Loading

சபதம்-3

 மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும் என்றாங்கு  5

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்,

போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்,

வலியும் தெறலும் அளியும் உடையோய்!

-புறநானூறு (2)

பொருள்: அணுச்செறிந்த நிலமும்,அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயோடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோலப் பகைவர் பிழை செய்தால், அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்குமளவல்லவாயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும்அருளுமுடையோய்!

கரண் பிரதாப் கண்களில் கிஞ்சிதமும் வேதனையின் சாயல் இல்லை. அதை கண்களுக்குள் மறைத்தவன், பார்வை தனக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் அந்த கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

கைகளில் மெல்லிய நடுக்கத்துடன் அவன் காயத்திற்கு மருந்து போட்டு கொண்டிருந்தவள், மறந்தும் அவனின் கழுகுப் பார்வையைச் சந்திக்கவில்லை.

அதில் கொஞ்சமே எரிச்சல் கொண்டவன் முன், அவனின் இடது கை மற்றும் உதவியாளன் சுக்விந்தர் வந்து நின்றான்.

“பாஸ்..” என்றவனின் வார்த்தை முடியும் முன், “கலில் ஹாசிம்” என்ற கரணை அதிர்ந்து பார்த்தான் சுக்விந்தர்.

“ஆனா.. கலில் லண்டனில்..”  என்று இழுத்த சுக்விந்தரின் வார்த்தைகளை இடையிட்ட கரண்,”இல்லை.. ஸ்காட்டில் இருக்கான்” என்றவனின் வார்த்தையில் மருந்தைக் கட்டிக் கொண்டிருந்தவளின் கைகள் பட்டு  சலைன் பாட்டில் கீழே விழுந்து சிதறியது.

அதில் இதழ் வளைத்து சிரித்த கரணின் பார்வை, சுக்விந்தரிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருந்தது.

அந்த பார்வையின் பொருளை உணர்ந்துகொண்டவன், புரிந்ததாக தலை அசைத்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.

கட்டு போட்டு முடிந்த பின்னும் தன் தோள் காயத்தினில் கைகளைப் பதித்த படி பார்வையைத் தழைத்திருந்தவளைப் பார்த்தவன் தன் தோளை  அந்த கைகளில் இருந்து ஒரு வேகத்துடன் பிரிக்க, அவனின் வேகத்தில் பதறியவளின் “பார்த்து..” என்ற குரலின் மென்மையில் அவன் அமர்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள முனைந்தவனின் உடல் ஒருமுறை இறுகி பின் இயல்புக்கு வந்தது.

“ஒவ்வொரு முறையும் அமைதியா போவேன்னு நினைக்காத, இது தான் என் பொறுமையோட முடிவு.. அதுவும் உனக்..”என்று தொடங்கியவனின் தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொண்ட உணர்வு.

வார்த்தையை முடிக்காமல் திரும்பி அவள் முகத்தை பார்த்தவனின் பார்வையைச் சந்திக்காமல், நிலத்துக்குள் புதைந்துக் கொள்ள துடித்தவளின் ஒரு துளி கண்ணீர், அவன் காலடியில் பட்டு சிதறியது.

அதில் கண்களை மூடி திறந்தவன், அந்த அறையை விட்டு பேய் துரத்துவது போல் தன் நீண்ட கால்களை எட்டி வைத்து அந்த உயர் தர மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருந்தான்.

அவன் பின்னோடு சென்ற இதயத்தை இறுக்கிப் பிடித்து, தன் அறைக்கு வந்தவளின் தொலைப்பேசி, அவளின் வேதனையை உணர்ந்து குரல் கொடுத்தது.

அதற்கு உயிர் கொடுத்தவளின் வார்த்தை மௌனித்துப் போக, அந்த பக்கம், “என்ன சொன்னான்?” என்ற வார்த்தைக் கூரான கத்தியைப் போல் அவள் செவிகளில்  பாய்ந்தது.

இவளிடம் மௌனம்! மௌனத்தை மட்டுமே துணையாகக் கொண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது. அவளிடம் பதில் வராது என்று தெரிந்தும் அடுத்த கேள்வியாக, “எத்தன.. எத்தன தடவ? வருவான்.. அவனே என்ன பார்க்க வருவான்.. வர வைப்பேன்..” என்ற அந்த குரலின் வேகம் அவளை மூச்சடைக்க வைத்தது.

ஆயிரம் வார்த்தைகள் அவளுக்கு தோன்றியும், ஒன்றுக்கு கூட அவள் உயிர் கொடுக்க முனையவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு அவள் வந்துவிட்டாள்.

“அவன் உன்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறான். உனக்கு அது புரிகிறதா அதிரா? ஏன் இந்த மௌனம்?இன்னும் எத்தனை நாள்? இதோ இன்னும் மூன்று மாதம் உனக்கான காலா அவகாசம். இல்லை நான் இதைப்பற்றி வாப்பாவிடம் பேச வேண்டியது வரும்” கலிலின் வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும், அதில் உள்ள நிதர்சனம் அதிராவிற்கு நன்கு புரிந்தது.

