Loading

இழையின் ஒவ்வொரு வார்த்தையும் ஆடவன் மனதில் தித்தித்து தேன் வார்த்திருக்க உணர்வுகளின் குவியலாக மாறியிருந்தவனின் சொற்களையும் இழை களவாடியிருக்க எதையும் பேசும் நிலையில் இல்லாத வசீகரன் ஆல்பத்தையும் பென்ட்ரைவையும் எடுத்து பெட்டியில் பத்திரபடுத்தினான்.

இழையிடம் எத்தனையோ பேச எண்ணி இருந்தவனின் சிந்தையை சிறையெடுத்திருந்தவள் உடன் மொழியையும் வசபடுத்தியிருந்ததில் வார்த்தைகளுக்கு பஞ்சமாகி போயிருந்தது.
சொல்லபோனால் இத்தனை வருடங்களாக அவளுக்கான காத்திருப்பை தேடலை எப்படி பேசுவது, எங்கிருந்து தொடங்க, எங்கு முடிக்க, எதை பேச என்று புரியாத பித்து நிலை!!

சாரதியின் திருமணம் தொட்டே தன்னிடம் மட்டுமே ஏன் அவளது விலகல் என்று புரியாமல் இருந்தவனுக்கு அவர்களின் நிச்சயத்தில் ஜீவியை பார்த்ததும் விஷயம் பிடிபட்டது.
“என்னடா பண்ணிவச்சிருக்க வசீ?” என்று தன்னையே கடிந்தவனுக்கு அப்போதுதான் அவளது அச்சத்திற்கான காரணம் புரிபட இனி எப்போதும் அவர்களுக்கிடையில் நடந்ததை நினைவுபடுத்தி இழையை சங்கடபடுத்தகூடாது என்று முடிவெடுத்திருந்தான்.

நேரம் இரவு பத்தை நெருங்கி கொண்டிருந்தது.

ஏனோ இத்தனை வருடங்களாக அவளை தேடும் தீவிரத்தில் இருந்தவனுக்கு அவளளவுக்கு தான் காதலிக்கவில்லையோ என்ற எண்ணம் ஒருபுறம் எழுந்தாலும் மறுபுறம் நெஞ்சம் ததும்ப அவள் காதலில் திளைத்து இன்றைய நாளை மறக்கமுடியாததாக மாற்றியிருக்கும் மனைவிக்கும் தன் காதலை தெரிவிக்கும் தினம் மறக்க முடியாததாக அமைய வேண்டும் என்ற முடிவெடுத்தான்.

இப்போது கால்கள் தரையில் படாத தன்னிலை தொலைத்து மொழி மறந்திருக்கும் நிலையில் அவசரப்பட்டு சொதப்பிவிடகூடாது என்று இழை பேசியவற்றை மனதினுள் அசைபோட்டவாறு அமர்ந்திருந்தான்.

அன்று அவள் அப்பாம்மாவுக்காக திருமணம், பிடித்தம் என்று சொன்னது நினைவு வரவும் தனக்குள் சிரித்துகொண்டான். கானொளியில் அடைமழையாக பேசியவள் இப்போது என்ன செய்யபோகிறாள் என்ற ஆர்வம் அதிகரித்தது.

அடுத்த சிலநிமிடங்களில் தன்னை ஒருவாறு மீட்டேடுத்தவன் அறையில் இருந்த அவள் புகைப்படத்தின் முன் நின்றான்.

“இவ்ளோ லவ் வச்சுட்டு என்னை கண்டுக்காம பிடிகொடுக்காம சுத்தியிருக்க நீ?” என்றவனுக்குமே அவளிடம் சீண்டி விளையாட பேராவல் தோன்றிட ஆவலோடு காத்திருந்தான்.

