Loading

இன்று

“என் பெயர் அறிந்து என்னை நீ காதல் செய்தாய், உன் பெயரும் அறியாமல், நீ யாரென்று தெரியாமல் உன் விழி மட்டும் பார்த்து காதலை சுமந்து கொண்டிருந்தவனை எட்ட நிறுத்தி பார்க்காதே என் நதியே.” என அவள் கை பற்றியவன் தன் கரங்களில் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த மோதிரத்தை கழற்றி, பெண்ணவள் கரங்களில் வலுகட்டாயமாக மோதிர விரலில் திணிக்க விழி அகல பார்த்தவள் வியந்தே போனாள். அவள் கரங்களில் பூட்டியிருந்த மோதிரம் சொல்லாமல் சொல்லியது அவள் மீதான காதலை.

அந்த மோதிரம் அவளிடமிருந்து தொலைந்து போன நாளை நினைத்து பார்க்கையில் அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

“ அந்த நாளை இப்போது நினைச்சாலும் பயமா இருக்கு தீரா. எல்லாமே என்னுடைய தப்பு தான்.” என புலம்ப ஆரம்பித்தாள்.

“என்ன பாக்குற நதி இது உன்னோடது தான்” தீரா சொல்ல விழியசையாமல் அவனையே பார்த்திருந்தாள் அவனுடைய ஆசை நதி.

“அப்போ!! என் மேல உங்களுக்கு லவ் இருந்திச்சா?” என அவள் கேட்க,

“அப்போ மட்டுமில்லை, இது கையில கிடைக்கும் போதும் நீ யாருன்னு தெரிஞ்சிக்க ஆசைபட்டேன்” என அவளின் ஒற்றை கம்மிங் வளையத்தை அவள் கரத்தில் வைக்க அவனையே விழி அகல பார்த்தாள்.

“உன் கண்ணை மட்டும் பார்த்திட்டு இருந்தவனுக்கு மோதிரம் கிடைச்ச அன்னைக்கி தான் முகத்தையே பார்த்தேன்” அவன் சொல்லி முடிக்க,

“என்னை காலேஜ் படிக்கும் போது பார்த்திருகிங்களா??” கேள்வியாய் அவன் முகம் பார்த்தாள்.

“பார்த்திருக்கீங்களாவா.? உன்னைத் தேடி தெரு தெருவா அழைஞ்சிருக்கேன் நதி”

“நிஜமாதான் சொல்லுறிங்களா.?”

“நீ நம்ப மாட்டன்னு எனக்குத் தெரியும் நதி, முதல் முறை நீ ஸ்கிட்டாகி விழுந்தப்பவே உன்னை ஃபலோ பண்ணி வந்தேன் உன் முகத்தை பார்க்க முடியல, ஆனால் ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன், இரண்டாவது முறை உன்னை பார்க்கும் போது அது நீதான்னு எனக்குத் தெரியலை ஆனா உன் சிங்கத்தைப் பார்த்தது அது நீதான்னு கண்டுபிடிச்சுட்டேன், அப்போ தான் உன் பேரு நதின்னு என்கிட்ட சொன்ன, அதுமட்டுமில்லை என்னோட கார்ல உன்னோட காதுல உரசிட்டு இருந்த வளையத்தை விட்டுட்டு போயிட்ட, அன்றிலிருந்து இந்த வளையம் என் கையில தான் இருக்கு நதி, உன்னோட நினைவா.” எனத் தீரேந்திரன் சொல்லி முடிக்க, மூச்சு முட்ட நின்றிருந்தவள் விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் பார்வையைக் கண்டவுடன்.

“இன்னும் நீ என்னை நம்பலைன்னா பரவாயில்லை நதி, இந்தப் போராட்டம் உனக்காக நான் தனியா ஆரம்பிச்சது, நானே தனியா போராடிக்கிறேன், இதுல இருந்து உன்னை மீட்டெடுப்பேன், உன் கண்ணுல அந்தப் பழைய காதலை பார்ப்பேன் நதி ” எனச் சொல்லி உறுதியாய் அகன்றவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவன் அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்த கோபாலன்.

