Loading

அத்தியாயம் – 27

விக்ரம் தன் நண்பன் ராஜேஷ்க்கு போன் செய்தான். 

ராஜேஷ் “என்ன டா மாமியார் வீட்டுக்கு போயிட்டு எனக்கு போன் பன்னி இருக்க என்ன அவ்வளோ மிஸ் பண்றியா” என்றான். 

விக்ரம், “மச்சான் எனக்கு உடனடியா ஸ்காட்லந்துக்கு நாலு டிக்கெட் வேண்டும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி டிக்கெட் புக் பண்ணிடு”. 

“இன்னும் டூ டேஸ்ல எனக்கு டிக்கெட் வேணும் அப்படியே ரூம் எல்லாம் புக் பண்ணிடு அது உன்னோட பொறுப்பு” என்றான்.

ராஜேஷ், “அப்போ என் மேல் இருக்க பாசத்தில் நீ போன் பன்னலியா” என்றான். 

விக்ரம், “முதலில் நான் சொன்னதை பண்ணு” என்று போனை கட் செய்து விட்டு நேராக ஜெயலட்சுமியை காண சென்றான். 

ஜெயலட்சுமி சோபாவில் அமர்ந்து யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். அங்கு சென்ற விக்ரம், “ஆன்ட்டி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான். 

ஜெயலட்சுமி, “உக்காருங்க மாப்பிள்ளை” என்று போனை கட் செய்து விட்டு “எதுவா இருந்தாலும் சொல்லுங்க உங்களுக்கு இல்லாத உரிமையா” என்றாள். 

விக்ரம், “நானும் நிலாவும் ஹனிமூனுக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். எங்க கூட தானே உங்க தம்பிக்கும் சுஜிதாவுக்கும் கல்யாணம் ஆச்சு”. 

“அதனால் அவங்களையும் கூட அழைச்சிட்டு போகலாம்னு நிலா ஆசைப்படுவாரா” என்றான்.

ஜெயலட்சுமி, “அது அவங்களோட விருப்பம். சக்தி நா சொன்னாலும் கேட்க மாட்டான்“ என்றாள் வெடுக்கென்று அதிலேயே அவருக்கு விருப்பம் இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது. 

விக்ரம், “நான் கூப்பிட்டா உங்க தம்பி கட்டாயம் வர மாட்டார். அதனால் நீங்களே அவங்களை ஹனிமூனுக்கு அனுப்புற மாதிரி நான் கொடுக்கிற டிக்கெட்டை அவங்க கிட்ட கொடுங்க” என்றான்.

ஜெயலட்சுமி மனதிற்குள் இது ஒன்னு தான் குறைச்சல் இதுங்க எல்லாத்துக்கும். 

எல்லாம் என் தலை எழுத்து நான் நினைக்கிறது மட்டும் நடக்கலைன்னா அப்புறம் இருக்கு அந்த நிலாவுக்கு என்று நினைத்துக் கொண்டு சிரித்த முகமாக சரிங்க மாப்பிள்ளை என்றாள்.  

விக்ரம் கால் தரையில் படாதவாறு சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தான். ஹனிமூன் போனதும் கண்டிப்பா நிலா கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடனும். 

எங்க வாழ்க்கையை ஸ்காட்லாந்தில் இருந்து ஸ்டார்ட் பண்ணனும் என்று பல கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தான்.

காலையில் கண் விழித்த சக்தி மெதுவாக திமிர் விட்டபடி எழுந்து அமர்ந்தான். சுஜிதா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள். 

சக்தி, “என்ன இப்படி பார்த்துக்கிட்டு இருக்க இதுக்கு முன்னாடி என்னை பார்த்ததே இல்லையா” என்றான் சிடுசிடுப்பாக. 

சுஜிதா, “எதுக்காக தினமும் ராத்திரி ஆச்சுன்னா குடிச்சிட்டு வரீங்க வீட்டுக்கு” என்றாள் கோபமாக. 

