Loading

அதியின் காதல் நிதிஷிற்கு தெரிந்தவுடன் தனக்கு தெரிந்த டிடெக்ட்டிவிடம் அதியைப் பற்றி முழுமையாக விசாரித்து கூறக் கூறி இருந்தான்…. அந்த டிடெக்ட்டிவ் இரண்டு நாட்களில் விசாரித்து நேற்று தான் அதியை பற்றிய கோப்பை நிதிஷிடம் தந்தார்… அதி பற்றி மட்டும் அல்ல அவர்கள் குடும்பத்தை பற்றிய முழு விபரமும் அந்த கோப்பில் இருந்தது…..

அதனால் நேற்று இரவே நிதிஷ் பிரியா வசும்மா மூவரும் அந்த கோப்பைப் படித்து இருந்தனர்….. அந்த கோப்பில் கூறி இருந்த விசயம் மூவருக்கும் ஏற்புடையதாக இருந்தது…. இவர்களை பற்றி முரளி மூலமும் அறிந்து இருந்தனர்…. இவர்கள் மூவரும் நிவேதாவின் படிப்பு முடிந்தவுடன் அவர்களிடம் பேசலாம் என முடிவு செய்து இருந்தனர்….

ஆனால் இப்பொது என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தனர்…. வசும்மா எதுவோ கூற வரும் போது நிவேதாவிடம் இருந்து பெரியதாக கேவல் வெடித்தது… அந்த கேவல் சத்தத்தில் தான் அனைவரும் அவளைப் பார்த்தனர்… அவள் அருகில் அனைவரும் செல்ல முனையும் போது அவள் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்…..

யார் கதவை தட்டியும் அவள் கதவை திறக்கவில்லை…. அதியும் அவள் அறைக்கு செல்லவில்லை…. தூரமாக நின்று அங்கே தான் பார்த்து கொண்டு இருந்தான்….

அதி மற்ற நால்வரிடம் “நீங்க அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. கொஞ்ச நேரம் அவங்க தனியா இருக்கட்டும்… அதுக்கு அப்பறம் பேசலாம்”… என்று கூறி விட்டு வசும்மாவிடம் கேட்டான் “அம்மா நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க????? நீங்க எவளோ வருஷம் வெயிட் பண்ண சொன்னாலும் இருக்கேன்….. ஆனா இனிமே அவ கண்ணுல கண்ணீரை பார்க்க முடியல ம்மா ” என்று கூறினான்…..

வசும்மா அவன் பேசியதை கேட்டுவிட்டு நிதிஷ் மற்றும் பிரியாவை பார்த்தார்…. அவர்கள் இருவரும் சம்மதமாக தலை அசைத்தனர்… அதில் திருப்தி அடைந்து வசும்மா அதி மற்றும் அப்பத்தாவை பார்த்து “எங்க மூனு பேருக்கும் மனபூர்வமான சம்மதம் ம்மா…. ஆனா இதுல முடிவு எடுக்க வேண்டியது நிவிம்மா தான்…. அவ என்ன சொல்றான்னு பாக்கணும் ம்மா…. அது மட்டும் இல்லாம நீங்க மட்டும் தான் பேசறீங்க மத்தவங்களுக்கு இந்த பேச்சு பிடிச்சி இருக்கா இல்லையா தெரியல ம்மா…. அவங்க முடிவு தெரிஞ்சா இன்னும் சந்தோசமா இருக்கும் ம்மா” என்று கூறி முடித்தார்…

 “வீட்டுல மத்தவங்களுக்கு இந்த விசயம் தெரியும் வசு…. வேணும்னா அவங்களையே இப்பயே உங்கிட்ட பேச சொல்றேன்…. ஒரு கால் மணி நேரம்… அவங்க எல்லார்கிட்டயும் பேசிட்டு உன்கிட்ட பேச சொல்றேன்” என்று அப்பத்தா வசும்மாவிடம் கூறி விட்டு அதியை பார்த்து “வூட்டுக்கு போன போடு ராசா அவங்க கிட்ட பேசணும்” என்று கேட்டார்… அவன் போன் போட்டு தரவும் அவனையம் அழைத்து கொண்டு வீட்டுக்கு வெளியே இருக்கும் தோட்டம் பக்கம் சென்றார்….

