
அத்தியாயம் – 32
ராஜலட்சுமி, “ஆமாம் மா நிலா. நீ வந்ததுக்கு அப்புறம் தான் என் விக்ரம் என்னிடம் திரும்ப பேசவே ஆரம்பித்து இருக்கிறான்” என்றார்.
நிலா, “புரியாமல் என்ன சொல்றீங்க ஏன் உங்க கிட்ட அவர் பேச மாட்டாரா?” என்றாள்.
ராஜலட்சுமி மெல்லிய புன்னகையுடன், “அது ஒரு சின்ன பிரச்சனை ஆகிடுச்சு மா”.
“அப்போத்தில் இருந்து அவன் பேசுவதையே நிறுத்திட்டான்” என்று அதற்கு மேல் எதுவும் கூறாமல் மௌனமாகி போனார்.
நிலா மனதுக்குள் இவன் சரியான சைக்கோ தான் போல. பெத்த அம்மா கிட்ட யாராச்சும் இப்படி பேசாம இருப்பாங்களா.
இவனுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. பாவம் இவங்க எவ்வளோ கவலைப்படறாங்க என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்.
மேலும் பேச்சை தொடர்ந்தார் ராஜலட்சுமி, “விக்ரம் சிறுவயதில் இருந்த போது இப்படி எல்லாம் கிடையாது”.
“ரொம்ப சுட்டித்தனமா தான் இருப்பான். அவனோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் இங்கே வந்த புதிதில் எல்லாம் ரொம்ப தனிமையில் தான் இருந்தான்”.
“அதுக்கு அப்புறம் மித்ரா, ஆதித்யா கூட சேர்ந்து விளையாட ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிட்டான்”.
“அவன் ரொம்ப சந்தோஷம்மா எங்க கூட எல்லாம் நல்லா பேசி சிரிச்சு எங்க கூட மிங்கிள் ஆகிட்டான்”.
“மித்ரா, ஆதித்யா ரெண்டு பேரும் எங்களை அப்பா அம்மான்னு கூப்பிடுவதை பார்த்து இவனும் கூட என்னையும் உங்க மாமாவையும் அப்பா அம்மான்னு கூப்பிட ஆரம்பித்தான்”.
“அப்போ எங்களுக்கு அவ்வளோ சந்தோஷமா இருந்துச்சு. அவனுக்கு நாங்க எந்த குறையும் வைக்கலை அப்படின்னு நம்பிக்கை வந்துச்சு. எங்க கிட்ட உரிமையோடு இருந்தான்”.
“ஆதித்யாவையும் மித்ராவையும் சொந்த தம்பி தங்கையா தான் இவன் நினைச்சான் இப்பவும் நினைக்கிறான்”.
“நான் இவனுக்குன்னு எந்த ஒரு குறையும் வச்சதே கிடையாது” என்று தன்னையே மறந்து ராஜலட்சுமி பழைய கதைகளைப் பேசிக் கொண்டே சென்றார்.
நிலா தயக்கத்துடன், “ஒரு நிமிஷம்” என்று குறுக்கிட்டாள். ராஜலட்சுமி நிலாவை நிமிர்ந்து பார்த்தார்.
நிலா, “அப்போ நீங்க அவரோட சொந்த அம்மா கிடையாதா?” என்றாள்.
ராஜலட்சுமி இல்லை என்று தலையசைத்து, “விக்ரமோட சொந்த அப்பாவும் உங்க மாமாவும் அண்ணன் தம்பி”.
“விக்ரமோட அப்பா அம்மா இரண்டு பேரும் ஒரு விபத்துல தவறிட்டாங்க”.
“அப்புறம் தான் விக்ரம் இங்கே வந்து இருந்து இங்கேயே படிக்க ஆரம்பிச்சான். அப்போத்தில் இருந்து எங்க கூட தான் இருக்கிறான்” என்றார்.
நிலா அவள் கேட்க வந்த கேள்வியிலே குறியாக இருந்தாள். நிலா, “அப்போ விக்ரமோட அம்மா விக்கிரம்மை எப்படி கூப்பிடுவாங்க?” என்றாள் ஏதோ ஒரு பயத்துடன் பதட்டமாக.
