Loading

காதல் – 24

 

விஹான் மற்றும் அஸ்வதிக்கு  அவனது அறையில்  ஒரே பெட்டில் அவர்களது ரொமான்ஸ் காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது அதை எப்பொழுதும் போல தடுக்க விஹானா இருந்தாள்…….

 

விஹான் நா வெளியே போகனும் யாராவது வந்துடப் போறாங்க , என்று அஸ்வதி நானத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் அப்பொழுது கதவு திறக்கும் ஓசை கேட்டது……

 

விஹான் யாரோ கதவ திறந்துட்டு வர போறாங்க இப்ப என்ன பண்றது ? அதான் நா அப்பவே விஹானா பெட்டுக்கு போறேன்னு சொன்னேன் கேட்டீங்களா இப்ப நம்ம ரெண்டு பேரும்  நல்லா மாட்டிக்க போறோம் என்று அஸ்வதி புலம்ப……..

 

விஹான் அவர்கள் போர்த்தி இருந்த பெட்ஷீட்டை முழுவதுமாக   அஸ்வதி மேல் போர்த்தி விட்டு, தலைகானியை கட்டி அணைத்து கொண்டு  தூங்குவது போல பாவனை செய்தான்…..

 

அஸ்வா கண்ணா முழிச்சிட்டியாமா? என்றபடி பீவி அந்த அறைக்குள் வந்தார்……

 

அஸ்வதி விஹான் போர்த்தி விட்ட  பெட்ஷீட்டிற்குள் அவன் மேல் சாய்ந்து கொண்டு இருந்தாள்…..

 

அஸ்வா எங்கம்மா இருக்குற?

 

அம்மா அஸ்வதி பாத்ரூம் போயிருக்குறா என்று விஹானா கூறினாள்……..

 

அப்படியா அஸ்வதியோட பேக்ஸ் எல்லாம் பேக் பண்ண சொல்லுமா……

 

ஏன் அஸ்வதி எங்க போறா?

 

அஸ்வதியோட ஃபேமிலி இன்னைக்கு மார்னிங் பிளைட்டுக்கு சென்னை கிளம்புறாங்க அதான் அஸ்வதிய கிளம்ப சொன்னேன்……

 

என்னம்மா சொல்றீங்க?          அஸ்வதியோட பேமிலி ஒரு மாசம் இங்க தங்குறதா தான பிளான்?                      அப்போ ஏன் வந்த ஒரு வாரத்திலேயே கிளம்புறாங்க?

 

எனக்கு தெரியல விஹானா அவங்களுக்கு எதோ முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங் இருக்காம் அதான் அஸ்வதிய கிளம்ப சொன்னாங்க அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் , அஸ்வதி வந்தவுடன நீ அவள சீக்கிரம் கிளம்ப சொல்லிடு என்றிட்டு பீவி சென்றார்…….

 

அவர் சென்றவுடன் விஹான் அஸ்வதி மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்தான் …….

 

அஸ்வதியின் கண்கள் இரண்டும் அழுதமையால் சிவந்திருப்பதை விஹான்  பார்த்தான்…….

 

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?இப்பதான் கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அது அந்த கடவுளுக்கே பொறுக்கல போல , அதான் என்னோட சந்தோஷத்தை என்கிட்ட கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு உடனே எடுத்துக்கிட்டாரு என்று அஸ்வதி விஹான் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்……..

 

விஹானுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை , அவனின் தேவதை  அவனை விட்டு தூரமாக செல்ல போகிறாள் என்பதை அவனால்  நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, அவன் கன்களிலும் ஈரம்…….

 

ரெண்டு பேரும் ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க?                                                          நீங்க ரெண்டு பேரும் என்ன ரொம்ப தூரமாவா  பிரிஞ்சி போக போறீங்க?   இங்க இருக்குது சென்னை உனக்கு அஸ்வதிய பாக்கணும்னு தோணுச்சுன்னா உடனே சென்னைக்கு போய் பாத்துட்டு வா அதே மாதிரி அஸ்வதிக்கு  உன்ன பாக்கணும்னு தோணுச்சுன்னா உடனே அவ இங்க காஷ்மீர்க்கு வருவா, இந்த பிரிவு உங்க ரெண்டு பேருக்கும் தற்காலிகமானதுதான் சோ ரெண்டு பேரும் அழுக கூடாது சரியா ரெண்டு பேரும் பிரிஞ்சி இருந்தா தான் லவ் அதிகமாகும் அப்படின்னு நிறைய படத்துல பார்த்திருக்கிறேன் இப்போ உங்க ரெண்டு பேர் மூலமா நேர்ல பாக்க போறேன் சரி சரி நா அஸ்வதி ரூமுக்கு போய் அவ டிராலிய எடுத்துட்டு வரேன்,  அஸ்வதி நீ குளிச்சிட்டு ரெடியாகு,  அண்ணா நீயும் ரெடியாகு போ,  நம்ம ரெண்டு பேரும் அஸ்வதிய சிரிச்ச முகமா சென்ட் ஆப் பண்ண போறோம் சரியா? சீக்கிரம் சீக்கிரம் கிளம்புங்க என்று விஹானா அந்த அறையில் இருந்து வெளியே சென்றாள் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது……….

