
பாகம் – 22
ஒரு நாள் நிலா மத்திய நேரத்தில் எப்போதும் போல் துருவ் காக காத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அன்று துருவ் நிலாவை பார்க்க வரவே இல்லை.
மாலை நேரத்தில் ஸ்கூல் முடிந்து நிலா வீட்டிற்கு சோகமாக சென்றாள். அப்போது ஸ்கூல் வாசலில் துருவ் நின்று இருந்தான்.
நிலா, துருவ் ஐ பார்த்தவுடன் ஓடி சென்று, “நீ ஏன் இன்னைக்கு மத்தியம் என்னை பார்க்க வரவே இல்ல. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ண தெரியுமா” என்றாள்.
துருவ், “எங்க அப்பாவுக்கு திடீர்னு பிசினஸ் விஷயமா ஆஸ்திரேலியா போக வேண்டியதா ஆகிடுச்சு இதுக்கு அப்புறமும் நான் இந்த ஊர்ல இருக்க மாட்டேன்”.
“நாங்க குடும்பத்தோட ஆஸ்திரேலிய க்கு போறோம் அம்மா இப்போதான் சொன்னாங்க எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க நான் உன்னை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு ஓடி வந்தேன்” என்றான்.
நிலா, சோகமான முகத்துடன், “அப்போ இனிமே என்னை பார்க்க நீ வர மாட்டியா?” என்றாள்.
துருவ், “அப்படிலாம் இல்ல இப்போ நம்ம சின்ன பசங்களா இருக்கோம் இன்னும் கொஞ்சம் நாள்ல ரொம்ப பெரிய பசங்களா ஆகிடுவோம்”.
“அப்போ நான் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன். அதுக்கு அப்புறம் நம்ம ரெண்டு பேரும் எப்பயும் பிரியாம ஒண்ணாவே இருக்கலாம் சரியா”.
“நீ எதுக்கும் கவலைப்படாத ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் படிச்சிட்டு நீ வேலைக்கு போகணும் சரியா அதுக்கு அப்புறம் தான் நம்ப ரெண்டு பேரும் மீட் பண்ணுவோம்” என்று கூறினான்.
நிலா, “என்னோட அம்மா போனதுக்கு அப்புறம் நீ மட்டும் தான் எனக்கு ஒரே ஒரு ஃபிரண்ட் இப்போ நீயும் போறியா. நான் தான் அப்பவே சொன்னேன்ல என்கூட பிரண்டா இருந்தா எல்லாருமே என்னை விட்டு போயிடுவாங்கன்னு”.
“இப்போ பாரு முதல்ல அம்மா ரொம்ப தூரம் போயிட்டாங்க இன்னும் வரவே இல்ல. இப்போ நீயும் போற அப்போ நீயும் வர மாட்ட எனக்கு தெரியும்” என்றாள்.
துருவ் ஒரு பேப்பரில் செல்போன் நம்பரை எழுதி நிலா கையில் கொடுத்து “இது எங்க வீட்டு போன் நம்பர் இந்த நம்பருக்கு போன் பண்ணு நான் எடுத்துப் பேசுவேன் சரியா”.
“உனக்கு எப்போ தோணுதோ எனக்கு போன் பண்ணு. நான் கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன். சரி அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்துகிட்டு இருக்காங்க நான் கிளம்புறேன் பாய்” என்று ஓடிவிட்டான்.
நிலா அவன் சென்ற பின் இவர்கள் வழக்கமாக சந்திக்கும் அந்த மரத்தடியில் தனியாக அமர்ந்து அந்த நம்பரையே பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து நிலா வீட்டிற்கு சென்றாள். அங்கு உறவினர்கள் எல்லாம் கூடி இருந்தார்கள்.
அதில் ஒருவர், “சுந்தரம் இப்படியே இருந்தா உன் வாழ்க்கைக்கு ஒரு துணை வேண்டாமா? நீ எப்ப பாத்தாலும் பிசினஸ் பிசினஸ்னு எங்கேயாவது சுத்திட்டே இருக்க”.
