
காதல் – 25
அனந்தியின் சூழ்ச்சியால் அஸ்வதியின் காலில் ஆசிட் பட்டு அவளின் கால் வெந்து, சிவந்து, புன்னாகி போனது , விஹான் அஸ்வதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் , விஹானாவோ அஸ்வதிக்கு எப்படி அவளின் காலில் ஆசிட் பட்டது என்று தங்களுடைய வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆராய சென்றாள்…….
அஸ்வதியை விஹான் தூக்கிக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு விரைந்தான்……
அஸ்வதி மருத்துவமனைக்கு செல்லும் வழி எல்லாம் தன்னுடைய காலின் வலியில் அழுது கொண்டே வந்தாள்……
அவளின் அழுகையை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை……
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அஸ்விம்மா , இன்னும் கொஞ்ச நேரம் தான் ஹாஸ்பிடல் என்று விஹான் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடியே வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தான்……..
அஸ்வதியை மருத்துவமனைக்கு விஹான் அழைத்து வந்து விட்டான்…..
அவளை தன் கையில் ஏந்தி கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான்……
டாக்டர் …..
டாக்டர்………
டாக்டர்…………
நர்ஸ் ……………..
யாராவது சீக்கிரம் வாங்களேன் என்னோட அஸ்வதிக்கு காலுல ஆசிட் பட்டுடுச்சு என்று அவன் கண்களில் நீர் வழிய அழுதுகொண்டே அவளை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினான்……
என்னாச்சு சார்? என்ன பிரச்சனை?
டாக்டர் என்னோட அஸ்வதிக்கு கால்ல ஆசிட் கொட்டிடுச்சு , சீக்கிரம் ட்ரீட்மென்ட் பண்ணுங்க சார் அவ வலியில துடிக்கிறா…….
ஓகே நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க மிஸ்டர் , நாங்க இவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பண்றோம் நீங்க கொஞ்சம் அமைதியா உட்காருங்க சார் என்று அந்த மருத்துவர் கூறினார்…..
நர்ஸ் இவங்கள நீங்க ஐசியு கூட்டிட்டு வாங்க என்று அந்த டாக்டர் கூறவும் அவர் அழைத்த நர்ஸ் அஸ்வதியை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார்…….
அஸ்வதி விஹானின் கைகளை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தாள்……
அந்த நர்ஸ்கள் அவளின் கைகளை அவனின் கைகளில் இருந்து பிரிக்க பார்த்தனர் ஆனால் அஸ்வதி விஹானின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டே இவங்களும் என்கூட உள்ள வரணும் இல்லாட்டி நான் ட்ரீட்மென்ட் பண்ணிக்க மாட்டேன் என்று அஸ்வதி பிடிவாதம் பிடிக்க விஹானும் அவளுடன் சேர்ந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றான்…….
முதலில் ஆசிட் பட்ட அவளின் பாதகங்களை சுத்தமான நீரில் அந்த ஆசிட் போகும் வரை நன்றாக கழுவினார்கள் பிறகு அவளின் பாதங்களை சுத்தமான துணி வைத்து துடைத்தனர்……..
மருத்துவர்கள் அவளின் கால்களுக்கு ட்ரீட்மென்ட் செய்யும்போது அஸ்வதி வலியில் துடித்து விட்டாள் இதை பார்த்து பொறுக்க முடியாத விஹான்….
டாக்டர் என்னோட அஸ்வதிக்கு அனஸ்தீசியா கொடுத்திடுங்க, அவ இப்படி வலியில துடிக்கிறத என்னால பாக்க முடியல என்று அவன் அவளின் கைகளை பிடித்து கொண்டு அழும் குரலில் கூறினான்…….
அந்த மருத்துவர்களும் விஹான் கூறியவாரே அஸ்வதிக்கு அனஸ்தீசியா கொடுத்தனர்…….
மருத்துவர்கள் கொடுத்த அனஸ்தீசியாவின் வீரியத்தில் அஸ்வதிக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது , அவள் மயங்கும் சமயத்திலும் விஹானின் கைகளை பிடித்துக் கொண்டு……..
விஹான் என்னைய விட்டு போயிடாதீங்க இங்கேயே இருங்க என்று கூறி அழுதாள் ……..
நா உன்ன விட்டு எங்கம்மா போவேன்? நீ இல்லன்னா நா ஒன்னும் இல்லம்மா…… உனக்கு ட்ரீட்மெண்ட் முடியிற வரைக்கும் நா உன் கூட இங்கேயே தான் இருப்பேன் இப்ப நீ நிம்மதியா தூங்கு என்று விஹான் அஸ்வதியின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான் அதில் அஸ்வதியின் கண்கள் மயக்க நிலைக்கு சென்று விட்டது…….
அஸ்வதியின் கால்களில் உள்ள ஆசிட்டை முழுவதுமாக துடைத்துவிட்டு வலி நிவாரணி கிரீம் போட்டுவிட்டு அவளது இரண்டு பாதங்களிலும் பெரிய பஞ்சு வைத்து காற்று போகும் அளவிற்கு வைத்து பிளாஸ்டர் போட்டு விட்டனர்……….
