Loading

அன்று

அந்தி மாலை செம்மஞ்சள் கலந்த வானம்,மேகம் தான் வரைந்த கோலத்தில்

எத்தனையோ சித்திரங்கள், ஆகாய வாசல் மூடும் தருணமது, காரிருள் மேகங்கள் புடைசுழ வருகை தந்து, ஆதவன் அவனைத் தன்னிலை மறக்கச் செய்ய, செவ்வான சித்திரமாய்க் காட்சி தந்தது அந்த அழகிய மாலை பொழுது.

கண்ணாடி நூலகத்தினுள் அமர்ந்திருந்த அழகிய தேவதை பெண்ணோ, புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள், அவ்வப்போது தன் நண்பன் கார்த்திக் வருகிறானா என்பதைக் கண்ணாடி வழி பார்த்து உறுதி செய்துக்கொண்டாள் அகரநதி. புத்தகம் படிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த செயல். அப்படி தான் அன்றும் அவளுக்கு பிடித்த த்ரில்லர் நாவலை புரட்டிக் கொண்டிருந்தாள்.

 அவ்வப்போது கார்த்தியை தேடிக் கொண்டிருந்த விழிகள். இப்போது கதையின் சுவாரஸ்யத்தில் முழுவதுமாய் படித்துக்கொண்டிருந்த புத்தக வரிகளில் முழ்கி போயிருந்தாள் பெண்ணவள்.

 அந்தச் சமயம் பார்த்து சில மாணவர்கள் கும்பலாய் நூலகத்தின் வெளியே நடந்து போவதை கவனித்தாள், சிலரோ திடுதிடுமென ஓடினார்கள். அதைப் பார்த்து பதறியவள், வெளியில் எதோ பிரச்சனை நடப்பதாய் உணர்ந்து, அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, நூலகத்தின் வாயில் நோக்கி ஓடி வந்தவள் தடுத்தது ஒரு குரல்.

“ஏம்மா புக்கை என்ட்ரி போட்டு எடுத்திட்டு போங்க” என அங்கிருந்த நூலகர் அறிவுறுத்த, அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவள். படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் அடையாளமாய் மயிலிறகை வைத்தாள்.

“அய்யோ மறந்து எடுத்துட்டேன்” எனப் புத்தகத்தைத் தன் அடையாள அட்டையைக் கொடுத்துப் பதிவு செய்தவள் உடனடியாய், புத்தகத்தைத் தன் பைக்குள் போட்ட படி. அங்கிருந்த நூலகரிடம் விசாரித்தாள்.

“வெளியே எதாவது பிரச்சனையா சார்? கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் வேகமா ஓடிப் போனாங்க” எனக் கேட்டவளை முறைத்த நூலகர்.

“நான் எதையும் பார்கலையே மா. காலேஜ்க்கு வந்தால் படிக்கிற வேலையை மட்டும் பாருமா” என நூலகர் எச்சரிக்கையாக சொன்னதைக் கூட காதில் வாங்காது,

மாணவர்கள் ஓடிச் சென்ற திசை நோக்கி விரைந்தாள் அதி. அங்கே அவள் எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் இருக்க, என்ன நடக்கிறது என்று புரியாமல் பின்தொடர்ந்து சென்றாள் அகரநதி.

திடு திடுமென இன்னும் வேகமெடுத்து ஓடியவர்கள் நூலகத்தை ஒட்டிய சந்துக்குள் போக,

“எதுக்குப் பசங்க எல்லாரும் ரெஸ்டிரிக்டட் ஏரியா சைட் போறாங்க” எனக் கேள்வி தாங்கிய விழியுடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளை இடித்துக்கொண்டு சில பெண்களும் அவளை முந்தி தடை செய்யபட்ட பகுதியில் செல்வதைப் பார்த்து அவளுக்கு வினோதமாய் இருந்தது. உடனே ஒரு பெண்ணைத் தடுத்து நிறுத்தியவள்,

“எல்லாரும் எங்க போறீங்க” எனக் கேட்டாள் அதி.

“நீயும் வரணுமா வா.?” என அதியின் கைகளை இறுக பற்றிக்கொண்டு சென்றாள் அந்தப் புதியவள்.