 

அஸ்வதி இங்கே விஹானின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்…….

 

என்னோட செல்லம்ல , அழுக கூடாது உன்ன நா அடிக்கடி சென்னைக்கு வந்து பாக்குறேன் சரியா ?                                      இப்ப என்னோட செல்ல அஸ்வதி அழகா ரெடி ஆகிட்டு வருவாளாம் என்று அவன் அவளை பார்த்து கூறினான்…….

 

அவன் பேச்சைக் கேட்டு அஸ்வதியும் குளித்து முடித்துவிட்டு ரெடியாகி விட்டு வந்தாள் ………

 

விஹானா அஸ்வதியின் உடைகள் அனைத்தையும் அவளின் ட்ராலியில் பேக் செய்து விட்டாள்…….

 

அஸ்வதி விஹானாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்……

 

எனக்கு முதல் முதலா கெடச்ச பெஸ்ட் பிரண்ட் நீ உன்ன நா ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்ன நீ மிஸ் பன்னுவல்ல?

 

பின்ன நீ மட்டும் தான் என்ன மிஸ்  பண்ணுவியோ?                                          நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று விஹானா  அஸ்வதியை  பார்த்து அழுதாள்……

 

பிறகு அஸ்வதி விஹானை பார்த்தாள், அவனின் முகமும் அழுது சிவந்து போய் இருந்தது…….

 

அஸ்வதி விஹானை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்……

 

விஹான் நீங்க இல்லாம நா இனி என்ன செய்யப் போறேன்?                                  உங்கள நா ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன் ,உங்கள நா உடனே பார்க்கணும் தோணுச்சுன்னா என்ன பண்ண?                                                        எனக்கு உங்கள பாத்துட்டே உங்க கூடவே இருக்கணும் போல இருக்குது …….          இந்த ஒரு வாரம் என்னோட வாழ்க்கையில நா மறக்கவே மாட்டேன் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் ஐ லவ் யூ விஹான் என்றிட்டு அவள் அவனின் இதழில் தன் இதழை பொருத்தினாள், அந்த இதழ் ஒற்றலில் ஆயிரமாயிரம் வலிகள், சோகங்கள் இருந்தது , அவளின் கண்ணீரும் இவனின் கண்ணீரும் இருவரின் இதழ் ஒற்றளில் சங்கமித்து கொண்டன …….

 

அப்பொழுது சுலோச்சனா  அஸ்வதியை  அழைக்கும் குரல் கேட்டது……

 

ஏய் எவ்ளோ நேரம் ஆகுது ?                  சீக்கிரம் கிளம்பி வா என்ற அவரின் கோப குரலை கேட்டு அஸ்வதி விஹானிடம் இருந்து பிரிந்து தன்  உயிரையும் அவளின் மனதையும் அவனிடம் கொடுத்து விட்டு வெறும் உயிரற்ற உடலாக சோகமே உருவாக வெளியில் சென்றாள்……

 

அஸ்வதியின் அந்த சோக முகத்தை பார்த்த சுலோச்சனா மற்றும் அனந்திக்கு சந்தோஷமாக இருந்தது…..

 

அஸ்வா கன்னா ஊருக்கு போயிட்டு என்ன மறந்துடுவியா?

 

அம்மா என்னோட வாழ்க்கையிலே முதல் முதலா அம்மா அப்படிங்கறவங்க எங்கிட்ட இவ்வளவு பாசமா இருப்பாங்க அப்படின்னு உங்க கிட்ட தான் தெரிஞ்சுகிட்டேன் நீங்க என் மேல அவ்ளோ பாசமா இருந்தீங்க உங்கள என்னால மறக்கவே முடியாதும்மா என்று  அஸ்வதி பிவீயை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்……

 

அஸ்வா கண்ணா ஊருக்கு போயிட்டு மறக்காம எனக்கு போன் பண்ணனும் என்ன?

