
அத்தியாயம் – 25
நிலா, “உங்களுக்கு என்ன தான் பிரச்சனை. நான் தான் என் மனசில் இருக்கிறதை எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன்னே. அப்புறம் ஏன் இப்படி என்னை தொந்தரவு பண்றீங்க” என்றாள்.
விக்ரம், “ஏன் இவ்வளவு கோபம் நீ கண்டிப்பா வேலைக்கு போயே ஆகணும்னு சொன்ன.
“நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலையே இந்த கம்பெனியில் வேலை பாருன்னு தான் சொல்கிறேன்” என்றான்.
நிலா, “நான் வேலைக்கு போகாம கூட இருப்பேன். ஆனா உங்க கம்பெனியில் வேலை பார்க்க மாட்டேன்” என்று அங்கிருந்து கோபமாக சென்று விட்டாள்.
விக்ரம் மனதுக்குள் என் மேல் இவ்ளோ கோபமா இருக்க. ஆனா உன்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் இவ்ளோ கோபமும் காதலா மாறும் அந்த மொமென்ட்காக தான் நான் காத்துகிட்டு இருக்கேன்.
பிறகு விக்ரம் வீட்டிற்கு கிளம்பினான். நிலா விக்ரம் வீட்டை சென்றடைந்தால்.
உள்ளே செல்லும் பொழுது ஜெயலட்சுமி அமர்ந்து ராஜலட்சுமியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
ஜெயலட்சுமி, நிலாவை பார்த்தவுடன் எழுந்து அவள் அருகில் சென்று, “நிலா எப்படி மா இருக்க?” என்று அவளை கட்டி அனைத்து கொண்டார்.
பிறகு தலையை தடவி விட்டு கன்னத்தில் கை வைத்த படி, “உன்னை நம்ம வீட்டில் எல்லாரும் ரொம்ப மிஸ் பண்றோம்”.
”அதான் உன்னையும் மாப்பிள்ளையும் விருந்துக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு யோசிச்சு வந்தேன். நீ இல்லாமல் எங்களுக்கு அங்க ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது” என்றார்.
ராஜலட்சுமி, “நிலா நீ ரொம்ப கொடுத்து வச்சவ எல்லார் வீட்டிலும் சித்தி கொடுமை பண்றாங்க அப்படி பண்றாங்க இப்படி பண்றாங்கன்னு ஏதாவது சொல்லுவாங்க”.
“ஆனா உன் சித்தி உன்மேல் எவ்வளோ பாசமா இருக்காங்க” என்றார். நிலா லேசாக சிரித்துக் கொண்டு தலையை மட்டும் அசைத்தாள்.
ராஜலட்சுமி, “சரி நீ விக்ரமுக்கு போன் போட்டு சீக்கிரமா வர சொல்லு உன் சித்தி உங்க ரெண்டு பேரையும் தான் விருந்துக்கு கூப்பிட வந்திருக்காங்க” என்றார்.
நிலா திருதிரு என விழித்துக் கொண்டு அய்யய்யோ நம்ப கிட்ட அவங்க போன் நம்பரும் இல்லை போனும் இல்லையே என்று யோசித்தால்.
ஜெயலட்சுமி, “என்ன மா போன் பண்ணு. இவ்ளோ பெரிய வீட்ல உனக்கு ஒரு போன் கூட வாங்கி தரலையா என்ன” என்றார்.
நிலா எதுவும் கூறாமல் அமைதியாகவே நின்றிருந்தாள். விக்ரம் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தவன் ஜெயலட்சுமியை பார்த்து, “என்ன ஆன்ட்டி இந்த பக்கம்?” என்றான்.
ராஜலட்சுமி, “உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு கூப்பிடுறதுக்காக வந்து இருக்காங்கபா” என்றார்.
விக்ரம், “அப்படியா அதுக்காகவா வந்திங்க. நான் கூட நீங்க நிலா கிட்ட கையெழுத்து வாங்க வந்திங்கனு நினைச்சேன்” என்றான்.
