Loading

“ஹாய் இழை…” என்றவாறே கதவைத் திறந்துகொண்டு புன்னகை முகமாக உள்ளே நுழைந்தான் இந்திரவர்மன்.

அவனை சுத்தமாக எதிர்பாராத இழை சிறு திடுக்கிடலுடன் எழுந்து நின்றாள்.

“ஹே, சிட் சிட். எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம். உட்கார்,” என்றவன் அவளருகே நாற்காலியை எடுத்துப் போட்டு அமர…

“என்ன இது நீ. நீங்க எப்படி இங்க,” என்ற இழை சற்று நகர்ந்து அமர,

“ஏன், நான் வரக்கூடாதா.”

“இல்ல, அம்மாப்பா வீட்ல இருக்காங்க. நீங்க அங்க போய் பாருங்க.”

“நான் உன்னைதான் பார்க்க வந்தேன் இழை. எப்படி இருக்க. அன்னைக்கு பார்த்ததுக்கப்புறம் உன்னை பார்க்க நேரமே கிடைக்கலை. செம டைட் ஸ்கெட்யூல். நேரம் கிடைக்கவும் வந்துட்டேன். டூ யூ நோ ஹவ் மச் ஐ லவ் யூ. கிட்டத்தட்ட நாலு வருஷமா எங்கம்மா பெண் பார்த்துட்டு வராங்க. ஆனா எனக்கு எந்த பெண்ணையும் பிடிக்கலை. உன்னை பார்த்ததுமே நீதான் என் லைஃப்னு முடிவு பண்ணிட்டேன்,” என்று மேலும் ஏதேதோ பிதற்றிக்கொண்டே சென்றவன் எதார்த்தம் போல அவளை இன்னும் நெருங்கி அமர்ந்திருந்தான்.

அதை கண்டதும் “தள்ளி உட்காருங்க,” என்று பட்டென சொல்லிவிட்டவள் தன்போக்கில் எழுந்தும் நின்றுவிட்டாள்.

“ஹே, என்ன எந்திரிச்சிட்ட. வீ ஆர் சூன் டு பி கப்பிள் இழை. தூர உட்காந்து என்ன பேச. சிட் சிட்,” என்றவன் அவள் நாற்காலியை தள்ளிப்போட்டு அமர்ந்ததும் அதை பார்த்தவாறே,

“தென் எங்கேஜ்மென்ட் ப்ரிபரேஷன்லாம் எப்படி போகுது.”

“ஹ்ம்ம்.”

“சரி, உன்னோட வேலை முடிஞ்சதா.”

“ஜஸ்ட் நவ். இப்போ நான் வீட்டுக்குதான் கிளம்பிட்டு இருக்கேன். ஸோ நீங்க,” என்று அவனை பார்க்கவும்,

“வாவ். தட்ஸ் ஸோ கூல். அப்போ நான் சரியான நேரத்துக்குதான் வந்திருக்கேன்னு சொல்லு,” என்று அட்டகாசமாக சிரித்தவன் மேலும் அவளருகே நெருங்கி இருந்தான்.

“என்ன சொல்றீங்க.”

“பொதுவாவே இந்தியன் கேர்ள்ஸ் ஷை டைப்னு கேள்விப்பட்டிருக்கேன். நீயும் அப்படிதான் இருக்க. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்,” என்றதுமே “ஷையா” என்று புரியாமல் அவனை பார்த்தவளுக்கு, அவன் எப்போ இந்த இடத்தை காலி செய்வான் என்ற எரிச்சல்.

“உன்னை வெளில கூட்டிட்டு போக வந்தேன். அதான் உன்னோட வேலை முடிஞ்சதே, வா கிளம்பலாம்,” என்றழைத்தான்.

“என்ன பேசுறீங்க. வெளிலயா. எங்க.”

“எங்கன்னு சொன்னாதான் வருவியா.”

“ஸீ, நீங்க கூப்பிட்டதும் வர வேற யாரா,” என்று கோபமாக ஆரம்பித்தவளுக்கு, தனியாக பேசுவது சரிவராது, எதுவாகினும் பெற்றோர் மூலமாக பேசுவதே சிறந்தது என்பது புரிய, பிரச்சனையின்றி அவனை அனுப்பவேண்டி,

“ஸாரி இந்தர். நீங்க சொன்னாலும் வர எண்ணம் எனக்கில்ல,” என்றாள் முகத்தில் அடித்தார் போல.  அது அவனுக்கு புரிபட்டாலும் காரியம் ஆக வேண்டுமே.

