Loading

மெல்லினம் 4:

மணி மாலை நான்கை தொட்டிருக்க ரேஷ்மிகா வீட்டிற்கு செல்லுவதற்கு ஆயுத்தமானாள் தேன் முல்லை.

அன்று பள்ளியில் சீதா கேட்டப்பிறகு வீட்டில் வந்து மங்கையிடமும் சத்யமூர்த்தியிடமும் விஷயத்தை தேன்முல்லை தெரிவித்திருக்க முதலில் சற்றே தயங்கினர் இருவரும். எப்புடி பெண்ணை தனியாக அனுப்பவது என்று.

பின்பு தேன்முல்லை தான் அவர்களிடம் கூடுதலாக பணம் வந்தால் அத்விதனின் படிப்பிற்கு உதவியாக இருக்கும் அத்தோடு ரேஷ்மிகாவை ஏமாற்ற மனம் வரவில்லை என கூறி சமதானப்படுத்தி சம்மதம் வாங்கியிருந்தாள்.

அவர்களின் சம்மதம் பெற்றதும் இரண்டு நாள் கழித்து பள்ளிக்கு வந்த சீதாவிடமும் அவள் தனது சம்தத்தை தெரிவித்திருக்க அகமகிழ்ந்து போன சீதா குடும்பத்தினரிடம் பேசி அந்த வார வெள்ளிக்கிழமை நல்ல நாளாக இருந்ததால் அன்றே வந்து வகுப்பை தொடங்கி வைக்குமாறு கூறியிருக்க இதோ அங்கே தான் கிளம்பி விட்டிருந்தாள்.

ரேஷ்மிகாவின் வீட்டிற்கு செல்வதற்கு தேன்முல்லையின் வீட்டிலிருந்து கிட்டதட்ட ஒன்றரை மணி நேரமாவது ஆகும்.

அதனால் சீதா அவளை அழைத்து கொண்டு செல்லவும் திரும்பவும் வீட்டில் வந்து விடுவதற்கும் அவர்களின் காரையே அனுப்புவதாக ஏற்பாடு.

முதலில் இதனை மறுத்து தனது ஸ்கூட்டியிலயே வருவதாக கூறிய தேன்முல்லையை “ப்ளீஸ் தேன் முல்லை இதை மறுக்காதீங்க வரும் போது ஓகே ஆனா ரிட்டர்ன் போகும் போது உங்களை தனியா நைட்டு நேரத்துல அனுப்புறதுல சுத்தமா எங்க குடும்பத்துக்கு விரும்பம் இல்லை” என சீதா கூற,

“இல்லை, அது வந்து எதுக்கு சிரமம் உங்களுக்கு” என தேன்முல்லை கூற,

“எங்களுக்காக நீங்க சிரமம் பாக்காம வீட்டுக்கு வரலையா ப்ளீஸ் காருலயே வாங்களேன் நாங்களும் கொஞ்சம் டென்ஷன் இல்லாம இருப்போம்” என சீதா மறுக்க முடியாதவாறு கூற வேறு வழியின்றி ஒத்து கொண்டவள் தந்தையிடமும் தாயிடமும் இதனை கூற அவர்களும் சீதா சொல்லிய காரணத்தையே கூற சரி என்று விட்டிருந்தாள்.

தனது செல்போன் இசைக்க எடுத்து பார்த்தாள் தேன்முல்லை சீதா தான் அழைத்தது.

“ஹலோ தேன்முல்லை”

“சொல்லுங்க மேடம்”

“கிளம்பிட்டீங்களா?”

“ஹாங் மேம் ரெடியா தான் இருக்கேன்”

“ஓ ஓகே ஓகே தேன்முல்லை இன்னைக்கு என் கொழுந்தன் வேலை விஷயமா வெளியூர் போய்ட்டு வர்றாங்க. அவங்கள பிக்கப் பண்ணிட்டு காரு வந்துட்டு இருக்கு நீங்க அதுல வந்துடுறீங்களா? அவரை கொண்டு வந்து விட்டுட்டு திரும்பவும் உங்கள பிக்கப் பண்ண வந்தா இன்னும் லேட்டாயிடும் இன்னைக்கு அஞ்சு மணி வரைக்கும் தான் நல்ல நேரம். நல்ல நேரத்தில பாப்பாக்கு க்ளாஸ் தொடங்கணும்னு அத்தை விரும்புறாங்க.