“இத்தனை நாள் உன் பொண்டாட்டி இருந்தா நிலாவ பாத்துக்கிட்டா இதுக்கு அப்புறம் நிலாவை யார் பார்த்துக்கறது?” என்றார்.
சுந்தரம், “இல்ல அது எப்படி சரியா வரும்” என்று இழுத்தார். கூட்டத்தில் ஒருவர், “உனக்கு என்ன சின்ன வயசு தானே பா. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ அப்பதான் நிலாவ உன்னால் ஒழுங்கா பார்த்துக்க முடியும்”.
“அது மட்டும் இல்ல நீ வச்சிருக்கது ஒரே ஒரு பொம்பள பிள்ளை. இன்னும் கொஞ்சம் காலம் போச்சுன்னா கல்யாணம் பண்ணி நிலாவையும் அனுப்பி வச்சிட்டு நீ என்ன தனியா உட்கார்ந்து இருப்பியா வயசான காலத்துல உனக்குன்னு ஒரு துணை வேணும்ல” என்றார்.
சுந்தரம் நிலாவை அழைத்து, “அம்மாடி நிலா அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கேட்டார்.
நிலா, “வேண்டாம் பா.. அம்மா திரும்பி வருவேன்னு என்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க. நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா அம்மா வந்து பார்க்கும்போது வருத்தப்படுவாங்கல்ல” என்றாள்.
சுந்தரம், “இல்லம்மா உன்னோட அம்மா சாமி கிட்ட போய்ட்டா. அப்பாவும் வேலையா அப்போ அப்போ வெளியூருக்கு போறது வர்றதுன்னு இருக்கேன். உன்ன சரியா பார்த்துக்கவே முடியலை”.
“அதனால் புது அம்மா வந்தா உன்னை தினமும் ஸ்கூலுக்கு கிளப்பி கூட்டிட்டு போவாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க, உன்னை குளிக்க வைப்பாங்க இது எல்லாத்துக்கும் உனக்கு புது அம்மா இருந்தா நல்லா பாத்துப்பாங்க இல்ல”.
“அதனால் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கவா?. நீ சரி சொன்னா மட்டும் தான் அப்பா புது அம்மாவை கூட்டிட்டு வருவேன். அவங்க கூட நீ ஜாலியா இருக்கலாம்” என்றான். நிலா, “சரி“ என்று தலை அசைத்தாள்.
மறுநாள் நிலா துருவ் நம்பருக்கு போன் செய்து பார்த்தாள். துருவ் ஆர்வமாக எடுத்து “ஹலோ நிலா நீ தானே” என்றான்.
நிலா சிரித்துக் கொண்டே, “ஆமா எப்படி கண்டுபிடிச்ச” என்றாள். துருவ், “எனக்கு தெரியும். நீயா தான் இருப்பனு” என்று இருவரும் சிரித்துக் கொண்டு பேசினார்கள்.
நிலா, “உன்கிட்ட ஒன்னு சொல்லவா எனக்கு புது அம்மா வர போறாங்க. அப்பா தான் சொன்னாங்க” என்றாள்.
துருவ், “அப்படியா அப்போ உனக்கு ஜாலி தான். உனக்கு இன்னொரு பிரிண்ட் கிடைக்கப் போறாங்க”.
“ஆனா நீ எனக்கு தினமும் இதேபோல் போன் எல்லாம் பண்ணனும். புது பிரென்ட் வந்ததும் என்னை நீ மறந்துட கூடாது” என்றான்.
நிலா, “நீ எனக்கு ஸ்பெஷல் பிரென்ட் டா எப்பயுமே” என்றாள். இப்படியே தினமும் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே பிரென்ஷிப்பை நீடித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் நாட்கள் கழித்து சுந்தரத்திற்கு திருமணம் ஆகி ஜெயலட்சுமி இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்.