மற்றொரு அறையில் இழையை அவள் சித்திகள் அலங்கரித்து கொண்டிருக்க அவளோ இனிய படபடப்புடன் அமர்ந்திருந்தாள். ஏதோ ஒரு தைரியத்தில் முடிந்தவரை இதை பெற்றோர் பார்த்துவைத்த திருமணமாக மாற்றியிருந்தவள் இன்று வசீகரன் கேட்ட கேள்வியில் மொத்தமாக அரண்டு போயிருந்தாள்.

“என்ன யோசனை பிங்கி பிடி” என்று அவள் சித்தி பால் செம்பை கொடுக்க அடுத்த சிலநிமிடங்களில் அறையினுள் இருந்தாள்.

அவள் நுழைந்ததில் இருந்தே மெளனமாக வசீகரன் தன்னருகே இருந்தவளை ரசித்திருக்க அவஸ்த்தையோடு அமர்ந்திருந்த இழை கணவன் பேச்சை தொடங்கினால் என்ன பதிலளிப்பது என்ற பதற்றத்தை மறைத்தவாறு “உங்களக்கு பால்” என்று டம்பளரை நீட்டினாள்.
பாலை அருந்தியவாறு “நெர்வஸா இருக்கியா?” என்றான்.

“இல்ல”

“பயமா இருக்கா?”

“ஹான்… சச்சா… ஆம… இல்ல”

“ஆமாவா இல்லையா?”

“இல்ல” என்ற மெல்லிய தலையசைப்பு.

“அப்படி தெரியலையே உன்னை ஏதோ டிஸ்டர்ப் பண்ணுது என்னன்னு சொல்லு?” என்று கேட்க அவளிடம் கனத்த மௌனம்.

“கேட்குறேன்ல சொல்லுமா?”

“அது… அதுவந்து… என்னோட ரூம்ல இவ்ளோ வருஷமா நான் தனியாவே பழகிட்டேன்… இதுவரை யார் கூடவும் ரூம் ஷேர் பண்ணினதில்லை அதான் கொஞ்சம்..” என்று தயக்கத்தோடு நிமிர்ந்தவள் அவன் பார்வை மாற்றத்தை கண்டு,

“இல்ல இன்னைக்கு புதுசா அப்படியிருக்கு ஆனா போக போக… ஐ மீன்..” என்று தொடங்கியவள் தன் கரம் வசீயிடம் சிக்கியிருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்திவிட்டாள்.

“எனக்கு புரியுது இழை நானும் இதுவரை யார்கூடவும் ரூம் ஷேர் பண்ணினதில்லை… அதுக்காக பக்கத்து ரூம்க்கு போகமுடியாது இல்லையா?” என்று கேட்கவும்

“அச்சோ அப்படியில்ல” என்றவளிடம் “தட்ஸ் ஓகே நம்ம பசங்க வந்தபிறகு உனக்கு இப்படி ஃபீல் ஆகாது… கவலையை விடு” என்றவன் பாதி குடித்து மீதியை அவள் கையில் வைத்தான்.

“ஹான்” என்றவளின் பார்வையில் வசீகரமாய் புன்னகைத்தவன், “ஏன் உனக்கு குழந்தைங்க வேண்டாமா பிடிக்காதா?”

“பிடிக்கும்” என்றவள் தன் செம்மையை மறைக்க டம்பளரின் முகம் கவிழ்ந்தாள்.

“சரி சொல்லு எத்தனை குழந்தைங்க வேணும்… நீ என்ன ப்ளான் வச்சிருக்க?” என்றதும் குடித்துகொண்டிருந்த பால் புரைக்கேறியது.

“மெதுவா? என்ன அவசரம்” என்றவன் இருமியவளின் தலையை தட்டிட “இதென்னடா கேள்வி?” என்பது போல பார்த்தவளுக்கு காணொளியில் பேசும்போது இருந்த தைரியம் மொத்தமாக வடிந்து போனது.

“இப்போ சொல்லு என்ன ப்ளான் வச்சிருக்க?”

“ப்ளான்னா? இல்ல ஒன்னு… மில்லை…ங்க..”