ராஜலட்சுமி, “விக்ரமோட அம்மா வுக்கு விக்ரம் தான் உயிரே அவங்க கண்ணுக்குள்ள வச்சு தாங்குவாங்க. அவங்க எப்பயுமே விக்ரமை துருவ்னு மட்டும் தான் கூப்பிடுவாங்க”.
“அதனாலேயே அந்தப் பெயரை நாங்க யாருமே விக்ரம் கிட்ட யூஸ் பண்ண மாட்டோம். நாங்க அப்படி கூப்பிட்டா அவன் ரொம்ப டிப்ரஷனுக்கு போயிடுவான்”.
“அவனுக்கு சின்ன வயசுல ஒரு பிரெண்ட் இருந்திருக்கும் போல அவளும் இவனை துருவ் தான் கூப்பிடுவாளாம்”.
“ஒரு வாட்டி நான் அவனை துருவ் கண்ணா அப்படின்னு கூப்பிட்டேன் உடனே அவன் அழ ஆரம்பிச்சுட்டான்”.
“என்னை அப்படி கூப்பிடாதீங்க என்னோட ஃபிரண்ட் அப்படித்தான் கூப்பிடுவா ஆனா இப்போ அவ என் கூட இல்லை”.
“அதேபோல் என் அம்மாவும் அப்படி கூப்பிடுவாங்க அவங்களும் இப்போ என் கூட இல்லை”.
“அதனால் நீங்க என்னை அப்படி கூப்பிடாதீங்க என்னை அப்படி யாரு கூப்பிட்டாலும் என்னை விட்டு அவங்க ரொம்ப தூரம் போயிடுவாங்க அப்படின்னு அழுதான்”.
“அன்னையில் இருந்து இன்னைக்கு வரைக்கும் யாருமே அப்படி கூப்பிடவே மாட்டோம். துருவ் விக்ரம் அப்படி என்ற பெயரே அவனுக்கு புடிக்கலைன்னு சொன்னான்”.
“அதுக்கு அப்புறம் தான் உங்க மாமா விக்ரம் தேவ் அப்படின்னு அவனுக்கு பெயரை மாற்றி வச்சாங்க”.
“அதுக்கப்புறம் நாங்க எல்லாம் தேவ் இல்ல விக்ரம் இப்படித்தான் கூப்பிட ஆரம்பிச்சோம்”.
நிலா, சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டால். அப்போ விக்ரம் சொன்னது எல்லாம் உண்மைதானா அவன் தான் என்னோட உண்மையான திருவ்.
அவன் என் முன்னாடியே இருந்தும் எனக்கு இத்தனை நாளா அது புரியாம போச்சே. அவன் என்னோட துருவ் எனக்காக தான் அப்போ சித்தி வீட்ல வந்து அவ்ளோ கஷ்டப்பட்டான்.
இது தெரியாம அவனை நான் எவ்வளோ அசிங்கப்படுத்தி பேசிட்டேன்.
நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் முதல்ல துருவ் கிட்ட நான் மன்னிப்பு கேட்கணும் என்று யோசித்தால்.
ராஜலட்சுமி மேலும் பேச்சை தொடர்ந்தார், “சின்ன வயசுல இருந்து விக்ரம் எது கேட்டாலும் அதை விட நாங்க அதிகமா தான் கொடுத்திருக்கோம்”.
“அவன் சைக்கிள் கேட்ட பைக் வாங்கி கொடுத்து இருக்கோம் அவன் சின்ன சாக்கிலேட் கேட்டா நாங்க பெரிய சாக்கிலேட் தான் வாங்கி கொடுத்திருக்கோம்”.
“அது மட்டும் இல்ல விக்ரம் ஆதித்யா கூட சண்டை போட்டாலும் நான் ஆதித்யாவை தான் திட்டி இருக்கேன் அடிச்சு இருக்கேன். ஆனா விக்ரமை ஒரு வார்த்தை கூட நான் சொன்னது இல்ல”.
“அவன் மனசுல எந்த ஒரு குறையும் வரக்கூடாது என்று நினைத்து ஒரு ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணி இருக்கோம்”.
