

வசும்மா நிதிஷ் பிரியா மூவரும் உள்ளே வந்தனர்….. மூவரையும் தாத்தா மாறன் இருவரும் வரவேற்றனர்…. மற்ற மூவரின் பேச்சு சத்தத்தில் உள்ளே இருந்தவர்களும் வந்து வரவேற்றனர்……. நிவேதா அந்த சத்தத்தில் கொஞ்சம் அசைந்தாள்….
ஆனால் மாறன் அவளை குழந்தைக்குத் தட்டி குடுப்பது போல் குடுத்து மீண்டும் உறங்க வைத்தான்….
வசும்மா தான் “ஏன் தம்பி நிவிம்மா ரொம்ப அழுதாளா”?????? என்று கேட்டார் மாறனிடம்…..
“இல்லை ம்மா நான் வரும்போதே பாப்பா தூங்கிட்டு தான் இருந்தா….. தாத்தா பாப்பா அழுதாளா” என்று அவன் தாத்தாவிடம் கேட்டான்….
தாத்தா “இல்ல தாயி வரும் போது கோவமா வந்துச்சி…. வந்ததும் மருமக மடியில படுத்திச்சி… எதுவும் பேசல… கொஞ்ச நேரம் கழிச்சி தூங்கிடிச்சி” என்று கூறினார்
“தம்பி எதுக்கு மடில தூங்க வெச்சி இருக்கீங்க…. தலைகாணி இருக்குல அதுல தூங்க வைங்க” என்று கூறினார்….
“இல்ல ம்மா பாப்பாவும் தாரா மாதிரிதான் எனக்கும் தூங்கட்டும்….. இத்தனை நாள் எனக்கு தங்கச்சி இல்லன்னு வருத்தபட்டு இருக்கேன்…. ஆனா பாப்பாவை பார்த்ததும் எனக்கு அது போயிடுச்சி…… எனக்கு தாரா குட்டியும் பாப்பாவும் ஒன்னு தான்” என்று கூறினான்…. வசும்மா சிரித்துவிட்டு மற்றவர்களுடன் சமையலறை சென்றார்…. நிதிஷ் வேலை இருக்கிறது என வெளியே சென்று விட்டான்…..
நிவேதாவும் எழுந்து இருந்தாள் சிறிது நேரத்தில்….. ஆனால் மாறன் “கொஞ்ச நேரம் தூங்கு பாப்பா” என்று கூறினான்… “இல்லை அண்ணா தூக்கம் வரல” என்று கூறினாள்…..
“ஏன் டா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு…..” என்று கேட்டான்
“அப்படிலாம் ஒன்னும் இல்ல ண்ணா நல்லா தான் இருக்கேன்”…. என்று கூறினாள்…
“சரி ஓகே அப்டினா எல்லாரும் கிச்சன்ல இருக்காங்க அங்க போயி பேசிட்டு இரு” என்று கூறினான்… அவளும் சரி எனக் கூறிவிட்டு உள்ளே சென்றாள்…. அனைவரிடமும் நன்றாக பேசினாள் பிரியாவை தவிர…… அவள் பக்கம் கூட திரும்பவில்லை….. ஒன்றரை மணிக்குள் சாப்பாடு அனைத்தும் தயார்….. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்….
மூன்று மணி வரை அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்…. மதுரைக்கு அனைவரும் இன்றே கிளம்புவதாகக் கூறினர்… ஆனால் இந்த முறை அப்பத்தா மதுரைக்கும் சிவாம்மா சேலத்திலும் தங்குவதாக இருந்தது….. நான்கு மணிக்குமேல் அனைவரும் மதுரைக்குக் கிளம்பி இருந்தனர்….. நிவேதா இந்த இடைப்பட்ட நாட்களில் அப்பத்தாவிடம் நன்றாக பழகி இருந்தாள்…. “அம்மாச்சி நீங்களும் இங்கயே இருங்களேன்” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்….
ஆனால் தாத்தாவோ “தாயி என் பொண்டாட்டிய இத்தனை நாள் உன்கூட தானு இருந்தா… கொஞ்ச நா(நாள்) என்கூட இருக்கட்டுமே … ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடிச்சி அவ இங்கன வந்து அதுனால அங்க வரட்டுமே” என்று கூறினார்…
அப்பத்தா அவளிடம் “அவரை விட்டுட்டு இத்தனை நாள் இருந்ததே இல்ல தாயி அதுனால கொஞ்ச நாள் போய்ட்டு இங்க வரேன்” என்று கூறினாள்…. அவளும் அரைமனதுடன் சரி எனக் கூறினாள்….