“ஓகே எத்தனை குழந்தைங்கன்னு மெதுவா யோசிச்சு சொல்லு அதுக்குமுன்ன என்னை பிடிச்சிருக்கான்னு சொல்லு?” என்றவனின் வெம்மை அவள் செவியில் சுழலவும் “பிடிச்சிருக்கு” என்றாள்.

“குட்” என்று மெச்சுதலாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “எதனால?” என்று கேட்கவும்
அதை எதிர்பாராதவள் ஒருநொடி நிதானித்து பின்

“அது… அதுவந்து… அப்பா அம்…மாக்கு பிடிச்சதால… எனக்கும்..” என்று வசீயை பார்த்தவளுக்கு வியர்க்க தொடங்கியது.

இருக்காதா பின்னே! அன்று தெரியாமல் காதல் சொன்னதற்கே எப்படி பேசினான் இப்போது தெரிந்தால் என்னாவது? அதைவிட அன்றைய பேச்சை நினைவு கூர்ந்தால் நிச்சயம் ஸ்வேதாவை தொட்டு மீளும். அது தேவையில்லாமல் வசீகரனின் ரணத்தை கிளரும்.

இனி தேவையின்றி தங்கள் வாழ்வில் ஸ்வேதாவின் பேச்சு வருவதோ கடந்த காலத்தில் உழன்று நிகழ்காலத்தை தொலைக்கவோ அவள் விரும்பவில்லை.

எப்படி பேச்சை தவிர்ப்பது என்ற சிந்தனையில் இருந்தவளுக்கு “இழை பேசாம தூக்கம் வருதுன்னு சொல்லி தூங்கிடு” என்று மனசாட்சி கூறவும்

“எனக்கு ஒன்னு சொல்லணும்?”

“எனக்கும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”

“என்ன சொல்லுங்க?”

“அது ஒண்ணுமில்ல நீ எப்படி உங்கப்பா அம்மாக்காக கல்யாணம் செய்துகிட்டியோ அதேபோல தான் நானும்…” என்றவனின் கண்கள் புன்னகைக்க அதை கவனிக்காதவள்

“என்ன சொல்றீங்க?”

“ஆமா இழை என்னதான் நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகி இருந்தாலும் உன்னை பற்றி எனக்கு தெரியாது என்னை பற்றி உனக்கு தெரியாது… அப்பா அம்மா சொன்னதுக்காக நாம ஒத்துக்கிட்டோம்…”

“அதுக்காக இன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு ஒன்னும் கட்டாயம் கிடையாது. உனக்கு நான் என்ன படிச்சிருக்கேன்னுகூட தெரியலை எனக்குமே நீ டென்டிஸ்ட்ங்கிறதை தவிர வேற எதுவும் தெரியாது. அதனால் நாம மெதுவா பேசி பழகி புரிஞ்சுட்டு அதுக்கு அப்புறம் குழந்தை பெத்துக்கலாம் உனக்கு ஓகே தானே?” என்று கேட்க இழைக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாத நிலை.

“ஓகேவா?”

“ஹ்ம்ம்”

“சரி உனக்கு தூக்கம் வந்தா படுத்துக்கோ.. நான் லைட் ஆஃப் பண்ணிடுறேன்”

“இல்ல வேண்டாம்..”

“என்னது?”

“லைட் ஆஃப் பண்ண வேண்டாம் எனக்கு பயமா இருக்கும் எப்பவும் லைட் போட்டுட்டு தான் தூங்குவேன்..”

“நிஜமாவா?”

“ஆமா தனியா இருக்கிறதால கொஞ்சம் பயமா இருக்கும்..”

“நான் கூட இருக்கப்போ உனக்கு என்ன பயம்?”

“ப்ளீஸ் இன்னைக்கு ஒருநாள் மட்டும்..”

“ஆர் யூ ஷுர்?”

“எஸ்”

“அப்புறம் ஆஃப் பண்ண சொன்னா பண்ண மாட்டேன்.. யோசிச்சுக்கோ..”

