Loading

மெல்லினம் 10:

வெளியே மழை அடித்து கொண்டிருக்க அதற்கு நேர்மாறாக வீட்டில் உள்ளவர்களிடம் கனத்த மெளனம்.

அத்விதனுக்கு உணவை ஊட்டி கொண்டிருந்தவளின் பார்வை அங்கே சட்டமாக டைனிங் டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த கதிரழகனையே தொட்டு தொட்டு மீண்டது.

அடுத்தவர் வீட்டில் உட்கார்ந்து உண்டு கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இன்றி இஷ்டத்திற்கு இருப்பவனை கண்டு மெல்லிய புன்னகை அவளிடம்.

‘என்ன மாதிரியான மனிதன் இவன்’ என‌ கதிரின் குணத்தினை சுத்தமாக இவளால் கணிக்க முடியவில்லை.

நேரத்திற்கு ஒரு முகம் காட்டுகிறான் இவளிடம் மட்டுமே. அதில் எது இவனின் உண்மையான குணம் என்பதை கண்டறிய‌ முடியாது திணறுகிறாள்.

இதுவரை அவனை தன்மையானவன் அமைதியானவன்‌ பிரச்சனையில் இருந்து ஒதுங்கி செல்பவன் என எண்ணியிருந்தவளின் எண்ணம் சற்று முன் அவன் நடந்து கொண்டதில் முற்றிலுமாக மாறி அடவாடிக்காரன் என்ற பெயரை வாங்கியிருந்தான் அவளிடம்.

சற்று முன்!

ஹரிஷ் சண்டையிட்டு சென்றதில் மிகவும் அவமானமாக உணர்ந்தவளுக்கு எங்கே பரசுராம் வீட்டினர் அவளை மிகவும் கீழாக நினைத்து விடுவார்களோ என்ற‌‌ பயம் எழ அதற்கு மேல் அங்கிருக்க அவள் மனம் ஒப்பவில்லை.

பரசுராமும் அவர் மனைவி லதாவும் சொல்ல சொல்ல விடாப்பிடியாக அவர்களிடம் விடை பெற்று தன் வீட்டிற்கு அவள் செல்ல பின்னோடு வால் பிடித்தாற் போல் கதிரும்.

மெல்லிய தூறலில் அத்விதனை நனையாதவாறு பிடித்து கொண்டு வேகமாக ஓடியவள் கதவில் சென்று சாவியை மாட்ட

பின்னால் கேட்ட வேக மூச்சு சத்தத்தில் அதிர்ந்து பின் பார்க்க கதிரழகன் தான்.

‘இவர் கார் எடுக்காமா இங்க ஏன் வந்தாரு தூறலதானா இருக்கு’ என அவன் வீட்டிற்கு செல்வான் என நினைத்தவள் அவன் செல்லாது தன் பின்னே வந்ததும்,

“சார் நீங்க வீட்டுக்கு போகலையா?”என

அவன் பார்வை வெளியே தொட்டு அவளை முறைக்க,

‘எதுக்கு இப்புடி பார்க்குறாறு ஒரு வேளை தனக்காக பார்க்கிறாரோ’ என நினைத்தவள்

“நான் பாத்துப்பேன் சார் நீங்க வீட்டுக்கு போங்க” என அவள் மென்மையாக உரைக்க

“அந்த ஆணி எங்களுக்கு‌ தெரியும் முதல்ல நகரு நீ மனுஷ நெலைமை புரியாமா??” என எரிந்து விழுந்தவன் அவள் நகர்ந்ததும் சாவியை கொண்டு திறந்தவாறு,

“இந்த அடை மழையில மனசாட்சியே இல்லாம கிளம்பி போன்னு சொல்லுறத பாரு நா வேற எங்கம்மாக்கு கடைசி பிள்ளை இந்த மழையில நனைச்சு ஜன்னி கின்னி வந்திடுச்சுன்னா இவங்களா வந்து பாப்பாங்க” என சத்தமாக அவளுக்கு கேட்குமாறே அவன் முணுமுணுக்க,

அவனது பேச்சில் திகைத்தவள் எங்கே மழை மறுபடியும் பிடித்து கொண்டதோ என நினைத்து வெளியே பார்த்தாள்.

குளுக்கோஸ் பாட்டிலில் இருந்து சொட்டு சொட்டாய் இறங்கும் மருந்தை போல‌ மழை துளிகள் விழுந்து கொண்டிருக்க.

