Loading

அழகியே என் மழலை நீ 20

 

 

பூசாரி சொன்னதை கேட்டு புரியாமல் பார்த்தவன் அதிரன் திரும்பி பார்க்க அவர்களின் மொத்த குடும்பமும் அங்கு இருந்தது. ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து போய் நின்று இருந்தான்.

 

 

அவர்களே உயிரை பணயம் வைத்து தான் இந்த முடிவையே எடுத்து இருந்தனர். இதில் இவர்கள் வேறு சரியாக இங்க இருக்கே அதிர்ச்சி விலகமால் எச்சில் விழுங்கியவாறே அவர்களை நோக்கினான்.

 

 

 

 

தாமரை, “அதிரா முக்கியமான வேலை இருக்குனு சொன்ன இங்க எப்பிடிடா வந்த, நீ தான் சொன்னியா ஆதி, சொல்லிருக்கலாம்ல நான் வேற இவன் இல்லையேன்னு புலம்பிட்டே வந்தேன்” என்று கூற, அவனோ, “எனக்கு தெரியாது அம்மா, அதி நீ எப்படிடா இங்க முக்கியமான கேஸ் இருக்குன்னு சொன்ன” என்று கேட்டான்.

 

 

அதிரனோ, “நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்க ?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டவனை அனைவரும் புரியாமல் பார்க்க அறிவழகனோ, “இதான் மாப்பிள்ளை நம்ம குலதெய்வம் கோவில். நாங்களே இங்க தாத்தா சாகுறதுக்கு முன்னாடி வந்தது இப்போதான் வரோம். நீங்க எப்படி சரியா வந்திங்க. பரவாயில்லை நீங்க இல்லாமல் பூஜை நடக்குறது ஒரு குறையா இருந்துச்சு அதான் வந்துட்டீங்கல்ல என்ன தாமரை சந்தோசம் தானே ” என்று தங்கையிடம் கேட்டவர் அதிரனின் முகத்தை பார்க்கவே இல்லை.

 

 

பூசாரி, “வேத நாயகி அம்மா வருஷம் ஒரு தடவை சாமிக்கு செய்ய வேண்டியதை செய்ய சொல்லி ஆள் அனுப்பியிருவாங்க. இப்போ நீங்க மொத்த குடும்பமும் இங்க வந்துருக்கீங்க. நல்லதே நடக்கும். இனி எந்த கெட்டதும் உங்களை நெருங்காது. குலதெய்வத்தை தேடி வந்துட்டீங்கள்ள ஆந்த தாயி பாத்துக்குவா எல்லாத்தையும்” என்று கூறினார்.

 

 

அனைவரும் ஆளாளுக்கு ஒன்று பேச அரவிந்தன் தான், “அதிரா நீ அப்போ கேஸ் விஷயமா வரணும்னு சொன்னது இங்க தானா?” என்று கேட்க,மற்றவர்கள் அதே வினாவுடன் அவனை ஏறிட்டு பார்த்தனர்.

 

 

 

அதிரன் பதில் கூறுவதற்குள், “இங்க என்ன நடக்குது அதிரன்” என்ற செழியனின் கர்ஜனையில் தொண்டை நீர் வற்றி போக, பயத்துடன் அவனை பார்த்தான்.

 

 

அனைவரும் திரும்பி செழியனை பார்க்க, அவனோ எதையும் கவனிக்காமல் அதிரனை கனல் கக்கும் விழிகளுடன் முறைத்து கொண்டிருந்தான். அதிரன் வேகமாக ஓடிவந்தவன் அவனுக்கு சல்யூட் அடிக்க, குடும்பத்தினர் அனைவரும் அதிரனையும் செழியனையுமே மாறி மாறி பார்த்து கொண்டிருந்தனர்.

