
வசும்மா சாப்பிட்டு முடித்தவுடன் பிரியாவை அதியின் வீட்டுக்கு அனுப்பி விட்டு நிதிஷ், வசும்மா, சாந்தா மூவரும் ஹாஸ்பிடல் சென்றனர்…. சாந்தா வசும்மா இருவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு நிதிஷ் மட்டும் மருத்துவர் அறைக்கு சென்று அவரின் நடவடிக்கையைச் சொன்னான்… அவரும் மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் அவ்வாறு தான் ஆகும் என்று கூறி விட்டு அவரை செக்கப் செய்ய உள்ளே அழைத்தார்…
அவரின் பிபி செக் செய்து விட்டு அவரை வெளியே இருக்குமாறு கூறிவிட்டு நிதிஷ் வசும்மாவிடம் “அவங்களுக்கு பிபி அப்நார்மலா இருக்கு… அவங்க பிபியை நார்மலா வெச்சுக்கணும்… தேவையில்லாத விசயத்தை யோசிக்க விடாதீங்க…. அவங்க யாரை பார்த்து கோவபடுவாங்களோ அவங்க கொஞ்ச நாள் இவங்கள பாக்காம இருக்குறது நல்லது”…. என்று கூறிவிட்டு சில மாத்திரைகளைக் குடுத்தார்…. அவருக்கு நன்றி கூறிவிட்டு வசும்மா நிதிஷ் இருவரும் வெளியே வந்தனர்…
சாந்தாவையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி சென்றனர்…. வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் முக்கால் மணி நேரம் பயணமாகும்…. இவர்கள் வீட்டுக்கு செல்லட்டும்… நாம் அதியின் வீட்டில் என்ன நடக்கிறது என பாக்க போகலாம்…..
அதியின் வீடு
நிவேதா வீட்டிற்கு வரும் போது அப்பத்தா மட்டும் சமைத்து கொண்டு இருந்தார்…..அவள் அப்பத்தாவிடம் “பாட்டி நீங்க மட்டும் சமைக்குறிங்க… அவரை உதவிக்கு கூப்பிட வேண்டியது தானு…. இன்னிக்கு வேலைக்கு போகலனு சொன்னாரு….. செய்ய சொல்ல வேண்டியது தானு… சரி நகருங்க நான் சமைக்குறேன்”…. என்று கூறிவிட்டு அவர் செய்து கொண்டு இருந்த சமையல் வேலையை அவள் செய்ய ஆரம்பித்தாள்….
அப்பத்தா அவளிடம் “இந்நேரம் வரைக்கும் செஞ்சிட்டு தான் இருந்தான் தாயி…. இப்போ தான் உள்ள போனான்.. அப்பறம் பாட்டி சொல்லாத தாயி…. அம்மாச்சினு சொல்லு சரியா தாயி”…. என்று அவளிடம் கூறினார்…..
“சரி அம்மாச்சி”…. என்று கூறி விட்டு சமைத்து கொண்டு இருந்தாள்…. அப்பத்தாவும் அவளிடம் அவனை பற்றி கூறிக் கொண்டு இருந்தார்…. “எங்க வீட்டோட பயங்கர அருந்தவாலு இவன் தான் தெரியுமா???… இவனும் அஜயும் சேர்ந்து என்ன என்ன பண்ணுவாங்க தெரியுமா?? அடக்க முடியாது…. யாரு சொன்னாலும் கேட்க மாட்டாங்க….. அஜய கூட அடக்கி உட்கார வெச்சிடலாம் இவன முடியவே முடியாது…. வேலைக்கு போன வாட்டி தான் கொஞ்சம் கொறஞ்சி இருக்கு…. இவன இனிமே நீ தான் அடக்கனும்” என்று கூறினார்….
“அம்மாச்சி நானும் அவர் கூட சேட்டை பண்ணா என்ன பண்ணுவிங்க” என்று அவரை பார்த்து கண் சிமிட்டி கேட்டாள்….