‘இதையா அடை மழையின்னு சொல்லுறாரு’ என நினைத்தவள் அவனை விசித்திரமாக பார்க்க

“நான் வேற எங்கம்மாக்கு கடைசி பிள்ளை” என்னறவனின் வாக்கியமும் அவளிற்கு நினைவு வர

‘கடைசியா பொறந்த கடைசி பிள்ளையாதான ஆவோம் என்ன இவரு உளறுறாரு’ என்றவனின் பேச்சில் குழம்பியவள் அவனை ஒரு மாதிரி பார்க்க,

அதற்குள் கதவை திறந்து அவன் சென்று விட அத்விதனை தூக்கி கொண்டு இவளும் சென்றாள்.

உள்ளே நுழைந்தவன் பாத்ரூம் எங்கிருக்கிறது என கேட்டு செல்ல,

‘ஓ இத தான் அவஸ்தையின்னு சொன்னாரோ ச்சே நம்ம வேற லூசு தனமா வேற‌ எதையே நினைச்சுட்டோம்’ என நினைத்தவள் அத்விதனுக்கு இரவு உணவினை ரெடி செய்ய ஆரம்பித்திருந்தாள்.

இட்லி மாவு வேறு தீர்ந்திருக்க வேறு எதுவும் செய்யும்‌ தெம்பில்லை என்பதால் டக்கென வெங்காயம் தக்காளியை கட் செய்தவள் குக்கரில் தாளித்து விட்டு அரிசியையும் பருப்பையும் ஒரு சேர குக்கரில் போட்டு தண்ணீர் கொஞ்சம் அதிகம் ஊற்றி விட்டு அடுப்பில் ஏற்றியவள்‌ அதற்குள் அத்விதனுக்கு ஈர உடையை மாற்றி விடுவோம் என நினைத்து வெளி வர,

அங்கே ஏற்கனவே கதிர் அத்விதனிடம் பேச்சு கொடுத்தவாறே துணியை மாற்றி விட்டு கொண்டிருக்க,

இதோ கிளம்பிவிடுவான் என நினைத்திருந்தவளிற்கு திக் என்றது.

‘இதென்ன இவரு இன்னைக்குன்னு பாத்து இப்புடி அடம் பண்ணுறாரு’ எண்ணியவள் அவர்கள் அருகே செல்ல,

“குழந்தைக்கு டிரஸ் மாத்தணும்ன்ற நெனைப்பே இல்லையா எவ்வளவு நேரம் ஈரத்துலயே இருப்பான்” என கதிர் அவள் அரவம் உணர்ந்து கடிய,

“இல்லை அவனுக்கு பசிக்கும் அதான் சாதம் வச்சிட்டு வந்துடலாம்னு போனேன்” என அவள் மெல்லிய குரலில் உரைக்க,

“ஓ அப்போ சரி நீ போய் அதை பாரு” என்கையில் குக்கர் விசிலடிக்க கிட்டசனுள் சென்றவள், இரண்டு விசில்கள் அதிகமாக விட்டு குழைய விட்டவள் இறக்கும் முன் நன்றாக நான்கு ஸ்பூன் நெய்யினை ஊற்றி கிளறி விட்டு அத்விதனுக்கு ஒரு தட்டில் இட்டவள் கதிர் இருக்கையில் எப்படி தான் உண்ணுவது என நினைத்து குழந்தைக்கு மட்டும் எடுத்து சென்றாள்.

“அத்வி வா சாப்பிடலாம்” என அவனை தூக்கி டேபிளில் அமர வைத்தவள் ஊட்ட ஆரம்பித்தாள்.

“இதென்ன இந்த மழையில அவனுக்கு ஊறுகாய் தர உடம்புக்கு சேருமா?” என தட்டில் இருந்ததை பார்த்து அவன் கேட்க,

“கொஞ்சமா தான்!” என்க,

“கொஞ்சமோ நெறையவோ எதுக்கு இந்த மழையில குடுக்கிற?”

“இல்லையின்னா இவனுக்கு இந்த சாதம் இறங்காது பருப்பு சோறுக்கு வேற எதை வச்சாலாம் சாப்பிட மாட்டான் நானும் லைட்டாதான் சும்மா சாதத்துல தொட்டு குடுப்பேன்” என,

“என்ன சுடசுட பருப்பு சாதத்துக்கு சைடிஸ் ஊறுகாவா ச்சைக் என்ன ஒரு கண்றாவி காம்பினேஷன்!”

