
அழகியே 22
அதிரன் வேகமாய் கதவை திறந்து கொண்டு உள்ளே வர, செழியனின் இடது கையில் காயம் இருக்க, வலது புறம் வேதா அவனின் தோளை பற்றிய படி இருக்க, அவன் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான். தேவ் அவன் காலடியில் நின்றிருந்தான்.
அரவிந்தன் மருந்து வாங்க சென்று இருந்தான்.வேதாவை கண்டதும் தாமரை கண்களில் கண்ணீர் பெருகியது. ஆதி அதிர்ச்சியாக அவளை பார்க்க, அதிரன் செழியனின் அருகில் நிற்கும் வேதாவை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தான். அன்பரசன் ஹாஸ்பிடலுக்கு வரவில்லை.
அறிவழகன், மீனாட்சி, அகரன், அர்ச்சனா, வேதநாயகி மூவரும் அன்று பார்த்த அந்த சிறு பெண்ணா இவள் என்பது போல வியந்து போய் பார்த்தனர். மகளை சுடிதாரில் கல்லூரி செல்லும் சிறு பெண்ணாக பார்த்தது. இன்று நான்கு வருடங்கள் கடந்திருக்க, இன்று நன்றாக வளர்ந்து செழியனின் காதலில் திளைத்து பேரழகியாய் கண்களில் கண்ணீர் வழிய அவனின் தோளை பற்றிய படி நின்றிருந்தவளின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
அவர்களுக்கு ஏற்பட்ட எந்த துடிப்பும் அவளிடம் இல்லை. மாறாக அவளுக்குள் இறுகி போய் இருந்தாள். ஒரே நிமிடம் ஏக்கமாக தாயை தழுவிய கண்கள் பொய்யோ என்னும் வகையில் மாற்றி கொண்டாள் அவளின் பார்வையை…
கண்கள் முழுவதும் கணவன் மேலே இருந்தது. அதிரன் அவளின் அந்நிய தன்மையை கண்டுகொண்டவன், முன்னேற சென்ற அன்னையின் கைகளை பிடித்து பொறுமை காக்க கூறினான். அவனுக்கு ஒருவேளை இது அவள் இல்லையோ என்று கூட தோன்றி விட்டது தங்கையின் பார்வையில்.
லாவண்யா தான் முதலில் செழியனிடம் சென்றவள், “என்ன செழியா நீ இப்படி பண்ணிட்ட. நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? இப்போ எப்படி இருக்கு. வேற ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே” என்று கேட்க, அவனோ, “இல்ல அண்ணி. இப்போ வலி இல்ல. நான் நல்லா தான் இருக்கேன். இதோ இவங்க ரெண்டு பேரும் தான் அழறாங்க. ஒன்னும் இல்லனு சொன்னா இவ என் கிட்ட சண்டைக்கு வரா.. நீங்களே கேளுங்க உங்க பாப்புவ” என்று கூறி புகார் வாசித்தான்.
லாவண்யா வேதாவின் அருகில் வந்து அவளை அணைத்து கொண்டவள், அவளின் முதுகை வருடி விட்டவளோ, “பாப்பு நீ போய் முதலில் முகத்தை கழுவிட்டு வா.. டேய் தேவ் நீயும் போ அவன் நல்லா இருக்கான். நீங்க ரெண்டு பேரும் அவனை பலவீனம் ஆக்காதீங்க” என்று கூற, லாவண்யா சொல்வதும் சரியாக பட கண்களை துடைத்து கொண்டவனோ வேதாவின் அருகில் வந்து, “குட்டிமா வா அவன் நல்லா தான் இருக்கான். நீ வந்து முகம் கழுவு” என்று அவளை அழைத்து செல்ல செழியனோ, “டேய் இதை தாண்டா நானும் அரை மணி நேரமா சொல்றேன்” என்று கூற, தேவ் அவனை முறைக்க, வேதா அவனை பார்த்து கொண்டே தேவுடன் சென்றாள். மறந்தும் கூட அவளின் பார்வை வேறு யாரிடமும் திரும்ப வில்லை.