ஷோ ப்ளீஸ் நான் என் கொழுந்தன் கிட்ட சொல்லிடுறேன் வர்ற வழி தான் உங்களை பிக்கப் பண்ணிப்பாங்க கார் நம்பர் சொல்லுறேன் நோட் பண்ணிக்கோங்க இன்னும் ஐந்து நிமிஷத்துல காரு வந்துடும்” என கட கடவென பேசிய சீதா இவள் பேசும் முன் போனை வைத்திருந்தாள்.

முதலில் அந்நிய ஆண்மகனுடன் தனியாக செல்வதா என தேன்முல்லை அவஸ்தையாக நெளிய அதற்குள் வீட்டில் வெளியே காரின் ஹாரன் ஒலி கேட்க தாயிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள்.

அத்விதன் இருந்தால் அழுவான் என சத்யமூர்த்தி அவனை வெளியில் அழைத்து சென்றிருந்தார்.

இவள் வெளியே வந்ததும் டிரைவர் இறங்கி நிற்பது தெரிய ‘ஹப்பாடி பரவாயில்லை டிரைவரும் இருக்காரு’ என்ற நிம்மதி உணர்வு அவளிற்கு. 

கேட்டை திறந்து இவள் வெளியே வந்து காரின் அருகே செல்ல டிரைவர் வந்து பின்னிருக்கை கதவை திறந்து விட ஏறி அமர்ந்தவளிற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனை கண்டதும் திகைப்பே.

ஏனெனில் காரின் முன்பக்க கண்ணாடி கதவு மூடியிருந்தால் சீதா சொல்லியவன் முன்பக்கம் அமர்ந்திருப்பான்‌ என அவள் நினைத்திருக்க இதனை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என அவளின் முகமே கூறிற்று.

அந்நிய ஆண்மகன் அருகே அமர்ந்திருந்ததை உணர்ந்ததும் அவளின் முகம் பதட்டத்தை தத்தெடுக்க ஆரம்பித்திருந்தது.

ஆனால் அருகில் இருப்பவனே இவள் ஒருத்தி இருப்பது போல் தெரியாது குனிந்து மொபைலில் தலையை கொடுத்து அதனை நோண்டி கொண்டிருந்தான்.

டையை தளர்த்தி விட்டு இன்சர்ட் செய்திருந்த சட்டை வெளிவந்திருக்க பார்த்ததுமே தெரிந்தது அவனின் களைப்பான தோற்றம்.

குனிந்த வாக்கில் அமர்ந்திருந்தால் அவனின் முகம் சரியாக இவளிற்கு தெரியவில்லை. எதற்கு வம்பென அவனின் புறம் பார்வையை திருப்பாது எவ்வளவு முடியுமே அவ்வளவு கதவினை ஒட்டி அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வர “கீறிச்” என்ற பெரும் சத்தத்துடன் யாரும் எதிர்பார்க்காதவாறு‌ வண்டி சடன் பிரேக் அடித்து சட்டென நிற்க,

வண்டி நின்ற வேகத்தில் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த தேன்முல்லை பின்னால் சீட்டில் சாய்ந்து பின் வேகத்துடன் முன்னிருந்த இருக்கையில் மோத வர “அய்யோ கிருஷ்ணா” என பயத்தில் அவள் அலறி எதனுடனோ பயங்கரமாக முன்பக்க முகம் முழுவதும் மோதியிருந்தாள்.

வலி எதுவும் தெரியாது போக அவள் கண்களை திறக்க அவள் கண்டது முன் பக்க இருக்கையில் அவள் மோதி விடாது தடுப்பாய் அவள் முன் நீண்டியிருந்த கைகளை தான்.

அவள் முகம் அந்த கைகளின் உள்ளங்கையில் மோதியதில் அவளின் இதழ்கள் அழுத்தமாக உள்ளங்கையில் அழுத்தி மோதியிருக்க சட்டென தனது முகத்தை இதழ்களையும் சேர்த்து அந்த உள்ளங்கைகளில் இருந்து பிரித்தெடுத்து அந்த கைகளின் வழியே அவள் கண்களும் பயணித்து அந்த கைக்கு சொந்தகாரனின் முகத்தை அவள் பார்க்க 

“அண்ணே பார்த்து போக மாட்டீங்களா?” என டிரைவரிடம் கோபமாய் அவன் காய்ந்து கொண்டிருக்க

அவனின் முகத்தை இப்போது தெளிவாய் பார்த்திருந்த தேன்முல்லைக்கு இப்போது திகைப்பே!