அதில் தன்னை மீட்டுக் கொண்டவள், “ம்ம்.. புரிவது இருக்கட்டும், நீ உன் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ளுவது போல் செயல்படுவது நல்லது இல்லை, இதுவே கடைசி. இதுக்கு மேல உன்னால அவ.. எந்த உயிருக்கு சேதாரம் வந்தாலும் நானும் வாப்பாவிடம் சொல்ல வேண்டியது வரும்..” என்றவளின் வார்த்தையில் சற்று அடங்கிப் போனான் ஹாசிம்.

“அதி..” என்றவனின் பேச்சை தடுப்பது போல், “வேணாம் கலில், உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியல. அதே போல என் உணர்வையும் உன்னால புரிஞ்சுக்க முடியாது.. இதோட விடு..” என்றவள் தன் கைகடிகாரத்தை பார்த்து, “கவனமா இரு, கரண் கண்டிப்பா உன்னை தேடி ஸ்காட்லாந்து வருவான்” என்றவள் தொடர்ந்து,”எனக்கு டியூட்டிக்கு நேரம் ஆயிடுச்சு.” என்றதோடு அவன் அழைப்பைத் துண்டிக்கும் முன்,”வரட்டும்… கண்டிப்பா வரத்தானே வேண்டும். அதற்கு தான் இந்த கலில் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்ற வாத்தையை கேட்ட அதிராவிற்கு தலை வின்வின் என்று தெறிக்க தொடங்கியது.

அணைத்து வைத்தவளின் எண்ணங்கள் பன்னிரெண்டு வருடங்கள் முன் நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க, எங்கோ இருந்து எங்கோ கொண்டு வந்த, தன் வாழ்க்கையின் பாதை திசை மாறிய நாளில் வந்து நின்றது.

‘இது தான் கடவுளின் சித்தம் எனும் போது யாரை நொந்து என்ன பயன்?’ என்று  எண்ணியவள், தன் வேலையைப் பார்க்கச் சென்றாள்.

லண்டன் மாநகரின் கென்சிங்டன் பகுதியில், பெரிய விக்டோரியன் வகை மாளிகைக்குள் நுழைந்தான் கரண்.

அவனின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வந்த சுக்விந்தர், முகத்தில் குழப்பமே மிஞ்சி இருந்தது.

அந்த மாளிகையின்  முற்றத்தை கடந்து மிக பெரிய வரவேற்பறை இருக்க , அதின் ஒரு மூலையில் இருந்த பிரமாண்டமான கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.

சாதாரண நாளில் அந்த அறையின் பிரம்மாண்டமும் அழகும் பார்ப்பவரை ஈர்த்திருக்கும். ஆனால் இப்போது கரண் அமர்ந்திருந்த அவன் இருக்கையில் இடது புறம் சாய்ந்து, அடிபட்ட கையை அசௌகரியமாக வைத்திருந்த விதத்திலே, அவன் வேதனையை சுக்விந்தரால் உணர முடிந்தது.

இருக்கையில் அமர்ந்தவனின் கவனம் தன் மேல் இல்லாததை உணர்ந்த சுகவிந்தர் அமைதி காக்க, கரணின் இடது கையின் விரல்கள் தன் முன் இருந்த மேஜையில் தாளம் போட, ‘நெஞ்செல்லாம் ரணம் அதிராவிற்கும் தன்னை பிடித்திருப்பதாகவே நினைத்தான். அந்த நாள் வரும்வரையில். கலிலும் அதிராவும் காதலர்கள் என்பது அவனுக்கு பெரிய அதிர்ச்சி. இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. இன்றுவரை அதிராவின் கண்களில் அவன் தனக்கான காதலை பார்த்திருக்கிறான்… ஆனால் கலீல் அதிரா….” என்றவனுக்கு அதற்கு mel யோசிக்க முடியவில்லை.

“பாஸ்..” என்று இழுத்த சுக்விந்தரை ஒரே பார்வையில் அடக்கினான்  கரண். “ஐ நீட் கலீல். டெட் ஓர் அலைவ்” என்றவனிடம் எதையோ கேட்க வந்த சுக்விந்தரை,” நோ மோர் கொஸ்டீன்..ஷீ இஸ் மைன். இ நீட் ஹேர்” என்று ஆக்ரோஷமாக கத்தினான்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரம் மின் விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது.

வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது உதய்ப்பூரின் மகாரனா ராஜாவம்சத்தின் இருப்பிடமான அந்த அரண்மனை.

சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டத்தின் உருப்பெற்று ஓங்கி நிலைத்திருந்த அந்த மாளிகையின் ஒரு பகுதியில், கூட்டம் கூட்டமாக காவலர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.  

மின் விளக்கில் அழகோவியமாக தெரிந்த அந்த அரண்மனை, இப்போது கோரமாய்  எரியத் தொடங்கிய நெருப்பால், பல ரகசியங்கள் பொதிந்த அமனுஷ்யத்தின் வெளிப்பாடாய் மிக பயங்கரமாய் காட்சி தந்தது.

