,”ஸ்ரீ குட்டி நீ இப்படி பண்ணுவனு நாங்க நினைக்கவே இல்லை ஏன் நாங்க உன் கல்யாணத்துக்கு வந்தா சாப்பாடுலாம் காலி பண்ணிருவோம்னு எங்களை நீ கூப்பிட கூடாதுனு முடிவு பண்ணிட்டியா??” என முறுக்கை மென்று கொண்டே வினவினாள்.

அவளை முறைத்த மற்ற மூவரும் , ” ஹேய் பன்னி சாப்பாட்டை தவிர வேற எதுவுமே உன் மண்டைல இருக்காதா எப்ப பாரு சாப்பாட்டை பத்தியே பேசிட்டு இருந்த உன் வாயை ஊசியை வச்சு தச்சு விட்ருவேன் பார்த்துக்கோ!!! அப்பறம் சாப்பாட்டை ஆசை தீர ரசிக்க மட்டும் தான் முடியும் ருசிக்க முடியாது செல்லம்” என வர்ஷு அவளை மிரட்டினாள்.

“உங்களுக்கெல்லாம் பொறாமை டி என்னை மாதிரி சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிட முடியலைனு போங்க நான் போய் பாட்டி கிட்ட இன்னும் கொஞ்சம் முறுக்கு வாங்கிட்டு வர போறேன் என்ன டேஸ்ட்டா இருக்கு!!! ” என வெக்கமே இல்லாமல் கூறிவிட்டு கீழே ஓடினாள்.

அனைவரும் அவளைப் பார்த்து சிரித்தனர்.ஆனால் ஸ்ரீ இதில் எதும் கலந்து கொல்லாமல் ஒரு முக்கியமான வேலையில் ஈடு பட்டிருந்தாள்.அப்படி என்ன வேலைனு யோசிக்கிறீங்களா வேறென்ன எப்பயும் போல மனசுல தன்னோட காதல் (மோதல்) நாயகனை அர்ச்சிக்கிரது தான்.

‘படுபாவி இவன் எல்லாத்தையும் ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்கான்.அப்போ அவனுக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சிருக்கு..இப்போ என் ப்ரண்ட்ஸையே எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டான் கேடி என்னால இன்னும் கூட நம்ப முடியலையே எனக்கும் அவனுக்கும் கல்யாணமா??? இதெல்லாம் உண்மையிலே நிஜமா ,நேத்து நடந்தது எதுவும் பொய் இல்லையே அப்போ நிஜமாவே எனக்கும் என் ஹரிக்கும் கல்யாணம் அய்யோ நினைக்கும் போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு’ என நேற்று இவர்கள் வந்த பின் நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்க ஆரம்பித்தாள்.

வாங்க நாமளும் கூட போய் என்ன தான் அப்படி நடந்துச்சுன்னு பார்க்கலாம்.

காரை விட்டு கீழே இறங்கிய ஸ்ரீ அங்கே கண்ட காட்சியில் குழப்பமடைந்தாள்.அந்த பழங்காலத்து அரண்மனை போல் வீற்றிருந்த அந்த வீடு கலர் கலர் மின் விளக்குகளால் ஜொலிஜொலித்தது.வீட்டின் முன் பந்தல் போட்டிருந்தனர்.அந்த இடமே திருவிழா போல் காட்சியளித்தது.

இது மட்டும் அல்லாமல் இவர்களை வரவேற்க மொத்த குடும்பமும் வாசலிலேயே ஆரத்தி தட்டை வைத்துக் காத்திருந்தனர்.

