
அத்தியாயம் 17
விக்ரம், “நீ ம்ம்ம் என்று ஒரு வார்த்தை சொல்லு நான் உன் அப்பாவை நம்ப ரிசப்ஷனுக்கு வர வைக்கிறேன்” என்றான்.
நிலா, “அது எப்படி நடக்கும் சக்தி மாமாவுக்கும் இன்னைக்கு தானே ரிசப்ஷன் என் சித்தி கண்டிப்பா மாமா ரிசப்ஷன்க்கு தான் போவாங்க. சித்தி எங்க போறாங்களோ அங்க தான் அப்பாவும் போவாங்க” என்றாள்.
விக்ரம், “அது எல்லாம் உனக்கு ஏன் நீ சரி என்று ஒரு வார்த்தை சொல்லு உன் குடும்பத்தையே இங்க வர வைக்கிறேன்” என்றான்.
நிலா, “அப்படின்னா இன்னைக்கு சக்தி மாமாக்கு ரிசப்ஷன்னு தானே சொன்னிங்க. இப்போ என்னோட அப்பா நம்ப ரிசப்ஷனுக்கு வருவாரா? இல்ல மாமா ரிசப்ஷனுக்கு போவாங்களா?” என்றாள் கை கட்டியபடி கேள்வியாக.
விக்ரம் சிரித்துக் கொண்டே, “இப்போ நீ என்ன சொன்ன நம்ப ரிசப்ஷன்னு தானே நீ சொன்ன. அப்போ நீ என்னை ஏத்துக்கிட்டியா?” என்றான்.
நிலா அவனை முறைத்துக் கொண்டு, “தேவை இல்லாமல் பேசாதிங்க” என்றாள். விக்ரம், “ஓகே ஓகே கூல் அது வந்து உங்க அப்பா” என்று ஆரம்பிக்கும் போதே கதவு தட்டும் சத்தம் கேட்டது.
ஆதித்யா, “டேய் அண்ணா சீக்கிரம் வா டைம் ஆச்சு எல்லாரும் மண்டபத்துக்கு கிளம்பிட்டாங்க நம்பதான் இப்போ போகணும்” என்று கதவை தட்டினான்.
விக்ரம், சென்று கதவை திறந்தவுடன் ஆதித்யா, “அதான் கல்யாணமே ஆகிடுச்சு இல்ல”.
“நாள் முழுக்க ஒன்னா தான் இருக்கீங்க அப்புறம் என்ன எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருக்க அப்படி என்னதான் பேசுவியோ” என்றான்.
*******************************
ஜெயலட்சுமி, கண்ணம்மா வை அழைத்து “ஈவினிங் ரிசப்ஷனுக்கு சுஜிதா வை தயாராக சொல்லு” என்று கையில் ஒரு துணி பையையும் கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
கண்ணம்மா சுஜிதாவிடம் சென்று, “இந்தாங்க அம்மா இந்த துணியை ஜெயா அம்மா உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க ஈவினிங் ஃபங்ஷன்க்கு இத போட்டுக்க சொன்னாங்க” என்றார்.
சுஜிதா சந்தோஷமாக தன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தாள். சக்தி, சட்டென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
சுஜிதா இருக்கும் கோலத்தை பார்த்த சக்தி, “அச்சச்சோ” என்று திரும்பி நின்று கொண்டான்.
சுஜிதா லெகங்கா ஷாலை கையில் வைத்து சரி செய்து கொண்டு இருந்தாள்.
சுஜிதா சட்டென்று சக்தியை கண்டவுடன் பதட்டமாக தன் முட்டை கண்களை அகல விரித்து “ஆஆஆஆ” என்று கத்தினாள்.
சக்தி பதறிப் போய் சுஜிதா வாயில் கை வைத்து, “கத்தாதே வெளியே யாருக்காச்சும் கேட்டா தப்பா நினச்சிப்பாங்க” என்றான்.
சக்தி வாயில் கை வைத்து அழுத்தியவுடன் சுஜிதா தடுமாறி பின்னே சாயிந்தாள்.
