Loading

காதல் – 17

 

சுலோச்சனா மற்றும் அனந்தி அஸ்வதியை கொல்ல திட்டமிட்டனர் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பது சித்திக்கின் சிறிய கையடக்க கேமராவில் பதிவாகி கொண்டிருந்தது….

 

அஸ்வதி மற்றும் விஹானா கங்கை ஆற்றில் நீராட வந்தனர்……

 

அப்பொழுது அனந்தி அஸ்வதியிடம் பேச வந்தாள்…….

 

ஹே அஸ்வதி எனக்கு ஒரு உதவி செய்வியா என்று முதன் முதலாக அஸ்வதியின் பெயரை அனந்தி அழைத்தாள்…..

 

அனந்தி அஸ்வாவை அழைத்ததும்   அஸ்வதிக்கு அதிர்ச்சி தாளவில்லை , ஏனெனில் அனந்தி பிறந்து இத்தனை வருடத்தில் அவள் ஒரு முறை கூட அஸ்வதியை பெயர் சொல்லிக் கூட அழைத்ததில்லை எப்பொழுதும் ஏய் ஏய்  என்று தான் அழைப்பாள்…..

 

அப்படிப்பட்ட தங்கை தன் பெயரை அழைத்து உதவி கேட்கும் போது பாசம் கொண்ட அக்காவின் மனது இல்லை என்றா மறுக்கும்…..

 

அஸ்வதி சந்தோஷத்தில் விஹானாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளின் காதோரம் மெதுவாக ,  நேத்து விஹான் பேசுனது ஒர்க் அவுட் ஆகுதுப்பா இவங்க விஹான் பேசுனத பாத்து பயந்துட்டாங்க போல என்கிட்ட நல்லபடியா பேசுறாங்க ஜாலியா இருக்கு நான் அனந்திக்கிட்ட போய் என்ன உதவி அப்படின்னு கேட்டுட்டு வரேன் என்றிட்டு அஸ்வதி வேகமாக அவளிடம் ஓடினாள்…..

 

சொல்லு அனந்து என்ன வேணும் உனக்கு?

 

அஸ்வதி அங்கே தூரமா ஒரு மஞ்சள் கயிறு தெரியுதா?

 

ஆமா தெரியுது…..

 

மஞ்ச கயிறு பக்கத்துல நிறைய தாமரைப்பூ போய்  மிதந்துட்டு இருக்குது பாரு…..

 

ஆமா நிறைய தாமரைப்பூ மிதந்துட்டு இருக்குது…..

 

எனக்கு அந்த தாமரை பூ ஒன்னு எடுத்து தருவியா?

உனக்கு தான் நல்லா ஸ்விம்மிங் தெரியும்ல்ல , எனக்கு அந்த தாமரை பூ வேணும் அத எடுத்து கொடேன்…..

 

இவ்வளவுதானா நா உனக்கு எடுத்து தரேன் என்று அனந்தியிடம் கூறிவிட்டு , கீழே அவர்கள் பையில் இருந்த கேமராவை பார்த்த அஸ்வதி அந்த கேமராவை எடுத்து விஹானாவின் கையில் கொடுத்து …..

 

நா நீச்சல் அடிச்சுட்டு போய் அந்த தாமரை பூவை எடுத்துட்டு வரேன் , நீ அத வீடியோ எடு என்று அந்த கேமராவை விஹானாவின் கையில் கொடுத்துவிட்டு அஸ்வதி தாமரை பூவை எடுக்க சென்றாள்…..

 

அஸ்வதியிடம் அனந்தி பேசுவதை தூரத்திலிருந்தே விஹான் பார்த்துக் கொண்டிருந்தான் ….

அவனுக்கு எதுவும் சரியாப்படவில்லை, எதோ தவறாக நடக்க போவது போலவே அவனுக்கு தோன்றியது…..

 

அஸ்வதி தனியாக தண்ணீரில்  இறங்கவும் விஹான் அஸ்வதியிடம் ஓடி வந்தான்…..

 

அஸ்வி நீ மட்டும் தனியா  ஏன் தண்ணியில இறங்குற?                    எல்லாரும் சேர்ந்து குளிக்கலாம்ல?

