Loading

காதல் – 18

 

சுலோச்சனா மற்றும் அனந்தியின் சூழ்ச்சியால் அஸ்வதி தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டாள், அவளை காப்பாற்றுவதற்காக விஹானும், அந்த வேகமாக பாயும் தண்ணீரில் குதித்து தன்னவளை காப்பாற்ற சென்றான் , காப்பாற்றியும் விட்டான்….

 

எப்போது அஸ்வதி தன்னை தத்து எடுத்து வளர்த்த தாயாரையே ஆன்ட்டி என்று அழைத்தாளோ அப்பொழுதே விஹானுக்கு புரிந்து விட்டது அவள் அவளின் குடும்பத்தாரை எவ்வாறு வெறுக்க ஆரம்பித்து விட்டாள் என்று…..

 

அஸ்வதி கவலைப்படாதம்மா உனக்காக நா இருக்குறேன் …….                                  உன்ன வேண்டாம்ன்னு அவங்க என்ன சொல்லுறது உனக்கு  இனி  அவங்க   வேணாம் …..

 

நீங்க சொல்லுறதுதான் கரெக்ட் எனக்கு அவங்க வேண்டாம்  விஹான் என்று அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்…….

 

சரிடாம்மா நீ இனி அவங்களை பத்தி நினைக்க வேண்டாம் …….                    இப்போ நீ  என்னோட ஹூடிய போட்டுக்கோ,  உன்னோட ஷர்ட் பட்டன் எல்லாம் கிழிஞ்சிருச்சு பாரு எவ்ளோ நேரம் கிழிஞ்ச சட்டையையோட உக்காந்துட்டு இருப்ப?

 

விஹான் அவ்வாறு கூறியதும்  , அப்பொழுது தான்  தன்னுடைய உடையை அவள் கவனித்தாள்….

 

ஆற்றில் அடித்து சென்ற வேகத்தில் அவளின் சிகப்பு நிற ஷர்ட் பட்டன்கள் எல்லாம் கிழிந்து போய் இருந்தது….

 

விஹான் உங்களோட சட்டய நீங்க எங்கிட்ட குடுத்துட்டு நீங்க வெறும் பனியனோட  இருப்பீங்களா?      உங்களுக்கு குளிரும்ல?

 

சட்ட போட்டுட்டு இருந்தாலுமே குளிரத்தான் செய்யும் ,நம்ம ரெண்டு பேரோட சட்டையும் ஈரமா இருக்கு அண்ட் நா ஹூடி உள்ள டிஷர்ட் போட்டுருக்கேன்  சோ பிராப்ளம் இல்ல என்று விஹான் அவனுடைய ஹூடியை கழற்றி அவளிடம் கொடுத்தான் …..

 

அஸ்வி நா திரும்பி நின்னுக்குறேன் நீ உன்னோட ஷர்ட்ட கழட்டிட்டு இந்த ஹுடிய போட்டுக்கோ , ஈரமான டிரஸ் மேலயே இன்னொரு ஈரமான டிரஸ போட்டா ரொம்ப குளிரும் என்று அவன் திரும்பி நின்று கொண்டான் ….

 

அஸ்வதி அவனின் சட்டையை அணிந்து கொண்டாள்….

 

விஹான் என்று அவள் அழைக்கவும் அவன் திரும்பினான்….

 

திரும்பியவனுக்கு சிரிப்பு தாளவில்லை….

 

விஹானின் சட்டை அஸ்வதிக்கு மிகவும் பெரிதாக இருந்தது அவளின் சட்டைக்குள் இரண்டு பேர் போய்விடலாம் போல அவ்வளவு பெரிதாக இருந்தது…..

 

விஹான்  அவளை பார்த்து சிரித்து விட்டான்…..

 

ஏன் சிரிக்கிறீங்க விஹான்?

 

ஒன்னும்மில்ல என்று அவன் அவளின் கைகளை ஒழுங்காக மடக்கி விட்டு அவளின் மடங்கிய சட்டையை ஒழுங்காக எடுத்து விட்டான்…..

 

இப்போ ஓகே….

 

விஹான் இப்ப நம்ம எங்க இருக்குறோம்?இது எந்த இடம்ன்னு உங்களுக்கு தெரியுமா?

 

எனக்கும் இது எந்த இடம்ன்னு தெரியல , கொஞ்ச தூரம் அப்படியே நடந்து போய் பாப்போம் , எதாவது வீடு தெரிஞ்சா ஹெல்ப் கேக்கலாம்….