“ஏய் கைய விடு, என்ன நடக்குது இங்க.?” புரியாது கேட்டாள் அதி.

“ஏய் நீ என்ன இப்படி வர்ற துப்பட்டாவை முகத்தில போட்டு மறைச்சிக்கோ அது தான் இங்கே ரூல்ஸ்” எனப் புதியவள் அறிவுறுத்தினாள் அவள் சொன்னதைப் போல் செய்தவள், அனைவரையும் பின்தொடர்ந்து சென்ற போது அவள் கண்ட காட்சியில் அவளுக்கு இதயமே உறைந்துவிடும் போல் இருந்தது. அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. இதெப்படி இங்கே நடக்கிறது நடுங்கி போனாள் அகரநதி.

“திஸ் இஸ் நாட் ரைட்” அவளின் இதழ்கள் மெல்ல முனங்கியது.

**************

மீண்டும் அதே காபி ஷாப், நால்வரும் தங்களுக்குப் பிடித்ததை வாங்கி மேஜை மேல் வைத்தபடி, யார் தான் பேச்சை துவங்குவார்கள் என ஒருவர் மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் எல்லாரும் அமைதியாக இருப்பீங்க.?” கோபமாய்க் கேட்டாள் அதி.

“கதையை நீ ஃப்ர்ஸ்ட்டு ஸ்டார்ட் பண்ணேன்டி அப்பறம் நாங்க ஒவ்வொருத்தரா சொல்றோம்” என நெளிந்தாள் நிஹா.

“அப்போ உன்கிட்ட கதையில்லை.?” கோபமாய் ஏறிட்டாள் அதி.

“இருக்கு ஆனா இல்லை” அவள் சொன்ன பாணியில் கார்த்திக்கும் மலரும் சிரித்துவிட்டனர்.

“இங்கே பாருடி அதி யார வேணும்னாலும் சிரிச்சுக்கட்டும் இந்த லவ் பேர்ட்ஸை கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுடி அதி, கூடவே இருந்திட்டு ஒரு வார்த்தை சொன்னாளா.? மலர் மேல நான் ரொம்பவே கோபமா இருக்கேன்” என நிஹா படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.

“நிஹா என்கிட்ட பேசமாட்டியா டி.?”

“யூ ப்ளடி கமிடட், கமிடட்கிட்டாலம் இந்தச் சிங்கள் குயின் பேசுறதா இல்லை, பேசணும்னா அப்பாயின்மென்ட வாங்கணும் சிங்கிள்னா அவ்ளோ சாதாரணமா போச்சா உங்களுக்கெல்லாம், எங்களை மாதிரி சிங்களா இருந்தா தான் எங்க கஸ்டம் தெரியும்” எனப் புலம்பி தள்ளிக்கொண்டிருந்தவளின் கைபற்றிய மலர்,

“உனக்குன்னு ஒரு மொரட்டு சிங்கிள் வருவான்டி, அவனையே லவ் பண்ணிக்கோ” என மலர் சிரித்தபடி சொல்ல,

“மேடம் மூஞ்சி என்ன இன்னைக்கி பளபளக்குது, நேத்து ஃப்யூஸ் போன சீரோ வாட்ஸ் பல்பு மாதிரி இருந்துச்சு, கார்த்திக் அப்படி என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தானோ” என அவளை வம்பிழுத்தாள் நிஹா.

“ஏய் நிஹா கொஞ்சம் சும்மா இருடி” என மலர் வெட்கம் கொண்டாள்.

“இப்போ இங்கே என்ன நடக்குது, கதையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணாமல் என்னடி பண்ணிட்டு இருக்கீங்க, ஏன்டி என் உயிரை வாங்குறீங்க.?” எனக் கோபமாய் கத்தினாள் அகரநதி.

“இதோ பாருடா மேடம் மட்டும் வெட்கபட்டதே இல்லை பாரு, தீரா பேரை சொன்னாலே மிதந்துகிட்டு கனவுலகத்துக்குப் போறவ தானடி நீ. என்ன நடக்குதுன்னு நீயெல்லாம் கேட்கலாமா? நியாயமா சொல்லு? ” என நிஹா அதியையும் சீண்டினாள். அதே சமயம் கார்த்திக்கும் மலரும் வேறு பிரபஞ்சத்திற்கே பயணத்தைத் துவங்கியிருந்தனர்.

