Loading

காதல் -16

 

ஒருவாரமாக அவனும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் .. மறவன் ஏதேனும் பேச வந்தால் வேலை இருப்பது போல காட்டி கொண்டு அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள் …

 

அன்று அந்த கேள்வி கேட்டதோடு சரி .. அதன் பின் அவனிடம் பேசுவதையே அவள் தவிர்த்து வந்தாள் .. இறுதியாக அவன் கேட்ட கேள்வி அவனது நினைவுக்கு வந்தது…

 

” நேத்து நீ ஏன் என் அம்மா போட்டோவை பார்த்து சாக் ஆன ” என மறவன் கேட்டதற்கு .. அரண்டு போனவள்… அப்படியே நிலை குலைந்து நிற்க… மறவன் யோசனையாக அவளை பார்த்து வைத்தான்..

 

” என்ன பொய் சொல்லாம்னு யோசிச்சுட்டு இருக்கியா நீ ” என மறவன் கேட்கவும் அவளுக்கு முத்து முத்தாய் வேர்வை துளிகள் பூக்க.. என்ன செய்வது என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு தவிப்பாக நின்று கொண்டிருந்தவளை பார்க்க அவனுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட… ஏதோ பேச வந்தனை கலைத்தது மறவனின் அலைபேசி.

 

” ம்ம் சொல்லு பிரீத்தி.. ”

 

” சரி ஓகே நான் பார்த்துக்கிறேன் ” என்றவன் பேசிக் கொண்டே அவனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

வீட்டிற்குள் இருந்தாலே மூச்சு முட்டுவதை போல தோன்ற , வெளியே உள்ள தோட்டத்தில் சென்று அமர்ந்து விட்டாள்… அந்த இடம் அத்தனை சொர்க்கமாக இருந்தாலும்… சொர்க்கத்திலும் நரகத்தை காட்டுவேன் என்பதை போல.. அவள் முன் சில நிழல் படங்கள் தோன்ற கண்களை மூடி அதை ஜீரணிக்க முடியாமல் திணறி போனாள் சாயா..

 

அதில் இறுதியாக ரத்த வெள்ளத்தில் இருந்த மறனவனின் அம்மாவின் நிலை நினைவிற்கு வர… உடல் நடுங்கி முகத்தை மூடி கொண்டு ” ஆஆஆஆஆஆஆஆ” வென கத்தி விட்டாள்..

 

எத்தனை ஆண்டுகளுக்கு பின்னே அவளது குரல் வெளியேறி இருக்குறது.. அவள் ஒன்றும் பிறப்பிலேயே ஊமை இல்லையே… வாழ்க்கையில் நடந்த சில பல சம்பவங்களால் தான் அவள் ஊமையாகி போனாள்..

 

‘வாயாடி ‘ என பட்டம் பெற்றவளை ஊமையாக்கியது அந்த சம்பவம் .. இதில் அதிகம் பாதிக்க பட்டது தேனு தான்… சிறு வயதில் இருந்து வாய் ஓயாது பேசிக் கொண்டிருக்கும் மகளை ஒவ்வொரு நிமிடமும் ரசித்துக் கொண்டிருப்பார்..

 

கணவன் இருந்தும் இல்லாத நிலை .. அவர் வீட்டில் இருப்பதே அரிது.. இருந்தாலும் அத்தனை தூரம் மனைவியுடன் பேசும் ரகம் இல்லை அவர்.. அவரது மறைவுக்கு பின்பு மொத்தமாக நிலை குழைந்து போன தேனுவை தேற்றி ஆறுதல் செய்தது சாயாலி தான்..

 

இப்போது தன் மகள் பேச மாட்டாளா…  அப்போது பேச மாட்டாளா என ஒவ்வொரு நொடியும் அவள் வாயை பார்த்து கொண்டு அவளது குரலுக்காக ஏங்கி கொண்டிருக்கும் தேனுவிற்கு இன்று வரை விடிவு காலம் பிறக்கவில்லை..

