
அத்தியாயம் 28
சுஜிதா, “ஏய் நிலா வா நம்ம இரண்டு பேரும் போய் கடலில் கால் நினைக்கலாம்” என்று கூப்பிட்டாள். நிலா, “அதெல்லாம் வேண்டாம் அமைதியா இரு” என்றாள்.
சுஜாதா, “உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே இது போல் கடலில் கால் நினைக்கிறது எல்லாம் வா” என்று இழுத்துக் கொண்டு ஓடினாள்.
இருவரும் சந்தோஷமாக அங்கு விளையாட ஆரம்பித்தார்கள். விக்ரம் நிலா முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தான்.
விக்ரம் மனதில் இந்த சிரிப்பை உன் முகத்தில் சிறு வயதில் பார்த்தது அதோடு இப்போ தான் பார்க்கிறேன். இனி உன் வாழ்க்கையில் சிரிப்பு மட்டும் தான் இருக்கும் என்று நினைத்து கொண்டான்.
சக்தி நிலா சிரிப்பதை பார்த்து கோபம் அடைந்தவன் நேராக சென்று சுஜிதாவை அழைத்துக் கொண்டு, “என் கூட வா கொஞ்சம்” என்று பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டி சென்றான்.
சுஜிதா, “நானும் நிலாவும் விளையாடிட்டு தானே இருந்தோம் இப்ப எதுக்கு என்னை இழுத்துட்டு வந்தீங்க அங்க இருந்து நிலா என்ன நினைப்பா” என்றாள்.
சக்தி, “உனக்கு விளையாடனும் என்றாலும் என் கூட விளையாடு பேசணும் என்றாலும் என் கூட பேசு எதுவா இருந்தாலும் என் கூட பண்ணு”.
“நீ அந்த நிலா கூட இருக்கிறதுகாக நான் உன்னை இங்க கூட்டிட்டு வரவில்லை” என்றான்.
சுஜிதா, “உங்க கூடவா என்று யோசனை செய்வதுபோல் பாவனை செய்து. உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
சக்தி, “அதெல்லாம் பிடிக்கும் இனிமேல் எப்போதும் என் கூடவே இரு” என்றான்.
நிலா கடலை வெறித்தபடி மணலில் அமர்ந்திருந்தால். அவள் பக்கத்தில் சென்று விக்ரமும் அமர்ந்து கொண்டான்.
விக்ரம், “உனக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா” என்றான். நிலா எதுவும் கூறாமல் கடல் கலையை வெறித்தபடி இருந்தாள்.
விக்ரம், “நம்ம ஹனிமூனுக்கு நாளைக்கு போறோம் ஸ்காட்லேண்ட் தயாராக இரு” என்றான். நிலா, “சுஜிதாவையும், சக்தி மாமாவையும் அனுப்பி வைக்கப் போரோ மா லண்டனுக்கு” என்றாள்.
விக்ரம் ஆமா என்று தலை அசைத்தான். மேலும் தொடர்ந்தவன் “சுஜிதா மட்டும் போகல நம்மளும் போறோம்” என்று நான்கு டிக்கெட்டுகளை எடுத்து நிலாவிடம் காண்பித்தான்.
நிலா, “யாரை கேட்டு நமக்கு டிக்கெட் எடுத்தீங்க நான் எங்கேயும் வரமாட்டேன்” என்றாள்.
விக்ரம், “யாரோ சொன்னாங்க சுஜிதாவை ஹனிமூன் அனுப்பி வச்சா நான் சொல்றதை கட்டாயம் செய்யுவேன் என்று” என்றான்.
நிலா கோபமாக, “ஆமா நான் சொன்னேன் அதுக்காக என்னால் உங்க கூட ஹனிமூன்னுக்கு எல்லாம் வர முடியாது” என்றாள்.
விக்ரம் கூலாக, “நீ வரலைன்னா அப்புறம் யாருமே போக முடியாது நாலு டிக்கெட் கலையும் இங்கேயே கிழுச்சி போட்டுட்டு போயிடுவேன்” என்றான்.