 

 

“உன்னை நம்பி குடுத்த ஒரு சின்ன வேலைய கூட உன்னால செய்ய முடியல. எவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கோம் தெரியும் இல்லை. நீ இங்க பிக்னிக்கா வந்துருக்கியா? மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்து இருக்க. உனக்கு கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா.. என்ன பண்ணி வச்சுருக்க நீ” என்று பல்லை கடிக்க, அதிரன் அவன் முன் தலை குனிந்து நின்றவன்,

 

 

“சாரி சார், அவங்க இங்க வருவாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது. அவங்க ஏதோ குல தெய்வம் கோவில் போறாங்கன்னுதான் தெரியும். இல்லனா முன்னாடியே நான் அவங்கள வார்ன் பண்ணியிருப்பேன் சாரி சார்” என்று கூற, அவனோ, “எனக்கு உன்னோட எஸ்பிலனேஷன் தேவை இல்ல, இர்ரெஸ்பான்ஸ்பிள் இடியட். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. உன்னை போய் இதுக்கு செலக்ட் பண்னேன் ல என்னை சொல்லணும் முதல்ல” என்று தலையில் அடித்து கொண்டு அவனை திட்ட, அவனோ வாயே திறக்கவில்லை அமைதியாக நின்றான்.

 

 

அவனுக்கு அவனின் தவறு புரிந்தது. செழியனுக்கு நேற்றே அரவிந்தன் நடந்த அனைத்தையும் கூறி இருந்தான். செழியனுக்கும் அவர்களின் குல தெய்வம் கோவில் எங்கு உள்ளது என்ற விஷயம் தெரியாது.இங்கு அவர்களை பார்த்ததும் புரிந்து கொண்டான். ஆனாலும் இது அதிரனின் தவறு அல்லவா. அவனிடம் முன்பே கூறி இருந்தான். இங்கு என்னை வேணாலும் நடக்கலாம். எந்த பொதுமக்களும் அங்கு இருக்க கூடாது அனைத்தையும் சரி செய்ய ஆணையிட்டிருக்க, இப்போது இங்கு மொத்த குடும்பத்தையும் காண கோவம் கண்ணை மறைக்க கத்திவிட்டான்.செழியனுக்கும் இப்போது பயம் வந்தது இங்குள்ள யாருக்கும் எந்த சேதாரமும் நடந்து விட கூடாது என்று…

 

 

அனைவரும் அதிரனை பாவமாக பார்த்தப்படி நின்றிருந்தனர். அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. தங்களால் அவன் திட்டு வாங்குகிறானே என்று சங்கடமாக இருந்தது. செழியன் தன் தலையை குத்தி யோசித்தவன்,

 

 

“தென் ஓகே, அவங்க எல்லாரும் இங்கயே இருக்கட்டும். எந்த சத்தமும் வரக்கூடாது. கையில கன் வச்சுக்கோ.. கேர் புல். நான் பாத்துக்கிறேன். நீ வர வேணாம். இவங்க சேப்டி முக்கியம்” என்றவன் துப்பாக்கியை லோட் செய்து முதுகில் செருகி கொண்டு ஒரு நிமிடம் கண்ணை மூடி தன்னை சமன் செய்து கொண்டவன், “அதிரன் கேர் புல்லா இரு. அவங்களுக்கு ஒரு சின்ன சத்தம்கூட வரக்கூடாது” என்று அவனை எச்சரித்து விட்டு அவர்களுக்கு எதிரே இருந்த ஒரு மரத்தின் பின் சென்று நின்றான்.

 

 

 

அதிரனோ யாரோ வரும் அரவம் கேட்க, வாயில் கைவைத்து உஸ் என்றவன் அவர்களை அப்படியெ அமர கூற, அவர்களுக்கோ நெஞ்சம் படபட வென்று அடித்து கொண்டிருந்தது. அன்பரசன், தாமரை இருவரும் மகனை பயத்துடன் பார்த்தனர். அவன் இவ்வளவு பதட்டப்பட்டு பார்த்ததில்லையே.