“தீரேந்திரன் என்ன ஆச்சு.?”

“உங்க பொண்ணுக்கு நினைவு வந்திருச்சு மாமா” என அவன் சொல்லிய வார்த்தைகளில் உறைந்து போய் நின்றார் கோபாலன்.

தீரேந்திரன் வீட்டை விட்டு அவன் வெளியே வருவதற்குள் அவனைப் பின்னேயிருந்து இறுக்கமாய் அணைத்திருந்தாள் அவனின் நதி. அதைச் சற்றும் எதிர்பாராதவன் அதிர்ந்தே போனான், இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராத காவலனோ மெல்ல அவள் புறம் திரும்ப விலகி நின்றவளின் விழிகளோ காதல் பார்வை வீசியது. அந்த காதல் பார்வையில் உண்மை இல்லை என்பதை அவன் உணராமல் இல்லை. இருந்தாலும் அவளின் நெருக்கத்தை அந்த ஆறடிக் காவலனின் மனம் ரசிக்க தான் செய்தது.

“இது என்னை விட உங்க கைக்குத் தான் அழகா இருக்கு தீரா” என்றவள் மோதிர வளையத்தைக் கழற்றி அவன் கைகளில் பூட்டிவிட, அதைப் பார்த்துக்கொண்டிருந்த வசந்தியும் கோபாலனும் அவளுக்கு நினைவு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்து போயினர்.

“நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருந்தாலும், என்னால உங்களை முழுக்க நம்ப முடியலை தீரா, ஏன்னா நான் கண் விழிச்ச போது, அமைச்சர் செந்தமிழன்கிட்ட பேசிக்கிட்டு இருந்த வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவு வந்துட்டே இருக்கு, அதனால உங்க மேல நம்பிக்கை வர வரைக்கும் சில விசயங்களை உங்க கிட்ட நான் சொல்றதா இல்லை, அதனால”

“சொல்லு நதி அதனால.?”

“கார்த்திக் ஏன் இப்படி இருக்கான், நிஜமாவே அன்னைக்கி என்ன தான் எனக்கு நடந்துச்சுன்னு தெரியுற வரைக்கும், நான் சில விசயங்களை உங்க கிட்ட தெரியபடுத்துறதா இல்லை” என நதி தெளிவாய் பேசினாள்.

“அன்னைக்கி ராத்திரி உனக்கு எதுமே நடக்கலை நதி, கார்த்திக் பொய்த் தான் சொல்றான்” உறுதியாய்ச் சொன்னான் தீரா.

“என்ன சொல்றீங்க.? நீங்க தான் சொன்னீங்க கார்த்திக் என்னைச் சீரழிச்சுட்டதா.?” புருவம் உயர்த்திக் கேட்டாள் அகரநதி.

“இல்லை நதி உனக்குப் பாலியல் ரீதியா எந்தத் துன்புறுத்தலும் நடக்கலை, அதுக்கான ஆதாரம் இதோ” எனச் சில கோப்புகளை அவளிடம் நீட்டினான், அவள் தூய்மையானவள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள். இதை தான் அன்று கார்த்தியிடமும் காட்டியிருந்தான்.

“அப்பறம் என்ன அதான் ஆதாரம் தான் கையில இருக்கே கார்த்திக்கை ஈசியா வெளிய எடுத்திடலாமே”

“அதுல ஒரு சிக்கல் இருக்கு நதி, கார்த்திக் வெளிய வந்தா அவன் உயிருக்கு த்ரெட் இருக்கு, இந்த ஆதாரம் வெளியான மினிஸ்டரோட மூவ் எப்படி வேணும்னாலும் இருக்கலாம், அதுல நம்ம யாரையும் இழந்திட கூடாது நதி” என குழந்தைக்கு விளக்கம் தருவது போல் சொல்ல அவன் மேல் நம்பிக்கை வந்தவளாய் எல்லாப் பிரச்சனைக்கும் மூலக் காரணமே இது தான் எனச் சொல்ல துணிந்த பெண்ணவளோ குறும்படத்தை அவனுக்குப் போட்டு காண்பித்தாள். அதைப் பார்த்த தீரேந்திரன் அதிர்ந்தே போனான்.