“சொல்ல மாட்டேன்..” என்றவள் சுவரோரமாய் படுத்துக்கொண்டாள்.

“நீங்க தூங்கலையா?”

“இல்ல எப்பவும் ட்ரிப் போயிட்டு வந்தா அப்புவும் ஜித்துவும் கை காலுக்கெல்லாம் சொடுக்கெடுத்து மசாஜ் பண்ணிவிடுவாங்க இந்தமுறை கல்யாண பிஸில செய்யலை அதான் தூக்கமே வரமாட்டேங்குது… நான் கொஞ்சநேரம் கழிச்சு படுக்கறேன் நீ தூங்கு..” என்றவன் கைகளை நெட்டிமுறித்து உடலை வளைத்தான்.

வசீ கேட்டபின் அவன் வேலை குறித்து அறிந்து வைத்திருந்தவள், “நான் வேணும்னா உங்களுக்கு மசாஜ் பண்ணட்டா?”

“உனக்கு தெரியுமா?”

“இல்ல தெரியாது நீங்க சொல்லி கொடுத்தா அதேபோல செய்வேன்..”

“இல்ல பரவால நீ தூங்கு ஐ கேன் மேனேஜ்..” என்றவன் தோள்களை பிடித்துக்கொள்ளவும்,

“இல்லைங்க எனக்கு தூக்கம் வரலை நான் ஹெல்ப் பண்றேனே..”

“ஷுர்..”

“ஹ்ம்ம்” என்றவள் வசீயை அமர்த்தி கணவனின் விரல்களுக்கு சொடுக்கெடுக்க வசீகரனோ அவளை அள்ளி முத்தாடும் எண்ணத்தை கட்டுபடுத்தி தன் விரல்களோடு ஒருவித ரிதத்தோடு கோர்த்து பிரியும் அவள் விரல்களின் அழகையும் மென்மையையும் ஆராய்ந்திருந்தான்.

அவன் பின்புறமாக வந்தவள் சட்டையின் மீதே அவன் தோள்கள் இரண்டையும் பிடித்துவிட இமைமூடி ரசித்திருந்தவன் “என்ன பண்ற?” என்றான்.

“மசாஜ் பண்றேங்க..”

“இதுவா?”

“ஏன் என்னாச்சு?”

“இப்படி வா சொல்றேன்” என்றவன் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு சட்டையின் இருபட்டனை கழற்றிவிட்டு குப்புறபடுத்தான்.

அவனருகே அமர்ந்த இழையின் கரங்கள் அவன் கழுத்தில் மயிலிராகாக வருடி தோள்களில் அழுத்தம் கொடுத்து பிடித்துவிடவும் அவளருகாமையில் லயித்திருந்த வசீகரன் சிறுக சிறுக சிதறிகொண்டிருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதை கண்டு, “என்னங்க எப்படி இருக்கு ஓகேவா? சரியா பண்றேனா?”

“இல்ல இது சரிபடாது.. நீ மேல வா…”

“மேலயா?”

“ஆமா!! எங்க அதுக்குமுன்ன உன் கையை கொடு பார்ப்போம்” என்று அவள் கையை பிடித்து தன் உதட்டில் வைத்தவன் அவள் கைரேகையில் ஊர்கோலம் நடத்திட கணவனின் மீசை உரசலில் கூசி சிலிர்த்த இழையின் விழிகள் தாமாய் மூடிக்கொண்டது.

“என்னடி இது பஞ்சுமிட்டாய் மாதிரி இவ்ளோ சாஃப்ட்டா இருக்கு..”

“ஹான்..”

“நீ எப்போ பிடிச்சு எனக்கு எப்போ தூக்கம் வர.. பேசாம நீ என்மேல ஏறி நட”

“இல்ல வேண்டாம்.. அது..”