 

 

அரவிந்தன் செழியனின் பேச்சில் அதிர்ந்தவன், அவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமா என்று அவனையே பார்த்து கொண்டிருந்தான். குடும்பத்தினர் மொத்தமும் நெஞ்சில் பயத்துடன் செழியனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கோவிலுக்குள் இருந்து பார்த்தால் அங்கு நடக்கும் அத்தனையும் தெளிவாகவே தெரிந்தது.அனைவருமே மரண பீதியில் தான் உறைந்து போய் இருந்தனர்.

 

 

முதலில் இருவர் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே கையில் அருவாள் கத்தியுடன் வர, அவனுக்கு பின்னே ஒருவன் தோரணையாய் நடந்து வந்தான். அவன் தான் அந்த ரவுடியின் மகன். அவனுக்கு பின் இருவர் தனியாகவும், ஒருவன் தனியாகவும் வர, அனைவரும் செழியன் இருந்த மரத்தை தாண்டி செல்ல, செழியனும் அவர்கள் பின்னே பதுங்கி பதுங்கி ஒவ்வொரு மரமாய் கடந்து மூன்றாவது மரத்தை தாண்டும் போது கடைசியாய் சென்றவன் திரும்பி பார்த்து விட, அவனின் வாயை பொத்தி கழுத்தோடு சேர்த்து பின்பக்கமாக மரத்தின் பின் இழுத்து வந்தவன் கையில் இருந்த துப்பாக்கியை திருப்பி வைத்து ஒரு போடு போட, அவனோ அப்படியே பின்புறம் சரிந்தான். அனைவரும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பது போல் அவனை பார்த்து கொண்டிருந்தனர்.

 

 

முன்னால் சென்று இருந்த அந்த ரவுடியின் மகனோ போனில் தன் தந்தையிடம், “அப்பா நான் சேப்டியா இருக்கேன். நம்ம இடத்துக்கு வந்துட்டேன். நம்ம ஆளுங்க அஞ்சு பேர் இருக்காங்க. போதும். வேற யாரும் வேண்டாம். இங்க ஒரு கோவில் இருக்கு அதுக்கு பக்கத்துலதான். இனிமேல் இந்த இடத்துக்கு யாரும் வர கூடாது பாத்துக்கோங்க. இதவிட சேஃபான இடம் எனக்கு கிடைக்காது. நான் ரொம்ப பத்திரமா இருக்கேன். என்னை பத்தி கவலை படாதீங்க அப்பா

. நம்ம ஆளுங்க என்னை சுத்தி இருக்காங்க, அப்புறம் என்ன கவலை எனக்கு, நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று கூறிவிட்டு போனை அணைத்து இருந்தான்.

 

 

“இத விட சேப்டியான இடத்துக்கு நான் உங்கள பத்திரமா அனுப்பி வைக்கிறேன் அருண் சார். உங்க அப்பாவை கவலை பட வேணாம்னு சொல்லுங்க” என்று கூறியப படியே செழியன் கண்களில் ரவுத்திரத்துடன் அவன் வந்து நிற்க, அந்த ரவுடியோ ஒரு நிமிடம் அதிர்ந்து போய், “ஏய் நீ எப்படிடா நீ இங்க வந்த” என்று பதறி போனவன்”ஏய் எங்கடா போய் தொலைஞ்சிங்க எல்லாரும். வாங்க வந்து போ அவனை போடுங்கடா” என்று அவன் ஆட்களுக்கு கட்டளையிட, செழியனோ, “போட்ருவோம் அதுக்கு தான நான் வந்துருக்கேன். வாங்க எப்படி ஒவ்வொருத்தர வரிங்களா இல்ல மொத்தமாவா எப்படி இருந்தாலும் எனக்கு ஓகேதான். அடிச்சுக்காம வாங்க வாங்க. எல்லாரையும் நான் பத்திரமான இடத்துக்கு அனுப்பிட்டு தான் நான் போவேன்” என்றவன் பற்களை கடித்து கொண்டு தன் அருகில் வந்தவனின் வயிற்றில் எட்டி உதைக்க அவனோ வெகு தூரம் சென்று ஒரு மரத்தில் அடித்து பல அடி தூரம் சென்று விழுந்தான்.

