Loading

அத்தியாயம்-03

 

சில நிமிடங்கள் ஒரு பலத்த மௌனமே அங்கு குடி கொண்டிருந்தது. துருவனோ ஜேன்சி புறம் திரும்பி, “ஏ ஜே.. இது 2074 தான். பட் நாங்க டைம் ட்ராவல் போல ஏதோ ஒரு ஹோல்ல மாட்டியிருக்கோம். எனக்கு புரியுது உன்னால இதை புரிஞ்சுக்க முடியாது. ஆனா எங்களுக்கு இந்த உலகம் புதுசு. இப்ப நாங்க இங்க சர்வைவ் ஆகணும்னா இந்த உலகத்தோட ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் தெரியணும். இன்னிக்கு காலைல இருந்து நாங்க பார்த்த எல்லாமே எங்களுக்கு புதுசு. எங்களுக்கு மேலோட்டமா சிலதை சொல்லு. மத்ததைப் போகப் போக தெரிஞ்சிக்குறோம்” எனக் கூற,

 

மற்ற மூவரும் அவன் கூற்றை வழிமொழிந்து ஜேன்சியை நோக்கினர்.

 

“காலைல எழுந்து கிளம்பி தயாரா இருக்கும் நீங்க சாப்பிட்டு முடிச்ச உங்க தட்டை ஸ்கேன் செய்து அந்த கோடை (code) கதவுல இருக்கும் ஸ்கேனர்ல கொடுத்தா தான் உங்களால வெளிய போக முடியும் சார். ஒரு வீட்டுக்கு ஒரு கார் தான் அனுமதிக்கபட்டிருக்கு சார். எல்லாமே எலக்ட்ரிகல் அப்லையன்ஸஸ். காலைல அகா மேம் கேட்டது போல பெட்ரோல் டீசல் எல்லாம் இப்போ இல்லை. அது தீர்ந்து போய் பல வருடங்கள் ஆயிடுச்சு. நீங்க ஒரு கன்ஸ்டிரக்ஷென் கம்பெனி வைத்து நடத்துறீங்க. இப்ப உங்க வீடுகள்ல இருக்குற போல டெக்னாலஜிகள் பில்டிங்ஸ் நீங்களும் கட்டியிருக்கீங்க”

 

“நாலு காஃபி எப்டி இருபதாயிரம் ஆகிச்சுனு நீங்க சந்தேகமா கேட்டீங்க இல்லையா? உங்களுக்கு புரியும்படி சொல்றேன். ஒரு நூறு வருஷம் முன்னாடி ஒரு ரூபாய் ரொம்ப பெரிய காசா இருந்து இருக்கு. அப்றம் பத்து ரூபாய் ரொம்ப பெருசா பட்டுச்சு. ஆனா அம்பது வருடங்கள் முன்ன பத்து ரூபாய் வச்சு சாக்லேட் தான் வாங்கலாம்னு ஒரு நிலை. காசோட மதிப்பு ஏற ஏற பொருட்களோட விலையும் கூடினது போல தான் இப்ப நடந்ததும்” என ஜேன்சி நீண்ட விளக்கம் கொடுத்தது.

 

நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,

 

“நாங்க கட்டின வீடுகளோட ப்ளூ பிரிட் அல்லது இன்டீரியர் ஸ்டிரக்சர் எதும் காட்டு ஜே” என விஷ் கேட்டதும் தன் கண்களின் மூலம் ஒரு கணினி திரையை உருவாக்கிக் காட்டியது.

 

அதை பார்த்த மூவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்க, 

 

“ஏ ஜானு… இதுபோல ப்ளான் நீ ஒருமுறை சொல்லிருக்கயில்ல?” என விஷ் வினவினான். 

 

“ஆமாடா.. ஜான் சொல்லிருக்கால்ல.. ஆனா இதுக்கு நிறையா செலவாகும். பணக்காரங்க வீட்ல கூட இப்டி இம்பிலிமென்ட் பண்ணதில்லைனு நம்ம பேசிகிட்டோம்ல?” என துரு கூற,

 

யாவரும் ஜான்விகாவை நோக்கினர்‌.

 

அவளோ விழியெடுக்காது அதை பார்த்துக் கொண்டிருக்க, “ஆமா.. இந்த பிலான்லாம் ஜான்விகா மேம் ரெடி பண்ணினது தான் சார்” என ஜேன்சி கூறியது. 