 

சரி வாங்க போலாம் என்று இருவரும் கைகளை கோர்த்து கொண்டு அந்த அத்துவான காட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்…..

 

இவர்கள் இருவரும் இப்படி இருக்க , அவர்களின் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்….

 

அஸ்வதி விஹான் ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க?                                                  சீக்கிரம் வாங்க எனக்கு பயமா இருக்கு, ரெண்டு பேரும் என்கிட்ட விளையாட தானே செய்றீங்க?

 

சுலோச்சனா ஆன்ட்டி உங்க பொண்ணு தண்ணில  அடிச்சிட்டு போயிட்டு இருக்கா,  நீங்க என்னன்னா அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க?

 

ஹே அனந்தி உன்னோட அக்கா தன்னில அடிச்சிட்டு போறாளேன்னு உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா …..

 

விஹான்னா இவ்வாறு அந்த மனித உருவில் உள்ள மிருகங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்…..

 

பிறகு விஹான்னா தேவராஜிடமும்,  சித்திக்கிடமும் இந்த விஷயத்தை கூற ஓடி சென்றாள்….

 

ஏய் விஹான்னா அங்க எங்க போற இந்த இடம்தான லேடீஸ்க்கு குளிக்குற இடம்?

 

அம்மா , அண்ணனயும் அஸ்வதியையும் தண்ணி அடிச்சிட்டு போயிடுச்சு , அதான் அப்பாக்கிட்டயும் , தேவா அங்கிள்கிட்டயும் சொல்ல போறேன்….

 

என்னது ரெண்டு பேரயும் தண்ணி அடிச்சிட்டு போயிடுச்சா?                        எப்படி இது நடந்துச்சு?                    இவ்வளவு நேரம் எல்லாரும் நல்லா தானடா  இருந்தீங்க ?                                        நா இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டிரஸ் எடுத்துட்டு வரேன்னு சுலோச்சனா கிட்ட சொல்லிட்டு ஜெட்டுக்கு வந்தேன் அதுக்குள்ள எப்படி இப்படி ஆச்சு?

 

அம்மா இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்லம்மா நா போய் அப்பாக்கிட்டயும் , தேவா  அங்கிள்கிட்டயும் சொல்லிட்டு வாரேன் என்றிட்டு விஹான்னா ஓடினாள் , சித்திக் மற்றும் தேவாவை அழைத்தும் வந்து விட்டாள்…..

 

விஹானா அந்த  மஞ்சள் கயிறு பக்கத்துல போக கூடாதுன்னு  உனக்கு தெரியாதா?                                                      அங்க ஆழம் அதிகமா இருக்குமே…..

 

அப்பா அங்க ஆழம் அதிகமா இருக்கும் அப்படின்னு எனக்கு தெரியாதுப்பா சுலோச்சனா ஆன்ட்டி தான் அனந்த்திகிட்ட ஏதோ சொன்னாங்க அதை கேட்டு அனத்தியும்,  அஸ்வதிக்கிட்ட வந்து அந்த கயிறு பக்கத்துல , அங்க  ஒரு பூ இருக்குது அத எடுத்து கொடு அப்படின்னு சொன்னா,  அஸ்வதியும் அந்த பூவ எடுக்க போனா ,ஃபர்ஸ்ட் டைம் போயிட்டு திரும்ப வந்துட்டா அதுக்கப்புறம் இன்னொரு டைம் நா கேட்ட பூ இது இல்ல எனக்கு  வேற பூ வேனும்னு  சொன்னா இவ அதனால திரும்பவும் அஸ்வதி தண்ணிக்குள்ள  இறங்கினா அப்பதான் அவள தண்ணி வேகமா அடிச்சு இழுத்துட்டு போச்சு அவளை காப்பாத்த தான் அண்ணனும் பின்னாலயே போனாங்க……

 

சுலோச்சனா அந்த இடத்துல ஆழம் அதிகமா இருக்கும் அப்படின்னு உனக்கு தெரியாதா?

 

இல்ல அண்ணே நா மறந்துட்டேன்….

 

என்னம்மா நீ இப்ப நம்ம ரெண்டு பிள்ளைகளயும் எப்படி போயிட்டு  தேடுறது?

 

விஹானா கூறியவற்றை கேட்டுக் கொண்டிருந்த தேவாவிற்கு ஏதோ புரிவது போல இருந்தது……

 

சித்திக் மற்றும் பீவி அங்கு அவசர மீட்பு உதவிக்கு இருப்பவர்களை அழைக்க சென்றனர்…..