அஜய்க்கு ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது….. மாவட்ட அளவில் மூன்றாவது இடம்….. இரண்டு நாட்களில் மார்க் சீட் தருவதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது அதனால் அவனும் மதுரை செல்கிறான்…. இல்லை என்றால் அவனும் சேலத்தில் தான்…
அனைவரும் கிளம்பியவுடன் சிவாம்மாவிடம் சொல்லிவிட்டு வசும்மாவுடன் அவர் வீட்டுக்கு சென்று அவளுக்குத் தேவையான புத்தகத்தை எடுத்து வந்தாள்… ஆனால் பிரியாவிடம் அவள் பேசவே இல்லை…..
புத்தகத்தை எடுத்து கொண்டு நிதிஷ் மற்றும் வசும்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு அதியின் வீட்டுக்கு வந்துவிட்டாள்…. அதி வரும்வரை சிவாம்மா சேலம் தான்…. இரவு உணவு மதியம் சமைத்ததே இருந்ததால் எதுவும் செய்யவில்லை…. இருவரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்….
நிவேதா சிவாம்மாவிடம் “அத்தம்மா நீங்க லவ் மேரேஜா இல்ல அரேஞ் மேரேஜா” என்று கேட்டாள்
சிவாம்மா அதற்கு “எனக்கு அரேஞ் மேரேஜ் அவருக்கு லவ் மேரேஜ்” என்று கூறினார்…. “என்ன அத்தம்மா சொல்றிங்க” என்று நிவேதா கேட்டாள்
“ஆமா டா சித்திரை திருவிழால உங்க அப்பா என்ன பாத்து பிடிச்சி போய் லவ் பண்ணி இருக்காரு…. எங்க சொந்த ஊரு திண்டுக்கல் … எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குத் திருவிழாக்கு வந்தோம்…. அவங்க அலங்காநல்லூர்…. திருவிழா முடிஞ்சவுடனே நாங்க எங்க ஊருக்குப் போயிட்டோம்… எங்க சொந்தக்காரங்க எங்க கூட திண்டுக்கல் வந்துட்டாங்க…. ஆனா உங்க அப்பா மதுரை நகரத்தையே சுத்தி தேடி இருக்காரு…. அவங்களும் ஊருல இல்லாததுனால கண்டுபிடிக்க முடியல…. நான் கிடைக்கலனு ரொம்ப சோர்ந்து போயிட்டாரு…. என் போட்டோ கைல இல்ல… என் பேரு தெரியாது….. ஒரு வாரம் மதுரையை ஒரு இடம் விடாம சுத்தி இருக்காரு…
இவரை பாத்துட்டு மாமாக்கு சந்தேகம் வந்துடிச்சி…. கூப்பிட்டு விசாரிச்சு இருக்காங்க…. அவரும் எல்லா உண்மையும் சொல்லிட்டாரு…. மாமாவும் அவர்கிட்ட நீ இப்ப தான் காலேஜ் கடைசி வருசம் படிக்குற… அதுனால படி… அந்த பொண்ணு உனக்கானவளா இருந்தா உன்கிட்டயே வருவா அப்டினு சொல்லிட்டாரு…. ஒரு வருசம் என் நினைப்புலயே இருந்து இருக்காரு….
நான் அந்த வருசம் தான் காலேஜ் சேர்ந்தேன்….. அதுனால மூணு வருஷம் திருவிழாக்கு வரல… ஆனா உன் அப்பா எப்படியோ என் சொந்தக்காரங்களைக் கண்டுபிடிச்சி மாமாவையும் அத்தையையும் கூட்டிட்டு போய் பேசி இருக்காரு… என் சொந்தக்காரங்களுக்குக் குழந்தை இல்ல.. என்னையும் என் தங்கச்சியையும் தான் குழந்தையா நினைப்பாங்க…. அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்… ஆனா நான் படிக்குறதுனால படிச்சி முடிச்சவாட்டி கல்யாணம் பேச்சு எடுத்துக்குலாம்னு சொல்லிட்டாங்க…
என் படிப்பு முடிஞ்ச கையோட மூணு மாசத்துல கல்யாணம் வெச்சாச்சு” என்று கூறி முடித்தார்….
