
வசும்மா தான் கண்ட காட்சியில் உறைந்து நின்று விட்டார்…. ஏனென்றால் சாந்தா தானாகவே பேசிக் கொண்டு இருந்தார்….. ஜனகராஜ் மற்றும் நிஹாரிகா இருவரும் அங்கே இருப்பதாக நினைத்து கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்…..
“என்னங்க இந்தாங்க காபிய பிடிங்க”.. என்று வெறும் கையை கப் பிடிப்பது போன்று பிடித்து யாரும் இல்லா சோபாவில் யாருக்கோ தருவது போல் தந்து கொண்டு இருந்தார்…..
“நிஹா தங்கம் இந்தா நீயும் பூஸ்ட் குடி டா” எனக் கூறிக் கொண்டு இருந்தார்… அதை பார்த்து தான் வசும்மா அதிர்ச்சி ஆகி நின்று விட்டார்….
சில நொடி தான்… பிறகு வசும்மா சாந்தாவை அழைத்தார்… “ஏய் சாந்தா உனக்கு என்ன ஆச்சி…. யாரு கூட பேசிட்டு இருக்க”… என்று அவரைப் பார்த்து கேட்டார்…
ஆனால் சாந்தா வசும்மாவைப் பார்த்து “யாரு நீங்க எதுக்காக வீட்டுக்குள்ள வந்து இருக்கிங்க முதல்ல வீட்டை விட்டு வெளியே போங்க” என்று கோபமாக கூறினார்….
“ஏய் சாந்தா உனக்கு என்ன ஆச்சி என்ன யாருனு கேட்குற….. யாரு கிட்ட இவளோ நேரம் பேசிட்டு இருக்க.. அங்க தான் யாருமே இல்லையே….” என்று வசும்மா சாந்தாவிடம் கேட்டார்….
சாந்தா வசும்மாவிடம் “கண்ணு தெரியலையா உங்களுக்கு என் வீட்டுக்காரரும் என் பொண்ணும் இங்க தானு உட்காந்து இருக்காங்க…. முதல்ல யாரு நீங்க… எதுக்கு இங்க என் வீட்டுக்கு வந்திங்க….. என் வீட்டை விட்டு முதல்ல வெளிய போங்க” என்று கோவமாக கூறினார்….
வசும்மா என்ன செய்வது என தெரியாமல் நிதிஷ் மற்றும் பிரியாவை அழைக்க சென்றார்…. பிரியா ஏற்கனவே எழுந்து இருந்தாள்… நிதிஷ் மட்டும் உறங்கி கொண்டு இருந்தான்… எனவே வசும்மா கதவை தட்டும் போது அவள் தான் கதவை திறந்து விட்டாள்…. அவர் முகம் படத்தமாக இருந்தது…. நிதிஷும் அந்த அரவத்தில் எழுந்து இருந்தான்…
பிரியா தான் வசும்மாவிடம் “அத்தம்மா என்ன ஆச்சி ஏன் இப்டி டென்சனா இருக்கிங்க…. எதோ பிரச்னையா… திரும்பியும் அவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களா????” என்று அவளும் பதட்டமாக கேட்டாள்….
நிதிஷும் “என்ன ஆச்சி மீ… ஏன் டென்ஷனா இருக்கீங்க… எதோ பிரச்சனையா….???” என்று வசும்மாவிடம் கேட்டான்…
“அது பிரியாம்மா சாந்தாக்கு எதோ ஆகிடிச்சி டா…. யாருமே இல்லாத ரூம்ல இந்தாங்க காபி… இந்தா நிஹா பூஸ்ட்னு குடுக்குறா டா…. நான் போய் என்ன ஆச்சுனு கேட்டா…. யாரு நீங்க எதுக்காக வீட்டுக்குள்ள வந்து இருக்கிங்க முதல்ல வீட்டை விட்டு வெளியே போங்கனு சொல்றா டா ….. அவளுக்கு அதிர்ச்சில எதோ ஆகிடிச்சி டா”… என்று வசும்மா இருவரிடமும் கூறினார் …..