சட்டென புன்னகையை பூசிக்கொண்டு, “ஏன் உங்க அம்மாட்ட கேட்காம எங்கயும் வரமாட்டியா. ஓ கம்மான் இழை, நீ என்ன சின்ன குழந்தையா அம்மாகிட்ட பர்மிஷன் கேட்க,” என்று அவள் கையை பிடிக்கவும்,

“என்ன பண்றீங்க. கை எடுங்க,” என்ற இழை சட்டென அவன் கையை உதறி இரண்டடி பின்னே சென்றிருந்தாள்.

“ஹே, ரிலாக்ஸ் இழை. கையைதானே பிடிச்சேன். இதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற. ஸீ, எனக்கு இருக்க கமிட்மெண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன், புரியுதா. உன்னோட லஞ்ச் முடிச்சுட்டு அப்படியே ஒரு லாங் டிரைவ் போயிட்டு வரலாம்னு கூப்பிட்டேன். இது தப்பா?”

“லாங் டிரைவா… எதுக்கு?”

“நமக்கு இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயமாக போகுது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டாமா. ஜஸ்ட் கம் வித் மீ,” என்று இப்போது ஆணையிட்டான்.

“லிசன் மிஸ்டர் இந்தர். காலையில இருந்து ஹெக்டிக். இன்னும் சாப்பிடல. அதோட தலைவலி ஒருபக்கம். ப்ளீஸ், நீங்க எதுவா இருந்தாலும் என் அப்பா அம்மாகிட்ட பேசுங்க.”

“வாட் இஸ் திஸ் இழை. உன்னை லஞ்ச்க்கு எடுத்துட்டு போக வந்தா வேண்டாம் சொல்ற. ஓகே. பட் உனக்காக கொண்டுவந்த சர்ப்ரைஸ் அவங்ககிட்ட கொடுக்க முடியுமா. யூ நோ, நீ என்னை ரொம்ப படுத்துற. உன்னை பார்த்துட்டு போனதில இருந்து சுத்தமா தூக்கமே இல்ல. அதான் இன்னைக்கு உன்னை என்னோடவே வச்சுக்க முடிவு செய்து கிளம்பினவன் உடனே உன்னை தேடி வந்துட்டேன். ஸோ ப்ளீஸ், க்ளோஸ் யோர் ஐஸ்.”

“என்ன உளறல் இது. ஸீ இந்தர்,” என்றவளை இடையிட்டவன்,

“ப்ளீஸ் கண்ணை மூடு இழை. அப்போதான் என்னோட லவ் எப்படிப்பட்டதுன்னு உனக்கு புரியும்,” என்றதும், இவன் வேறு வந்து உயிரை எடுக்கிறானே, எப்படி இவனை துரத்துவது என்று யோசித்தவளுக்கு, அவன் நடவடிக்கை சுத்தமாக பிடிக்காமல் போக, கண்களை மூடாமல் பார்த்திருக்க,

“முதல்ல நீ இதை பாரு,” என்று தன் சட்டை பட்டனை கழற்ற தொடங்கினான்.

அதை கண்டு பதறிப்போய் எழுந்தவள்,

“என்ன பண்றீங்க நீங்க. ஜஸ்ட் ஸ்டாப் இட்,” என்று திரும்பி நின்றுகொள்ள, அவனோ முதலிரு பொத்தான்களை கழற்றிவிட்டு,

“லுக் அட் மீ இழை,” என்றான்.

“லிசன் இந்தர். நீங்க செய்யற எதுவும் சரியில்ல. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.”

“இழை, சொன்னா கேளு. முதல்ல என்னை பாரு. அப்போதான் உன்மேல எவ்ளோ லவ் இருக்குன்னு உனக்கு புரியும்,” என்றவன் அவளெதிரே வந்து நின்று, தன் இடது மார்பில் பச்சை குத்தியிருந்த அவள் பெயரை காண்பித்தான்.

“மிஸ்டர் இந்தர், என்ன இதெல்லாம். நீங்க முதல்ல பட்டன் போடுங்க,” என்றவளுக்கு, இதற்கு மேலும் இங்கிருப்பது ஆபத்து என்பதால்,

“ப்ளீஸ், வீட்டுக்கு போய் பேசிக்கலாம்,” என்றாள்.

“வீட்டுக்கு போகலாம். ஆனா அதுக்கு முன்ன ஒரு டிரைவ்,” என்று அவள் வழியை மறித்தவாறு நின்றிருந்தான் இந்தர்.

“என்ன பண்றீங்க. வழி விடுங்க. எனக்கு டிரைவ் போக பிடிக்காது.”