நிலா என்ன கூறுவது என்று தெரியாமல் அவனையே பார்த்தாள். விக்ரம், “நீ வேணும்னா உன் பிரென்ட் கூட ஊருக்கு போறதா நினைச்சுகிட்டு வா”.
“உன்ன நான் எந்த ஒரு டிஸ்டர்பும் பண்ணவே மாட்டேன். நான் சொல்றதை சொல்லிட்டேன் இதுக்கு அப்புறம் உன் பிரண்ட் ஹனிமூன் போறதும் போகாததும் உன் கையில் தான் இருக்கு” என்று கூறினான்.
நிலா சிறிது நேரம் மௌனமாக யோசித்தாள். பிறகு சரி என்று ஒப்புக்கொண்டாள். நான்கு பேரும் வீட்டிற்கு சென்றடைந்தார்கள் இரவு உணவை சாப்பிட்ட பின் அவரவர் அறைக்கு சென்றார்கள்.
விக்ரம் ஜெயலட்சுமி கையில் இரண்டு டிக்கெட்கலை கொடுத்து இதை சக்தியிடம் கொடுக்குமாறு கூறினான்.
ஜெயலட்சுமி இவன் சொல்வதை எல்லாம் நான் கேட்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
விக்ரம், “என்ன எதோ பலமாக யோசிச்சிட்டு இருக்கீங்க. நிலா ஆசைப்படுவதை எல்லாம் நீங்க செய்தால் நீங்க ஆசைப்படுவது தானாக நடக்கும்”.
“அது மட்டும் இல்லாம இப்போ எல்லாம் நிலாவுக்காக நீங்க என்ன வேணாலும் செய்வீங்கலே இதுவும் அவளோட ஆசைக்காக தான்” என்றான்.
ஜெயலட்சுமி வேறு எதுவும் கூறாமல் டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டால். பிறகு சக்தியை அழைத்து “டேய் சக்தி அக்கா ஒன்னு சொல்வேன் செய்வியா” என்றாள்.
சக்தி, “முதலில் சொல்லு அப்புறம் பார்க்கலாம்” என்றான். ஜெயலட்சுமி, “அது வந்து நான் உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஹனிமூன் டிக்கெட் எடுத்து இருக்கேன்” என்றாள்.
சக்தி, “நீ யாரைக் கேட்டு டிக்கெட் எடுத்த. நான் எல்லாம் எங்கேயும் போக மாட்டேன்” என்றான்.
ஜெயலட்சுமி அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள், “அக்கா சொல்றதை கேளு இரண்டு நாள் மட்டும் தான். இது எல்லாம் ஒரு காரணமாக தான் சொல்கிறேன்” என்றாள்.
சக்தி, “என்ன காரணமா இருந்தாலும் பரவாயில்லை நான் எங்கேயும் போக மாட்டேன்” என்றான்.
ஜெயலட்சுமி, “ஊர் காரங்க எல்லாம் நம்பல தப்பா பேசுறாங்க அந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நம்ம கஷ்டப்படுத்துறதா பேசுறாங்க”.
“இப்போ நீ அந்த பொண்ண ஹனிமூன் கூட்டிட்டு போனினா அவங்க எல்லாரும் இப்படி பேசுறதை நிறுத்துவாங்க”.
“நம்ம அந்த பொண்ண சந்தோஷமா தான் வச்சிருக்கோம் என்று அவங்க எல்லாரும் நம்புவாங்க அதுக்காக தான் டா சொல்றேன் அக்காவுக்காக இத மட்டும் பண்ணுடா” என்றாள்.
நிலா தண்ணீர் எடுப்பதற்காக அடுப்பங்கரையை நோக்கி சென்றாள்.
ஜெயலட்சுமி நிலாவை பார்த்தவுடன் மனதுக்குள் இவனிடம் இப்படி எல்லாம் பேசினால் சரி வராது என்று நினைத்து, “டேய் சக்தி அங்க பாரு அந்த நிலா வசதியானவனை தான் கல்யாணம் பண்ணினாள்”.