மிஸ்டர் விஹான் உங்களோட மனைவிக்கு கால்ல ரொம்ப கான்சென்ட்ரேட் ஆசிட் பட்டு இருக்கு , அதான் அவங்க பாதம் ரெண்டும் இப்படி வெந்து போய் இருக்குது , நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நா ட்ரீட்மெண்ட் பண்ணி கிரீம் போட்டு விட்டிருக்கிறேன் அண்ட் கொஞ்சம் கீரிம் , மெடிசின்ஸ் உங்களுக்கு நா எழுதி தரேன் அத நீங்க ஒரு வாரத்துக்கு குடுங்க அண்ட் இவங்கள ஒரு வாரத்துக்கு நடக்க விடாதீங்க அப்பதான் இவங்களுக்கு காலுல உள்ள காயம் சீக்கிரம் ஆறும் , இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க கண் முழிச்சிடுவாங்க டேக் கேர் விஹான் என்று கூறிவிட்டு அந்த மருத்துவர் சென்று விட்டார்…….
விஹான் அஸ்வதியின் அருகில் அமர்ந்து அவளின் கைகளை பிடித்து கொண்டு அவனின் முகத்தில் வைத்துக்கொண்டு சோகமாக அமர்ந்து கொண்டிருந்தான் ……
அப்பொழுது…… அவனின் போன் அடிக்கவும் அதை எடுத்துப் பார்த்தான் விஹானா தான் போன் செய்திருந்தாள் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தான்……
மறுமுனையில் விஹானா கூறியதை கேட்ட விஹானிற்கு கோபம் தலைக்கேறி அவன் கண்கள் சிவந்து கைகளில் உள்ள நரம்பு எல்லாம் புடைத்தது………
விஹானா நீ போன வை நா வீட்டுக்கு வந்து பாத்துக்குறேன் என்று அவன் கூறிவிட்டு மயக்கத்தில் இருக்கும் அஸ்வதியை பார்த்தான்……..
நீண்ட நேரம் அழுதமையால் அவளின் கண்கள் வீங்கி போயிருந்தது…..
அவளின் மூக்கும் அழுதழுது சிவந்து போயிருந்தது …….
உதடுகள் இரண்டும் காய்ந்து போயிருந்தது …..
வியர்வையில் அவளின் நெற்றியில் அவளது முடிகள் ஒட்டிப் போயிருந்தது….
அவனின் கனவு தேவதை, இதயராணி , ஊன்,உயிர் என எப்பொழுதும் அவனை பார்க்கும் பொழுதெல்லாம் சிரித்த முகமாக வலம் வருபவள் இப்பொழுது இப்படி இந்த நிலையில் இருக்கிறாளே என்று நினைக்கும் போது அவளின் இந்த நிலைக்கு காரணமானவர்களை நினைத்து அவனின் நெஞ்சம் எரிமலையாய் கொதித்தது…….
தான் தத்து எடுத்து வளர்த்த மகள் இன்று மருத்துவமனையில் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள் என்று துளியும் கவலை இல்லாமல் அனந்தியும், சுலோச்சனாவும் அஸ்வதிக்கு அடிபட்டுவிட்டது என்று எண்ணி மகிழ்ச்சியில் இனிப்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்……
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அஸ்வதி கண்விழித்து பார்த்தாள்……
சோகமே உருவாக விஹான் அவள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தான்…….
அஸ்வதி மெதுவாக விஹானின் கைகளை அசைத்தாள் …….
அஸ்விம்மா கன்னு முழிச்சிட்டியாம்மா? இப்ப வலி பரவாயில்லையா?
நீங்க என் பக்கத்துல இருந்தா எனக்கு வலியே தெரியாது விஹான் என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…….
அஸ்வதியின் சிரிப்பை பார்த்த விஹான் அவளை இருக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்………
அவனின் தவிப்பை புரிந்து கொண்ட அஸ்வதி எனக்கு ஒன்னும் இல்ல விஹான் , அச்சோ நீங்க ஏன் அழுகுறீங்க ?கண்ண தொடங்க என்று அவனின் கண்களை அஸ்வதி துடைத்து விட்டாள் …….
விஹானும் அஸ்வதியும் கட்டிப்பிடித்துக் கொண்டும், காதலாக பேசிக்கொண்டிருப்பதை பீவி பார்த்து விட்டார்…….
பிறகு டாக்டர்கள் வரவும் விஹான் மற்றும் அஸ்வதி விலகி அமர்ந்தனர்……
பீவியும் மருத்துவர்களின் பின்னாலே அந்த அவசர சிகிச்சை பிரிவிற்குள் வந்தார்……
இப்ப எப்படி பீல் பண்றீங்க மிஸ்சஸ் அஸ்வதி கால்ல இப்போ பெயின் அதிகமா இருக்கா? கம்மியா இருக்கா?