“ஓகே, டிரைவ் வேண்டாம். ஆனா நமக்காக ரூம் புக் பண்ணியிருக்கேன். உடனே கிளம்பு. ஈவினிங் வந்துடலாம்..” என்றான்.

“ரூமா?” என்று இழை திகைக்க,

“ஆமா. என்ன தான் எனக்கு பிடிச்ச புதுக் காரை வாங்கறதா இருந்தாலும், அதோட பிராண்ட், ஃபீச்சர்ஸ், மைலேஜ் அக்செப்ட்டபிளா இருந்தாலும், டெஸ்ட் டிரைவ் போகாம எடுக்கமாட்டேன். காருக்கே அப்படின்னா, பொண்டாட்டியா வரப்போற உன்னோட கண்டிஷன் என்ன. எப்படி கம்பனி கொடுப்பன்னு தெரியாம கல்யாணம் செய்ய முடியுமா?” என்று அவன் கேட்ட மறுகணமே இழை ஓங்கி அறைந்தாள்.

“ஏய்” என்று ஆவேசமாக அவளை பார்க்க “வெளியே போடா இல்ல கொன்னுடுவேன்” என்றாள் ஆவேசத்தோடு.

“யாரை பார்த்துடி வெளியே போக சொல்ற. நான் உன்னை கட்டிக்க போறவன்”

“யார் நீயா. உன்னை மாதிரி பொறுக்கியை இன்னமும் நிற்க வச்சு பேசிட்டு இருக்கறதே பெருசு” என்று விழிகள் சிவந்தவள் கூர்மையான மருத்துவ உபகரணத்தை எடுத்து அவன் முன் ஆவேசமாக நீட்டியிருந்தாள்

அதை கண்டு அட்டகாசமாக சிரித்தவன், “இதுதான் இருக்கா? இன்னும் ஷார்ப்பா எதுவும் இல்லையா. ஐ திங்க் திஸ் இஸ் ஷார்ப்” என்று வேறொன்றை நீட்ட இழையோ சற்றும் யோசிக்காமல் நீட்டிய அவன் கரத்தில் இமைக்கும் நேரத்தில் வெட்டியிருந்தாள்.

“ஏய்” என்று பெருகிய குருதியை பார்த்தவாறு அவன் கத்த “ராஸ்கல் மரியாதையா வெளில போகல. நடக்கறதே வேற” என்று அவசரமாக மேஜையில் இருந்த கைபேசியை எடுத்து தன் தந்தைக்கு அழைக்க முற்பட்டாள்

அழைப்பு செல்லும் முன்னமே அதை பிடுங்கி அணைத்து தூர எறிந்தவன், “இதுக்கு அப்புறமும் நீ இங்கிருந்து முழுசா போயிட முடியுமாடி” என்று அவள் முன் குருதி வழியும் கரத்தை நீட்டியவன் அவள் ஷாலை பிடித்து இழுத்து தன் கையில் கட்டியவாறே,

“இல்ல நான் போகதான் விட்டுடுவேனா?” என்று ஆக்ரோஷமாக இழையை நெருங்க.., அவளோ “வேண்டாம் இந்தர் வெளில போ” என்றவாறே தன்னை காப்பாற்றிக்கொள்ள வெகுவாக போராடினாள்

“ஹெல்ப் ஹெல்ப்” என்றவள் வாயை பொத்த இழையோ அவன் கையை நறுக்கென கடித்து தப்பிக்க முயன்றாள்

ஆனால் அவளை மேலும் முன்னேறாத வகையில் இந்தர் இழையின் சுடிதாரை பிடித்து இழுத்த வேகத்தில் அது பாதி வரை பின்புறமாக கிழிந்து தொங்கியது.

அதை கண்டவளுக்கு இன்னுமே நடுங்கி போக கரைந்த விழிகளுடன் சுவரோடு சுவராக ஒன்றி போனாள்.

அவள் மருத்துவமனை சற்று விஸ்தாரமானது. அதோடு இரண்டு பிரிவாக இருக்கும்.

நுழைவுவாயிலில் இருந்து கிட்டத்தட்ட இருபது அடிகளுக்கு உட்புறமாக பாதிக்குமேல் கண்ணாடியால் தடுக்கப்பட்ட அவளறை இருக்கும்.. ஆம் மருத்துவமனையினுள் நுழைந்ததும் ரிசெப்ஷன் மற்றும் காத்திருப்போருக்கான இடம் இருக்கும் அதை தாண்டி தான் அவளறைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவமனையின் வெளியிலும் ஒருப்பக்கம் முழுதும் கண்ணாடி கதவுகள் அமைக்கப்பட்டு பெயர் பலகை தாங்கியிருக்கும்.. எப்போதும் தேவியும் இவளும் தான் பூட்டிவிட்டு கிளம்புவர் இப்போது உடையை கிழித்து அவளறையை விட்டே செல்ல முடியாமல் இந்தர் செய்திருந்தான்.