ஏனெனில் அங்கே இருந்தவன் மூன்று மாதங்களுக்கு முன் அவள் கோர்ட்டில் சந்தித்த கதிரழகன் தான்.

“சாரி தம்பி குறுக்க ஒரு பேமானி வநதுட்டான்” என அவர் கடுப்பாகி அவனை இன்னமும் திட்ட முயல “அண்ணா” என்ற ஒற்றை அதட்டலிட்டு அவன் முறைக்க அதில் தான் பேசியதை உணர்ந்து சட்டென வாய் மூடி மொனியானவர் காரை கிளப்ப

இன்னமும் தன் முகத்தையே திகைப்பு மாறாமல் பார்த்து கொண்டிருந்தவளின் புறம் திரும்பி அவளை நன்றாக முறைத்தவன் “பார்த்து நல்லா உட்கார மாட்டியா நீ? அப்புடி என்ன உன்னை கடிச்சா திங்க போறேன் இப்புடி கதவை ஒட்டிட்டு உட்கார்ந்திருக்க” என அவன் கோபத்தில் ஒருமையாக விளித்து காய

இன்னமும் மலங்க மலங்க விழித்தவளின் பார்வையல் சட்டென தன்னை நிதானித்து கொண்டவன் இன்னமும் அவளிற்கு முன் நீண்டிருந்த தனது கையை இழுத்து கொண்டு அவள் தான் பேசியதை உணரும் முன் “பார்த்து நல்லா உட்காருங்க மிஸ்” என அழுத்தமாக கூறி பன்மைக்கு மாறியிருக்க

அவனின் அழுத்தத்தில் தன்னிலை அடைந்தவள், “ஹாங் என்ன சொன்னீங்க” என விழிக்க,

“பாத்து பத்திரமா நல்லா உட்காருங்கன்னு சொன்னேன்” என இம்முறை அவள் கண்களை ஆழ்ந்து பார்த்து கூறியவனுக்கு அவள் இதழ்கள் அழுத்தமாக பதிந்த உள்ளங்கை குறுகுறுக்க தனது பேண்ட் பாக்கெட்டினுள் கையினை நுழைத்து கொண்டான்.

“ஹ்ம்ம் சரி சரி” என்றவாறு நேராக அமர்ந்தவளிற்கு அவனின் கைக்குட்டை நினைவு வர வேகமாக தனது கைப்பையை துழவியவளுக்கு கண்ணன் சிலையே கைக்கு கிடைக்க அதனை எடுத்து வெளியே வைத்து விட்டு மீண்டும் அவள் கை விட்டு துழவ,

அவளின் செய்கைகளை கண்டும் காணாமல் இருந்தவன் அவள் எடுத்து வைத்திருந்த சிலையை ஒரு பார்வை பார்க்க சட்டென அவன் முகத்தின் முன் கைக்குட்டையை நீட்டியிருந்தாள் தேன்முல்லை. 

‘என்ன’ என்பதாக அவன் நிமிர்ந்து அவளை பார்க்க

“இது இது உங்களோடது அன்னைக்கு கோர்ட்டுல நீங்க தந்தது” என அவன் பார்வை உணர்ந்து அவள் திக்கி திணறி அவள் கூற,

தனது பார்வையினை புரிந்து பதில் சொல்லியதை கண்டு அவனின் இதழ்கள் புன்னகைக்க தனது கற்றை மீசைக்கடியில் அதனை மறைத்தவன்

“ஹோ” என்றவன் வேறு எதுவும் பேசாது தனது மொபைலில் மூழ்கி கொள்ள

இவள் தான் “ங்ஙே” என விழித்தாள்.

மீண்டும் அவனிடம் அதனை அவள் கொடுக்க முயற்சித்து பேச முயல அதற்குள் வீடு வந்திருக்க சட்டென அவன் இறங்கி விட்டிருந்தான்.

மறுபடியும் இவள் தான் “ங்ஙே” என பல்பு வாங்கியிருந்தாள்.

நேரம் ஆவதை உணர்ந்து அவள் இறங்க முயல‌ அதற்குள் கதவு திறந்து விட டிரைவர் என நினைத்து அவள் இறங்க ஆனால் அங்கே கதவை பிடித்தவாறு போனில் பேசி கொண்டிருந்தான் கதிரழகன்.