ராஜலட்சுமி, “என்ன கையெழுத்து?” என்றார். ஜெயலட்சுமி, “முந்திக்கொண்டு அது ஒன்னும் இல்ல சும்மா இப்படி தான் மாப்ளை ஏதாச்சும் கிண்டல் பண்ணுவாரு” என்றார்.
ராஜலட்சுமி சிரித்துக் கொண்டே, “இவங்க நிலாவை ரொம்ப மிஸ் பண்றாங்களாம்”.
“நிலா இல்லாம இவங்க வீட்ல எந்த வேலையும் நடக்கவே மாட்டேங்குதாம்” என்றார்.
விக்ரம், “ஆமா நான் தான் பார்த்திருக்கேன்னே நிலா இல்லைன்னா இவங்க வீட்ல வேலையே நடக்காது தான்” என்றான்.
ஜெயலட்சுமி இதுக்கு மேல் இங்கு இருக்க கூடாது என்று நினைத்து, “சரி அதை விடுங்க. நீங்க கண்டிப்பா நிலாவை கூட்டிட்டு நாளைக்கே வீட்டுக்கு வரணும் தங்கர மாதிரி வரனும்” என்று அழைத்துவிட்டு சென்றார்.
*******************************
சக்தி வழக்கம் போல் குடித்துவிட்டு இரவில் தான் வீடு திரும்பினான். சுஜிதா இவனை எப்படி நம்ப வழிக்கு கொண்டு வரதுனே தெரியலையே.
தினமும் இப்படி குடிச்சிட்டு வருகிறான். நம்ப கிட்ட பேசவும் மாட்டுக் கிரான் இவனை முதலில் பிரெண்டா என்னை ஏத்துக்க வைக்கனும்.
அதுக்கு ஏதாச்சும் பண்ணனும் என்று யோசித்துக் கொண்டே தூங்கினாள்.
சக்தி காலையில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான். அவன் நாசிக்கு பலவிதமான வாசனைகள் வந்து கொண்டிருந்தது.
அந்த வாசனையில் தானாக எழுந்து வெளியே வந்து பார்த்தான். ஜெயலட்சுமி பரபரப்பாக சிக்கன் வறுத்தீங்களா, மீன் வறுத்தீங்களா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
சக்தி, “என்னக்கா இன்னைக்கு காலையிலேயே சமையல் எல்லாம் பலமா இருக்கு” என்றான்.
ஜெயலட்சுமி, “ஆமாம் டா மாப்பிள்ளை வரார் இல்ல” என்றாள். சக்தி, “மாப்பிள்ளையா?” என்று யோசனையாக “சௌமியா சின்ன பொண்ணுக்கா இப்போ தான் படிச்சுக்கிட்டு இருக்கா அவளுக்கு எதுக்கு அதுக்குள்ள கல்யாணம்” என்றான்.
ஜெயலட்சுமி, “அட பைத்தியக்காரனே என் பொண்ணுக்கு எதுக்குடா நான் அதுக்குள்ள கல்யாணம் பண்றேன்”.
“நான் நிலாவையும், விக்ரம் மாப்பிள்ளையும் சொன்னேன்டா. இன்னைக்கு அவங்கள விருந்துக்கு வர சொல்லி இருக்கேன்” என்றாள்.
சக்தி, “எப்போத்தில் இருந்து நிலா உனக்கு ஆசை பொண்ணா மாருனா” என்றான்.
ஜெயலட்சுமி, “நிலாவை விருந்துக்கு அழைக்க அவங்க வீட்டுக்கு பிடிக்காமல் தான் போனேன் டா”.
“ஆனால், அவங்க வீட்டை பார்த்ததும் என் மனசை மாத்திகிட்டேன் நம்ப நிலா சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு”.
“அப்படியே நிலாவை கைக்குள்ள வச்சுகிட்டு கொஞ்சம் பணத்தையும் விக்ரம் கிட்ட இருந்து அடிச்சுடலாம்” என்றாள்.
சக்தி கோவமாக, “காலையிலேயே என்னை கடுப்பேத்தாத” என்று அங்கிருந்து சென்று விட்டான்.
பிறகு விக்ரம் மற்றும் நிலா இருவரும் விருந்துக்காக ஜெயலட்சுமி வீட்டை சென்றடைந்தார்கள்.