முன்ன இருந்ததை விட இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சு இருக்கு டாக்டர் ……
நல்ல இம்ப்ரூவ்மெண்ட் மிசஸ் அஸ்வதி , இந்த கிரீம் அண்ட் இந்த டேப்லெட் ஒரு வாரத்துக்கு கண்டினியூ பண்ணுங்க அப்புறம் ஒரு வாரம் கழிச்சு செக்கப் வாங்க உங்களுக்கு சரியா போயிடும் என்று அந்த மருத்துவர் அந்த மருந்து சீட்டை நீட்டவும் தேவராஜ் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு மருந்து வாங்க சென்றார்…….
பீவி அஸ்வதியின் தலையை மெதுவாக வருடி விட்டார்……
அஸ்வா கண்ணா இப்போ கால் வலி பரவாயில்லையாமா?
முன்ன இருந்ததுக்கு இப்போ ரொம்ப வலி இல்லம்மா , நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எனக்கு இந்த காயம் சீக்கிரம் சரியா போயிடும் என்று அவள் அவரை பார்த்து அழகாக சிரித்தாள்……
டாக்டர் நா என்னுடைய அஸ்வதிய இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா?
தாராளமா கூட்டிட்டு போலாம் மிஸ்டர் விஹான் , ஆனா ஒரு வாரத்துக்கு இவங்களோட காலு தரையில படக்கூடாது அப்படி மீறி பட்டுச்சு அப்படின்னா அவங்க கால்ல செப்டிக் ஆயிடும் திரும்பவும் காயம் அதிகமாயிடும்……..
புரியிது டாக்டர் நா என்னோட அஸ்வதிய பத்திரமா பாத்துக்குறேன் டாக்டர் …….
அப்போ சரி நீங்க தாராளமா இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்……
தேங்க்ஸ் டாக்டர்……
விஹான் மற்றும் அஸ்வதியை சேர்த்து பார்க்கும் போது பீவிக்கு ஏதோ புரிவது போல இருந்தது……
அம்மா நா அஸ்வதிய தூக்கிட்டு வரேன்ம்மா , நீங்க கார் கதவை கொஞ்சம் திறந்து வைங்கம்மா என்று விஹான் கூறவும் பீவி கார் கதவை திறந்து வைத்தார்……
விஹான் அவளை தூக்கிக்கொண்டு மெதுவாக பூப்போல காரில் அமர வைத்தான்…….
விஹான் கார் ஓட்ட அஸ்வதி பின் சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தாள்…..
விஹான் அஸ்வதியின் கார் முன்னால் செல்ல தேவராஜ் ,பீவி ,சித்திக் மூவரின் கார் அவர்களின் காரை பின் தொடர்ந்து வந்தது……
அவர்கள் அனைவரும் தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டனர்…..
விஹான் அஸ்வதியை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்……
அவர்கள் இருவரும் வருவதை பார்த்த பின்ன விஹானா ஓடிவந்து அஸ்வதியை பார்த்து அழுதாள்……
அட விஹானா எனக்கு தான் ஒன்னும் ஆகலல்ல அப்புறம் ஏன் அழுகுற? கண்ண தொட விஹானா என்று அஸ்வதி விஹானாவின் கண்களை துடைத்து விட்டாள்……
சரி அண்ணா அஸ்வதிய நம்ம ரூமுக்கு கூட்டிட்டு வா , அஸ்வதி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று விஹானா கூற விஹான் அவளை தூக்கிக்கொண்டு தங்களின் அறைக்கு சென்றான்……..
அஸ்வதியை தன்னுடைய பெட்டில் படுக்க வைத்து விட்டு அவளின் கால்களில் டாக்டர் கொடுத்த க்ரீமை தடவி விட்டான்…….
அஸ்விம்மா கொஞ்ச நேரம் நீ தூங்கு நா உன் பக்கத்துலயே உட்கார்ந்து இருக்கிறேன் சரியா……
எனக்கு கொஞ்சம் தண்ணி கொடுங்க விஹான்……
விஹான் அவளுக்கு பருக தண்ணீர் கொடுத்தான் அதை குடித்துவிட்டு விஹானின் முகத்தை பார்த்தவாரே அஸ்வதி உறங்கினாள்……
விஹான் அஸ்வதியின் பாதங்களில் விசிறியை வைத்து விசிறி விட்டுக் கொண்டிருந்தான்……..
பிறகு அஸ்வதி அருகில் அமர்ந்து கொண்டு அவளின் கைகளை பிடித்துக் கொண்டே அவளின் முகத்தை விஹான் பார்த்துக் கொண்டிருந்தான்…..
அப்பொழுது அவனின் அறை வாசலில் யாரோ நிற்பது போல தோன்ற விஹான் திரும்பி பார்த்தான்……
அவனின் தாயார் பீவிதான் நின்று கொண்டிருந்தார்…..
அவரை அங்கே எதிர்பார்க்காத விஹான் அதிர்ச்சியாகி அப்படியே நின்றான்…….
அம்மா…..
அம்மா …..
அது வந்து…..
விஹான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்னோட ரூமுக்கு வா என்று கூறிவிட்டு அவர் சென்றார்…….
என்ன பேசப் போகிறார் ?
என்ன நடக்கப் போகிறது?
பொறுத்திருந்து பார்ப்போம்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

