Loading

காதல் – 19

அஸ்வதியும் விஹானும் தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டனர் …….

ஒரு காட்டிற்கு அருகில் அந்த  தண்ணீரின் வேகம் குறைந்தது , விஹான் மயங்கி இருந்த அஸ்வதியை எழுப்பி அந்த காட்டில் இருந்த வீட்டின் கதவைத் தட்டி இருவரும் உதவி கேட்டனர்……

 

அந்தப் பெண்மணி ஹிந்தியில் பேச அவருடன் விஹானும் ஹிந்தியில் பேசி கொண்டு இருந்தான்……

 

விஹான் இவங்க நம்மளுக்கு உதவி செய்வாங்களா?

 

அஸ்வதி அவ்வாறு தமிழில் கேட்கவும் , அந்தப் பெண்மணி தலையில் போட்டிருந்த முக்காடை எடுத்துவிட்டு அஸ்வதியை கட்டி அணைத்துக் கொண்டார்…..

 

நீங்க ரெண்டு பேரும் தமிழா?      நா நீங்க ஹிந்தில பேசுறீங்க ஹிந்திக்காரங்கன்னு நினைச்சிட்டேன்…….                வாங்க வாங்க வீட்டுக்குள்ள வாங்க என்று அந்த பெண் இருவரையும் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்……

 

விஷ்வா எங்க இருக்கீங்க?சீக்கிரம் வாங்க நம்ம வீட்டுக்கு ஒரு தமிழ்க்காரங்க வந்துருக்காங்க பாரு….

 

அந்தப் பெண் அழைத்த விஷ்வா என்றவன் தலையில் தலைப்பாகையோடு கையில் மன்வெட்டியுடன் வந்தான்….

 

அனன்யா யாரும்மா இவங்க?எப்படி இவங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்க?                                          நா நம்ம வீட்டு முன்னால தான நின்னுட்டு இருக்குறேன், இவங்க எப்படி  என் கன்னுல படாம வந்தாங்க?

 

இவங்க ரெண்டு பேரும் பின் வாசல் வழியா வந்தாங்க… இவங்க திரிவேணி சங்கமத்துக்கு புனித நீராட வந்துருக்காங்க , இவங்க குளிக்கிற சமயத்துல தண்ணி வேகமாக அடிச்சிட்டு வந்து இவங்கள இங்க விட்டுருச்சு…..

 

அச்சோ ரெண்டு பேரும் ரொம்ப டயர்டா இருப்பீங்க உள்ள வாங்க சார் , வாங்கம்மா வீட்டுக்குள்ள என்று விஷ்வா இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர்…..

 

நீங்க எவ்ளோ நேரம் இந்த ஈர டிரஸ்சோட இருப்பீங்க?என்னோட டிரஸ போட்டுக்குரீங்களா?

 

அஸ்வதி சரி என்று தலையை  அசைக்கவும் , அனன்யா அஸ்வதியை அந்த  கூரை வீட்டில் உடை மாற்றுவதற்காக போடப்பட்டிருந்த மறைப்பிற்கு  பின்னால் அழைத்துச் சென்றாள்…..

 

இதுல என்னோட டிரஸ் இருக்குது உங்களுக்கு எந்த டிரஸ் வேணாலும் எடுத்து போட்டுக்கோங்க…..

 

ரொம்ப தேங்க்ஸ் அனன்யா…..

 

பரவால்ல இருக்கட்டும் ……    ஆமா உங்க பேர் என்ன?          நீங்க உங்க பேர சொல்லவே இல்ல?

 

நீங்க கேட்கவே இல்லை….

 

அட ஆமால்ல….                                நா ரொம்ப நாள் கழிச்சு ஒரு தமிழ் பேசுறவங்கள பாத்து ரொம்ப சந்தோஷமாயிட்டேன் அதான் உங்க பேர கேட்க மறந்துட்டேன் , சரி இப்ப சொல்லுங்க உங்க பேர் என்ன?

 

என்னோட பேரு அஸ்வதி….

 

அஸ்வதி ரொம்ப நல்ல பேரு…..    நீங்க இங்க டிரஸ் மாத்திட்டு வாங்க உங்களுக்கு நா போய் சூடா குடிக்கிறதுக்கு எதாவது செஞ்சு வைக்கிறேன் என்று அனன்யா சென்று விட்டாள்…..