சக்தி, “அது என்னுடைய விருப்பம். இது என்னுடைய வீடு என்னுடைய ரூம் குடிச்சிட்டும் வருவேன் குடிக்காமலும் வருவேன் அதை ஏன் நீ கேட்கிற” என்றான். 

சுஜிதா, “ஓஹோ அப்படியா” என்று தன் கழுத்தில் தொங்கும் தாலியை எடுத்து காட்டினால் 

மேலும் தொடர்ந்தவள், “இத நீங்க தானே கட்டுனீங்க. அதனால் உங்க பொண்டாட்டி அப்படி என்ற உரிமையில் தான் கேட்கிறேன்” என்றாள். 

சக்தி, “ரொம்ப ஓவரா பேசாத அப்புறம் நடக்கிறதே வேற” என்றான் மிரட்டும் தோணியில். 

சுஜிதா அவனுக்கு சலித்தவள் இல்லை என்பது போல் துலி அளவும் பயம் இல்லாமல் கைகட்டியபடி அவனை அண்ணாந்து பார்த்தவள்.

அவனை முறைத்துக் கொண்டு, “சரி அப்போ உங்க இஷ்டப் படி இருந்துக்கோங்க‌. நான் நிலா கிட்ட போயிட்டு எல்லா உண்மையும் சொல்லிடுறேன்”.

“உங்களுக்கு என்னை புடிக்கல நிலா முன்னாடி நடிக்கிறதுக்காக தான் நீங்க என்கிட்ட அன்பா இருக்கிற மாதிரி எல்லாம் நடந்துக்கிறீங்க”. 

“அப்படின்னு நான் சொல்லிடுறேன். உங்களுக்கும் எனக்கும் தான் எந்த உறவும் இல்லையே” என்றாள்.

சக்தி, “இப்போ எதுக்கு நீ தேவை இல்லாம பேசுற என்ன வேணும் உனக்கு” என்றான். 

சுஜிதா, “இனிமே நீங்க குடிக்க கூடாது நைட்ல எனக்கு அந்த ஸ்மெல்லே பிடிக்கல” என்றாள். 

சக்தி எதுவும் கூறாமல் கதவை சட்டென்று அடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். 

விக்ரம் வீட்டில் இருந்தபடி ஆபீஸ் வேலைகளை செய்து கொண்டு இருந்தான். கண்ணம்மா, விக்ரமுக்கு ஜூஸ் கொடுக்குமாறு நிலாவிடம் கொடுத்து அனுப்பினாள். 

நிலா ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று, “இந்தாங்க ஜூஸ்” என்றாள். விக்ரம் அவளைப் பார்த்து ஒரு நிமிஷம் என்று கண்களை சுருக்கி சைகை செய்தான். 

நிலா டேபிள் மேல் காப்பியை வைத்து விட்டு திரும்பினால். விக்ரம், அவள் கையை எற்றி பிடித்தவன் லேப்டாப்பை மூடி விட்டு எழுந்தான்.

நிலா, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவள் கைகளை அவனிடம் இருந்து பிரிப்பதற்கு முயற்சி செய்து கொண்ட இருந்தாள்.

அதில் விக்ரமின் பிடி மேலும் மேலும் இருக்கியது. அவள் பின்னே நகர்ந்து கொண்டே இருக்க விக்ரம் அவளை நெருங்கிக் கொண்டே இருந்தான்.

நிலா கதவில் இடித்து நின்றாள். விக்ரம் அவள் கண்களை பார்த்து கொண்டே அவன் கைகளை நிலா முதுகு புறம் மெதுவாக எடுத்து சென்றான். 

நிலா கண்களை மூடிக்கொண்டு தலையை ஒருபுறமாக சாய்த்து கொண்டு, “கடவுளே கடவுளே கடவுளே” என்று முனு முனுத்தால்.

விக்ரம் அவள் முகத்தை பார்த்து ரசித்து மௌனமாக சிரித்தான். அவள் சுடிதாரில் ஜிப் லேசாக அவிழ்ந்து இருப்பதை சரி செய்து விட்டான். 