அவள் எங்கே விழுந்து விடுவாளோ என்று சக்தி சட்டென்று சுஜிதா இடுப்பு வளைவில் கை போட்டு இருக்கி பிடித்தான்.
அவள் வெற்று இடுப்பில் இவன் சூடான கை பட்டவுடன் அவளுக்கு உடம்பே சிலிர்த்து போனது. அவன் சட்டை காலரை இருக்கி பிடித்தாள் சுஜிதா.
இருவரும் அவர்களையே மறந்து கண்களால் பேசிக் கொண்டு இருந்தார்கள். சக்தி அவனையே அறியாமல் அவன் கைகளால் சுஜிதாவின் இடுப்பு வளைவில் தாளம் போட்டு கொண்டு இருந்தான்.
அதில் தன்னிளை உனற்ந்த சுஜிதா சக்தியை உலுக்கினால். ஆனால், எந்த ஒரு அசைவம் இன்றி சக்தி சிலையாக நின்று அவன் கைகளுக்கு வேலை கொடுத்து கொண்டே இருந்தான்.
சுஜிதா அவனை பிடித்து தள்ளி விட்டு “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள் வெட்கம் கலந்த கோபத்தில்.
சக்தி அவள் தள்ளி விட்டதில் இரண்டு அடி பின்னே சென்று அப்போது தான் தன் கனவில் இருந்து கலைந்தான், “அது அது வந்து நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்றான் தட்டு தடுமாறிய படி.
சுஜிதா, “நான் இங்க துணி மாத்திட்டு இருந்தேன். உள்ளே வரும் போது கதவை தட்டிட்டு வரணும் என்று உங்களுக்கு தெரியாதா?” என்றாள்.
சக்தி, “துணி மாத்தினா கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு மாத்தணும் என்று உனக்கு தெரியாதா?” என்றான்.
சுஜிதா அவனை பார்த்து முறைத்து கொண்டு வேண்டுமென்றே அவனை வெறுப் பேற்ற என்னி, “அது சரி சார் கொஞ்சம் முன்னாடி என்று தன் இடுப்பை சுட்டி காட்டி இங்க என்ன பன்னிட்டு இருந்திங்க” என்றாள்.
சக்தி சுஜிதா நினைத்தது போலவே, “அது வந்து… நான் ஒன்னும் பண்ணலையே” என்றான் திருத்திரு என விழித்துக் கொண்டு.
சுஜிதா அவனை உற்றுப் பார்த்து ஒரு அடி அவன் புறம் எடுத்து வைத்து மெதுவான குரலில், “நீங்க ஒன்னும் பண்ணலையா?” என்றாள்.
சக்தி, “நீ எதுக்கு இப்படி ஒரு மாதிரி பேசுற. அது தெரியாமல் நடந்திருச்சு” என்று சட்டென்று அங்கிருந்து வெளியேறி விட்டான்.
சுஜிதா கதவை சாத்திக் கொண்டு அவன் நெருக்கமாக இடுப்பில் கை வைத்ததை நினைத்து கதவில் சாய்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
சக்தி தோட்டத்திற்கு சென்று தலையில் அடித்துக் கொண்டு என்னடா இப்படி மானத்தை வாங்கிட்டியே.
எவ்வளோ கோபமாக கம்பீரமாக இருந்த. அந்த குட்டி கத்திரிக்கா கீழ விழுந்தா விழுந்துட்டு போகட்டும் என்று விட்டு தொலைக்க வேண்டியது தானே என்று தன் கையை பார்த்து தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தான்.
ஜெயலட்சுமி பின்னால் இருந்து சக்தியை பார்த்து காத்துலயே பேசிக்கிட்டு இருக்கான் பாரு என்று தலையில் அடித்து கொண்டாள்.
இந்த முட்டாள் பையனை என்ன சொல்லி ரிசப்ஷன்க்கு வர வைக்கிறது என்று சிந்தித்து ஒரு ஐடியாவுடன் சக்தி அருகில் சென்றாள்.
ஜெயலட்சுமி, “சக்தி” என்று அழைத்தாள். சக்தி எதுவும் கேட்காதது போல் அப்படியே நின்றிருந்தான்.