“என்னம்மா சொல்றிங்க வாங்க போய் பாக்கலாம்”…. என்று நிதிஷ் வசும்மாவிடம் கேட்டுவிட்டு சாந்தா இருக்கும் அறைக்கு சென்றான்…. அவன் பின்னே பிரியா வசும்மா இருவரும் சென்றனர்….
அவர்களைப் பார்த்தும் “யாரு நீங்க எதுக்கு என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க…. ஏங்க உங்கள தான் அப்பயே போக சொன்னேன்ல ஆனா நீங்க வேற யாரையோ கூட்டிட்டு வந்து இருக்கீங்க…. முதல்ல வெளிய போங்க..” என்று இவர்களிடம் கோவமாக கூறிவிட்டு “என்னங்க இங்க பாருங்க யார் யாரோ வீட்டுக்கு வராங்க… இவங்க எல்லாம் யாருனே தெரியல… வீட்டை விட்டு வெளிய போக சொல்லுங்க முதல்ல….” என்று இல்லாத ஜனகராஜிடம் கூறினார்….
வசும்மா தான் அவர் பக்கம் சென்று “சாந்தா உனக்கு என்ன ஆச்சி” என்று சாந்தவை உலுக்கினார்… அதில் ஒருமுறை திடுக்கிட்டு சாந்தா என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்தார்…. வசும்மாவைப் பார்த்து “என்ன ஆச்சி அக்கா ஏன் எல்லாரும் இங்க இருக்கீங்க என்ன ஆச்சி” எனக் கேட்டார்…..
“ஒன்னும் இல்லை உன்ன பாக்க தான் வந்தாங்க திடீர்னு மயக்கம் போடுற மாறி கீழ விழுவ போன.. அதுனால தான் பிடிச்சி உலுக்கினேன்” என்று கூறினார்…. இன்னிக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் ரெடியா இரு…. உன் டிரஸ்லாம் எடுத்துட்டு வந்தாச்சு…. குளிச்சிட்டு வா சாப்பிட்டு போயிட்டு வந்துடலாம்” என்றுக் கூறிவிட்டு நிதிஷ் பிரியா இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்…..
இங்கு வெளியே வந்த வசும்மா இருவரையும் பார்த்து “என்ன பண்றது…. ஏன் முதல்ல தெரியாத மாறி பேசுனா…. கொஞ்ச நேரம் கழிச்சி எப்பயும் போல பேசுறா… என்ன பண்றது” எனக் கேட்டார்…..
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது நிவேதா வாக்கிங் சென்று விட்டு அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தாள்…. வழக்கம் போல் அதியும் இவளும் தான் வாக்கிங் சென்றனர்.. எப்போதும் ஒரு சிரிப்பு காலை வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டு இருவரும் நடக்க சென்று விடுவர்…
ஆனால் இன்று நிறைய பேச்சு நிறைய சிரிப்பு என இவர்கள் வாக்கிங் நன்றாக சென்றது…அதை நினைத்து சிரித்துக் கொண்டு கீழே இறங்கினாள்… ஆனால் கிழே யார் முகமும் சரியில்லை… அதனால் கீழே வந்து என்னவென்று விசாரித்தாள்…
பிரியா தான் சாந்தாவின் விசித்திரமான நடவடிக்கைகளைச் சொன்னாள்…. ஆனால் அவளிடம் “ஓ” என்று மட்டும் கூறிவிட்டு பூஜை அறையை நோக்கி சென்று விட்டாள்…
“என்ன மாமா ஓ’ மட்டும் சொல்லிட்டு போறா….”என்று நிதிஷிடம் கேட்டாள்….