“ஹலோ அது ஒண்ணும் அவ்ளோ கண்றாவி காம்பினேஷன் கிடையாது ” என அவள் சற்றே குரலை உயர்த்தி விட,

சற்று நேரம் அவளை இமைக்காமல் அவன் பார்க்க,

அவன் பார்வையின் குறுகுறுப்பில் அவள் நெளிய,

“ஓஹோ! இந்த கண்றாவி காம்பினேஷன் உன்னோடதாக்கும் அதான் பையனுக்கும் ஒட்டி விட்டிருக்க” என அவன் நக்கலாக சிரிக்க,

“நான் ஒண்ணும் ஒட்டி விடல!”

“அப்பறம் எப்புடி அவனுக்கு இது தெரிஞ்சுச்சு”

“அது அது நான் சாப்பிடும் போது வந்து கேட்பான் அப்பிடியே குடுத்து பழகிட்டான்”

“அப்போ நான் சொன்னது தான் சரி நீ அவனுக்கு ஒட்டி தான் விட்டுருக்க” என அவன் சிரிக்க,

‘அய்யோ என்ன இன்னைக்கு இப்புடி பேசி மடக்குறாரு’ என அவளால் நினைக்க மட்டும் தான் முடிந்தது.

அதற்கு பின் அவள் அமைதியாகிட கதிரும் விட்டுவிட்டான்.

சாப்பிட்டு கொண்டிருந்த அத்விதன் திடீரென “அங்கிள் நீங்க புவ்வா சாப்பிடலையா” என்க,

“எங்க உங்கம்மா கொடுத்தா தான நானும் தருவாங்கன்னு அப்போ இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ சாப்பிட்டதும் தருவாங்க போல இந்த மழைக்கு வேற வயிறு சத்தம் போடுது” என அவன் பாவமாக உரைக்க,

‘அய்யோட இது என்ன சோதனை! இவர் என்ன விருந்துக்கா வந்துருக்குறாரு’ என அவள் திகைக்க,

“ம்மா எனக்கு போதும் வயிறு புஃல் அங்கிளுக்கு கொடு ” என அவன் உண்ணுவதில் இருந்து தப்பிக்க பார்க்க,

“என்ன சொல்லுறீங்க நீங்க இங்கயா சாப்பிட போறீங்க!” என அவள் திகைத்து கேட்க,

அவள் கேள்வியில் அதிர்ந்து அவளை பார்த்தவன் அடுத்த நொடி வேக வேகமாக ராகேஷிற்கு அழைக்க அவன் எடுத்த நொடி,

“பாரு பாரு உன் பொண்ணோட டான்ஸ் டீச்சரை! பையன பாக்கணும்னு‌ துடிச்சதால பேய் மழையின்னு கூட பாக்காமா அவுங்கள‌ ரிஸ்க் எடுத்து இங்க கூட்டிட்டு வந்து விட்டதுக்கு வீட்டுக்குள்ள கூட விடமா வாசலோட திரும்பவும் அனுப்ப பாத்தா!”

“என்ன என்ன விடல இப்ப வீட்டுக்குள்ள இருந்து தான பேசுறீங்க!” என அவன் ராகேஷிற்கு அழைத்து பேசியதும் பயந்தவள் பதறி அவனை இடைமறிக்க,

“ஓஹோ நீயா ஒண்ணும் விடல நானா தான் வந்தேன்” என அவளிடம் எகிறியவன்,

“வீட்டுக்குள்ளயும் விடல இப்போ ஒரு வாய் சாப்பாடு கூட போட மாட்டேன்றா. இப்புடி மழையின்னு கூட பாக்காமா கூப்புட்டு வந்தவனுக்கு ஒரு வாய் சாப்பாடு கூட கொடுக்க முடியாத உன் பொண்ணோட டீச்சரால மதியம் சாப்பிட்டது நான்! ஒரு வார்த்தைக்கு கூட சாப்பிடுங்கன்னு சொல்லல அந்த குழந்தைக்கு தோணுறது கூட இங்க தோணல இவுங்க ரெண்டு பேருக்கு மட்டும் சமைச்சிருக்கா!” என்றவனின் பேச்சில்,

‘அய்யோ இது என்ன ரொம்ப பேசுறாரு’ என அலறியவள் அவனின் கடைசி வாக்கியத்தில்,

“இல்லை இல்லை ரெண்டு பேருக்கு மட்டும் சமைக்கல” எங்கே ராகேஷ் தன்னை தவறாக எண்ணி விடுவாரோ என நினைத்து முல்லை அவசர அவசரமாக கூற,