 

சட்டென ஜேவின் புறம் திரும்பியவள், “என்னோட பிலான் தானா? நான்கூட நம்ம யோசிச்சு சொன்னது காபி பண்ணிடானுகளோனு பயத்துட்டேன்” எனக் கூற,

 

மூவரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

 

கட்டட வரைபடங்கள் யாவும் கண்டு முடிய மீண்டும் ஒரு நிசப்தம் உருவாகிடவே, 

 

“எனக்கு ஏதோ கனவுபோல இருக்கு” என ஜான் கூறியதும்,

 

“படத்துலயும் கதைகள்லயும் நம்ம ரசிச்ச கற்பனையான விஷயங்கள் நம்ம நிஜ வாழ்க்கையில நடக்குது. ஆனா அப்ப போல இப்ப இது ரசிக்கும்படி இல்ல” என துருவன் கூறினான்.

 

சட்டென ஏதோ நினைவு வந்தவனாக, “ஆமா இந்த கம்பெனிக்கு எத்தன வயசு?” என்று விஷ் வினவ,

 

“மூனு வருஷம் மேல ஆகிடுச்சு சார்” என ஜே கூறியது. 

 

“படிச்சு முடிச்சு நான் வேலையில்லாம இருந்ததால தான என் அத்தை பெத்த பைங்கிளிய கட்டிக்காம இருந்தேன்? மூனு வருஷம்னா அவ படிச்சு கூட முடிச்சிருப்பாளே? அப்றம் ஏன் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை?” என தன் அரும் பெரும் சந்தேகத்தை விஷ்வேஷ் கேட்க,

 

“அடேய்.. அவன் அவன் என்ன நடக்குதுனே புரியாம இருக்கோம். உனக்கு கல்யாணம் ஆகாதது தான் இப்ப பிரச்சினையா?” என அகா காய்ந்தாள்.

 

“ஏ இல்ல அகா.. நம்ம இங்க இருந்து போவோமா என்ன ஏதுனே தெரியல. இதுதான் வாழ்க்கைனு ஆகிட்டா? அதான்..” என்றவன் ஜேன்சியிடம், 

 

“என் அத்தை பொண்ணு கூட எனக்கு மேரேஜ் எதுவும் பிக்ஸ் ஆகலையா?” என வினவ,

 

“சாரி சார். உங்களுக்கு அத்தையே கிடையாதே” என்ற குண்டை தூக்கி அவன் தலையில் போட்டது.

 

நால்வரும் ஒன்று போல “ஏதே!” என அதிர,

 

ஜேன்சி மீண்டும் “ஆமா சார். நீங்க கேட்குறது போல உங்களுக்கு எந்த அத்தை பொண்ணும் இல்லை. இப்ப தான் உங்க வீட்டுல உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. துரு சார் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்க. ஜான்விகா மேம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்னு சொல்லிருக்காங்க. அகா மேம் வீட்ல இன்னும் அதுபத்தி யோசிக்கவே இல்லை” என்று கூறியது.

 

விஷ்வேஷ்வரனால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இனிக்க இனிக்க காதலித்த காதல், திருமணம் கூட அவன் வேலையில் சேர்ந்த பின்பு என்னுமளவு முடிவாகியிருந்ததால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

 

“இ..இது எப்டி? எனக்கு அத்தையே இல்லைனு சொல்லுது இது” என அவன் தடுமாற, பல வருட காதல் திடீரென்று கானலாக மாறியதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் பயத்தில் அவன் கண்கள் கலங்கியது.

 

மூவரும் அவனை பாவமாக பார்க்க, அவன் தோள் தட்டிய ஜான் “விஷ் கூல் டௌன். அதெப்படி உனக்குனு முடிவாகினவ திடீர்னு இல்லாம போவா? ஏதோ தப்பா இருக்கு. நீ எதுவும் நெகடிவ்வா யோசிக்காத மேன்” எனக் கூற,

 

“ஆமாடா.. அப்படிலாம் எதுவும் இருக்காது. சம்திங் வென்ட் ராங் (ஏதோ தப்பாகியிருக்கு)” என்று அகா கூறினாள்.

 

சட்டென ஏதோ நினைவு பெற்றவனாக துருவன் ஜேன்சி புறம் திரும்பி “என் அண்ணா, விஷ் அக்கா, அகா தங்கச்சி?” என கேள்வியாக வினவ,

 

“ஆமா சார். அகா மேம் சிஸ்டர் மெடிக்கல் பிடிக்குறாங்க. உங்க அண்ணா போலீஸ் அன்ட் விஷ்வேஷ் சாரோட அக்கா பிரெக்னென்ட்டா இருக்காங்க” எனக் கூறியது. 

 

துருவனிடம் ஒரு ஆசுவாச பெருமூச்சு எழ அவனை ஏற இறங்க நக்கலாக பார்த்த ஜான் ‘பய பதறிட்டான்’ என மனதிற்குள் கலுக்கிச் சிரித்துக் கொண்டாள்.