 

சத்தத்தை கேட்டு மாடியில் இருந்து இறங்கி வந்தான் மறவன்… அவசரமாக தோட்டத்தை அடைய.. அங்கு சாயாலி தன் தொண்டையை பிடித்து கொண்டு அதிர்ந்த வண்ணமே அமர்ந்து இருந்தாள்..

 

” யாழி …. ” என அழைத்து கொண்டே ஓடி வந்தவன்.. அவளது அதிர்ந்த முகத்தை பார்த்து… ” ஹேய் யாழி இங்க பாரு… இப்போ நீ பேசுன தானே ” என அவள் கன்னத்தை உலுக்க…

 

கண்கள் கலங்கி மறவனை பார்த்தவள்.. தொண்டையை பிடித்து கொண்டு வலிப்பது போல செய்து காட்ட.. அதை புரிந்து கொண்டவன்… ” சீக்கிரம் வா ஹாஸ்பிடல் போகலாம் ” என அவளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்…

 

அவளும் மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக அவனுடன் காரில் அமர்ந்து கொண்டாள்… ‘ஒரு வேளை பேச்சு வந்து விட்டால் என்ன செய்வது.. மறவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூட வேண்டுமே… கடவுளே இந்த பேச்சு மட்டும் தனக்கு வரவே கூடாது.. ஊமையாகவே இருந்து விடுகிறேன் ‘ என அவசரமாக கடவுளிடம் பிராத்தனையை வைத்தாள்.

 

இத்தனை நாளும் தேனுவின் மகள் சாயாலியாக இருந்த போது தனக்கு பேச்சு வராதா என ஏங்கி கொண்டு இருந்தவள்… இதோ மறவனின் மனைவியாக பேச பயந்து போனாள்…

 

ஏன் பேசினால் என்ன …? அப்படி என்ன அவன் கேட்டு விட போகிறான்… ? இந்த வினாக்களுக்கு எல்லாம் விடைகள் அவளிடமே..

 

மருத்துவமனை வந்ததும் சாயாலியை அழைத்து கொண்டு அவசரமாக மருத்துவரை சந்திக்க அனுமதி பெற்று அவளை உள்ளே அழைத்து சென்றான்.

 

” வெல்கம் மிஸ்டர் மறவன்… உங்களுக்கு கல்யாணம் ஆனதை கேள்வி பட்டேன்… என்னுடைய வாழ்த்துக்கள் ” என டாக்டர் வரவேற்க…

 

” டேய் கல்யாணத்துக்கு நான் யார் கிட்டையும் சொல்லல டா… இப்ப அதுவா முக்கியம்.. சாயா இவ்வளவு நாளா பேசல டா.. ஆனால் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏதோ பார்த்து பயந்து கத்தி இருக்கா… அதுல அவளுக்கு பெயின் ஆகிடுச்சு டா.. கொஞ்சம் என்னனு பாரு” என பதட்டமாக கூற.. எதிரில் அமர்ந்திருந்த குமரன் சாயாலியை அழைத்து கொண்டு உள்ளே சென்றான்.

 

இவர்களது உரையாடலை பார்க்கும் பொழுதே தெரிந்தது இருவரும் நண்பர்கள் என்று… இதில் மேலும் கலக்கமானது சாயா தான்… நண்பனுக்காக தன்னை சரி படுத்தி விடுவானோ.. அப்படி சரி ஆகி விட்டால்..

 

” ஹலோ மிஸஸ் சாயாலி ” என மூன்று முறைக்கு மேல் குமரன் அழைத்த பின்பே தன்னிலைக்கு வந்தாள் சாயா..

 

‘ம்ம் ‘ என அவன் முகத்தை  பார்த்து தலையை ஆட்டினாள்..

 

” எப்படி திடீர்னு சவுண்ட் வந்தது , எதையாவது பார்த்து பயந்துடீங்களா, இல்ல அதிர்ச்சியான விஷயம் எதுவும் நடந்துச்சா ஆர் ஹாப்பி நியூஸ் ?”  என அவளது குரல் மாற்றத்திற்காக காரணத்தை அவன் கேட்க…. எப்படி உண்மையை கூற முடியும்…

 

மருத்துவரிடமும் வக்கிலிடமும் உண்மையை மறைக்க கூடாது என்ற கொள்கையை மீறி… பொய் கூற முடிவெடுத்தாள் சாயாலி.