‘என்னா டா இது நம்மல சுத்தி நடக்குறதலாம் மர்மமா இருக்கு காலையில என்னடானா இவன் என்னை பார்க்க இத்தனை வருஷம் கழிச்சு வந்தான் அந்த அதிர்ச்சில இருந்தே நான் இன்னும் வெளிய வரலை.இப்போ அடுத்த கட்ட அதிர்ச்சியா இந்த பழைய வீட்டுக்கு வேற இவ்வளவு மேக்-அப் பண்ணி புது பொண்ணு மாதிரி ஜொலிக்க விட்ருக்காங்க நம்ம யங்க் மேன்(தாத்தா) அதுக்கெல்லாம் காசு தர மாட்டாரே வீண் செலவுன்னு.. என்ன நடந்துச்சு? ஸ்ரீ உனக்கு பெரிய ஆப்பா ரெடி பண்ணிட்டு ஆடை பலி கொடுக்க கூட்டிட்டு வர மாதிரியே இருக்கு ..நீ ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நேரம் இது’ என தன் மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டிருந்த ஸ்ரீயின் கையைக் கிள்ளிய கார்த்திக்,

“கண்ணுகுட்டி இந்த டெக்கரேசன்லாம் பார்த்ததும் மாமன் கூட டூயட் பாட போய்ட்ட போல நம்ம அதை சாப்பிட்டு வந்து பண்ணலாம் இப்போ பாட்டி ரொம்ப நேரமா ஆரத்திய வைச்சு நம்மலையே பார்த்துட்டு இருக்கு நம்ம போகலனா உன்னை முறைக்கிற மாமனுக்கு(ஹரி) மட்டும் சுத்திட்டு இந்த முறை மாமனை கிழவி டீல்ல விட்டிரும் வா போகலாம்.” என அவள் பைகளை தள்ளிக் கொண்டு முன்னேறினான்

‘இந்த லூசு வேற ஹரியை வெறுப்பேத்த இவன மாமானு கூப்பிட்டா அதையே பிடிச்சு வேதாளம் மாதிரி தொங்கிட்டு இருக்கு’ என முனுமுனுத்துவிட்டு அவனை தொடர்ந்தாள்.

மூவரும் அருகே வந்ததும் ,ரெங்கநாயகி அம்மாள் ஹரியை பார்த்து ,” ஏங்கண்ணு நீயும் இந்த வாயாடியும் வர்றதா தான உன்ற அய்யன் சொன்னான் , இந்த கோட்டி பயலை எங்க இருந்து பிடிச்சுட்டு வந்த ராசா” என தன் மூத்த பேரனிடம் வினவினார்.

அவர் தன்னை கோட்டிபையன் என்று சொன்னதில் கடுப்பான கார்த்திக் ,”இதோ பாரு கிழவி என்னை ஏதாச்சும் சொன்ன காதுல டிங்கு டிங்குனு நீ ஆட்டிக்கிட்டு திரியுற ரெண்டு தண்டட்டியையும் காதோட சேர்த்து அறுத்துட்டு போய் சேட்டு கடைல வித்துட்டு செட்டிநாடு சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்ருவேன் ஜாக்கிரதை” என மிரட்டினான்.

அதற்கு மதியழகன் தன் பையனை நோக்கி கண்டிப்பான பார்வையை செலுத்தியவர்”கார்த்திக் என்ன பழக்கம் இது பாட்டினு மரியாதை இல்லாம என்ன பேச்சு பேசுற ஒழுங்கா மன்னிப்பு கேளு” என அதட்டினார்.

“அழகா இது எனக்கும் என்ற பேரனுக்கும் நடக்குற சண்டை இடைல நீ வந்தா உடைஞ்சிரும் உன் மண்டை,அதுனால கண்ணு நீ உன் பொஞ்சாதி கொண்டைக்கு என்ன பூ வாங்கிட்டு வரலாம்னு மட்டும் யோசி இதுல தலையிடாத” என பஞ்ச் டையலாக் பேசினார் பாட்டி.

“பாட்டினா பஞ்ச பாண்டவர் கதை தான் சொல்லனும் இந்த மாதிரி பஞ்ச் எல்லாம் பேசக்கூடாது சரியா?? கொஞ்சமாச்சும் வயசுக்கு தகுந்தது போல நடந்துக்கோ கிழவி” என அவரை வாரினான் கார்த்திக்.