 

“எல்லாரும் இருக்கும்போது கண்டிப்பா அவளும் இருப்பா. எனக்கு நம்பிக்கை இருக்கு” என விஷ் உறுதியுடன் கூற,

 

அவன் மண்டையிலேயே தட்டி “அந்த விளக்கெண்ணெய தான நாங்களும் சொன்னோம்” என அகா கூறினாள். 

 

சில நிமிடங்கள் தங்கள் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு யாவரும் புறப்பட ஆயத்தமாக “சார், மேம், நாளைக்கு நமக்கு மேனேஜர் அன்ட் டீம் லீட்ஸோட மீட்டிங் இருக்கு” என ஜேன்சி அசராமல் அடுத்த குண்டை இறக்கியது.

 

“என்னாதூ?” என நால்வரும் முழி பிதுங்க விழிக்க,

 

“ஆமா மேம். புதுசா ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கு. அது விஷயமா நம்ம மீடிங் போடலாம்னு விஷ்வேஷ் சார் தான் சொல்லியிருக்கார்” என ஜேன்சி கூறியது. 

 

“ஏ குட்டையா.. என்ன என்னைய கோர்த்து விடுற? நான் எந்த மீட்டிங்கும் சொல்லலை. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கேன்சல் பண்ண சொல்லு” என விஷ்வேஷ் கூற,

 

ஜேன்சி நால்வரையும் மாறி மாறி பார்த்தது. 

 

அது மற்ற மூவரின் முடிவுக்காக காத்திருப்பதை உணர்ந்த துருவன், “இல்ல ஜே. மீட்டிங் கேன்சல் பண்ண வேணாம். எத்தனை மணிக்கு மீட்டிங்?” என்று வினவ

 

 “மார்னிங் பத்து மணிக்கு சார்” என ஜேன்சி கூறியது. 

 

“ஓகே. நாங்க ஒரு நயன்க்கே (ஒன்பதுக்கே) வந்துடுறோம். எங்களுக்கு ப்ராஜெக்ட் என்னனு ஒரு ஹின்ட்ஸ் காட்டிட்டு எல்லாரையும் ஒருமுறை இன்ட்ரடியூஸ் பண்ணு” என்று துருவன் கூற ஜேன்சியும் அதற்கு ஒப்புக் கொண்டது.

 

“டேய் ஏன்டா?” என ஜான் வினவ,

 

“இல்ல ஜான். நம்ம மீட்டிங் கன்டெக்ட் பண்ணுவோம். இப்ப தான் விஷ் சொன்னான். இன்னும் இங்க எத்தனை நாள், எத்தனை மாசம் இருக்கப்போறோமோ? சோ எவ்வளவு நாள் தான் ஓடி ஒழிஞ்சுக்க? சும்மா என்னனு தான் பார்ப்போமே” என்று துரு கூறினான்.

 

அவன் கூற்றும் யாவருக்கும் சரியாகப்பட, மூவரும் ஒப்புக்கொண்டனர். 

 

“இப்ப எங்க போக போறோம்?” என்று ஜான் வினவ,

 

“நீ லவ் மேரேஜ் தான் பண்ணிக்க போறியாமே. வரியா உனக்கு பார்ட்னர் தேடுவோம்?” என்று துரு கேலி செய்ய, விஷ்வேஷ்வரனை தவிர மற்றோர் சிரித்தனர்.

 

அவனது அமைதி மூவருக்கும் சங்கடமாக இருக்க, அவன் தோளில் கரம் போட்ட துரு, “விஷ்.. உன் நிலைமை புரியுது. ஆனா கண்டிப்பா ப்ரியா இங்க இருப்பா. உனக்குனு இருக்குறவளை எப்படி மாத்த முடியும்? நீ எதுவும் யோசிக்காதடா” என்று கூறினான். 

 

மெல்ல இதழ் பிரியாது புன்னகைத்தவனை மூவரும் அணைத்துக் கொள்ள, 

 

“சரி எங்க போகலாம்?” என்று மீண்டும் ஜான் வினவினாள்.

 

“உனக்கு எங்க போகணும்?” என்று அகா வினவ,

 

“பசிக்குது. எங்கயாவது சாப்பிட போகணும்” என்று ஜான் கூறியதும்,

 

“அதான பார்த்தேன். இல்லைனா இத்தனை தடவ கேட்பியா? என்று விஷ் கூறினான். 

 

பின் நால்வரும் ஜேவுடன் புறப்பட, “ஜே எங்கயாவது சாப்பிட போகலாமா?” என்று அகா வினவினாள். 

