Loading

காதல் – 22

அஸ்வதி மற்றும் விஹான் பத்திரமாக அவர்களின் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தனர்….

 

பீவி நீண்ட நேரம், அஸ்வதியருகே அமர்ந்து கொண்டு நிறைய விஷயங்கள் பேசி கொண்டு இருந்தார்……

 

அஸ்வதியும் அவரிடம் சிரித்த முகத்துடன் பேசி கொண்டு இருந்தாள், அதை விஹான் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்……

 

அஸ்வா நீங்க ரெண்டு பேரும் காணலன்னு விஹான்னா சொன்ன உடனே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல, என்னோட ரெண்டு புள்ளைங்களுக்கும் இப்படியா நடக்கணும்ன்னு கடவுள திட்ட ஆரம்பிச்சிட்டேன் ……

 

அம்மா , என்னோட உயிர் அந்த கங்கையிலே போக வேண்டியது உங்க மகன் தான் அவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன காப்பாத்தினாங்க , நா விஹானுக்குதான் நன்றி சொல்லனும்…..

 

நீயே அவன்கிட்ட அப்புறமா நன்றி சொல்லிக்க ,  உன்னோட கொலுச அந்த ரெஸ்கியு டீம் தண்ணில இருந்து கண்டுபிடிச்சி குடுத்தாங்க ,என்று விஹானா அந்த கொலுசை அஸ்வதியிடம் கொடுத்தாள்…..

அஸ்வதி இந்த கொலுச அந்த போலீஸ்காரங்க தண்ணீரிலிருந்து எடுத்துட்டு வரும்போது கூடவே அந்த ரெண்டு பாடிய எடுத்துட்டு வரும்போது நான் அவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டே இருந்தேன் இது நீங்களா இருக்க கூடாது நீங்களா இருக்க கூடாது அப்படின்னு நல்ல வேலை கடவுள் என்னோட வேண்டுதல நிறைவேத்திட்டாரு என்று விஹானா அஸ்வதியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்…..

 

சரி விஹானா எங்களுக்கு தான் ஒன்னும் இல்லல்ல சோ நோ சோகம் நல்லா சந்தோஷமா சிரியேன்……

 

சரி  அஸ்வதி இந்த கொலுச காலுல போட்டுக்கோ என்று விஹானா கூறவும் அஸ்வதி விஹானை பார்த்தாள் அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்……

 

அத என்கிட்ட குடு நான் உனக்கு போட்டு விடுறேன் என்று பீவி கூறவும் அஸ்வதி அவரிடம் கொலுசை கொடுத்தாள்…..

 

பீவி கொலுசு மாட்டும் கொக்கியை கழட்டி கழட்டி பார்த்தார் அது மிகவும் டைட்டாக இருந்தது அதனால் அவரால் கழட்ட முடியவில்லை…..

 

டேய் விஹான் இந்த கொலுசு  கொக்கிய கழட்டி கொடுடா ரொம்ப டைட்டா இருக்குது என்று பீவி அந்த கொலுசை விஹான் கையில் கொடுத்தார்……

 

விஹான் அந்த கொலுசை கொக்கியிலிருந்து கழட்டி அஸ்வதியின் காலில் போட குனிந்தான்…….

 

அவனின் அந்த செய்கையை பார்த்து அஸ்வதி பயந்து போய் பீவியை பார்த்தாள் ……

 

விஹான் இப்படியா சோபா மேல உக்காந்துட்டு கொலுசு போட்டு விடுவ?  கீழ தரையில உட்கார்ந்து கொலுசு போட்டு விடுடா, நல்லா டைட்டா போட்டு விடு அப்போதான் இனிமே கால்ல இருந்து கழண்டு விழாது என்று அவர் கூறினார்……

 

பீவி அவ்வாறு கூறவும் விஹான் தரையில் அமர்ந்து கொண்டு அஸ்வதியின் காலில் கொலுசை போட்டு விட்டான் ….

 

டேய் விஹான் நல்லா பல்ல வச்சு அந்த கொக்கிய நல்லா கடிச்சு விடுடா அப்பதான் கழறவே கழறாது என்று அவனின் தாயார் கூறவும் …….

