Loading

அத்தியாயம் – 31

 

மறுநாள் காலை யாருக்கும் காத்தில்லாமல் கதிரவன் தன் தலையை வெளியே நீட்டினான். 

 

விக்ரம் விடிந்த பிறகு தான் அறைக்கே சென்றான். நிலா சோபாவில் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தாள். 

 

விக்ரமுக்கு ஒரு புறம் கோபம் வந்தது. நான் என்ன சொல்ல வரேன் என்று கூட இவள் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாளே.

 

விக்ரம் நேராக சென்று துணிகளை எல்லாம் பேக்கில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

 

அப்பொழுது கண்விழித்த நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். 

 

விக்ரம் அனைத்தையும் முடித்துவிட்டு சீக்கிரம் கிளம்பு வீட்டுக்கு கிளம்பனும் என்றான். 

 

நிலா, “ரொம்ப தேங்க்ஸ் நானே வீட்டுக்கு போகலாம்னு தான் சொல்லணும்னு நெனச்சேன் நீங்களே இப்போ சொல்லிட்டீங்க” என்று அவளும் தயாராகினாள்.

 

காலையில் கிளம்பியவர்கள் மறுநாள் மதியத்திற்கு மேல் தான் வீட்டையே சென்றடைந்தார்கள். 

 

அதுவரைக்கும் இருவருமே ஒரு வார்த்தை கூட பேசிக்கவும் இல்லை ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தடவை கூட பார்த்துக்கவும் இல்லை. 

 

ஆனால் விக்ரம் மனதில் என்ன பண்றதுன்னே தெரியலையே இவ என்னை பற்றி இவ்ளோ அசிங்கமா நினைச்சுகிட்டு இருக்காலே என்று மனசு உடைந்து நொந்து போனான்.

 

நிலா மனதுக்குள் துருவை நினைத்துக் கொண்டு இருந்தாள் நீ இல்லாம என்ன எல்லாருமே மிஸ் யூஸ் பண்ண பார்க்கிறாங்க.

 

சீக்கிரமா வந்து என்னை இங்க இருந்து கூட்டிட்டு போ எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. இவ்வாறு இவர்கள் பயணம் குழப்பமாகவும் கவலையுடனும் முடிந்தது. 

 

சுஜிதா லண்டனில் சக்தி பேசியதை யோசித்துக் கொண்டே இருந்தவள் ஒரு திட்டத்தை யோசித்த பிறகு தான் இரவு தூங்கவே சென்றாள். 

 

சக்தி நன்றாக தூங்கி காலையில் கண் விழித்தவன் உடம்பு வலி அதிகமாக இருந்ததால் திமிர் விட்டபடி எழுந்தரிக்க முயற்சி செய்தான். 

 

இவனை ஏதோ இருக்கமாக கட்டி வைத்தது போல் தோன்ற என்ன என்று போர்வையை தூக்கி பார்த்தவன் அதிர்ச்சியாகிப் போனான்.

 

சுஜிதா தூக்கத்தில் சக்தி போர்வைக்குள் நுழைந்து சக்தி இடுப்பில் கை போட்டு அவன் மேல் கால் போட்டு இறுக்கமாக கட்டிக் கொண்டிருந்தாள். 

 

சக்தி இந்த காட்சியை பார்த்தவுடன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான். 

 

சக்தி மெதுவாக அவளை நகர்த்தி அழகாக படுக்க வைத்தவன் அவள் முகத்தில் கலைந்திருக்கும் முடிகளை எல்லாம் காதோரம் ஒதுக்கிவிட்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.  

 

சுஜிதா தூக்கம் கலைந்து லேசாக சினங்கினால். சக்தி எங்கே எழுந்து விடுவாளோ என்று சட்டென்று கண்களை மூடி படுத்துக் கொண்டான். 

 

சிறிது நேரம் கழித்து ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவன் சுஜிதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை பார்த்து எழுந்து குளியல் அறைகள் ஓடிவிட்டான். 

