
அன்று:
அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில், அகரநதியும், தீராவும் அழைத்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்திருக்க, குழந்தையை முதலில் கையில் ஏந்தியிருந்த அகரநதி புதிதாய் உணர்ந்தாள், இதுவரை அவளுக்கு இப்படியொரு அனுபவம் கிடைத்ததில்லை, குழந்தையும் அவள் கரங்களில் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தது போல், விழி மூடி நித்திரைக்கொண்டிருந்தாள். அதன் பின் அங்கிருந்த செவிலி மீண்டும் குழந்தையை வாங்கிச் சென்ற சமயம், தீரேந்திரன் மருந்துகள் வாங்கி வந்துக்கொண்டிருந்தான். தாயும் சேயும் வார்ட்டுக்கு மாற்றபட, அவரிடம் தொலைப்பேசி எண் வாங்கி அவருடைய கணவருக்கு விசயத்தைச் சொன்ன தீரேந்திரன், அங்கே கையைப் பிசைந்துக்கொண்டிருந்த நதியை பார்த்து,
“நீங்க எப்படி வீட்டுக்கு போறீங்க.? ட்ராப் பண்ணணுமா..?” எனக் கேட்டான் தீரேந்திரன். அவன் தயங்கி கேட்டதில் அவள் வழிகள் சிரித்ததையும்.அவள் கண்களை ஆராய்ச்சியால் பார்த்தான்.
“இல்லை என்னோட ஃப்ரெண்டு வந்திருவான், என் சிங்கத்தை எடுத்திகிட்டு” என்றவளின் குரல் சற்று பதற்றம் கொண்டதோடு, அவன் விழிகளை சந்திக்க முடியாமல் தலை தாழ்த்தினாள் அவள்.
“என்னது சிங்கமா.?” புரியாது அவளைப் பார்த்தான். அவளின் குரலை கேட்க ஆர்வம் கொண்டு மேலும் கேள்விகளை தொடுத்தான்
“என் வண்டியை தான் சொன்னேன்” என அவள் சொன்னாள். அவன் இதழ்கள் புன்னகையை தத்தெடுக்க, அவளும் சிரித்துக்கொண்டு தான் இருந்தாள்
“ஆமா சென்னை முழுக்க இப்படி முகமூடி கொள்ளைக்காரி மாதிரி தான் சுத்துவிங்களா.?” அவள் முகத்தைத் துப்பட்டாவால் மூடியிருப்பதைப் பார்த்து நக்கலாய் கேட்டான். அவள் முகத்தை பார்க்கும் ஆர்வத்தில் கேட்டானா. இல்லை காவல்காரன் என்ற துப்பறியும் நீக்கத்தால் கேட்டானா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
அவன் கேட்டதில் அவளும் சிரிக்கத் தான் செய்தாள். ஆனால் அவனிடம் பேச வார்த்தைகள் வராமல் தயங்கி நின்றிருந்த சமயம் கார்த்தி அங்கு வந்து சேர்ந்தான். ‘இவன் எதற்கு இப்போது வந்தான்’ என்பது போல் அவனை பார்த்து வைத்தாள்.
“அதி போகலாமா..?” கார்த்திக் கேட்டான்.
“ம்ம் போகலாம் டா, அந்த அக்கவோட ஹஸ்பண்ட் வரணும் அதான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்” எனத் தீராவையும் சேர்த்து சொன்னாள்.
“அதெல்லாம் சார் பார்த்துப்பாங்க நீ கிளம்புடி, வீட்ல தேடுவாங்க” என அவளை உரிமையோடும் , அக்கறையோடும் அழைத்தான் கார்த்தி,
“நீங்க போகலாம் ஐ வில் டேக் கேர்” எனத் தீரேந்திரன் மொழிய சரியெனத் தலையாட்டி அங்கிருந்து கார்த்தியுடன் புறப்பட்டாள் அகரநதி.
“ஏன்டா கார்த்திக் கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம்ல” சற்று கோபமாய் மொழிந்தாள்.
“ஏன்டி உன்னை வீட்டுல தேடமாட்டாங்களா.? மணி ஆறு தெரியுமா.? உனக்கெல்லாம் பயமே இல்லை” சாலையில் தன் விழிகளைப் பதித்தபடி அவன் பேசிக்கொண்டிருந்தான்.