ஜெயலட்சுமி, “இன்னைக்கு ரிசப்ஷனுக்கு போகனும். இன்னும் நீ ரெடி ஆகலையா?” என்றாள். சக்தி, “நான் எங்கேயும் வரவில்லை” என்றான்.
ஜெயலட்சுமி, “என்ன டா இப்படி சொல்லிட்ட உன்னை வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு போனாளே அந்த நிலா”.
“அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். உன்னை வேண்டாம் என்று சொன்னதுக்காக அவ வருத்தப்படுற மாதிரி நம்ம ஏதாச்சும் பண்ணனும் இல்லையா” என்றாள் நல்லவளை போல்.
சக்தி தன் அக்காவை முறைத்து பார்த்தவிட்டு, ”நீ எனக்கு கல்யாணம ஏற்பாடு பண்ணிருந்த அந்த நிலா என்னை வேண்டான்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டா லா” என்றான் கோபமாக.
ஜெயலட்சுமி, “இல்ல டா நான் என்ன சொல்றேன்னா அந்த நிலாவோட புருஷன் உனக்கு எதிரி எனக்கு அந்த நிலாவே எதிரி”.
“அதனால் நம்ப ரெண்டு பேரும் இந்த பங்ஷனுக்கு போயிட்டு நிலாவை ஏதாவது கஷ்டப் படுத்திட்டு வரலாம்” என்றாள். சக்தி யோசனையாக, “எப்படி?” என்றான்.
ஜெயலட்சுமி, “ஆமாம் அவ உன்னை பிடிக்கல நீ முரட்டுத்தனமா முட்டாள் மாதிரி இருக்க அப்படின்னு சொல்லி தானே வேண்டாம் என்று சொன்னாள்”.
“ஆனால், இப்போ அவளுடைய நெருங்கிய தோழியவே நீ கல்யாணம் பண்ணி இருக்க”.
“நீ உன் பொண்டாட்டி கூட ரொம்ப நெருக்கமா சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சேன்னா கண்டிப்பா அவ இருக்க வேண்டிய இடத்தில் அவள் தோழி இருப்பதை நினைத்து பொறாமைப் படுவா. உன்ன வேண்டாம் என்று சொன்னதுக்கு வருத்தப்படுவா” என்றாள்.
சக்தி, “ஆமாம் நீ சொல்றதும் சரி தான் என்னை வேண்டாம் என்று சொன்னதுக்கு அவ கண்டிப்பா வருத்தப்படணும்” என்றான் ஆக்ரோஷமாக.
ஜெயலட்சுமி தன் திட்டம் நிறைவேறியதை நினைத்து மௌனமாக சிரித்தாள். சக்தி, “சரி அப்போ நான் போய் தயாராகுகிறேன்” என்று சென்று விட்டான்.
*******************************
நிலா, விக்ரம் இருவரும் ஆடி காரில் வந்து மண்டபத்தின் நுழைவாயுலில் இறங்கினார்கள்.
ஆதித்யா அவன் தோழன் நான்கு பேர் மற்றும் மித்ரா அவள் தோழி நான்கு பேர் என அனைவரும் சேர்ந்து வரவேற்புக்கு நடனம் ஆடினார்கள்.
“மனசோ இப்போ தண்டியடிக்கிது மாமன் நடைக்கு மத்தள டும் டும்
சிரிப்போ இல்லை மின்னல் அடிக்கிது ஆசை பொண்ணுக்கு அச்சாத டும் டும்”
என்று பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே உள்ளே வரவேற்றார்கள்.
மேடைக்கு சென்றவுடன் மித்ரா பொக்கே ஒன்றை விக்ரம் கையில் கொடுத்து ப்ரொபோஸ் செய்யுமாறு கூறினாள்.
விக்ரம் மனதுக்குள் எல்லார் முன்னாடியும் இவல் வாங்காவிட்டால் என்ன பண்ணுவது என்று சிறு அச்ச வந்தது.
இருந்தும் வேறு வழி இன்றி அந்த பொக்கேவை வாங்கிக் கொண்டான். நிலா அருகில் விக்ரம் முட்டி போட்டு கைகளை நீட்டி, “ஐ லவ் யூ டார்லிங்” என்றான்.