 

இல்ல விஹான் அனந்தி என்கிட்ட அங்க தூரத்துல ஒரு  தாமரை பூ இருக்கே அந்த தாமரை பூவை எடுத்து தா அப்படின்னு கேட்டா அதான் நா தாமரை பூ எடுக்க போறேன்……

 

நீ இரு இரு நான் போய் எடுத்துட்டு வரேன்…

 

முதல் தடவையா ஆனந்தி என்கிட்ட ஒரு உதவி கேட்டிருக்குறா அதனால நா  செஞ்சு கொடுக்கணும்பா                                           நீங்க இங்கேயே இருங்க , எனக்கு ஸ்விம்மிங் நல்லா வரும், அப்படியே எனக்கு எதுவும் ஆனாலும் நீங்க இருக்கிறீங்கல்ல நீங்க என்ன காப்பாத்திடுவீங்க …..

 

விஹானா வீடியோ எடு என்று கூறிவிட்டு அஸ்வதி தண்ணீரில் நீந்த ஆரம்பித்தாள்…..

 

அவர்கள் அங்கு வந்த சமயம் மதிய நேரம் ஆதலால் அங்கு கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது , அங்கு காவலுக்கு நின்ற போலீசாரும் சாப்பிட சென்று விட்டதால் அந்த மஞ்சள் கயிறு அருகே செல்லக்கூடாது என்று அஸ்வதியை தடுக்க ஆள் இல்லை…..

 

இதைப் பார்த்த சுலோச்சனா மற்றும் அனந்த்திக்கு சந்தோஷம் தாளவில்லை……

 

ஆனால் அவர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் பொருட்டு அஸ்வதி , அனந்தி கேட்ட தாமரை பூவை எடுத்துக்கொண்டு திரும்பியும் வந்துவிட்டாள்…..

 

இதைப் பார்த்த சுலோச்சனா  மற்றும் அனந்திக்கு இவள் திரும்பி வந்துவிட்டாளே என்று கோபம் கரையை கடந்தது…..

 

விஹானா அஸ்வதியை வீடியோ எடுப்பது போல சுலோச்சனா மற்றும் அனந்தி பேசுவதையும் சேர்த்து வீடியோ எடுத்தாள்…..

 

இந்தா அனந்தி நீ கேட்ட தாமரை பூ இப்ப சந்தோஷமா?

 

இது நா கேட்ட தாமரை பூ இல்ல அங்க தூரத்துல இதழ் விரிஞ்சி இருக்குது பார் அந்த தாமரைப்பூ தான் எனக்கு வேணும்…..

 

அஸ்வதி மற்றும் அனந்தி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் விஹானா எடுத்த வீடியோவை விஹான் மற்றும் விஹானா பார்த்துக் கொண்டிருந்தனர் ,

 

அதில் சுலோச்சனா மற்றும் அனந்தி அஸ்வதியை கொல்ல திட்டமிட்டது என எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட்டு நிமிரும் போது அஸ்வதி மீண்டும் தனியாக தண்ணீரில் இறங்கி நீந்தி கொண்டு இருந்தாள்….

 

அஸ்வதி தண்ணீரில் இறங்கியதை பார்த்த விஹான் , அந்த சிறிய கேமராவை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் போட்டுவிட்டு அஸ்வதி பின்னாலே நீந்தி கொண்டு சென்றான்…..

 

அஸ்வதி மீண்டும் அந்த மஞ்சள் கயிறு அருகே சென்று அங்கு மிதந்து கொண்டிருந்த  இதழ் விரிந்த தாமரைப் பூவை எடுத்து கொண்டு திரும்ப நீந்த எத்தணிக்க போகும் சமயத்தில் அந்த தண்ணீர் மிகவும் வேகமாக அடித்து செல்ல ஆரம்பித்தது….

வேகமாக பாயும் அந்த  தண்ணீரை எதிர்த்து அவளால் நீந்தி வர முடியவில்லை , தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்….

 

தூரத்தில் விஹான் அவளை நோக்கி நீந்தி கொண்டு வருவதை பார்த்தவள்….

 

விஹான் நீங்க இங்க  வராதீங்க , தண்ணி ரொம்ப பாஸ்டா போகுது என்னால நீந்த முடியல நீங்க அங்கேயே இருங்க என்று அஸ்வதி கூறிக் கொண்டிருக்கும்போதே அந்த தண்ணீர் அவளை வேகமாக இழுத்துச் சென்றது….

 

அவளை தண்ணீர் இழுத்து செல்வதை பார்த்த  விஹான் அவள் பின்னாலே அத்துணை வேகமாக செல்லும் தண்ணீருக்கு இணையாக நீந்தி கொண்டு சென்றான்…….

