
நினைவுகள் -8
அன்று…
” ஹாய் மாம்ஸ்… என்ன உங்க மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கு. எந்த ஃபிகரையாவது சைட் அடிச்சுட்டு, திட்டு வாங்கிட்டு வர்றீங்களா…” நமுட்டு சிரிப்புடன் அனன்யா கிண்டலடிக்க…
” என்னது… நான் சைட் அடிச்சு திட்டு வாங்கிட்டு வரேனா… உன் ரைட்ல திரும்பி பாரு. நான் ஒரு பார்வை பார்க்க மாட்டேனான்னு ஒரு கூட்டமே காத்திட்டு இருக்கிறத.” என…
அங்கு விஸ்வரூபன் சொன்னதை போல இரண்டு இளம்பெண்களும், கூட ஒரு பையனும் விஸ்வரூபனை பார்த்துக் கொண்டிருக்க… முதலில் அதிர்ந்த அனன்யா, பிறகு வாய்விட்டு நகைக்கலானாள்.
” மாம்ஸ்… ஆனாலும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ் ஆகாது. அந்த ப்யூட்டிஸ் உங்களைப் பார்க்கலை. அந்த தாத்தாவைப் பார்த்திருக்காங்க.” என்று சொல்லியவள் மீண்டும் சிரிக்க…
“சரி… சரி… விடு. இந்த மாதிரி பல்பு வாங்குவது என்னைப் போல அழகான பசங்களுக்கு சகஜம் தான். அவங்களுக்கு கண்ணு தெரியலை. அதுக்கென்ன பண்றது…” என்று விஸ்வரூபன் பெருமூச்சு விட…
“உங்களைப் போய் நல்லவன்னு நம்பறாங்களே எங்க அம்மா… அவங்களை சொல்லணும்.” என்று அவன் தோளிலே ஒரு அடி போட்டாள் அனன்யா.
“ஏய் அந்துருண்டை… உண்மையிலேயே நான் நல்லவன் தான் நம்புமா.” என்று அந்த நல்லவனில் அழுத்தம் கொடுத்து கண்ணடித்து சிரித்தான்.
அவனின் புன்னகை, அவள் முகத்திலும் தொற்ற, ” ஓகே விளையாட்டு போதும் மாமா. நீங்க ஏன் டென்ஷனா இருந்தீங்க. சொல்லுங்க” என விடாப்பிடியாக கேட்க.
” இல்லை அந்துருண்டை. அங்கப் பாரேன். அந்த அம்மா, பொண்ணை விட்டுட்டு எப்படி இருக்கப் போறோம்னு தவிப்போட இருக்காங்க. ஆனா அந்தப் பொண்ணு ரொம்ப திமிர் பிடிச்சவ போல. எடுத்தெறிஞ்சு பேசுறா.”
விஸ்வரூபன் காட்டிய திசையில் பார்வையை செலுத்தினாள் அனன்யா.
அங்கு ராதிகா, அவளது அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அனன்யாவுக்கு என்னவோ ராதிகாவை பார்த்தவுடனே பிடித்து விட்டது.
” எனக்கு என்னமோ அந்த பொண்ணைப் பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலை. அந்த பொண்ணுக்கு என்ன டென்ஷனோ? எதுவும் தெரியாமல் நாம ஜட்ஜ் பண்ண கூடாது மாமா.” என்றாள் அனன்யா.
” நீ சொல்வதும் சரி தான்… நமெக்கென்ன வந்தது… சரி வா நாம போகலாம்.” என்றவன் அவர்களுக்கான கேட் அருகே அழைத்துச் சென்றான்.
ராதிகாவோ, பெற்றோருடன் துணைக்கு வந்திருந்த விக்கியிடம் திரும்பி, “அண்ணா! பத்திரமா கூட்டிட்டு போங்க. அவங்களைப் பார்த்துக்கோங்க.” என்றவள் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.
“அப்பா… பை பா. அம்மாவைப் பார்த்துக்கோங்க.” என்றவள் அம்மாவை இறுக கட்டிப்பிடித்து, ” என்னையப் பத்தி மட்டும் நினைக்காமல், அப்பாவையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க மா. ஈவினிங் அண்ணியோட பக்கத்து பார்க்குக்கு வாக்கிங் போயிட்டு வாங்க. ரிலாக்ஸா இருங்க மா.” என்றவள், எங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், கட்டுப்பாட்டை மீறி அழுது விடுவோம் என எண்ணியதால் டைம் ஆயிடுச்சு என்று கூறிவிட்டு திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
அவளது தலை மறையும் வரை கையாட்டிக் கொண்டே இருந்தனர் சண்முகமும், சுந்தரியும்…
உள்ளே நுழைந்த ராதிகாவிற்கோ, பெற்றோரைப் பிரிந்து செல்லும் வருத்தம் இருந்தாலும், அதையும் மீறி ஒரு பதட்டம் இருந்தது.