நிலா அதை வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். விக்ரமுக்கு பதட்டத்தில் வியர்த்து விட ஆரம்பித்தது.
மித்ரா, “வெட்கப்படாதீங்க வாங்கிக்கோங்க அண்ணி” என்று நிலாவை பிடித்து உலுக்கினாள்.
நிலா முழு மனதாக இல்லா விட்டாலும். கடமைக்கென அனைவர் முன்பும் சிறித்த முகமாகவே அதை வாங்கிக் கொண்டாள்.
பிறகு விக்ரம்,க்ஷ தன் ஒற்றை கையை நீட்டி, “டு யூ லைக் டு டான்ஸ் வித் மீ” என்றான்.
நிலா தயக்கமாக வேண்டாம் என்று கண்களால் சைகை செய்தால். அதற்குள் மித்ரா நிலாவை பிடித்து விக்ரம் மேல் தள்ளி விட்டிருந்தாள். நிலா கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்.
விக்ரம் கீழே குணிந்து கண்களாலயே நிலா அவன் மார்புக்கு மேல் ஒரு கை வைத்து கொண்டும் அவன் கை மேல் இன்னோரு கை வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி நீயா தான் என் கையை பிடித்த என்பது போல் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
மித்ரா திரும்பி பார்த்து சைகை செய்ய ஆதித்யா அங்கு பாட்டை போட்டு விட்டான்.
“அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்” என்னும் பாட்டிற்கு விக்ரம் நிலா கைகளை பிடித்து நடனம் ஆடினான்.
நிலா கிசுகிசுப்பாக அனைவர் முன்பும் சிரித்துக் கொண்டே, “போதும் ப்ளீஸ் போதும்” என்றாள்.
விக்ரம் மனதுக்குள் இவகளுக்கு பிடிக்கா விட்டாலும் அனைவர் முன்பும் எனக்கும் என் குடும்பத்திற்கும் அவமானம் ஏற்பட கூடாது என்று அனைத்திற்கும் ஒத்துழைக்கிறாலே என்று சந்தோஷப் பட்டான்.
ராஜேந்திரன், விக்ரம் கையில் ஓர் மாலையை கொடுத்து நிலா கழுத்தில் போடுமாறு கூறினான். ராஜலட்சுமி, நிலா கையில் ஓர் மாலை கொடுத்து விக்ரம் கழுத்தில் போடுமாறு கூறினார்.
நிலா மற்றும் விக்ரம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலையை மாற்றிக் கொண்டார்கள்.
பிறகு ராஜலட்சுமி ஒரு டைமண்ட் செயினை விக்ரம் கையில் கொடுத்து, “இதை நிலா கழுத்தில் போட்டு விடு பா உங்க கல்யாணத்தை தான் நாங்க யாரும் பார்க்க வில்லை”.
“அதனால் இந்த செயினை போட்டு விடு இதை பாற்த்து நாங்க சந்தோஷப்பட்டு கொள்கிறோம்” என்றார்.
பிறகு அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து கூறி பறிசுகளை கொடுக்க அரம்பித்தார்கள்.
வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஜெயலட்சுமி, சுந்தரம் இறங்கினார்கள். ராஜேந்திரன், ராஜலட்சுமி இருவரையும் இன்முகமாக வரவேற்றார்கள்.
மேடையில் இருந்து நிலா இவர்களை பார்த்தவுடன் அவளை அறியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது என் தந்தை எனக்காகவா இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப் பட்டாள்.
விக்ரம், நிலா காது அருகே சென்று “நீ சொல்லா விட்டாலும் உன் மனதில் என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும்”.
“நீ ஆசைப்பட்டால் அதை நிறைவேற்றாமல் நான் விடமாட்டேன் டார்லிங்” என்றான். நிலா, “கண்கள் கலங்க விக்ரமை பார்த்தாள்”.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ரம் சூப்பர் பா நீ … நிலா உண்மை தெரிஞ்சா என்ன பண்ணுவா 🎉🎉🎉ஜாலி தான்