
மெல்லினம் 6:
அவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர அவளுக்கு சில மணி நேரங்கள் பிடித்தன.
ஆட்டோவில் சென்ற மகள் காரில் வந்து இறங்கியதை கண்ட மங்கை, “என்ன தேனு யாரது தெரிஞ்சவங்களா” என கேட்க
“ரேஷ்மியோட சித்தப்பா தான் மா” என்றவளிற்கு வீடு வரை கொண்டு வந்து விட்டவனை, வீட்டிற்குள் அழைக்காத தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவள், அப்போதுதான் விழித்த அத்வியை மங்கையிடம் கொடுத்துவிட்டு அவளின் அறைநோக்கி சென்று விட்டாள்
மகளின் முகவாட்டத்தை கண்ட தாயும், அவளே வந்து என்னவென்று சொல்லட்டும் என நினைத்து, அவனை தூக்கிக் கொண்டு சமையலறையினுள் நுழைந்தவர் அடுத்து அவன் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து, அடித்துப் பிடித்து கொண்டு மகளின் முன்னே நின்றிருந்தார்
“என்னம்மா என்ன ஆச்சு” அரக்க பறக்க ஓடிவந்து தாயைக் கண்டு அவள் கேட்க,
“என்ன? என்ன ஆச்சு? இவன் என்னமோ கேட்கிறான் என்னன்னு அதை பாரு’ என்க
“என்னம்மா? என்ன? சாக்லேட் ஏதும் கேட்குறானா” என ஹரிஷை அவன் பார்த்ததை மறந்து இவள் கேட்க
“அதெல்லாம் இல்லடி, டேய் இப்ப நீ என்கிட்ட என்ன கேட்டுன்னு சொல்லு டா” என அவனை அதட்டிட,
அழுகையில் முகம் சுழித்தவன் “ம்மா ப்பா ப்பா வேணும்” என அதில் மங்கையின் முகம் கலவரமடைய,
அப்போது தான் ஹரிஷை பற்றிய நினைவு வந்தது இவளிற்கு. ஆனால் முன்பிருந்த கலக்கம் இப்போது குறைந்திருந்தது.
“அத்வி கண்ணா நம்ம லிட்டில் சிங்கம் பாக்கலாமா?” என அவள் கேட்டு குழந்தையை திசை திருப்ப,
“ம்ம்ம் ம்மா லிட்டில் சிங்ங்க்ம்” என தந்தையை மறந்து குழந்தை கார்டூனில் மூழ்க,
அதற்கென வைத்திருந்த சி.டியை டிவியில் போட்டு விட்டு அத்விதனை அமர வைத்து விட்டு இங்கே பேயறைந்ததை போல் நின்றிருந்த தாயின் அருகில் வந்தவள்,
“ம்மா!” என அவரை உலுக்க,
“ஹாங் தேனு என்ன இது இவன் இப்புடி சொல்லுறான். அப்போ இன்னும் கொஞ்சம் வளர்ந்தான்னா, அவுங்க அப்பாவை தேட ஆரம்பிச்சிடுவானா, என்ன சொல்லி சமாளிப்ப அவனை, அது சரி இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு என்ன புதுசா இப்புடி பேசுறான்?” என் அவர் கலக்கத்தை வெளியிட,
“இன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல ஹரிஷை பார்த்தேன் மா” என்றவள் தொடங்கி அங்கே நடந்த அனைத்தையும் சொல்லி விட்டிருந்தாள்.
“கல்யாணம் பண்ணிட்டானா!” என அதிர்ந்தவர் “எப்புடி எப்புடி தேனு மூணு மாசம் கூட ஆகல விவாகரத்து ஆகி அதுக்குள்ளே எப்புடி அவன் இன்னொரு வாழ்க்கைக்கு தயாரானான். அப்போ அவன் குழந்தைய பத்தி யோசிக்கவே இல்லையா?
இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிருக்கான்னா, அப்போ அப்போ மொதல்ல இருந்தே அவனுக்கு அந்த பொண்ணு கூட பழக்கம் இருந்திருக்கனும் சரிதான?