ஏஜெண்டின் உதவியுடன் தன்னுடைய லக்கேஜ்ஜை செக் செய்து விட்டு, போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கேட்டருகே காத்திருந்தாள்.
அனன்யாவின் பார்வை சுற்றிலும் அலைபாய…
” யாரை தேடிட்டு இருக்க?” என விஸ்வரூபன் வினவ…
“அது நாம பாத்தோம்ல அந்த பொண்ணு… அவங்களும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுல தான் வர்றாங்க என்று நினைக்கிறேன். அதான் எங்கேயாவது தெரிகிறார்களா என்று பார்த்தேன்.”
லூசா நீ என்பதுப் போல் அவளைப் பார்த்தவன்,” அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. முன்னப்பின்னே பார்த்ததுல்ல… மறுபடியும் பார்க்க போறீயான்னும் தெரியல. எதுக்கு அந்த பொண்ண பத்தி பேசிட்டு இருக்க. ஸ்டாப் த டாஃபிக்.” என்றவன் அதற்குப் பிறகு வேறுப்பேச்சுக்கு தாவி விட்டான்.
அப்பொழுது தெரியவில்லை இனி எப்பொழுதும் அனுவின் வாயில் அந்தப் பெண்ணின் பெயர் மட்டுமே ஒலிக்கப் போகிறது என்பதையும், இருவரும் நெருக்கமான தோழிகளாகப் போவதையும் அறியவில்லை. அதற்கும் மேலாக அவனது இதயத்தை கொள்ளையடிக்கப் போகிறாள் என்பதையும் அறியவில்லை.
ஃபிளைட்டில் பிஸினஸ் க்ளாஸில் செல்வதால் சிங்கப்பூர் செல்லும் வரை அவளை சந்திக்கவில்லை.
சிங்கப்பூரில் காத்திருக்கும் நேரத்தில், ” மாம்ஸ்… லைட்டா பசிக்குது. ஏதாவது சாப்பிடலாம் வாங்க.” என அனன்யா அழைக்க.
” அடிப்பாவி… ஃப்ளைட் ஏறினதுல இருந்து, ஏதாவது உள்ள தள்ளிட்டே இருந்தீயே… அந்த வாய்க்கு ரெஸ்டே கிடையாதா? அந்த வாய்க்கு மட்டும் வாய் இருந்தது கதறி தீர்த்துடும்.” என்று கிண்டலடித்தவாறே அங்கிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.
” லூசு மாதிரி உளறாதீங்க மாமா.” என்றவள், அங்கு சென்று இருவருக்கும் காஃபியை ஆர்டர் செய்தாள்.
அங்கே காத்திருக்கும் போது திடீரென்று, ” ஐயோ! மாமா.” என கத்த…
“ஏய் எதுக்குடி கத்துற? எல்லோரும் பார்க்குறாங்க.” என்றவன் சுற்றிலும் பார்வையிட.
அவனுக்கு நேர் எதிரே இருந்த டேபிளில் இருந்த ராதிகா, அனன்யாவின் குரலில் நிமிர்ந்துப் பார்த்தவளின் பார்வையில், லேசாக குனிந்து பேசிய விஸ்வரூபனைத் தான் கண்டாள்.
சடக்கென்று நிமிர்ந்து சுற்றிலும் பார்வையிட்ட விஸ்வரூபனின் பார்வையை கவனித்து படக்கென திரும்பிக் கொண்டாள்.
இதெல்லாம் நொடிப்பொழுதில் நடத்துவிட… அனன்யாவோ,
“மாம்ஸ்… இந்தியன் ஃபுட் இல்லாமல் ஹவ் கேன் ஐ மேனேஜ்.” என இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது தனது உணவு பற்றி கவலையாக கேட்க.
அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவன், ” இப்பக் கேளு… உன்னை என் ஃப்ரண்டோட வீட்டில் பேயிங் கெஸ்ட்டா தான் தங்க வைக்கப் போறேன். சாப்பாடு எல்லாம் அவங்களே ப்ரீப்பேர் பண்ணிடுவாங்க. அதனால உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அப்படி இல்லனாலும் அங்க நிறைய இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கு. நம்ம ஊரு சாம்பார் இட்லியிருந்து, பிரியாணி வரைக்கும் உண்டு. அப்புறம் உன்னோட ஐட்டம் பானிப்பூரி வரைக்கும் கிடைக்கும்.”
” அப்ப சரி.” என்றவள் மீண்டும் தனது காஃபியில் கவனம் செலுத்தினாள். அனன்யாவின் கலக்கம் மறைந்தது.
அவளோடது மட்டுமல்ல… ராதிகாவின் முகத்தில் இருந்த கலக்கமும் இப்போது மறைந்திருந்தது.
தனது எதிரே இருந்த நெடியவனின் முகத்தைப் பார்த்தவளின் முகம் ஏனோ அமைதியடைந்தது. ஒரு வழியாக அந்த காஃபி ஷாப்பிலிருந்து கிளம்பியவள், அவள் கூட வந்தவர்களுடன் சேர்த்துக் கொண்டாள்.
அனுவோ, விஸ்வரூபனுடன் கிளம்பி விட்டாள்.
விஸ்வரூபனோ, பிலிப்பைன்ஸில் அவனது ஃப்ரெண்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
கீழே அவனது ஃப்ரெண்ட், ஃபேமிலியோட தங்கி இருக்க… மாடியில் இரண்டு போர்ஷன் இருந்தது. ஒன்றில் இவளுக்காக ஏற்பாடு செய்திருக்க… மற்றொன்றில் நண்பனின் ரிலேஷன் தங்கியிருந்தார்கள்.
விஸ்வரூபன் ஒரு வாரம் அவளுடன் தங்கி இருந்து, அவளுக்கு எல்லா வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து, காலேஜுக்கும் அழைத்துச் சென்று எல்லாம் சரி செய்து விட்டு இந்தியா திரும்பினான்.
இரண்டே நாட்களில் அனன்யா இந்தியாவிற்கு அழைத்து ஹாஸ்டலில் போய் சேர்ந்து கொள்கிறேன் என்றாள்…
ராதிகா ஏஜென்ட் மூலம் பிலிப்பைன்ஸ் வந்து இறங்கியவள் எல்லா ஃபார்மாலிட்டிஸும் முடித்து, ஹாஸ்டலிலும் வந்து சேர்த்து விட்டாள்.
ஒரு அறைக்கு இரண்டு பேர் என் தங்கியிருந்தனர்.
ஆனால் அவளது அறைக்கு தான் இன்னொருவர் வரவில்லை. இப்பொழுது அவள் மட்டுமே…
ஹாஸ்டலைப் பொறுத்தவரை ராதிகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்திய உணவு தான் அங்கு… அவளுக்கு புதிய இடம் என்று கொஞ்சம் மிரட்சியாக இருந்தது. பொதுவாகவே அமைதியான ராதிகா, யாரிடமும் கலகலவென என்று பேசாமல் மெல்லிய புன்னகையுடனே நின்றுக் கொண்டாள்.
ஆனால் காலேஜில் அதே மாதிரி இருக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட ஒருத்தி இருக்க விடவில்லை என்று தான் கூற வேண்டும்.
காதலன் காதலியை சுற்றுவது போல, ராதிகாவேயே சுற்றி, சுற்றி வந்து அவளது எதிர்பாராத அன்பால் திகைக்க வைத்தாள்.
இன்று…
ராதிகாவின் சிரிப்பில் முகம் மலர்ந்த சுந்தரியோ, “இன்னும் ஒரு மாசம் கழிச்சு தான் காலேஜ் சேரணும்னு சொல்லிருந்தே… இப்போ திடுதிடுப்னு போகணும்னு சொன்னதே கஷ்டமா இருக்கு. இதுல விளையாட்டு வேறயா? ஆனால் விளையாட்டுக்குக் கூட குழந்தையோட வம்புக்கு போகாதே. அவங்களுக்கு எதுவும் புரியாது.” என்ற சுந்தரியை பெருமைப் பொங்கப் பார்த்தாள் ராதிகா.
ஆனால் இதே சுந்தரி ஒரு குழந்தையை வெறுப்பாகப் பார்க்கப் போகிறாள் என்பதை அப்போது இருவரும் அறியவில்லை.
