
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 14
அறைக்குள் முரட்டுத்தனமாக இழுத்தவன் பிடியில் இழுபட்டு சென்றவள் கீழே விழாமல் சுவரில் சாய்ந்து சமாளித்து நின்றாள்.
“என்னடி வேணும் உனக்கு?”
“சித்…” சித்தத்து எனக் கூற அவள் வாயைத் திறக்கும் முன்,
“கொன்றுவேன்”
“அது. உள்ளயே இருக்கீங்க. மதியமும் சாப்பிடல. மாமா சாப்பிட வாங்கிட்டு வந்துட்டாங்க. சாப்பிட கூப்பிட தான் தட்டினேன்”
“அக்கறை? ம்ம் இத்தனை நாளா அது எங்க போச்சு? ஒத்த போன் பண்ணி கேட்டு இருப்பீயா? இல்ல நான் பண்ணின கால அட்டன் பண்ணிருப்பீயா? இப்போ என்ன அக்கறை பொத்துக்கிட்டு வருது?” எனக்கேட்க தலை கவிழ்ந்து நின்றாள்.
‘என்ன சொல்றது. பேசினா நான் உடைஞ்சு என் காதல் வெளிப்படும்னு பேசாம இருந்தேனு சொன்னா நம்பவா போறீங்க. அதுக்கப்புறம் ஆது கூடக் கல்யாணம்னு முடிவு பண்ணின பிறகு நான் எப்படி பேசுவேன்? எந்த மூஞ்சியை வச்சிட்டு பேசுவேன்? எப்படி பேச முடியும் என்னால?’ என மனதில் நினைத்துப் பேசாமல் இருந்தாள்.
“என்னடி ஓயாம பேசுற வாய் ஒட்டிக்கிச்சு?” என்றவன் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “இந்தப் புடவை எப்படி வந்தது?”
“அது.. மாமா தான் போய் வீட்டுல இருந்து வாங்கிட்டு வந்தாங்க. ஊசி, மாத்திரை வாங்க சொன்னேன் அப்போ வாங்கிட்டு வந்தாங்க”
எனக்கூறவும் மணியைப் பார்த்தான். அவள் ஊசி போடும் நேரம் கடந்துவிட்டது. அவன் கடிகாரத்தை பார்க்கவும், இதைத் தான் சிந்திப்பானென நினைத்தவள்,
“ஊசி போட்டுட்டேன். சாப்பிட வாங்களேன். தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. பசிக்குது” எனக்கூறவும், அவன் கோபத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, அவளுடன் வெளியேறினான்.
அவள் தான் அனைத்தையும் எடுத்து வைத்தாள், ஆனந்தி வரமறுத்துவிட, சிந்துவிடம் அவர்கள் இருவருக்குமான உணவைத் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டு, இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக அமர, முதலில் பாலும், பழமும் கொடுத்துவிட்டே இரவு உணவை உண்ண வைத்தார் இளங்கோவின் அண்ணி. உணவு முடிந்ததும் சித்தார்த் வெளியே கிளம்ப,
“சித்தார்த்து எங்கப்பா கிளம்புற? இருப்பா இன்னைக்கு ராத்திரி சடங்கு இருக்குல” எனக்கூறினார் அவனின் பெரியம்மா.
“கடைவரைக்கும் போறேன் பெரியம்மா. வந்திருவேன்” என நில்லாமல் சென்றுவிட்டான். இவரும் மதுவை சாமி கும்பிட வைத்து, அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களும் முடித்துச் சித்தாத்தின் அறைக்குள் விட்டுவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். சிந்துவும் அவள் வீட்டுக்குச் செல்ல, இளங்கோவும் அவரறைக்கு சென்று விட்டனர். சித்தார்த் இன்னும் வந்த பாடில்லை.
நேரம் ஆக ஆகப் பயத்தில் அவனுக்கு அழைத்தாள் அலைப்பேசியில். அவளது எண்ணைப் பார்க்கவும் அழைப்பை நிறுத்திவிட்டான் அந்த முரடன். அவளை நன்றாக காக்க வைத்துவிட்டு, நெடுநேரம் கழித்து கையில் மல்லிகைப்பூவும், அல்வாவுமாக அறைக்குள் நுழைந்தான் அந்தக் கள்வன்.
மந்தகாசமான மயக்கும் புன்னகையுடன், கையில் உள்ள பூவையும், அல்வாவையும் அவளிடம் நீட்ட, பயம் இருந்த இடத்தில் இப்போது பட்டாம்பூச்சி பறந்தது.