உண்மை சொல்லு தேனு அந்த பொண்ணு கூட பழக்கம் இருக்குறது முன்னாடியே உனக்கு தெரியுமா? தெரிஞ்சு தான் விவாகரத்துக்கு சம்மதம் சொன்னியா? நான் கூட உங்க ரெண்டு பேத்துக்கும் ஒத்து வரலன்னு தான நெனச்சேன்” என அவர் படபடக்க,
அவரின் சொற்களை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தவள்,
“இது தான்னு எனக்கு அப்போ உறுதியா தெரியலம்மா, ஆனா ஹரிஷ்க்கு என்ன பிடிக்கலனனு தெரிஞ்சது. அது மட்டுமில்லை ஹரிஷோட நடவடிக்கையும் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுச்சு. அதுக்கு காரணம் எனக்கு சத்தியமா தெரியவே இல்லை மா, ஆனா அன்னைக்கு கோர்ட்டுக்கு போனப்ப தான் தெரிஞ்சது அவர் கூட ஒரு பொண்ணு இருந்தா!”
“இன்னும் என்ன மண்ணாங்கட்டிக்கு அவருன்னு சொல்லுற அவனை, அதான் வேற கல்யாணம் பண்ணிட்டான்ல, குழந்தையையும் உன்னையும் விட்டுட்டு போனவனுக்கு, மரியாதை ஒண்ணு தான் கேடு” என மங்கை முல்லையின் பேச்சில் இடைபுகுந்து ஆவேசமாக கத்த,
“ம்மா ம்மா விடு டென்ஷன் ஆகாத நான் சொல்லல விடு” என்க,
“எப்புடி எப்புடி டி அமைதியா இருக்குறது. உன்னை இப்புடி பாக்க பாக்க பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது. இதுக்கா உன்னை பெத்து அருமை பெருமையா வளர்ந்தேன்.
என் மனசே ஆறல உன்னை இப்புடி நிக்க வச்சிட்டு அவன் மட்டும் அங்கே வாழ்ந்துடுவானா என்ன? அவன்லா வெளங்கவே மாட்டான் அழிஞ்ச போயி….!” என்றவரின் ஆவேச மொழி
“ம்மா!” என்ற முல்லையில் ஓங்கி ஒலித்த அதட்டலில் தான் நின்றது.
“போதும் யாரோ எப்புடியோ போறாங்க, நீ இப்புடி எல்லாம் யாரையும் பேசாதே, போ போய் படுங்க கொஞ்ச நேரம், சமையலை முடிச்சிட்டு எழுப்புறேன்.” என அவரை அதட்டி படுக்க சொல்லியவள் சமையலை கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.
அத்விதன் டிவியில் மூழ்கியிருந்ததால் இப்போதைக்கு தொந்தரவு இல்லை என நினைத்தவள் பரபரவென சமையலை தொடங்கியிருந்தாள்.
ஒரு மணி நேரத்தில் சாதம், ரசம், முட்டை பொறியல் என சிம்பிளாக சமையலை முடித்தாள். ரசித்து உண்ணும் மனநிலை அங்கே அப்போதைக்கு இல்லை.
அத்விதனுக்கு ஒரு கிண்ணத்தில் சாதத்தை போட்டு நெய் ஊற்றி பிசைந்தவள் அவனிற்கு ஊட்ட அன்று நல்ல மூடில் இருந்தான் போலும் குழந்தை மறுக்காமல் வாங்கி கொண்டான்.
அவன் சாப்பிட்டு முடிக்கவும் சத்யமூர்த்தி மதிய உணவிற்கு வரவும் சரியாக இருந்தது. சொந்தமாக பிளாஸ்டிக் வாட்டர் பம்புகள்,வீட்டிற்கு தேவையான சிறு சிறு இரும்பு பொருட்கள் விற்கும் கடையை வைத்திருக்கிறார். ஓரளவு நல்ல பெரிய கடையே வீட்டில் இருந்து சிறிது தூரமே கடை இருப்பதால் எப்போதும் மதிய உணவிற்கு வந்து விடுவார்.
“சாப்பாடு எடுத்து வைக்கவா ப்பா” என அவள் கேட்க,
“அத்விக்கு தூக்கம் வந்துடுச்சு பாரு, நீ போய் அவனை பாரு அம்மா எங்க?” என்க,
“ரூம்ல இருக்காங்க இன்னும் சாப்பிடல” என்றவள் அத்விதனை தூக்கி கொண்டு அறைக்கு வந்து விட்டாள்.
