
அழகியே 23
“தங்கமே நீ இவங்க மூணு பேரையும் இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா?” என்று கேட்க, அவர்கள் மூவரும் அவளின் பதிலுக்காக காத்திருக்க அவளோ, “இல்லை எனக்கு தெரியாது” என்று கூற, ஆதியோ, “உங்க பேரெண்ட்ஸ் எங்க இருக்காங்க மிஸஸ் வேதமித்ரா” என்று கேட்க, தேவ், “ஏன் ஆதி சார் ஆதார் கார்ட் வாங்கி தரப்போறீங்களா என்ன?” என்று கோவமாக கேட்டான்.
ஆதி திரும்பி கோவமாக தேவ்வை முறைத்தான். செழியன், “தேவா” என்று அதட்ட அவனோ, “அப்புறம் என்னடா நீ என்னமோ அவங்களை பார்த்திருக்கியானு கேக்குற. இவன் என்னமோ அப்பா அம்மா எங்க இருக்காங்கன்னு கேக்குறான். யோசிச்சு பாரு செழியா கொஞ்சம் முன்னாடி வரைக்கும் அவ என்ன மாதிரியான மன நிலையில இருந்தான்னு. கை இன்னும் நடுங்குது அவளுக்கு உன்னை அவளோ ரத்தத்தோட பார்த்து. அவ இன்னும் ஸ்டேபில் ஆகவே இல்லை. அதுக்குள்ள கேள்வியா கேட்டு அவ யோசிச்சு அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுச்சுன்னா என்ன செய்றது இதெல்லாம் யோசிக்க மாட்டியா?” என்று நண்பனிடம் கத்தியவன், அவர்களிடம் திரும்பி, “நீங்க செழியன பாக்க வந்திங்களா பார்த்தீங்களான்னு இருங்க. தேவையில்லாம என்தங்கச்சிகிட்ட கேள்வி கேக்குற வேலைலாம் வச்சுக்காதீங்க எனக்கு பிடிக்காது” என்றான்.
தேவ் என் தங்கை என்று கூறியது பிடிக்காமல ஆதி உண்மையை கூற வர, அதிரன் அவளின் கைபிடித்து இழுத்து நிற்க வைத்தான். வேதாவிடம் சென்றவன், “குட்டிமா நீ எதையும் யோசிக்காத அப்புறம் பாத்துக்கலாம். இப்போ கிளம்பலாம்” என்று கூறியவன் செழியன் அருகில் செல்ல, அவனோ தேவ்வை பார்க்க, அவன் செழியனை பார்த்து அர்த்தமாய் தலையாட்டினான்.
வேதாவின் போன் அடிக்க எடுத்தவளோ, “கேப் வந்துருச்சு போலாம் மாமா” என்று கூற, அரவிந்தனோ, “கேப் எதுக்கு வேதா” என்று கேட்க, செழியனோ, “நான்தான் புக் பண்ண சொன்னேன் அரவிந்தா. ரொம்ப லேட் ஆகிடுச்சு நீ எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போ. நாளைக்கு பேசிக்கலாம். எனக்கும் ரொம்ப டையர்ட் ஆஹ் இருக்கு” என்று கூற, அனைவரும் வெளியே வர, வாசலில் நின்ற கேபில் வேதா, செழியன், தேவ் மூவரும் ஏறி சென்று விட, இவர்கள் மூவரும் யாரிடமும் எதுவும் பேசாமல் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
அன்பரசன் அவர்களை எதிர்பார்த்து ஹாலிலேயே இருக்க, உள்ளே வந்த ஆதி, “எதுக்குடா நீ என்ன அங்க பேச வேணான்னு கையை பிடிச்சு இழுத்த. யாருடா அவன் நம்ம மித்துவ அவன் தங்கச்சின்னு சொல்றான். அவகிட்ட எல்லாம் சொல்லி நம்ம அவளை கூட கூட்டிட்டு வந்துருக்கலாம். அந்த செழியன் தான் என்னமோ பண்ணிட்டான் நம்ம மித்ராவ. அவளுக்கு நம்மலேயே அடையாளம் தெரியல. நம்ம எவ்ளோ துடிச்சுருப்போம் ஆனா அவ அவளுக்கு நம்ம நியாபகமே இல்லையே” என்று கத்த, அதிரன் கையை கட்டிக்கொண்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தான்.