 

விஹான் அவளது காலில் போட்டுவிட்ட கொலுசின் க கொக்கியை கடிக்க போகும் சமயம் …..

 

இல்ல இல்ல பரவாயில்ல நானே போட்டுக்கிறேன் என்று அஸ்வதி கூறவும்……

 

டேய் விஹான் அவ அப்படி தான் சொல்லிட்டு இருப்பா , நீ நல்லா காலுல உள்ள கொலுச டைட்டா கடிச்சு விடுடா என்று அவர் கூறவும் விஹான் அவளின் காலில் உள்ள கொலுசு கொக்கியை கடித்து விடும் சாக்கில் அவளது காலை முத்தமிட்டான் , அதில் அஸ்வதியின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டது……

 

இப்போ விஹான் கொலுச டைட்டா போட்டு விட்டுட்டான் இனி உன் கால்ல இருந்து இந்த கொலுசு கழறவே கபறாது என்று பீவி கூறினார்…..

 

அஸ்வதிம்மா உன் கழுத்துல போட்டுட்டு இருந்த உன் தங்க செயின் எங்கம்மா?

 

எனக்கு பசிக்குது அப்படின்னு இவளோட செயினை வித்துட்டு சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டாம்மா……

 

என்னடா சொல்ற சாப்பிடுறதுக்காக தங்க செயினை வித்துட்டாளா?

 

ஆமாம்மா இவளோட செயின வித்துதான் சாப்பாடு, பழம், ட்ரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்துட்டு வந்தா…..

 

என்னது தங்க செயின வித்துட்டியா? என்று  கோபமாக கேட்டபடி அனந்தி அங்கு வந்தாள்……

 

ஆமா வித்துட்டேன் அதுக்கு இப்போ என்ன?

 

என்னடி ரொம்ப தைரியமா பேசுற அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீப்பாட்டுக்கு வித்துட்டு வந்துருக்க?  ஆமா எவ்வளோ ரூபாய்க்கு அந்த செயினை வித்த?

 

ஆமா  அது என்னோட அப்பாவோட சொத்து தான் ,  நா எவ்வளவு ரூபாய்க்கு அந்த செயினை வித்துட்டு வந்தா உனக்கு என்ன?

 

அப்பொழுது அங்கு சுலோச்சனா வந்து விட்டார் ……..

 

ஏய் அஸ்வதி எவ்ளோ ரூபாய்க்கு அந்த செயினை வித்த?                                    ஒழுங்கா சொல்லு என்று அவர் கோபமாக கேட்டார்……

 

ஒரு லட்ச ரூபாய்க்கு வித்துட்டு வந்தேன்……

 

செலவழிஞ்சது போக மீதி இப்போ எவ்ளோ பணம்  வச்சிருக்க?

 

ஒரு இருபது ஆயிரம் ரூபாய் இருக்கும்…..

 

என்னது ஒரு லட்ச ரூபாயில இருபது ஆயிரம் தான் மிச்சம் இருக்குதா?

 

ஆமா…..

 

அவ்ளோ பணத்துக்கு நீ என்ன பண்ணுன?

 

எங்க ரெண்டு பேருக்கும் அம்பதாயிரம் மட்டுமே போதுமானதா இருந்தது, அதனால மீதி இருந்த அம்பதாயிரத்தை அங்க காசு இல்லாம இருக்குறவங்களுக்கு கொடுத்துட்டு வந்துட்டேன்……

 

ஏய் அம்பதாயிரம் ரூபாய போய் தானம் பண்ணிட்டு வந்துருக்கியே, அறிவு இருக்குதா உனக்கு?

 

நா என்னோட செயின வித்த மொத்த காசையுமே தானம் பண்ணிட்டு வந்துருப்பேன் , ஆனா எங்க ரெண்டு பேருக்கும் இங்க வரணும்,  அப்புறம் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு வேணும் அதனாலதான் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே போதும்ன்னு கொண்டு வந்தேன்…….