“வெட்கமெல்லாம் வருமா என் தாராக்கு?” எனக் குனிந்திருந்த அவள் தலையை, அவள் நாடியை ஒற்றை விரலால் தூக்கினான்.
“சித்..” என்றவள் வாயை மூடிக் கொள்ள,
“கூப்பிடு. அது உனக்கு மட்டுமே உரிமையான வார்த்தை” எனக்கூறவும்,
“சித்தத்து” என்றாள் கண்ணில் கண்ணீருடன்.
அவள் கண்ணீரைத் துடைத்தவன், அவள் கண்ணத்திலிருந்து கையை எடுக்க வில்லை. கண்ணத்தை வருடி, “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருந்த” என மூக்கை பிடித்துக் கொஞ்சி, கைகளால் அவள் கண்ணத்தில் தடவ, தடவ இவளுக்குத் தான் படபடவென வந்தது.
மெல்ல கைகளை இறக்கி அவள் செர்ரி உதட்டை இரு விரலாலும் இருக்கி பிடிக்க, மீன்குஞ்சு வாய்போல் ஆனது அவளது உதடு.
“எப்படி இப்படி ரோஸ் கலர்ல வச்சிருக்க? தேன்ல போட்ட ரோஜா குல்கந்து போல மின்னுது” என உதட்டைத் தவட, குல்கந்தை சாப்பிட்டுவிட துடித்தது அவனது உதடு.
கைகளை இறக்கியவன் மெல்ல அவள் கழுத்தை வருட, கூச்சத்தில் நெளிந்தாள் அவள். கைகளைக் கழுத்துக்கு பின்னால் கொண்டு சென்றவன், அவளைக் கழுத்தை அசைக்க முடியாதவாறு காதோடு சேர்த்து பிடித்துக்கொண்டு அவளது குல்கந்தை சுவைக்க ஆரம்பித்தான்.
சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே..
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே..
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே..
எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே..
கூடுதே ஆவல் கூடுதே! தேகமே அதில் மூழ்குதே! ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
என அவன் செல்போனில் பாட்டு வேற மோகம் கூட்ட, முதலில் மிரண்டவள், பின் அவனது கைகளும், உதடும் செய்யும் மாயத்தில் மெல்ல மெல்ல தன்னை மறந்து மயக்கத்தில் ஆழ்ந்து விட, தூரத்தில் எங்கோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. மயக்கத்திலிருந்து விழிக்க, அவளருகில் யாருமில்லை. கண்டது அனைத்தும் கனவு. அவள் கணவன் இன்னும் வீட்டுக்கே வரவில்லை.
கதவுதட்டும் சத்தம் கேட்க, அடித்துப் பிடித்துச் சென்று கதவைத் திறந்தாள்.
“எவ்ளோ நேரம் கதவ தட்டுறது? காதுல விழல?” எனக் கரடிபோல் கத்தினான் அவளின் அன்பு கணவன்.
இரவு சாப்பிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராகச் சென்றது சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைக்கு. அங்குச் சென்றவன் மதுவுக்கு தங்கத்தில் ஒரு தாலிசங்கிலியுடன் கூடவே வீட்டில் அணிவதற்கு ஒரு ஜோடி தோடும், வளையலும், கொலுசும் வாங்கிக் கொண்டான் அவனது பணத்தில்.
அடுத்து சென்றது அவர்களது துணிக்கடைக்கு தான். அங்குப் பெண்களின் ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று, மதுவுக்கு பொருத்தமான ஆடைகளில் சிலவற்றை எடுத்தான் உள்ளாடைகள் முதற்கொண்டு. அவள் ஆடைகளின் அளவு தான் அவனுக்கு அத்துபடி ஆச்சே.
முன்னரே அவளுக்குத் தேவையான ஆடைகளை அவனுடன் வந்து இங்குத் தானே எடுப்பாள். அதனால் அளவுகள் எல்லாம் அவனுக்குத் தெரியுமானதால், தானே அவளுக்குத் தேவையானதை எடுத்தான். அனைத்தும் அவளுக்கு விருப்பமான நிறத்தில், அவளுக்குப் பிடித்தமான விதத்தில்.
அன்பு வீட்டிலிருந்து எதுவுமே வாங்கக் கூடாது என்ற முடிவில் இருந்தான், அதனால் தான் அவளுக்குத் தேவையான ஆடைகள் கூட அவனே எடுத்துக் கொடுக்க நினைத்தான் ஆனால் அவள்மேல் அத்தனை கோபம் இருந்தும் அவளுக்குப் பிடித்தமானதாக ஏன் எடுக்கிறானென அவனுக்கே புரியவில்லை.