 

அங்கே இருந்த ஒரு பச்சை நிற சுடிதாரை அணிந்து கொண்டு அஸ்வதி வந்தாள்…..

 

விஹான் தரையில் அமர்ந்து கொண்டு விஷ்வாவோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்…..

 

அஸ்வதியை அந்த பச்சை நிற சுடிதாரில் பார்த்ததும் அவனுக்கு அவள் முன்பை விட மிகவும் அழகாக தெரிந்தாள்…..

 

அஸ்வதி விஹான் அருகில் போய் அமர்ந்தாள் ……

 

வணக்கம்  அஸ்வதி இப்போ உங்களை பத்தி தான் உங்க வீட்டுக்காரங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்…..

 

வீட்டுக்காரங்களா என்று யோசித்தபடி அஸ்வதி விஹானை பார்த்தாள் , அவன் குறும்பு மின்னும் கண்களோடு அஸ்வதியை பார்த்து கண்ணடித்தான்…..

 

அதில் அஸ்வதி இரண்டு கன்னங்களும் செக்க செவேல் என்று சிவந்துவிட்டது….

 

இந்தாங்க  அஸ்வதி சூடா டீ இருக்கு குடிங்க என்று இரண்டு கோப்பை நிறைய தேநீரை அஸ்வதியிடமும் விஹானிடமும் கொடுத்தாள் அனன்யா….

 

அனன்யா கொடுத்த அந்த தேநீர் அந்த குளிருக்கு இருவருக்கும் மிகவும்  இதமாகவும்,  சுவையாகவும் இருந்தது……

 

ஆமா அனன்யா இது எந்த ஊரு?இந்த இடத்துல நீங்க மட்டும் ஏன் தனியா இருக்கீங்க?                    இந்த இடத்துல உள்ள  காட்டுக்குள்ள உங்க  வீடு மட்டும் தான் இருக்குது ஏன்?

 

அஸ்வதியின் இந்த கேள்வியை கேட்டு விஷ்வாவும் அனன்யாவும் சிரித்து விட்டனர்……

 

ஏன் சிரிக்கிறீங்க என்னோட அஸ்வதி சரியான கேள்வி தானே கேட்டா?

 

உங்களோட அஸ்வதி சரியான கேள்வி தான் கேட்டுருக்காங்க விஹான்……

 

சரிங்க அப்போ பதில் சொல்லுங்க  அனன்யா,            இது எந்த ஊரு?                          இந்த இடத்தை விட்டு சிட்டிக்கு எப்படி வெளியே போறது?

 

இப்ப நம்ம இருக்குற இடம் பேரு சிம்மிலிபால் , ஒடிசா டிஸ்ட்ரிக்ட்ல இருக்குது நீங்க இங்க இருந்து ஒரு ரெண்டு மணி நேரம் காட்டு வழியாக நடந்து போனீங்கன்னா சிட்டி ரோடு வந்துரும் அங்கிருந்து நீங்க ஏதாவது ஒரு காரை இல்ல பஸ்ல லிப்ட் கேட்டு நீங்க பஸ் ஸ்டாப்புக்கு ஆர் இரயில்வே ஸ்டேஷன் போகணும்…..

 

ரொம்ப நன்றி விஷ்வா…..

 

பரவால்ல இருக்கட்டும் விஹான் …..

 

அனன்யா விஷ்வா உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒன்னு கேட்கலாமா?

 

தாரலாமா கேளுங்க அஸ்வதி ….

 

ஆமா நீங்க ஏன் இந்த வீட்டில் தனியா இருக்கிறீங்க?        அதுவும் இந்த காட்டுக்கு மத்தியில?

