
அத்தியாயம் 2
இருள் நிறைந்த வானம் தனது வெளிச்சம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு இருந்தது.
கதிரவன் அவனின் கதிரொளியில் உறக்கத்தை விடுத்து எழுந்தாள் நித்யா.
இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் எழுந்திரிக்க முடியவில்லை. மீண்டும் கண்ணை மூட உறக்கம் தழுவியது. விடாது செல்போன் அடித்ததால் அவள் அடித்துப் பிடித்து எழுந்தாள்.
போனை எடுத்தவள் வேகமாக அட்டென்ட் செய்து
“ஆங்…இதோ கிளம்பிட்டேன்…சாரி சாரி” என்றபடி வேகமாக எழுந்து கிளம்பத் தொடங்கினாள்.
கிளம்பி முடித்து அவள் வர டேபிளின் மீது சூடான உணவு இருந்தது. அதுவும் அவளுக்கு மிகவும் பிடித்த பூரி உருளைக்கிழங்கு குருமா…
“வாவ் செம” என்றவாறு அவள் உள்ளே தள்ள அவளது தட்டில் இன்னுமொரு பூரியை ஒரு கரம் வைக்க, அவள் நிமிர்ந்து பார்த்து “போதும் ஜானு” என்றாள்.
“இரண்டு பூரி கடவாய்க்காவது பத்துமா? நல்லா சாப்பிடு நித்தி”
“சரியாப்போச்சு நல்லா சாப்பிட்டு போயி அங்க கவுந்தடிச்சு தூங்கவா? என்னை நம்பி எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு தெரியுமா ஜானு”
“தெரியும் தெரியும் அதான் சொல்றேன் ஒழுங்கா சாப்பிட்டு போயி வேலையைப் பாருன்னு”
“சரி சரி போதும். நான் கிளம்புறேன் ஏற்கனவே அரவிந்த் கால் பண்ணிட்டான். இந்நேரம் வந்துருப்பான்” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அரவிந்த் வந்து விட்டான்.
“ஏய் நித்யா கிளம்பிட்டயா” என்று சொன்னவனது பார்வை ஜானுவையே சுற்றி வந்தது
“வா அரவிந்த் கிளம்பிட்டேன் சாப்பிடு டா” நித்யா அழைக்க
“இல்லை வேணாம். டையமாச்சு கிளம்பலாம்” என்றான். அப்போதும் பார்வை ஜானுவை விட்டு அகலவில்லை.
“ஏன் அரவிந்த் சாப்பிட்டு போலாமே” அவனைப் பார்த்து வாய்திறந்தாள் ஜானு.
“இல்ல ஜானு இப்பத்தான் வீட்டுல சாப்பிட்டு வந்தேன். இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் ஏம்மா நித்தி டைமாச்சுமா” என்று கத்த
“வந்துட்டேன்” என்று கிட்டத்தட்ட அவள் ஓடி வந்தாள். அவளைக் கூட்டிக் கொண்டு அவன் வண்டியை எடுக்க
“டேய் அரவிந்த்” என்றாள் மெல்ல.
“சொல்லு நித்தி”
“எப்போ சொல்லுறதா இருக்க”
“எதை”
“என்கிட்டவே நடிக்குறயா டா”
“புரியல நித்தி நீ என்ன பேசுறேன்னு”
“கிட்டத்தட்ட இரண்டு வருசமா எதுக்கு என் வீட்டுக்கு வந்துட்டு போறேன்னு எனக்கு தெரியாதா என்ன”
“…”
“என்னடா அமைதியாகிட்ட”
“சொல்லனும் தான் ஆனா அவளைப் பாத்தா எதுவுமே சொல்ல தோண மாட்டேங்குது நித்தி”
“அரவிந்த் நீ சொன்னாத்தான அவளுக்கு தெரியும்.”
“ம்ம் சொல்றேன். ஆனா அவ முடியாதுன்னு சொல்லிடுவாளான்னு பயமா இருக்கு நித்தி”
“பயந்துகிட்டே இருந்தா கிழவனாகிடுவடா அப்பறம் உன் இஷ்டம்.”