“ஆனால் அவளே இன்னும் ஹனிமூன் எங்கேயும் போகல நீ அவளோட ஃப்ரெண்டை கூட்டிட்டு ஹனிமூன் போனினா அவ கண்டிப்பா வருத்தப்படுவா”.
“நம்ப எங்கேயும் போகவில்லையே கல்யாணம் பண்ணி. ஆனா சக்தி மாமா ஹனிமூன் எல்லாம் கூட்டிட்டு போறாரே” என்றாள்.
உடனடியாக சக்தி சரி என்று ஒப்புக்கொண்டு இரண்டு டிக்கெட்களையும் வாங்கிக் கொண்டு ரூமுக்கு சென்று விட்டான்.
தண்ணீர் எடுத்துக் கொண்டு வெளியே வந்த நிலாவை அழைத்து ஜெயலட்சுமி, “அம்மாடி நிலா கொஞ்ச நேரம் இங்க உட்காருமா” என்று சோஃபாவில் அமர வைத்தாள்.
மீண்டும் அந்த வெள்ளை காகிதத்தை எடுத்து நிலாவிடம் நீட்டி, “நாளைக்கு நீங்க ஊருக்கு வேற கிளம்புறீங்க இதுல கையெழுத்து இன்னும் நீ போடவே இல்லையே”.
“எனக்கு உன்கிட்ட கையெழுத்து கேட்கவே ஒரு மாதிரி தான் இருக்கு. ஆனா வேறு வழி தெரியல நம்ம வீட்டுக்கு கடன் அடைக்கனும்னா இதுதான் ஒரே வழி” என்றால் பாவமாக.
நிலா, “ஏன் சித்தி இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நான் இதுல கையெழுத்து போட்டு தரேன்”.
“அப்பாவோட கடன் எல்லாத்தையும் அடைச்சிருங்க விக்ரம் கிட்டயும் நான் கையெழுத்து வாங்கி தரேன்” என்றாள்.
ஜெயலட்சுமி, “அப்போ இந்த பேப்பரை நீயே வச்சுக்கோ விக்ரம் கிட்டயும் கையெழுத்து வாங்கிட்டு என்கிட்ட கொடு” என்றாள்.
நிலா சரி என்று அந்த காகிதத்தை வாங்கிக் கொண்டு தூங்குவதற்கு சென்றால். விக்ரம் குதூகலமாக துணிகளை எல்லாம் பையில் அடுக்கிக் கொண்டிருந்தான்.
நிலா அவனை யோசனையாக பார்த்து, “இந்த நேரத்தில் எங்க கிளம்புறீங்க அவசரமா” என்றாள்.
விக்ரம், “நாளைக்கு நம்ம ஹனிமூன் போறோம் தூங்குவதா முக்கியம்” என்றான். நிலா, “நம்ப ஊருக்கு போறோம் ஹனிமூன் இல்லை அதுவும் சுஜிதாவுக்காக மட்டும் தான் போறோம்” என்றாள்.
விக்ரம், “அது உன்னோட விருப்பம் உன் இஷ்டப்படி நீ நெனச்சுக்கோ என் இஷ்டப்படி நான் நினைச்சுக்கிறேன்” என்று அவளை வம்புக்கு இழுக்கும்படி பேசினான்.
விக்ரம், “சரி அதை எல்லாம் விடு நம்ப ஹனிமூன் போனதுக்கு அப்புறம் உனக்கு ஒரு பெரிய ஷாக்கிங் நியூஸ் இருக்கு” என்றான்.
நிலா, “என் லைஃப்ல நடக்குற எல்லாமே எனக்கு ஷாக்கிங் தான் இதுக்கு மேல ஷாக் ஆகுறத்துக்கு என்ன இருக்கு” என்றாள் சலிப்பாக.