செழியன் திரும்பி மற்றவர்களை பார்க்க, தாய், தந்தையின் பரிதவிப்பை கண்டவன் தன்னையே கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்த அகரனை பார்த்தவன் கண்ணை அசைக்க மறு நொடியே ஓடிவந்து அவனுக்கு நோகாத வண்ணம் அணைத்து கொண்டவனோ “சாரிடா.. ரொம்ப ரொம்ப சாரி அன்னைக்கு நானாச்சும் உன்னை புரிஞ்சு நடந்துருக்கணும். அம்மா பேச்சை கேட்டு அப்டி நடத்துகிட்டேன். சாரிடா இப்போ உனக்கு வலி எப்படி இருக்கு” என்று கேட்க, இதழ் பிரிக்காமல் சிரித்தவன், “இப்போ வலி கொஞ்சம் கம்மியா இருக்கு, சரியாகிடும்” என்று கூற, அவனுக்கோ தம்பி தன்னுடன் பேசிய மகிழ்வில் கண்ணீர் வர தொடங்கியது.
செழியனோ, “ஏன்டா நீயுமா? இப்போ தான் அந்த ரெண்டும் அமைதியாச்சு இப்போ நீயா? கண்ண துடை, நான் நார்மலா இருக்கேன்” என்று அவனின் கைபிடித்து கூற, அமைதி ஆனான்.
செழியன் பார்வை தாமரையை பார்க்க, லாவண்யாதான், “சித்தி வாங்க நீங்க செழியன பாக்கணும்னு சொன்னிங்க. அங்கேயே நிக்குறீங்க. ஓ இங்க நடந்த விசயத்துல கன்பியூஸ் ஆகிட்டீங்களா? இப்போ நீங்க பார்த்தீங்கல்லா அதுதான் செழியனோட வைஃப். அகரன் வரும் போது பாதி தான் சொன்னான். இதோ செழியன் ஊட்டிக்கு டூர் போகும் போது அந்த பொண்ணுக்கு ஆக்சிடேன்ட் ஆகிடுச்சு. அதுல அவளுக்கு எல்லா நினைவும் போயிருச்சு. அவளை அவனுக்கு பிடிச்சிருந்துச்சு கல்யாணம் பண்ணிகிட்டான். அதுவும் எங்க கல்யாணத்துக்கு முதல் நாள்.அது வீட்டுல சிலருக்கு பிடிக்கல அதனால தனியா இருக்காங்க” என்று கூறினாள்.
அப்போது வந்த தேவ்வோ, “ஆனா அக்கா நீங்க வேற லெவல் நாலு வருஷ கதையை நாலு லைன்ல சொல்லிட்டீங்க” என்று கூறி சிரித்தான்.
அவர்களுக்கு புரிந்து போனது வேதாவிற்கு எதுவும் நினைவு இல்லை. அதனால் தான் தங்களை தெரியவில்லை என்று நினைத்துக் கொள்ள, அதிரனுக்கு செழியனை நினைத்து மிகப்பெரிய மரியாதை வந்தது. ஆதிக்கு செழியனை சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதுவும் தங்கை தங்களை விட்டு பிரிய இவன் தான் காரணம் என்று முடிவே செய்து விட்டான். தாமரை அவன் அருகில் வந்தவர், “இப்போ உடம்பு எப்படி இருக்குப்பா, பரவாயில்லையா” என்று கேட்க அவனோ, “நல்லாருக்கேன் அத்தை” என்று கூறினான்.
வேதா முகத்தை துடைத்து கொண்டு வந்தவள் தேவின் அருகில் நிற்க, செழியனின் அருகில் வந்த அதிரன், “இப்போ எப்படி இருக்கு சார்” என்று கேட்க, செழியனோ, “நீங்க என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க அதிரன், டூட்டில இருக்கும்போது மரியாதை வந்தா போதும். இப்போ ஓகே பெட்டெரா இருக்கேன்” என்று கூறியவன் தாய், தந்தை, தங்கை, பாட்டி என்ன யாரையும் கண்டு கொள்ளவில்லை.
அதிரனோ செழியனிடம், “ஓகே செழியன் அதான் இப்போ சொந்தக்காரங்க ஆகிட்டோமே உங்க வைஃப இன்ட்ரோ கொடுக்கலாமே” என்று கேட்க, செழியனோ, “ஒய் நாட்” என்றவன், “தங்கமே இங்க வாடா” என்று அழைக்க, வேதா செழியனின் அருகில் வந்து நின்றாள்.