 

நீ மீதி வச்சிருக்கற இருபதாயிரம் ரூபாய என்கிட்ட இப்போ கொடு , மீதி காச உன்னோட சம்பளத்துலருந்து எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடு …..

 

அஸ்வதி எதுக்கு அந்த காசு உன்கிட்ட கொடுக்கணும் சுலோச்சனா?                    அது அவளோட செயின் அவ அத அவ இஷ்டம் போல என்ன வேணாலும் பண்ணிக்கலாம் அத கேக்க நீ யாரு?என்று அங்கு தேவராஜ் வந்தார்…..

 

அப்பா இந்த அஸ்வதி தங்கச் செயின வித்துட்டு வந்துருக்கா நீங்க அவள எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க?

 

அனந்தி உனக்கு என்னோட சொத்துல எவ்வளவு பங்கு இருக்கோ அதோட அஞ்சு மடங்கு கூடவே அஸ்வதி பேர்ல அவகிட்ட சொத்து இருக்கு அத வச்சு அவ இஷ்டம் போல என்ன வேணாலும் பண்ணிக்கலாம் அத யாரும் கொஸ்டின் பண்ண முடியாது , ஏன் என்னால கூட கொஸ்டின் பண்ண முடியாது சோ நீங்க ரெண்டு பேரும் இப்போ  ஆர்கியூவ் பண்ணிட்டு இருக்கிறது வேஸ்ட் சோ உங்க வேலைய பாத்துட்டு போங்க என்று தேவராஜ் கூறவும் இருவரும் கோபத்தோடு தங்களின் அறைக்கு சென்றனர்…….

 

அஸ்வதி அந்த காச நீயே வச்சுக்கோமா அவ கிட்ட நீ கொடுக்காத என்று கூறிவிட்டு தேவராஜ் சென்றுவிட்டார்…..

 

தேவராஜ் சென்றவுடன் அஸ்வதி விஹான் மற்றும் விஹானாவை திரும்பிப் பார்த்தாள் அவர்கள் இருவரும் அஸ்வதியை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்…..

 

என்னப்பா ரெண்டு பேரும் அப்படி லுக்கு விடுறீங்க ?                                                        என்ன ஆச்சு?

 

என்ன ஆச்சுன்னு நீ தான் சொல்லணும்?

 

ஏன் எனக்கு என்ன ஆச்சு விஹானா?

 

உன்னோட அம்மாக்கிட்டயும் தங்கச்சிக்கிட்டயும் எப்பவுமே பயந்து பயந்து தானே பேசுவ?                            இப்போ என்ன ரொம்ப தைரியமா பேசுற?என்னாச்சு உனக்கு?

 

விஹானா இவ்வாறு கேள்வி கேட்கவும் அஸ்வதி திரும்பி விஹானை பார்த்தாள்……

 

எனக்கு அவங்களை பத்தின எல்லா உண்மையும் தெரியும் விஹானா,  அதனால கொஞ்சம் அறிவு வந்திருக்குப்பா அதனோட வெளிப்பாடுதான் இது….

 

நல்ல வெளிப்பாடு தான்……..                            நீ இப்படியே இரு அஸ்வதி …..

 

ஆமா இப்ப இங்க என்ன நடக்குது?          ஏன் சுலோச்சனாவும் அனந்தியும் அஸ்வதிக்கிட்ட இவ்ளோ மோசமா பேசிட்டு போறாங்க ?                                  என்ன ஆச்சு ?                                          அஸ்வதி உனக்கு என்ன உண்மை தெரிஞ்சது ?                                                  எனக்கு ஒன்னும் புரியல யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் என்று பீவி கேட்கவும்,  அப்பொழுதுதான் அவரும் அவர்களோடு  அங்கு இருக்கிறார் என்று அவர்களுக்கு நினைவு வர மூவரும் அவரை பீதியோடு திரும்பி  பார்த்தார்கள்…….

 

அது ஒன்னும் இல்லம்மா சும்மா சும்மா பேசிட்டு இருந்தோம்மா இன்று விஹானா மழுப்பப் பார்த்தாள் , ஆனால் அவளின் தாயார் அவர்கள் மூவரிடமும் இருந்து உண்மையை வாங்கிவிட்டு தான் அவர்களை விட்டார்…..