“இல்லை அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்திருப்பேன்” அவள் தயங்கி சொன்னாள்.
“எவருகிட்ட..?” புரியாது கேட்டான் அவன்.
“அதான் நமக்கு ஹெல்ப் பண்ணினாரே அவருடா”
“அவருகிட்ட நீ என்ன பேசப்போற, அவரு டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவருடி” எனச் சொல்லி அவள் முகத்தைப் பைக்கின் கண்ணாடி அவளைப் பார்த்தான் கார்த்திக்.
“அவரு வெஜ்ஜா, நான் வெஜ்ஜான்னு கேட்கணும்டா”
“என்னது வெஜ்ஜா, நான் வெஜ்ஜான்னு கேட்டு நீ சமைச்சுக் கொடுக்கப் போறீயா அதி.? அது அவரைக் கட்டிக்கபோற பொண்ணோட கவலை, உனக்கு எதுக்கு அந்தக் கவலை” எனக் கார்த்திக் கேட்க, நாணப் புன்னகை சிந்தினாள் அகரநதி.அதைக் கண்ணாடி வழியே தவறாமல் பார்த்துவிட்டான் கார்த்தி.
“ஏய் நீ இப்போ என்ன பண்ணின, வெயிட் வெயிட்” எனச் சாலையின் ஓரம் வண்டியை நிறுத்தியவன்.
“மேடம் கொஞ்சம் இறங்குங்க” புன்னகையுடன் சொன்னான்.
“டேய் கார்த்தி டைம் ஆகுது வண்டியை எடுடா” எனச் சொல்லியபடி இறங்கினாள்.
“நீ இப்போ என்ன பண்ணின, வெட்கபட்ட தானே” அவள் தோளை உலுக்கி கேட்டான்.
“அதெல்லாம் இல்லைடா. அட்லீஸ்ட் அவரோட ஃபோன் நம்பர் ஆச்சு வாங்கிருப்பேன் . கெடுத்து விட்டுட்ட பக்கி”
“ஃபோன் நம்பர் வாங்கி என்னடி பண்ணப்போற??”
“ஒன்னுமில்லை சும்மா தான்” என மழுப்பலாக அவள் வேறு எங்கோ பார்த்து பேசினாள்.
“ஏய் அதி என்கிட்ட உன்னால பொய் சொல்லவும் முடியாது, மறைக்கவும் முடியாது சொல்லுங்க மேடம் என்ன விசயம், அந்தப் போலீஸ்காரரை பிடிச்சிருக்கு போலையே”
“ம்ம்ம்” என மௌனமாய்த் தலையாட்டினாள் அதி.
“மேடம்க்கு தான் போலீஸை கண்டாலே பிடிக்காதே, அப்பறம் எப்படி இந்த மிரக்குள் நடந்திச்சின்னு இந்த அபலை கார்த்திக் தெரிஞ்சுக்கலாமா.?” என நக்கலாய் கேட்டான் கார்த்திக்.
“ஆனா இவரைப் பிடிச்சிருக்கே” எனச் சொன்னவளின் வதனம் செவ்வானமாய்ச் சிவந்து போனது.
“ஆமா இவ்வளவு நேரம் அவர் கூடத்தானே இருந்த, உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அதெப்படிடா சொல்றது, நோன்னு சொல்லிடாருனா, அய்யோ அதை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை, மை லிட்டில் ஹார்ட் ஹெர்ட் ஆகிருமே”
“அதி உண்மையா தான் சொல்றீயா நிஜாமவே இது லவ் தானா.? இல்லை க்ரஷாடி”
“தெரியலையேடா” முகத்தை வாட்டமாய் வைத்துக்கொண்டாள் அதி.
“சரி அப்போ நான் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு, நான் க்ரஷா லவ்வான்னு கன்ஃபார்ம் பண்ணுறேன்” எனச் சொன்னவன் கேள்விகளைக் கேட்க போக,
“நீ சும்மா எதையாவது கேட்டு என்னைக் குழப்பாதேடா, இது லவ்வா க்ரஷான்னு உன்னை ஆராய்ச்சி பண்ண சொன்னேனா.?” கோபம் போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.