“அவ என்கிட்ட அளந்து அளந்து தான் பேசுவா இதை சொல்லிட்டு அதுவும் பேசாம போய்ட்டா என்ன பண்றது டி நித்தி”
“அடப் போடா. உனக்கு லாம் இந்த சென்மத்துல கல்யாணம் நடக்காது.”
“அதுலாம் நடக்கும் நீ மட்டும் உன் திருவாயை மூடிட்டு இரு” என்றான் அரவிந்த்… அதற்குள் ஆபிஸ் வந்துவிட
“ம்ம் நல்லது சொன்னா இந்த உலகம் எங்க அதை ஏத்துக்குது…”என்றபடி அவள் முன்னே செல்ல அவன் வண்டியை பார்க் பண்ணிவிட்டு வந்தான்.
உள்ளே சென்றவர்கள் அவர்களது வேலையை பார்க்க இரவெல்லாம் கண்விழித்து வேலை செய்து போட்டிருந்த கோடிங்கை மீண்டும் ஒரு முறை போட்டு அதிலிருந்த errors ஐ கண்டுபிடித்து சரி செய்து கொண்டு இருந்தாள் நித்யா.
வீட்டில் இருந்த ஜானுவோ அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அவள் வேலைப் பார்க்கும் ஸ்கூலுக்கு சென்றாள்.
அந்த பகுதியில் உள்ள பெரிய ஸ்கூல் அது. அங்கிருந்த கிண்டர் கார்டன் செக்சனுக்குள் நுழைந்ததுமே மனம் பட்டாம்பூச்சியாய் மாறி துள்ளி குதிக்க ஆரம்பித்து விடும் ஜானுவிற்கு. அது இன்று நேற்றல்ல கடந்த இரண்டு வருடங்களாக இப்படித்தான். அவளுக்கு மகிழ்ச்சி என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த குழந்தைகளின் முகத்தை பார்த்து குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி விடுவதால் தான்.
————————-
காலையில் இருந்து அபியின் மொபைலுக்கு டிரை பண்ணி பார்த்த அதிசயன் அவன் எடுக்க வில்லை என்று தெரிந்ததும் வேகமாக அவனது வீட்டுக்கு செல்ல வேண்டி தனது வண்டியை எடுக்க வர அப்போதுதான் தெரிந்தது. நேற்று வண்டியை ஆபிசில் விட்டுவிட்டு வந்தது பற்றி….
உடனே ஆட்டோ பிடித்து அபியின் வீட்டுக்கு வந்தான். கதவைத் தட்ட அது திறந்து கொண்டது.
உள்ளே சென்றவன் “அபி” என்று அழைத்தான் சத்தமாக.பதில் ஏதும் வரவில்லை. ஹாலைக் கடந்து அவன் செல்கையில் முணங்கும் சத்தம் அங்கே கேட்டது. உடனே கீழே பார்க்க அங்கு அபி தரையில் விழுந்து கிடந்தான்.
“டேய் அபி” என்று கத்தியபடி அவன் சென்று அவனை எழுப்ப அவன் உடலோ நெருப்பாய் கொதித்தது.
“டேய் அபி எழுந்திருடா என்னைப் பாருடா” என்றான் அதிசயன்
அவன் கண்களை மிகுந்த சிரமத்துக்கிடையே மெதுவாக திறந்து பார்த்தான்.
“அ…தி..”என்று அவன் சொல்லுவதற்குள் மூச்சு வாங்கியது.
“என்னடா இப்படி நெருப்பா கொதிக்குது” என்றவன் அவனை சோஃபாவில் தூக்கி படுக்க வைத்து விட்டு வெளியே சென்று அவனது காரை எடுத்து நிறுத்தினான். பின் அவனை தூக்கி காரில் படுக்க வைத்து விட்டு வேகமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு வண்டியை விட்டான்.
அவனைப் பார்க்க பார்க்க மனம் வேதனையில் மெளனமாக கண்ணீர் வடித்தது.
ஹாஸ்பிடல் வந்ததும் அவனை அட்மிட் பண்ணிவிட்டு வெளியே காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அங்கு வந்தவர்கள்
“அதி என்னப்பா அபிக்கு என்ன” என்று அழுதார்கள்.
