
அழகியே 15
செழியன் அவளின் அத்தான் எனும் வார்த்தை
மாமாவாகி போனதை கவனித்தவன் இதை பற்றி அரவிந்திடம் கூற வேண்டும், பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தவன் தன்னவளிடம் பேச அதில் அனைத்தும் மறந்து போனான்.
வெளியில் வந்த சவிதாவோ காரின் கதவை ஓங்கி அடித்தவள், “மாமா.. மாமா.. மாமா.. இப்படி கொஞ்சி கொஞ்சி பேசித்தாண்டி என் அத்தான என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட. மிஸ் யூ வா.. உன்னையே மிஸ் ஆக வைக்கிறேன்டி என் அத்தான் லைப்ல இருந்து” என்று வஞ்சகமாக தனக்குள்ளே கூறியவள் காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
ஒரு வாரம் சென்றிருக்க, செழியன் அன்று முக்கியமான ஆதாரத்தை தேடி சென்றவன் மறுநாள் காலையே வீட்டுக்கு வர, மிகவும் சோர்வுடன் இருந்தான். உள்ளே வந்ததும் உடையை மாற்றிக்கொண்டு தண்ணீரை குடித்தான். எதுவும் சமைக்க தோன்றவில்லை அவ்வளவு சோர்வு.
அவனவளின் புகைப்படத்தை எடுத்து வருடியவனோ, “இன்னிக்கு எனக்கு உன்னை அதிகமா தேடுது தங்கமே. சீக்கிரமா என் கிட்ட வந்துடுடி” என்றவாறே அதில் முத்தமிட்டவன் அவளின் துப்பட்டாவையும் எடுத்து நெஞ்சில் போட்டு கொண்டவன் அப்படியே தரையிலேயே பாயை கூட விரிக்காமல் படுத்து விட்டான் முன்னறையில்…
சவிதா வேகமாக உள்ளே வந்தவள் செழியனை பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, வெளியே எட்டி பார்த்தவள் சரியாய் அவன் மீது படுத்தவள், “என்ன மாமா வேதா வர்றதுக்கு ரெண்டு மாசம் ஆகும் நீ வான்னு கால் பண்ணீங்க அவ வந்துட்டா” என்று கூற,
அவளின் குரலில் கண் விழித்தவன் தன் மேல் கிடந்தவளை பார்த்து அதிர்ந்தான். வேகமாக அவளை தள்ளி விட, அவளோ, “மாமா நீங்க தானே” என்று ஆரம்பித்தவள், அப்போதுதான் பார்ப்பவளை போல் வேதாவை பார்க்க,
செழியன் சவிதாவின் செயலில் அருவருப்படைந்து அவளை அக்கினியாய் பார்வையாலே எரித்தவன், சவிதாவின் பார்வை போன போக்கை கண்டு திரும்பியவன் கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வேதாவை கண்டு அதிர்ந்து போய் செய்வதறியாது நின்றான்.
வேதா ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைத்து செழியனின் எதிரில் வந்து நின்றவள் வேகமாக அவனை அணைத்துக்கொள்ள, அவளின் செயலை தனதாக்கி கொண்டவன் அவளின் முகமெங்கும் முத்தமிட்டவன், அவளை மீண்டும் அணைத்துக்கொள்ள, இருவரின் கண்களிலும் நீர்.
“மிஸ் யூ” என்று செழியன் கூற, வேதாவோ, “ஐ லவ் யூ” என்று கூற, வாய் திறந்து கேட்டும் கிடைக்காத பொக்கிஷம் அல்லவா.
உலகையே கைக்குள் அடக்கிய மகிழ்ச்சி, அவனின் உலகமே அவள் தானே…
சவிதா தான் வேதாவின் செயலில் திகைத்து போய் நின்றாள். ஒருவேளை அவள் முழுதாய் எதையும் கவனிக்க வில்லையோ, இல்லையே அவள் உள்ளே வந்தபின் தானே அவள் இத்தனையும் செய்தது.
