Loading

காதல் – 13

 

அஸ்வதிக்கு விஹான் மீது இனம் புரியாத புதிய உணர்வுகள் எழ அதற்கு விடை தெரியாமல் தன் விழியில் வினாவை தேக்கி வைத்து கொண்டு விஹானின் விழிகளில் விடை தேடி கொண்டு இருந்தாள்….

 

இந்த விழி வழி தேடல் அஸ்வதியின் தாயாரான சுலோச்சனா மற்றும் அவளின் தங்கை அனந்தியின் கண்களில் பட்டு விட்டது…..

 

அதை கண்டு பொறுக்க மாட்டாமல் அஸ்வதியின் முதுகில் சூடு வைத்துக் விட்டார் …..

 

அதில் வலியில் துடித்த அஸ்வதியை தேடி விஹான் வந்து விட்டான் , அவன் அவளை தன் தங்கை அழைக்கிறாள் என்று பொய் கூறி விட்டு அவளை அவன் அறைக்கு அழைத்து சென்ற மறு நொடி அவள் கதவை சாத்திவிட்டு அவனை இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டு அழுதாள்….

 

விஹான்….

ரொம்ப ரொம்ப எரியுது…

என்னால தாங்க முடியல …

 

அவளின் அழுகையை அவனால் பார்க்க முடியவில்லை…..

 

அவன் கண்களிலும் ஈரம் …..

 

அஸ்வி , ரொம்ப எரியுதா?

 

ஆமா விஹான், என்னோட முதுகுல சூடு வச்சிட்டாங்க என்று அவள் அவனின் சட்டையை பிடித்து கொண்டு அவன் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்….

 

விஹான் அவள் அணிந்திருந்த ஷர்ட்டை சற்று உயர்த்தி பார்த்தான் அவள் பின்னால் இருந்த கண்ணாடியில் அவளின் முதுகில் வைத்த சூடு தெரிந்தது….

 

பால் நிற மேனியவள் அவள் …

அந்த சூட்டினால் அவளின் அங்கம்  செக்க செவேல் என்று சிவந்து , தோல் சுருங்கி ரத்த சிவப்பாக இருந்தது….

 

அவள் அவனை கட்டி அணைத்து கொண்டு அழுது கொண்டே இருந்தாள்….

 

அவளின் அந்த தொடர் அழுகையை அவனால் பொறுத்து கொள்ள முடியாமல் அவளை நெஞ்சோடு அனைதப்படி அப்படியே  தூக்கி  கொண்டு பாத்ரூமிற்குள் சென்று ஷவரை திறந்து விட்டான் …..

 

தண்ணீர் இருவரின் மீதும் பட்டு பட்டு தெறித்தது …..

 

விஹான் அஸ்வதியை இறுக்கி அணைத்தபடியே நின்றான்….

 

அவனின் இந்த திடீர் செய்கையில் அவள் விதிர் விதிர்த்து போய் நின்றாள்…

 

அவளின் இமைகள் படபடவென அடித்தது ….

 

அவனின் அத்துணை நெருக்கமான பார்வை வீச்சுக்களை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை….

 

அவளுக்கு பேச்சு வரவில்லை , அவனையே பார்த்து கொண்டு நின்றாள்…..

 

அவனின் கதகதப்பும், அவன் திறந்து விட்ட தண்ணீரின் குளுமையும் அவளுள் இருந்த மன காயத்திற்கும் உடல் காயத்திற்கும் மருந்தாக இருந்தது….

 

நிமிடம்…

ஒன்று …

இரண்டு…

மூன்று…

 

என்று நேரம் சென்று கொண்டே இருந்தது , இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அவர்களின் விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசியது….

 

அவனின் கைகள் அவளின் இடையிலே இருந்தது….

 

நீண்ட நேர விழி வழி பரிபாஷனைகளுக்கு பிறகு விஹான் அஸ்வதியின் இடையில் வைத்திருந்த கைகளை எடுத்து அவளின் அழகிய வட்ட முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டு அவளின் முகத்தையே பார்த்துக் ரசித்து கொண்டே அவன் பேசினான்….

 

அஸ்வி இனி நீ அழவே கூடாது , உன்ன நா அழ விட மாட்டேன்….

நீ உன்னோட அம்மாகிட்ட அடி வாங்குற கடைசி நாள் இதுதான் ,

இனி உன்ன நா  ரொம்ப ரொம்ப பத்திரமா பாத்துப்பேன் ….

உனக்காக நா இருக்கேன் ….

உனக்காக நா எப்பவுமே இருப்பேன்…

இந்த அழகான முகம் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கனும்….

உன்னோட முகத்துல இனி நா சோகம் வரவே விட மாட்டேன்….