“சரி சரி நீ பேச்சை மாத்தாமல், உன் லவ் ஸ்டோரிய சொல்லு கேட்டுகிட்டே வண்டியை ஓட்டுறேன்” எனக் கார்த்திக் ஆர்வமாய்க் கேட்க,
அவளும் வாகனத்தின் பின்னே அமர்ந்து அவனிடம் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொன்னதைக் கேட்டு உற்சாகமாய் வண்டியை இயக்கி கொண்டிருந்தவன்.
“ஆஹா என்ன ஒரு காதல் கதை, அதெப்படி போசாமலே லவ் பண்ணிட்டு இருக்க அதி”
“அவர்கிட்ட நான் எப்படிடா பேசுறது, என் முகத்தைக் கூட அவர் முழுசா பார்த்தில்லை டா கார்த்தி”
“ஆமா ஆமா அதி நல்ல வேளை உன் மூஞ்சியைக் காட்டலை, உன்னை பார்த்து அவரு பயந்திட்டாருனா என்ன பண்ணுறது, உன் முட்டை கண்ணைப் பார்த்ததுக்கே மனுசன் பாவம் என்ன நிலைமையில இருக்காரோ. கண்ணை காட்டியே மயக்கிடலாம்னு நினைக்காதே அதி.”
“டேய் குரங்கு, ஏன் என் முகத்துக்கு என்னடா குறை”
“அங்கே எல்லாமே குறை தானே” அவன் அவளை வம்பிழுத்தான்.
“உன் ஆளை விட எங்க மூஞ்சி நல்லா தான் இருக்கு” அகரநதி வெடித்தாள்
“ஆமா யாருடி என் ஆளு” சிறு பிள்ளை போல் நடித்தான் கார்த்தி.
“ரெண்டும் சரியான திருட்டு கொட்டுங்க, என்கிட்டையே மறைக்குறீங்கல்ல, பார்க்கிறேன் நானும் எத்தனை நாள் இந்தத் திருட்டுத் தனம் நடக்குதுன்னு”
“அய்யோ சிஐடி மேடம் கண்டுபிடிச்சுடாங்களே” எனச் சொல்லி கார்த்திச் சிரிக்க,
“டேய் வீடு வந்திருச்சுடா, நீ பாட்டுக்கு தாண்டி போகிற” என அவள் தலையில் நங்கெனக் கொட்டு வைத்தாள். அதன் பின் அவனையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அகரநதி.
“ம்மா யாரு வந்திருக்காங்க பாரு” எனச் சொன்னவள் தொப்பெனச் சோபாவில் விழுந்தாள், தயங்கிய படி வாசலிலே நின்றுக்கொண்டான் கார்த்தி.
“என்னடா கார்த்தி வாசல்லையே நின்னுட்ட ஆராத்தி எடுத்தா தான் உள்ள வருவீயா.?”
“ஏய் லூசு பயமா இருக்குடி”
“ச்சீ சீன் போடாம உள்ளவா” என அதி அழைக்க, தயங்கியபடியே வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்திக்.
அவன் உள்ளே நுழைந்த போது அடுக்களையிலிருந்து வெளிப்பட்டார் வசந்தி.
“வா தம்பி, உள்ளவா” அழைத்தார் வசந்தி.
“ம்மா நீ போன்ல பேசிட்டு இருக்கக் கார்த்தி இவன் தான், நான் வீட்டுக்கு வர லேட் ஆனா இவனுக்கு உடனே போன் பண்ணிடுற, அவன் கேள்வி மேல கேள்வி கேட்கிறான்” எனச் சொன்னவள் கார்த்தியை பார்த்து முறைத்தாள்.
“ஏய் அதி போ போய் ட்ரெஸ் சேன்ஞ்ச் பண்ணு” எனச் சொன்ன வசந்தி கார்த்திப் புறம் திரும்பி.
“டீயா காபியா தம்பி” எனக் கேட்க,
“அய்யோ அதெல்லாம் வேண்டாம்மா , அதியை விட்டுட்டு போகலாம்னு வந்தேன்” எனச் சொல்லி அவன் எழ,
“இருப்பா காபி குடிச்சிட்டு போ” என வசந்தி வலியுறுத்த, அவரின் வற்புறுத்தலில் சரியெனத் தலையாட்டினான் கார்த்தி, அதன்பின் காபி வர அதைப் பருகிவிட்டு அவன் கிளம்பிய போது கேட் வரை வந்து வழியனுப்பினாள் அதி.