அத்தனையும் வாங்கிகொண்டு வீட்டுக்கு வந்து கதவைத் தட்ட, யாருமே திறக்கவில்லை. பின் பலமாகத் தட்ட, யாரோ வருவது போலச் சத்தம் கேட்டது. பின் கதவு திறக்கும் சத்தம், கதவைத் திறந்து கனவு கண்டதன் விளைவால் கன்னங்கள் சிவக்க வந்து நின்றாள் மது.
கொள்ளை அழகு. கன்னம் வேறு சிவந்து அவனைக் கிறங்கடிக்க, அவளை அப்படியே அள்ளிக் கொஞ்ச துடித்தது அவன் காதல் மனம். அதில் அவன் மேலே அவனுக்குக் கோபம் வர, அதை அவள்மேல் காட்டினான்.
“எவ்ளோ நேரம் கதவ தட்றது? காதுல விழல? அவன கட்டிக்க முடியலனு அவன நினைச்சு கனா கண்டுண்டு இருந்தியோ?” எனத் தேளாகக் கொத்தினான். அதில் பலமான மரணகாயம் பட்டவளுக்கு வார்த்தையே வரவில்லை.
“இல்ல.. அது வந்து” எனத் திணற,
“தள்ளு” என அவளைத் தள்ளிக்கொண்டு பைகளுடன் வீட்டிற்குள் நுழைந்து அவனறைக்குள் புகுந்தான். பைகளை ஓரமாக வைத்து விட்டு, நகையை அலமாரியில் வைத்துவிட்டு குளியறை புகுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்தான்.
அவளோ என்ன செய்வதெனத் தெரியாமல் கட்டிலில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். குளித்து முடித்து வந்தவன் எதுவுமே பேசவில்லை ஒரு தலையணையும், போர்வையையும் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறப் போக,
“சித்தத்து” என்றாள்.
“கொன்றுவேன்” எனக் கையில் உள்ள தலையணையை அவள்மீது எறிந்து அவளை நோக்கி வர, அவளோ என்ன பேசுவதெனத் தெரியாமல் தலை கவிழ்ந்து நின்றாள்.
“இனிமேல் சித்தத்துனு உன் வாயில இருந்து வந்துச்சு அவ்ளோ தான்” என அவள் கழுத்தை இருக்கி பிடிக்கவும், வலி எடுக்கக் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“ஸ்ஸ்ஸ்” என வலியில் சத்தம் கொடுக்கவும் “ச்சை” கழுத்தை விட்டவன், கட்டிலில் பொத்தென அமர்ந்தான்.
“உன் மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தேன்? உயிரா இருந்தேன்டி உன்மேல.. இதே நல்ல படியா இந்தக் கல்யாணம் நடந்திருந்தா இந்த ரூம்க்குள்ள இப்போ எவ்ளோ சந்தோஷம் நிறைஞ்சு இருந்திருக்கும் தெரியுமா? ஆனா இப்போ..” என்றவன் கைகளை இறுக மூடிக் கட்டிலில் ஓங்கி குத்தினான்.
“சித்தத்து வலிக்கப் போகுது” எனக் கைகளைப் பிடித்தாள். அவள் கையை உதறிவிட்டு,
“அந்தப் பேரைச் சொல்லாத.. அந்தப் பேர் என் தாரா என்னைப் பாசமா கூப்பிடுற பேரு. அத நீ கூப்பிடாத மது” என்றான் ஆவேசமாக.
“நான் மது இல்ல எப்பவும் உங்க தாரா தான்” என்றாள் கண்களில் கண்ணீருடன்.