“ப்ளீஸ்” என்ற இறைஞ்சுதலாக இழை பார்த்த அதே நேரம் வசீகரன் ஓங்கி உதைத்ததில் இந்தரின் தலை சுவரில் பலமாக மோத கீழே விழுந்திருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் என்ன நடந்தது என்றே புரியாத அளவு மின்னல் வேகத்தில் வசீகரனின் ஒவ்வொரு அடியும் இடியாக இந்திரவர்மனை தாக்க அவனை எதிர்க்க முடியாத இந்திரவர்மன் முகம் வீங்கி குருதி வழிய நின்றிருந்தான்.

அப்போதும் ஆத்திரம் தீராமல் வசீ அவனை புரட்டி எடுக்க ஒரு கட்டத்தில் அவன் கையில் இருந்து தப்பித்து வெளியேற முயன்றான்.

அவனை துரத்தி வந்த வசீ எதிரே வந்த தன் தம்பிகளிடம் “அவனை விடாதீங்கடா” என்றதும் ஏன்? என்னவென்ற? கேள்வியே கேட்காமல் ஜித்துவும் பிரணவும் இந்தரை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து நொறுக்கியிருந்தனர்.

உள்ளே சொல்ல முயன்ற வசீக்கு காவல்துறையில் இருக்கும் அவன் நண்பனிடமிருந்து அழைப்பு

“வசீ நீ சொன்ன அட்ரெஸ்க்கு போனோம். அங்க இந்திரவர்மனோட பேரன்ட்ஸ் மட்டும்தான் இருக்காங்க. அவங்களை கஸ்டடில எடுத்தாச்சு. ஆனா அந்த ராஸ்கல் அங்க இல்லை”

“மச்சான் நான் சொல்ற அட்ரெஸ்க்கு வா. அவன் இங்க இருக்கான். சீக்கிரம் வா. இல்ல உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது” என்றான் குறையாத சீற்றத்தோடு.

“என்னடா சொல்ற?”

“ஆமா, அந்த நாய் செய்த வேலைக்கு இன்னும் கொல்லாம விட்டேன்னு சந்தோஷப்படு”

“என்னடா பண்ணான். நீ எங்க அவனை பார்த்த”

“என்ன தைரியமிருந்தா என் பொண்டாட்டியை” என்று பல்லை கடித்தவனின் உடல் இறுகிப்போனது

ஆனால் வசீ சொல்லாமலே ஒரளவு யூகித்தவன், “டேய் அப்படி எதுவும் பண்ணிடாதடா. அப்புறம் மேலிடத்துக்கு நான் என்ன பதில் சொல்ல?!”

“மச்சி கூட்டிட்டு வர வழியில தப்பிக்க வண்டியில இருந்து குதிச்சான்னு சொல்லு. பிடிக்க போனப்போ உங்களை அடிச்சான். திருப்பி அடிச்சு பிடிச்சோம்ன்னு சொல்றதுக்கு நான் உனக்கு கத்துக்கொடுக்கணுமா என்ன” என்று வசீ எள்ளலாக கேட்க

“சரிடா ஆனா உயிர் போகாம பார்த்துக்கோ. நான் வரேன்” என்றவனுக்கு லொகேஷனை ஷேர் செய்துவிட்டு

உள்ளே செல்ல அறையின் மூலையில் அமர்ந்திருந்த இழை குறையாத நடுக்கத்தோடு தேம்பிக்கொண்டு இருந்தாள்

“இழை ஒண்ணுமில்லடா” என்ற வசீ அவள் தோள் தொடவும்

பாய்ந்து அவனை கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தவளின் அழுகை இன்னுமே அதிகரித்தது

அவள் அதிர்ச்சியின் அளவை கொண்டிருந்த நடுக்கத்தில் அறிந்துகொண்டவன்

“ஒண்ணுமில்ல இழை. யூ ஆர் ஆல்ரைட். அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்துட்டு இருக்கு. உனக்கு இனி எந்த கவலையும் வேண்டாம்” என்று பேசிக்கொண்டே சென்றவனின் கரம் அவளை ஆறுதலாக வருடிக்கொண்டிருந்தது