“அந்த அளவுக்கு நான் பாசத்தை விக்ரம் மேல் வைத்திருந்தேன் என்னைக்குமே அவன் எங்க பிள்ளை இல்ல அப்படிங்கற அந்த ஒரு எண்ணம் அவனுக்கு வரவே கூடாதுன்னு நினைச்சேன்”.
“நான் மட்டும் இல்ல உங்க மாமா கூட இந்த வார்த்தையை என்கிட்ட சொல்லி இருக்காரு”.
“எந்த ஒரு காரணத்துக்காகவும் அவன் அப்பா அம்மா இல்லை அப்படின்னு கவலைப்படவே கூடாது“.
“ஏன் இப்போ அவன் பேசாம இருக்கறதுக்கு கூட அவர் ரொம்ப மனசு கஷ்டப்பட்டார்”.
“ஆனா நான் இவ்வளவு தூரம் அவனுக்கு பார்த்து பார்த்து பண்ணியும் அவன் மனசுல நான் என்ன குறை வச்சேன் என்று எனக்கே தெரியலை”.
“அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களை விட்டு விலக ஆரம்பிச்சிட்டான். கடைசில ஒரு சின்ன பிரச்சனை இல் அவன் என்னை விட்டு முழுசாவே விலகிப் போயிட்டான்”.
“பல வருஷம் ஆகிடுச்சு என்கிட்ட சந்தோஷமா சிரிச்சு பேசி” என்று சொல்லி முடிக்கும் போழுதே இருவர் கண்களில் இருந்து கண்ணீர் வடித்தோடியது. ஆனால் காரணம் தான் வெவ்வேறு.
நிலா சந்தோஷத்தில் தண்ணீர் விட்டால் ராஜலட்சுமி அதற்கு எதிர் மாறாக கஷ்டத்தில் கண்ணீர் விட்டார்.
நிலா தன் கண்ணீரை உள் இழுத்தவாறு, “அழாதீங்க அத்தை அவங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குமே தெரியலை”.
“ஆனா சீக்கிரம் அவங்க உங்க பாசத்தை கட்டாயம் புரிஞ்சுபாங்க அவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்” என்றாள்.
ராஜலட்சுமி, “நீ சொன்னது மட்டும் நடந்துச்சுன்னா என்னோட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது மா” என்று மனம் உடைந்து பேசினார்.
பிறகு நிலா அவரை சமாதானம் செய்துவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க மனசு போட்டு குழப்பிக்காதீங்க. நான் இதோ வரேன் என்று அவசரமாக மேலே அவள் அறைக்கு சென்றாள்.
ரூமுக்கு சென்ற நிலா வானத்தில் மிதப்பது போல் உனர்ந்தாள். அப்போ இவன் தான் என்னுடைய துருவ்வா.
துருவ் ஏதோ ஓலையில் ஒரு பொருள் செஞ்சு வச்சு இருந்ததா சொன்னான்னே.
அதுவும் இந்த ரூம்ல தானே இருக்கணும் என்று அந்த அறை முழுக்க எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு சென்றாள்.
அப்பொழுது ஒரு டிராயரில் காய்ந்து போன ஓளை ஒன்று வாட்ச் வடிவத்தில் இருந்தது.
அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது மெல்லமாக அதை திருப்பி இருபுறமும் பார்த்தால்.
அதில் ஒருபுறம் நிலா இன்னொரு புறம் துருவ் என்று எழுதியிருந்தது. அதை பார்க்கும் பொழுது தான் அவளுக்கு சிறு வயதில் நடந்தது நினைவுக்கு வந்தது.
விக்ரம் நிலாவை விட்டு பிரிவதற்கு முந்தன நாள் நிலா விக்ரம் இருவரும் பள்ளிக்கூடத்தில் மதியத்தில் வழக்கமாக சந்திக்கும் அந்த மரத்தடி கீழே விக்ரம் அமர்ந்து இருந்தான்.
அப்பொழுது நிலா அங்கு வந்தவள் உனக்காக நான் ஒன்னு எடுத்துட்டு வந்திருக்கேன் என்றாள்.