“அய்யோ உங்களால வச்சிகிட்டு நான் என்னனு ஷார்ட் பிலிம் எடுக்கப் போறேனோ” தலையில் அடித்துக்கொண்டாள் அதி.

“இங்கே பாரு அதி முதலில் இந்த காதல் பறவைகளை தனி தனியா உட்கார சொல்லு அப்போ தான் ஸ்க்ரிப்ட் யோசிக்கவே முடியும்” என்றாள் நிஹா.

“பொறாமையில் பொங்காதே டீ நிஹா” எனக் கோபமாய் வேறு நாற்காலியை பிடித்து அமர்ந்தாள் மலர்.

“ஹே மலர்” என ஏக்கமாய் கார்த்தி மலரை ஏறிட்டான்.

“அய்யோ கடவுளே! டேய் கார்த்தி போதும்டா” என அதி கெஞ்சாத குறையாய் கேட்டபின்.

“சாரி சாரி அதி!! ஓகே நான் என்னோட ஸ்கிரிப்ட்ட சொல்லவா” ஆர்வமாய்க் கார்த்திக் கேட்டான்,

“சொல்லுடா சொல்லி தொலையும் ” எனச் சொன்னவள் அனைவரையும் அமைதியாய் இருக்கும்படி ஒற்றை விரலை இதழ் மேல் வைத்துக் காண்பிக்க, அனைவரும் கார்த்திக் சொன்ன கதையைக் கேட்க ஆரம்பித்தனர்.

“மொத்தம் நாலு ஆர்ட்டிஸ்ட் தான், அம்மா, அப்பா, இரண்டு பொண்ணுங்க”

“ஓகே பேமிலி ஸ்டோரியா.?” நிஹா கேட்டாள்,

“இல்லை க்ரைம் ஸ்டோரி”

“வாவ் மேல சொல்லுடா.?” என ஆர்வமானாள் அதி.

“அந்தக் குடும்பத்துல இருக்க மூத்த பொண்ணு ஒரு கொலை பண்ணிருது, அதை மறைக்கக் குடும்பமே போராடுறாங்க அவ்ளோ தான் கதை, ஒரு போலீஸ் ஆஃபிசர் அட் பண்ணிக்கலாம், ஷூட்டிங் வீட்டுகுள்ளயே வச்சு முடிச்சரலாம்” எனச் சொன்னவன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் காலை ஆட்டியபடி,

“எப்படி ஏன் கதை.?” எனக் கார்த்திக் கெத்தாய் கேட்க,

“அப்போ நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு சார் தூங்கலை” அதி தலைசாய்த்து கேட்டாள்

“ஆஃப் கோர்ஸ் அதி, கதைக்காக எவ்ளோ யோசிச்சிட்டு இருந்தேன் தெரியுமா.?”

“அவன் பத்தரை மணிக்கு தூங்கலைன்னு உனக்கு எப்படி டீ தெரியும்” நிஹா துரிதமாய்க் கேட்டாள்.

“ஏன்னா நானும் தூங்கலை, டிவில பாபநாசம் படம் போட்டிருந்தாங்க அதைப் பார்த்திட்டு இருந்தேன்” எனச் சொன்னவள் கார்த்திக்கை பார்த்து முறைத்தாள்.

“அய்யயோ கண்டுபிடிச்சுட்டாளே, இப்போ என்ன பண்ணலாம்” எனத் தனக்குள் பேசிக்கொண்டிருந்தவன்.

“அதி நான் வேணும்னா வேற கதை சொல்லவா.?”

“அடி வாங்க போற கார்த்தி” எனத் திட்டியவள்.

“ஏய் மலர்,நிஹா, நீங்களாவது உருப்படியா எதாவது வச்சிருக்கிங்களா.? இல்லை கார்த்திக் கதை தானா.?”