 

அஸ்வதியை பற்றிய உண்மையை அவர்களின் வாயால்  பீவி முழுவதுமாக அறிந்து கொண்ட பின் அவளை நினைத்து அவர் அழுதுவிட்டார்……

 

என்னோட கண்ணு சின்ன வயசுல இவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சியா?எப்படி கண்ணா இவ்வளவு வருஷம் இவ்ளோ கஷ்டத்த தாங்கிட்டு இருந்த?

 

ஃபர்ஸ்ட் ஸ்டார்டிங்ல ரொம்ப அழுகையா வரும் அப்புறம் அதுவே பழகிடுச்சும்மா என்று  அஸ்வதி சிரித்துக்கொண்டே கூறினாள்……

 

எப்படி கண்ணா இவ்வளவு கஷ்டம் உன்னோட வாழ்க்கையில நடந்த பிறகும் சிரிக்கிற?

 

அப்போ எனக்கு யாருமே இல்ல ஆனா இப்போ என்னோட விஹான் அண்ட் விஹானா அப்புறம் என்னோட ஸ்வீட் பீவி அம்மா இருக்காங்க சோ இனிமே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அவள் சிரித்துக் கொண்டே பீவியை கட்டிப்பிடித்துக் கொண்டாள்……

 

அஸ்வதி கொஞ்ச நேரம் இங்கேய இரு நா வாரேன் என்று கூறிவிட்டு அவர் எங்கோ சென்றார்……

 

அப்பொழுது விஹானாவிற்கு ஏதோ ஃபோன் வரவும் அவள் அந்த போனை அட்டென்ட் செய்து பேச வெளியில் சென்று விட்டாள்……

 

அப்பொழுது தூரமாக  அமர்ந்து கொண்டிருந்த விஹான் அஸ்வதியின் அருகில் வந்து அமர்ந்தான்…..

 

அஸ்வதி அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் கண்களைப் பார்த்தவாறு அவனிடம் பேசினாள்…..

 

 

இன்னிக்கி நா அந்த சுலோச்சனா ஆன்ட்டி கிட்ட நல்லா பேசினேனா?

 

எப்படி அஸ்வி அவங்க கிட்ட இவ்வளவு தைரியமா பேசுன?

 

எல்லாம் நீங்க கொடுத்த தைரியம் தான் என்று அவள் அவனைப் பார்த்து அழகாக சிரித்தாள்…..

 

அப்பொழுது பீவி அங்கு வரும் சத்தம் கேட்கவும் விஹான் அவளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தான்…..

 

அஸ்வதி இந்த செயினை நீ உன்னோட கழுத்துல போட்டுக்கோ என்று பீவி ஒரு தங்கச் செயினை அஸ்வதியின் கையில் கொடுத்தார்……

 

அம்மா இது எதுக்கும்மா?

 

இது என்னோட மாமியார் எனக்கு கொடுத்த செயின்  இப்போ இத நீ உன்னோட கழுத்துல போட்டுக்கோ…..

 

அவர் அவ்வாறு கூறவும்  அஸ்வதி அந்த செயினை வாங்காமல் தயங்கி நின்றாள்…..

 

அவள் தயங்கி நிற்பதை பார்த்த பீவி , என்னாச்சும்மா?                                               இந்த செயின் உனக்கு பிடிக்கலையா ?நான் வேணா வேற செயின் உனக்கு எடுத்துட்டு வரட்டுமா?

 

அதில்ல …..                                                      அது….                                                              அது…..

 

டேய் விஹான் இந்த செயின அஸ்வதி கழுத்துல வச்சுக்காட்டு எப்படி இருக்குன்னு பாப்போம் என்று அவர் விஹானின் கையில் அந்த செயினை கொடுத்துவிட்டார்…..