மதுரையில்

அதியின் வீட்டில் அனைவரும் இருந்தனர்… மாறன், மீனாட்சி, அனைவரும் மதுரையில் உள்ள அதியின் வீட்டில் தான் இருந்தனர்…. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்…. அப்போது தான் சுந்தர பாண்டியனுக்கு அழைப்பு வந்தது…

அதியின் அலைபேசியில் இருந்து தான் அழைப்பு வந்து இருந்தது… “தம்பி தான் கூப்புட்றான்” என்று அனைவரிடமும் கூறிவிட்டு அழைப்பை ஏற்றார்…

ஆனால் பேசியது என்னமோ அப்பத்தா தான்…. “ஐயா சுந்தரா…. எப்படி இருக்க ஐயா… எல்லாரும் எங்க இருக்காங்க” என்று கேட்டார்

“ஆத்தா எல்லாரும் நல்லா இருக்கோம்….. பாப்பா மாப்பிளை எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க ம்மா” என்று சுந்தரப்பா அப்பத்தாவிடம் கூறினார்…

“அப்டியா சாமி … ரொம்ப நல்லது…. எல்லாருக்கும் கேட்குற மாதிரி பண்ணு ப்பா… ” என்று போனை ஸ்பீக்கரில் போட கூறினார்… அவர் போட்டவுடன் இங்கு நடந்த அனைத்து விசயத்தையும் அப்பத்தா போன் மூலமாக மதுரையில் இருப்பவர்களிடம்  கூறினார்… அங்கு அனைவருக்கும் கேட்டவுடன் என்ன கூறுவது என்றே தெரியவில்லை…

(சிவகாமி அம்மா இனிமே சிவம்மா) சிவாம்மா தான் முதலில் பேச ஆரம்பித்தார்… “அத்தை நிவேதா தான் நம்ம வூட்டு மருமக …. அந்த பொண்ணு பட்ட கஷ்டம் போதும் அத்தை.. அவங்க பெரியம்மா வூடு நல்லா பாத்தாலும்… அந்த பொண்ணு இனிமே நம்ம வூடு மீனாட்சி அத்தை… நம்ம வூட்டுக்கு வந்தா அந்த பொண்ண நல்லா பாத்துகணும் அத்தை” என்று அப்பத்தாவிடம் கூறினார்….

அப்பத்தா அதே கேட்டு விட்டு மற்றவர்களிடம் உங்க கருத்து என்ன என கேட்டார்…. “ஏனுங்க நீங்க எதுவும் சொல்லல… ஐயா சுந்தரம் நீயும் ஏன் எதுவும் சொல்ல மாட்டிங்குற…. மீனாட்சி மாறா நீங்களும் சொல்லுங்க” என்று அனைவரிடமும் கேட்டார்….

மீனாட்சியும் மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அப்பத்தாவிடம் இருவரும் சேர்ந்து “எங்க ரெண்டு பேருக்கும் சம்மதம்” என கூறினர்….

மருது தாத்தா ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு அப்பத்தாவிடம் பேசினார்…. “எங்க கிட்ட கேட்குறது இருக்கட்டும்…. அந்த பொண்ணுக்கு பிடிக்கணும்ல … அந்த பொண்ணுக்கு சம்மதம்னா எனக்கு சம்மதம்” என்று அப்பத்தாவிடம் கூறி விட்டு சுந்தரப்பாவிடம் கேட்டார்…. “சுந்தரா நீ என்ன ப்பா சொல்ற… உன்னோட கருத்தை சொல்லு ” என்று கேட்டார்….

அவரும் “நீங்க சொல்றது சரி தானுங்க ஐயா … அந்த பொண்ணுக்கு சம்மதம்னா எங்களுக்கு சம்மதம் ஐயா” என்று அவரும் கூறினார்…..

 “ஏனுங்க அப்டினா பொண்ணோட பெரியம்மாகிட்ட நீங்களே உங்களோட விருப்பத்தை சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அப்பத்தா வசும்மாவிடம் சென்று அலைபேசியை கொடுத்தார்….