 

கைகளை அசைத்து ‘ பயம் ‘ என்று அவனுக்கு செய்து காட்டினாள்..

 

” ஒஹ்.. எதுனால பயம் ”

 

திரு திருவென முழித்தவள்… பின் பூச்சியை பார்த்து பயம் என்பதை போல செய்து காட்டினாள்.. அவளையே யோசனையாக பார்த்த குமரன்..

 

“இட்ஸ் ஓகே… இப்போ பெயின் இருக்கா? ” என அவளது தொண்டையை ஆராய்ந்த வண்ணம் கேட்டான்…. அவளுக்கும் வலி இருக்கவே ஆம் என்பதாக தலை அசைத்தாள்.

 

” வாய திறங்க சாயாலி கொஞ்சம் செக் அப் பண்ணனும் ” என மருத்துவனாக அவனது கடமையை செய்து விட்டவன்… ” ஓகே வாங்க ” என அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான்.

 

மறவன் என்னவாக இருக்கும் என தன் நண்பனையே பார்க்க.. ” ஒன்னும் இல்ல டா கொஞ்சம் பயந்து இருக்காங்க.. அதான் அந்த அதிர்ச்சியில சவுண்ட் வெளியே வந்துருக்கு.. பட் இது ஒரு பாசிட்டிவ் வைப் தான்.. இப்படியே ட்ரை பண்ணா கண்டிப்பா பேச்சு வர சான்ஸ் இருக்கு, இன்னொரு முக்கியமான விஷயம் உன் வைப் பிறவியில் இருந்து ஊமை கிடையாது அதுனால அவங்களை கண்டிப்பா ட்ரை பண்ண சொல்லு , இப்போ தொண்டை வலிக்கு சில மருந்து தரேன் ரெகுலரா ஒன் வீக் போடட்டும்.. அப்பறம் செக் அப் கூட்டிட்டு வா , நல்லதே நடக்கும் மறவா ” என குமரன் பேசி முடிக்க…. சாயாலியின் முகத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தான் மறவன்.

 

” என்ன டா நான் பேசிட்டே இருக்கேன் , நீ அமைதியா இருக்க ” என்றதும்… ” அது ஒன்னும் இல்ல டா.. நீ மெடிசின் கொடு நான் நெக்ஸ்ட் வீக் கூட்டிட்டு வரேன்.. அப்பறம் ஃப்ரீ ஆகவும் உனக்கு கால் பண்ணுறேன் ” என்றவன் இறுகிய முகத்தோடு மருத்துவமனையில் இருந்து வெளியேற… கையில் மருந்துகளுடன் அதீத பயத்துடன் அவனை பின் தொடர்ந்தாள் சாயாலி..

 

காரில் ஏறி அமர்ந்தாலும் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அவன்… இப்போதும் சாயாலி அவனுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தாள்…. அவன் நினைத்தது அவள் பிறப்பில் இருந்து ஊமை என்று .. ஆனால் உண்மை அதுவல்லவே..

 

இருவரும் வீடு வந்து சேர மூர்த்தி அவர்களை வாசலோடு பிடித்து கொண்டார்.. ” டேய் என்னடா ஆச்சு மருமகளுக்கு ஏதோ முடியலையாம் .. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனதா வாட்ச் மேன் சொன்னான் ” என பதறிய வண்ணம் கேட்க… அவர் கேள்விக்கு சற்றும் பதில் கூறாமல் அறையை நோக்கி கோபமாக போனவனை கண்டு தலையில் அடித்து கொண்டவர்.

 

பின்னால் வந்த சாயாலியிடம் இருந்து அனைத்தையும் அறிந்து கொண்டார்.. எளிய முறையில் சைகையில் அவருக்கு புரிய வைத்து விட்டு.. மேலே சென்று தான் ஓய்வு எடுப்பதாக கூறி விட்டு கால்கள் நடுங்க மேலே சென்றாள்…

 

மேலே செல்ல செல்ல மனம் பதறியது… மெதுவாக அறையை திறந்து உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் மறவனின் கைச்சிறைக்குள் இருந்தாள் பெண்ணவள்..