அஸ்வதியின் கேள்விக்கு அனன்யா தங்கள் வாழ்வில் நடந்த கதையை  கூற ஆரம்பித்தாள்……

 

எனக்கும் விஷ்வாவுக்கும் சொந்த ஊர் திருவண்ணாமலை , என்னோட அப்பா ஒரு பெரிய அரசியல்வாதி ….               என்னோட ஃபேமிலி பெரிய கூட்டு குடும்பம்,                        ஆனா விஷ்வாவுக்கு அவங்க அம்மா மட்டும்தான் ,            நானும் விஷ்வாவும் காலேஜ்ல ஒன்னா படிச்சோம்  , எனக்கு விஷ்வாவ ரொம்ப பிடிச்சு போயிடுச்சு ரெண்டு பேரும் லவ் பன்னோம் ஆனா எங்க அப்பாவுக்கு எங்க லவ் மேட்டர் தெரிஞ்சு அவரோட கௌரவம் போயிரும் அப்படின்னு எங்க ரெண்டு பேரயும் சேத்துக் கொல்ல பிளான் பண்ணாரு அதான் நாங்க தப்பிச்சி இங்க ஓடி வந்துட்டோம் ரெண்டு வருஷமா நாங்க  ரெண்டு பேரும் இங்க  தனியாக வாழ்ந்துட்டு இருக்கோம் என்று அனன்யா அவர்களின் காதல் கதையை கூறினாள்…..

 

உங்க குழந்தைகள எங்க அனன்யா?

 

அஸ்வதியின் அந்த  கேள்வியில் அனன்யா விஷ்வாவை பார்த்தாள் விஷ்வா அனன்யாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்…….

 

நா எதுவும் தப்பா கேட்டுட்டேனா?                      ரெண்டு பேரும் இப்படி  லுக்கு விடுறீங்க?

 

அஸ்வதி எங்களுக்கு குழந்தை வேணாம்ன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்பா…..

 

ஏன் அப்படி?

 

நானும் விஷ்வாவும் எங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு நிறைய ஊர் ஊரா நாடோடி மாதிரி திரிஞ்சிட்டு இருந்தோம் நாங்க ரெண்டு பேரும் நிறைய ஊருக்கு போய் இருக்குறோம் ஆனா எங்கேயும் எங்களுக்கு  மன நிம்மதி கிடைக்கல….    ஆனா இந்த காட்டுல ஒரு நாள் வந்து தங்கினோம் அந்த ஒரு நாள் எங்களுக்கு இந்த காடு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு , அதான் இங்கே குடிசை போட்டு இயற்கையோட இயற்கையா வாழ்ந்துட்டு இருக்குறோம்…..

 

நீங்க நல்லா தானே இருக்கீங்க ஏன் குழந்தை பெத்துக்கல?

 

அஸ்வதி எங்களுக்கு இந்த காட்டு வாழ்கை ரொம்ப புடிச்சு போயிடுச்சு.. இப்ப எங்களுக்கு குழந்தை பிறந்துச்சு அப்படின்னா அந்த குழந்தைகளுக்கு இந்த காட்டிலேயே காலம் முழுக்க இருக்க பிடிக்காது அவங்களுக்கு வெளியே சிட்டில போய் படிக்கணும் அப்படின்னு ஆசை வரும்,  வெளிநாட்டுக்கு போகணும்னு ஆசை வரும் , அப்புறம் எங்க குழந்தைங்க எங்களை விட்டுட்டு போயிடுவாங்க அதனால நம்ம  குழந்தைகளே நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க அப்படின்னு தோணும்  , அப்புறம் எங்களுக்கு எங்களுடைய மன நிம்மதியே போயிடும் அதான்  எங்களுக்கு குழந்தையே வேணாம் அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டோம்……

 

அனன்யா நா உங்களோட  பர்சனல் லைஃப்க்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காதீங்க ……

எனக்கு என்ன தோணுது அப்படின்னா…………………………… நீங்க ஒரு குழந்தை பெத்துக்கணும்னு எனக்கு தோணுது ஏன்னா நீங்க முன்னாடியே சொன்னீங்க நீங்க நிறைய ஊருக்கு போய் சுத்திட்டு வந்தீங்க எங்கேயுமே உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கல அதனால இந்த காட்டுல வந்து உங்களோட நிம்மதிய தேடிக்கிட்டீங்க ஆனா உங்க குழந்தைங்க இந்த பூமிக்கே இன்னும் வரல …….                அவங்க என்ன பண்ணனும் ஏது பண்ணனும் அப்படின்னு சொல்லி  முடிவு பண்றதுக்கு நீங்க யாரு ?                                   இப்ப நீங்க குழந்தை பெத்துக்கிட்டீங்க அப்படின்னா அந்த குழந்தைங்க வாழ்க்கை முழுக்க உங்க கூடவே இருக்க முடியாது….                                    உங்க குழந்தைகளுக்கு நிறைய ஊரை சுத்தி காட்டுங்க நிறைய மொழி கத்து கொடுங்க , நிறைய விஷயம் கத்துக்கட்டும் , அவங்களுக்கு எங்க மன நிம்மதி கிடைக்குதோ அவங்க அங்க போகட்டும் ….                          இதனாலதான் குழந்தை பெத்துக்க   வேணா அப்படின்னு சொல்றதை உங்க அப்பா அம்மா சொல்லி நினைச்சி இருந்தா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா அப்பாவுக்கு பிறந்திருக்கவே மாட்டீங்க…..