“வசு இந்தா போனை புடி” என்று போனை அவரிடம் கொடுத்தார்…. மருது தாத்தா அவரை நலம் விசாரித்து விட்டு தங்களுக்கு இதில் பரிபூரண சம்மதம் என்று கூறிவிட்டு நிவேதாவின் சம்மதம் தான் முக்கியம் என்று கூறினார்…. சிவம்மாவும் வசும்மாவிடம் தன் சம்மதத்தைகே கூறினார்…

அதை கேட்டு வசும்மாவிற்கு  சந்தோசம் …. அவரும் தன் பங்கிற்கு நிவேதாவின் வாழ்வில் நடந்ததைக் கூறி சம்மதம் கேட்டார்… அனைவரும் சம்மதம் கூறியவுடன் சந்தோசமாகவே பேசி விட்டு அலைபேசியை அப்பத்தாவிடம் குடுத்தார்….. அப்பத்தாவும் பிறகு பேசுகிறேன் என்று கூறி விட்டு அலைபேசியை வைத்துவிட்டார்…

நிவேதா இன்னமும் கதவை திறக்கவில்லை… பிரியா போய் அவளை அழைத்தும் அவள் வெளியே வரவில்லை கதவையும் திறக்கவில்லை… அதற்குள் வசும்மா சாந்தாவை போய் பார்த்து வந்தார்… மாத்திரையின் உபயத்தில் நல்ல தூக்கத்தில் இருந்தார்…

அவர் எழ இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் கதவை மூடிவிட்டு வெளியே வந்தார்… வந்தவர் அப்பத்தாவிடம் பேசிவிட்டு அதி, நிதிஷ், பிரியா மூவரையும் அழைத்தார்….

“தம்பி நீங்க போய் நிவேதா கிட்ட பேசுங்க நாங்க உங்க வீட்டுல இருக்கோம்.. பேசிட்டு கூப்பிடுங்க” என்று கூறிவிட்டு அதியின் பதிலைக் கூட கேட்காமல் அதியின் வீட்டிற்கு மற்றவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்…..

சிறிது நேரம் அங்கேயே நின்றான்… ஐந்து நிமிடம் கழித்து தான் நிவேதாவின் அறை பக்கம் சென்றான்…. கதவை தட்டினான் திறக்கவே இல்லை…. “வேதா இப்ப கதவை திறக்க போறியா இல்லையா?????…. அம்மு ப்ளீஸ் கதவை திற டா…. ஏதாவது பேசு டா… அம்மும்மா ப்ளீஸ் பேசு டா…. டேய் கண்ணா கதவை திற டா …. எதுவா இருந்தாலும் வெளிய வா டா பேசிக்கலாம்… உனக்கு என்ன பிடிக்கலையா சொல்லு உன் முன்னாடி கூட வரல டா….. ஆனா வெளிய வா டா” என்று அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்…..

உள்ளே அவள் இவனை நினைத்து தான் அழுது கொண்டு இருந்தாள்…. எவ்வளவு கம்பிரமான போலீஸ் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறானே என்று நினைத்து அழுது கொண்டு இருந்தாள் (மை மைன்ட் வாய்ஸ் : நீ கதவை தொறந்தா அவன் ஏன் ம்மா உன்கிட்ட கெஞ்ச போறான் போய் கதவை ஓபன் பண்ணு ம்மா )

இவள் கதவை திறக்கும் வழி காணோம் என நினைத்து “ஓகே அம்மும்மா நான் வீட்டுக்கு போறேன்… பிரியாவை அனுப்புறேன்… ப்ளீஸ் அவகிட்டயாச்சும் பேசு” என்று கூறி விட்டு வெளியே வந்து விட்டான்…. எப்படி அவள் அறைக்கு செல்வது என்று யோசித்து விட்டு அவள் அறைக்கு செல்ல வேறு வழி உள்ளதா எனப் பார்த்தான்…. அவளின் அறை முதல் மாடியில் இருந்தது.. அவளின் அறைக்கு பால்கனி உள்ளது அது திறந்து உள்ளதா என பார்த்தான் அது திறந்து இருந்தது நல்ல வேலையாக…..

