Loading

காதல் – 20

அஸ்வதி அவளின் அப்பாவிடமிருந்து தூரமாக சென்ற கதையை அவளின் மனம் கவர்ந்தவனிடம் கூறி கொண்டு இருந்தாள்……

 

அஸ்விம்மா இனி நீ எதுக்கும் அழவே கூடாது, உனக்காக இந்த விஹான் எப்பவும் இருப்பான் என்று இருவரும் பேசிக்கொண்டே ஒருவரை ஒருவர் அனைத்தப்படி உறங்கி போயினர்…..

 

அனன்யா மற்றும் விஷ்வா வீட்டினுள் வரும்போது அஸ்வதியையும் விஹானையும் அந்த கட்டிப்பிடி கோலத்தில் பார்த்தவுடன் இருவரும் சிரித்து கொண்டே சமயலறைக்கு சென்று தங்கள் வீட்டின் விருந்தாளிகளுக்கு தங்கள் தோட்டத்தில் விளைந்த ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை பறித்து உணவு தயாரித்து கொண்டு இருந்தார்கள்…..

 

முதலில் அஸ்வதி தான் விழித்தாள், விஹான் அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டப்படி உறங்கி கொண்டு இருந்தான்……

 

அவள் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள் ……

 

கள்ளம் கபடமற்ற வெல்லேந்தியான முகம் அவனுடையது …..

அடர்ந்த கருமையான கேசம் காற்றில் அசைந்து அசைந்து அவளின் நெற்றியை முத்தமிட்டு கொண்டு இருந்தது…..

பளிங்கு கற்களை ஒட்டி வைத்தது போல பால் நிற நெற்றி…..

இரண்டு நட்சத்திரங்கள் மேகதிற்க்குள் ஒழிந்தது போல அவனின் மூடிய இமைகளுக்குள் அவனுடைய இரு கருவிழிகளும் இருந்தது….

அளவுகோல் வைத்து அளவெடுத்து வைத்தது போல கூரிய நாசி….

மதுபானம் , சிகரெட் போன்றவை காணாத உதடுகள் என்று எடுத்து கூறுவது போல சிவந்த உதடுகள்…..

தன்னவள் தன் மேல் சாய்த்து உறங்குவதற்கு ஏதுவாக வளரந்து இருந்த அவனின் நெஞ்சில் உள்ள முடிகள் ……

அவளை தூக்கத்திலும் கெட்டியாமாக பிடித்து கொண்டு உறங்கும் இரும்பு கரங்கள் என்று அவனை அவள் இன்ச் இன்ச்சாக ரசித்து கொண்டு இருந்தாள்…..

 

விஹான் தூக்கத்தில் புரண்டு படுத்தான் அப்பொழுது , அவனின் தூங்கிய பாதி தெரிந்த  விழிகளில் அஸ்வதியின் அழகிய சிரித்த முகம் தெரிந்தது…..

 

அதில் அவன் தூக்கம் கலைந்து கண்களை திறந்து அவளை பார்த்தான் , அவள் அவனைத்தான் பார்த்து கொண்டே இருந்தாள்…..

 

என்ன மேடம் என்ன சைட் அடிக்கிறீங்க போல?

 

என்னோட காதலன நா சைட் அடிச்சா என்ன தப்பு?  என்று அவள் அவனின் மார்பில் படுத்தவாறு அவனின் முகத்தை பார்த்தப்படியே அவன் மேல் சாய்ந்தபடி அவள் கன்னத்தில் கை வைத்து கேட்டாள்….

 

அவளின் அந்த மயக்கும் விழி பார்வையில் விஹான் மயங்கி விட்டான் போல , அவளின் சிரித்த முகத்தையே பார்த்து ரசித்து கொண்டிருந்தான்…..

 

பிறகு அஸ்வதி அவன் மீதிருந்து எழுந்து அவனைப் பார்த்து செல்லமாக முறைத்தாள்…..

 

ஏன் நா உங்கள சைட் அடிச்சா தப்பா?