மீண்டும் அவளிற்கு திகைப்பே ஆனால் இம்முறை பல்பு வாங்க விரும்பாதவள் திகைப்பை தனக்குள்ளே மறைத்து கொண்டு முன்னே நடக்க போன் பேசிய படியே அவளுடன் இணைந்து நடந்தான் கதிரழகன்.

அது எதோர்ச்சையாக நடந்ததா‌ இல்லை வேண்டுமென்றே நடந்தது என அறியாது குழம்பி விட்டிருந்தாள் தேன்முல்லை.

“மிஸ்” என ஓடி வந்த ரேஷ்மியை கண்டதும் அவளின் குழப்ப முகம் தெளிவு பெற அவளை நோக்கி புன்சிரிப்பு ஒன்றை தவழ விட்டவள் குனிந்து அவளை தூக்கும் முன்பே அவளின் தோள்பட்டை உரச சட்டென குனிந்து ஒற்றை கையால் ரேஷ்மியை தூக்கி கொண்டான் கதிரழகன்.

‘என்னடா நடக்குது இங்க’ என்றவாறு அந்நாளின் நான்காவது முறையாக அவள் திகைத்து நிற்க

“ம்ஹீம் சித்தப்பா கீழ விடு நான் மிஸ் கிட்ட போகணும் ” என அவள் சிணுங்க

“ம்ம்ம் போகலாம் போகலாம் உங்க மிஸ்ஸூ ******* கிட்ட போகலாம்” என முதல் பெயரை சத்தமாக கூறியவனின் இதழ்கள் பின்னரை சத்தமில்லாமல் மெதுவாக தனக்குள் முணுமுணுத்து கொண்டது.

“மிஸ் வாங்க ஏன் அங்கேயே நிக்கிறீங்க” என்ற ரேஷ்மியின் குரலில் கதிரழகன் திரும்பி அவளை பார்க்க “ம்ம்ம் இதோ வரேன்” என்றவாறு அவள் வர ரேஷ்மி அவளிடம் பேசி கொண்டு வந்ததால் வேறு வழியின்றி அவனுடன் இணைந்து நடக்க வேண்டியதாயிற்று.

“வாங்க வாங்க தேன்முல்லை” என வரவேற்ற சீதா கையில் ஆரத்தியுடன் நிற்க அவளுடன் ராகேஷ் ஞானம்மாள் மற்றும் அவரின் கணவர் கோபாலசுவாமியும் உடனிருந்தனர்.

அனைவரும் தேன்முல்லையை கண்டு வரேவேற்பாக புன்னகையை உதிர்க்க இவளும் புன்னகைத்தாள்.

“கதிரு ஆரத்திக்கு நில்லு சீதா எடுமா” என ஞானம்மாள்‌ கூற

“சரிங்கத்தை” என்றவள் ஆலம் சுற்ற தயராக

“ம்மா எதுக்கு இது ” என ரேஷ்மி கேட்டிட,

“அதுவா தங்ககட்டி சித்தப்பா ஒரு நல்ல விஷயம் செஞ்சுட்டு திரும்ப வந்துருக்காரு அதான் அதுக்கு தான் அம்மா இதை எடுக்குறா” என ராகேஷ் கூறிவிட்டு சீதாவை பார்க்க

அவளும் ஆலத்தை சுற்ற ஆரம்பிக்க “அப்போ மிஸ்ஸீம் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுக்க தான வந்திருக்காங்க அதுவும் நல்ல விஷயம் தானே அப்போ அவுங்களுக்கும் எடுங்க” என்றவள் நொடியில் சற்று தள்ளி நின்றிருந்த தேன்முல்லையின் கழுத்தை கதிரின் கைகளில் இருந்தவாரே எக்கி இழுத்திட

நொடியில் நடந்த விட்ட நிகழ்வில் குழந்தை விழுந்து விடுவாளோ என அஞ்சி தேன்முல்லையும் அவளின் இழுப்புக்கு சென்று கதிரின் அருகே நின்று விட்டிருக்க அதற்குள் ஆலத்தை மூவருக்கும் சேர்த்து ஒரு சுற்று சுற்றியிருந்தாள் சீதா.

அதில் அதிர்ந்து தேன்முல்லை விலக முயல “அம்மாடி ஆரத்தி எடுக்கும் போது பாதில விலக கூடாது அது நல்லதுக்கில்லை ரேஷ்மி சொன்ன மாதிரி நீயும் நல்ல விஷயம் தான பண்ண வந்திருக்க பரவாயில்லை அப்புடி நில்லுமா” என ஞானம் கூறிட,

தேன்முல்லையின் நிலையை சொல்லவும் வேண்டுமா என்ன? சட்டென்று திரும்பி அவள் கதிரின் முகம் பார்க்க அது நிர்மூலமாக இருந்தது.

