
காதல் – 14
அஸ்வா விஹான்மேல் அளவிட முடியாத அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாள் அது அவளின் பேச்சிலே தெரிந்தது…..
விஹான்னா தன் அண்ணன் ஒரு கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டான் என்று அவள் கூறியதை அஸ்வா நம்பவில்லை….
அஸ்வா என்னோட அண்ணன உனக்கு இந்த பதினாலு நாள் தானே தெரியும் பின்ன எப்படி என்னோட அண்ணன் மேல உனக்கு இவ்வளோ நம்பிக்கை?நடந்த பிரச்சனை எதுவும் கேக்காம எப்படி நீ இவ்வளோ உறுதியா சொல்லுற?
அதெல்லாம் அப்படிதான்….
அண்ணனுக்கு என்ன பிரச்ணைன்னு உனக்கு தெரியுமா?
நீ சொன்னாதான் தெரியும்….
அவ பேரு மனிஷா….
(பிளாஷ் பேக்)
அந்தக் கல்லூரி மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது மாணவர்களும் ஆசிரியர்களும் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்…..
விஹான் தன் காரில் அப்பொழுதுதான் காலேஜிற்குள் நுழைந்தான்…..
நல்ல ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக இருந்தான்….
தலை முடியை அழகாக ஜெல் வைத்து செட் செய்திருந்தான்….
நல்ல காஷ்மீரின் ஆப்பிள் நிறம்….
கண்களில் கூலர்ஸ் அணிந்திருந்தான்…
கழுத்தை ஒட்டினார் போல தங்கச் செயின் அணிந்திருந்தான்….
வெள்ளை சட்டை அணிந்து கைமுட்டி வரை சட்டையை மடக்கி விட்டு கருப்பு பேண்ட் அணிந்திருந்தான்..
ஒரு கையில் காப்பும் மறுக்கையில் ரோலக்ஸ் வாட்சும்…
நெஞ்சின் குறுக்கே தோல் பையை மாட்டிக் கொண்டு ஒரு பாக்கெட்டில் கைவிட்டபடி ஸ்டைலாக நடந்து வந்து கொண்டு இருந்தான்……
அவனைப் பார்த்து மயங்காத பெண் ஆசிரியர்களே அங்கு இல்லை….
அந்தக் கல்லூரியின் பெண்கள் அனைவருக்கும் கனவு கண்ணனாக திகழ்ந்தான்…..
அவனை நினைத்து அந்தக் கனவு காணும் கண்ணிகளில் ஒருவள் தான் மனிஷா….
இரண்டாம் ஆண்டு கணிதம் பயின்று கொண்டிருக்கும் மாணவி அவள் , அவளின் கிளாஸ்ஸிற்க்கு அலைட் பிசிக்ஸ் எடுக்க விஹான் செல்வதுண்டு அப்பொழுது வயது கோளாறால் அவனை காதலிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவனை சுற்றி சுற்றி வந்தாள்……
முதலில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை வழங்கிப் பார்த்தான் அவள் கேட்பதாய் இல்லை…..
பிறகு சிறிது குரலை உயர்த்தியும் திட்டி பார்த்தான் அவள் கேட்பதாய் இல்லை வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள்……
ஒரு நாள் அவன் அவளை அடிக்க கை ஓங்கி விட்டான் ஆனால் அவளை அடிக்காமல் சென்று விட்டான்…..
இதை மனிஷாவின் தோழிகள் இருவர் பார்த்து விட்டனர் …..
அதை கௌரவ குறைச்சலாக நினைத்தவள் விஹானை பழிவாங்க நினைத்தாள் ……
அதற்காக அவள் கையில் எடுத்த ஆயுதம் தான் விஹான் மேல் பழி போடுவது…….
அன்று ஆசிரியர்கள் அறையில் யாரும் இல்லை , விஹான் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு தேர்வு தாள்களை திருத்திக் கொண்டிருந்தான்….
அப்பொழுது….
மே ஐ கம் இன் சார் என்று மனிஷா அந்த ஆசிரியர் அறையில் தன்னுடைய முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள்…..