நான்கு வருட பிரிவின் வலியையும் ஒற்றை அணைப்பில் தீர்த்திட துடித்தனர். முதலில் தன்னிலை வந்த வேதாவோ, கண்களை துடைத்து கொண்டு சவிதாவிடம் திரும்பியவள், “இன்னுமா நீ போகல. கிளம்பு வேலை முடிஞ்சுதுல” என்று கேட்டவளை அதிர்ந்து போய் பார்க்க, செழியன் வேதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
சவிதா, “வேதா அதுவந்து மாமாதான் என்னை வரச் சொல்லி, உனக்கு புரியலையா இங்க என்ன நடந்துச்சுனு” என்று முடிக்கும் முன்பே வேதா ஓங்கி அவளின் கன்னத்தில் ஒரு அறை விட, கன்னத்தை பிடித்து கொண்டு அவளையே பார்த்தவளை தீ பார்வை பார்த்தாள்.
வேதாவோ, “இப்போ புரிஞ்சதுல, உன் ட்ராமா இங்க ஒர்கவுட் ஆகல. இது ரொம்ப பழைய மெத்தட். இன்னும் புதுசா ரெடி பண்ணிட்டு வந்து பெர்ஃபார்ம் பண்ணு ஓகே. இப்போ கிளம்பு” என்று வாசலை நோக்கி கைகாட்ட, செழியனின் பார்வை ஆக்ரோசமாய் அவளின் மேல் திரும்ப, அதற்கு மேல் நிற்காமல் வெளியில் சென்றுவிட்டாள்.செழியன் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் முன்னேறி செல்ல முற்பட்டவன் கரங்களை பற்றி இழுத்து நிறுத்தினாள் வேதா.
செழியன் வேதாவையே பார்த்துக்கொண்டு இருக்க, அவளோ “என்ன” என்று புருவமுயர்த்தி வினவ,அதில் அவனின் கோவம் கொஞ்சம் மட்டுப்பட அவளை தன் கைக்குள் கொண்டு வந்தவனோ, “உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரலையா என் மேல” என்று கேட்டான்.
அவளோ, “என்னை விட உங்களை அதிகம் நம்புறேன். நான் சர்ப்ரைஸ்ஸா இங்க வந்து உங்களுக்கு ஷாக் தரலாம்னு அரவிந்த் அண்ணாகிட்ட பேசிட்டு இருக்கும் போது, இவ குரல் கேட்டுச்சு நைட். இப்போ நான் வந்தது தெரிஞ்சு வேகமா உள்ள வந்தா. ஏதாச்சும் செய்வானு அப்போவே புரிஞ்சுக்கிட்டேன். தேவ் அண்ணா கூட இவ உங்களையே சுத்தி வரான்னு சொன்னாங்க. சோ சிம்பிள் அவ என்னமோ பிளான் பன்றானு புரிஞ்சது” என்றாள்.
அவனோ, “அது சரி போலீஸ்காரன் பொண்டாட்டி ஆச்சே. இது கூட தோணலைன்னா எப்படி, ஆனால் அவளை அப்டியே விட்ர கூடாது. சின்ன பொண்ணு பேசினா புரிஞ்சுப்பானு கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு பார்த்தா எவ்ளோ கேவலமான வேலை பார்த்துருக்கா” என்றவன் குரலில் ஆதங்கமும் கோவமும்…
வேதா “விடுங்க மாமா பாத்துக்கலாம். ஆனால் ஒண்ணு இவ சின்ன பொண்ணும் இல்லை. இப்போ நடந்தது அவ தெரியாமயும் செய்யல. இதை பத்தி லாவண்யா அக்காகிட்ட கண்டிப்பா பேசணும்”என்றவள் செழியனின் ஆராயும் பார்வையில் முகம் சிவந்தவள், “என்ன மாமா பண்றீங்க” என்று சிணுங்க, அவனோ, “நீ வளர்ந்துட்ட தங்கமே. இங்க இருந்து போகும்போது குட்டி பொண்ணா இருந்த. இப்போ அழகா இருக்க தங்கமே” என்று கன்னம் வருடி கூறினான்.