 

தப்பே இல்லன்னு சொல்லுறேன் , நா அப்படியே முழுசா உன்னோட ப்ராப்பர்டி சோ நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம் என்று   அவளைப் பார்த்து கண்ணடித்தான்……

 

அஸ்வதி விஹான் ரெண்டு பேரும் முழிச்சிட்டிங்களா ?                                          சரி  ரெண்டு பேரும் வாங்க வந்து சாப்பிடுங்க சமையல் ரெடி ஆயிடுச்சு வாங்க என்று அனன்யா இருவரையும் சாப்பிட அழைத்தாள்…..

 

அஸ்வதி மற்றும் விஹான் சாப்பிட சென்றனர்……

 

தலைவாழை இலை விரித்து அவியல்  கூட்டு வைத்து , கேரட் மட்றும் பீட்ரூட் பொரியல் வைத்து, இரண்டு மலை வாழை பழங்களை வைத்து, அப்பளம் வைத்து , சாதம் போட்டு சாம்பார் ஊற்றி வைத்திருந்தனர்…..

 

நீங்க  ரெண்டு பேரும் ஏன் இவ்வளவு செஞ்சி இருக்கீங்க?                                    சும்மா உங்களுக்கு சாப்பிடறதுக்கு செய்றது போல செய்யலாம்ல்ல?

 

இதுல என்ன இருக்குது அஸ்வதி?        எங்க  வீட்டுக்கு வந்த விருந்தாள் நீங்க உங்களுக்கு நல்ல சாப்பாடு செஞ்சு கொடுக்கணும்ல்ல , சரி நீங்க சாப்பிடுங்க……

 

அஸ்வதி மற்றும் விஹான் அவர்கள் செய்து வைத்த உணவுகளை சாப்பிட்டனர் , அவர்கள் செய்து வைத்த உணவு பதார்த்தங்கள் மிகவும் ருசியாக இருந்தது……

 

சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கு அனன்யா…..

 

ரொம்ப நன்றி அஸ்வதி சாதம் கொஞ்சம்  போடட்டுமா?

 

போதும்ப்பா இதுவே எனக்கு வயிறு ஃபுல்லா இருக்குப்பா இன்னும் சாதம் வச்சா வயிறு வெடிச்சிடும் போதும்ப்பா சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப தேங்க்ஸ்…..

 

அட எத்தனை தடவைதாங்க தேங்க்ஸ் சொல்லுவீங்க நீங்க? என்று விஷ்வா சிரித்தான்…….

 

அவர்கள் நால்வரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்…..

 

ஆமா விஷ்வா இங்கே இருந்து சிட்டிக்கு எப்படி போகணும்?                                      இங்க இருந்து சிட்டிக்கு போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

 

இங்க இருந்து அப்படியே நேரா போனா ஒரு ஒத்தையடி பாதம் வரும் அது வழியா போனா ஒரு மணி நேரத்துல ஹைவே வந்துரும் அங்கிருந்து வர ஏதாவது ஒரு பஸ்ஸோ இல்ல கார்ல லிப்ட் கேட்டு நீங்க  பரிபடா பஸ்டாப் ஆர் இரயில்வே ஸ்டேஷன் போகணும் ……

 

விஷ்வா உங்ககிட்ட போன் இருக்குமா? எங்க வீட்டுல நா கொஞ்சம் தகவல் சொல்லிக்கிறேன்……

 

விஹான் எங்க ரெண்டு பேருக்கிட்டயும் போன் கிடையாது…..

 

என்னது ஃபோன் கிடையாதா???    அப்போ எப்படி ரெண்டு பேரும் பேசுவீங்க?

 

நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதுக்கு போன் எதுக்கு அஸ்வதி?                      நானும் விஷ்வாவும் வெளிய எங்கேயும் போக மாட்டோம் இங்கேயே ஒன்னாதான் இருப்போம் அப்போ எங்க ரெண்டு பேருக்கு எதுக்கு போன் என்று அனன்யா சிரித்தாள்…..