உன்ன நா என்னோட கண்மணி போல பாத்துப்பேன்…

எங்கிட்ட இருக்குற மொத்த காதல் , அன்பு பாசத்தையும் உங்கிட்ட மட்டும் அள்ளி அள்ளி கொடுக்க போறேன் என்று அவன் அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்…..

 

அவளுக்கு அங்கு நடப்பது கணவா இல்லை நனவா என்று புரியாமல் விழிக்க, நீண்ட நேரம் தண்ணீரில் நின்றதால் அவளுக்கு குளிரில் உடல் உதற அதை பார்த்த விஹான், அவளை விட்டு விலக பார்த்தான் ….

 

ஆனால் முடியவில்லை…

 

அவனின் சட்டையில் உள்ள புரூச்சில் அவளின் சுடிதார் ஷால் மாட்டி கொண்டது….

 

அதை மெதுவாக அவளின் உடை கிழியாதவாறு எடுத்து விட்டான்…

 

பிறகு….

 

அஸ்வி இங்க என்னோட ஷாம்பூ, சோப் இருக்கு குளிச்சிட்டு வா உனக்கு நா மருந்து போட்டு விடுறேன் என்றிட்டு அவன் வெளியே சென்று விட்டான்….

 

அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சு காற்றை அப்பொழுதுதான் அவள் விட்டாள்….

 

அவள் ஷவரை ஆஃப் செய்து விட்டு , பாத் டப்பில் அப்படியே அமர்ந்து விட்டாள்…

 

விஹான் என்ன சொன்னாங்க?

விஹான் என்ன சொல்லிட்டு போறாங்க ?

அவங்களுக்கும் என்ன மாதிரியே ஃபீலிங்ஸ் வந்துருச்சா?

இதுக்கு பேரு தான் காதலா?

 

என்று அவள் மூளையில் ஆயிரமாயிரம் கேள்விகள்….

 

அப்பொழுது கதவு வெளியில் இருந்து தட்டப்பட்டது…

 

வேற யாரு…

நம்ம விஹான் தான்🤭

 

அஸ்வி….

 

ஹான்…

 

சீக்கிரம் குளிச்சிட்டு வா, ரொம்ப நேரம் தண்ணில நின்னா உனக்கு சளி பிடிக்கும் என்று அவன் கூறவும் அவள் வேகவேகமாக குளிக்க ஆரம்பித்தாள்….

 

அவனின் ஷாம்பூ மற்றும் சோப் போட்டு குளித்து முடித்து விட்டுதான் மாற்று துணி கொண்டு வரவில்லை என்று அவளின் புத்திக்கு உரைத்தது….

 

அவள் யோசித்து கொண்டு இருக்கும்போதே  கதவு மீண்டும் தட்டப்பட்டது……

 

நீ குளிச்சிட்டு போடுறதுக்கு டிரஸ் எடுக்கல, அதான் விஹான்னா டிரஸ் எடுத்துட்டு வந்தேன் என்று அவன் திரும்பி நின்றபடி அவளுக்கு சட்டையை நீட்டி கொண்டு இருந்தான்….

 

அது….

 

இதுல எல்லாம் இருக்கு , விஹான்னா டிரஸ் தான் ,ஆனா உனக்கு கொஞ்சம் பெருசாதான் இருக்கும் அப்புறம்  டிரஸ் உள்ள இன்னர்ஸ் இருக்கு , டவல் இருக்கு மாத்திட்டு வா என்று திரும்பி நின்றபடியே அவன் அவளின் கைகளில் உடைகளை. கொடுத்து விட்டு சென்று விட்டான்…..

 

அஸ்வதி அவன் கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்டு மெதுவாக தலையை வெளியே நீட்டி எட்டி பார்த்தாள்….

 

விஹான் அங்கு இருப்பதாய் தெரியவில்லை……

 

அப்பாடா அவங்க போயிட்டாங்க என்று அவள் நினைத்து கொண்டு இருக்கும்போதே …..

 

குளிச்சு முடிச்சிட்டியா?

 

ஹான்….

குளிச்சிட்டேன்…

அது….

 

என்னாச்சு அஸ்வி?

காயம் எரியுதா?

 

ஆமா…

இல்ல..

காயம் அது ஆமா..

ஆனா…

 

அவள் உளறுவதை பார்த்து ரசித்தவன் , அவளின் அருகில் போய் நின்று அவளின் நாடியை நிமிர்த்தி என்ன என்று கண்களால் வினவினான்….

 

அது…

அழுக்கு டிரஸ் இருக்கு…..

 

எங்கிட்ட குடு நா அழுக்கு துணி போடுற இடத்துல போடுறேன்…..

 

இல்ல…

இல்ல..

நானே…

போட்டுக்குறேன்…

 

சரி அப்போ பாத்ரூம்லயே அழுக்கு துணி போடுற பாஸ்கெட் இருக்கே அதுலயே போட வேண்டியது தானே?