அவளோ, “ஆஹான்” என்றவள், “நான் அழகா இருக்கேனா, உங்களுக்கும் எனக்கும் கொஞ்சமாச்சும் மேட்ச் ஆகுதா, ஏன் மாமா இப்படி காமெடி பண்றீங்க” என்றவள், செழியன் அவளை முகம் பார்த்தவன், “என்ன தங்கமே இப்படி பேசுற, எப்போ இருந்து இப்படி ஒரு எண்ணம் உனக்குள்ள” என்று கேட்டான்.
அவளோ”எனக்கே தெரியும் தானே, நான் எப்படியிருக்கேன்னு” என்றவளை இழுத்து சென்று கண்ணாடியின் முன் நிற்க வைத்தவனோ, “இப்போ பாரு” என்று கூற, அவளோ, “பரவால்ல என் பக்கத்துல நீங்களும் அழகாதான் இருக்கீங்க” என்றாள் கிண்டலாக.
அவனோ, “நீ இருக்கியே.. வாய் அதிகமாகிடுச்சு உனக்கு. அத முதல்ல பனிஷ் பண்ணனும்” என்றவன் அவளை துரத்த, நான்கு வருடங்களுக்கு பின் அந்த வீட்டில் அவளின் சிரிப்பும் சிணுங்கலும்…
இரண்டு வருடங்கள் என்று கூறியது நான்கு வருடங்களாய் மாற, பிரிவின் வலி புரிதலாகவும் அதீத காதலாகவும் மாறியிருக்க, அன்று முழுவதும் கையைவிட்டால் சென்றுவிடுவாளோ அவளின் கையை பிடித்து கொண்டே சுற்றினான்.
கட்டிலில் அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவளோ, “உங்களுக்கு என்னோட சர்ப்ரைஸ் பிடிச்சுதா? நான் வருவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலதான?” என்று கேட்க, “சத்தியமா எதிர்பார்க்கல, அதுவும் இவ்ளோ அதிரடியான என்ட்ரிய” என்று கூறி சிரித்தான்.
வேதாவோ, “இடியட் எவ்ளோ சூப்பரா பிளான் பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா? எல்லாத்தையும் இந்தா சவிதா கெடுத்துட்டா, ஆமா நீங்க ஏன் வீட்ட லாக் பண்ணாம படுத்தீங்க? அவ உங்க மேல வந்து அப்படி விழற வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்று கோவமாக கேட்க,
அவனோ, “நேத்து நைட் புல்லா வீட்டுக்கே வரல தங்கமே. ஒரு இம்போர்ட்டண்ட் கேஸ். சோ நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வேண்டியது இருந்துச்சு. மார்னிங்தான் வந்தேன். இன்னைக்கு வேற உன் நினைப்பு அதிகமா இருந்துச்சு. அதான் எதுவும் தோணல. அப்படியே தரைல உட்கார்ந்தேன். தூங்கிட்டேன் போல. ஏதோ பேசற குரல் கேட்கவும் முழிச்சேன்” என்றான் அவன்
“அச்சோ அப்போ காலைல சாப்பிடலையா?” என்று கேட்க, அவனோ, “நேத்து மதியம் சாப்பிட்டேன் தங்கமே. லேட் நைட் சாப்பிட்டா செட் ஆகாது. மார்னிங் பாத்துக்கலாம்னு நெனச்சேன். தூங்கவும் இல்ல ரொம்ப டையார்ட் ஆகிட்டேன். அதனால அப்படியே படுத்துட்டேன்” என்றான்.
அவளோ, “முன்னாடியே சொல்லிருக்கலாம்ல. வந்ததும் நான் சமைச்சிருப்பேன்ல” என்று கூற, “அது சரி எனக்கு சமைச்சு போட்டு சேவை செய்யதான் வந்தியா நீ?” என்று இவன் கிண்டலாக கேட்க, “அஃப் கோர்ஸ் அதுக்குதான் வந்தேன். உங்களுக்கு சமைச்சு போட்டு சேவை செய்றத விட எனக்கு வேறெதுவும் முக்கியம் இல்லை. நான் போய் சமைக்கிறேன்” என்று கூறி கட்டிலை விட்டு இறங்கியவளின் கையை பிடித்து இழுக்க, அவளோ அவன் மார்பிலே விழந்தாள்.