 

சக்தி குளித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டு இருந்தான். அவன் முடியில் உள்ள ஈரம் அவன் தலையை கோதும் பொழுது சுஜிதா முகத்தில் ஈரம் பட்டு தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள்.

 

சுஜிதா கண்களை கசக்கிய படி, “எங்க போறீங்க? கிளம்பி கிட்டு இருக்கீங்க” என்றாள். சக்தி, “நேத்து வெளியே போனோம்ல இன்னைக்கு போக வேண்டாமா” என்றான்.

 

சுஜிதா, “ஆமா வெளிய போறது தான் ரொம்ப முக்கியம்” என்றாள் சலிப்பாக. சக்தி, “ஏன் நேத்து நல்லா தானே இருந்துச்சு. நீ சந்தோஷமா தானே இருந்த” என்றான். 

 

சுஜிதா, “ஆமா நான் சந்தோஷமா தான் இருந்தேன். ஆனா மொத்த சந்தோஷத்தையும் நீங்க தான் மண்ணுல போட்டு புதைச்சுட்டீங்களே” என்றாள். 

 

சக்தி, “புரியாமல் அவளை பார்த்தவன் என்ன சொல்ற” என்றான். சுஜிதா, “ஆமா எதுக்காக நேத்து நைட்டு நீங்க குடிச்சிட்டு வந்தீங்க எனக்கு அதோட வாடையே பிடிக்காது என்கிட்ட நீங்க குடிக்க மாட்டேன் என்று தானே சொன்னீங்க” என்றாள். 

 

சக்தி, “அது வந்து என்றவன் சரி இனிமே குடிக்க மாட்டேன்” என்றான். 

 

சுஜிதா, “போன வாட்டியும் இப்படித் தான் சொன்னீங்க ஆனா கடைசில குடிச்சிட்டு தானே வந்தீங்க”. 

 

“நீங்க சொல்றதை எல்லாம் ஓடுற தண்ணியில் தான் எழுதி வைக்கணும்” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

 

சக்தி, “சரி கோவிச்சுக்காத டி சத்தியமா இனிமே குடிக்கவே மாட்டேன் என் மேல் சத்தியம்” என்றான். 

 

சுஜிதா, “அவன் அருகில் வந்தவள் அவன் கைகளை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு இப்போ சத்தியம் பண்ணுங்க” என்றாள். 

 

சக்தி, “அவளைப் பார்த்தவன் விரல்களை மூடிகொண்டு தயங்கியபடி என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று அவளிடம் இருந்து தன் கையை உருவ பார்த்தான்.

 

ஆனாலும் சுஜிதா விடாமல், “இப்போ சத்தியம் பண்ணுங்கன்னு சொன்னேன்” என்றாள். 

 

சக்தி, “அதெல்லாம் வேண்டாம்னு சொல்றேன்ல நான் இனிமே குடிக்க மாட்டேன் விடு” என்றான் முகத்தை திருப்பிக் கொண்டு. 

 

சுஜிதா, “நான் சொல்றதை நீங்க பண்ணுங்க நீங்க குடிக்க மாட்டீங்கன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்ல அப்புறம் ஏன் பயப்படுறீங்க” என்றாள்.

 

சக்தி வேறு வழி இன்றி சுஜிதா தலையில் கை வைத்து சத்தியம் செய்தான் இனி குடிக்க மாட்டேன் என்று. 

 

சுஜிதா நேற்று இரவு நடந்த விஷயங்கள் எதையும் சக்தியிடம் கேட்கவே இல்லை. அப்படி ஒரு விஷயம் நடந்ததாக கூட காமித்துக் கொள்ளவும் இல்லை.

 

சுஜிதா சந்தோஷமாக குளியல் அறைக்குள் சென்று விட்டாள். குளித்து தயாராகி இன்றும் இருவரும் ஒன்றாக வெளியே சென்றார்கள்.

 

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

 

சஜிதா, “மூன்று நாட்கள் போனதே தெரியலை டக்குனு போயிடுச்சு” என்றாள். சக்தி, “உனக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கனுமா” என்றான். 