அவளை கோபமாக ஒரு பார்வை பார்த்தவன் , எஸ் கமின் என்று கூறினான்…
என்ன சார் எப்படி இருக்கீங்க? எல்லா ஸ்டுடென்ட்ஸும் ஒழுங்கா டெஸ்ட் எழுதி இருக்காங்களா?
நீ எதுக்கு இப்ப இங்க வந்த?
அத சொல்லு….
எனக்கு நீங்க வேணும் அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல…..
எவ்வளவு தடவை சொன்னாலும் உனக்கு அறிவே வராதா? நீ ஒரு ஸ்டூடன்ட் உனக்கு நான் ஒரு ஆசிரியர் , ஆசிரியர்ன்னா யாருன்னு உனக்கு தெரியுமா அம்மா அப்பாவுக்கு சமம் ….
போதும் போதும் உங்களோட இந்த பழைய பஞ்சாங்கத்த நீங்களே வச்சுக்கோங்க ,
எங்கிட்ட இப்ப நீங்க என்ன சொன்னாலும் எனக்கு புரியாது சோ என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க உங்ககிட்ட வேற ஆப்ஷனே இல்ல…..
ஏய் மரியாதையா வெளியே போ….
நா என்ன உங்கள ரேப்பா பண்ண போறேன்?
என்ன பார்த்து இப்படி பயப்படுறீங்க என்று அவள் சிரித்தாள்….
மனிஷா என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ஒழுங்கு மரியாதையா வெளியே போ, சின்ன பொண்ணாச்சே இதப்பத்தி நான் வெளியே ஏதும் சொன்னா உன்னோட படிப்பு கெட்டுப் போயிடுமேன்னு அமைதியா இருக்குறேன் இல்லன்னு வை இந்நேரம் உன்னோட டிசி எப்பவோ கிழிஞ்சிருக்கும்…..
விஹான் சார் என்கிட்ட அறிவில்லையா? அழகு இல்லையா? பணம் இல்லையா? என்னோட அப்பா எவ்ளோ பெரிய பிசினஸ்மேன் தெரியுமா என்ன மட்டும் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா பெரிய பணக்காரங்க ஆகிடலாம், என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு இவ்வளவு பிராஃபிட் இருக்கிறப்போ என்னை எதுக்கு வேணான்னு சொல்றீங்க?
உன்னோட டிக்ஸ்னரில இதுக்கு பேரு தான் காதலா? காதல்ன்னா என்னன்னு உனக்கு தெரியுமா? காதல் என்பது ஒரு புனிதமான வார்த்தை …. அதை நீ உன் வாயால தயவு செய்து சொல்லாத அதோட புனிதமே கெட்டுப் போயிடுது….. என்ன நீ எதுக்கு லவ் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்…. நா அழகா இருக்கேன் அப்படிங்கறதுக்காகதான?
யா அஃப் கோர்ஸ் , நீங்க ரொம்ப ஹேன்ஸமா இருக்கீங்க அண்ட் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கூட நா வெளிய போனா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும் , இவளோ அழகான ஒருத்தங்கள இந்த பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்குது அப்படின்னு நம்ம ரெண்டு பேரு ஜோடியை பாத்து சொல்வாங்க….
மனிஷா நீ பேச பேச எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகுது, ஒழுங்கா இங்கருந்து வெளியே போயிடு இல்லாட்டி கழுத்தை புடிச்சு வெளிய தள்ளிடுவேன்…..
எங்க என் மேல கை வைங்க பாப்போம் என்று அவள் அவன் அருகில் வந்தாள்….
அவளின் அந்த கேவலமான செயலை பார்த்த விஹான் தலையில் கை வைத்தபடி அமர்ந்து விட்டான்…..
அப்பொழுது திடீரென்று தன் சட்டையை கிழித்துக்கொண்டும், தலை முடியை அவிழ்த்துக் கொண்டும் அந்த ஆசிரியர் அறையை விட்டு மனிஷா வெளியே ஓடினாள்…….
அவளின் இந்த திடீர் செய்கையை பார்த்த விஹானுக்கு ஒன்றும் புரியவில்லை…..