அதே நேரம்

“ஃப்ரோ இவன் அண்ணி பேரை பச்சை குத்தியிருந்தாகூட விட்டிருப்பேன். ஆனா மார்க்கர்ல எழுதி பொண்ணுங்களை ஏமாத்துறதை தான் தாங்க முடிலைடா” என்ற ப்ரணவ் அவன் நெஞ்சிலே ஓங்கி உதைக்க

“விடு ப்ரணவ். இனியும் அடிச்சா தாங்கமாட்டான். இதோ இந்த கயிறை வச்சு கட்டிப்போட்டுட்டு அடுத்து என்ன செய்யலாம்னு அண்ணாவை கேட்கலாம்” என்றதும்

மருத்துவமனையின் கதவை சாற்றிவிட்டு அவனையும் கட்டிப்போட்டு இழையின் அறையினுள்ளே நுழைந்தவர்கள்

அங்கே வசீயும் இழையும் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்

“டேய் ஃப்ரோ என்னடா நடக்குது இங்க”

“எனக்கும் புரியலை. ஆனா நாம சின்ன பசங்க. இங்க இருக்கக்கூடாது. வா வெளில போகலாம்” என்று அவனை அழைத்து சென்றான்

எங்கே இத்தனை வருடங்களில் தன் தோழிக்கு தமையனை பிடிக்காமலே போயிருக்குமோ என்ற எண்ணத்தில் உழன்று கொண்டிருந்த சர்வாவிற்கு அவர்கள் நிலை மகிழ்ச்சி அளித்திருந்தது

“இழை போதும்டா” என்ற வசீயின் வசீகர குரலில் சற்று தெளிந்தவள்

“நா… நான் எதிர்பார்க்கல” என்று உதடுகள் தந்தியடிக்க குறையாத கண்ணீரோடு அவன் முகம் பார்க்க

அப்போதுதான் இருவரும் இருக்கும் நிலை புரிய சட்டென அவனிடமிருந்து விலகியவள்

“ஸா… ஸாரி. ஸாரி. நான் தெரியாம… பயத்துல” என்றவள் தள்ளாட்டத்துடன் வெளியேற முயன்றாள்

பின்னே அவனுடனான போராட்டத்தில் எங்கே இடித்துக்கொண்டாள் என்று தெரியவில்லை

ஆனால் வலது முட்டி வீங்கியிருக்க காலில் பலமான அடி
கைகளிலும் ஆங்காங்கே சிராய்ப்பு

“ஹே இழை எங்க போற” என்று விழுவதற்குள் பிடித்து நிறுத்தியிருந்தான்

“அம்மாகிட்ட”

“போகலாம். ஆனா ஒரு நிமிஷம்” என்று அவளருகே வந்தவன் தன் சட்டையை கழற்றி அவளிடம் கொடுத்தான்

எதற்காக கொடுக்கிறான் என்றுகூட புரியாத அளவு மூளை மரத்துபோய் நின்றிருந்தவளுக்கு அப்போது தான் இந்திரவர்மன் தன் ஆடையை கிழித்தது நினைவு வர “தேங்க்ஸ்” என்று வாங்கிக்கொண்டாள்.

ஆனால் வசீகரனின் முன் தான் இப்படி நிற்கும் நிலை வரும் என்று கனவிலும் நினையாதவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது..

“ப்ச் கண்ணை துடை இழை. எதுக்கெடுத்தாலும் சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு. இன்னுமா நீ மாறலை” என்று அதட்டவும் மிரட்சியுடன் அவனை பார்த்தாள்

“பின்ன என்ன. அந்த நாயை நாலு சாத்து சாத்தாம அழுதுட்டு இருக்க. எப்போதான் இந்த பயத்தை விட போற” என்று கேட்க அவளுக்கு இன்னுமே கண்ணீர் அதிகரித்தது.

“அம்மா தேடுவாங்க” என்றாள் மெல்லிய குரலில்..

“ப்ச் இப்படியே போக வேண்டாம். கொஞ்ச நேரம் உட்கார். நான் அத்தைகிட்ட பேசிக்கிறேன்” என்று அவள் கையிலிருந்த சட்டையை வாங்கி போர்த்தி விட்டவன் “பட்டன் போடு” என்றவாறே கலைந்திருந்த கூந்தலை அவனுக்கு தெரிந்தவரையில் சரி செய்தான்.

“முதல்ல தண்ணி குடி. உன்னோட ஷாக் குறையும். வீட்டுக்கு நடந்து போக முடியும் இல்ல நான் தூக்கிட்டு தான் போகணும்” என்றதும் தண்ணீரை பருகியவள் இன்னுமே குறையாத நடுக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அடுத்து என்ன பா வசீகரனுக்கும் இழைக்கும் கல்யாணம் தான