பதிலுக்கு ஏதோ சொல்லப் போனவரை தடுத்த ஹரி , “பாட்டி ப்ளீஸ் அவனோட நீங்க பொறுமையா எப்போ வேணும்னாலும் சண்டை போடுங்க இப்போ என்னை உள்ள விடுங்க பாட்டி இவ்ளோ நேரம் டிரைவ் பண்ணது ரொம்ப டையர்டா இருக்கு உன்னோட பேரனை பார்த்தா பாவமா தெரியலையா உனக்கு” என செல்லம் கொஞ்சினான்.

“அய்யோ கண்ணு மன்னிச்சுரு சாமி. வந்து நில்லு ராசா ஆரத்தி சுத்துனதும் உள்ள போய் ஓய்வு எடு தங்கம் இப்போ இப்படி வந்து நில்லு” என அவனைப் பணித்தவர் ,

அதுவரையில் அமைதியாக இவர்கள் நடத்திய கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயை நோக்கி ,” என்ன அம்மணி பட்டணத்துக்கு போய் அமைதியா இருக்க லேகியம் எதும் வாங்கி சாப்பிட்டுடியோ இம்புட்டு அமைதியா இருக்க சரி சரி உன்ற மாமன் பக்கத்துல வந்து நில்லு ஆரத்தி சுத்தணும்” என கூறினார்.

ஸ்ரீயும் எதுவும் பேசாமல் அமைதியாக ஹரியின் அருகில் போய் நின்றாள்.

இதை பார்த்து கடுப்பான கார்த்திக் அவனும் ஸ்ரீக்கு இடது புறத்தில் போய் நின்று கொண்டு , ” ஏய் கிழவி நீ ரொம்ப ஓர வஞ்சனை பண்ற என்ன இவங்க ரெண்டு பேரும் தான் உன் பேரன் பேத்தியா என்னை ரொம்ப அவமானப் படுத்துற உன்னை இரு வச்சுக்குறேன்” என பாட்டியிடம் பொரிந்தான்.

இவர்கள் மறுபடியும் சண்டையை ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஹரி “பாட்டி சீக்கிரம் சுத்துங்க இல்லைனா நான் உள்ள போறேன் நீங்க பொறுமையா கதையடிச்சுட்டு வாங்க” என நகரப் போனவனை தடுத்த பாட்டி மூவருக்கும் சேர்த்தே ஆரத்தி சுற்றி அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் குடுத்து வெளியே கொட்டி விட்டு வரச் சொன்னார்.

இவ்ளோ நேரம் எப்படி ஸ்ரீ அமைதியா இருக்கான்னு உங்களுக்கு தோனிறுக்குமே , அது ஏன்னா அங்க ஹரியோட அப்பா அம்மா ஆதிரா எல்லாரும் இருந்தாங்க .. பிறந்ததுல இருந்தே அவங்ககிட்ட பாசமா செல்லம் கொஞ்சிட்டு இருந்துட்டு அந்த சம்பவத்துக்கு அப்பறம் அவங்க கூட பேசுறதையே நிறுத்திட்டா. இப்போ எந்த மூஞ்சிய வச்சுகிட்டு அவங்களை பாக்குறதுனு தெரியாம தான் அமைதியின் சிகரமா மாறிட்டா. .அத யாரு புரிஞ்சுகிட்டாங்களோ இல்லையோ ஹரி புரிஞ்சுகிட்டான் ஆனால் இதுல தன்னால ஒன்னும் பண்ண முடியாதுனு இவளாச்சு அவங்களாச்சுனு விட்டுட்டு அங்கிருந்த எல்லார்கிட்டயும் சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்கு ஓடிவிட்டான்.