“என்ன வேண்டாம்? சொன்னதை செய்!!” என்றவன் சட்டையை கழற்றிக்கொண்டே,

“வைட் ஷர்ட் நீ ஏறி மிதிக்கும் போது அழுக்காகிட கூடாது” என்றவன் மீண்டும் குப்புறபடுக்க இழை அமைதியாக அவனை பார்த்திருந்தாள்.

“என்ன?”

“இல்ல பனியனும் வைட் கலர்ல இருக்கு.. அழுக்காகிடாதா?”

“அட ஆமால்ல மறந்தே போயிட்டேன்.. தேங்க்ஸ்…” என்றவன் அதையும் கழற்றிவிட்டு படுக்க அப்போதும் சிறு தயக்கத்தோடு அவனையே பார்த்திருந்தாள்.

“என்னம்மா பார்த்துட்டு நிற்கிற சீக்கிரம்!!” எனவும் தயக்கத்துடனே அவன் முதுகில் காலை வைத்தாள்.

“ஒருநிமிஷம் இரு..”

“என்னங்க?”

“இப்படியே ஏறி மிதிக்க போறியா?”

“ஆமா ஏன் கேட்கறீங்க?”

“இல்ல புடவை டிஸ்டர்ப் பண்ணாதா?”

“எதுக்கு?”

“ப்ச் என்ன கேள்விடி இது? புடவை சிக்கி நீ கீழ விழுந்துட்டா என்னாகறது அதான் சேன்ஜ் பண்ணிட்டு வா.. சுடிதார் போடணும்னு அவசியமில்ல ஃபீல் ஃபரி.. நைட் ட்ரெஸ் போட்டுக்கோ..” என்றதும் இழைக்கு திக்கென்றானது.

“என்.. என்ன சொன்னீங்க?”

“நைட் ட்ரெஸ் இருந்தா போட்டுட்டு வா உனக்கு கம்ஃபர்டபிளா இருக்கும்னு சொன்னேன்..”

“என்கிட்டே நைட் ட்ரெஸ் இல்ல..” என்றவளின் பார்வை என்னவோ மேலே சென்றது.

“ஒன்னு கூடவா இல்ல?”

“இல்ல இருக்கு ஆனா நாம நாளைக்கு ஊருக்கு கிளம்பறதால பெட்டியில அடுக்கிட்டேன்.. அது வெளியே இருக்கு..”

“நைட்டி..”

“ஆஅ.. அதுவந்து.. நான் நைட்டி யூஸ் பண்ணமாட்டேன்..”

“தட்ஸ் ஓகே.. இதோ இது போட்டோக்கோ” என்று தன் சட்டையை நீட்டினான்.

“இதுவா…?”

“ஆமா!! போட்டுட்டு வா”

“உங்களுக்கு?”

“பரவால ஐ கேன் மேனேஜ்! நீ போட்டுக்கோ..” என்றதும் சரி என்று ஒப்பனையறையினுள் சென்றவள் வழமைபோல புடவையை மாற்றிவிட்டு அவன் சட்டையை மட்டும் அணிந்துகொண்டாள்.

ஆனால் இப்போது எப்படி அவன்முன் செல்வது என்ற கூச்சம் ஆர்பரிக்க தயக்கத்தோடு நின்றிருந்தவளிடம் “எவ்ளோ நேரம் இழை?” என்று வந்த வசீகரன்,

“என்ன இங்கயே நின்னுட்ட..” என்று கையோடு மனைவியை அழைத்து சென்றவன் கட்டிலில் குப்புறபடுத்துக்கொண்டான்.

சிறு தடுமாற்றத்தோடு ஏறிய இழை ஒரளவு தன்னை நிதானபடுத்தி நின்றாள்.

“என்ன அமைதியா நிற்கிற நட..”

“எப்படிங்க.. எனக்கு பேலன்ஸ் பண்ண முடியல” என்றவள் தத்தளிக்க,

“ப்ச் மேலிருந்து கீழவரை நட..”

“விழுந்துட மாட்டேனா?”