விக்ரம் கரங்கள் நிலா முதுகை தீண்டியதும் நிலா பதட்டமாக கண்களை விரித்து விக்ரமை தள்ளி விட்டாள். 

விக்ரம், “இப்போ எதுக்கு டி நீ என்னை தள்ளிவிட்ட” என்றான். நிலா, “என்கிட்ட இன்னொரு வாட்டி இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க” என்றாள். 

விக்ரம், “என் பொண்டாட்டி டிரஸ்ஸ நான் சரி பண்றது ஒன்னும் தப்பு கிடையாது புரிஞ்சுதா” என்றுவிட்டு நிலா பதிலுக்கு கூட எதிர் பார்க்காமல் மீண்டும் அவன் ஆபீஸ் வேலைக்கு சென்று விட்டான். 

நிலா முதுகை தொட்டு பார்த்தபடி வெளியே சென்றாள். சக்தியிடம் சண்டை போட்டதால் சுஜிதா சோகமாக தோட்டத்தில் அமர்ந்திருந்தால். 

நிலா அந்த பக்கம் சென்றவள் சுஜிதாவை பார்த்தவுடன், “ஹே சுஜி உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றாள். 

சுஜிதா, “என்ன?” என்றாள். நிலா, “அது நாளைக்கு தான் சொல்லுவேன்” என்று கண் அடித்தால். 

சந்தோஷமாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த சக்தி, “சுஜி பேபி நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் வா” என்றான். 

சுஜிதா கோவமாக, “நான் எங்கேயும் வரவில்லை” என்றாள். சக்தி இவள் ஏதாச்சும் நிலாவிடம் கூறி விட்டாள் என்ன பண்ணுவது.

பேசாமல் இவளை வெளியே எங்கேயாவது அழைத்துச் சென்று சமாதானம் செய்யலாம் என்று யோசித்தான்.

சக்தி, “என்ன பேபி காலையில் நடந்ததையே இன்னும் யோசிச்சிட்டு இருக்கியா. கல்யாணம் ஆகிட்டா இதெல்லாம் சகஜம்தான்” என்று அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டு ஜிப்பை நோக்கி சென்றான்.

நிலா அவர்கள் செல்வதை பார்த்து என்ன நடந்திருக்கும் சுஜி எதுவும் சொல்லவே இல்லையே. 

ஒரு வேலை ஏதேனும் கசமுசா நடந்து இருக்குமோ என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள். 

நிலா சிரிப்பதை கண்ட விக்ரம் இவள் வெளியே செல்ல ஆசை படுகிறாளோ என்று எண்ணி நிலா கைகளை பிடித்து அழைத்துக் கொண்டு சக்தியை நோக்கி சென்றான்.

விக்ரம், “சக்தி ஒரு நிமிஷம்” என்றான். சக்தி, என்ன என்பது போல் அவனை பார்த்தான். விக்ரம், “நீ தப்பா நினைச்சுக்கலைன்னா உங்க கூட நாங்களும் வரலாமா” என்றான். 

சக்தி, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்றான். விக்ரம், “எல்லாரும் ஒன்னா போனா நல்லா இருக்கும்னு நினைச்சேன்” என்றான்.

சுஜிதா முந்திக்கொண்டு, “அதுக்கு என்ன அண்ணா நீங்களும் வாங்க எங்களுக்கும் சந்தோஷம்தான்” என்றாள். 

சக்தி கோவமாக, “எதுக்கு இப்படி சொன்ன” என்றான் கண்களாலே. சுஜிதா, “எல்லாம் காரணமாக தான்” என்று தன் கண்களை மூடி திறந்து அவனுக்கு அவளும் செய்கை செய்தால்.

பிறகு சக்தி ஜிப்பை ஓட்ட ஆரம்பித்தான் பக்கத்தில் சுஜிதாவை அமர வைத்துக் கொண்டு. பின் சீட்டில் விக்ரம் மற்றும் நிலா அமர்ந்து கொண்டார்கள். 