 

அப்பொழுது தேவராஜ் , சுலோச்சனா  மற்றும் அனந்தியை தனியாக அழைத்துக் கொண்டு சென்றார்….

 

என்னங்க எதுக்கு இப்படி வேகமா ரெண்டு பேரயும் இழுத்துட்டு வரீங்க?

 

நீதான அது?                                              அவங்க ரெண்டு பேரும் தண்ணில விழுந்து , தண்ணி அடிச்சிட்டு போறதுக்கு நீ தானே காரணம்?

 

நா…. நா ……                                                      நாங்க என்ன பண்ணோம்?                    சும்மா எங்க ரெண்டு பேரும் மேல பழிய போடாதீங்க…..

 

சும்மா எல்லாம் உங்க மேல பழி போடல என்கிட்ட ஆதாரம் இருக்கு என்று விஹானா அங்கு வந்தாள்….

 

ஆதாரமா உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?

 

தேவா அங்கிள் இந்த வீடியோவை பாருங்க என்று விஹான் வைத்திருந்த கேமராவில் இருந்து தன்னுடைய போனிற்க்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட சுலோச்சனா மற்றும் அனந்தி,  அஸ்வதியை கொல்ல திட்டம் போட்ட வீடியோவை தேவாவிடம் விஹானா காட்டினாள்……

 

அதைப் பார்த்த தேவாவிற்கு கோபம் தலைக்கேறியது , அந்த கோபத்தில் சுலோச்சனா மற்றும் அனந்த்தியை பளார் பளார் என்று இருவர் கன்னத்திலும் மாறி மாறி அடித்தார்…..

 

நீங்க ரெண்டு பேரும் மனுஷ ஜென்மங்களா ?                                        போயும் போயும் இந்த சொத்துக்காக ரெண்டு உயிரையே கொல்ல துணிஞ்சு இருக்கீங்களே?                                  சுலோச்சனா நீயும் ஒரு அம்மா தானே?நமக்கு குழந்தை இல்லாத சமயத்துல நம்மள முதல் முதலா அம்மா அப்பா அப்படின்னு கூப்பிட்ட குழந்தை அவ அவள கொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு என்று அவர் மீண்டும் சுலோச்சனா கன்னத்தில் அறைந்தார்….

 

தேவா அங்கிள் அவங்களை அடிச்சது போதும்  இப்ப நம்ம எப்படி அண்ணாவயும் அஸ்வதியையும் காப்பாத்தாலாம் அப்படின்னு பாப்போம் என்று  ரிஹானா தேவாவை அழைத்துக் கொண்டு சென்றாள்……

 

அம்மா , அப்பா என்ன இப்படி நம்மள அடிச்சிட்டு போறாங்க?

 

அடிச்சிட்டு போகட்டும்  அனந்தி அப்பாதானே …….                                      இப்போ அந்த அனாதை நாயி அஸ்வதி செத்து போயிட்டா , தேவாவோட சொத்து என் பேர்ல வந்துரும் என்று சுலோச்சனா குரூரமாக சிரித்தார்…..

 

அதற்குள் அங்கு மீட்பு படையினர் வந்து விட்டனர் அஸ்வதி மற்றும் விஹானை தேடும் படலம் ஆரம்பித்தது…..

 

அஸ்வதி மற்றும் விஹான் நீண்ட தூரம் நடந்து கொண்டே இருந்தனர் அவர்களுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடுகளே தென்பட்டது உதவி கேட்க ஒரு வீடும் அங்கு இல்லை…..

 

விஹான் ரொம்ப தூரம் நடந்தது கால் ரொம்ப வலிக்குது என்று அவள் அந்தப் புல் தரையில் அமர்ந்து விட்டாள்…..

 

விஹானும் அவளுடன் தரையிலே அமர்ந்து விட்டான்…..

 

அஸ்வதி  உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?

 

கேளுங்க விஹான்…..

 

எப்பவும் ஏன்  ஜீன்ஸ் அண்ட் ஷர்ட் போட்டுட்டே இருக்க?                                    இந்த சுடி , மாடர்ன் டிரசெல்லாம் போடலாம்ல?

 

அவனின் கேள்வியில் அஸ்வதி சிரித்து விட்டாள்…..

 

ஏம்மா சிரிக்கிற ?                                                 நா எதும் தப்பா கேள்வி  கேட்டுட்டேனா?