 

விஷ்வா வெளிய போக மாட்டாங்கன்னா அடுத்த வேளை சாப்பிட சாப்பாட்டுக்கு காசு?

 

எங்க வீட்டு முன்னால ஒரு பெரிய தோட்டம் அண்ட் வயல் இருக்கு அதுல விளையுற நெல் , காய்கறிகள் எங்க ரெண்டு பேருக்கும் போதும் அப்படியே வெளிய போகனும்ன்னா டிரஸ் எடுக்க மட்டும் தான் போவோம் வேற எங்களுக்கு வெளிய போக வேண்டிய அவசியம்மே இல்ல…..

 

விஷ்வா, இயற்கைக்கு மத்தியில சூப்பர்ப்பா காட்டுக்கு நடுவுல , ஆத்தங்கரை ஓரத்துல சூப்பரான வீடு , நல்ல காதல் மனைவி சொர்க்கம் போங்க …..

 

அஸ்வதி கூறியதை கேட்டு அனன்யா மற்றும் விஷ்வா சிரித்து விட்டார்கள்…..

 

ஆமா விஷ்வா உங்க அம்மாவ கூட நீங்க பாக்க போக மாட்டீங்களா?

 

அம்மா சாமிக்கிட்டபோயிட்டாங்க….

 

சோ சாரி…..                                                              நா தெரியாம கேட்டுட்டேன்…..

 

அட என்ன விஹான் இதுக்கெல்லாம் சாரி கேட்டுட்டு இருக்கீங்க?                                  எங்க அம்மா சாமிக்கிட்ட போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?

 

என்னோட அப்பா தான் இவனோட அம்மாவ கொன்னுட்டாரு என்று அனன்யா அழும் குரலில் கூறினாள்…..

 

அனு அதெல்லாம் முடிஞ்சு போன கதை விடும்மா என்று விஷ்வா அவளை சமாதானம் செய்தான்……

 

ஆமா விஷ்வா அது யாரு அனு?

 

என்னோட காதல் மனைவி தான் அனு….

 

ஓஹோ அனன்யாவ சுருக்கி அனு சூப்பர் சூப்பர்…..

 

சரி இருட்ட போகுது நாங்க ரெண்டு பேரும் அப்போ கிளம்புறோம் என்று விஹான் அந்த காதல் தம்பதிகளிடமிருந்து விடைப்பெற பார்க்க , அஸ்வதியையும் விஹானையும் அவர்கள் செல்ல விடவில்லை…..

 

நீங்க ராத்திரி இங்கயே தங்கிட்டு காலைல  போங்க , இப்ப நீங்க  போறதுக்குள்ள இருட்டிடும் அண்ட்  உங்களால இந்த காட்ட கூட தாண்ட முடியாது , லைட் கூட இருக்காது சோ நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ராத்திரி இங்க தங்கிட்டு  நாளைக்கு காலையில கிளம்பி போங்க என்று அனன்யா மற்றும் விஷ்வா அன்பு கட்டளை விதித்தனர்……

 

அதை ஏற்று அஸ்வதி மற்றும் விஹான் இரவு பொழுதை அவர்கள் வீட்டில் கழித்தனர்……

 

அஸ்வதி மற்றும் விஹானுக்கு அந்த வீடு மற்றும் அன்பாக பழகும் அனன்யா மற்றும் விஷ்வாவை இருவருக்கும் ரொம்ப பிடித்து விட்டது……

 

இருவரும் மெத்தையில் படுத்து உறங்கி பழகியவர்கள் ஆனால் அவர்களுக்கு அந்த பனை ஓலை பாயில் தூக்கம் நன்றாக வந்தது…..

 

காலையில் இருவரும் நேரமாக எழுந்து குளித்து விட்டு , அவர்களின் நேற்று அணிந்த உடைகளை அணிந்து கொண்டு தங்களின் ஊருக்கு கிளம்ப தயார் ஆனார்கள்….