 

அதுல…

அதுல …

உங்க டிரஸ் இருக்கு…

 

ஏன் என்னோட டிரஸ் கூடல்லாம் உங்க ட்ரெஸ்ஸ போட மாட்டீங்களோ?

 

அப்படியில்லை….

அது…

 

அவள் அடுத்து என்ன பேசுவது என்று யோசித்து கொண்டு இருக்கும்போதே அவன் அவள் கையில் வைத்திருந்த அவளின் அழுக்கு துணிகளை அவனின் அழுக்கு துணி போடும் பாஸ்கட்டில் போட்டு விட்டு அவளின் கைகளை பிடித்து கொண்டு சென்று கட்டிலில் அமர வைத்தான்….

 

விஹான் நீங்க அப்போவே…

அது …

நீங்க …

என்று அவள் அவனால் தாய் மொழி மறந்து போய் வாய் மொழி வராமல் அவனுள் தொலைந்து  போனவளாய் மாறி போனாள்….

 

அவள் அடுத்து எதோ பேச வருவதற்குள் அவளின் இதழை தன் விரலால் மூடினான்…..

 

இப்போ எதுவும் பேச வேண்டாம் , நா உன்னோட காயத்துக்கு மருந்து போட்டு விட போறேன் என்னோட கண்ண மட்டும் பாரு என்று அவன் கூற அவளும் அவன் கண்களையே பார்த்து கொண்டு இருந்தாள்…..

 

அவனும் அவளின் கண்களையே பார்த்தப்படியே ஒரு கையால் அவளின் ஷர்ட்டை மேலே உயர்த்தி விட்டு மறு கையால் ஒரு வெள்ளை துணி வைத்து  அவள் மேல் ஒட்டியிருந்த தண்ணீரை துடைத்து விட்டு அவளின்  காயத்தை பார்க்காமலே அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டே காயத்தில் மருந்தை தடவினான்….

 

அவள் ஒவ்வொரு முறையும்  வலியில் துடித்து  முகம்  மாறவும் அவன் அவளின் வலியை அவளின் விழி மூலம் தனக்கு கடத்த பார்த்தான்….

 

பிறகு அந்த மருந்தை தடவி விட்டு, அவளின் முகத்தை பார்த்தான்….

 

வலியில் அவளின் கண்கள் சிவந்து விட்டது…..

 

அஸ்வி….

 

ஹான்…

ஒரு நிமிஷம்…

இந்த அஸ்வி யாரு?

 

இப்போதான் இதுவே நீ கண்டுபிடிக்குறியா என்று அவன் சிரித்தான்…..

 

சரி சொல்லுங்க அஸ்வி யாரு?

 

நீதான் என்னோட அஸ்வி….

 

புரியல , நா எப்படி அஸ்வி ஆக முடியும்?

 

உன்னோட பேரு என்ன?

 

அஸ்வதி….

 

என்னோட பேரு என்ன?

 

முகமது விஹான்….

 

அஸ் கூட வி சேத்தா?

அஸ்வி தானே என்று அவன் அவளை பார்த்து கண் அடித்தான்…..

 

விஹான் நீங்க அப்போவே பாத்ரூம்ல என்ன சொன்னீங்க?

அதெல்லாம் உண்மையா ?

இல்ல என்னோட அழுகைய நிப்பாட்ட அப்படி சொண்ணிங்களா?

 

உன்ன நா இனிமே அழுகவே விட மாட்டேன்னு சொன்னேன் என்று அவன் அவளின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டு, கண்கள் முழுக்க முழுக்க அளவிட முடியாத அளவிற்கு காதலை தேக்கி வைத்து கொண்டு அவளை பார்த்தான்…..

 

அஸ்வி  எனக்கு இன்னும் மிச்சம் இருக்குற என்னோட  வாழ்க்கையில எனக்கு துணையா வருவியா?                   என்கூடவே இருந்துடு, உன்ன நா ரொம்ப நல்லா பாத்துக்குறேன் என்று அவன் தன் காதலை கூற அவள் பதில் மொழி இல்லாமல் அவன் விழியையே பார்த்து கொண்டு இருந்தாள்….

 

அப்பொழுது தூரத்தில் இடி இடிக்கவும் அவள் பயத்தில் அவனை கட்டி பிடித்து கொண்டாள்…..

 

கையில் விழுந்த பரிசை விஹான் இறுக்கமாக கட்டி அணைத்து கொண்டான்……

 

அப்பொழுது …..

 

ஹலோ நா உள்ள வரனும் உங்க காதல் காட்சிகள கொஞ்ச நேரம் கழிச்சி வச்சிக்கோங்க என்று விஹான்னா திரும்பி நின்றபடி கூறி கொண்டு இருந்தாள்…..

 

அஸ்வதி வெக்கத்தில் வெளியே எழுந்து ஓடினாள்….