கார் ஹாரன் சவுண்டை கேட்டு ஜெயலட்சுமி ஆரத்தி தட்டுடன் கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு சென்றார்.
காரில் இருந்து இருவரும் இறங்கி வந்தவுடன் கண்ணம்மா அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார்.
பிறகு ஜெயலட்சுமி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அமருமாறு கூறினார்.
ஜெயலட்சுமி, “ஏய் சுஜிதா ஜூஸ் எடுத்துட்டு வா நிலாவுக்கு பிடிச்ச மாம்பழ ஜூஸ் இருக்கு பாரு அதை எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தார்.
நிலா ஒன்றும் புரியாமல் சித்தி என்ன இப்போ எல்லாம் நம்ம கிட்ட நல்ல விதமாக நடந்துக் கொள்கிறார் என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
பிறகு ஜூஸ் குடித்து முடித்தவுடன் நிலா முகத்தில் அங்காங்கே வேர்த்து முத்துக்கள் நிற்பதை பார்த்த விக்ரம் அதை துடைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது சரியாக அரையிலிருந்து வெளியே வந்த சக்தி அந்த காட்சியை பார்த்து கோபமாக திரும்பி அறைக்கே சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து ஜெயலட்சுமி, “நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை”.
“கொஞ்சம் நேரம் ஓய்வு எடுங்கள்” என்று விட்டு “ஏய் சுஜிதா அந்த அறைக்கு இவங்களை கூட்டிட்டு போ” என்றாள்.
சுஜிதா அவர்களை அழைத்துக் கொண்டு சென்று அறையை காட்டினாள்.
விக்ரம் உள்ளே சென்றவுடன், நிலா, “ஹே சுஜி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் இங்க வா” என்று கொல்லைப்புறம் கூட்டிக் கொண்டு சென்றாள்.
சுஜிதா, “நிலா நீ எப்படி இருக்க? நல்லா இருக்கியா?” என்றாள். நிலா, “அதுவா இப்போ முக்கியம். நீ எப்படி இருக்க? இவங்க எல்லாம் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்துறாங்களா?”.
“எனக்கு தெரியும் எங்க சித்தியும் சரி சக்தி மாமாவும் சரி எல்லாரும் ஒரே மாதிரி தான் நடந்துக்குவாங்க”.
“சரி உனக்கும் சக்தி மாமாவுக்கும் எப்படி டி கல்யாணம் ஆச்சு? உன்னை போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாறா?”.
“நீ தான் ரொம்ப தைரியமா பேசுவியே ஊர்க்காரங்க கிட்ட இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலைன்னு சொல்லி நீயே நிறுத்தி இருக்கலாம் இல்ல என்னதான் நடந்துச்சு சொல்லுடி” என்றாள்.
சக்தி, “சுஜி பேபி நீ இங்கதான் இருக்கியா. உன்னை காணோம்னு நான் வீடு முழுக்க தேடிட்டு வரேன்”.
“நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க வா ரூமுக்கு போகலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.
சுஜிதா எதுவும் பதில் பேசாமல் அவன் பின்னே சென்றாள்.
நேராக அரைக்கு சென்ற சக்தி, “ஏன் அந்த நிலா கிட்ட எல்லாம் பேசுற? இனிமே நீ அவள் கிட்ட எல்லாம் பேசாதே. நீயும் நானும் சந்தோஷமா இருக்கிறத பார்த்து அந்த நிலா கஷ்டப்படனும் சரியா” என்றான்.
சுஜிதா முறைத்து பார்த்தவள், “நான் எதுக்கு நடிக்கணும்?” என்றாள். சக்தி, “நான் சொல்றதை நீ செய்து தான் ஆகனும் அப்போ தான் அந்த நிலா கஷ்டப்படுவா” என்றான்.
சுஜிதா எதையோ யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள், “நான் எதுக்கு உங்களுக்காக இதை பண்ணனும் நீங்க யாரு எனக்கு?” என்றாள்.
சக்தி சிறிது நேரம் யோசித்தவன், “நம்ப ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ்னு வச்சுக்கலாம்” என்றான்.
