Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!

அத்தியாயம் 21

கணவனுடன் அவனது இருசக்கர வாகனத்தில், அவன் தோல் மேல் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு செல்லும் நகர்வலத்துக்கு ஈடு இணை இருக்குதா என்ன? சந்தோஷமாக, மன நிறைவுடன் அவனோடு பயணித்தாள் பெண்.

மது “எந்தக் கோவிலுக்குப் போறோம் சித்தத்து?”

“எல்லாம் உன் ஆள பார்க்கத் தான். உன் பிள்ளையாரப்பாவ விட்டுட்டு வேற எங்கயும் நீ வந்துருவீயா என்ன?”

“அதான் நானும் சொல்ல வந்தேன். அங்கயே போகலாம்”

“சரி” என்றவனின் வண்டி கோயில் இருக்கும் திசைக்குச் செல்லாமல் வழிமாறிச் செல்ல,

“சித்தத்து! கோயிலுக்கு அந்தப்பக்கம்ல போகனும். எங்க போறோம்?” என்றாள்.

“கோயிலுக்குப் போலாம் அதுக்கு முன்னாடி சாப்பிட்டு போலாம். நீ காலையில இருந்து சாப்பிடல.. ஊசி வேற போட்டு இருக்க சாப்பிடனும்ல”

“ம்ம்” என்றாள் வருத்தமாக.

“சாரி! அம்மா பேசினது தப்பு. அவங்களுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன்”

“அய்யோ சித்தத்து! நீங்க வேற.. விடுங்க அதை..”

“ம்ம். எனக்கும் கஷ்டமா போயிடுச்சு. என்னால தான உனக்கும் இந்த அவமானம்”

“நம்மாள தான. உன்னால மட்டும் இல்ல” என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே கூறினாள்.

“அடியேய் கோயிலுக்குப் போகனுமா? இல்ல சாப்பிட்டு வீட்டுக்கு வண்டிய விடவா?”

“அய்யோ சித்தத்து.. கோயிலுக்குப் போகனும்” எனச் சிணுங்க,

“அப்போ இப்படி எல்லாம் பேசாதடி.. எனக்கு மூடே மாறிடும் போல” என்றான். வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை இன்னும் அவன் பார்க்கவில்லை, பார்த்திருந்த்தால் உடனேயே வீட்டுக்குத் தான் சென்றிருப்பான்.

இருவரும் ஒரு உணவகத்துக்குச் சென்றனர். அவளுக்குப் பிடித்தமான உணவையே இருவருக்கும் வாங்கினான். என்ன தான் அவளோடு நல்லவிதமாகப் பழகினாலும் அவனின் ‘தாரா’ என்னும் அழைப்பு இதுவரை வரவேயில்லை. அவளும் அதற்கு ஏங்கினாலும் அவனுக்காகப் பொறுத்துக் கொண்டாள். அவன் மனக்காயம் ஆறவும் நாட்கள் வேண்டுமல்லவா!

இருவரும் அவர்களுக்குள் சந்தோஷமாய் பேசி, சிரித்து சாப்பிட்டு முடிக்க, பணியாளர் வந்தார்.

“மேம் டெஸர்ட், ஐஸ்கீரீம், ஜூஸ் எதுவும் வேணுமா?” எனக்கேட்க, கண்களில் மின்னல் வெட்டச் சித்தார்த்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதற்குப் பார்க்கிறாளென அறியாதவனா அவள் சித்தத்து.

சித்தார்த் “அதெல்லாம் வேணாம்” எனக்கூற, அவள் முகமே விழுந்துவிட்டது. அவள் முகத்தைப் பார்த்து விட்டு என்ன நினைத்தானோ பின் தானே அவரை அழைத்து “ஐஞ்சு ரூபா டைரிமில்க் இருக்கா?” எனக்கேட்க,

“சின்னது இல்ல சார்.. நூறு ரூபா டைரி மில்க் தான் இருக்கு” எனக்கூற, சித்தார்த் பதிலளிக்கும் முன் முந்திக்கொண்டு “பரவாயில்ல கொண்டு வாங்க” எனத் தானே கூறினாள்.

“சுகர் கூடிடும்டி”

“நிறைய சாப்பிட மாட்டேன். ஃபிரிஜ்ல வைச்சு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு தெரியுமா? நீ ஊருக்குப் போனபிறகு ஸ்டார்ட்டிங்ல ஆது வாங்கி தந்தான் தான்.. ஆனா அப்புறம் அவனும் கடை, வேலைனு மறந்துட்டான். நானும் சாப்பிடுறத விட்டுட்டேன். இன்னைக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் நீ வாங்கித்தர”

என மனதிலுள்ளதை மறைக்காமல் அவள் கூற, உள்மனதில் திருநீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டே இருந்த கோபம் வெளிவர, தனக்குள் மறைத்துக்கொண்டான் அவனவளுக்காக. அவளுடன் இருக்கும் இந்தச் சந்தோஷமான தருணத்தை இழக்க மனமில்லை அவனுக்கு. மீண்டும் சந்தோஷமான மனநிலையையுடன் கோவிலுக்கு கிளம்பினர்.

தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே.. கை கோர்த்து போக இந்த சாலை போதாதே!

என்னென்ன விண்கலம் நான் சொல்லவே.. கைபேசி மின்கலம் போதாதடி!

உன் அழகை பருக என் கண்கள் போதாதடி.. என் நிலையை எழுத வானங்கள் போதாதடி!

நேரமுல்லை பின் இழுத்தும்.. வாரம் எட்டு நாள் கொடுத்தும்.. சுற்றும் பூமியை தடுத்துமே.. ஹே..

போதவில்லையே போதவில்லையே உன்னைப்போல போதை ஏதும் இல்லையே!

எனப்பாடிக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கெண்டிருந்தான். அவளோ அவன் பின்னால் அமர்ந்து அவனையும், அவன் பாட்டையும் இரசித்துக் கொண்டே வந்தாள். பாடலில் மூலம் அவன் கூற வரும் கருத்துகள் அவளை எங்கெங்கோ இழுத்து சென்றது.

“சித்தத்து திரும்ப டிரைனிங் போகனுமா?”

“ஆமாடி. போகனும்ல. புதன் கிழமை ட்ரைன் டிக்கெட் எடுத்துருக்கேன்”

“அப்போ இன்னும் மூணு நாள் தான் இருக்கா?”

“ஆமா!”

“திரும்பி எப்போ வருவ?”

“ஒரு மாசம் ஆகும் முடிய. முடிஞ்சதும் எங்க ஜாப் கொடுக்குறாங்களோ அங்க போகனும்”

“அப்போ நான்?”

“டிரைனிங்க்கு உன்ன எப்படி டீ கூட்டிட்டு போறது? டிரைனிங் முடியவும் வேலை வந்தபிறகு அங்க போய்ட்டு தங்க இடம் எல்லாம் பார்த்துட்டு வந்து கூட்டிட்டு போறேன்”

“அதுவரை தனியா இருக்கனுமா?”

“அஞ்சு மாசம் எப்படி இருந்த? அப்படி தான் இருக்கனும்”

“அப்போ அப்பா, அம்மா எல்லாரும் இருந்தாங்க” எனக்கூற, வண்டியின் வேகத்தில் தன் கோபத்தைக் காட்டினான்.

“மெதுவா போ சித்தத்து” எனக்கூற, அவன் கைவண்ணத்தில் வாகனம் உருமியது.

“சரி கோபப்படாத. இனி பேசல போதுமா? ஆனா தனியா இருக்குற மாதிரி இருக்கும். சீக்கிரம் வந்துருவல”

“ம்ம்” மட்டும் பதிலளித்தான்.

“சிரியேன்” எனக்கேட்க, “ம்ச்” எனச் சலித்துக்கொள்ள, “செல்லம்ல.. செல்லம்ல” எனக்கொஞ்சியே அவனைச் சமாதானப்படுத்தினாள் மது. இருவரும் அவளுக்கு விருப்பமான பிள்ளையாரை சந்திக்க வந்து கொண்டிருந்தனர்.

இவனை என்ன செய்து சமாதானம் செய்வதென்றே பெண்ணவளுக்கு தெரியவில்லை. அவன் இவ்வளவு கோபம் கொண்டு இப்போது தான் பார்க்கிறாள். அவளைப் பிறந்ததுமுதல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவன், ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்தவர்கள். பெற்றோரைக்கூட விட்டுவிட்டு அவள் வீட்டிலேயே தவமிருந்தவன். இன்று அவர்கள் அத்தனை பேரையும் வெறுத்துக்கொண்டல்லவா இருக்கிறான். ‘கடவுளே அவருக்கு மனதில் மாற்றத்தைக் கொடு’ எனக் கடவுளிடம் மன்றாடிக்கொண்டே சென்றாள் அவனுடன்.

கோவிலில் அன்பு “இல்ல ஈகை நீ சரியா பார்த்திருக்க மாட்ட, வேற எங்கயோ போயிருப்பாங்க.. இல்ல வேற கோவிலுக்குப் போயிருப்பாங்க. நமக்கு முன்னாடியே பைக்ல வந்தவங்க இன்னமுமா இங்க வராம இருப்பாங்க?”