அன்பரசன் கோவத்தில் கத்தும் இளைய மகனையும் அவன் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியாகி அவர்களையே பார்க்க, தாமரையோ கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீர் வடிக்க, எங்கோ வெறித்து கொண்டு இருந்தார்.
அதிரன், “பேசி முடிச்சுட்டியா ஆதி, ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ. காரணமே இல்லாம செழியன் மேல வெறுப்ப வளர்த்துக்காத. நான் என்ன சொல்றேன்னு கொஞ்சம் பொறுமையா கேளு” என்று தம்பியிடம் பேசிகொண்டிருந்தவன் தந்தையின் குழம்பிய பார்வையை கண்டு அவரிடம் ஹாஸ்பிடலில் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க அவரின் முகத்தில் ஈயாடவில்லை.
“நீ சொல்லறது உண்மையா அதிரா, மித்ராவை பார்த்தியா? கூப்பிட்டு வந்துருக்கலாம்ல. அவளுக்கு அப்பா உனக்காக தவிச்சுட்டு இருக்கார்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா என் தங்கம் ஓடி வந்துருக்கும் என்ன தேடி” என்று கண்ணீருடன் பேசினார்.
அதிரனோ, “அப்பா மித்துவுக்கு எதுவும் நியாபகம் இல்லைப்பா, எங்களை பார்த்து அவ கண்ணுல எந்த உணர்ச்சியும் இல்லை. செழியன் அவளை அறிமுகப்படுத்தி வைக்கும் போது ஏதோ மூணாவது மனுசங்கிட்ட பேசற மாதிரி ஹாய்ன்னு ஒரே வார்த்தைல முடிச்சுட்டா. மேற் கொண்டு ஏதாவது பேசி அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால நாங்க யாரும் எதுவும் பேசல. கடைசியா செழியன்கூட நீ இவங்களை பார்த்துருக்கியான்னு கேட்டார். அவ இல்லனு சொல்லிட்டா” என்று வருத்தத்துடன் கூறினான்.
தாமரையோ கண்களை துடைத்து கொண்டு எழுந்தவர், “விடு அதிரா அவளுக்கா எப்போ நியாபகம் வருதோ அப்போ வரட்டும். அவ இந்த உலகத்திலேயே இல்லனு நாம நினைச்சுட்டு இருந்தோம். ஆனா இப்போ அவ நம்ம கண்ணு முன்னாடியே நிறைவா ஒரு வாழ்க்கை வாழுறா. என் பொண்ணு ராணி மாதிரி இருக்காடா.அதுபோதும்டா எனக்கு. கடைசி வரைக்கும் அவளுக்கு நியாபகம் வரலைனாலும் பரவாயில்லை. என் பொண்ணு நிம்மதியா இருந்தா போதும். இந்த விஷயம் இதுக்கு மேல யாருக்கும் தெரிய வேணாம். நம்மளோடயே இருக்கட்டும். மாமா குடும்பத்துக்கும் கூட இப்போதைக்கு தெரிய வேணாம்” என்று அவர் கூறி முடிக்க, அதிரனுக்கு அன்னை கூறுவது சரி என்றே தோன்றியது.
அன்பரசன் திகைத்து போய் மனைவியை பார்க்க அவரோ, “நம்ம புள்ள நல்லா இருக்காங்க. செழியன் அவளை நல்லா பாத்துக்குறான். நாங்க அங்க இருந்த அரைமணி நேரத்துல நொடிக்கொரு தடவை தங்கமே தங்கமேனுதான் கூப்பிட்டான். அப்படி தாங்கறவன் நம்ம புள்ளைய எதுவும் பண்ணியிருக்கமாட்டான். அவ நல்லா இருப்பாங்க நல்லா இருக்கட்டும்” என்று கூற, அன்பரசனும் மனைவிக்காக தலையசைத்தவர் நேரில் பார்க்கும் போது தன் அவசரத்தால் மகளை சாவின் விளிம்பிற்கு சென்றே மீட்டு வருவார் என்று அறியாமல் போனார்.