அவன் சென்றதும் தன் மொத்த பலத்தையும் இழந்தது போல் உணர்ந்த ஸ்ரீ , ‘எருமை மாடு அங்க இருந்து கூட்டிட்டு வந்தானே இப்படி பாதியிலே விட்டுட்டு போய்ட்டான்’ என மனம் புலம்ப ‘என்னமா அங்க சத்தம் என எட்டிப்பார்த்த மனசாட்சி ‘அவன் ஏதோ உன்ன பாதி வழில நடு ரோட்டுல இறக்கி விட்ட மாதிரி ஸீனை போடுற உன் பாட்டி வீட்டுல உன் அப்பா அம்மா சொந்தக்காரங்க எல்லார் கிட்டயும் தான விட்டுட்டு போனான் விட்டா உன்ன இடுப்புல தூக்கி வச்சுட்டு அவனோட ரூமுக்கு கூட்டிட்டு போகனும்னு சொல்லுவ போல’ என மனசாட்சி பதிலடி கொடுத்தது,’ஏய் ஏற்கனவே நானே அத்தை மாமா என்ன சொல்லப் போறாங்களோனு பயத்துல இருக்கேன் நீ மட்டும் இப்போ போகலை உன் மண்டைல அடிச்சே உன்னை கொன்றுவேன்’ என அதை மிரட்டினாள் ‘உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் அங்கே நிற்க மனசாட்சி என்ன முட்டாளா நம்ம ஸ்ரீ மாதிரி அது ரெடி ஜூட் என ஓடி விட்டது.

ஸ்ரீ பயம் தேவையற்றது என அடுத்த நிமிடமே கலைவாணி அவளின் தலையை வருடிக் கொடுத்து ,” குட்டிமா எப்படிடா இருக்க ,இந்த தடியன் உனக்கு சாப்பாடு வாங்கி தந்தானா ரொம்ப சோர்வா தெரியுற ” என கனிவாக வினவினார்.

அவர் அன்பில் கரைந்த ஸ்ரீக்கு குற்ற உணர்வில் பேச நா எழும்பவில்லை,பின் ஒருவாறாக சுதாரித்து ,” நல்லா இருக்கேன் அத்தை அவங்க சாப்பாடு வாங்கி தந்தாங்க.என்ன விட அவங்க தான் ரொம்ப டையர்ட்டா இருக்காங்க அத்தை எனக்கு ஒன்னுமில்லை” என பதிலளித்தாள்.

“என்னடா குட்டி அத்தை மேல இன்னும் கோபமா இருக்கியா என்ன?? என்னை எப்படி கூப்பிடுவனு கூட மறந்துட்ட போல” என வருத்தமாக வினவினார்.

“அய்யோ ஆட்டம்மா(என்னடா இது புது பேரா இருக்குனு யோசிக்கிறீங்களா, கலைனா ஆங்கிலத்துல ஆர்ட்,ஆர்ட்+அம்மா=ஆர்ட்டம்மா தான் திரிந்து இப்போ ஆட்டம்மா ,எப்படி நம்ம ஸ்ரீயோட அறிவு)அப்படிலாம் இல்லை நீங்க தான் என் மேல கோப படணும்.எனக்கு உங்களை அப்படி கூப்பிட உரிமை இருக்கானு தான் அப்படி கூப்பிடல” என குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்க கூறினாள்.

“குட்டிமா பழசெல்லாம் மறந்துருடா அது எல்லாருக்கும் ஏதோ கெட்ட நேரம் அதான் அப்படி எல்லாம் நடந்துருச்சு..நீ பழைய மாதிரி எப்பயும் போல இருடா குட்டி” என தன் கவலைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு வெளியே அவளுக்காக நடித்தார் அந்த பாசக்கார பெண்மணி.

“கண்ணம்மா பாப்பா எவ்வளவு சோர்வா தெரியுது இப்போ போய் பழசெல்லாம் பேசி நேரத்த வீணடிச்சுட்டு இருக்க , சாமி நீ போய் உன்ற ரூம்ல குளிச்சுட்டு வா டா சூடா சாப்பிடுவ” என தன் மனையாளிடம் ஆரம்பித்து மருமகளிடம் பாசமாக முடித்தார் அவளின் தாய்மாமன்.