“அதி கோவிச்சுகாத, நம்ம ஏன் கார்த்தி லவ் ஸ்டோரிய எடுக்கக் கூடாது” நிஹா துறு துறு விழியை உருட்டிய படி கேட்க,

“இதுகெல்லாம் நான் ஒத்துக் மாட்டேன், அப்போ காப்பி ரைட்ஸ் எங்களுக்குக் கொடுக்கணும்” என மலரும் இணைந்துகொள்ள, அகரநதிக்கோ தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

“இப்போ யாருகிட்டையும் உருப்படியா ஸ்கிர்ப்ட்டோ கதையோ இல்லை, என்கிட்ட ஒன்னு இருக்குப் பட் நீங்க அக்செப்ட் பண்ணுவீங்களான்னு தான் தெரியலை.?” எனக் கேள்வியாய் மூவரின் முகத்தையும் பார்த்தாள் அதி.

“சென்சிட்டிவ் டாபிக்காடி.?” மலர் கேட்டாள்.

“இல்லைடி பட் கொஞ்சம் நம்ம ரிஸ்க் எடுக்க வேண்டியதா இருக்கும்”

“அப்படி என்னடி அதி ரிஸ்க்” கார்த்திக் உடனே பதறினான். அதன் பின் அதி கதையைச் சொல்லி முடித்தாள். மூவரின் விழிகளும் அதிர்ச்சியைத் தொட்டு மீண்டது.

“ஆத்தி இப்படியொரு கதையா.?” மலர் அதிசயித்துப் போனாள்.

“கதை ஒகே, தான் பக்கா சோஷியல் மெசேஜ் எல்லாம் ஓகே, ஆனா பயமா இருக்குடி” நிஹா சற்று பின் வாங்கினாள்.

“அதி ரிஸ்க் எடுக்க வேண்டாம், இதோட இந்த டாப்பிக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிரு, இதுக்கு ஹீரோவா யாரைடி பிடிக்குறது, இதோட விட்டுரு” என எச்சரித்தான் கார்த்திக்.

“இந்தக் கதைக்கு ஹீரோவா எனக்கு அகிலன் தான் வேணும்” என அழுத்தமாய்ச் சொன்னாள் அகரநதி, அவள் விழிகளில் எதையோ சாதித்த உணர்வு தெரிந்தது,

“இந்தக் கதைக்கு நாங்க எல்லாரும் நோ சொன்னா.? என்ன பண்ணுவ அதி” கோபமாய்ச் சாடினான் கார்த்திக்.

“ஏய் கார்த்தி!! ஏன்டா இப்படி சொல்லுற??” அதி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்

“நீ கதை சொன்ன வரைக்கும் ஓகே. அகிலன் தான் ஹீரோன்னு சொல்றீயே அங்க தான் இடிக்குது. ஏற்கனவே நமக்கும் அவனுக்கும் பிரச்சனை போயிட்டு இருக்கு. இது சரியில்லை அதி.” என எச்சரிக்கையாக சொன்னான் கார்த்திக்

“அதெல்லாம் சரியாக வரும் அகிலன் கிட்ட கால் ஷீட் வாங்குறது என்னோட பொறுப்பு” என அவள் என்ன தான் சமாதானம் சொன்னாலும் கார்த்தியோ யோசனையாய் அகரநதியை பார்த்தான்.

“அதி இந்த கதையை எப்படி பிடிச்ச” மீண்டும் கேள்வியை தொடுக்க,

“அது வந்து, இது என்னோட சின்ன கற்பனைடா” எனச் சமாளிப்பாய் சொல்லி நகர்ந்தவளை பார்த்தான். அவளிடம் பதற்றம் அப்பட்டமாய் தெரிந்தது.

“பொய் சொல்லாதே அதி”

“பொய்யெல்லாம் இல்லைடா, டைம் ஆயிடுச்சு நான் கிளம்பறேன்” எனச் சொன்னவள்,

“பை மலர்! பை நிஹா” என விடைப்பெற்றுக் கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அந்த காலேஜ் குள்ள அப்படி என்ன தான் நடக்குது … இன்னிக்கு தீரா வை காணோம் …

  2. கதை கேட்டா படத்த பார்த்திட்டு வந்து ஒருத்தன் கதை சொல்றான், இன்னொருத்தி அவ காதல் கதைக்கு ராயல்டி கேட்கறா.

    கல்லூரியில் நடக்கும் தவறான செயலை மையப்படுத்தி அதற்கு காரணமானவனையே நாயகனாக காட்சிபடுத்த இருக்கின்றாள் அகர்.

    என்ன வில்லங்கத்தை இழுத்து வர போகின்றாளோ.