விக்ரம், “இப்போ வேண்டும் என்றால் நீ இப்படி சொல்லலாம். ஆனா நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொன்னதுக்கு அப்புறம் நீ அப்படியே ஆப்போசிட்டா நடந்துக்குவ பாரு” என்று விட்டு போய் படுத்து விட்டான்.
சக்தி இரண்டு டிக்கெட்டுகளுடன் ரூமுக்குள் சென்றவன், “நம்ப நாளைக்கு காலையில் ஊருக்கு போறோம் துணி எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு கிளம்பு” என்றான்.
சுஜிதா, “எங்க போறோம்?” என்றாள். சக்தி இரண்டு டிக்கெட் களையும் அவள் கையில் கொடுத்து, “இங்க தான் போறோம்” என்றான்.
சுஜிதா அதை பார்த்தவள், “நம்ப லண்டனுக்கா போறோம். எனக்கு ரொம்ப புடிச்ச பிலேஸ் லண்டன்ல ஸ்காட்லாந்து”.
“எனக்கும் நிலாவுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்று முகம் நிறைய புன்னகையுடன் கூறினாள்.
அவள் சந்தோஷமாக பேசுவதை சக்தி இரண்டு நிமிடம் தன்னையே மறந்து பார்த்து கொண்டு இருந்தான்.
மறுநாள் காலையில் சுஜிதா மற்றும் சக்தி இருவரும் ஹனிமூனுக்கு கிளம்பினார்கள்.
ஏர்போர்ட்டில் சக்தி ஆபீஸர்களிடம் டிக்கெட்டை காட்டினான். அவர்கள் ஆங்கிலத்தில் பேசியது சக்திக்கு புரியாமல் அவர்களையே பார்த்தான்.
சுஜிதா முன்வந்து அனைத்தையும் சரிபார்த்து சக்தியை அழைத்துக் கொண்டு ஃப்ளைட்டில் அமர்ந்தாள்.
சக்தி, சுஜிதா ஆங்கிலத்தில் பேசியதை பார்த்து ரசித்தான். சக்தி மனதிற்குள் சுஜிதா அவனையே அறியாமல் உள் நுழைய ஆரம்பித்தாள்.
சுஜிதா, “என்ன இப்படி பாக்கறீங்க. இது தான் உங்களுக்கு முதல்முறையா ஃப்ளைட்ல போறது” என்று கேட்டு சீட் பெல்ட்டை போட்டு விட்டு பயமா இருக்கா?”.
“நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க உங்களுக்கு பயமா இருந்தா என் கையை பிடிச்சுக்கோங்க” என்று அவள் கைகளை சக்தி கைகளுடன் கோர்த்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.
சக்தி மனதுக்குள் இவள் ரொம்ப நல்லவளா இருக்கா. இவளை கல்யாணம் பண்ணி தப்பு பண்ணிட்டோம்”.
“இவ வாழ்க்கையவே நம்ப கெடுத்துட்டோம் போலையே என்று யோசித்துக் கொண்டே திரும்பி சுற்றிப் பார்த்தான் பின் சீட்டில் நிலா, விக்ரம் அமர்ந்திருந்தார்கள்.
சக்தி, விக்ரமை பார்த்தவுடன் கோபமாக, “சுஜி என்ன இவங்க ரெண்டு பேரும் இங்க இருக்காங்க”
“வா நம்ம இப்பவே இங்க இருந்து போகலாம் என்று எழுந்திருக்க சீட் பெல்ட்டை கழட்டினான்”.
சுஜிதா பின் சீட்டில் அமர்ந்து இருந்த நிலா, விக்ரமை பார்த்தவள், “ஹேய் நிலா நீயும் அண்ணாவும் வரீங்கன்னு என் கிட்ட சொல்லவே இல்லையே” என்று கை அசைத்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சக்திக்கு மட்டும் தான் இது சர்ப்ரைஸ் .. சக்தி சுஜி தான் முதல்ல ஒன்னு சேர போறாங்க .. விக்ரம் நீ பாவம் பா