அவளிற்கு தெரியும் தாய் தந்தையிடம் அனைத்தையும் சொல்லாமல் விட மாட்டார் என்று. பெண்ணின் வாழ்க்கை நினைத்து கவலையில் இருப்பவரின் வார்த்தைகள் ஆதங்கத்தில் சற்று கோபமாகவே வந்து விழும்.
அவளிற்கே அதை கேட்க விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதை விட தேவையில்லை என்றே நினைத்தாள்.
‘இனி என்ன பேசி என்ன ஆக போகிறது. அவனை பேசினால் மட்டும் எல்லாம் பழைய நிலைக்கு மாறி விட போகிறதா என்ன? பின் எதற்கு அதனை பற்றி பேசி தங்களின் வார்த்தைகளை வீணாக்குவானே?
இதை தாயிடம் சொன்னால் ஏற்று கொள்வாரா? நிச்சயம் இல்லை தாயின் ஆவேசமும் கோபமும் இப்புடி பேசுவதால் கூட அடங்கட்டும்’ என நினைத்தவள் அமைதியாக குழந்தையை படுக்க வைத்து தானும் அருகில் படுத்து கொண்டால்..
காலையில் சாப்பிட்டது பசியே எடுக்கவில்லை! எப்படி எடுக்கும் மனதும் மூளையும் அமைதியாக இருந்தால் தானே வயிற்று பசி உரைக்கும்.
இங்கே இவள் தான் அனைத்தையும் சிந்தித்து கொண்டு மனதையும் அமைதியாக இருக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறாளே!
‘ஏன் தனக்கு காலையில் அப்படி ஒரு அழுகை வந்தது. ஹரிஷை வேறு ஒருத்தியுடன் பார்த்ததாலா? அப்படி என்றால் அவனை இன்னும் மறக்க முடியவில்லை என்று தானே அர்த்தம் அப்போது அவன் திரும்பி வந்தாள் மீண்டும் ஏற்று கொள்வேனா’ என அவள் நினைத்த அடுத்த நொடி
“ச்சீ ச்சீ” என மனமும் உடலும் அருவறுத்து போனது அவளிற்கு.
‘ஆக அவனின் மேல் எந்த விருப்பமும் இல்லை. கதிர் சார் சொன்னது போல் தகுதியில்லாத ஒருவருக்காக எதற்காக என் கண்ணீரை நான் சிந்த வேண்டும். மூன்று வருடங்களாக என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை, மூன்றே மாதத்தில் மறந்து விட்டு அடுத்த திருமண பந்தத்தில் அவன் இணைந்திருக்கும் போது என்னால் அவன் நினைவுகளில் இருந்து வெளி வர முடியாதா என்ன? அவ்வளவா அவனிடம் மயங்கி போய் கிடக்கிறேன்’ என சுய அலசலில் ஈடுபட்டவளுக்கு தெளிவாக விடை கிடைக்காததில் அப்படியே உறங்கி போனாள்.
மாலை அவள் எழும் போது அருகில் குழந்தை இல்லை . பசி வயிற்றை கிள்ள வேகமாக எழுந்து அவள் வர,
இவளை கண்டதும் அவளின் பசியை உணர்ந்தார் போல் மங்கை சாப்பாடு வைக்க அவரின் அமைதியான முகம் இவளுக்கு எதையோ உணர்த்துவது போலிருக்க அப்போதைக்கு வேறு எதையும் யோசியாது சாப்பாட்டில் கவனமானாள்.
*******************
“ரேஷ்மி அரை மண்டியில உட்கார்ந்து நமஸ்காரம் பண்ண கூடாது, முழு மண்டியில உட்கார்ந்து பண்ணனும்னு சொல்லிருக்கேன்ல”
என ரேஷ்மியை திருத்தியவாறு இருந்த முல்லையின் கண்கள் எங்கேயும் கதிரவன் தென்படுகிறானா என அலசி ஆராய்ந்தது.
நேற்று அவனை வீட்டிற்குள் அழைக்காமல் விட்டதற்கு மன்னிப்பை வேண்டி விட வேண்டும் என எண்ணி அவனை தேடி கொண்டியிருக்கிறாள்.