 

அவ்வாறு வேகமாக நீந்தியதில் விஹான் அஸ்வியின் கைகளை பிடித்து விட்டான் , அஸ்வதி அதற்கு முன்னரே தண்ணீர் நிறைய குடித்து விட்டதால் மயங்கி விட்டிருந்தாள் , அந்த தண்ணீர் அவளை வேகமாக அடித்து சென்றதால் அவளின் ஷர்ட் பட்டன்கள் கிழிந்து போய் இருந்தது……

 

விஹான் அஸ்வதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டபடியே தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப மிதந்து கொண்டிருந்தான்…..

 

நீண்ட நேரம் , நீண்ட தூரம் அவர்கள் இருவரையும் அடித்து இழுத்து சென்ற அந்த தண்ணீரின் வேகம் ஒரு  காட்டிற்கு அருகில் குறைந்தது…..

 

தண்ணீரின் வேகம் குறைந்ததும் விஹான் அஸ்வதியை கரைக்கு தூக்கி கொண்டு சென்றான்…..

 

தண்ணீரை நிறைய குடித்து விட்டதால் அவள் மயங்கி கிடந்தாள்….

 

விஹான் அவள் வயிற்றில் உள்ள தண்ணீரை அவள் வயிற்றில் கையை வைத்து அமுக்கி வெளியே எடுத்து  முதலுதவி செய்து விட்டு , அவளின் வாய் மீது வாய் வைத்து அவனின் மூச்சு காற்றை அவளுக்கு கொடுத்து அவளை எழுப்பி கொண்டு இருந்தான்….

 

அஸ்வி , கன்ன திறந்து பாரும்மா , என்று அவன் அவளை எழுப்பி கொண்டு இருந்தான்….

 

சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு சிறிய இருமலோடு அவள் கண் விழித்து பார்த்தாள்…..

 

அவள் முன் சோகமே உருவாக விஹான் அமர்ந்து கொண்டு இருந்தான்….

 

அஸ்வதி கண் விழித்ததும் அவளை தன் நெஞ்சோடு இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்…..

 

அஸ்வி உனக்கு எதும் ஆகியிருந்தா நா என்ன பண்ணுவேன் என்று அவன் அவளை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டே அழுதான்…..

 

அச்சோ விஹான் எனக்குத்தான் ஒன்னுமில்லயே நா நல்லா தான இருக்கேன் , அழுகாதீங்க என்று அவள் அவனின் கண்களை துடைத்து விட்டாள்…..

 

ஆமா நீ ஏன் அந்த அனந்தி சொன்ன பேச்சை கேட்டு திரும்பவும் தண்ணிக்குள்ள இறங்குன?

 

அதான் நா அப்போவே சொன்னேனே அவ ஒரு தாமரை பூ கேட்டான்னு அதான் அவளுக்கு அதை எடுத்து கொடுக்க போனேன்…..

 

அவள் அவ்வாறு அப்பாவியாக கூறவும் தன்னை இகழ்வோருக்கும் பாசத்தையே பரிசாக தரும் தன்னவளை பார்த்து    விஹானுக்கு அவள் மீது காதலும் , அன்பும் கூடியது ……

 

போதும் போதும் என்னோட விஹான் அழுதது என்று அவள் அவனின் கண்களை துடைத்து விட்டாள்…..

 

அஸ்வி உனக்கு ஒன்னு தெரியுமா?

 

என்ன எனக்கு தெரியுமான்னு கேக்குறீங்க?

 

உன்னோட அம்மாவும் உன்னோட தங்கச்சியும் உன்ன கொல்ல பாத்துருக்காங்க…..

 

என்…என்ன…..                                              என்ன சொல்லுறீங்க???                        எனக்கு ஒன்னும் புரியல….

 

இந்தா இத பாரு என்று அவன் தன் பேண்ட் பாக்கெட்டில் போட்ட அந்த கேமராவை ஆன் செய்து அவளிடம் கொடுத்தான் ……

 

சுலோச்சனா மற்றும் அனந்தி இருவரும் இணைந்து அஸ்வதியை கொல்ல திட்டமிட்டது அதன் பிறகு விஹான்னா அவர்களையும் சேர்த்து வீடியோ எடுக்கும்போது பேசியது …..

 

அம்மா அந்த அஸ்வதி என்ன திரும்பி வாரா?                                                                  நீங்க அங்க தண்ணி வேகமா போகும்ன்னு சொன்னீங்க , ஆனா எப்படி அவ திரும்ப வாரா?