 

“வீட்டுக்கா, வெளியவா மேடம்?” என்று ஜே வினவ,

 

“வீட்டுக்கே போ ஜே” என்று விஷ் கூறினான். 

 

“யார் வீட்டுக்கு சார்?” என்று அது மீண்டும் வினவ,

 

“எங்க வீட்டுக்கு போ” என்று ஜான் கூறினாள். 

 

சரியென்று அதுவும் ஜான்வியின் வீட்டிற்கு செல்ல, நால்வருக்கும் அவள் வீட்டுப் பணியாளர் இயந்திர மனிதன் உணவிட்டது. 

 

உண்டு முடித்தபின் யாவரும் அவரவர் இல்லம் திரும்பிட, படுக்கையில் விழுந்த தோழர்கள் யாவருக்கும் ஒவ்வொரு எண்ணம். 

 

‘இதெப்படி சாத்தியமாகும்? எ..என்னோட அமி? அவ எங்க இருப்பா? என்கிட்ட வந்துடு அமி.. நீ இல்லாத வாழ்க்கையை என்னால யோசிக்கக் கூட முடியாது’ என்று கண்களில் நீர் வழிய, விட்டத்தை வெறித்தபடி விஷ் படுத்திருந்தான்.

 

அங்கு ஜான், ‘இதென்ன புரியாத புதிரா இருக்கு? இங்கிருந்து எப்படி தப்பிக்குறது? கண்டிப்பா எதாவது ஒரு வழி இருக்குமே! எதுக்காக இப்படி ஒரு மாயம் உருவாச்சு? இது எங்களுக்கு எதை உணர்த்த பார்க்குது?’ என்று எண்ணத்துடன் படுத்திருக்க,

 

‘ஷப்பா! இதென்னடா இது? கனவா நினைவானே புரியலை. இங்கிருந்து எப்படி போறது? அந்த பழைய உலகம் எங்க?’ என்று தனக்குத்தானே கேள்விகளை எழுப்பியபடி துரு படுத்திருந்தான்.

 

இங்கே தனதறை பால்கனியில் நின்று கொண்டு, கோடி நட்சத்திரங்கள் மின்னும் கருவானம் போல் காட்சியளிக்கும் அந்த நவீன உலகை வெறித்துக் கொண்டிருந்தாள் அகநகை. 

 

‘நான்‌ ஆசைப்பட்ட வேலை இருக்கு, வாட்டி வதைக்கும் வறுமை இல்லை, சொந்தமா ஒரு கம்பெனி இருக்கு, ஊர் மெச்சுமளவு பெயரிருக்கு, ஆனா இதில் நாட்டமே இல்லையே! இத்தனை சுகங்களை மனம் ஏன் மறுக்குது? இதில் ஏதோ ஒட்டாத உணர்வை உணருறேனே! இதெல்லாம் மாயையா? விரிச்சுவல் (virtual) உலகத்துக்குள்ள வந்துட்டோமா? இது இந்த பூமியோட மாயக்கலையா இல்லை என் கண்களோட பிழையா?’ என்ற எண்ணத்துடன் வெறித்தவள் விழிகள் லேசாக கலங்கி கண்ணீர் கோடாக வழிந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆசைப்பட்ட அனைத்தும் கண்முன் இருந்தும் ஏதோவொரு ஒட்டாத தன்மை.

    இவர்களது கனவு வேலை, தொழில் என்று அனைத்தும் நடந்தேறியிருக்கின்றது.

    அனைவரின் உறவுகளும் இருக்கும் போது விஷ்வேஷ்ஷின் அத்தை மகள் மட்டும் இல்லையா!

    ஜான்வி ட்ராக்குகு வா மா.
    “என் பிளான் தானா? நா கூட என் பிளான்ன திருடிடாங்களோனு பயந்துட்டேன்”. 🤣🤣

    எப்படி வந்தோம், எப்பொழுது, எப்படி திரும்பி செல்வோம் என்று எதுவும் தெரியாத போது சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வது தான் நல்லது.

    நடைமுறைக்கு ஏற்ப நடந்துகொள்ள நினைக்கின்றனர் நால்வரும்.

    1. Author

      ஆமா க்கா. எல்லாம் இருக்கு ஆனா ஒரு ஒட்டாத தன்மை..
      விஷ் அத்தை மகள்…😝 பொறுத்திருந்து காண்போம்😉
      ஜான்வி😝
      சூழலுக்கு ஏற்ப மாறுவது நல்லது இல்லயா.. அதான்
      மிக்க நன்றி அக்கா 🥰😍❤️❤️