“நான் எதுக்கு இருக்கேன் நீ ஸ்டார்ட் பண்ணு.. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்றதும் அவன் முதுகில் நடக்க தொடங்கியவள் அடுத்த இரண்டாம் நிமிடமே சட்டென திரும்பிய வசீகரன் மீது பூக்குவியலாக விழுந்திருந்தாள்.

விழுந்த வேகத்தில் அவன் முகத்தோடு மோதவிருந்த இழையை லாவகமாக பிடித்தவன் சட்டென அவளிதழ்களை வசபடுத்தி சொற்களில் வடிக்கவியலா காதலை தன் செயல்கள் மூலம் கடத்திட ஆடவனின் வேகத்தில் திண்டாடிபோனாள் மனைவி.

வசீகரனின் ஒவ்வொரு அணுவும் இழையின் காதலில் திளைத்திருக்க தன் ஒட்டுமொத்த காதலையும் அவள் தேகத்தில் வடிக்க தொடங்கியவனின் தேடலில் முற்றிலுமாக தன்னை தொலைத்தாள் பெண்.

கணவன் மனைவி இருவரின் காதலும் சத்தமின்றி அரங்கேற “லைட் ஆஃப் பண்ணிடுங்க” என்று ஆர்பரித்த மனைவியின் கூச்சம் கணவனின் இதழ்களில் வேகமாக அமிழ்ந்து போனது..
இழையின் பேரன்பில் கட்டுண்ட வசீகரன் பெண்ணரசியை விடிய விடிய கொண்டாடி தீர்த்து விடியலை வரவேற்று அவள் மார்பில் துயில்கொண்டான்.

“என்னங்க யாரோ கதவை தட்டறாங்க..” என்றதுமே உறக்கத்தில் தளர்ந்திருந்த வசீகரனின் கரங்கள் மனைவியை முழுதாக அள்ளி இறுக்கிக்கொள்ள அவனதரங்களோ பெண்ணின் செவியை மென்மையாய் கடித்திழுத்து “தட்டிட்டு போகட்டும் விடு..” என்றது.

“விடிஞ்சுடுச்சுங்க..” என்றவள் தற்போது முற்றிலுமாக உறக்கம் கலைந்திருந்தாள்.

“ப்ச் விடியட்டும்டி அதுக்கென்ன?” என்றவனின் மீசை ரோமங்கள் அவள் கழுத்தில் அழுத்தமாக பதிய கூசி சிலிர்த்தவளின் கரங்களும் கணவனை தன்னோடு சேர்த்துக்கொண்டு

“அதுக்கில்..” என்றவளை அதற்குமேல் வசீகரன் பேசவிடவில்லை.

அதேநேரம் மறுவீட்டிற்கு அழைத்து செல்வதற்காக முன்னரே கிளம்பி வந்துவிட்ட திருவேங்கடம் தான் கடுகடுவென ஹாலில் அமர்ந்திருந்தார்.

பின்னே மணி காலை பதினொன்றை நெருங்கி கொண்டிருக்கும் நிலையிலும் மகன் இன்னும் அறையை விட்டு வெளியில் வராதிருப்பதை அறிந்து முகத்தை எங்கே கொண்டு வைப்பது என்று புரியாமல் இருந்தவர் வெளியில் சமையல் நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்.

மறுபுறம் பார்கவியிடம் கேட்டறிந்த நாயகி, அபிராமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை…
“தம்பு பேசினதை வச்சு ரொம்ப பயந்திருந்தோம் கவிக்கா இப்போதான் நிம்மதியா இருக்கு..” என்றவர் பேசிக்கொண்டு இருக்கையிலேயே அங்கு வந்து சேர்ந்தாள் இழையாள்.

பெண்ணின் முகத்தில் குடிகொண்டிருந்த பூரிப்பும், மிளிர்வும் கேள்வியின்றி பதிலை அவர்களுக்கு கடத்தியதில் மருமகளை ஆசையோடு நெட்டிமுறித்தார் நாயகி.