“என்ன‌ என்ன சொன்ன இப்போ!!!” என அவன் அதட்டி கேட்க,

“ரெண்டு பேருக்கு மட்டும் சமைக்கல அரிசி கூட தான் போட்டேன்” என்க,

“ஓஹ் அப்போ சாதம் இருக்கா???” என கேட்க,

“இருக்கு இருக்கு” என்றவளின் தவையாட்டலில்,

“ஓஹ்‌‌ சாப்பாடு இருக்காம்டா நீ வைடா போனை சும்மா நொய்யி நொய்யின்னு பேசிக்கிட்டு” என‌ கட் செய்தவன்,

“என்ன இன்னும் எதுக்கு என் மூஞ்சிய எதுக்கு பாத்துட்டு இருக்க போ போய் சாப்பாடு எடுத்துட்டு வா பசி உயிர் போகுது” என வள்ளென்று விழுக,

அடித்து பிடித்து கொண்டு கிட்சனுக்குள் ஓடினாள் முல்லை.

மழை வேறு அடிப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் மின்சாரம் தடைபடலாம் எப்போது வருகிறது என்ற தெரியாத நிலையில் சாதம் மீதமிருந்தால் காலையில் சூடு செய்து கொள்ளலாம் என அவள் நினைத்து தான் அரிசியை கூட வைத்தது.

நல்லவேளை அது தான் அவளை தற்போது காப்பாற்றியது.

அத்விதனுக்கு ஊட்டியவாறே இதனை நினைத்தவளிற்கு

‘ச்சை என்ன வாய் டா சாமி இவருக்கு” என மானசீகமாக நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது அவளால்.

அவ்விதனுக்கு ஊட்டி முடித்தவள் கதிரை பார்க்க காலாட்டியவாறு கூலாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.

‘இப்போதைக்கு முடிக்க மாட்டாரு போலிருக்கே நம்மளுக்கு ஏதாச்சும் மிஞ்சுமா’ என அவள் நினைத்த அடுத்த நொடி இவளின் எண்ணம் புரிந்து விட்டதோ,

பெரிய மனது பண்ணி எழுந்து கொண்டான்.

பின் இவள் சாப்பிட்டு முடித்து பத்திரங்களை கழுவி முடித்து வரும் வரையில் அத்விதனுடன் விளையாடிய படி இருந்தவனை கண்டவளிற்கு

‘இவர் இருக்குற தோரணைய பாத்தா இங்க இருந்து கிளம்ப மாட்டாரு போலயே. இங்கேயே தங்கிடுவாறோ. ஆனா எப்புடி இவர் இங்க தங்க முடியும்’ என கவலையுற்றவள்,

‘ச்சே ச்சே பசியில அப்பிடி பேசியிருப்பாரு நான் செஞ்சதும் தப்பு தானே. இப்ப கோவம் போயிருக்கும் அவருக்கே தெரியும் இப்புடி தனியா ஒரு பொண்ணு கூட தங்குறது சங்கடம்னு கிளம்பிடுவாரு’ என மறுநொடி நினைத்தவள் மீதி பாத்திரங்களை அவள் தேய்த்து முடித்து கிச்சனை சுத்தம் செய்து முடிக்கும் வரையில் அவன் கிளம்பிய பாடாக இல்லை.

‘நம்ம கிட்ட சொல்லிட்டு போக வெயிட் பண்ணுறாறோ’ என அவசரமாக வெளியே வந்தவள்,

“அத்வி டைம் ஆச்சு வா தூங்கலாம்” என அவள் அழைக்க,

“ஆமா ஆமா அதி குட்டி தூங்க போகலாம்” என கதிர் அவனை தூக்கி கொள்ள.நொந்து கொண்டவள்,

“நீங்க இங்கயேவா தூங்க போறீங்..” என அவள் முடிப்பதற்குள் வேகமாக போனை எடுத்தவன்,

“டேய் ராகேஷூ!” என அவன் கத்திய நொடி,

“அய்யோ திரும்பவும் பேசுறாரே!”என அலறியவள்,

“நீங்க இங்கேயே தூங்குறீங்களா இல்லை ரூம்ல தூங்குறீங்களான்னு கேட்க வந்தேன்” என அவள் பதறி ப்ளேட்டை திருப்பி போட,

ஒன்றும் பேசாமல் போனை அணைத்தவன் “இங்கேயே படுத்துகிறேன் பெட்டை மட்டும் எடுத்துகிறேன்” என்றவன் அவள் ரூம் நோக்கி செல்ல,

தன் வாயாலே அவனை இங்க தங்குமாறு சொல்ல வைத்து விட்டானோ என நொந்தவள் தலையில் அடிக்காத குறையாக அவன் பின்னே செல்ல,

‘யாருகிட்ட! இந்த கதிர் கிட்டேயவா’ என

அவளின் நிலை எண்ணி உள்ளுக்குள் நகைத்து கொண்டான் அவன் கதிரழகன் முல்லையின் அழகன்!