 

அதான் எனக்கும் ஒன்னும் புரியல, சரி அவ மேல வந்த உடனே இந்த பூ இல்ல அங்க தூரத்துல இருக்குல்ல அதான் வேனும்ன்னு கேளு…..

 

ஆனா அம்மா எனக்கு ஒரு டவுட்டு….

 

என்ன டவுட்டு?

 

இப்போ அந்த அஸ்வதிய தண்ணி அடிச்சிட்டு போகும்போது விஹான் அவள காப்பாத்த தண்ணிக்குள்ள குதிச்சிட்டா?

 

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா , எங்கிட்ட நேத்து அவன் எவ்வளோ திமிரா பேசுனான்னு பாத்தில்ல சோ காதலர்கள் ரெண்டு பேரும் சேந்து செத்து போகட்டும் , நா செஞ்ச பெரிய பாவம் அந்த அஸ்வதிய தத்து எடுத்தது தான் அதான் அந்த பாவத்தையும் அந்த பாவத்தோட காதலனையும் இங்க இந்த கங்கையிலே தொலச்சிட்டு போவோம் இப்போ நீ அவகிட்ட போய் நா சொன்னபடி கேளு….

 

சரிம்மா….

 

பிறகு அனந்தி அஸ்வதியிடம் வந்து கேட்டாள் …..

 

அந்த வீடியோவை பார்த்த அஸ்வதி அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள்…..

 

ஒரு ஆறு ஏழு தடவை அந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்தாள் அவள்…..

 

விஹான் அவள் கையில் வைத்திருந்த கேமராவை வாங்கி ஓரமாக வைத்து விட்டு அவளின் அதிர்ச்சி, வேதனை நிறைந்த முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி கொண்டு அவளின் வலி நிறைந்த விழிகளை நேருக்கு நேராக பார்த்தபடி அவன் பேச ஆரம்பித்தான்……

 

கண்ணம்மா , உனக்கு அழனும்ன்னு தோனுச்சுன்னா எம்மேல சாஞ்சுட்டு அழுதுடும்மா தங்கம் ,  மனசுல பூட்டி வைக்காதடா கண்மணி , உனக்காக நா இருக்கேன் எப்பவுமே இருப்பேன்…..

 

அஸ்வதி விஹானை  இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அவன் நெஞ்சினில் முகம் புதைத்துக் கொண்டாள்…..

 

மறந்தும் அவள் அழுகவில்லை…..

 

அவன் மீது சாய்ந்து கொண்டே அவள் பேசினாள்….

 

விஹான் நீங்க மட்டும் என்ன காப்பாத்தலன்னா நா உங்கள மாதிரி ஒரு நல்ல காதலன மிஸ் பண்ணிருப்பேன் அண்ட் இனி நா என்னோட வாழ்க்கையில இதுக்கு அப்புறம் அந்த சுலோச்சனா ஆன்டி அண்ட் அந்த அனந்திக்காக அழ மாட்டேன் , என்னோட வாழ்கை ஒரு பிடினானமே இல்லாம போயிட்டு இருந்துச்சு ஆனா இப்போ ரொம்ப ஸ்ட்ராங்கான பிடிமானமா நீங்களும் உங்க காதலும் எனக்கு கிடச்சிடுச்சி இனி நா அழவே மாட்டேன் என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்தாள்…..

 

அவர்களின் காதல் காட்சிகள் தொடருமா இல்லை மீண்டும் எதாவது சூழ்ச்சியில் சிக்கி கொள்ளுமா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. வேகமா அத்தியாயம் முடிஞ்ச மாதிரி ஃபீல் … இன்னும் என்னென்ன சதி திட்டம் நடக்குமோ

  2. இதுவரை பெயரை கூட கூறி அழைக்காத தங்கை, பெயரை அழைத்து ஆசையை கூறவும் மகிழ்வாக நிறைவேற்ற சென்றுவிட்டால்.

    இவர்கள் இருவரது உண்மை முகங்களும் குடும்பத்தாருக்கு தெரியவரும் போது என்ன நடக்குமோ.

    எப்படியோ கெட்டதிலும் நல்லதாக, இனி அம்மா தங்கை என்ற பாச பிணைப்பின்றி விலகியே நின்று கொள்வாள் அஸ்வதி.

    1. Author

      Thank you pa neenga padichitu comments panradhuku