ஆனால் அவன் வீட்டில் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.
‘ஒரு வேளை இன்னும் வேலையில் இருந்து வீடு வரவில்லையோ இல்லையே எப்போதும் இந்நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருப்பாரே வழக்கமாக அவர் வரும் நேரம் தாண்டி அரை மணி நேரம் ஆகி விட்டது’ என கேள்வியும் அவளே பதிலும் அவளுமாகவே எண்ணி கொண்டாள்.
நடனத்தில் கவனமாக இருந்தவளை கலைத்தது காரின் ஒலியும் அதனை தொடர்ந்து வீட்டுக்குள் கேட்ட “டொக் டொக்” என கேட்ட செருப்பின் ஒலியும்.
மாடிப்படிகளில் ஏறும் ஓசை கேட்க ‘அவர் வந்துட்டாரோ’ என அவள் நினைத்த நொடி “ஹை சித்தப்பா வந்துட்டாரு” என்றபடி முல்லை பிடிப்பதற்குள் திரும்பி வேகமாக படியை நோக்கி ஓட தொடங்கியிருந்தாள் ரேஷ்மி.
குழந்தை ஓடவும் அந்த உருவம் மேல் ஏறவும் சரியாக இருந்திட ரேஷ்மி வந்த வேகத்திற்கு அதன் மேல் மோதிட நிலை தடுமாறிய அந்த உருவம் படிகளில் சறுக்கி கீழே அமர்த்திட கணுக்காலில் படியின் கூரிய முனை நன்றாக கிழித்து விட்டிருந்தது.
“ஏய்! எருமை அறிவில்லை உனக்கு இப்புடியா வந்து மோதுவா சனியனே ஆ ஆ அம்மா” என அந்த உருவம் கத்திட,
அதில் அதிர்ந்து கண்களில் நீர் கோர்த்து கொள்ள. “இல்லை பெரியம்மா சித்தப்பான்னு நெனச்சு தான் ஓடி வந்தேன் சாரி பெரியம்மா” என அவள் தேம்பிட,
“ஆமா சித்தப்பா, உலகத்துலேயே இல்லாத சித்தப்பா பெரிய இவன்னு நெனைப்பா அவனுக்கு, ச்சீ தள்ளி போ சனியனே” என அவள் திரும்பவும் கத்த,
அங்கே வந்து விட்டிருந்த முல்லைக்கு அவளின் பேச்சு கோபத்தை வரவழைக்க
“ப்ச் ஏங்க, குழந்தை தெரியாம தான வந்து மோதிட்டா அதுக்கு இப்புடியா ஹார்ஸா பிகேவ் பண்ணுவீங்க பாருங்க அவ அழறா” என முல்லை குழந்தையை நெருங்க
ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஸ்ருதி,
“ஏய் யாரு நீ? நான் திட்டுவேன் அடிப்பேன் என்ன வேணும்னாலும் செய்வேன் அதை கேட்க நீ யாருடி” என அவள் வார்த்தைகளை விட,
“ஸ்ருதி!” என அதட்டியவாறு பிரகாஷ் வர உடன் கதிரழகனும் ஸ்ருதியை எரிக்கும் பார்வையுடன் வந்தான்.