“என்னங்க கதிர் என்ன சொன்னான் இத்தனை தடவை பேசுறீங்க ஏதும் அங்க பிரச்சனையா” என தட்டில் வைத்து தோசையை உண்ண விடாது கேள்வி கேட்டு தொணத்த சீதாவை கண்டு கடுப்புற்றவன்,

“அவன் எங்க டி என்ன பேச விட்டான் ரெண்டு தடவையும் அவன் மட்டும் தான் பேசுனான். நீ சுட்ட தோசைய சூடா இருக்கும் போது சாப்பிட முடியாது இதுல ஆறி போயிட்ட கண்றாவியா இருக்கும். அவன் நல்லா அங்க வயிறு முட்ட தின்னுட்டான் மனுஷன இந்த கருகி போன தோசையை கூட நிம்மதியா சாப்பிட விடுறியாடி நீ!” என உண்ண முடியாத கடுப்பில் அவன் எரிந்து விழ,

“என்னது! நா சுட்ட தோசை கண்றாவியா உங்களுக்கு? அப்புடி ஒண்ணும் கஷ்டப்பட்டு இந்த கருகி போன தோசையை நீங்க சாப்பிட வேணாம் பட்டினியாவே கிடங்க” என சீதா தட்டை பிடுங்கி கொண்டு சென்று விட,

“வாயை வைச்சிட்டு அமைதியா இருக்க மாட்டியாடா நீயி இந்த நேரத்துல வெளியே போய் சாப்பிட முடியுமா? போச்சு கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல இல்லை இல்லை‌ அவன் வாயால தான் எனக்கு கிடைக்கல” என கூறியவனுக்கு கதிர் போனில் பேசியது நினைவு வர,

“அட ச்சை, வாயா அது, சரியான காவாய் இவன் கல்யாணம் பண்ணுறதுக்குள்ள எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துருவான் போலிருக்கே” என‌ புலம்பியவன்,

“சீதுக் குட்டி!” என சீதாவிடம் அடி வாங்க சென்று விட்டான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹே சூப்பர் பா .. இந்த அத்தியாயம் அதிரடி சரவெடி .. நல்லா மனசு விட்டு சிரிச்சேன் .. முல்லை கதிர் கிட்ட நீ மாட்டிக்கிட்ட .. அவளுக்கு பாதுகாப்பா இருக்குறான் .. ஆனா அதை இப்படி செஞ்சா தான் முல்லை ஏத்துப்பா அதான் .. ராகேஷ் கதிரை காவாய் அப்படின்னுலாம் சொல்ல கூடாது .. அப்புறம் சீதாவை நாங்க எக்ஸ்ட்ரா ரெண்டு அடி அடிக்க சொல்லுவோம் .. அப்போ எல்லாரும் பிளான் பண்ணி தான் முல்லையை கதிர் வீட்டுக்குள்ள கொண்டு வந்திருக்காங்க போல ..

  2. கதிர் பேசின பேச்சுக்கு நான் கூட வெளிய அடை மழை வெளுத்து வாங்குதுன்னு நினைச்சேன்.
    இவனுக்காக முல்லைய வேற அவசரப்பட்டு திட்டினேன். 🫢

    கன்றாவி காம்பினேஷன்னா? அடேய் காலம் காலமா அரிசி பருப்பு சாதத்துக்கு ஊறுகாய் தொட்டு இல்ல இல்ல பிரட்டி சாப்பிடற பரம்பரை டா நாங்க.

    ஆனாலும் முல்லை அந்த குட்டி குழந்தைக்கு கேட்டு வாங்கி சாப்பிடற அளவுக்கு பழக்கப்படுத்திருக்க பார்த்தியா! U r great🤣🤣

    ஆத்வி குட்டி சாப்பிட்டு முடிச்சதும் ஆங்கிள்கு சோறு போடுவாங்கனு காத்திருந்தியா கதிர்! 🤣🤣

    அவன் பாட்டுக்கு பொண்டாட்டி கையாள கருகுன தோசை சாப்டிட்டு இருந்தான் அவன நோண்டி விட்டு கடைசில அந்த தோசையும் போச்சுது பாவம்.

    கிளம்பற எண்ணமே இல்லாம பாய போட்டு படுத்தேவிட்டான் முல்லையின் அழகன்.