ஆலம் சுற்றி முடித்து இருவருக்குமே சீதா பொட்டு இட்டு முடித்து விட்டு “உள்ள போங்க ரெண்டு பேரும்” என்றவள் வெளியே சென்றிட,

“வாம்மா முல்லை உள்ள கதிரு நீயும் வாப்பா” என்றவாறு அனைவரும் உள்ளே நுழைந்திட திகைத்து நின்றவளை தோள் தொட்டு உலுக்கினாள் ரேஷ்மி.

“மிஸ் உள்ள போங்க” என அவள் கூறிட இன்னும் திகைப்பில் இருந்தவள் மறந்து இடது காலை எடுத்து வைக்க போக சட்டென அவளின் கைகளை பற்றி தடுத்திருந்தான் கதிர்.

“என்ன” என்பது போல் அவள் விழிக்க,

“முதல் முறையா ஒரு நல்ல காரியம் பண்ண இந்த வீட்டுக்குள்ள வரீங்க நல்ல சகுனமா வலது காலை எடுத்து வச்சு போங்களேன்” என அவன் கூறிட,

அதில் தன் தவறை உணர்ந்தவள் “ஓஹ் ம்ம் சாரி” என்று விட்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய 

“சித்தப்பா க்வீக் நம்மளும் மிஸ் கூடவே போகலாம் “என ரேஷ்மி உரைக்க அவளுடன் அவனும் வலது காலை எடுத்து வைத்து நுழைந்திருந்தான்.

“இந்தம்மா கொஞ்சம் தண்ணி குடி” என்றவாறு ஞானம் வர அதனை வாங்கி குடித்தவளிற்கு அங்கே எல்லார் முன்னும் இருப்பது அவஸ்தையாக இருக்க ஒரு மாதிரி நெளிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளின்‌ அவஸ்தையை உணர்ந்தது போல ரேஷ்மி “மிஸ் மிஸ் வாங்க நம்ம டான்ஸ் ஆட போகலாம்” என்க இவளும் சட்டென எழுந்து கொள்ள சீதா வந்தவள் அவர்கள் இருவருக்குமான அறையை காண்பிக்க சென்று விட

செல்லும் அவளை பார்த்தவனிற்கு இன்னமும் அவனின் உள்ளங்கை குறுகுறுத்து ஒரு வித அவஸ்தையை தர தனது உள்ளங்கையை எடுத்து பார்த்தவனிற்கு அவளின் இதழின் ஈரமும்‌ மென்மையும் இன்னமும் அதில் இருப்பதாக உணர,

தனது மீசையை நீவி விட்டவனின் இதழ்கள் சத்தமில்லாமல் பிறர் அறியாமல் அவன் உள்ளங்கையில் அவள் இதழ் பதிந்த இடத்தை உரசி கொண்டன. 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. எல்லாம் எதேச்சையா நடக்குதா … இல்ல எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி பண்றாங்களா ?? ஆனா சூப்பர் … என்ன செல்ல பெயர் இருக்கும் … தேனு அப்படின்னு நினைக்கிறேன் …

    முல்லைக்கு தான் ஷாக் மேல ஷாக் … ஏதோ பழைய லவ் ஸ்டோரி இருக்கும் போல … அந்த கதைக்காக வெயிட்டிங் … இப்போவே இவ்ளோ லவ் பண்றான் … அப்போ நிறைய லவ் பண்ணியிருப்பானோ …

  2. Ahem! Ahem! என்னடா நடக்குது இங்க?

    கதிரின் குடும்பமே ஆரத்தி எடுத்து, வலது காலை எடுத்து வைத்து தம்பதி சமேதரா அழைத்துவராங்க.

    முடியாது என்று சொல்ல முடியாதது போல பேசியே காரியம் சாதிக்கிறாங்க சீதா.

    அவளது இதழ்கள் பதிந்த உள்ளங்கையினில் குறுகுறுப்பா கதிர். 😍😍

    இருவரது FB ரொம்ப அழகானதா இருக்கும் போலவே.

    தேன் முல்லைய எத்தனை தடவை தான் அதிர்ச்சிக்குள்ளாக்குவ கதிர்!