“அதி நான் ஒன்னு கேட்பேன் என்னைத் திட்டக் கூடாது”
“என்னடா சொல்லு..?”
“ஒரு வேளை உன்னோட தீரேந்திரனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால் என்னடி பண்ணுவ.?”
“ஆமால அப்படி ஒன்னு இருக்குதுல, கல்யாணம் ஆகிருக்குமாடா கார்த்தி.?”
“போலீஸ்காரர் வேற ஒன்னுக்கு ரெண்டே நடந்திருக்கலாம்” எனச் சொல்லி,
கேட்டின் அந்தப் புறம் நின்று அவன் சிரிக்க,
“அடேய் மாங்கா நீ சொல்றது பழிச்சிற போகுதுடா, கன்னத்துல தப்பு போட்டுக்கோ” என அதி சொன்னாள்.
“சரி அதி நாளைக்குப் பார்க்கலாம்” என அவன் நடந்து சென்றான், அவனைப் பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் கோபாலன்.
“அப்பா வாங்கப்பா, இப்போ தான் என் ஃப்ரெண்டு போனான், நீங்களும் வந்துட்டீங்க” எனத் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டாள் அதி.
“அதிமா இப்போ மணி என்ன ஆகுது..?”
“ஆறரைப்பா”
“இந்தச் சமயத்துல ஒரு பையன் நம்ம வீட்டுக்கு வந்திட்டுப் போறது நல்லாவா இருக்கு”
“அது இல்லைப்பா, என்னை விட்டுட்டுப் போகத் தான் வந்தான்ப்பா, கார்த்தி எனக்கு நல்ல ஃப்ரெண்டுப்பா”
“இருக்கட்டும்மா, ஆண் பெண் நட்பு இந்தக் காலத்துல சகஜம் தான் நான் இல்லைன்னு சொல்லலைமா, ராத்திரி நேரத்துல வந்துட்டுப் போறது நல்லா இல்லைமா , அப்பா உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேன்னு தெரியும்ல”
“சரிப்பா, இனி பார்த்து நடந்துக்கிறேன்” எனச் சொல்லி தந்தையின் தோள் சாய்ந்தாள் அதி.
“ஆமா என்னமா உன்னோட தோடு எங்க காணலை” எனக் கோபாலன் கேட்க அவள் செவிகளில் கைவைத்து பார்க்க, அவள் செவிகளில் மாட்டியிருந்த கம்மலின் வளையத்தைக் காணவில்லை.
“அச்சோ அப்பா எங்க போச்சுன்னு தெரியலையே நான் கார்த்தியை அழைச்சிட்டுப் போய்க் காலேஜ்ல தேடிட்டு வரவப்பா”
“விடுமா சின்ன வளையம் தானே போயிட்டு போகுது, அப்பா உனக்கு வேற வாங்கித் தர்றேன்”
“இது என்னோட ஃபேவரைட்ப்பா, லக்கி கூட எக்ஸாம் டைம்ல இந்தக் கம்மல் தான் யூஸ் பண்ணுவேன்” முகத்தைச் சோகமாய் வைத்திருந்த தன் மகளைச் சமாதானம் செய்து வீட்டிற்க்குள் அழைத்துச் சென்றார் கோபாலன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தீரா வும் அவளை லவ் பண்ணியிருப்பான் போல … லவ் ஃப்ரெண்ட்ஷிப் அப்படின்னு கதை நல்லா விறுவிறுன்னு போகுது …
தீராவுக்கு கண்ணை மட்டுமே காட்டிட்டு இருந்திருக்கா அகர்.
அவ தீரா கிட்ட பேச்சை வளர்ந்திட்டு இருக்க கார்த்தி இடையில் வந்து சொதப்பிட்டானே.
இப்படி திடீர்னு வெட்கப்பட்டா பயந்துட மாட்டான் பாவம் 🤭 அதான் சட்டுனு வண்டிய நிறுத்திட்டான்.
கார்த்தி சரியா தானே கேட்கிறான், தீராவுக்கு கல்யாணம் ஆகிருந்தா என்ன செய்வ அகர்?
அகரநதியின் அம்மா இயல்பாக பழகினாலும் அவளது அப்பாவிற்கு ஆண் பெண் நட்பில் சிறு நெருடல். அது இயல்பானதே ஒரு பாதுகாப்பு உணர்வு.