ஆதிக்குதான் மனம் அமைதியாகவே இல்லை. அன்னை கூறியதால் சரியென்று அமைதியாகிவிட்டான். அறையில் அமர்ந்து ஏதோ யோசித்து கொண்டிருக்க அர்ச்சனா அவனுக்கு போன் செய்தாள். அவளின் எண்ணை கண்டதும் இதழ்கள் விரிய அட்டென்ட் செய்வதற்குள் கட்டாகி விட மீண்டும் அவன் முயற்சிக்க அவள் எடுக்கவில்லை.
இருவரும் கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். இவள் இளங்கலை முதல் வருடம் படிக்கும் போது அவன் முதுகலை கடைசி வருடம் படித்துகொண்டிருந்தான். முதலில் மோதல் இடையில் காதலாக ஒரு வருடமாக காதலித்து கொண்டிருக்கின்றனர்.அவர்கள் சந்தித்த போது கூட சொந்தம் என்று அறிந்து அவ்வளவு மகிழ்ச்சி இருவருக்கும்…
மீண்டும் அர்ச்சனாவே போன் செய்ய, “சாப்பிட்டியா ஆதி” என்றே கேட்டாள் போன் எடுத்ததும். அவனோ, “சனா உன் அண்ணன் செழியன் இருக்கான்ல. அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் எப்படி பழக்கம்” என்று கேட்க, அவளுக்கோ அண்ணனை அவன் என்று கூறியத்தில் கோவம் வர, “ஆதி முதல்ல எங்கன்னன அவன் இவன் சொல்லாதீங்க மரியாதையா சொல்லுங்க” என்று கண்டிக்க, தங்கைக்காக பற்களை கடித்து பொறுத்துக் கொண்டவன், “சரி அவர் மேரேஜ் பத்தி சொல்லு” என்று கேட்க, அவளும் லாவண்யா கூறியதையே தன் கூறினாள், அவளுமே அப்போது அதிர்ச்சியில் இருந்ததால் செழியன் கூறியதை முழுமையாக கவனிக்கவில்லை.
மறுநாள் வேதா செழியனுக்கு டீ எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கியவனோ டீபாயில் வைத்துவிட்டு அவளை இழுத்து அமரவைத்தவன், அவளின் முகத்தை நேருக்கு நேராய் பார்க்க, அவளோ அவனை அணைத்தவள் கதறிவிட, அவளை முதுகை வருடி விட்டவன், “என்ன தங்கமே” என்று கேட்க,
“வலிக்குது மாமா. நான் நேத்து அவங்களை தெரியலைன்னு சொன்னதும் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்கல்ல. அதுவும் அம்மா அழுதுட்டே இருந்தாங்க. எனக்கு அவங்களை கட்டிப்பிடிச்சு அழணும், நிறைய தோணுச்சு. ஆனா நான் அவங்களுக்கு அவ்ளோதானா மாமா. யாரோ வந்து உங்க பொண்ணு இறந்துட்டான்னு சொன்னா என்ன ஏதுனு விசாரிக்க மாட்டாங்களா? அப்படியென்ன அவசரம் நாலு நாளுல எந்த ஒரு தடையமும் இல்லாம ஊற விட்டு போகணும்னு. அந்த ஊருல இருந்த நாலுவருசமும் எப்படி துடிச்சிருப்பேன் தெரியுமா? பாக்கிற இடத்துல எல்லாம் கண்ணு தானா தேடும். எங்காச்சும் இருந்து வந்துர மாட்டாங்களான்னு மித்துனு கூப்பிட மாட்டாங்களான்னு. என்னாலதான்னு குற்ற உணர்ச்சியில எவ்ளோ தவிச்சிருப்பேன். அவங்களுக்கு என்னை பத்தி எந்த நினைவும் இல்லை. செத்துட்டான்னு முடிவு பண்ணி ஒரு போட்டோவுக்கு மாலை போட்டுட்டு மறந்துருப்பாங்க. இல்லனா இந்நேரம் என்னை தேடியிருப்பாங்க தானே” என்றவள் அழுதாள்.