“இல்ல. நீ மது. அன்புவோட மக மது மட்டும் தான். என்னோட தாரா எப்போவோ போய்ட்டா. என்னை விட்டுட்டு போய்ட்டா.. என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டா.. வேறொருத்தன் கையால தாலி வாங்கிக்க போய்ட்டா. அவ்ளோ தான் இனி அவ எப்பவும் வரமாட்டா.. நீ மது.. மது மட்டும் தான்”
“நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ். அப்பாக்காகத் தான் நான் சம்மதிச்சேன்”
“தெரியுமே! அதான சொல்றேன் நீ அன்போட மகனு”
“இப்படி பேசாதீங்க ப்ளீஸ். நாங்க தப்பு பண்ணிட்டோம் தான். ஆனா அதுக்கு காரணம் இருக்கு”
“இருக்கட்டுமே! என்ன காரணம் வேணாலும் இருக்கட்டுமே. அத நீ என்கிட்ட சொல்லிருக்கலாமே? சொன்னியா?” எனக் கேட்கத் தலைகவிழ்ந்தாள். எப்படி கூறுவாள் அந்த நாள் அவர்கள் இருந்த நிலையை, அவர்கள் பட்ட அசிங்கத்தை எப்படி கூறுவாள்? இப்பவும் அதை வெளியில் சொல்லமுடியாமல் கட்டுப்பட்டு இருக்கும்போது எப்படி கூறுவாள்?
“எவ்வளவு சந்தோஷமா நடக்க வேண்டிய கல்யாணம். இப்படி எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டிங்களே! என் காதலை நீ கடைசி வரைக்கும் உணரவே இல்லல?” எனக்கூற சலேரென நிமிர்ந்தாள்.
‘இந்தக் காதலை நீ வாய்விட்டுச் சொல்லிட மாட்டியானு நான் ஒவ்வொரு நாளும் தவிச்ச தவிப்பென்ன? படிப்பு முடியும் வரை என் காதலையும் உன்கிட்ட காட்டமுடியாம நான் பட்ட பாடு என்ன? ஒவ்வொரு நாளும் என் காதலை உன்கிட்ட எப்படி சொல்றது கண்ணாடி முன்னாடி ஒத்திகை பார்த்ததென்ன? நான் அதைச் சொல்லும்போது உன் முகம் எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணியதென்ன?
ஆனா எல்லாத்தையும் புரட்டிப் போட்டது அந்த ஓருநாள். அது மட்டும் எங்க வாழ்க்கையில வராம இருந்திருக்க கூடாதா? இப்படி நான் உன் முன்னாடி குற்றவாளியா நிற்காம இருந்திருப்பேனே? அந்த நாள் என்ன நடந்ததுனு சொன்னா தாங்குவியா சித்தத்து?’ என நினைத்தவள் தன் முகத்தை மூடி அழுதாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 13
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 15
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சித்து ரொம்ப பண்ணாதப்பா … ஏதோ உனக்கு மட்டும் தான் கஷ்டம் இருக்க மாதிரி … எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு … பாவம் இவர் மட்டும் தான் கனவு கண்டாரா …
இப்போ கூட உன் தாரா தான் முதலிரவு பத்தி எல்லாம் கனவு கண்டுச்சு … கனவு நல்லா இருந்தது … நானும் நிஜம்னு நம்பிட்டேன் … அந்த மல்லிப்பூ அல்வா குல்கந்து எல்லாம் அல்டிமேட் 😜😜😜
நீங்க இடையில போடுற பாட்டு எல்லாம் எனக்கு பிடிச்ச பாட்டு தான் … எனக்கும் இப்படி சில சீனுக்கு பாட்டு போட பிடிக்கும் … அது ஒரு நல்ல ஃபீல் தான் …
மிக்க நன்றி😍
கோவம், ஆதங்கம் என்று அனைத்தையும் தாண்டி அவள் மேல் உரிமையும், அன்பும் அதிகமாக இருக்கின்றதே.
தான் சம்பாதித்த பணத்தில், தான் வாங்கி தரும் பொருட்களை மட்டுமே அவள் உடமையாக்க வேண்டும் என்ற எண்ணம்.
கோபத்தில் தன் பசி, தூக்கம் மறந்தாலும், அவள் உடல்நிலையை கருத்தில் கொண்டு செயல்பட்டது அருமை.
கனவுகள், கற்பனைகள் எல்லாம் தகர்ந்துவிட்ட ஆதங்கம். மனைவியாக கண்முன் இருந்தும் மகிழ முடியாமல் போன வருத்தம்.
தாராவின் நிலையை பொறுமையாக கேட்டு அறிய முயன்றிருக்கலாம்.
தனது காதலை அவள் உணரவே இல்லை என்ற கழிவிரக்கம் வேறு சித்தார்த்திற்கு.
செய்த தவறுக்கு தண்டனையாக அவளை தனியே விட்டு சென்று தவிக்க விடாமல் உடன் அழைத்து சென்றால் நல்லது.
மிக்க நன்றி😍
ஏதோ நடந்திருக்கு 🤔🤔 என்னவா இருக்கும்?
மிக்க நன்றி😍😍