 

அனன்யா எங்க வாழ்க்கையில உங்க ரெண்டு பேரையும் நாங்க மறக்கவே மாட்டோம் என்று அஸ்வதி அனன்யாவை கட்டி அணைத்துக் கொண்டாள் …..

 

நாங்களும் உங்க ரெண்டு பேரையும் மறக்கவே மாட்டோம் என்ற அனன்யா கண்களில் ஈரம்………

 

விஷ்வா இந்த பேப்பர்ல என்னோட நம்பர எழுதிருக்கேன் உங்களுக்கு என்ன உதவி வேணாலும் எனக்கு ஒரு கால் பண்ணுங்க என்று விஹான் விஷ்வாவை அணைத்துக் கொண்டு இருவரும்  அந்த பாசமான தம்பதிகளிடமிருந்து பிரியாவிடை பெற்றனர்…….

 

பிறகு விஷ்வா கூறிய அந்த ஒத்தயடி பாதையில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்

 

ஒன்றரை மணி நேர நடை பயணத்திற்கு பிறகு அவர்கள் அந்த ஹைவேயை அடைந்தனர்…..

 

அவர்கள் சென்ற நேரம்  காலை நேரம் ஆதலால் அந்த ஹைவேயில் அவ்வளவாக வண்டிகள் வரவில்லை …..

 

அப்பொழுது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று அந்த வழியாக வந்தது , அந்த லாரிக்கு முன் விஹான் கை நீட்டி லிப்ட் கேட்டான், அந்த லாரிக்காரரும் இருவரையும் ஏற்றிக்கொண்டு பரிபடா ரயில் நிலையத்தில் விட்டார்……

 

இருவரும் அந்த லாரிகாரருக்கு நன்றி கூறிவிட்டு நடந்து கொண்டிருந்தனர், அப்பொழுது அஸ்வதி விஹானின் முகத்தை பார்த்தாள் , நீண்ட தூரம் நடந்ததாலும் , அந்த லாரியில் சிறிய இடத்தில் இருவர் அமர்ந்து கொண்டு வந்ததாலும் அவன்  சோர்ந்து காணப்பட்டான்…..

 

விஹான் கொஞ்ச நேரம் இங்க உக்காந்து இருங்க நா வரேன்  என்றிட்டு அஸ்வதி எங்கேயோ ஓடினாள்…..

 

அவள் திரும்பி வரும்போது கையில் நான்கு  உணவு பொட்டலமும் தண்ணீர் பாட்டிலும் கொஞ்சம் பழங்களும் கொஞ்சம் பணமும் கொண்டு வந்தாள்…..

 

அதைப் பார்த்து விஹான் அதிர்ச்சி அடைந்தான்…..

 

அஸ்வி உனக்கு ஏது இவ்வளவு பணம் இவ்ளோ சாப்பாடு, பழம்?                          எங்க இருந்து இது வந்தது?

அவன் அப்பொழுது தான் அஸ்வதியின் கழுத்தில் உள்ள தங்கச் செயின் இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தான்…..

 

அஸ்வி உன்னோட கழுத்துல உள்ள தங்க செயின் எங்க?

 

ஏன் விஹான் இவ்வளவு பதட்டப்படுறீங்க?                                 பொறுமை பொறுமை , நா என்னோட செயின வித்துட்டேன் , இப்ப நீங்க இந்த சாப்பாட சாப்பிடுங்க , சாப்பிடாம உங்களுக்கு முகம் எப்படி சோர்ந்து , வேர்த்து போயிருக்கு பாருங்க என்று அவள் அவனின் நெற்றியில் பூத்திருந்த வேர்வை துளிகளை துடைத்து விட்டாள்….

 

அஸ்வி எதுக்குமா செயினை வித்த?

 

இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் நம்ம ஊருக்கு போக காசு வேணும் அதுக்கு என்ன பண்ண?                        அதுக்காகவாது இந்த செயின் உதவியா இருக்கேன்னு சந்தோஷப்படுங்க , இப்ப இந்த சாப்பாட்ட சாப்பிடுங்க என்று அவள் சாப்பாடு பொட்டலத்தை பிரித்து அந்த உணவை விஹானுக்கு ஊட்டி விட்டாள்…..