“எல்எஸ்டியை பத்தி தான் ஷார்ட் பிலிம் எடுத்தியா நதி.? வாட் எ போல்ட் டெசிசஷன்” எனச் சொன்னவன் அவளின் தைரியத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனான்.

“இந்த ஷார்ட் பிலிம் எடுத்தது தான் என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய தப்பு தீரா” என வருந்தினாள் நதி.

“ இல்லை நதி இது ரொம்பவே டேஞ்சரான ட்ரக் தான். பட் இந்த ஆதாரத்தை நீ என்கிட்ட கொடுத்திருந்தால் நான் உன்னை கைட் பண்ணியிருப்பேன்” எனத் தீரா சொன்னான்.

“அப்போ மெச்சூரிட்டி இல்லை” என்றாள் அவள்.

ஆண்டுத் தோறும் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேரின் உயிரை போதைப் பழக்கம் பறிக்கிறது. போதை பழக்கத்தால் உலகம் முழுவதும் குற்றங்கள், விபத்துகள், கலாசாரச் சீரழிவுகள் அதிகரித்துவிட்டன. இது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் கவுரவத்தையும் பாதிக்கும் அளவுக்குக் கொடிய வடிவம் எடுத்துள்ளது. நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதில் புகையிலை, மது, கஞ்சா ஆகியவை இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதே போல, கஞ்சா, ஆம்பிட்டமின் போன்றவை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும், ஹெராயின், எல்.எஸ்.டி. போன்றவை வடஅமெரிக்காவிலும், ஓப்பியம் கலந்த போதைப் பொருட்கள் மற்றும் பிரவுன் சுகர் மத்திய கிழக்கு ஆசியாவிலும், பென்டானில், எல்.எஸ்.டி., பிரவுன் சுகர், ஹெராயின் போன்றவை வளர்ந்த நாடுகளிலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் போதைப்பொருட்கள் கல்லீரல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அகால மரணத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்தவை. அதுமட்டுமல்லாது இன்று மனித உயிருக்கு உலை வைக்கும் இருதயநோய், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பத்து கொடிய நோய்கள் வருவதற்குப் போதை பொருட்கள் காரணமாகத் திகழ்கின்றன. போதை பழக்கத்துக்கு அடிமையான இளவயதினர் ஏராளமானோர் தற்கொலை செய்து உயிரை மாய்ந்து இருக்கிறார்கள்.

எனவே, போதைப் பழக்கத்திற்கு நாம் அடிமையாகாமல் வாழ வேண்டியது அவசியமாகிறது. அதுமட்டுமின்றி, போதைப் பழக்கத்திற்கு ஆளாகி மீள வழி தெரியாமல் தவிப்போரை அதிலிருந்து மீட்டு புதிய பாதைக்கு மாற்ற முடியாமல் அவர்களின் உறவுகள் தவித்துப் போகின்றனர். பணம் கேட்பார்கள் அல்லது வீட்டிலிருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுக்க ஆரம்பிப்பார்கள். எனவே, வீட்டில் வைத்திருக்கும் பணம் திருடு போவது எளிதாக வீட்டில் அரங்கேறலாம்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களின் முகமே அதைக்காட்டிக் கொடுத்துவிடும். அவர்களின் உதடுகள், பற்கள் கறைகளாக மாறியிருக்கும் அல்லது எப்போதும் சோர்வாகவோ, எரிச்சலாகவோ காணப்படுவார்கள்; எப்போதும் தனிமையில் இருப்பார்கள். பெற்றோர்களுடன் ஏற்கெனவே நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் திடீரெனச் சரியாகப் பேசாமல் போகலாம்..

“இதுல இவ்ளோ பிரச்சனை இருக்கு அதி, இதை எப்படி உனக்கு ஷார்ட் ஃபில்மா எடுக்கத் தோணிச்சு”

“எனக்கு அது சோஷியல் அவெர்னஸா தோணிச்சு, அதான் எடுத்தேன் தீரா, நான் சரளா மேம்கிட்ட ஒரு பெண்ட்ரைவ் கொடுத்து வச்சேன் அது இருந்தா அகிலன் மேல தான் தப்புன்னு ப்ரூவ் பண்ணிடலாம். அதுல சில கிளிப்பிங்ஸ் இருக்கு.”