விக்ரம், “சுஜிதா இப்ப நம்ம எங்க போகிறோம்” என்றான். சுஜிதா, “எனக்கு தெரியலையே அண்ணா. இவங்க தான் திடீர்னு வந்து எங்கேயோ கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூப்பிட்டாங்க” என்றாள். 

சக்தி அய்யய்யோ அவசரப்பட்டு இவளை கூட்டிட்டு போலாம் முடிவு பண்ணிட்டோம் ஆனா எங்க கூட்டிட்டு போறதுன்னே தெரியலையே என்று யோசித்தான். 

விக்ரம், “சரி நான் பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் சொல்றேன் அங்க போகலாமா” என்றான். 

சக்தி, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நீங்க சொல்ற இடத்துக்கு எல்லாம் என்னால போக முடியாது. என்கூட தானே நீங்க வரேன்னு சொன்னீங்க”.

“அப்போ நான் எங்க போறேன்னோ அங்க வந்தா போதும் பேசாம அமைதியா இருங்க” என்று ஜிப்பை வேகமாக ஓட்டினான். 

அந்த வேகத்தில் நிலா பேலன்ஸ் தாங்காமல் விக்ரம் மேல் இடித்தாள். விக்ரம் கோபத்தில் ஜிப்பை ஓட்டினாலும் நமக்கு நல்லா தான் இருக்கு என்று நினைத்து சிரித்தான். பிறகு சக்தி நேராக கடற்கரைக்கு சென்று ஜிப்பை நிறுத்தினான். 

சக்தி ஜிப் பில் இருந்து கீழே குதித்தவன் ரிசப்ஷன் அன்று சுஜிதாவுக்கு இதிலிருந்து இறங்க முடியாமல் சிரமப்பட்டது நினைவில் வந்தது‌.

அதனால் நேராக சுஜிதாவின் அருகில் சென்று அவள் இடுப்பில் கை வைத்து அழகாக தூக்கி கீழே நிறுத்தினான்.

விக்ரம், “இது செம்ம பிளேஸ் புதுசா கல்யாணம் ஆனவங்க எல்லாருக்கும் இங்க வர்றது தான் பிடிக்கும்” என்றான். நிலாவை பார்த்து கண்ணடித்த படி. 

அவன் நிலாவை பார்த்ததும் சக்திக்கு கோபம் வந்தது. சுஜிதா தோல் பட்டையில் கை போட்ட படி எதுவும் பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான். 

சுஜிதா மனத்துக்குள் சீக்கிரமே உங்களுக்கு என்னோட காதல் புரியும் என்று நினைத்து கொண்டாள். 

அவர்கள் சென்ற பின் நிலா, “இப்போ எதுக்கு என்னை பார்த்து கண்ணடிச்சீங்க” என்றால் கோபமாக. 

விக்ரம், “என் பொண்டாட்டியை பார்த்து நான் கண்ணடிக்கிறதுக்கு யார் கிட்டயாவது பர்மிஷன் வாங்கணுமா என்ன” என்றான். 

நிலா கோவமாக அவனை பார்த்து முறைத்தாள். விக்ரம், “ஐயோ டார்லிங் எத்தனை முறை சொல்றது இதுபோல் எல்லாம் என்னை ரொமான்டிக்கா பார்க்காத எனக்கு மைண்ட் எங்கேங்கோ போகுது” என்றான் ஹஸ்கி வாய்ஸில். 

நிலா வேகமாக அங்கிருந்து முன்னே நகர்ந்தாள். விக்ரம் அவள் பின்னே காற்றிலே முத்தம் கொடுத்தபடி நீ கோபப் படும் போது கூட அழுகா இருக்க என்று வேகமாக அவள் பின் சென்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சக்தி ஜீப்பில் இருந்து இறங்க மாட்டார் .. அப்படியே குதிப்பார் .. யார் எப்படி போனாலும் விக்ரம் வேலை சரியா நடக்குது .. என்ஜாய்