“ஹாலோ மரியாதையா பேசுங்க ‘டி’ போட்டு பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் ” என முல்லை எகிற,
“என்னடி பண்ணுவ” என அடங்காமல் ஸ்ருதி அப்போதும் துள்ள,
முல்லையோ ஸ்ருதியை தீவிரமாக முறைத்தாள் “இன்னொரு தடவை என்னை ‘டி’ சொன்னா பல்லை உடைச்சிடுவேன் ஜாக்கிரதை ” என்றவள் ரேஷ்மியையும் உடன் அழைத்து கொண்டு செல்ல முயல,
“ஏய் எவ்வளவு தைரியம் உனக்கு என் பல்லை உடைப்பியா எல்லாம் இதோ இங்கே நிக்கிற இவளால வந்தது. உன்னால நான் கண்ட கண்ட நாய்ங்க கிட்டயும் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கு” என்றிட
“டேய் பிரகாஷ் அவ்வளவு தான் மரியாதை உன் பொண்டாட்டிக்கு தேவையில்லாம வார்த்தையை விட்டா பதிலுக்கு நானும் வார்த்தைகளை விட வேண்டியதா இருக்கும்” என கதிரழகன் எகிற,
“ஓஹோ விடுறது தானே உன் வேலையே, என் தங்கச்சி சுரபிய வேண்டாம்னு தான விட்ட, உனக்கு விடுறது என்ன புதுசா?” என ஸ்ருதி நக்கலடிக்க,
பதிலுக்கு பேச வாய் திறந்தவன் குழந்தை இருப்பதை கண்டு “தேன்முல்லை பாப்பாவ உள்ளே கூட்டிட்டு போ” என்றவன் அவள் சென்றதும்,
“ஆமா எனக்கு விடுறது புதுசு இல்லாதான், ஆனா உங்க தங்கச்சிக்கு என்னை விடுற ஐடியா எல்லாம் இல்லை போலயே அதான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்ட அழகுலயே தெரியுதே உங்க தொங்கச்சியோட ஐடியா!” என பதிலுக்கு நக்கலாக இவன் உரைக்க,
“ஓஹோ நீ திமிரெடுத்து விவாகரத்து பண்ணா, என் தங்கச்சி உன்கிட்ட வந்து கெஞ்சுவான்னு நெனச்சியோ? உன்னை விட நல்லவனத்தான் என் தங்கச்சி கல்யாணம் பண்ணிருக்கா உன்னை நெனைச்சுகிட்டு இருக்க அவ என்ன முட்டாளா?”
“உங்க தங்கச்சி முட்டாளுன்னு சொன்னா குழந்தை கூட நம்பாது” என்றவனிற்கு சுரபி போட்டு வைத்திருந்த திட்டம் எல்லாம் நினைவு வர தனக்குள் இறுகியவன் பின்,
முல்லை அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டவன்
“ஆமா ஆமா ரொம்ப நல்லவன்தான், உங்க தங்கச்சியோட இன்னாள் புருஷன். எவ்வளவு நல்லவன்னா கட்டுன பொண்டாட்டியையும் பெத்த பிள்ளையையும் அம்போன்னு விட்டுட்டு வர்ற அளவுக்கே நல்லவன்” என நக்கலாக சிரித்து விட்டு அவன் சென்று விட,
ஸ்ருதியின் முகம் கருத்து சிறுத்து விட்டது.
“ஸ்ருதி போ உள்ள இதுக்கு மேல பேசின ஓங்கி அறைஞ்சிடுவேன் போ” என பிரகாஷ் கத்த,
“ஆமா எல்லாம் அவன் இஷ்டம் தான் இங்க” என அதற்கும் ஒரு கத்து கத்தியவள் அறைக்குள் சென்று விட,
பிரகாஷ் கதிரவனை தேடி சென்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வீட்லயே ஒரு வில்லங்கத்தை வச்சிருக்காங்க போல … அதான் கதிர் போய் மாட்டிக்கிட்டானா … கதிர் கோபத்துல கூட தகாத வார்தைகள் பேச மாட்டேங்கிறான் … அவனை போய் பழசை பேசி காயப்படுத்த நினைச்சா எப்படி …
😍😍😍😍கதிரும் லேசுப்பட்டவன் இல்லை சிஸ்
பேசி புலம்புவதால் மட்டும் எல்லாம் மாறிவிட போகின்றதா என்ன? கண்டவர்களுக்காக நமது மனநிலையை ஏன் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறாள் தேன்முல்லை.
அம்மாவிற்கு புலம்பி தீர்ப்பதனில் மனம் ஆறுதல் அடைந்து அமைதியுரும் என்றால் செய்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டாள்.
மன்னிப்பை யாசிக்க கதிருக்காக காத்திருக்கின்றாளா! 😍😍
யார் இந்த புது வரவு? சுரபியின் அக்கா கதிரின் அண்ணியா?
எடுத்தெறிந்து பேசுவதில் வல்லவராக இருக்கின்றார். அடிப்படை மரியாதை மனிதாபிமானம் எதுவும் இல்லை போல்.
சுரபியோட அக்கா அவ மாதிரயோ தான் இருப்பா 😐😐😐😍😍தாங்கள் யூ சிஸ்