நிலா ஓடிச் சென்று, “புது அம்மா இனிமே நீங்க தான் என்னை பார்த்துப்பீங்கன்னு அப்பா சொன்னாங்க” என்றாள்.
மறுநாள் நிலா ஜெயலட்சுமியிடம் சென்று, “புது அம்மா எனக்கு ஸ்கூலுக்கு மணியாகிடுச்சு என்னை குளிக்க வைக்கலையா?” என்றாள்.
ஜெயலட்சுமி அவளைப் பார்த்து முறைத்து கொண்டு “இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கியே உனக்கு குளிக்க கூட தெரியாதா” என்றாள்.
நிலா, “அப்பா தான் சொன்னாங்க புது அம்மா வந்தா உனக்கு எல்லாமே பாண்ணுவாங்கன்னு“ என்றாள்.
ஜெயலட்சுமி கோவமாக, “முதலில் புது அம்மான்னு கூப்பிடுவதை நிறுத்து” என்றாள். நிலா, “உங்களை வேறு எப்படி கூப்பிடுறது?” என்றாள்.
ஜெயலட்சுமி, “சித்தின்னு கூப்பிடு புரிஞ்சுதா. நான் என்ன இந்த வீட்டுக்கு வேலைக்காரியா? உனக்கு சோறு ஊட்டி குளிக்க வைக்கிறதுக்கு ச்சீ… இங்கு இருந்து போ” என்றாள்.
நிலா அழுதுக் கொண்டே எப்பொழுதும் போல் தானாகவே தயாராகி ஸ்கூலுக்கு சென்றாள்.
ஸ்கூல் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் ஜெயலட்சுமி நிலாவை அனைத்து வீட்டு வேலைகளும் வாங்குவாள்.
ஒரு நாள் இரவில் தூங்குவதற்கு முன்பு துருவுக்கு போன் செய்தாள். நிலா, “ஹலோ துருவ் எப்படி இருக்க?” என்றாள்.
துருவ் கோவமாக, “ஏன் இவ்வளவு நாள் போன் பண்ணவே இல்ல. புது பிரென்ட் வந்ததும் என்னை மறந்துட்டியா” என்றான்.
நிலா, “இல்ல டா சித்தி நிறைய வேலை கொடுத்தாங்க எல்லாத்தையும் செஞ்சுட்டு வரதுக்கு லேட்டாகிடுச்சு” என்றாள்.
துருவ், “சித்தியா அது யாரு?“ என்றான். நிலா, “அது வந்து” என்று நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.
துருவ், “அச்சச்சோ நீ ஒன்னும் கவலைப்படாதே. நான் சிக்கிறமே பெரிய பையன் ஆகிட்டு வந்து உன்னை அங்க இருந்து கூட்டிட்டு போறேன்“ என்றான்.
நிலா, “அப்பா சொன்னாங்க எனக்கு இவங்க பிரண்ட் மாதிரி இருப்பாங்கன்னு. ஆனா எனக்கு இவங்கள சுத்தமா பிடிக்கல” என்றாள்.
தண்ணி குடிப்பதற்காக அந்த பக்கம் வந்த ஜெயலட்சுமி இரவில் நிலா தனியாக போன் பேசுவதை பார்த்து அங்கேயே நின்று விட்டாள்.
துருவ், “நீ உன் அப்பா கிட்ட சொல்லு நிலா இவங்கள உனக்கு பிடிக்கலை என்று” என்றான்.
நிலா, “சரி நான் காலையில் அப்பா கிட்ட இதை எல்லாம் சொல்லிடுறேன்“ என்றாள்.
ஜெயலட்சுமி அந்த நொடியே நிலாவை பளார் என்று அறைந்து இருந்தாள்.
நிலா அழகும் சத்தம் மட்டுமே துருவுக்கு கேட்டது. அன்று தான் கடைசியாக இருவரும் பேசிக் கொண்டது.