 

சுஜிதா, “இல்ல வேண்டாம் உங்க அக்கா மூணு நாளைக்கு தானே டிக்கெட் எடுத்து கொடுத்தாங்க இன்னையோட முடிஞ்சுது கிளம்பலாம்” என்றாள்.

 

அவள் சோகமாக கூறியதும் சக்தி மனதை என்னமோ செய்தது. பிறகு சக்தி, “அடுத்த முறை நம்ப ஒரு வாரம் தங்குற மாதிரி வரலாம் நான் உன்னை கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

 

ஃப்ளைட் டில் அமர்ந்தவுடன் சக்தி அமைதியாக கண்களை மூடி சாய்ந்து கொண்டு பலமாக யோசிக்க ஆரம்பித்தான். 

 

இரண்டு நாளாக நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதுக்கு காரணம் சுஜிதா மட்டும் தான் எனக்கு இப்ப எல்லாம் அவளை ரொம்ப புடிச்சிருக்கு. 

 

ஆனா அவளுக்கு என்னை பிடிக்குமான்னு தெரியலையே. அவளுக்கு தகுதியானவணா நான் இருப்பேனான்னும் தெரியலையே என்றுபலமாக யோசித்துக் கொண்டிருந்தான். 

 

சக்தி இந்த நிமிஷத்தில் இருந்து சுஜிதாவை நான் ரொம்ப சந்தோஷமா வச்சு பாத்துக்க போறேன். 

 

என்கிட்ட இது வரைக்கும் யாருமே இவ்ளோ அக்கறையா நடந்துக்கிட்டதே கிடையாது. 

 

நான் குடிக்கிறதை பத்தி என்னோட அக்கா கூட என்கிட்ட அக்கறையா குடிக்காத டா இது தப்புன்னு சொன்னது கிடையாது. 

 

முதல் முதல்ல என்கிட்ட அக்கறையை காமிச்சு என்ன சந்தோஷமா பாத்துக்கிட்டது இவ மட்டும் தான். 

 

இவ கழுத்துல தாலி கட்டி இவ வாழ்க்கையவே நான் அழிச்சிட்டேன். அவளை கல்யாணம் பண்ணதுல இருந்து நிறைய இன்ஸல்ட் பண்ணி இருக்கேன். 

 

ஆனாலும் இவ என்கிட்ட பாசத்தையும் அக்கறையும் மட்டும் தான் காமிச்சிருக்கா. 

 

இவளை எந்த ஒரு காரணத்துக்காகவும் நான் இதுக்கு அப்புறம் எழக்க மாட்டேன் என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

 

சுஜிதா, “சக்தி உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும்” என்றாள் தலை குனிந்த படி. 

 

சக்தி எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான். சுஜிதா மனதில் இருந்த காதலை சக்தியிடம் கூற ஆரம்பித்தால்.

 

முதல் முதலில் அவனை சந்தித்ததில் இருந்து ஆரம்பித்து கல்யாணத்தன்று அவன் செலக்ட் செய்த புடவையை இவள் வாங்கியது முதல் கொண்டு மொத்தத்தையும் சொல்லி முடித்தால்.

 

சக்தி எதற்கும் பதில் அளிக்காததால். சிறிது நேரம் கழித்து சுஜிதா திரும்பி சக்தியை பார்த்து உலுக்கினால்.

 

சுஜிதா, “சக்தி என்ன நான் இவ்ளோ பெரிய விஷயம் சொல்லி இருக்கேன் நீங்க எதுவுமே பதில் சொல்லாம இருக்கீங்க” என்றாள்.

 

சக்தி அதில் தன்னிலை அடைந்தவன், “என்ன என்னது” என்றான். சுஜிதா, “நான் சொன்னதை எல்லாம் கேட்டீங்களா இல்லையா” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு. 

 

சக்தி அவள் முறைத்துக் கொண்டு கேட்டவுடன் எங்கு ஏதேனும் கவனிக்கவில்லை என்று சொன்னால் அவள் சண்டைக்கு வருவாளோ என்று யோசித்து பொய் கூறினான் கேட்டேனே எல்லாத்தையும் கேட்டேன் என்றான்.