ஈகை “ஒருவேலை நம்ம வரதுக்கு முன்னாடியே வந்து சாமி கும்பிட்டு கிளம்பிட்டாங்களோ?”

“தெரியலயே! இன்னும் என்னத்துக்கு இங்க இருக்க. வா! கிளம்பலாம்”

ஈகை “இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போமா?”

“நம்பிக்கை இல்ல. ஆனா இங்க இருக்கும்போது மனசு கொஞ்சம் சாந்தமா இருக்குற போல இருக்கு. அதுக்காகவாது கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போவோம்” எனக்கூறி ஓரிடத்தில் மூவரும் அமர்ந்தனர்.

மதுவும், சித்தார்த்தும் கோவிலுக்கு வந்துவிட்டனர். சித்தார்த் “மது! நீ உள்ள போ. நான் கடையில போய்த் தேவையானத வாங்கிட்டு வரேன்” எனக்கூற சரியெனத் தலையசைத்து விட்டுக் கோவிலுக்குள் நுழைய, வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அன்பழகன் கண்ணில் விழுந்தாள் மது.

“ஈகை! மதும்மா” எனக் கண்களில் கண்ணீர் கோர்க்க, தழுதழுத்த குரலில் வந்தது வார்த்தை. ஈகை திரும்பிப் பார்க்கும் முன் எழுந்த அன்பு, மதுவை நோக்கி நடந்தார் இல்லை கிட்டத்தட்ட ஓடினார் என்றே சொல்லலாம்.

அவர் வருவதை கண்டு விட்ட மதுவுக்கும் மனதில் ஆயிரம் மத்தாப்பூ பூக்க கணவனின் கோபம், அவனின் வார்த்தை, ஏன் அவனையே மறந்து தந்தையை நோக்கி ஓடியே வந்தவள் அவரைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடிக்க, அவள் கை, முதுகு, தலை எல்லாம் வருடிக்கொடுத்து, மகளின் நலனை ஆராய்ந்தனர் பெற்றோர்.

நெற்றியில் வீக்கம் கூட நன்றாகக் குறைந்திருந்தது. உடல் ரீதியாக மகள் காயப்படவில்லையென அறிந்த அன்பு,

“மதும்மா எப்படி இருக்கடா?”

“நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“இருக்கோம்மா உன் நினைப்பு தான்”

“நான் நல்லா இருக்கேன்ப்பா”

“உன்னை விட்டுட்டு எங்களால தான் இருக்க முடியல.. மனசு கிடந்து தவிக்குது” என மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டே அன்பு கூற, ஈகையோ மகளின் தலையைக் கோதிக்கொண்டு, அவளையே பார்த்துக்கொண்டு நின்றார். இருவரும் கூடவே கூட்டிட்டு வந்த தரூணை மறந்துவிட்டனர் மகளைப் பார்த்த சந்தோஷத்தில்.

சித்தார்த்தோ பொருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வர, வாசலில் சிறு சலசலப்பு. என்னவெனப் போய்ப் பார்க்க, ஒரு சிறுவன் அழுதுகொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு பெண் அவனைத் தோளில் போட்டுச் சமாதானம் செய்துகொண்டிருந்தாள். தோளில் போட்டிருந்ததால் சிறுவனின் முகம் தெரியவில்லை.

அவனும் குழந்தை கீழே விழுந்துவிட்டது போலும். அவனது தாய் சமாதானம் செய்கிறாளென எண்ணி நகர, அங்கிருந்த ஒருவர்,

“யாரு புள்ளனு தெரியலயேப்பா.. இப்போ என்ன பண்ணுறது.. பக்கத்துல விசாரிங்க இல்லனா போலீஸ்ல சொல்லிடலாம்” எனக்கூற, அவனால் அந்த இடத்தை விட்டு அசையமுடியவில்லை.

குழந்தை வழிதவறி வந்துவிட்டது போல என நினைத்து அந்தப் பெண்மணியிடம்,

“என்னம்மா ஆச்சு?” எனக் கேட்க, அப்பெண்மணி பதில் கூறும்முன் பழகிய குரல் கேட்டதால் அப்பெண் தோளிலிருந்து திரும்பிப் பார்த்த சிறுவன் சித்தார்த்தை “மாமா” என அழைக்க, சிறுவனின் முகம் பார்த்த சித்தார்த்துக்கு அதிர்ச்சி தான். ஏனெனில் அது அஸ்வந்தின் மகன் தரூண்.

“மாமா” எனத் தரூண் மீண்டும் அழைக்க,

“தரூண்” என்றான் அதிர்ச்சியாக. தரூணோ அப்பெண்ணிடமிருந்து தாவிச் சித்தார்த்திடம் வர, தருணை வாங்கிக் கொண்டான் சித்தார்த்.