“அம்மா அப்பா ப்ளீஸ் இங்க இதுமாதிரி அழக்கூடாது அபிக்கு ஒன்னும் இல்லம்மா டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க.” என்றான்.
“ஏண்டா அவன் இப்படி இருக்கான். அவனுக்கு என்ன தலையெழுத்தா டா அதி…ராஜா மாதிரி இருந்த பையன் டா தனியா இருந்து தனியா சமைச்சு சாப்பிட்டு யாருக்குடா தண்டனை கொடுக்குறான்.” என்றார் அபியின் அப்பா
“அப்பா இரண்டு வருசமா இப்படி தான இருக்கான். அவனைப் பத்திதான் நமக்கு தெரியுமே அவ்வளவு சீக்கிரம் அவன் முடிவை மாத்திக்க மாட்டான்னு. இதுக்கு பதில் காலம் தான் சொல்லனும்.”
அதற்குள் டாக்டர் வந்துவிட அவர்கள் பேச்சை விடுத்து அவரிடம் வந்து “டாக்டர் என் பையன் எப்படி இருக்கான்” என்று கேட்டார் அபியின் அப்பா
“இப்போதைக்கு பிரச்சனை இல்லை. ஆனா இது கண்டினியூ ஆனா பெரிய பிரச்சினையில கொண்டு வந்து நிறுத்திடும்.”
“என்ன சொல்றீங்க டாக்டர்”
“ஆமா அவர் ரொம்ப மன அழுத்தத்துல இருக்காறு….அதுசரி ஸ்வீட்டி யாரு”
“அவங்க அவன் வொய்ப் சார்” என்றான் அதிசயன்
“I thing அவங்க இப்போ கூட இல்லை….”
“ஆமா டாக்டர்”
“அதான் இப்படி இருக்காரு. அவங்களை ரொம்ப மிஸ் பண்ணதால வந்த ப்ராப்ளம். அவங்களை பாத்துட்டா சரியாகிடும். அவங்க பேரைச் சொல்லி கூப்பிட்டு கிட்டே இருக்காரு. ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. பீவர் கம்மியாக இன்ஜெக்சன் போட்டுருக்கேன். மத்தபடி இன்னைக்கே நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஆனா அவர் சரியாக அவங்க ஸ்வீட்டி கூட இருக்கணும்”
“சார் அபியை நாங்க போய் பாக்கலாமா” என்று அபியின் அம்மா கேட்க
“தாராளமா போய் பாக்கலாம்” என்று அவர் சொல்லி விட்டு சென்று விட்டார்.
அவர் சொன்னதும் மூவரும் உள்ளே சென்றார்கள். அங்கே முகத்தில் கம்பீரம் தொலைந்து… இதழ்கள் சிரிப்பை தொலைந்து… தொலைந்து போன ஒருவன் போல் அபி இருந்தான்.
அந்த சிரிப்பை மறந்த இதழ்களில் அசைவை உணர்ந்தவர்கள் என்னவென்று கேட்க “ஸ்வீட்டி ஸ்வீட்டி எங்க இருக்க”இதுவே தொடர்ந்து ஒலித்தது
அதை கேட்டதும் ஒருவொருக்கொருவர் பார்த்து கொண்டார்கள். அதிசயனுக்கோ அந்த உத்ராவை எங்க போய் தேட….இவனும் இரண்டு வருசமா எப்படி எல்லாமோ தேடி பார்த்துட்டான் ஆனாலும் இன்னும் அவங்களைப் பத்தி எந்த ஒரு தகவலும் இல்லை. என்று யோசித்தபடி அமைதியாக அவனைப் பார்த்தபடி அமர்ந்து விட்டான்.