 

அவளின் தூய அன்பில் கரைந்து போய் அவள் ஊட்டி கொடுத்த உணவை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்….

 

வெரி குட் பாய் என்று அஸ்வதி கை கழுவி விட்டு அவனின் வாயை துடைத்து விட்டாள்…..

 

அஸ்வதி நீ சாப்பிட்டாலயாம்மா?

 

நா வர வழியில ஒரு பெரிய கிளாஸ்ல பழ ஜூஸ் குடிச்சிட்டு வந்தேன் சோ எனக்கு பசிக்கல சரி வாங்க நம்ம ரயில்வே ஸ்டேஷன் போவோம் என்று அவள் அவனின் கைகளை பிடித்துக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தனர்…..

 

அஸ்வதி பரிபடாவிலிருந்து பிரக்யாராஜ் செல்ல ரயில் பயணச்சீட்டு இருவருக்கும் எடுத்தாள்…..

 

அவர்கள் செல்லப் போகும் ரயில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டி , திரிவேணி சங்கமத்திற்கு செல்ல கூட்டம் அதிகம் இருந்தது அதனால் அவளால் முன்பதிவு ரயில்  பெட்டிக்கு டிக்கெட் எடுக்க முடியவில்லை ….

அதுவும் அவர்கள் செல்ல போகும் ரயிலில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது…..

 

இருவருக்கும் அமர ஒரு சீட்டு கூட இல்லை எனவே ரயிலில் உள்ள தரையில் தான் வாசலோரம் இருவரும் அமர்ந்தனர்…..

 

இருவருக்கும் அந்தப் பதிமூன்று மணி நேர பயணம் புதிதாக இருந்தது…..

 

விஹான் தன் காதலியின் பின்னால் அமர்ந்து கொண்டு அஸ்வதியை யாரும் இடிக்காமல் பார்த்துக் கொண்டான் …..

 

அவர்கள் அவ்வாறு பயணம் செய்வதால் இருவருக்கும் உடல் வலி பின்னி எடுத்தது ஆனாலும் இருவரும் அந்த ரயிலில் சந்தோஷமாக தான் பயணித்துக் கொண்டு வந்தனர்…..

 

அந்த  பதிமூன்று மணி நேர பயணத்தில் இருவரும் நிறைய நிறைய பேசினார்கள்…..

 

பதிமூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் பிரக்யாராஜை அடைந்தனர்……

 

பிறகு ஒரு கேப் பிடித்து திரிவேனி சங்கமத்திற்கு சென்று கொண்டு இருந்தார்கள்……

 

அங்கு அந்த திரிவேனி சங்கமத்தில் நேற்றில் இருந்து அஸ்வதியையும் விஹானையும் மீட்பு குழுவினர் தேடிக் கொண்டிருந்தனர்…..

 

அப்பொழுது இறந்து போய் தண்ணீரில் மிதந்த இரு ஜோடிகளை அந்த மீட்பு குழுவினர் கரைக்கு கொண்டு வந்தனர்…..

 

மிஸ்ஸஸ் சித்திக் உங்க மனச தேத்திக்கோங்க , இது உங்க ரெண்டு குழந்தைகளா இருக்க வாய்ப்பு அதிகம் என்று அந்த அந்த போலீஸ் கூறியவுடன் பீவி பெருங்குரலெடுத்து அழுக ஆரம்பித்தார்……

 

ஆனால் விஹானா அந்த இரு ஜோடிகளை பார்த்து விட்டு…..

 

இது என்னோட அண்ணாவும் அஸ்வதியும் இல்ல …..

 

அடுத்து நடக்க போவது என்ன???

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்ல வேளை விஹானா சொன்ன மா … இல்ல னா என்ன ஆகுறது … அடுத்து என்ன நடக்கும் …

    1. Author

      Thodarndhu padinga 😇 thank you for your valuable comments 😇