சுஜிதா மனதுக்குள் நான் நெனச்சது இப்போ உங்க வாயிலிருந்தே வந்திருச்சு இதுக்கு அப்புறம் பாருங்க உங்களை எப்படி கரெக்ட் பண்றேன்னு என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டு இருந்தாள். சக்தி, “சொல்லு உனக்கு ஓகே தானே” என்றான்.
சுஜிதா, “இந்த பிரெண்டுனு வச்சிக்கிறது எல்லாம் வேண்டாம் எனக்கு நீங்க மனசுல இருந்து பிரண்டுனு சொல்லனும். உங்களுக்கு சரினா சொல்லுங்க அதுக்கு அப்புறம் பார்ப்போம்”.
“அதுவும் பிரெண்டா இருந்தா நான் சொல்றதை நீங்க கேட்கணும். நான் சொல்றதை நீங்க நம்பணும். நீங்கள் எது சொன்னாலும் நானும் நம்புவேன்” என்றாள்.
சக்தி அவளை ஒரு மாதிரியாக பார்த்து, ரொம்ப ஓவரா தான் இவ பண்றா. ஆனா எனக்கு இப்போ வேறு வழியும் இல்லையே என்று நினைத்துக் கொண்டு சரி ஓகே பிரண்ட்ஸ் என்றான்.
சுஜிதா முதல் முறையாக இவன் மனதில் இருந்து தன்னை ஒரு உறவாக ஏற்றுக் கொண்டான் என்ற சந்தோஷத்தில் இவளும் பிரெண்ட் என்று கையை நீட்டினாள்.
சக்தி மெதுவாக அவனும் கையை நீட்டினான் இருவரும் கைகுலுக்கி கொண்டார்கள். இரவு நேரம் அனைவரும் உணவுகளை அருந்தி விட்டு தூங்குவதற்காக சென்றார்கள்.
ஜெயலட்சுமி பாசமாக பேசுவது போல், “நிலா ஒரு நிமிஷம் இங்க வாமா” என்றாள்.
நிலா, “சொல்லுங்க சித்தி” என்றாள். ஜெயலட்சுமி ஓர் வெள்ளைப் பேப்பரை கையில் வைத்துக் கொண்டு, “இதில் உன் கையெழுத்து வேண்டும் அதை போட்டு கொடுத்துட்டு நீ போய் தூங்கு” என்றாள்.
நிலா ஏன் எதற்கு என்று எந்த ஒரு கேள்வியும் கேட்காமல், “சரி சித்தி குடுங்க போட்டு தரேன்” என்றாள்.
ஜெயலட்சுமி நீ இப்படி தான் சொல்லுவ என்று எனக்கு தான் தெரியுமே என்று நினைத்துக் கொண்டு, “உன் கையெழுத்து மட்டும் போதாது உன் வீட்டுக்காரர் கையெழுத்தும் தேவைப்படும்”.
“நீ உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி கையெழுத்து வாங்கி தரியா?” என்றாள். நிலா, “ஏன் சித்தி அவர் கையெழுத்து?” என்றாள் தயங்கியபடி.
ஜெயலட்சுமி, “உன் அப்பா சில கடன்களில் மாட்டிக் கொண்டார். நம்ப வீட்டு சொத்துக்கள் மொத்தமும் உன் பெயரில் தான் இருக்கு”.
“அதில் கொஞ்சம் விற்று கடன் அடைக்கலாம் என்று பார்க்கிறோம். அதுக்கு உன் கையெழுத்தும் உன் வீட்டுக்காரர் கையெழுத்தும் தேவைப்படுது” என்றார்.
நிலா சரி என்று அதை வாங்க சென்றாள். விக்ரம், இவ்வளவு நேரம் இவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை ஓரமாக நின்று கேட்டுக் கொண்டு இருந்தவன், “நிலா” என்று குரல் கொடுத்தபடி அங்கு வந்தான்.
விக்ரம், “இங்க என்ன பண்ணிட்டு இருக்க? என் கூட கொஞ்சம் வா” என்றான். நிலா அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
விக்ரம் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ரம் கையெழுத்து போடலைன்னா ஜெயா வில்லி வேலையை காட்ட ஆரம்பிக்குமே …