————————-
நித்யா தனது வொர்க்கை முடித்துவிட்டு அந்த ரிப்போர்ட்டை மெயில் செய்துவிட்டு வெளியே வந்தாள். வானம் இருண்டு கருமையாக காட்சி அளித்தது. அதைப் பார்த்தவள் அரவிந்தை தேடிப் பார்க்க அவனோ இன்னும் வந்தபாடில்லை. உடனே போனை எடுத்தவள் “டேய் அரவிந்த் என்னடா பண்ற இன்னும்” என்று கத்தினாள்
“இரு நித்தி ஒரு ஃபைவ் மினிட்ஸ்”
“இங்க வெளியே பாத்தயா? மழை பெய்யும் போல இருக்கு டா”
“மெயில் பண்ணிட்டு இருக்கேன் வந்துருவேன்” என்று போனை வைத்து விட்டு வேலையை முடித்து விட்டு வேகமாக வந்தான் அரவிந்தன்.
“வா நித்தி வேகமா போலாம்” என்று வண்டியை எடுக்க அவள் ஏறிக் கொண்டாள்.
“சீக்கிரம் போடா பெரிய மழையா பெய்ய போகுதுன்னு நினைக்குறேன்” என்றாள் நித்யா.
வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வர வீடு வருவதற்குள் மழை பெய்து விட்டது. இருவரும் நனைந்து விட்டிருந்தனர். வெளியே வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக வீட்டிற்குள் செல்ல கதவு பூட்டியிருந்தது. உடனே அவள் “டேய் அரவிந்த்” என்க
“என்ன எதுக்கு இப்படி கத்துற” என்றான்.
“கதவு பூட்டிருக்கு டா”
“என்ன அப்போ இன்னும் ஜானு வரலையா”
“ஆமா டா அய்யோ இந்த மழைல எங்க மாட்டுனான்னு தெரியலையே டா”
“சரி சரி உன்கிட்ட கீ இருக்கும்ல கதவை தொறந்து உள்ள போய் உக்காரு நான் போய் ஜானுவை கூட்டிட்டு வர்றேன்.”
“டேய் மழை ரொம்ப பெய்யுது டா”
“பரவாயில்ல நான் பாத்துக்கிறேன்”.என்றவன் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
மழை நன்றாக பெய்ததால் சாலை சரியாக தெரியவில்லை. ரோட்டில் அவள் நடந்து வருகிறாளா என்று இருபக்கமும் பார்த்தபடி அவன் வண்டியை ஓட்டிச் சென்றான்.
உள்ளே சென்ற நித்யா ஜானுவிற்கு போன் பண்ண அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.
“அய்யோ ஜானு எத்தனை தடவை சொல்லிருக்கேன் வேகமா வீட்டுக்கு வந்துரனும்னு.”
“வேகமா வீட்டுக்கு வந்தா தனியாத்தான இருக்கணும் அதான் நீ வர்ற அப்போ வரலாம்னு கொஞ்ச நேரம் ஸ்கூல்ல எக்ஸ்ட்ரா வொர்க் பாத்துட்டு பக்கத்துல இருக்குற பார்க் போயிட்டு வர்றேன்” என்று அவள் கூறியது ஞாபகம் வர அரவிந்தனுக்கு போன் பண்ணினாள். போன் சத்தம் அங்கேயே கேட்க அப்போதுதான் அவன் போனை தன்னிடமே கொடுத்துச் சென்றது ஞாபகத்திற்கு வந்தது.
அவனோ அவள் வேலைப்பார்க்கும் ஸ்கூலுக்கு வண்டியை செலுத்தினான்.
அங்கே வாயிலில் இருந்த அறையின் உள்ளே அமர்ந்திருந்த செக்யூரிட்டியிடம் ஜானுவை பற்றி கேட்க
“எல்லாருமே அப்பவே போய்ட்டாங்க சார்” என்று சொல்ல தனது வண்டியை திருப்பினான்.
இப்போது எங்கு சென்று தேடுவது என்று அவனுக்கே தெரியவில்லை. மீண்டும் வந்த வழியே சென்றான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் காதல் மனம் கலவரமானது. ஜானு எங்க போன எங்க இருக்க? என்று அவன் புலம்பியபடி தேட, இங்கு ஹாஸ்பிட்டலில் அபியும் “ஸ்வீட்டி எங்க இருக்க? எங்க போன?” என்று புலம்ப ஆரம்பித்தான்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஸ்வீட்டி ஜானு ஓன்றா?. உத்ரா தானே அவள் பெயர்