“இவங்க தான் என்னோட வைஃப் வேத மித்ரா ***கம்பெனியில டிசைனிங் ஹெட் ஆஹ் இருக்காங்க. அப்புறம் தங்கமே இது அதிரன் இன்ஸ்பெக்டர் ஆஹ் இருக்கார்” என்று கூறி அறிமுகப்படுத்தி வைக்க, வேதாவோ எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவள், “ஹாய்” என்று மட்டும் கூறி வைக்க, தேவ்தான், “அப்படியே இந்த நல்ல காரியத்தை செஞ்சது சார் தான்னு சொல்லு” என்று கூறி கோவமாக அதிரனை பார்க்க, செழியனோ, “ஏன்டா ஏன்” என்பது போல் அவனை பார்க்க, வேதாவோ விளுக்கென நிமிர்ந்து அதிரனை கோபத்துடன் பார்த்தவள், செழியனிடம் திரும்பி, “அப்போ இந்த காயம் அந்த ரௌடி வெட்டுனதுதால இல்லையா? இவனா வெட்டுனான்” என்று கோவமாய் கேட்டவளின் கண்களில் கண்ணீர்.
செழியனுக்கு அவளின் கண்ணீர் மட்டும் தெரிய, அவள் அசால்ட்டாக அவன் என்று கூறியதை கூட கவனிக்காதவன், அவளை தன் அருகில் கையை பிடித்து இழுத்து அமர்த்தியவனோ, “புரிஞ்சுக்கோ தங்கமே, அதிரனுக்கே தெரியாது நான் இப்படி செய்றேன்னு. அவன் நல்லவன் இல்லை. அவனை உயிரோட விட்டா எத்தனை பொண்ணுங்களோட லைஃப ஸ்பாயில் பண்ணுவானோ எனக்கு வேற யோசிக்க எதுவும் தோணல. வேறெதுவும் செஞ்சு நாலு வருஷம் கஷ்டப்பட்டு கெடச்ச வேலைய இழக்கவும் நான் தயாரா இல்லை. இதான் அதுக்கு ஒரே வழி. இதுவும் ஒரு சுயநலம்தான். அவனால ஒரு குடும்பமே அழிஞ்சு போச்சு. எனக்கு வேற வழி தெரியல, சட்டப்படி அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்தா நாலு நாள்ள வெளியே வந்துருவான். அதான் எனக்கு ஒன்னும் ஆகலையே நான் நல்லாதான இருக்கேன். நீ அழாத ப்ளீஸ்” என்று அவளின் கண்களை துடைத்துவிட்டான்.
தேவ்வோ, “ஒருவேளை இவன் அந்த பொறுக்கிய வெட்டுறதா நினச்சு கழுத்துல வெட்டியிருந்தான்ன என்ன ஆகியிருக்கும்” என்று கேட்கும் போதே அவனின் குரல் நடுங்க, அவனை அருகில் அழைத்தவனோ, “நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ அன்பு வச்சு இருக்கும்போது எனக்கு ஒண்ணும் ஆகாதுடா” என்றவன் மனைவி, நண்பன் இருவரையும் சேர்த்து அணைத்து கொள்ள, அனைவரின் கண்களுமே கலங்கித்தான் போனது.
அரவிந்தன் அப்போது உள்ளே வந்தவன், “டேய் இன்னுமா நீங்க ரெண்டு பேரும் அழுது முடிக்கல, அவன் பாவம்டா” என்று கூறிவிட்டு அருகில் வர, தேவ் அவனில் இருந்து பிரிந்தவன், “நாங்களுச்சும் பரவாயில்லை, உங்கள போல பாத்ரூமுல போய் அழல” என்று கேலி செய்ய, செழியனோ, “நீயுமாடா” என்று கேட்க அவனோ, “உயிரே போய்டுச்சுடா. கைல அவளோ ரத்தம் நீ மயங்கி சரியும் போது” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல, பின்தான் வேதாவை கவனிக்க, அவளோ அரவிந்தன் கூறியதில் சிலையாய் நின்றிருந்தாள்.