“அத்தம்மா அப்பா பயங்கர லவர் பாயா இருந்து இருப்பாரு போல…. ஆமா அந்த காலத்து ஆளுங்க லவ் மேரேஜ்க்கு ஒதுக்க மாட்டாங்கல எப்படி அம்மாச்சியும் தாத்தாவும் ஒத்துக்கிட்டாங்க” என்று கேட்டாள்
“ஏன்னா மாமாவும் அத்தையும் லவ் மேரேஜ்” என்று கூறினார் சிவாம்மா… “என்ன அத்தம்மா சொல்றிங்க” என்று வாயை பிளந்தாள்…
“ஆமா அத்தையும் மாமாவும் மாமா பொண்ணு அத்தை பையன்… குடும்பத்துக்குள்ள சண்டை…. ஆனா ரெண்டு பேரும் லவ் பண்ணி இருக்காங்க வீட்டுல ஒத்துக்கல… அதுனால அத்தை யாரு சம்மதமும் வேணாம் என்னை கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லியிருக்காங்க… ஆனா மாமா ஒத்துக்குல… ரெண்டு வீட்டோட சம்மதமும் வேணும்னு சொல்லிட்டாங்க…. அத்தை உண்ணாவிரதம்லா இருந்து இருக்காங்க… ஆனாலும் அத்தையோட வீட்டுல ஒத்துக்குல… மாமா வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க… இனிமேலும் அவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு மாமா அத்தைக்கு ஒரு கோவில்ல வெச்சி தாலி கட்டிக்கிட்டாங்க…. அத்தையோட வீட்டுக்கு போய் இருக்காங்க… அவங்க ஏத்துக்கல…
ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சி உங்க அப்பா பொறந்தவுடனே ஏத்துக்கிட்டாங்க” என்று கூறி முடித்தார்….
“ரெண்டு பேரோட லவ் ஸ்டோரியும் சூப்பரு அத்தம்மா…. அப்பா லவ் பண்ணது உங்களுக்கு எப்ப தெரியும்?????”… என்று கேட்டாள்…
“அதி பிறந்து கொஞ்ச நாள் கழிச்சி” என்று கூறினார்…. “அத்தம்மா உங்க பேமிலி பத்தி ஒண்ணுமே சொல்லல… உங்க தங்கச்சி என்ன பண்றாங்க” என்று கேட்டாள்….
“நம்ம குடும்பத்தைப் பத்தி உனக்கு தெரியாதா டா” என்று கேட்டார்… அவள் இல்லை என தலை ஆட்டினாள் …. அஜயின் பெற்றோர் பத்தி முழுவதுமாக கூறி முடித்தார் சிவாம்மா… (அஜய் பத்தி தகவல் வேணும்னா முதல் எபி படிங்க)
“அஜய் என் வயித்துல பிறக்கலானாலும் அவன் தான் என் கடைசி புள்ள… அதி மீனாவ விட எனக்கு அஜய தான் பிடிக்கும்” என்று கூறினார்…..
அவள் எதுவும் கூறவில்லை.. எழுந்து சென்று அவர் மடியில் படுத்து கொண்டாள்… மாமியார் மருமகள் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்…. இருவருக்கும் ஒரே நேரத்தில் அலைபேசி அழைப்பு வந்தது… இருவரும் சிரித்துக் கொண்டனர்… ஏன்னென்றால் இருவருக்கும் அவரவரின் நாயகர்கள் தான் அழைத்து இருந்தனர்… சிவாம்மா இப்போது அவர் தங்கி இருக்கும் அறைக்குப் பேச சென்றார்…. இவளும் அதியின் அறைக்குப் பேச சென்றாள்…..
அதி நிவேதாவிடம் நார்மலாக கொஞ்ச நேரம் பேசிவிட்டு இன்று நடந்ததைப் பற்றி பேசினான்… “அம்மு புக் என்ன பண்ணலாம்னு இருக்க”… என்று கேட்டான்… அதை கேட்டு அவள் அமைதியாகி விட்டாள்… “அம்மு அந்த புக் நான் அரேஞ் பண்ணி தரேன்…. புக் நேம் மட்டும் எனக்கு சென்ட் பண்ணு…” என்று கூறினாள்….
“ஓகே பாவா” என்று கூறிவிட்டு “பாவா அம்மாச்சி ஊருக்கு போயிட்டாங்க… அத்தம்மா இப்ப சேலத்துல இருக்காங்க” என்று கூறினாள்….
அதை கேட்டு அவன் சிரித்து விட்டு “தாத்தா அப்பத்தாவ இத்தனை நாள் விட்டதே பெருசு… தாத்தா அப்பத்தா ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கவே மாட்டாங்க..” என்று கூறினான்….
சிறிது நேரம் பேசிவிட்டு அவள் சிவாம்மா அறைக்கு வந்தாள்… அங்கு அவரும் பேசிவிட்டு அப்போது தான் வைத்து இருந்தார்….. “அத்தம்மா நான் உங்ககூட படுக்கட்டா… இதுவரைக்கும் எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நான் அம்மா பக்கம் தூங்குனது இல்ல… பெரியம்மா வீட்டுக்கு வந்தாலும் நானும் ப்ரியாவும் தான் ஒரே ரூம்ல தூங்குவோம்… அவளுக்கு கல்யாணம் ஆனவுடனே எனக்கு தனி ரூம்…. உங்ககூட படுக்கட்டா” என்று கேட்டாள்….