“சமைக்க தேவையான பொருள் எதுவும் இல்லடா. நான் சமைச்சு ஒன் வீக் மேல ஆகுது. டைட் ஒர்க். சோ ஹோட்டல் சாப்பாடு தான். ஒண்ணு பண்ணுவோம் நான் ஆர்டர் பண்றேன் இப்ப சாப்பிடறதுக்கு. ஈவினிங் நாம ரெண்டு பேரும் போய் தேவையான திங்ஸ் வாங்கிட்டு வரலாம் ஓகேவா. அப்புறம் உன்னோட ஒர்க் அங்க ஓவர்தான? மறுபடியும் போகணுமா” என்று கேட்க, அவளோ, “அவளோதான் மாமா. மண்டே இங்க இருக்க ஆபீஸ்ல ஜாயின் பண்ணிடுவேன்” என்றவள் கூறிய பின்னே நிம்மதியாய் உணர்ந்தான்.
இருவருக்கும் உணவை ஆர்டர் செய்து தருவித்தவன் முதலில் ஒரு வாய் எடுத்து அவளுக்கு ஊட்ட, அதுவரை அமைதியாய் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள், “நியாபகம் இருக்கா மறந்துருப்பீங்க நினச்சேன்” என்றவாறே அவன் ஊட்டியதை வாங்கிக்கொள்ள அவனோ, “மறக்குறதா அந்த பத்து நாட்கள் நினைப்புலதான் இந்தா நாலுவருசமும் போச்சு” என்றான்.
அதில் நெகிழ்ந்து போனவள் அவனுக்கு ஊட்ட, ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டும் கடந்த கால நினைவுகளை பேசிக்கொண்டும், உணவை உண்டனர். வேதா வீட்டுக்கு வந்தது தெரிந்தும் அரவிந்தும் தேவ்வும் வரவில்லை. அவர்களின் வலியை அறிந்தவர்கள் அவர்களுக்கான தனிமையை தர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களின் வாழ்வும் தொடங்கியது.
ஒருவருள் ஒருவர் மூழ்கிப்போய் காதலில் தங்களை தொலைத்தனர். அவனுக்கு அவள் சலிக்கவே இல்லை. அவளின் சோர்ந்த முகத்தை கண்டவன் மனமே இல்லாமல் அவளை விட ஆதவன் வர இரண்டு மணி நேரங்களே இருந்தது.
அவனின் மார்பில் தலை வைத்து படுத்தவளோ, “என்னோட லைஃப் முழுமை அடைஞ்ச மாதிரி இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க இந்த நிமிஷம் போதும் மாமா” என்று கூற, அவனோ, “எனக்கு அப்படியில்லை தங்கமே.. என் வாழ்வின் எல்லை வரைக்கும் நீ வேணும். நீ நான், நம்ம குழந்தைங்க நமக்கே நமக்கான லைஃப், நம்மள அவமானப்படுத்துனவங்க முன்னாடி செம்மையா பெருவாழ்வு வாழனும்.” என்று அவன் அனுபவித்து கூற, அதைக் கேட்டவளின் இதழ்கள் தாராளமாய் விரிய அவனின் அருகாமையில் நீண்ட நெடிய நாட்களுக்கு பின் நிம்மதியாய் துயில் கொண்டாள்.
அவளை அணைத்துக்கொண்டவனுக்கு உறக்கமே வரவில்லை. விடியும் வரை அவளின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.அவளின் இந்த நிம்மதியும் மன நிறைவும் நிலைக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான். அதற்கு இன்னும் பல கஷ்டங்களையும் பிரிவுகளையும் சந்திக்க வேண்டிருக்கும் என்று அவன் அறியவில்லை அப்போது…