மனிஷா வெளியே சென்று விஹான் சார் என்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறாங்க என்று அவன் மீது பொய் புகார் கூறினாள்…..
அந்தக் கல்லூரியின் முதல்வர் பெண் என்பதால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை தட்டி கேட்பதாக நினைத்து விஹானிடம் எந்த விசாரனையும் செய்யாமல் அவனை பணியில் இருந்து மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்தார்…..
விஹான் தனக்கு நேர்ந்த அநீதியை தட்டி கேட்டான் …. அவனின் நண்பர்களும் அவனுக்கு சப்போர்ட்டாக இருந்தனர் அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் படி கல்லூரியின் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்…
அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு கேமராக்களை ஆய்வு செய்து பார்க்கும் போது தான் தெரிந்தது மனிஷா தான் தவறு செய்துவிட்டு பழியை விஹான் மீது போட்டிருக்கிறாள் என்று…..
தான் விசாரிக்காமல் போனதால்தான் ஒரு நிரபராதியை குற்றம் சுமத்தி பணி இடை நீக்கம் செய்ய நான் தான் முழு காரணம் என்பதால் அந்த கல்லூரி முதல்வர் வேலையை ராஜினாமா செய்தார்…..
விஹான் மீது எந்த தவறும் இல்லை என்று அந்த முதல்வர் கூறிவிட்டு அனைவரின் முன்னிலையிலும் விஹானிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அவனை திரும்ப கல்லூரிக்கு வர சொன்னார் ஆனால் அவன் கல்லூரிக்கு மூன்று மாதங்களுக்கு பிறகுதான் வருவேன் என்று சென்று விட்டான்……
அன்றிலிருந்து அவன் யாரிடமும் பேசுவதில்லை அவன் அறையிலே முடங்கி கிடந்தான் அவனைப் பார்த்து அவனின் குடும்பத்தினர் வருந்தாத நாள் இல்லை…..
இதனால தான் விஹான் இப்படி இருக்குறான் அஸ்வதி…..
விஹான் ரொம்ப பாவம்ல விஹான்னா?அவங்க செய்யாத தப்புக்காக இவ்வளவு நாள் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்காங்க…..
ஆனா அந்த பிரின்சிபல் தான் இவன் மேல தப்பு இல்லன்னு சொல்லிட்டாங்களே அப்புறமும் ஏன் இப்படி இருக்குறான்? இவன பார்த்து எங்களுக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு….
நீ இப்படி யோசிக்கிற விஹான்னா , ஆனா விஹான் இடத்துல இருந்து யோசிச்சு பாரு உனக்கு புரியும் , விஹான் இவ்வளவு நாள் வேலை பார்த்த இடத்துல அவர வேற யாருமே புரிஞ்சுக்காம இப்படி ஒரு பெரிய பழிய அவங்க மேல சுமத்தினதால விஹான் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டாங்க அதான் அவங்க இவ்ளோ நாள் இப்படி இருந்துருக்குறாங்க…..
ஆமா இப்படியும் யோசிக்கலாம்ல?அஸ்வதி நீ என்னோட அண்ணன ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க சோ உன்கிட்ட நா ஒன்னு கேக்க போறேன் அதுக்கு நீ உண்மையா மட்டும் தான் பதில் சொல்லணும்…..
சரி நா உண்மைய சொல்றேன் என்ன கேள்வி அது?
நீ என்னோட அண்ணன விரும்புறயா?
எனக்கு இந்த பீலிங் பேரு என்னன்னு தெரியல…. ஆனா நான் விஹான் கூட இருக்குறப்போ ரொம்ப பாதுகாப்பா இருக்குற மாதிரி பீலா இருக்கும் அவங்க கூடவே இருந்துடலாம் போல தோணும்… அவங்க கண்ணுல என் மேல அவ்வளவு காதல் தெரியும்….. அதுவும் அவங்களோட மொத்த காதல் எனக்கு மட்டும்தா சொந்தம்ன்னு விஹான் சொல்லும் போது எனக்கு ரொம்ப …. அது எப்படி சொல்ல?? சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கும் ஆனா…..