 

சுஜிதா, “அப்புறம் ஏன் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கீங்க” என்றாள். 

 

சக்தி என்ன கூறுவது என்று தெரியாமல் மௌனமாக சிரித்தான். அதில் சுஜிதா என்ன இவன் எந்த பதிலும் சொல்ல வில்லை.

 

ஒருவேளை நம்மள பிடிக்கவில்லையா? அதனால் தான் இவன் எந்த பதிலும் சொல்லலையா. ஆனா சிரிக்கிறானே என்று யோசித்தால்.

 

சக்தி மனதுக்குள் இவகிட்ட முதலில் இவளை எனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். 

 

இவ ஒருவேளை என்னை பிடிக்கலை என்று சொல்லிட்ட. அவ ஆசைப்படுற மாதிரியே அவ வாழ்க்கையில் இருந்து நம்ப நகர்ந்துக்கணும். 

 

ஆனா அவ ஒத்துக்கிற வரைக்கும் அவளுக்காக கட்டாயம் நான் காத்துகிட்டு இருப்பேன். இவ ஒத்துப்பாலா இல்லையான்னு தெரியலையே ரொம்ப பயமா இருக்கு என்று யோசித்தான்.

 

விக்ரம் நேராக அவன் வீட்டிற்க்கு சென்றடைந்தான். நிலாவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் பாட்டிற்கு ஆபீசுக்கு கிளம்பி சென்று விட்டான். 

 

நிலாவும் அவனை கண்டுக் கொள்ளாமல் குளித்து தயாராகி கீழே சென்றாள்.

 

ராஜலட்சுமி, “வாமா பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு சந்தோஷமா இருந்தீங்களா” என்றார். 

 

நிலா, எந்த கவலையும் முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக தலையாட்டினாள். 

 

ராஜலட்சுமி, “வாமா வந்து உட்காரு” என்றார் சோபாவை காட்டி. நிலா சென்று அமர்ந்துக் கொண்டாள்‌‌.

 

ராஜலட்சுமி, “விக்ரம் ஏதோ ஒரு மாதிரி டல்லா ஆபிஸ்க்கு போனானே ஏன்?” என்றார். நிலா, “தெரியலையே நல்லா தான் இருந்தாங்க” என்றாள்.

 

நிலாவுக்கு விக்ரம் தன் அம்மா மட்டும் தான் அவனை துருவ் என்று அழைப்பதாக கூறியது சட்டென்று நினைவுக்கு வந்தது‌.

 

நிலா, “அத்தை நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்க இல்ல” என்றாள். ராஜலட்சுமி, “எதுவா இருந்தாலும் பரவாயில்ல கேலுமா என்ன?” என்றார்.

 

நிலா, “நீங்க உங்க பையன் விக்ரமை எப்படி கூப்பிடுவீங்க?” என்றாள். ராஜலட்சுமி, “விக்ரம்னு தான் மா கூப்பிடுவேன் ஏன்?” என்றார்.

 

அந்த பதிலில் நிலாவுக்கு ஏனோ மனசு கஷ்டமாக போனது கோபம் வந்தது விக்ரம் மேல். 

 

பிறகு நிலா, “இல்ல சும்மா தான் கேட்டேன் ஏதாச்சும் நிக் நேம் வைத்து கூப்பிடுவீங்களா அப்படின்னு தெரிஞ்சுக்க” என்றாள்.

 

ராஜலட்சுமி, “ஆனா அவன் என் கிட்ட பேசி பல வருஷம் ஆகிடுச்சு. நீ வந்ததுக்கப்புறம் தான் அவன் என்னை அம்மான்னு கூப்பிட ஆரம்பித்தான்” என்றார்.

 

நிலா புரியாமல் பார்த்து, “என்ன சொல்றீங்க ஏன் பேச மாட்டாங்க” என்றாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஏன்னா விக்ரம் அவங்க பையனே இல்ல … அது தெரிஞ்சு போச்சு அதான் .. நிலா பரவாயில்ல விக்ரம் பத்தி தெரிஞ்சுக்க டிரை பண்ற ..