“அவளுக்கு வெறுத்து போச்சி போல” என்று அவளிடம் கூறிவிட்டு “அம்மா அவங்க மன அழுத்ததுல இருக்காங்க போல…. ரொம்ப அவங்களுக்கு பாதிப்பு அடஞ்சி இருக்கு…. மன அழுத்ததுல இருந்தா இப்டி தான் ஆகும்… என்ன நடக்குதுனு தெரியாம அவங்க ஒரூ உலகத்துக்கு போய்டுவங்க…. நாம அவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்…. குட்டிமாக்கு கோச்சிங் கிளாஸும் இல்லை… அதுனால பாப்புவும் குட்டிமாவும் வீட்டுல இருக்கட்டும்” என்று கூறினான்…
வசும்மாவும் அவனிடம் சரி எனக் கூறிவிட்டு சமையல் அறை சென்றார்….
அங்கு ஏற்கனவே நிவேதா சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருந்தாள்… வசும்மா அவளிடம் சாந்தாவைப் பற்றி கேட்காமல் அதியை பிடித்து இருக்கா எனக் கேட்டார்…. “நிவிம்மா உனக்கு நிஜமா அதி தம்பிய பிடிச்சி இருக்கா டா??? “
“ஆமா பெரியம்மா ரொம்ப பிடிச்சி இருக்கு…. உங்க கூட நான் எப்படி பாதுகாப்பை உணர்ந்து இருக்கேனா அந்த மாறி அவர் கிட்டயும் உணர்ந்து இருக்கேன்…. நேத்து கார்ல வர அப்ப அப்படி தான் இருந்தது…. அன்னிக்கு அகில் கூட இருந்தப்ப அவர் பக்கத்துல நின்னாருல அப்பலாம் எனக்கே அறியாம அவரோட அருகாமையை ரசிச்சு இருக்கேன் பெரியம்மா” என்று கூறினாள்….
“நீ சந்தோசமா இருந்தா அதுவே போதும் நிவிம்மா” என்று கூறி விட்டு சமையல் வேலையை ஆரம்பித்தனர்…. பிரியாவும் வந்துவிட்டாள்…. மூவரும் வேக வேகமாக காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தார்கள்….
அதியின் வீடு
அவனும் வாக்கிங் சென்று விட்டு குளித்து விட்டு அவனின் அறையில் இருந்து வெளியே வந்தான்…. அப்பத்தா சமையல் செய்ய காய்களை வெட்டிக் கொண்டு இருந்தார்… இவனும் அப்பத்தாவிற்கு உதவ காய்களை வெட்டினான்…
அப்பத்தாவிடம் “ஏன் அப்பத்தா மதுரை போகல இங்கவே இருக்கனு சொன்ன????” என்று கேட்டான்….
அப்பத்தாவும் “இல்ல ராசா பேத்தியோட அம்மா வேற வசு வீட்டுலயே இருக்கு நான் இங்கன வீட்டுல இருந்தா பேத்தியால இங்க வர சொல்லிடுவேன்ல… நானும் மருத போயிட்டா வூட்டுலயே தான் இருக்கும்… அதுனால தான் இங்கனவே இருக்கனு சொன்னேன்” என்று அதியிடம் கூறினார்….
“என் செல்ல அப்பத்தா” என்று அவரைக் கொஞ்சி விட்டு அவருக்கு சமையலுக்கு உதவினான்…..
அப்பத்தா அதியிடம் “ராசா சூர்யாவ வர சொல்லு ப்பா… பையனைப் பார்த்துக் கூட ரொம்ப நாள் ஆச்சு….. வர சொல்லுய்யா ” என அப்பத்தா கூறினார்
“அப்பத்தா உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல அவன நான் மட்டும் தான் சூர்யானு கூப்டுவன்னு நீ அவன் பேர சொல்லி கூப்டு… அப்பறம் அவன் கூடலாம் பேச மாட்டேன்…. மண்டகனம் புடிச்சவன்… நீயே அவன்கூட பேசு… உனக்கும் போன் இருக்குல்ல… அதுல அவன் நம்பரு இருக்குல்ல…. நீயே அவனைக் கூப்டுக்கோ”.. என்று கூறிவிட்டு அவனின் அறைக்குச் சென்று விட்டான்….