“உங்க சொந்தகார பையனா தம்பி?” என அப்பெண் கேட்க, ‘ஆமாம்’ என்னும் விதமாகத் தலையசைத்தான்.

“புள்ளைய கவனமா பார்க்க வேண்டாமா? ரோட்டுக்கு வந்துட்டான் பிள்ள.. வேகமா வந்த பைக் காரன் இடிக்க வர, பயந்து கீழ விழுந்து ஒரே அழுகை. சரி இனி கவனமா பார்த்துக்கோங்க தம்பி” எனக்கூறி கூட்டம் கழைந்து செல்ல,

சித்தார்த் “நீ எப்படிடா இங்க வந்த? யார் கூட வந்த? அம்மா எங்க?” எனக் கேட்க,

தரூண் “தாத்தா, அப்பத்தா கூட வந்து..”

“எங்க அவங்க?” எனக் கேட்க, கோவிலுக்குள் கைக்காட்டினான் தரூண்.

“சரி வா” என அவனைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குள் வரும்போது பல சிந்தனைகள் சித்தார்த் மனதுக்குள்.

‘மது அவ அம்மா அப்பாவ பார்த்திருப்பாளா? பேசியிருப்பாளா? நான் பேசக்கூடாதுனு சொன்னத மதிச்சு பேசாம இருப்பாளா? இல்ல அப்பா அம்மாவ பார்த்ததும் திரும்ப என்னை மறந்துட்டு அவங்க கூட ஒட்டிக்குவாளா?’ எனப் பல சிந்தனையில் வர அவன் நினைத்தது சரி தான் என்னும் விதமாகத் தந்தை தோளில் சாய்ந்து நின்றிருந்தாள்.

அவனுக்கோ மீண்டும் தோற்றுவிட்ட உணர்வு. அவர்களுக்காகத்தானே தன்னை வேண்டாமெனத் தூக்கி எறிந்து ஆதவனுடனான திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள். இன்றும் வரும் வழியில் கூட அவர்களின் மேல் அவனுக்குள்ள கோபம் அவளுக்குத் தெரியும் ஆனாலும் அவர்களிடம் சென்று உறவாடிக் கொண்டிருக்கிறாளே! அப்போ அவளுக்குத் தன்னை விட அவர்கள் எல்லாரும் தானே முக்கியம்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. இல்ல சித்து எனக்கு ஒண்ணு புரியல … வாய்க்கு வந்தெல்லாம் பேசுற எல்லாரையும் சங்கடப்பட வைக்கிற உங்க அம்மா கூட தான நீங்க இருக்கீங்க … ஏதோ தப்பு நடந்திருக்குனு தெரிஞ்சாலும் அம்மா கூட நீங்க பேசாம இல்லையே … ஆனா மது மட்டும் அவ சந்தோஷத்துக்காக யோசிச்ச அவங்க அப்பாவை வேணாம்னு சொல்லணுமா .. பார்த்தா பேசக்கூட கூடாதா …

    ஒருவேளை கல்யாணம் ஆன பிறகும் பொண்ணை அவங்க அனுப்ப மாட்டேன்னு அவங்க சொல்லியிருந்தா சித்து சார் என்ன பண்ணியிருப்பார் …

    1. Author

      போய் சுவத்துல முட்டி அழுதிருப்பார்😂

      மிக்க நன்றி😍😍

  2. சித்தார்த்தின் பிரத்யேக அழைப்பிற்காக மனம் ஏங்கினாலும் அவனது மனவருத்தம் அகலும் வரை அதனை தண்டனையாக ஏற்று அமைதிக்கொள்கிறாள் மது.

    மதுவின் மீதான கோபமும், வருத்தமும் நீங்கினாலும், அவளுக்கு தான் அதிமுக்கியமானவன் இல்லை என்ற ஆதங்கம் குறையாமல் உள்ளது.

    தாய், தந்தையை பார்த்ததும் கணவனை மறந்துவிட்டாள். மீண்டும் கோபப்பட்டு என்ன செய்ய போகின்றானோ.

    இலகுவாக ஒரு மாத காலம் என்கின்றான். அவன் வீட்டில் அவனாலேயே இருக்க இயலவில்லை இதில் மது எப்படி இருப்பாள்.

    1. Author

      அதான.. ஒரு மாசம் என்னென்ன நடக்குமோ..

      மிக்க நன்றி😍😍

  3. வேலில போன ஓணான வேட்டியில் விட்ட கதையாயிருச்சு… சித்து எப்புடியும் வச்சு செய்வ..‌பாத்தெடுத்து பண்ணுப்பா