 

கண்டிப்பா பண்றேன் அம்மா……

 

அஸ்வதி கண்ணா இந்த கிப்ட்ட வச்சுக்கோ ,  சித்திக் அங்கிள் உனக்காக கொடுக்கிற சின்ன கிப்ட் இத பத்திரமா வச்சுக்கோ என்று சித்திக் அவள் கையில் ஒரு சிறிய கிப்டை கொடுத்தார்……

 

தேங்க்ஸ்  சித்திக் அங்கிள்…..

 

நோ மென்ஷன்டா கண்ணா லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டியா?

 

ஆமா அங்கிள்….

 

சரி பிளைட்ல போகும்போது பத்திரமா போகணும் என்ன?

 

சரி அங்கிள்…….

 

சரி சித்திக் நாங்க கிளம்புறோம் இவ்ளோ நாள் உங்க கூட இருந்தது ரொம்ப சந்தோஷம் திரும்பவும் நம்ம சீக்கிரம் சந்திப்போம் என்று தேவராஜ் சித்திக்கை கட்டி பிடித்துக் கொண்டார்…….

 

அஸ்வதியின் குடும்பம் கிளம்ப போகும் சமயம்…….

 

சித்திக்கின் கார் டிரைவர் அவரிடம் ஏதோ ஹிந்தியில் கூறினார் அதைக் கேட்ட விஹானாவின் முகத்திலும் பீவியின் முகத்திலும் அத்தனை சந்தோஷம் …..

அஸ்வதி அப்படியே திரும்பி சுலோச்சனா மற்றும் அனந்தியை பார்த்தாள் அவர்கள் இருவரின் முகமும் ஏமாற்றம் அடைந்து இருந்தது……

 

அவர்களின் முகமாற்றங்களை கண்டு கொண்ட அஸ்வதி தனக்கு சாதகமாக ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது என்று அவளின் ஆழ்மனதிற்கு தோன்றியது……..

 

அவளின் ஆழ்மனதிற்கு தோன்றியது உண்மைதான் அங்கு நடந்து கொண்டிருப்பது அவளுக்கு சாதகமாகத்தான் நடந்து கொண்டு இருந்தது……….

 

விஹானா அவங்க என்ன சொல்றாங்க?ஏன் நீ சிரிக்கிற?                                           என்ன விஷயம்?                                    எனக்கும் சொல்லு……

 

விஹானா  அஸ்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்…….

 

விஹான்னா என்ன விஷயம்ன்னு சொல்லு எனக்கு தலை வெடிக்குது….

 

அஸ்வதி காஷ்மீர்ல நிறைய பணி பெய்யுதாம் அதான் ரோடு எல்லாம் பிளாக் ஆயிடுச்சாம், ட்ரெயின், ஏரோப்ளேன் எல்லாம்  கொஞ்ச நாளைக்கு  ஓடாதாம் என்று விஹானா சந்தோஷத்தில் அஸ்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்…..

 

விஹானா என்னோட ட்ராலிய நம்ம ரூமுக்கு எடுத்துட்டு வந்துரு என்று கூறிவிட்டு  அஸ்வதி  விஹானை பார்க்க அவனின் அறைக்கு ஓடினாள்……

 

விஹான் தலையில் கை வைத்த படி சோகமாக அமர்ந்து கொண்டிருந்தான்…..

 

விஹான்……

 

அஸ்வதியின் குரல் கேட்டு விஹான்  நிமிர்ந்து பார்த்தான்……

 

என்னம்மா ஏதும் எடுக்க மறந்துட்டியா?

 

ஆமா…..

 

என்னதுமா மறந்த?

 

உங்களைத்தான் என்று அவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டாள்…….

 

என்னாச்சு அஸ்வதி, உனக்கு பிளைட்டுக்கு நேரம் ஆகுது……..

 

உங்களுக்கு விஷயம் தெரியாதா?

 

என்ன விஷயம்?

 

அஸ்வதி அவன் அறையில் இருந்த டிவியை ஆன் செய்து நியூஸ் சேனலை வைத்தாள்……..