ஆனா என்ன அஸ்வதி?
என்னோட அம்மாவும் தங்கச்சியும் எம்மேல இருக்குற கோவத்துல விஹான அவங்க ஏதும் செஞ்சுற கூடாது அதான் பயமா இருக்கு…..
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அஸ்வதியின் தாயார் அவளை அழைக்கும் குரல் கேட்டது அதில் பதறிப் போய் அவள் எழுந்து ஓட முயலும் போது அவள் யார் மீதோ மோதி நின்றாள்….
நிமிர்ந்து பார்த்தால் விஹான்தான் சிரித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான்…..
அடக்கடவுளே நா பேசுனது எல்லாம் இவங்க கேட்டுருப்பாங்களோ?விஹான்னாக்கிட்ட நான் என்னோட மனசுல உள்ள எல்லாத்தையும் சொன்னத விஹான் கேட்டுருப்பாங்களோ என்று அவள் மூளையில் ஆயிரமாயிரம் சிந்தனைகள்…..
நீ ரொம்ப யோசிக்காத நீ பேசுனது எல்லாத்தையும் நா கேட்டுட்டேன் இப்போ உங்கம்மா கூப்பிடுறாங்கல்ல வா போலாம் என்று அவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான்….
விஹான் அஸ்வதியின் கைகளை பிடித்துக் கொண்டு வருவதை சுலோச்சனா மற்றும் அனந்தி பார்த்தனர்….
அவர்கள் இருவருக்கும் அஸ்வதியையும் விஹானையும் ஒன்றாக பார்த்தது கோபத்தை வரவழைத்தது…..
சொல்லுங்க சுலோச்சனா ஆண்ட்டி, எதுக்கு என்னோட அஸ்வதியை கூப்பிட்டீங்க?
என்னது உன்னோட அஸ்வத்தியா?
ஆமா இவ என்னோட அஸ்வதிதான் என்று அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு பேசினான்…..
தம்பி பிரண்ட்ஷிப்புக்கு ஒரு அளவு உண்டு அதை நீங்க கடைபிடிக்கிறது ரொம்ப நல்லது…..
அஸ்வதி கிட்ட இருந்து தூரமா இருங்க இவ நல்லவ கிடையாது, உங்க சொத்தையும் பணத்தையும் பார்த்து தான் இவ உங்க பின்னால சுத்துறா , அத புரிஞ்சுக்கோங்க…..
அஸ்வதியே என்கிட்ட இருந்து தூரமா இருக்கனும்ன்னு நினைச்சாலும் அவள என்னால தூரமா விட்டுட்டு இருக்க முடியாது ,
அப்புறம் ஒரு சின்ன திருத்தம் இவ என் பின்னால சுத்தல நாதான் இவ பின்னாடி சுத்திட்டு இருக்கேன் என்று அவன் அவளின் தாயாரைப் பார்த்து தைரியமாக கூறினான்…..
அவன் பேசுவதையே அஸ்வதி வாய் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்….
இதுவரை அவள் சுலோச்சனாவிடம் இவ்வாறு பேசியதில்லை ஆனால் தனக்காக ஒருவன் பேசுகிறான் என்று எண்ணும்போது அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை……
அப்புறம் ஆன்ட்டி இனிமே என்னோட அஸ்வதி மேல கை வைக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க நாங்க வரோம் பாய் பாய் சீ யூ என்று அவன் சுலோச்சனாவின் பதிலை எதிர்பார்க்காமல் அஸ்வதியின் கைகளை பிடித்துக் கொண்டே சென்றான்……
இதைப் பார்த்த சுலோச்சனாவிற்கும் அனந்திக்கும் கோபம் கரையை கடந்தது இவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தனர்…..
அஸ்வதியின் கைகளை பிடித்துக் கொண்டு விஹான் ரோஜா பூந்தோட்டத்திற்கு அவளை அழைத்து சென்றான்……
அந்த ரோஜா பூந்தோட்டத்திற்கு மத்தியில் இருந்த ஊஞ்சலில் அவன் அவளை அமர வைத்துவிட்டு அவளுக்கு மிக மிக நெருக்கமாக நெருங்கி அமர்ந்தான்…..