“தாயி நீயும் பயங்கர சேட்டைக்காரி தான் போல” என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினார்….. “ஆனா அவனுக்கு கோவம் அதிகம் வரும் தாயி அந்த நேரத்துல யாராலயும் அவன்கிட்ட பேச முடியாது…. மீனாட்சி புருசன் மாறன் வந்தவாட்டி தான் அவன் கோவபடுற அப்ப அமைதி ஆக்குவாரு….. அதுக்கு முன்னாடிலாம் வீட்டுல பல பொருள் போட்டு ஒடச்சி இருக்கான் தெரியுமா இவன்” என்று அவனை பற்றி கூறினார்…
“என்ன அப்பத்தா என்ன பத்தி உன் பேத்தி கிட்ட சொல்லிட்டு இருக்க” என்று கேட்டவாறு உள்ளே வந்தான் அவனின் பார்வை மொத்தம் அவனின் தேவதையிடம் தான்….
அதற்குள் இவளும் சமைத்து முடித்து இருந்தாள்…. அனைத்தையும் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்… அப்பத்தா அதி இருவருக்கும் தானே பரிமாறினாள்… முதலில் அவள் அங்கு வசும்மா வீட்டில் இருந்து கொண்டு வந்த இட்லி சாம்பாரை வைத்து விட்டு இங்கு செய்த தோசை காய்கறி குருமாவை வைத்தாள்….
அப்பத்தா சாப்பிட்டு விட்டு “உன் கை பக்குவம் அருமையா இருக்கு தாயி” என்று கூறினார்… அதியும் கண்களால் பாராட்டி விட்டு ஹாலுக்கு சென்றான்…. பிரியாவும் அந்த நேரம் உள்ளே வந்தாள்…. அவள் அதியிடம் “அண்ணா ஏஞ்சல் எங்க???”என்று கேட்டு கொண்டே வந்தாள்…
அவனும் “உள்ளே அப்பத்தா கிட்ட இருக்கா டா” என்று கூறினான்.. அதை கேட்டு விட்டு “அண்ணா அவளோட அம்மாக்கு எதோ ஆயிடிச்சு ண்ணா” என்று கூறி காலையில் நடந்தது என எல்லாத்தையும் கூறினாள்…. இப்பொது மருத்துவமனை அழைத்து சென்றதையும் கூறினாள்…..
“ஓ” என கூறிவிட்டு …. “எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க…. எனக்கு என்னமோ அந்த அம்மா மேல நம்பிக்கையே இல்லை… அந்த அம்மா ட்ராமா போட்டாலும் போடுவாங்க….. அதுனால கொஞ்சம் ஜாக்கிரதை….. “என்று எச்சரிக்கை செய்தான்….
அவளும் சரி எனக் கூறிவிட்டு அவளும் உள்ளே சென்றுவிட்டான்….(அவள் இவனின் எச்சரிகையை வைத்து சாந்தாவிடம் ஜாக்கிரதையாக இருந்து இருந்தால் வரும் நாட்களில் வீட்டில் நடக்கும் பிரச்சனையை தடுத்து இருக்கலாம் விதி யாரை விட்டது????)
அரை மணி நேரம் சென்று இருந்தது….. பயங்கர சத்தம் கேட்டது… உள்ளே இருந்த மூவரும் வெளியே வந்து பார்த்து அதிர்ந்தனர்… அங்கே அதி ஒருவனை போட்டு அடித்து கொண்டு இருந்தான்……
அப்பத்தா அதிர்ந்து போய் நின்றது எல்லாம் ஒரு நொடி தான்… பிறகு சிரித்து கொண்டே மற்ற இருவரையும் அழைத்து கொண்டு சோபாவில் அமர்ந்தார்….. இருவரும் அதிர்ச்சியாகவே அவரின் இழுப்புக்கு சென்றனர்…..
“ஐயோ ஆச்சி என்ன இவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்து… நீ தானு கூப்பிட்ட…. வர சொல்லி… இவன் இருக்கான்னு தெரிஞ்சி இருந்தா நான் வந்து இருக்கவே மாட்டேன்” என்று அடி வாங்கி கொண்டே பேசிக் கொண்டு இருந்தான்… ஆனால் ஒரு அடி அதியை திருப்பி அடிக்கவில்லை….