விக்ரம், “என்னது?” என்றான். நிலா, “அது நீ கண்ணை மூடி உன் கையை நீட்டு அப்போ தான் நான் சொல்லுவேன்” என்றாள்.
விக்ரம் அதே போல் கண்ணை மூடி ஒரு கையை நீட்டினான். நிலா அந்த வாட்ச் வடிவத்தில் இருந்த ஓலையை விக்ரம் கையில் கட்டிவிட்டால்.
விக்ரம் அதை பார்த்து, “சூப்பரா இருக்கு உனக்கு இதெல்லாம் பண்ண தெரியுமா” என்றான்.
நிலா, ”தெரியும் எங்க அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள்.
விக்ரம் அதை கையில் இருந்து கழட்டி அதில் நிலா என்றும் ஒரு பக்கம் துருவ் என்றும் எழுதியிருந்தான்.
அந்த சம்பவம் இப்பொழுது தான் நிலாவுக்கு நினைவிலே வந்தது.
நிலா சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று இருந்தால். முதலில் நான் துருவ் ஐ இப்பவே பாக்கணும் என்று யோசித்தால்.
கண்ணாடி முன்பு நின்று தன் உடைகளை குனிந்து பார்த்தவள் இது நல்லாவே இல்லை என் துருவ்ஐ பார்க்கப் போகும் போது நான் பெஸ்ட்டா போகணும் என்று யோசித்தால்.
பிறகு அலமாரியில் இருந்து ஆசை ஆசையாக எந்த டிரஸ் போடலாம் என்று தேர்வு செய்து கொண்டிருந்தால்.
எல்லா துணிகளையும் எடுத்து கட்டில் மேல் கலைத்து போட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அலமாரியின் கடைசியில் ரிசப்ஷன்னுக்காக விக்ரம் அவளுக்கு வாங்கி கொடுத்த மெறுன் கலர் புடவை இருந்தது.
அதைப் பார்த்தவள் என்னிடம் துருவ் எனக்காக என்று பார்த்து பார்த்து வாங்கி என் கையில் கொடுத்த முதல் புடவை இதுதான்.
நிலா இப்பொழுது தான் அந்த புடவையை ரசித்து பார்த்தால். அந்த புடவை மெருன் கலரில் இருந்தது புடவை முழுக்க குட்டி குட்டி பூக்கள் உடன் கோல்டன் ஜருகையும் கலந்து அழகாக இருந்தது.
அதன் முந்தானியில் துருவ் வெட்ஸ் நிலா என்று பதிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்தவள் கட்டி அணைத்து அழ ஆரம்பித்தாள்.
என்னை மன்னிச்சிடு திருவ் நீ என்கிட்ட சொல்லாட்டாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நீ இந்த பெயரை போட்டு இருக்க.
நான் தான் அதை கவனிக்கவே இல்லை. நான் இதை அப்பவே பார்த்திருந்தால் இவ்வளவு நாள் நீயும் நானும் பிரிந்து கஷ்டப்பட்டு இருக்க வேண்டியதே இல்லை.
நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்து இருக்கலாம். நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
வெகு நேரம் கழித்து கண்களை எல்லாம் துடைத்துக் கொண்டு இதுக்கு மேல் உன்னை நான் காக்க விடமாட்டேன் என்று குளித்து விட்டு வானத்து நீலம் நிறத்தில் ஒரு புடவையை அணிந்து கொண்டாள்.
அதற்கு ஏற்ப அணிகலன்கள் எல்லாம் போட்டு விக்ரமை பார்க்க தயாராகிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது தான் அவள் நினைவில் வந்தது விக்ரம் தன்னிடம் எதுவும் பேசாமல் ஊரிலிருந்து வந்தவுடன் தன்னை விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டான்.
அவன் ஆபீசுக்கு தான் சென்றானா அல்லது வேறு எங்காவது சென்றுவிட்டானா தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது நிலா யார் என்று திறந்து பார்த்தால் அங்கு விக்ரம் நின்றிருந்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா விக்ரம் வந்துட்டானா .. அப்போ இன்னைக்கு ரொமான்ஸ் தான் ..