ஆனால் இழைக்கு தான் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை..!!

இத்தனை தாமதமாக அவள் இதுவரை எழுந்ததில்லை. திருமணமான முதல்நாளே அதுவும் நாயகி, அபி அதிகாலையே கிளம்பி இங்கு வந்தபின்பும் அவள் தாமதமாக்கி இருப்பதில் ஏனோ இயல்பாக இருக்கமுடியவில்லை.

“நீங்க எப்போ.. ஸாரித்தை..” என்றவள் பதற்றத்தில் கையில் கிடைத்த பொருட்களை உருட்ட தொடங்கி விட்டாள்.

“எனக்கு ஸாரி வேண்டாம் பேத்திதான் வேணும்..” என்று நாயகி சிரிக்க,

“புதுசா ஸாரிலாம் கேட்கிற அளவு பெரிய மனுஷி ஆகிட்டியா?” என்ற அபி இழையை அணைத்துகொண்டு,

“எங்கக்கா வழக்கமான மாமியார் கிடையாது பிங்கி அவங்க எப்பவும் போலதான் இருக்காங்க.. அதுவும் இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க அதனால் நீ எதுவும் யோசிக்காத புரியுதா?” என்று இருவருக்குமான காலை உணவை கொடுத்து,

“ரூம்க்கு எடுத்துட்டு போய் சாப்பிடுங்க பிங்கி” என்று கூறவும் விட்டால் போதுமென்று அறைக்கு திரும்பியவள் மேஜையில் வைத்து விட்டு தயாராகி கொண்டிருந்த வசீயிடம்

“என்னங்க அத்தை மாமா வந்துட்டாங்க..”

“இவ்ளோ சீக்கிரமாவா?”

“ஆம்..” என்றவளின் படபடப்பை கண்டவன் பின்னிருந்து கட்டிக்கொண்டு, “எதுக்கு இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்க?” என்று முத்தமிட,

“அச்சோ மாமாவும் வந்திருக்கார், அவங்களை வெல்கம் பண்ணாம நான்..” என்றவள் தவிப்பை போக்கி உறவுகளின் முன்னிலையில் நிறுத்தாமல் அவளை கோவிலுக்கு கூட்டி சென்றுவிட்டான்.

மதிய உணவை முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்புவதற்காக காத்திருக்க இழையோ ஒருவித பதற்றத்தோடு அவள் அறையை புரட்டி போட்டுகொண்டிருந்தாள்.

“எல்லாரும் கிளம்பிட்டாங்க என்னடி தேடிட்டு இருக்க?”

“என்னங்க என்னோட பேக் ஏதாவது பார்த்தீங்களா?”

“என்ன பேக்?”

“அது… அதுவந்து… ஒரு முக்கியமான டாக்குமென்ட் வச்சிருந்தேன்”

“எங்க வச்சிருந்த? இங்க தான் வச்சியா இல்ல வேற எங்கயாவதா?” என்ற வசீயின் முகத்திலும் அத்தனை தீவிரம்.

“இங்க தாங்க எனக்கு நல்லா ஞாபகமிருக்கு!!”

“ப்ச் நல்லா யோசிச்சுபாருடி வேற எங்கயாவது வச்சிருக்க போற..”

“இங்கதான் எனக்கு தெரியுங்க… கொஞ்சநேரம் இருங்க நான் எடுத்துட்டு வரேன்”

“டைம் ஆகுது இழை எல்லாரும் காத்திருக்காங்க கிளம்பு நான் புதுபேக் வாங்கி கொடுக்குறேன்”

“இல்ல எனக்கு அந்த பேக் தான் வேணும். ப்ளீஸ் கொஞ்ச நேரம்..”

“அப்படி என்னடி வச்சிருந்த பேக்ல?” என்றவன் அவள் கன்னத்தை கடிக்க, “அது… அது வந்து…” என்ற இழை பதிலின்றி நின்றாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்