 

அய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா,                                                              நா எதுக்கு எப்பவும் ஜீன்ஸ் ஷர்ட் போட்டுட்டே இருக்குறேன் அப்படின்னா….. எங்க அம்மா இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல அந்த சுலோச்சனா ஆன்ட்டி சின்ன வயசுல இருந்து எனக்கு முதுகுல , சட்டை போடுற இடத்துல உள்ள தோள்ல அப்புறம்  என்னோட தொடையில இப்படி சட்டை போட்டா மறைஞ்சிடுற இடத்தில சூடு போடுவாங்க , இப்ப நா சுடி அண்ட் மாடர்ன் டிரஸ் மாதிரி போட்டா என்னோட முதுகுல சூடு வெச்சது அப்படியே தெரியும் அதனாலதான் இப்படி நா கழுத்து வர கவர் பண்ற டிரஸ் போட்டுட்டு இருப்பேன் , யாருக்கும் நா என்னோட காயம் பத்தி பதில் சொல்லிட்டு இருக்க முடியதுல என்று அவள் சிரித்தாள்…..

 

அவள் அவ்வாறு கூறியதை கேட்டு விஹான் அவளை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டான்…..

 

அஸ்வதி இனிமே உன்னோட உடம்புல ஒரு காயம் வர நா விட மாட்டேன்…..

 

எனக்கு தெரியும் என்று அவளும் அவனின் மார்பில் அழகாக முகம் புதைத்துக் கொண்டாள்…..

 

சரி விஹான் கொஞ்சம் தூரம் நடந்து போய் ஏதாவது வீடு தெரியுதான்னு பாப்போம் என்று இருவரும் அந்த காட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்……

 

விஹான் அங்க தூரத்துல பாருங்க ஒரு வீடு தெரியுது ……

 

ஆமா அங்க ஒரு வீடு இருக்குது  வா அங்க யாரும்  இருந்தா அவங்க கிட்ட ஹெல்ப் கேக்கலாம் என்று இருவரும் அந்த வீட்டை நோக்கி நடந்து சென்றனர்……

 

அந்த வீடு தென்னை ஓலைகளாலும் பனை ஓலைகளாலும் வேயய்யப்பட்டிருந்தது…..

 

ஹலோ யாராவது இருக்குறீங்களா?    என்று விஹான் அந்த வீட்டின் கதவை தட்டினான்……

 

அப்பொழுது தலையில் முக்காடு அணிந்த ஒரு பெண் கதவை திறந்தாள்….

 

ஆப் கௌன் ஹை?(யாரு நீங்க?  ஆப்க்கோ கியா சாஹியே?(உங்களுக்கு என்ன வேனும்)

 

என்று அந்த முகத்தை மூடி  முக்காடு போட்டிருந்த பெண் அவர்களிடம் ஹிந்தியில் பேசினார்…..

 

ஹம் கங்கா மே பவித்ர ஸ்னான் கே லியே ஆயே ஹைன் ,  டோ பாணி நே டேசி சே ஹம்மேன் பக்கேர் யான் டக் பவுன்சா டியா ஹை, கியா ஆப் பாட்டா சாக்தே ஹேன் கே யே கவுன் சா ஸ்டான் ஹை ( நாங்க  கங்காவுக்கு புனித நீராட வந்தோம் அப்போ தண்ணி வேகமாக எங்கள அடிச்சுட்டு இங்க வந்துடுச்சு , இது என்ன ஊருண்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா?) என்று விஹான் அந்த பெண்ணிடம் ஹிந்தியில் கேட்டான்….

 

தொடரும்…..

 

அவர்களின் காதல் கணங்கள் தொடருமா???

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. குழந்தை இல்லாதபோது அவர்களது ஏக்கத்தை தீர்த்து வைத்தவள் இப்பொழுது அவள் பெயரில் இருக்கும் சொத்தின் காரணம் வெறுக்கப்படுகிறாள்.

    பெயருக்கு அம்மா என்று இருந்தவரை இனி அப்படி அழைப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டால் அஸ்வதி.

    இனி விஹானின் காதல் மற்றும் அவனது குடும்பத்தார் அளிக்கும் நம்பிக்கையில் தைரியமாக வெளியில் வருவாளா பார்ப்போம்.

    1. Author

      Thodarndhu padinga 😇 thank you for your valuable comments 😇

  2. நல்லா காதல் பண்றாங்க … அடுத்து என்ன ஆகுமோ

    1. Author

      Thodarndhu padichitu therinjikonga…. Thank you for your valuable comments 😇