மறுநாள் காலையில் துருவ் சொன்னது போல் நிலா தன் அப்பாவிடம் சென்று, “அப்பா எனக்கு இவங்கள சுத்தமா பிடிக்கவே இல்லை” என்றாள்.
சுந்தரம் தன் மடியில் அவளை அமர வைத்துக் கொண்டு, “ஏன் மா என்னாச்சு?” என்றான்.
அதேசமயம் ஜெயலட்சுமி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. சுந்தரம் நிலாவை அங்கேயே விட்டுவிட்டு, “ஜெயா என்னாச்சு?” என்று ஓடினான்.
அப்போது தான் ஜெயலட்சுமி முதல் முறையாக சங்கீதாவை வயிற்றில் சுமக்க ஆரம்பித்தாள். அந்த செய்தியை கேட்ட சுந்தரம் சந்தோஷமாக இருந்தான்.
மறுநாள் மறுபடியும் நிலா, “அப்பா இவங்க என்னை ரொம்ப வேலை வாங்குறாங்க நீங்க இல்லாத அப்போ” என்றாள். சுந்தரம் எதுவோ புரிவது போல் கோவமாக, “அப்படியா?” என்றான்.
ஜெயலட்சுமி சரியாக அந்த நேரம் சுந்தரம் பக்கத்தில் வந்து, “ரொம்ப முடியலைங்க தலை சுத்துதுங்க” என்று சொல்லி கொண்டே அமர்ந்து, “நிலா கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா மா” என்றாள்.
நிலா, “பாருங்க அப்பா இப்ப கூட என்னை வேலை தான் வாங்குறாங்க” என்றாள்.
சுந்தரம் சிரித்துக் கொண்டே, “நீ இதை தான் சொன்னியா?. நான் கூட என்னமோ ஏதோ நினைச்சுட்டேன்”.
“இதெல்லாம் வேலை கிடையாது மா ஒரு உதவி தானே அவங்களுக்கு உடம்பு முடியல அதனால் தான் உதவி கேட்கிறாங்க”.
“இதெல்லாம் நீ பெருசா ஏன் யோசிக்கிற அவங்க சொல்ற உதவியை செஞ்சு கொடு பாவம் தானே அவங்க. சரி நான் கிளம்புறேன்” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
பிறகு ஜெயலட்சுமி வீட்டில் இருக்கும் செல்போன் நம்பரையும் மாற்றி விட்டாள். துருவ் தினமும் போன் செய்வான்.
ஆனால், அது போகாது ஒரு வாரம் கழித்து நிலா துருவிடம் பேசுவதற்காக தன் பேக்கில் இருந்து அவன் செல்போன் நம்பரை எடுத்து டயல் செய்தாள்.
ரிங் சென்று கொண்டே இருந்தது. துருவ் கடைசி ரிங்கில் எடுத்தவன் “ஹலோ யாரு?” என்றான். நிலா, “நான் தான் நிலா“ என்றாள்.
துருவ், “ஏன் இத்தனை நாளா போன் பண்ணல? நான் போட்டாலும் உனக்கு போகவே மாட்டேங்குது. அன்னைக்கு உன்ன யாரு அடிச்சது?” என்றான்.
நிலா, “ஹலோ துருவ்” என்றாள் அழுகும் குரலில். அதற்குள் ஜெயலட்சுமி அங்கு வந்து அவளை அடித்து போனை தூக்கி போட்டு உடைத்து விட்டாள்.
அவள் கையில் வைத்திருந்த துருவ் நம்பரையும் நெருப்பில் எரித்து விட்டாள். நிலா அன்றுடன் அந்த வீட்டில் ஓர் வேலைக்காரியாக மாறிப் போனாள்.
ஆனால், அவள் மனதில் மட்டும் படித்து வேலைக்கு சென்றால் துருவ் தன்னை பார்க்க கட்டாயம் வருவான் என்று ஆழமாக நம்பினாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சித்தி கொடுமையா … எப்போ துருவ் சொல்ல விக்ரமா மாறினான்