 

அஸ்வதி கூறியதை கேட்ட விஷ்வா மற்றும் அனன்யா பேசாமல் இருந்தனர்…..

 

ரொம்ப சாரி சாரி கைஸ் நான் ஏதோ ஒரு ஃபுலோவுல சொல்லிட்டேன் தப்பா நினைச்சுக்காதீங்க சாரி…..

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல அஸ்வதி எங்களுக்கு இந்த மாதிரி புத்திமாதி சொல்ல யாருமே இல்லப்பா அதான் நீங்க இப்படி சொன்ன உடனே எங்களுக்கு இப்படியும் யோசிக்கலாம் அப்படின்னு தோணுது……

 

சரி நீங்க நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இங்க உங்க வீட்டுல தூங்கிக்கலாமா ரொம்ப டயர்டா இருக்குது…..

 

அய்யோ அஸ்வதி இதெல்லாம் கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க , இது உங்க வீடு மாதிரி நல்லா தூங்குங்க ரெண்டு பேரும் என்று ஒரு பனை ஓலையால் வேயப்பட்ட பாயை விரித்து அதன் மேல் ஒரு போர்வையை விரித்து இரு தலகாணிகளை போட்டு அஸ்வதியையும் விஹானையும் தூங்க சொன்னாள் அனன்யா…..

 

அனன்யா மற்றும் விஷ்வா வீட்டில் வெளியில் உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டு அஸ்வதி கூறியதை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தார்கள்…….

அவ்வாறு யோசித்ததில் ஒரு நல்ல முடிவும் எடுத்து விட்டனர்….

 

அஸ்வதி மற்றும் விஹான் அந்தப் பனை ஓலைப்பாயில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்…..

 

அஸ்வதி உனக்கு குழந்தைகன்னா ரொம்ப பிடிக்குமா?                           அனன்யா கிட்ட குழந்தை பெத்துக்கிறது பத்தி அவ்வளவு பேசிட்டு இருந்த?

 

ஆமா விஹான் எனக்கு குழந்தைகன்னா ரொம்ப பிடிக்கும் நானும் துவாயியும் சின்ன புள்ளையா இருக்கும்போது , ஆசிரமத்துல சின்ன சின்ன குழந்தைகள் இருந்தா அவங்கள நாங்க தான் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா பத்திரமா பாத்துப்போம் அந்த குழந்தைகளுக்கு பால் பாட்டில்ல பால் கொடுக்குறது,  அந்த குழந்தைகளுக்கு பவுடர் போட்டு விடுறது அப்படின்னு அந்த குழந்தைகளை ரொம்ப நல்லா பார்த்துப்போம்……

 

சரி அப்போ உனக்கு எத்தனை குழந்தை வேணும்?

 

எனக்கு ஒரு ரெண்டு குழந்தைங்க  போதும் விஹான் என்று அவள் கூறிவிட்டு அவனை பார்த்தாள் அவன் குறும்பு மின்னும் கண்களோடு அவள் புறமா ஒரு பக்கமாக அவள் புறம் திரும்பி படுத்து கொண்டு தலயில் கையை முட்டு கொடுத்தவாறு அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான் , அப்பொழுது தான் அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிய அஸ்வதி வெக்கம் மேலிட அவனை கட்டி அணைத்து கொண்டாள்……

 

ஆமா அஸ்வி உங்கிட்ட ஒன்னு கேக்கனும்……

 

கேளுங்க விஹான் …..