கரண் பிரதாப் சிங்கிற்கு ஏற்பட்ட விபத்தும், இந்திய‌ மண்ணில் உதய்பூர் மாநிலத்தில் கரண் பிறந்து வளர்ந்த அரண்மனை தீ விபத்தும் சரியாக ஒரே நேரத்தில் நடந்திருந்தது.

அரச மரபில் தீ விபத்து, அந்த வம்சத்திற்கு ஏற்பட போகும் பெரும் ஆபத்தின் அறிகுறி.

அரண்மனை தீ விபத்து, அரச குடும்பத்துக்குத் தெரியப்படுத்த, அடுத்த பத்தாவது நிமிடம் அங்கு வந்து நின்றார் மஹாராஜா சமர் சிங், உதய்ப்பூரின் அரசர், அங்குள்ள மக்களின் பாதுகாவலன் மட்டுமல்லாது சிறந்த தலைவன்.

அரசரைக் கண்டதும் அவரிடம் ஓடி வந்த உதவியாளர் பூபிந்தர் யாதவ், “மஹாராஜ்..” என்று மூச்சு வாங்க நின்றார்.

“கியா ஹோ ரஹா ஹை? ஏஹ் கைசே ஹோத்தா ஹை?” (என்ன நடக்குது இங்க, இது எப்படி நடந்தது?)

“குச் பிஜ்வி கா மஸ்தா பட்கயா”(ஷார்ட் சர்க்யூட் ஆகி அதில் இருந்து நெருப்பு புகைந்திருக்கு)

“இவ்ளோ அலட்சியம் எங்க இருந்து வந்தது? இதை கவனிக்கமா எல்லாரும் என்ன பண்றாங்க?”

“மஹாராஜா,இது.” என்றவன் ஒருமுறை தங்களைச் சுற்றி பார்த்துக் கொண்டே “தானா நடந்தது போல இல்ல..” என்றவரை ஆழ்ந்து பார்த்தார் மஹாராஜா சமர் சிங்.

அதே நேரம் இரவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சுந்தரத்தின் மடியில் நித்திரையில் இருந்த மீனாள், உடல் அதிர, கண்கள் நிலைகுத்தி விட்டத்தை பார்த்தவாறு, ஒற்றை கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்த படி,

“அக்னி தேவ் !!

ஆக்ராமக்

அப்னி சத்ருதா கோ நஷ்ட் கரனே கே லியே

அப்நே குல் கா ஜகாத கதம் கரனே கே லியே

கோயோட் ஜுன்த் கா ஆவோ

அவுர் நாஷே மேய்ன் துத் ஹோ ஜாவோ

ஆஜ் கே பாரேன் மேய்ன்

ஆக் மேரே வநஷ் கீ ரக்ஷா கரோ!!

(” அக்னி தேவா!!

ஆக்ரோஷமாய் ஆங்காரமாய்

நின் பகை கெடுக்க,

என் குலத்தின் பகை முடிக்க

செந்நாய் கூட்டத்தின்

குடி கெடுக்க வா..

இன்று பற்றிய நெருப்பு

என் வம்சத்தை காக்கட்டும்!!”)

என்றவளின் வார்த்தைகள் முடிந்ததும், தன் மேல் மயங்கி சரிந்தவளை எப்போதும் போல் நெஞ்சோடு அணைத்து கொண்டார் சுந்தரம்.

ஊர் பக்கம் மக்கள் சொல்வது போல், மகளுக்கு பேய் பிசாசு எதுவும் அண்டிவிட்டதோ என்ற எண்ணம் சுந்தரத்துக்கும், அவரையும் மகளையும் அதிர்ந்து பார்த்திருந்த ராதாவிற்கும் வலுக்கத் தொடங்கியது.

அதே இரவில் காட்டு பாதையில் இடிந்து கிடந்த கோவில் முன்னே அமர்ந்திருந்த கருத்த உருவம், கோவிலின் கருவறை இருந்த இடத்தையும், அந்த இடத்திற்கு எதிரே இலை சருகுகளால் நிறைந்திருந்த இடத்தையும் மாறிமாறி பார்த்துக் கொண்டே “கர்னி மாதா.. வோ ஆஹ் ரகி ஹை..” என்றவன் திரும்பி அந்த குப்பை மேடை நோக்கி, ” ஆப்கி தபஸ்ய சஃபல் ஹோ கயீ.. வோ ஆஹ் ரஹி ஹை” (கர்னி மாதா அவள் வந்து கொண்டிருக்கிறாள்.. உன் தவம் பழித்து விட்டது, அவள் வந்து கொண்டிருக்கிறாள்..)  என்று மீண்டும் மீண்டும் கத்திய படி நடுக்காட்டில் கைகளை விரித்து வான் நோக்கி பார்வை பார்த்த படி அந்த உருவம் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

பற்றி எரியும் உதய்பூரின் நெருப்பு இனி தெற்கு தொடங்கி எட்டு திக்கிலும் பற்றி எரியும்.. அதில் பகை கெடுத்து முடி காத்து சபதம் முடிக்க மீண்டு வருவான் ரணசூரன்..

ரணசூரன் வருவான்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்