“சரளா மேடமா.?” அதிர்ச்சி ஆனான் தீரா.

“ஏன் ஷாக் ஆகுறீங்க தீரா, அவங்க கிட்ட தான் நான் இன்னொரு பென்டிரைவ கொடுத்து வச்சிருந்தேன்” என நதி சொல்லிக்கொண்டிருந்த போதே குற்ற உணர்வில் மூழ்கி போனான் தீரா.

“சாரி டூ சே திஸ் நதி, சரளா மேடம் இப்போ உயிரோட இல்லை” தீரேந்திரன் சொல்ல,

“வாட்” என அதிர்ச்சியில் கேட்டவளுக்கு உலகமே தலை கீழாய் சுற்றுவதைப் போல் உணர்ந்தாள் பேதை பெண்ணவள்

“சரளா மேம் எப்படி இறந்தாங்க.?” வருத்ததுடன் கேட்டாள் நதி.

“அது வந்து நார்மல் டெத் தான் சமாளித்து வைத்தான் தீரேந்திரன்.

“அய்யோ அவங்க எவ்வளவு நல்ல மேம் தெரியுமா.? என்ன செஞ்சாலும் பாராட்டுவாங்க,அவங்களுக்கா இப்படி ஒரு நிலைமை வரணும்” வருந்தினாள் அகரநதி.

“நதி நீ ஃபீல் பண்ணாதே சரளா மேம் பத்தி யோசிக்காதே, உனக்கு தேவையான பென்டிரைவ கண்டுபிடிச்சு தர்றது என்னோட பொறுப்பு” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே,

என்ன தான் நடக்கிறது.? எதைப்பற்றி பேசுகிறார்கள் என புரியாமல் வழித்துக்கொண்டிருந்த வசந்தியும் கோபாலனும்,

“அதி என்ன தான் நடந்திச்சு சொல்லுமா.?” கோபாலன் கேட்க,

“அப்பா கார்த்திக் மேல எந்த தப்பும் இல்லை, அது மட்டும் தான் என்னால இப்போதைக்கு சொல்ல முடியும், ஏன் கார்த்தி இப்படி கன்ஃபெஸ் பண்ணினான்னு நான் தெரிஞ்சுக்கணும்பா, எனக்கு நினைவு வந்தது யாருக்கும் தெரியவேண்டாம்பா, தெரிஞ்சா எனக்கும் ஆபத்து கார்த்திக்கும் ஆபத்து” என அதி சொல்லி முடிக்க,

“அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல சாப்பிடு அப்பறம் கேஸ் பத்தி பேசிக்கலாம்” என வசந்தி சொல்ல,

“சரி அதி நான் கிளம்புறேன், எங்க வெளிய போகணும்னாலும் என்கிட்ட சொல்லு, நான் இல்லாம நீ எங்க போனாலும் ரிஸ்க் தான்” தீரேந்திரன் சொல்லி விடைபெற்று சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஒரு சோஷியல் மெசேஜ் இருக்கு … சூப்பர் .. தீரா நதியை தேடி போனியா .. அழகான காதல் ..

  2. போதைபொருட்களின் புழக்கம், அதனை எடுத்துக்கொள்பவர்களது பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் அதன் தீமைகளை பற்றி தெளிவாக எடுத்து கூறியுள்ளீர்கள்.

    கண்ணை மட்டுமே பார்த்து காதல் கொண்டு நதியை தேடி அலைந்துள்ளான் தீரன்.

    Social responsibility awareness காக shortfilm எடுக்கறது பாராட்டுக்குரியது தான். ஆனால் அதனை நம்பகமான அதிகாரம் மிக்கவர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

    பொறுப்புள்ள காவல் அதிகாரியை காதலிப்பவள் இந்த விடயத்தை அவனிடம் சொல்லி பார்த்தாள் என்ன என்று சிந்தித்திருக்கலாம்.

    அபாயகரமான செயல் எனும் போது கவனமாக நமது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் அல்லவா.