 

உன்னோட அம்மாவும் இல்ல இல்ல அந்த சுலோச்சனா ஆன்ட்டியும் அந்த அனந்தியும் உன்ன இவ்வளவு கொடுமை படுத்துறாங்கல்ல நீ ஏன்  தேவராஜ் அப்பாகிட்ட சொல்லவே இல்ல?               அவங்க கிட்ட சொன்னா அவங்க வந்து அந்த சுலோச்சனா ஆண்டியையும் அந்த அனந்தியையும்  கண்டிச்சிட்டு உன்ன நல்லா பார்த்துட்டு இருந்திருப்பாங்கல்ல?

 

நா தேவராஜ் அப்பா கிட்ட சொல்லாம இருந்துருப்பேன்னு நினைக்கிறீங்களா நீங்க?

 

அப்போ தேவராஜ்  அங்கிள்க்கு உன்ன அவங்க கொடுமை படுத்துறது தெரியுமா?

 

ஒரு தடவை நான் செவந்த் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருக்குற சமயத்துல லீலா பாட்டி என்னோட கால்ல சூடு வச்சுட்டாங்க அத அப்பாக்கிட்ட போய் சொல்ல அழுதுட்டே ஓடிப் போனேன் அப்போ….

 

அஸ்வதி விஹானின் நெஞ்சினில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டாள்…..

 

அவள் ஏதோ வருத்தப்படும் படி ஒன்றை சொல்லப் போகிறாள் என்று  உணர்ந்த விஹான் அவளை இன்னும் இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டே ஒன்னும் இல்ல  அஸ்வதி என்று  அவள் தலையை மெதுவாக வருடிவிட்டான்…..

 

அவனின் அணைப்பில்  ஆசுவாசம் அடைந்த அஸ்வதி  அன்று நடந்ததை கூற ஆரம்பித்தாள்…..

 

அப்பா கிட்ட அழுதுட்டே ஓடி போனேன் ….

 

அப்பா….

அப்பா…

அப்பா …

 

என்ன என்று தேவராஜ் கோபமாக கேட்டார்….

 

அப்பா அந்த லீலா பாட்டி என்னோட கால்ல சூடு வச்சுட்டாங்க என்று அவள் அழுதாள்…..

 

நீ சொல்லுறத கேட்டு எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு  அஸ்வதி…                          டெய்லியுமா உனக்கு அவங்க சூடு வைக்கிறாங்களா?          இல்ல நீயே எங்கயாவது போய் நீயே உனக்கு சூடு வச்சிட்டு வந்து என்கிட்ட வந்து காட்டிட்டு   உன்ன நா ரொம்ப அப்பாவியா பாக்கனும்ன்னு நடிக்கிறியா ?எனக்கு உன் மேல ரொம்ப சந்தேகமா இருக்கு அஸ்வதி , டெய்லி எப்படி உனக்கு அவங்க சூடு வைப்பாங்க? அவங்க என்ன லூசா?                          உனக்கு எதும் காசு வேணுமா?இல்ல வேற ஏதாவது வேணுமா?

 

இவ்வாறு தேவராஜ் கேட்கவும் சூடு பட்ட வலியை விட அவர் கூறிய வார்த்தைகளின் வலி அவளின் நெஞ்சை கீறியது…..

 

இந்த விஷயத்தை அஸ்வதி விஹானிடம் கூறும் போது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…….

 

இங்கு இவர்கள் இப்படி இருக்க கங்கையில் அஸ்வதி மற்றும்  விஹானை மீட்பு குழுவினர் தேடிக் கொண்டிருந்தனர்…..

 

தொடரும்…….

 

அவர்களின் காதல் காட்சிகள் தொடரும்…..

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. தேவராஜ் ஏன் இத்தனை அலட்சியமாக நடந்து கொண்டுள்ளார்.

    இப்படிபட்ட மனிதர்கள் இருக்கும் வீட்டினில் எதற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

    அப்பாவிற்காக என்றாலும் அவரும் கூட இத்தனை அலட்சிய போக்கை அல்லவா காட்டியுள்ளார்.

    1. Author

      Ini adhuku answer kidaikum pa… Thodarndhu padinga 😇

  2. விஹான் நல்ல கணவனாக கிடைக்கப் போகிறான்

    1. Author

      Kandipa….. Thank you for your valuable comments 😇

  3. அப்போ தேவா நல்லவர் இல்லையா …

    1. Author

      Thodarndhu padinga 😇 thank you for your valuable comments 😇