 

வெளியே ஓடிய வேகத்தில் திரும்பவும் அவன் அறைக்குள்ளே அவள் ஓடி வந்தாள்….

 

என்னாச்சு?

 

அது வெளியில அம்மா என்று அவள் பதட்டத்தோடு கூற , விஹான் அவளின் கைகளை பிடித்து கொண்டான்…..

 

அஸ்வி இனி நீ பயப்பட கூடாது , உனக்காக நா இருக்கேன்….

 

என்று அவன் அவளின் கண்களை பார்த்து கூறினான்….

 

சரி சரி அண்ணா நீ வெளியே போ நா டிரஸ் மாத்தனும்…..

 

விஹான் அஸ்வதியின் முகத்தையே பார்த்துக் கொண்டே சென்றான்…..

 

அவன் சென்றவுடன் விஹான்னா கதவை சாத்திவிட்டு வந்தாள்…..

 

என்ன அஸ்வதி முகமெல்லாம் ஒரே வெளிச்சமா இருக்கு ….

என்னோட அண்ணன்கிட்டதான் அந்த ஸ்விட்ச் இருக்கா?

 

அஸ்வதி எதுவும் பேசாமல் சிரித்து கொண்டே இருந்தாள்…..

 

அப்போ கன்பார்ம்…..

 

என்ன …

என்ன கன்பார்ம்?

 

ஹான் என்னோட அண்ணன் மனசுல நீயும் , உன்னோட மனசுல என்னோட அண்ணனும் இருக்கான் அதான??

 

அஸ்வதி எதுவும் பேசாமல் சிரித்து கொண்டே இருந்தாள்…..

 

நீ இப்படி சிரிச்சிட்டே இரு அழகா இருக்க, நா டிரஸ் மாத்திட்டு வாரேன் என்றிட்டு விஹான்னா சென்றாள் அப்பொழுது அவளின் போன் அடிக்கவும் அதை அஸ்வதி எடுத்து பார்த்தாள்….

 

விஹான் காலிங் என்று வந்தது….

 

அஸ்வதி யாருன்னு பாரு….

 

உன்னோட அண்ணா தான்….

 

அட்டென்ட் பண்ணி பேசவேண்டியது தானே உன்னோட ஆளுதான??!!!

 

அது….

 

கால் கட்டானது….

 

விஹான்னா இது உன்னோட அண்ணன் விஹானா?

 

ஆமா , இந்த ஃபோட்டோவுல அண்ணன் ரொம்ப அழகா இருக்கிறான்ல?

 

ஆமா , ஆனா இப்போதான் ரொம்ப அழகா இருக்குறாங்க என்று அவள் கூற  விஹான்னா அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்……

 

அஸ்வதி உனக்கு அந்த தாடி மீசை பின்னால இருக்குற கவலை தெரியுமா?

 

கவலையா?

என்ன பிராப்ளம்?

விஹான்னுக்கு என்னாச்சு?

 

அவன் காலேஜ்ல அவன் ஒரு பொன்ன ஹரஸ் பண்ணிட்டான்னு அவனை கொஞ்ச நாள் சஸ்பென்ட் பண்ணிட்டாங்க…..

 

விஹான்னா இவ்வாறு கூறவும் அஸ்வதி சற்றும் யோசிக்காமல் …..

 

என்னோட விஹான் அப்படி பன்னிருக்க மாட்டாங்க….

 

அவளின் பதிலை கேட்ட விஹான்னாவுக்கு ஆச்சர்யம் தாளவில்லை…..

 

அவனின் கடந்த காலத்தை பற்றி தெரிந்த பின்னரும் அவள் இவ்வாறு பேசுவாளா?

 

பொறுத்திருந்து பார்ப்போம்…..

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. விஹான் என்னபா பண்ணி வச்சிருக்க … என்ன கதை இருக்குமோ … அதை அஸ்வதி புரிஞ்சுப்பாளா

    1. Author

      பொறுத்திருந்து பார்ப்போம்….
      Thank you for your valuable comments 😇

  2. தனக்கு தோன்றிய காதல் உணர்வுகள் போலவே விஹானுக்கும் தோன்றியுள்ளது என்று அறிந்து கொண்டாள் அஸ்வதி.

    கண்ணின் மணிப்போல் கைகளுக்குள் வைத்து பார்த்துக்கொள்வேன் என்கிறான். பார்ப்போம் எந்த அளவு கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிறான் என்று.

    அஸ்வதி விஹான் சேர்ந்து அஸ்வி அழகு ❤️

    அஸ்வதியின் கடந்த காலம் அறிந்து அவளை அவன் அரவணைத்ததை போல், விஹானின் கடந்த காலம் அறிந்து நம்பிக்கையுடன் துணை நிற்பாள் அஸ்வி.

    1. Author

      Thank you for your valuable comments pa😇