அஸ்வி …..
ஹான் சொல்லுங்க….
உனக்கு ஏன் என் மேல அவ்ளோ நம்பிக்கை? என்னோட தங்கச்சி எனக்கு நடந்த கசப்பான விஷயங்கள சொல்றதுக்குள்ள நான் தப்பு பண்ணிருக்க மாட்டேன் அப்படின்னு எப்படி நீ சொன்ன?
அவள் அவனின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்….
என்ன பதிலே சொல்ல மாட்டேங்குற?
உங்க கண்ணுல எனக்கு பொய் தெரியல , அதான் ….. அப்புறம் உங்க கண்ணுல எனக்கு மட்டுமே சொந்தமான காதல பார்த்தேன் அதுவும் இவ்வளவு நாள் யாருக்கும் கொடுக்காம பத்திரமா வச்சிருந்த காதல் அது … சோ இதுக்கு முன்னால நீங்க தப்பு செஞ்சிருக்க மாட்டீங்க அப்படின்னு எனக்கு தோணுச்சு என்று அவள் அவன் கண்களை பார்த்துக் கொண்டே கூறினாள்…..
அப்ப நீ என்னை நம்புறியா?
உங்கள நா நம்பாமயா இப்படி உக்காந்துட்டு இருக்கேன் என்று அவள் அவனை பார்த்து தன் கண்ணுக்குழி விரிய அழகாக சிரித்தாள்…..
விஹான் உங்க கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?
ஒன்னு என்ன ஓராயிரம் கேளு , நா உனக்கு பதில் சொல்றேன்…..
நீங்க தப்பு செய்யல அப்படின்னு உங்களுக்கு தெரியும் எனக்கு தெரியும், உங்க பேமிலிக்கு தெரியும், உங்க காலேஜ்ல உள்ள எல்லாருக்கும் தெரியும் அப்புறம் ஏன் நீங்க உங்களையே தண்டிச்சிட்டு இருக்கீங்க?
நீங்க இப்படி தாடி மீசையெல்லாம் வளர்த்து நீங்க யாரு அப்படின்னு உங்களுக்கே அடையாளம் தெரியாம இப்படி வாழ்ந்துட்டு இருந்தா நீங்க தப்பு செஞ்சதா ஆயிடும்ல? நீங்க இந்த தாடி மீசையெல்லாம் ஷேவ் பண்ணிட்டு முன்ன மாதிரி காலேஜ் ப்ரொபசர் லுக்குக்கு மாறனும் , திரும்பவும் அந்த காலேஜ்க்கு நீங்க கெத்தா போகணும் உங்கள தப்பா பேசினவங்க முன்னால நீங்க ராஜா மாதிரி வாழனும் இப்படி மறஞ்சு வாழ கூடாது என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு கூறினாள்….
அவள் அவர் கூறிய பின் தான் அவன் செய்த தவறை அவன் உணர்ந்தான்…..
அவளின் கைகளை அவனும் பிடித்துக் கொண்டு இருவரும் கொட்டும் பணியில் காதல் சொட்ட சொட்ட ஆசைகளை விழியால் பேசிக் கொண்டிருந்தனர்…..
அவர்கள் இருவரின் காதல் கை கூடுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்…..
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விஹான் மீது அதீத நம்பிக்கையோடும் காதலோடும் அஸ்வதி.
அவள் அம்மா, தங்கை முன் நான் தான் இவள் பின்னால் சுற்றுகிறேன், அவளே என்னை விலக்கினாலும் நான் விலக மாட்டேன், இனி இவளுக்கு நான் இருக்கின்றேன் என்று கூறியது அருமை.
விஹானின் அருகாமையில் அன்பையும், பாதுகாப்பையும் உணர்கிறாள் அவள்.
அவனுக்கு நம்பிக்கையூட்டி அவனை மீண்டும் வேலைக்கு செல்ல தூண்டுகிறாள்.
Thank you for your valuable comments 😇
நல்ல அழகான காதல் கதை …
Thank you for your valuable comments 😇