 

 

அருணும் அவனை தாக்க வர, மேற்கொண்டு இருவர் அவனை நோக்கி கத்தியை எடுத்து கொண்டு வர, அனைவரும் செழியனுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயத்தில் அவனை பார்த்து கொண்டு இருந்தனர்.

 

 

அதை பார்த்து கொண்டு அதற்கு மேல் அதிரனால் அங்கே இருக்க இருப்பு கொள்ள வில்லை. அவர்களிடம், “நீங்க பத்திரமா இருங்க வெளியே வர வேணாம். யாரும் சத்தம் போட கூடாது” என்று எச்சரித்தவன் தூப்பாகியை எடுத்து கொண்டு வெளியே ஓட, அனைவரும் பதறி விட்டனர்.

 

 

 

அதிரனோ செழியனை பின்னே தாக்கி கொண்டிருந்தவனை ஓடி சென்று இழுத்தவன் அவனை அடிக்க, மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். அவனும் செழியனை கவனிக்க வில்லை.

 

செழியன் அருனின் கைகளை பிடித்து மடிக்க அவனோ வலியில் கதறினான்.அவனின் தலையை அங்கிருந்த மரத்தில் சென்று மோத, அவனோ வலி தாங்காமல் கதற தொடங்கினான்.

 

அதிரன் அவனை தாக்க வந்த இருவரிடமும் போராடி அவர்களை அடித்து கொண்டு இருந்தான்.

 

 

செழியன் ஆந்த ரவுடியின் மகனை மரத்தில் வைத்து கழுத்தை அழுத்தி கொண்டிருக்க, அவனின் பின்னே ஒருவன் நீளமான கூர் தீட்டிய பட்டா கத்தியை எடுத்து கொண்டு அவனை குத்த அடி வைத்து சத்தமின்றி முன்னேறி கொண்டிருக்க, அதை பார்த்தவர்கள் தான் அரண்டு போய் நின்று இருந்தனர்.

 

 

அவன் செழியனின் அருகில் சென்று விட, மீனாட்சி எங்கே மகனை குத்தி விடுவானா என்னும் பதட்டத்தில் தன்னை மறந்து அங்கு இருந்து ஓடி வர, இழுத்து பிடித்த அரவிந்தனின் கையையும் தட்டி விட்டு விட்டு வெளியே சென்று இருந்தார்.

 

அதற்குள் திரும்பிய அதிரன் கத்திய பிடுங்கி எறிந்து, அவனின் நெஞ்சில் கால் வைத்து உதைத்து இருந்தான்.

 

“டேய் போலீசு மரியாதையா எங்க தம்பிய உட்டுட்டு ஓடி போயிரு. இல்ல இந்தம்மாவை போட்ருவேன்,தம்பியை விட்றா” என்று குரல் கேட்க, குரல் கேட்டு திரும்பிய செழியனும் அதிரனும் அதிர்ந்து போயினர். அங்கு ஒருவன் மீனாட்சியின் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு நின்று இருந்தான்.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்னடா மீனாட்சியை பிடிச்சு வச்சிருக்கீங்க … செழியன் கண்டிப்பா காப்பாத்துவான் … ஆனா வேற யாருக்கு என்ன நடக்கும்னு தெரியலையே …

  2. நீண்ட வருடங்கள் கழித்து இணைந்த சொந்தங்கள் நல்ல எதிர்காலத்திற்காக வேண்டிக்கொள்ள குலதெய்வக்கோவிலுக்கு வர, அங்கே தான் ஒரு குற்றவாளியை பிடிக்க வேண்டி செழியனும், அதிரனும் வந்துள்ளனர்.

    செழியன் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளேயே இருக்க கூறி தெளிவாக உத்தரவிட்டும், மகனை ஆபத்து நெருங்கிடுமோ என்ற பதட்டத்தில் வெளியில் வந்துவிட்டாரே மீனாட்சி.

    இனி இவரை காக்கவேண்டி குற்றவாளியை விட வேண்டிய நிலை வருமோ?