கீழ் உள்ள அறையின் ஜன்னலில் ஏறி முதல் மாடியில் இருக்கும் பால்கனியை சாதாரணமாக தாவி பிடித்து பால்கனி வழியாக உள்ளே சென்று விட்டான்… இவனின் வித்தையை அப்பத்தா தவிர மற்ற மூவர் வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தனர்….

அப்பத்தா தான் “இதுலாம் கம்மி இவனும் அஜயும் சேர்ந்தா வீடே ரெண்டு ஆகும் …. மாடியில இருந்து குதிக்குறது ஒரே தாவுல இந்த மாதிரி மாடி ஏறுறது…. எல்லா வித்தையும் பண்ணுவானுங்க இவனுங்க இம்சை தாங்காது…. வாங்க அவன் தான் அறைக்குள்ள போயிட்டான்ல உள்ள வாங்க அவனே பேசிட்டு கூப்பிடுவான்” என்று கூறி உள்ளே அழைத்து சென்று விட்டார்…..

அதி அறைக்குள் செல்லாமல் அவள் என்ன செய்கிறான் என பார்த்தான் கதவுக்கு பின் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தாள்… அவனின் சத்தம் கேட்கிறதா என்று கேட்டாள்.. எந்த சத்தமும் இல்லாததுனால் மெதுவாக கதவை திறந்து பார்த்தாள்…. அவன் அங்கு இல்லாதது இருந்ததால் மீண்டு கதவை அடைத்து விட்டு சத்தமாக பேச ஆரம்பித்தாள்….

“நான் உங்களுக்கு வேணாம் பாவா(என்னது பாவா வா!!!!!!!) நீங்க எப்படி கெத்தா இருக்கீங்க… நான்லாம் உங்களுக்கு செட் ஆக மாட்டேன் பாவா ….. நீங்க எவ்ளோ பெரிய குடும்பம்… எனக்கு யாருமே இல்லையே…. பெரியம்மா அண்ணா ப்ரியா எல்லாரும் பாசமா தான் இருக்காங்க ஆனா எனக்கு இங்க எதோ கெஸ்ட்டா இருக்குற மாதிரி தான் இருக்கு…

பெரியம்மா என்ன அவங்க சொந்த பொண்ணா தான் பாக்குறாங்க பாவா ஆனா எனக்குள்ள ஒரு பயம் இருக்குதே … என் ராசினால அவங்களுக்கு ஏதோ ஆகிடுமோனு பயமா இருக்கு….. அதே பயம் தான் பாவா உங்க மேல இருக்க பாசத்தையும் வெளிய சொல்ல விடாம தடுக்குது…

பாவா எனக்குள்ளேயே என்னால முடியாதா…. நான் அழகா இல்லையா …. எனக்குள்ள திறமை இல்லையோ… என்னால எதுவுமே சாதிக்க முடியாதோ…. எனக்கு ராசி இல்லையோனு தோணுது பாவா…. நான் என்ன பண்றது பாவா??”  என்று அழுது கொண்டே புலம்பிகொண்டு இருந்தாள்…..

அவளின் புலம்பலில் அவன் புரிந்து கொண்டது ஒன்று அவளின் தாழ்வு மனப்பாண்மை…. சிறு வயது முதலே அவளை திட்டிக்கொண்டே அடித்துக்கொண்டே இருந்ததால் அவளுக்கு தாழ்வு மனப்பாண்மை உள்ளது என தெரிந்து கொண்டான்….

“ஏன் அம்மு தனியா புலம்பி அழுவுற…. வா உன் பாவா கிட்ட சொல்லு வா”…. என்று கூறிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தான்…. அவனின் குரலில் தூக்கிவாரி போட்டு அவனின் முகத்தைப் பார்த்தாள்…..

( அப்பாடா…. அவளுக்கும் அதியை பிடிச்சி இருக்கு)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சூப்பரு … ரெண்டு பேரும் சூப்பரா லவ் பண்றாங்க … நல்லா போகுது கதை … நிவி அப்பா அம்மா நினைச்சா தான் பயமா இருக்கு …