சாருமதியும் நல்லசிவமும் கூட அவளை அறைக்கு போக சொல்ல அவள் தன் அறைக்கு கிளம்பினாள்.ஆதிராவுக்கும் அவளோடு பேச ஆசை தான் ஆனாலும் அவள் பேசாமல் சென்று விடுவாளோ என்ற பயத்தினால் சின்ன சிரிப்போடு உள்ளே சென்று விட்டாள்.அஷ்வினுக்கு +2 சைக்கிள் டெஸ்ட் நடந்து கொண்டிருப்பதால் அவன் இன்னும் இங்கே வரவில்லை.

அதன் பின் தன் அறைக்கு சென்று குளித்து முடித்து தயாரானவள் சாப்பிட கீழே வந்தாள்.அவளுக்கு முன்னமே அனைவரும் டைனிங்க் ஹாலில் குழுமி இருந்தனர்.வந்தவள் தன் ஆட்டம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.அனைவரும் பசியில் இருந்ததால் அங்கே எந்த பேச்சுக்கும் இடம் இல்லாமல் போனது.அனைவரும் திவ்யமாக தங்கள் வயிற்றை நிறைத்த பின் , தன் பெரிய மீசையை நீவிக் கொண்டே நாராயணசாமி தன் பேச்சை ஆரம்பித்தார்.

“அடுத்த வாரம் புதன் கிழமை என் மூத்த பேரன் ஹரிக்கும் என்னோட பேத்தி ஸ்ரீக்கும் நம்ம வீட்டுலயே கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம்.இதுக்கு ரெண்டு பேர் வீட்லயும் முழு மனசோட சம்மதிச்சுட்டாங்க, இதுல எந்த மாற்றமும் இல்லை எல்லாரும் ஆளுக்கொரு வேலையா செய்ய ஆரம்பிங்க” என அதிகாரமாக சொல்லி முடித்தார்.

அவர் சொன்னதை கேட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீக்கு புரையேறியது.

வாழைப்பழத்தை முழுங்கிக் கொண்டிருந்த கார்த்திக் அதிர்ச்சியில் பாதி வாழைப்பழம் வாயோடு நிற்க “என்னது!!!!!!!” என இருவரும் ஒருசேரக் கூவினர்.

“ஹேய் எருமை மாடு என்ன டி முழுச்சுகிட்டே கனா கண்டுட்டு இருக்க” என சாருமதி ஸ்ரீயை உலுக்கி அவளை நிகழ்காலத்திற்கு அழத்து வந்தார்.

“சரி கனா கண்டது போதும் கோவிலுக்கு போகணும் போய் சீக்கிரம் குளிச்சுட்டு ஒழுங்கா புடவை கட்டிட்டு கீழ வா” என அவளை குளியறைக்குள் தள்ளிவிட்டவர் மற்ற நால்வருக்கும் அறைகளை ஒதுக்கி கொடுத்து விட்டு அவர்களையும் தயாராகி புடவை உடுத்தி வர சொல்லிவிட்டு தன் பணிகளை கவனிக்க சென்றார்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து தத்தம் அறையில் இருந்து தயாராகி வெளியே வந்தனர் அந்த பஞ்ச பாண்டவிகள்.

அதே சமயம் தன் அறைக்கு ஒரு பத்திரத்தை எடுக்க வந்த ஹரி, அவளைப் பார்த்து அசந்து போய் செயலற்று நின்றான்.

அப்போது தான் தூங்கி எழுந்த கார்த்திக் ” அம்மா காபி” என கூவிக் கொண்டே தன் அறையில் இருந்து வெளியே வந்தவன் ‘அவளை’ புடவையில் கண்டு ‘ஆஆஆ’ என வாயில் வாட்டர்பால்ஸை வழிய விட்டு மெய்மறந்து நின்றான்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்