 

தன்னுடைய தாயார்  அவ்வாறு கூறவும் விஹான் அஸ்வதியின் பின்னால் அவளை  நெருங்கி அமர்ந்தவாறு அந்த செயினை அவள் கழுத்தில் வைத்துக் காட்டினான்……

 

இந்த செயின்  என்ன விட உனக்குத்தான் ரொம்ப அழகா இருக்கு , டேய் விஹான் அஸ்வதி கழுத்துல இந்த செயின டைட்டா போட்டு விடுடா என்று அவர் கூறவும், விஹான் அவளின் கழுத்தில் அந்த செயினை டைட்டாக போட்டு விடும்போது அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் கழுத்தை தீண்டவும்,   அவனின் கைகள் அவள் கழுத்தை தீண்டவும் அவளுக்குள் பெயர் தெரியா உணர்வுகள் எழுந்தன…..

 

அந்த உணர்வுகளின் விளைவால் அஸ்வதி முகம் முழுவதும் சிவந்துவிட்டது…..

 

அச்சோ அஸ்வதி உன்னோட முகம் என்ன இப்படி செவந்து போய் இருக்குது?    ரொம்ப குளிருதா உனக்கு?                          இரு நா போய் ஹீட்டர கொஞ்சம் டெம்பரேச்சர் இன்கிரீஸ் பண்ணிட்டு வரேன் என்றிட்டு பீவி செல்லவும் ….

 

அஸ்வதி தன் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த விஹானை திரும்பி பார்த்தாள் ……

 

அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி நூல் அளவு கூட இல்லை…

 

அவளின் மூக்கும் இவனின் மூக்கும் இடித்துக் கொண்டது…..

 

இருவரின் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொண்டது…..

 

விஹான் அவளைப் பார்த்து கண்ணடித்தான் , பிறகு அவளின் கைகளில் முத்தமிட்டான்…..

 

அவள் அவனிடம் எதோ சொல்ல துடிக்கிறாள் ஆனால் வார்த்தை வரவில்லை…..

 

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி 

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

ஒரு உருண்டையும் உருளுதடி” 

 

என்று எங்கோ கேட்ட பாடல்  அவளின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு இருந்தது…..

 

அப்பொழுது பீவி திரும்பி வரவும் அச்சோ அஸ்வதி நா டெம்பரேச்சர் ரொம்ப அதிகமா வச்சுட்டேனோ ?                            ரூம் ரொம்ப ஹீட் ஆகிடுச்சோ?      உன்னோட முகம் இன்னும் ரொம்ப சிவந்து போய் இருக்கே , இரு நா போய் டெம்பரேச்சர் கம்மி பண்ணிட்டு வரேன் என்றிட்டு பீவி திரும்பவும் செல்லவும் …..

 

விஹான் தன் காதலியின் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் எதிர்பாரா நேரத்தில் அவளின் கன்னத்தில் பச்சக்க் என்று முத்தமிட்டான்……

 

அப்பொழுது பீவி திரும்பி வரவும் , விஹான் நல்ல பிள்ளை போல அவளிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தான்…..

 

விஹானா அஸ்வதிக்கு என்ன ஆச்சு ஹீட்டர் டெம்பரேச்சர் கூட்டினாலும் இவளுக்கு முகம் சிவக்குது கொறச்சாலும் இவளுக்கு முகம் சிவக்குது ஏன்?

 

தன்னுடைய தாயார் இவ்வாறு கேட்கவும் விஹானா தனது தமையனை பார்த்தாள் அவன் தன்னுடைய மீசைக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்…..

 

விஹானைப் பார்த்ததும் விஹானாவிற்கு எல்லாம் புரிந்து விட்டது……

 

அம்மா அந்த ஹீட்டர் கொஞ்சம் சேட்டை பிடிச்ச ஹீட்டர் போலம்மா அதான் அஸ்வதிக்கு இப்படி முகம் அடிக்கடி சிவக்குது என்ன அன்னா நா சொல்லுறது கரெக்டா? என்று விஹானா சிரித்து கொண்டே கேட்டாள்….

 

அவர்கள் இருவரின் காதல் காட்சிகள் நன்றாகத்தான் போய் கொண்டு இருக்கிறது …..

 

இது இப்படியே தொடருமா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்….

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்