” அம்மா… காலேஜ் ஆரம்பிக்க நாள் இருக்கு. அவங்க ஹாஸ்பிடல்லேயே எங்க டாக் வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். இந்த ஒரு மாதம் வேலைக்கு போக சொன்னார். அப்புறம் காலேஜ் ஆரம்பிச்சதும், பார்ட் டைம்மா வொர்க் பண்ண சொல்லியிருக்கார். ஹாஸ்டலும் பக்கத்துல இருக்கிற மாதிரி தான் அரேஞ்ச் பண்ணியிருக்கிறார். சோ நோ ப்ராப்ளம்.”
” சரி கவனமா இரு… இன்னும் அப்பாவைக் காணும்.”
” அப்பாவும், விக்கியண்ணாவும் ஒன்னா தான் வருவாங்க என்று நினைக்கிறேன். அண்ணா வந்து பஸ் ஸ்டாண்ட்ல விடுறேன் என்று சொல்லியிருக்கிறார் மா.”
” சரி மா…” என்றவர், மகள் கிளம்பும் வரை அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
ஒருவழியாக சென்னைக்கு கிளம்பிய ராதிகா, அதிகாலையில் காஞ்சிபுரத்தில் இறங்கினாள்.
ஆட்டோ பிடித்துக் கொண்டு ஹாஸ்டலில் சேர்ந்தவள், அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறைக்குள் நுழைந்தாள்.
ரெஃப்பிரஷ்ஷாகிக் கொண்டு வந்தவள், டாக்டர் சேலவர், வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்த எண்ணுக்கு அழைத்தாள்.
முழு ரிங்கும் அடித்து முடிக்கும் வரை அந்த பக்கம் ஃபோன் எடுக்கவே இல்லை. திரும்பத் திரும்ப நான்கைந்து முறை போட்டவள், பதட்டமாக பிலிப்பைன்ஸில் இருக்கும் டாக்டர் சேலவருக்கு அழைத்தாள்.
“வாட் ராதிகா ? எனிதிங் ப்ராப்ளம்?”
” டாக்… நீங்க கொடுத்த நம்பருக்கு கால் பண்ணேன். பட் நாட் ஆன்சரிங்.” என்று பதற்றத்துடன் கூறினாள்.
“ஹேய் ரிலாக்ஸ் ராதிகா. ஐ வில் ட்ரை ஒன்மோர் டைம் அன்ட் கால் யூ பேக் .” என்று வைத்து விட…
அவருடைய பதிலுக்காக காத்திருக்கத் தொடங்கிய ராதிகாவின் மனமோ, பதட்டத்துடன் உலகையே சுற்றி வந்து விட்டது. ‘ ஒரு வேளை டாக்கோட வற்புறுத்தலால் ஓகே சொல்லிட்டு இப்போ தவிர்க்க பார்க்கிறார்களோ! தன்னுடைய கனவு அவ்வளவு தானா…’ என்று தனக்குள் மறுகிக் கொண்டிருத்தாள்.
இவளது எண்ணவோட்டத்தைப் புரிந்துக் கொண்ட சேலவர் உடனே கால் செய்து விட்டார்.
தயக்கத்துடனே எடுத்த ராதிகாவிடம், “சாரிமா … ” என்று அவளது ஹார்ட் ஃபீட்டை எகிற வைத்தவர், ” ராதிகா அவர் வீட்டில் ஒரு இன்சிடென்ட். அவர் இப்போ பேசுற நிலைமையில் இல்லை. அவர் பி.ஏ கிட்ட தான் பேச முடிந்தது. உன்ன டேரக்டா ஹாஸ்பிடலுக்கு போய் ரிசப்ன்ல விசாரிக்க சொன்னாரு. அவங்க மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லுவாங்க. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிட்டு இன்னைக்கே வேலையில ஜாயின் பண்ணிக்கோ… வீ வில் மீட் அவர் டீன் சூன்.”
” சாரி டாக். உங்களை ரொம்ப தொந்தரவு பண்றேன். அண்ட் தேங்யூ சோ மச் டாக்.”
” நோ மை டியர். உனக்கு அந்த தகுதி இருக்கு. உன் கனவெல்லாம் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள் டியர். ” என்றவர் வைத்து விட…
ஃபோனை வைத்த ராதிகா மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