 

இதுவரை அத்தனை நெருக்கத்தை அவள் உணர்ந்ததில்லை.. அவளுக்கு மூச்சு முட்டும் அளவிற்கு அவளை நெருங்கி இருந்தான்… கண்களில் காதலும் இல்லை மோகமும் இல்லை.. பின்னே என்னவாக இருக்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை..

 

இருவரது உடலும் ஒன்றோடு ஒன்றாக உரசிக் கொள்ள.. கோவத்தில் இருந்த மறவனுக்கு அவனது செயல் புரியாமல் போக… அவனது நெருக்கத்தில் இருந்த பெண் மானுக்கு தான் மூச்சு முட்டியது.. அவனது நெருக்கம் ஒரு வித அவஸ்தையை கொடுக்க.. பெண்ணிற்கு உரித்தான உணர்ச்சிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர தொடர… அவளும் தன் சுய உணர்வை இழந்து ஒரு விதமான மோன நிலைக்கு சென்று விட்டாள்.

 

அவளது நெற்றி முடியை மெதுவாக கோதியவன், கன்னம் தடவி, செவ்விதழ் வருடி.. தடையை பிடித்து, கழுத்தில் கூசி கீழிறங்க போக… சட்டென்று அவனது கைகளுக்கு அணை இட்டாள் சாயா.

 

மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்க… அதிர்ந்து போன முகத்துடன் தன் கணவனை பார்க்க… அவனது கண்களோ வேறு செய்தியை சொன்னது.. அதுவரை இருந்த ஒரு வித மோன நிலை கலைந்து எச்சில் விழுங்கிய வண்ணம் அவனை பார்த்தாள்..

 

” இன்னும் எவ்வளவு உண்மையை என்கிட்ட மறைச்சு வச்சிருக்க யாழி ” என அவள் கழுத்தை தாண்டி செல்ல முற்பட்ட கரம் இப்போது அவளது கன்னத்தில் இருந்தது.

 

அவனது கேள்வியில் தூக்கி வாரி போட்டது அவளுக்கு.. ” சும்மா சொல்லு சாயா… உன் நடவடிக்கையில எத்தனை மாற்றம் தெரியுமா… இந்த வீட்டுக்குள்ள நீ  வரும் போது நெருப்பு மாதிரி இருந்த.. கண்ணாலேயே என்ன தள்ளி நிறுத்தின.. ஆனால் இப்போ நமக்குள்ள கொஞ்சம் கூட இடைவெளி இல்ல ” என உரசி இருந்த அவர்களது இரு உடல்களையும் காண்பித்தான் …

 

தன் பயத்தால் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை தவற விட்டதை எண்ணி நொந்து போனாள் பெண்ணவள் .. உடனே அவனிடம் இருந்து விலக போக.. அவளை மேலும் இறுக்கி விலகிவிடாத வண்ணம் அணை போட்டான் அவளது கணவன்.

 

” சம்திங் நீ ஏதோ பெரிய விஷயத்தை என் கிட்ட இருந்து மறைக்குற.. அது தெரியுற அப்போ உன்ன கவனிச்சுக்கிறேன் ” என்றவன் பிடியை விலக்க… அடுத்த நொடி அவனிடம் இருந்து விலகி குளியலறைக்குள் சென்று மறைந்து விட்டாள் சாயா..

 

அவள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டவன் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசி விட்டு குளியலறை மீது ஒரு பார்வையை செலுத்தி விட்டு அறையில் இருந்து வெளியேறினான்.

 

ஆனால் வெகு சீக்கிரத்தில் அவள் மறைத்து வைத்த ரகசியங்கள் எல்லாம் மறவன் காதிற்கு வந்து சேர போவதை அவள் அறியவில்லை .. அதன் பின் மறவனிடம் இருந்து சாயாலியை யார் காப்பது… ??

 

சனா 💖

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்