செழியனோ, “சோ அவங்கதான் உன் பேமிலி, இந்த கோவத்துலதான் தெரியாதுன்னு சொன்னியா? கொஞ்சம் யோசிச்சு பாரு தங்கமே அவங்க பாயிண்ட்ல இருந்து. நீ இல்லனு எவ்ளோ வேதனைபட்டு இருந்தா அவளோ வருஷம் இருந்த ஊர்ல இருந்து எந்த ஒரு க்ளுவும் குடுக்காம எவ்ளோ துயரத்தோட போயிருப்பாங்க?” என்று கூற,
அவளோ, “இன்னிக்கு ஹாஸ்பிட்டல என்ன பார்த்தாங்கல்ல. அப்போ ஓடிவந்து என்னை கட்டிக்கணும்னு தோணக்கூட இல்லை. அப்போவும் நான்தானன்னு சந்தேகத்தோடதான பார்த்தாங்க” என்று கூற, அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் சிரித்தவன், “அவங்க உனக்கு நியாபகம் இல்லாத சமையத்துல ஏதாச்சும் பேசி உன்னை ஹர்ட் பண்ணிட்டா என்ன செய்றதுனு நினைச்சுருப்பாங்க. உன் ஹெல்த்க்காக கூட பார்த்துருக்கலாம்ல” என்று கூறியவன்,
“பாரேன் நீ என்னோட அத்தை பொண்ணாம். எனக்கு அப்படி ஒரு அத்தை இருக்காங்கனு கூட தெரியாது. ஒருவேளை இதெல்லாம் நடக்கும்னு விதி போல” என்று கூற, “நீங்க என்ன மாமா உங்க அம்மா கூட பேசவே இல்லை, அவங்க ரொம்ப அழுதாங்க” என்று கூறினாள்.
“அவங்க என்னை ரொம்ப காயப்படுத்திட்டாங்க தங்கமே, அவங்களை ஏத்துகிட்டு மன்னிக்கிற அளவுக்கு இன்னும் எனக்கு மனசு பக்குவபடல. பாத்துக்கலாம்” என்று கூறியவன், “நாளைக்கு உங்க வீட்டுக்கு போய் அவங்க கிட்ட பேசலாம்” என்று கூற அவளோ, “வேண்டாம் மாமா நான் சொல்றேன். கொஞ்சநாள் போகட்டும். இவ்ளோநாள் எங்க இருக்காங்கனு தெரியாம இருந்தேன். இப்போ எங்க இருக்காங்கனு தெரிஞ்சிருச்சே, சந்தோசமா இருப்பேன்” என்று கூறி அவன் மீது சாய்ந்து கொண்டாள்.
தேவ் வீட்டில் அவனுக்கு பொண்ணு பார்த்திருக்க, கல்யாண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. பெண் பெயர் அனன்யா. செழியன், தேவ் இருவருடனும் படித்தவள்தான், தேவ் அவளை காதலிக்க, வீட்டில் பேசி முடிவெடுத்து திருமணம் வரை வந்திருந்தது. இருபது நாட்கள் கழித்து திருமணம் முடிவாகி இருந்தது.
நாட்களும் வேகமாய் பறக்க, ஐந்து நாட்கள் வேகமாய் கடந்திருந்தது. செழியன் காயம் ஓரளவிற்கு நன்றாகவே ஆறியிருந்தது.
அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ இன்னும் வேற என்ன சம்பவம் இருக்கு .. ஆதி ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறான் .. இவ்வளவு நாள் ஒண்ணா இருந்தவங்கள வேதா வீட்ல இருக்கவங்க தான் பிரிக்க போறாங்க போல ..