ஆனால் அப்பத்தா சிரித்து கொண்டே அவனிடம் “போடா பொசக்கெட்ட பயலே….. அவன் இருக்கான்னு சொன்னா உன்ன எப்படி பாக்க முடியும்…. அது தான் சொல்லல…. நல்லா அடி வாங்கு டா” என்று சிரித்து கொண்டே கூறினார்….
“துரோகி ஆச்சி”… என்று கூறினான்…
“அவன் கிட்ட சொல்லாம அப்பாவும் புள்ளையும் என்ன வேலை செஞ்சீங்க…. வாங்கு டா… உன் அப்பனை தான் அடிக்க முடியாது உன்ன அடிக்கலாம்ல அது தான் அவனுக்கும் சேர்த்து நீ வாங்கு”…. என்று அப்பத்தா கூறினார்….. அதி அடித்து விட்டு உள்ளே சென்று விட்டான்….
“இந்த அடி கம்மினு உனக்கே தெரியும் எதுக்கு இந்த கத்து கத்துற… உன்னால தான் அவனுக்கு என் பேத்தி கிடைச்சி இருக்கா…… அதுனால கம்மியா அடிச்சிட்டு போறான்…. இல்லன்னா எப்படி விழுவும்னு தெரியும்ல” என்று கூறினார்….
அவனும் சிரித்து கொண்டே இன்னொரு சோபாவில் விழுந்தான்… பிறகு நிவேதாவை பார்த்து “ஹாய் அண்ணி” எனக் கூறி அவன் கை அசைத்தான்…. அவள் இன்னமும் அதியின் இந்த அவதாரத்தில் உறைந்து இருந்தாள்…
அப்பத்தா தான் அவளை உலுக்கி “பயப்படாத தாயி…. இவன் ராசாவோட கூட்டாளி தான் அது மட்டும் இல்லை நமக்கு ஒரம்பரை தான் ஆகுது…. இவனும் போலீஸ் தான் இவன் அப்பனும் போலீஸ் தான்… இவன் அப்பனுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இங்க சேலம்ல மாற்றல் குடுத்துட்டாங்க….
இவன் அம்மாவும் இவன் அப்பன்கூட சேலம் வந்துட்டா…. புள்ளய பிரிஞ்சி இருக்க முடியாம இவனையும் இங்க இவன் அப்பா அவன் பதவியை வெச்சி இங்க வர வெச்சிட்டான்… இந்த பய அதிய இங்க வர வெச்சிட்டான்…. அதுக்கு தான் போட்டு அடிக்குறான்……
தாயி நீ போய் ராசாவ பாரு டா…. அவன் கொஞ்சம் கோவமா இருப்பான்… போய் பாரு… டேய் நீயி இங்கனவே இரு… பிரியாம்மா வா டா… நாம உள்ள போயி இவனுக்கு எதோ சாப்பிட செய்யலாம்”…..என்று கூறி சென்றுவிட்டார்…
அதியின் அறை….
நிவேதா அவனின் அறையில் முன் நின்று கொண்டு இருந்தாள்…. அவனின் கோவம் இவளுக்கு தயக்கத்தை குடுத்து இருந்தது….. தயக்கம் இருந்தும் கதவை தட்ட கதவின் மேல் கையை வைத்தாள்…. ஆனால் கதவு தானாக திறந்து கொண்டது….. உள்ளே சென்று பார்த்தால் அவன் கட்டிலில் படுத்து கொண்டு இருந்தான்… அவள் அவன் அருகில் செல்லாமல் கதவின் அருகிலேயே நின்று இருந்தாள்… சிறிது நேரம் ஆனது… ஆனாலும் அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை…
“எவளோ நேரம் அம்மு அங்கேயே நிப்ப… இங்க வந்து உட்காரு…” என்று அறையிலிருக்கும் சோபாவை காட்டினான்… அவளும் எதுவும் பேசாமல் போய் உட்கார்ந்தாள்…..