 

அதில் அந்த நியூஸ் வாசிக்கும் பெண்மணி தன்னுடைய இனிமையான குரலில் காஷ்மீரில் பொழியும் கடும் பணியின் காரணமாக சாலைகள் மற்றும் போக்குவரத்துகள் முடங்கியது இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது , மேலும் ரயில் மற்றும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பயணிகள் அவதி…….

 

அந்த செய்தியை பார்த்ததும் விஹான் அஸ்வதியை கட்டிப் பிடித்துக் கொண்டு சுற்றினான்…….

 

எனக்கு இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்குதுன்னு தெரியுமா, என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டான்……..

 

அஸ்வதி மற்றும் விஹான் சந்தோஷமாக கட்டி பிடித்து கொண்டு இருப்பதை அனந்தி பார்த்து விட்டாள் அவளால் அஸ்வதி சந்தோஷமாக இருப்பதை பார்க்க முடியவில்லை அவளை ஏதாவது செய்து விட வேண்டும் என்று அவளின் குரூர மனம் துடித்தது…….

 

அப்பொழுது அவளின் கண்களில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் ஆசியட்ரிக் ஆசிட் மற்றும் சல்பரிக் ஆசிட் பட்டது , அதை திறந்து அஸ்வதி வெளியில் வரும் வழியில் ஊற்றி விட்டாள்……

 

அப்பொழுது சரியாக பீவி அஸ்வதியை அழைக்கவும் அஸ்வதி  விஹான் அறையில் இருந்து ஓடி வந்தாள் அப்பொழுது அவள் அனந்தி வழியில் ஊற்றி வைத்திருந்த ஆசியட்ரிக் ஆசிட் மற்றும் சல்பரிக் ஆசிட் மீது கால் வைத்து விட்டாள், அந்த ஆசிட் பட்டதும் அவளின் கால்கள் இரண்டும் பொத்து, வெந்து, தோல் சுருங்கி விட்டது , அந்த வலியில் அஸ்வதி அலறி துடித்தாள்…….

 

அவளின் அலறலைக் கேட்டு விஹான் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்தனர்……

 

அஸ்வதி என்ன ஆச்சு?

 

விஹான் என்னோட கால்ல ஏதோ ஆசிட் பட்ட மாதிரி ரொம்ப எரியுது…..                வலி தாங்க முடியல என்று அஸ்வதி அழுதாள்…….

 

அப்பொழுது விஹானா தரையில் பார்த்தாள் ஏதோ அமிலங்கள் கொட்டி இருப்பது போல் தெரிந்தது……

 

அப்பா இது என்னது எதோ ஆசிட் மாதிரி இருக்குது?

 

விஹானா அவ்வாறு கேட்கவும் அப்பொழுது தான் சித்திக் தரையில் கொட்டியிருந்த திரவத்தை கவனித்தார்…..

 

நசீர்…..

நசீர்…..

இதர் ஆவ்….

 

சித்திக் அழைத்ததும் அந்த நசீர் என்பவர் ஓடி வந்தார்……

 

நசீர் தரையில கொட்டி இருக்கிறது என்னன்னு பாரு……

 

நசீர்  தரையில் கொட்டி இருந்த அந்த திரவத்தை சோதித்துவிட்டு …….

 

சாப் இது , பெயிண்ட் அடிக்க யுஸ் பண்ற ஆசியட்ரிக் ஆசிட் அண்ட் சல்பரிக் ஆசிட் இது எப்படியோ தெரியாம கொட்டி இருக்குது அதுல இவங்க கால் வச்சுட்டாங்க சோ இவங்க கால் ரெண்டும் பொத்து போயிடுச்சு சீக்கிரம் இ்வங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க என்று அவர் கூறினார்…….

 

விஹான் சீக்கிரம் அஸ்வதிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ என்று சித்திக் கூறவும் ,விஹான் வலியில் துடித்துக் கொண்டிருந்த அஸ்வதியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்……..

 

விஹானா அவர்களுடன் செல்லாமல் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்க்க சென்றாள்……

 

அஸ்வதியை அவர்களின் மற்றுமொரு சூழ்ச்சியிலிருந்து அண்ணன் தங்கை இருவரும் காப்பாற்றுவார்களா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்ல வேளை ரெண்டு பேரும் பிரிஞ்சுடுவாங்க அப்படின்னு நினைச்சேன் .. ஏன் இந்த சுலோ அனந்தியை ஒண்ணும் பண்ணாம இருக்காங்க ..

    1. Author

      Ini paaruunga…. Thank you for your valuable comments 😇