அப்பத்தாவும் சூர்யாவிற்கு ( அவன் பேரு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம்… இது அதி மட்டும் தான் கூப்டுவானாம்) போன் செய்து “டேய் பொசகட்ட பயலே… ஒழுங்கா நீயே அவன் கூட பேசிக்கோ…. அவன் எனக்கு கம்மன்னு சமைக்கவாச்சும் உதவி செஞ்சி இருப்பான்…. ஒழுங்கா அவன சமாதானம் பண்ணிடு…. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… வீட்டு பக்கம் வந்துட்டு போடா” என்று கூறி விட்டு இல்லை இல்லை திட்டிவிட்டு வைத்து விட்டார்…..
சாந்தாவின் அறையில்
“ஹா ஹா நீங்க மட்டும் சந்தோசமா இருப்பிங்களா….. பைத்தியமா நடிச்சி உங்க நிம்மதியை கெடுக்குறேன்….. ஏய் நிவேதா உன் ராசி தான் எல்லாத்துக்கும் காரணம் இந்த வீட்டை விட்டு உன்ன அனுப்புறேன்… எவனோ உன்ன பிடிச்சி இருக்குனு சொல்றானே அவனே அவன் வாயால உன்ன எனக்கு பிடிக்கல… அப்டினு சொல்ல வைப்பேன்” என்று சத்தமாக கூறிக் கொண்டு இருந்தார்….. கதவு மூடி இருந்ததால் வெளியே யாருக்கும் கேட்கவில்லை….
சாந்தா அனைவரையும் பழி வாங்குவேன் என்று தனக்கு தானே கூறி விட்டு குளிக்க சென்றார்…. குளித்து விட்டு எதுவும் தெரியாதது போல் கொஞ்ச நேரம் கழித்து வெளியே சென்றார்…. இன்றே நிவேதாவை வைத்து ஆரம்பிக்கலாம் என்று நினைத்து தான் கீழே போனார்…. ஆனால் அவரின் கெட்ட நேரம் அவளோ அதியின் வீட்டுக்கு அவள் சமைத்த உணவினை அப்பத்தாவிற்கு குடுக்க சென்று விட்டாள்…. (அப்பத்தாவுக்கு குடுக்க போனாளா… இல்லை அவளோட பாவாக்கு குடுக்க போனாளா யாருக்கு தெரியும்…..???? நமக்கு எதுக்கு வம்பு நாம போய் சாந்தாவை பாக்கலாம் )
அவள் இருந்தாள் மறதி நாடகத்தை வைத்து நிவேதாவை எதோ செய்து அழ வைக்கலாம் என நினைத்து தான் முக்கியமாக கீழே வந்தார்…….. அவள் இல்லாதது அவருக்கு ஏமாற்றம் தான்…. எனவே எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக சாப்பிட்டு விட்டு அறையின் உள்ளே சென்று விட்டார்…. அறைக்கு சென்றவர் அந்த சனியன் எங்க போய் தொலைஞ்சது இன்னிக்கு தப்பிச்சு இருக்கலாம் ஆனா உனக்கு இருக்குடி என வன்மமாக நினைத்து கொண்டார்….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



சாந்தாக்கு இருக்கிறது அவளோட பொண் நிவே மட்டும் தான்…. அது தெரியாம நிவேவை பலி வாங்க நினைக்கிறாள்… ரொம்ப கெட்ட அம்மா…😠😠😠
இந்தம்மா தான் நிவியை பெத்தாங்களா ?? இது தாய் இல்ல பேய் … இன்னும் என்ன பண்ண காத்திருக்குதோ