“என்ன அம்மு பேச மாட்டிங்குற…. எனக்கு கொஞ்சம் கோவம் வரும் அம்மு…. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அம்மு…” என்று நிவேதாவிடம் கூறினான்…..
“இது தான் உங்களுக்கு கம்மி கோவமா பாவா உங்க ப்ரண்டுனு அம்மாச்சி சொன்னாங்க….. ஆனா அவங்களையே இப்படி அடிக்குறிங்க…. மத்தவங்கள எப்படி அடிப்பீங்க” என்று கேட்டாள்…..
“பயந்துட்டியா அம்மு…. இதுவே கம்மி அடி அம்மு… அவன் என்ன(என்னை) இங்க டிரான்ஸ்பர் பண்ணி வெச்சதுனால தான் நீ என் லைப்ல வந்த… அதுனால தான் கம்மி அடி அம்மு” என்று கூறினான்…
“பாவா பயந்துட்டியானு கேட்குறீங்க….. ஷாக் ஆயிட்டேன் தெரியுமா… எதுக்கு இவளோ கோவம் வருது உனக்கு…. நீங்க இவளோ கோவபடுவீங்கனு நான் நெனச்சி கூட பாக்கல…. அவர் யாரு..” என கேட்டாள்……
“அவன் என் ப்ரண்ட் தான் அம்மு…. நம்ம பங்காளி வீடு தான்… நம்ம பக்கத்து வீடு சின்ன வயசுல இருந்து ஒன்னாவே சுத்துவோம்…. ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ்… ஆனா நான் ஐபிஎஸ் எக்ஸாம் நான் முதல் தடவையே பாஸ் ஆகிட்டேன்… ஆனா அவன் நெஸ்ட் டைம் தான் பாஸ் ஆனான்…
சோ அவனை விட கொஞ்சம் ஹையர் பொசிசன்ல இருக்கேன்… அவனோட அப்பா எஸ்பியா இருக்காரு டா… அவரை சேலம்க்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க… சித்தப்பா கூடயே சித்தியும் வந்துட்டாங்க….. இவனையும் சித்தப்பா இங்க டிரான்ஸ்பர் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாரு… அந்த டாக் என்ன விட்டு இருக்க மாட்டேன்னு என்னை இங்க டிரான்ஸ்பர் வாங்கி வர மாதிரி பண்ணிடிச்சி” என்று கூறினான்….
“அவங்க பேமிலி பத்தி சொல்லவே இல்ல பாவா” என்று கேட்டாள்…
“சித்தப்பா மணிகண்டன், சித்தி அபிராமி, இவன் பேரு அன்பரசு…. எனக்கு மட்டும் சூர்யா… வீட்டுக்கு ஒரே புள்ள… நம்ம பங்காளி குடும்பம்…. சித்தப்பா அப்பாவோட ப்ரண்ட்”…. என்று கூறி முடித்தான்……
“அது என்ன பாவா உங்களுக்கு மட்டும் சூர்யா????” என்று கேட்டாள்….
“அவனுக்கு நான் தேவா எனக்கு அவன் சூர்யா” என்று கூறினான்…..
“அவங்க ஏன் நீங்க இங்க வந்ததுல இருந்து வீட்டுக்கு வரல பாவா????” என்று கேட்டாள்….
“அதுக்கும் சேர்த்து தான் அம்மு இந்த அடி” என்று கூறிவிட்டு “இன்னிக்கு மதியம் சித்தப்பா சித்தி வருவாங்கனு நினைக்குறேன் டா”…. என்று கூறினான்…
“ஓகே பாவா… வாங்க வெளியே போலாம்” என்று கூறினாள்….
“கொஞ்ச நேரம் பேசலாம் இங்கயே இரு” என்று கூறிவிட்டு அவளை தன் அருகில் அமர்த்தி கொண்டு பேசினான்… அவங்க பேசியது எல்லாம் ஸ்வீட் நதிங்ஸ்……
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



போலீஸ்காரருக்கு கோபம் இல்லாம இருக்குமா ?? நல்ல நண்பன் சூர்யா .. இப்படிதான் இருக்கணும் 😜😜😜