“இதுக்குலாம் ஏன் டா கேட்குற வா படு” என்று கூறினார்…. அவளும் ஓடிச் சென்று சிவாம்மாவை அணைத்துக் கொண்டு உறங்க முயன்றாள்…. சிவாம்மா அவளுக்காக தாலாட்டு பாடினார்….
ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ… தாயான தாய் இவரோ…. தங்கரத தேரிவரோ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்… நிழலு பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்….
தூங்காமணி விளக்கே தூங்காம….தூங்கு கண்ணே… ஆசஅகல் விளக்கே அசையாம தூங்கு கண்ணே…
ஆராரோ ஆரீராரோ…ஆரீரோ ஆரீராரோ… ஆராரோ ஆரீராரோ.. ஆரீரோ ஆரீராரோ
என்று தாலாட்டு பாடல் பாடினார் …
நிவேதா அழுதுகொண்டே தூங்கிவிட்டாள்… அவளுக்கு விவரம் தெரிந்து அவளுக்காக அவள் கேட்கும் முதல் தாலாட்டு பாடல்…. எனவே அவளால் கண்ணீர் அடக்க முடியவில்லை…. இருந்தும் அழுதுகொண்டே தூங்கிவிட்டாள்… சிவாம்மா அவளுக்கு உச்சியில் முத்தமிட்டு அவளுடன் தூங்கி விட்டார்…
அடுத்த நாளில் இருந்து மாமியார் மருமகள் இருவரும் சேலம் சுத்தி உள்ள கோவிலுக்குச் சென்றனர்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவில் என்று சுத்தி திரிந்தனர்…. நிவேதாக்குக் கார் ஓட்ட தெரியும்… நிதிஷ் பிரியா நிவேதா இருவருக்கும் கார் ஓட்ட சொல்லிக் கொடுத்து இருந்தான்… அதானல் இருவரும் காரிலேயே சென்றனர்… வசும்மா மற்றும் பிரியாவை அழைத்தனர் அவர்கள் வரவில்லை என்று சொல்லி விட்டனர்….
முதல் நாள் சென்றது சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்….இந்த கோவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டபட்டது.. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரிய மாரியம்மன்… எனவே இது கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்க பட்டது…. இங்கு தரிசனம் முடித்து விட்டு கோட்டை பெருமாள் கோவிலைத் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி விட்டனர்….
இருவருக்கும் வசும்மா வீட்டில் தான் சாப்பாடு… இருவரும் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் எங்கு போகிறார்கள் என்று சொல்லிவிட்டு உறங்க சென்றனர்… இன்றும் சிவாம்மா அவளுக்கு தாலாட்டு பாடி தான் உறங்க வைத்தார்….
அடுத்த நாள் ஆயிரத்து எட்டு(1008) லிங்கம் கோவிலுக்குச் சென்று அங்கு இருக்கும் ஆயிரத்து ஏழு லிங்கம் கோவிலை சுற்றி இருக்கும் ஆயிரத்து எட்டாவது லிங்கம் பெரிய லிங்கம் ஆகும்… மேலும் அங்கு பெருமாள் கோவில் , ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது… ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு இளம்பிள்ளை அருகில் உள்ள சித்தர்கோவிலுக்கு சென்றனர்…
அங்கும சித்தேசுவர சாமி இருப்பார்.. அங்கு தீர்த்த கிணறு(மூலிகை தண்ணீர்) உள்ளது அந்த தண்ணீரில் குளித்தால் தீராத தோல் நோய் குணமாகும் என்று கூறுவர்… அங்கு உப்பு மிளகை வாங்கி சுற்றி கிணற்றில் போட்டால் நோய்கள் குணமாகும் என்று கூறுவர்…. அங்கு தரிசித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினர்…. போகும் போதே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சென்றனர்….
அடுத்த நாள் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்குச் சென்றனர்….
பிறகு வந்த நாட்களில் சிஏ கிளாஸ்க்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள்…. காலை மாலை அதியுடன் பேச்சு…. நிதிஷ் வசும்மாவிடம் வீட்டுக்குச் சென்று பேசுவது…. மதுரைக்கு அழைத்து பேசுவது… சிவாம்மாவிடம் உறக்கம் என்று சென்று கொண்டு இருந்தது…
அதி பெங்களூரில் இருந்து திரும்பி வரும் நாள்… முரளியின் குழந்தை அகிலின் பிறந்தநாள்…. மாலை தான் வருவேன் என்று கூறிவிட்டான்… ஆனால் அதற்கு முன்னாடி நாள் நிவேதாவிற்கும் அதிக்கும் பெரிய ஊடல்(சண்டை) ஒன்று வந்து இருந்தது… காரணம் என்னவோ ?!?!?!?!…….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



நிவிக்கும் அதிக்குமா 😳😳😳