செழியனோ, “தெய்வங்களா தயவுசெஞ்சு அந்த டாபிக்க விட்டுட்டு வேற ஏதாச்சும் பேசுங்கடா கஷ்டப்பட்டு சமாதானபடுத்திருக்கேன்” என்று கைவளைவில் இருந்த வேதாவை காட்டி கூற, அதோடு விட்டுவிட்டனர். தாமரை, மகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தார். செழியன் நொடிக் கொரு முறை தங்கமே, தங்கமே என்றே அழைக்க, அவனுடன் பழகியவர்களுக்கு அது புதிதாய் தெரியவில்லை. மற்றவர்கள் தான் அதை வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
அறிவழகன் கூட மகனுக்காக இவ்வளவு துடிக்கிறாள். இவள்தான் அவனுக்கானவளோ என்று கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று காலம் கடந்து யோசித்தார்.
அதிரன், ஆதி இருவரும் கூட செழியனையும் வேதாவையும் பார்த்து கொண்டிருக்க, செழியன் அவர்களின் பார்வையை கண்டுகொண்டவன் மனைவியை பார்க்க, அவளோ எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.செழியனுக்கு அவர்களின் பார்வையும் வேதாவின் நடவடிக்கையும் வித்யாசமாக பட்டது.
நர்ஸ் வந்து பைலை கொடுத்தவள், “சார் பில் பே பண்ணிட்டு கிளம்பலாம். டூ டேஸ் கழிச்சு வந்து ட்ரெசிங் பண்ணிக்கோங்க” என்று கூறி அரவிந்தனிடம் கொடுக்க, வேதாவோ அருகில் வந்தவள் அவளது பர்ஸில் இருந்து கார்டை எடுத்து அரவிந்த்திடம் கொடுக்க அவனோ, “வேதாமா என்கிட்ட இருக்குடா. நான் கட்டிறேன்” என்று கூற அவளோ, “இருக்கட்டும்ண்ணா இதுல கட்டிடுங்க ப்ளீஸ்” என்று அழுத்திக் கூறியவள் செழியனின் அருகில் சென்று தேவையானதை எடுத்து வைத்தாள்.
மீனாட்சி செழியனின் அருகில் வர, செழியனோ அவர்புறம் திரும்பாமலே கைநீட்டி வர வேண்டாம் என்று தடுக்க, மகனின் நிராகரிப்பால் மனம் நொந்தவர் அழ, அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை. வேதா அங்கிருந்த யாரையுமே கண்டு கொள்ளவில்லை. ஆனால் அனைவருமே அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிரனுக்கோ அவளிடம் ஏதாவது பேசினால் அனைத்தையும் மறந்து போயிருக்கும் அவளுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று தயங்கி கொண்டே நின்று இருந்தான்.
செழியன்தான் அனைவரையும் பார்த்துவிட்டு வேதாவின்புறம் திரும்பி, “தங்கமே இதுக்கு முன்னாடி இவங்களை பார்த்துருக்கியா” என்று தாமரை, அதிரன், ஆதி மூவரையும் காட்டி கேட்டான். மூவரும் அவளின் பதிலுக்காக காத்திருந்தனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


செழியன் போலீஸ் கண்டுபிடிச்சுட்டார் … எதுக்கு வேதா இப்படி பண்றா … அவளை அப்போ சரியா தேடல … அந்த ஊரை விட்டுட்டு போயிட்டாங்க அப்படிங்கிற கோபமா ?? என்னம்மா நீ இப்படி பண்ற … உன் அம்மா அண்ணன்னுங்க பாவம் இல்லையா … ஆதி வில்லனா மாறிடாத பா … வேதா பாவம்
குடும்பத்தினர் மீது இன்னமும் ஆதங்கம் தீரவில்லையா வேதாவிற்கு. அப்பொழுது தான் சிறு பெண் ஏதோ வருத்தத்தில் இருந்தால் இப்பொழுது அப்படி இல்லையே.
செழியன் மீது அவன் சகோதரர்கள் காட்டும் நேசம் நன்றாக உள்ளது.
அதிரன் சூழ்நிலையை பக்குவமாக கையாள்கின்றான்.
ஆதியோ வேதாவை போல் பிடிவாத கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக்கொள்கின்றான்.
வேதாவிற்கு எதுவும் நினைவில்லை போல் என்று எண்ணி விட்டனர் அவள் குடும்பத்தார்.
செழியனது காவல்காரன் மூளை செயல்பட்டு வித்தியாசமான உணர்வு பரிமாற்றங்களை சந்தேகிக்க தொடங்கிவிட்டது.